எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!
நேற்றைய பல்டிக்கு பின் தானே கேள்வி தானே பதில் பேட்டி ஒன்றை தந்தார் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள், அதில் இப்படி ஒரு கேள்வியும் பதிலும் இருந்தது! //கே: பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதா? ப: இது ஜெயலலிதாவை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். // சரி ஏன் அந்த கேள்வியை ஜெவிடம் மட்டும் கேட்க வேண்டும், நேற்று அப்ஷேக் மானு சிங்வி - காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஜெ சொன்னதையே தான் சொல்கிறார் இங்கே சொடுக்கவும் , வீடியோ இங்கே ... இன்னும் சொல்லப்போனால் ஜெ சொல்வதை கூட பெரிய விசயமாக எடுக்கத் தேவை இல்லை! ஏன் என்றால் அவர் தேசிய ஆட்சி பொறுப்புக்கு வர போவதில்லை! காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி , இந்தியாவின் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய கட்சி என்னும் போது அது சொல்வதே முக்கிய விவாதமாக எடுத்திருக்க வேண்டும் திரு. கருணாநிதி!! // அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்திய...