Posts

Showing posts with the label பெண்குலம்

முதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்?!

" ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடுமா பெண்குலம்? " என்று பொங்கி ஏழுதியிருக்கும் நம் முதல்வர், என்ன சொல்லவறாருன்னு கொஞ்சம் சொல்லுங்க, என்னவோ ஜனாதிபதி பதிவுக்கு முதல் முறையா பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போல ஒரு மாயை க்ரீயேட் செய்யறாரு! ரொம்ப ஓவர் தான் முதல்வரே! இதற்கு முந்தய ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் லட்சுமி நின்ற போது முதல்வருக்கு இந்த கவிதை ஏன் வரவில்லை!! அப்ப மட்டும் "ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடட்டும் பெண்குலம் என்று இருந்து விட்டுவிட்டாரா?? கேப்டன் லட்சுமி கட்சி சார்ந்த ஒரு வேட்பாளராக கருதமுடியாது! அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்! பல முறை இந்திய சுதந்திரத்துக்காக சுபாஷ் சந்திர போஸோடு இணைந்து போராடியவர்! சுந்திர போராட்டத்தில் பல வருடங்கள் சிறை சென்றவர். இப்படி பட்ட ஒரு பெண்குலத்தை ஏன் அன்று திரு.கருணாநிதி ஆதரிக்கவில்லை?? இன்று நம் முதல்வர் ஆதரிக்கும் பிரதீபா பாட்டீல் வெறும் ஒரு காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸில் இணைந்தால 1962 காங்கிரஸ் எம்.எல்.ஏவாக அரசியலுக்கு வந்தவர்; பெரிய சாதனைகள் ஒன்று இல்லை சொல்வதற்கு! காங்கிரஸ் கட்சியால் கவர்னர் பதிவி கிடைத்து ராஜஸ்...