Posts

Showing posts with the label தியாகம்

வீரத்திருமகன் உதித்த தினம்!!

Image
"உங்கள் ரத்ததை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரம் வாங்கித்தருகிறேன்" என்று சொல்லி, இந்திய சுதந்திர போராட்டதை உயிர்பித்தவனின் பிறந்தநாள் இன்று!! தன்னலமற்ற ஒரு சில தேசத் தலைவர்களில் முன்னவரான நேதாஜியின் பிறந்தநாள் இன்று. பூரண சுயராஜ்ஜியம் பிரகடணம் செய்து வெள்ளையருக்கு சுந்தந்திர போராட்டத்தின் வன்மையை காட்டியவரின் பிறந்த நாள் இன்று! தன் சுயநலத்தைவிட தேசமே பெரியது என்று தன் ஐ.ஏ.எஸ்க்கு இணையான ICS பதவியை துட்சமென தூக்கி எறிந்து இந்திய சுதந்திரக்கு தன் உதிரத்தை சிந்தியவரின் பிற்ந்தநாள் இன்று!!! இந்தியாவின் முதல் சுதந்திர ராணுவப்படையான இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதில் ஒரு லட்சம் இந்தியரை படையில் இணைத்து சுதந்திர வெறியை இந்தியருக்கு செலுத்திவரின் பிறந்த நாள் இன்று! தனித்து ஒரு தலைவனாய் நின்று ஜப்பானின் துணையுடன் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் மனிப்பூர், நாகாலாந்து பிரிட்டீஷாரிடமிருந்து கைப்பற்றி அந்தமானை தலைநகரமாக கொண்டு, சுதந்திர இந்தியாவை(ஆஸாத் ஹிந்த்) பிரகடணம் டிசம்பர் 30, 1943ஆம் ஆண்டு இந்திய தேசத்தின் சுதந்திர கொடியை ஏற்றியவரின் பிறந்தநாள் இன்று!!! முதல் சுதந...