ஏன் இப்ப உங்க கல்லூரியின் பெயர் முழுசா சொல்லறாங்களா??
சட்டம் என் கையில் என்று மாணவர்கள் த்தூ! அதுங்களை மாணவர்கள் என்று சொல்லக்கூட மனம் வரவில்லை, மிருகங்களை போல ஒரு சக மாணவனை வேட்டைய அந்த வீடியோ காட்சிகளை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் என் இதய படபடப்பு அடங்கவில்லை! ஒரு மனிதனை, சக மனிதன் அதுவும் அடிவாங்கி மரணித்து கிடக்கும் ஒருவனை இப்படி அடிக்க எப்படி மனம் வருகிறது என்று புரியவே இல்லை! இத்தனைக்கு காரணம் முத்துராமலிங்கதேவர் பிறந்தநாள் விழாவுக்கு போஸ்டர் அடிக்கும் போது வெறும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று அச்சிட்டதே காரணம், இதில் உள்ள நுண்ணரசியல் அம்பேத்கார் பெயர் வேண்டுமென்றே விடப்பட்டதானால் என்று கேட்க்கும் போது வெட்கபட வேண்டியுள்ளது நம் இளைஞன் இது போன்ற வெட்டி சித்தாந்தக்கு, சாதி வெறி தூண்டும் வண்மைக்கு அழைத்து செல்லப்படுவது வருத்த அளிக்கிறது! அரசு கல்லூரிகளில் மட்டுமே சாதிவாரியாகவும், இனவாரியாகவும் சண்டை நடைபெறுவது என்ற ஒரு முக்கிய விசயம் வெளிவருகிறது! இந்த சாதிய விஷத்தை இவர்கள் மேல் தினிப்பது யார்? எனக்கு தெரிந்த மட்டும், நம் தமிழக அரசியல்வாதிகளின் தங்கள் பிரச்சனைகள்/அடி தடி அழிக்கும் தேவைகளுக்கு இந்த அரசு சார்ந்...