Posts

Showing posts with the label சுதந்திரம்

சுதந்திரம் யாருக்காக?

கடந்த 15ஆம் தேதி நாம் நம்முடைய சுதந்திரத்தின் 60 வருடங்கள் கடந்ததை கொண்டாடினோம்! அறுபது ஆண்டுகளில் நாம் எவ்வளவு சுதந்திரம் அடைந்திருக்கிறோம் என்று எனக்கு புரியவில்லை! ஆங்கிலேயர் ஆட்சிக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றே ஒன்று அன்று ஊழல் குறைவு, இன்று இவர்களால் பெருக்கெடுத்து ஓடுது ஊழல்!! இவருடைய ஆட்சியிலும் சர்வாதிகாரம் இருந்தது, இருக்கிறது!!! இன்று இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்தா, என்ன கொடுமை சார் இதுன்னு தான் சொல்லத்தோனுது! பீஹாரின் அரசு இயந்திரங்கள் எங்கள் கண்காணிப்பில் தான் இருக்கிறது! விரைவில் அவை எங்கள் கட்டுப்பாடுக்குள் வரும் என்று சில தினங்களுக்கு முன் Maoist Commander அறிவிக்கிறார்! அதுவும் ஒரு Times Now போன்ற ஒரு தொலைக்காட்சியில்!!! மாவோஸ்டுகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்துங்க!!! மனிப்பூரில் 3 ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வீட்டிலேயே 12 தீவிரவாதிகளை பதுங்க வைத்து பிரிவினைவாதத்தை வளர்க்கவும், பாவப்பட்ட மக்களை கொல்லவும், அரசு இயந்திரங்களை அழிக்கவும் உதவி செய்யறாங்க! அப்ப தீவிரவாதிகளுக்கும், ஆளும...