அரசுக்கு இது அழகா??
ஐயா சாமிகளா, உங்களுக்கு ஓட்டு போட்டு எல்லா எம்.பி பதவியும் உங்களுக்கு தானே வாங்கி கொடுத்திருக்கு இல்லையா?.... இன்னும் ஏன்யா எங்களை போட்டு ரவுண்ட் கட்டறீங்க!! ராமர் பாலம் இடிக்கனுமா போயி திருமதி.சோனியா கிட்டயோ! திருவாளர்.மன்மோகன்சிங்கிடமோ ஆட்சியை காலி பண்ணிடுவோம்ன்னு சொல்லி அல்லது என்னத்தையாவது செய்யவேண்டியதுதானே! ஏன்யா பந்துன்னு சொல்லி எங்க தாலியை அறுக்கறீங்க... உங்களுக்கு ஓட்டுப்போட்ட பாவத்துக்கு, எங்களுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்!!! ஒரு நாள் வேலை நிறுத்தம், கோடிக்கணக்கா சேர்த்துவைத்த உங்களுக்கு ஒன்னும் ஆவப்போறது இல்லை... ஆனா.. ஒவ்வொரு தின கூலிக்காரனிலிருந்து நடுத்தர வர்கம் வரை உள்ள அனைவருக்கும் சாப்பாட்டுல மண் விழும்! நீங்க சொல்லும் சேது சமுத்திரம் அவனுக்கு ஒரு மண்ணும் கிடையாது! அது வந்தாலும், வராவிட்டாலும் அவனுக்கு ஒரு பைசா லாபம் கிடையாது! தினக்கூலி முதல் சாதாரண குடிமகன் வரை அனைவருக்கு எத்தனை சிரமம் உங்களால் பண்ண முடியோ அவ்வளவு செய்யும் முடிவோட தான் ஆட்சிக்கு வந்தீங்களா??... யாருக்காக, என்ன நிரூபிக்க பாக்கறீங்க... ஒரு ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் உங்களால் ஒன்னும் பண்...