முதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்?!

" ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடுமா பெண்குலம்?" என்று பொங்கி ஏழுதியிருக்கும் நம் முதல்வர், என்ன சொல்லவறாருன்னு கொஞ்சம் சொல்லுங்க, என்னவோ ஜனாதிபதி பதிவுக்கு முதல் முறையா பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போல ஒரு மாயை க்ரீயேட் செய்யறாரு! ரொம்ப ஓவர் தான் முதல்வரே!

இதற்கு முந்தய ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் லட்சுமி நின்ற போது முதல்வருக்கு இந்த கவிதை ஏன் வரவில்லை!! அப்ப மட்டும் "ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடட்டும் பெண்குலம் என்று இருந்து விட்டுவிட்டாரா??

கேப்டன் லட்சுமி கட்சி சார்ந்த ஒரு வேட்பாளராக கருதமுடியாது! அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்! பல முறை இந்திய சுதந்திரத்துக்காக சுபாஷ் சந்திர போஸோடு இணைந்து போராடியவர்! சுந்திர போராட்டத்தில் பல வருடங்கள் சிறை சென்றவர். இப்படி பட்ட ஒரு பெண்குலத்தை ஏன் அன்று திரு.கருணாநிதி ஆதரிக்கவில்லை??

இன்று நம் முதல்வர் ஆதரிக்கும் பிரதீபா பாட்டீல் வெறும் ஒரு காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸில் இணைந்தால 1962 காங்கிரஸ் எம்.எல்.ஏவாக அரசியலுக்கு வந்தவர்; பெரிய சாதனைகள் ஒன்று இல்லை சொல்வதற்கு! காங்கிரஸ் கட்சியால் கவர்னர் பதிவி கிடைத்து ராஜஸ்தான் கவர்னர் ஆனார்! இவர் ஒரு முழு நேரே காங்கிரஸ் கட்சி தொண்டராக தான் வாழ்திருக்கிறார்!

இப்ப சொல்லுங்க மக்களே, யாருக்கு தகுதி இருந்தது முதல்வர் எழுதிய கவிதையின் பொருளாய் ஆவதற்கு!!??

ஏன் அன்று அனைத்து தகுதியும் இருந்த கேப்டன் லட்சுமியை ஆதரித்து தன் பெண்குல பாசத்தை நிரூபிக்கவில்லை திரு.கருணாநிதி! இன்று ப்ரதீபா பாட்டீலை ஆதரிக்க என்ன காரணம்? இன்று தான் அவருக்கு பெண் உரிமை பற்றி தெரிந்து கொண்டாரா ?

Comments

Anonymous said…
ரப்பர் ஸ்டாம்பாக இருக்கப்போகிறவருக்கு துப்பாக்கிய தூக்கிய பெண்மணி எதற்கு என்று அப்போது நினைத்திருப்பார் போல.
மேலும் நல்லவர்கள், துனிச்சலானவர்கள் அப்படிப்பட்ட பதவியில் இருந்தால் ஒருகாலத்தில் அவர்களால் (அவர்களின் நேர்மையால்) தனக்கு, தன் பதவிக்கு அல்லது தன் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூட கருதியிருக்கலாம்.
மற்றபடி எதுகையும், மோனையும் தனக்கு சாதகமாக இருக்கும் போது மட்டும் தான் யாருகும் வரும்.
//ரப்பர் ஸ்டாம்பாக இருக்கப்போகிறவருக்கு துப்பாக்கிய தூக்கிய பெண்மணி எதற்கு என்று அப்போது நினைத்திருப்பார் போல.//
:)))) அனானி கமெண்டு ரொம்ப நல்லா இருக்கு :)

அந்தக் கவிதையிலேயே இன்னும் நிறைய விசயங்களைக் கேள்வி கேட்கணும்.. சரி.. போகட்டும்
Bala said…
அந்தக் கவிதையில் உள்ள இந்த இரண்டு வரிங்க தானே உங்கள இந்த பதிவை போட வச்சுது?
//இந்தியக் குடியரசுத் தலைவராக;
இதோ ஒரு பெண்மணி!//

இந்த ரெண்டு வரியை எடுத்துட்டு்ப் பாருங்க.. யாரைப் பத்தி எழுதினதின்னு தெரியும் ;-)

அப்படியே இந்த விஷயத்திலே நம்ம அரசியல்வாதிங்களை பத்தி என் பதிவு.

http://balablooms.blogspot.com/2007/06/blog-post_19.html
Anonymous said…
Will he reserve 33% of party posts in DMK for women.Jayalalitha changed rules in AIADMK so that 33% of party posts are reserved for women.When it comes to choosing between Kalam and Lakshmi Seghal, Kalam got priority as he was a muslim and a Tamil :).
What will he do if Fatima Beevi is
fielded against Pratibha.
Anonymous said…
இது ரொம்ப சிம்பிள்...

அப்போ எழுதிய கவிதை ஊடகங்களில் வரவில்லை...

போதுமா...!!!
Anonymous said…
//Will he reserve 33% of party posts in DMK for women.//

yes, he has already reserved the seats for his family, now he has to just make sure that 33% of his family members get into politics....which he has started now with Kanimozhi....wait and watch, Rajathi ammal will become Vice President....and to include Maran's family in the politics, he will give a post for Selvi and so on.....This is Dravidan politics....all our agents will say this is the best communal hormony etc....
We The People said…
தொண்டனல்லாதவன்! has left a new comment on your post "முதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்?!":


/செந்தழல் ரவி said...

இது ரொம்ப சிம்பிள்...

அப்போ எழுதிய கவிதை ஊடகங்களில் வரவில்லை...

போதுமா...!!!//


அடா அடா! என்ன ஒரு கோபம்!!??

ஆமாம், ஊடகங்களில் வரவில்லை எனில் உங்களுக்கு எப்படி தெரியும்.

ஒருவேளை யாராவது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் சொன்னார்களா??

ஒரு வேளை நீங்களும் கிண்டல் தான் பண்றீங்களோ!

இந்த இழவு அரசியல் தான் புரியலைன்னா!

பதிவர் அரசியலுமா!

பின்குறிப்பு:

குடியரசு தலைவர் பற்றி அறிய

சாரி தொண்டனல்லாதவன்! உங்க கமெண்ட் தற்செயலா ரிஜெக்ட் ஆகிவிட்டது!
Anonymous said…
இன்றுவரை எங்கள் தலைவர் தன் குலம் வந்த ஆண் குலத்தைத் தான் முன்னிருத்தினார். காலத்தின் கோலம், தன் குலம் வந்த கனிவான மொழிபேசும் பெண்குலத்தினை முன்னிருத்த வேண்டிய கட்டாயம் இப்போது. அடுத்த முறை தன் குல முதல்வியை ஜனாதிபதிக்கோ, துணை ஜனாதிபதிக்கோ பரிந்துரைக்க இப்போதே அடித்தளம் தேவை தானே? ஒரு தமிழச்சி முன்னேறுவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்பதாலே தானே?
Anonymous said…
ஹெல்லோ...

கோபம் எல்லாம் இல்லைப்பா...ச்ச்ச்சும்மா கிண்டல் தான்........

அரசியல்வாதிகளை பற்றி தெரியாத பச்சைப்புள்ளையா இருக்கீங்களே வீ த பீப்புள்...

அமைதிப்படை சத்தியராஜின் உஸ்ஸ்ஸ் இஸ்ஸ்ஸ்ஸ் கான்ஸப்ட் தெரியாதா ஓய்...
இப்படிதான் போனதடவை கலாம் ஜனாதிபதி ஆக போகிறார் என்றதுமே அதுக்கும் கருணாநிதி கவிதை எழுதினார். ராமேஸ்வரத்தின் கடல் அலைகள் கூட மலை அளவு உயருகிறது என்று கவிதை ஆரம்பிக்கும். ஒடன்பிறப்புக்கள் அந்த கவிதையெல்லாம் மறந்திருப்பார்கள். கேடுகெட்ட அரசியல். கேடுகெட்ட மக்கள்.
Anonymous said…
உலகத் தமிழினத் தலைவர் என முச்சந்திக்கு முச்சந்து தனக்கே பேனர் கட்டிக் கொள்ளும் ஒரு தலைவர், மற்றொரு தமிழனுக்கு அதுவும் சிறுபான்மையினரான கலாமிற்கு ஏன் ஆதரவு தரவில்லை? எங்கே போயிற்று அந்த தமிழின உணர்வு? ஏனோ காமராஜ்ஜும், ஜிகே மூப்பனாரும் நினைவுக்கு வருகிறார்கள். தன்னையும், தன் குடும்பத்தினரும் மட்டுமே தமிழர்களோ? இப்போது மட்டும் வடக்கு வாழ்ந்தால் பரவாயில்லையா? இவர் தமிழினத் தலைவர் இல்லை.
தமிழ் "ஈனத்" தலைவர்!!
சீனு said…
//சுந்திர போராட்டத்தில் பல வருடங்கள் சிறை சென்றவர். இப்படி பட்ட ஒரு பெண்குலத்தை ஏன் அன்று திரு.கருணாநிதி ஆதரிக்கவில்லை??//

'சந்தர்ப்பம்' அப்படி!!!

அட போங்க! இந்த அம்மா, ஜனாதிபதி வேட்பாளை தேர்வுக்கு தான் தேர்வு செய்யப்பட்டதை பற்றி பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, "நிறைய மகிழ்ச்சி. இதற்கு சோனியாவிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்(!!!!)" என்று சொன்னார். அப்பொழுதே இவர் ஜனாதிபதி பதிவிக்கு தகுதியானவரா என்று யோசிக்க வைத்தது.
வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
உங்களையும் இந்த 8 விளையாட்டிற்கு அழைக்கிறேன்.
அட....என்னங்க என்னமோ இவரைப் பெண்குலத்துக்கு எதிரின்னு
நினைச்சுட்டீங்க?

அப்படியெல்லாம் இல்லீங்க. இப்பப் பாருங்க கனிமொழியை எம்.பி. ஆக்கி இருக்காரு.
அவுங்க(ளும்) பெண்தானே?