சில்லுன்னு ஒரு கலாசாரக் கொலை!
கடந்த சில நாட்களாலின் சில்லுன்னு ஒரு ஜோடின்னு ஒரு விஜய் டி.வி நிகழ்ச்சியை இரண்டு, மூன்று முறை பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி நம் சமுதாயத்தை, கலாச்சாரதை எப்படி பாதிக்கும் என்று தெரியாமலா ஒளிபரப்புகிறார்கள்? இல்லை தெரிந்தே ஒழியட்டும் நம் கலாச்சாரம்ன்னு ஒளிபரப்புறாங்களான்னு தெரியலை? அதை பார்த்ததுக்கு அப்புறம் இனி இந்த மாதிரி நிகழ்ச்சியை பார்க்கக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன்னா பார்த்துக்கோங்க!!!
யாரோ ரெண்டு பேர் சில்லுன்னு ஜோடியாமாம்.. ஹூம்!! என்ன கொடுமைடா சாமி. அந்த ஜோடில பொண்ணுக்கு வயசு 26 அப்புறம் பையனுக்கு வயசு 40. அது ஒரு மேட்டரே கிடையாது. சரி அவர்கள் காதல் விவகாரம் எப்படி ஸ்டார்ட் ஆச்சுன்னு ஒரு விளக்கம் கொடுத்தாரு பாருங்க நம்ம ஹீரோ! அந்த பொண்ணு இவரோட சித்தப்பா விட்டுல தங்கி (Paying Guest) இருந்ததாம், இவர் அவங்க சித்தப்பா ஊருக்கு போறதை சாக்கா வச்சு, அவரை ரெயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு இந்த புள்ளய சனி கிழமை டான்ஸ் பார்ட்டிக்கு போலாமான்னு கேட்டாராம், அவங்களும் சரின்னு போயிட்டு வந்தாங்களாம். அது கூட விடுங்க.
என்ன கொடுமைடா இது??:
அந்த நிகழ்ச்சியை நடத்துற மமதி சாரி கேட்க்கும் சில கேள்விகள்..
நீங்க குடிப்பீங்களான்னு ஹீரோ கிட்டயும், ஹிரோயின் கிட்டயும் உடனே ரெண்டும் ஆமாம்ன்னு சூப்பரா தலையை ஆட்டுதுங்க.
நீங்க சிகரெட் அடிப்பீங்களான்னு ரெண்டுகிட்டயும் கேட்டா ரெண்டும் ஆமாம்ன்னு சொல்லுதுங்க... ஹீரோயின் பாத்ரூம்ல தான் தம் கேட்பாங்களாம்!!!
அப்புறம் ஒரு சூப்பர் கேள்வி, அவருக்கு கேர்ள் ப்ரெண்ஸ்(கண்டிப்பா அவர்கள் பெண் தோழிகளை சொல்லவில்லை என்று அவர்கள் சிரிப்பு சொல்லிவிட்டது) இருக்காங்களா? உங்களுக்கு தெரியுமா? உடனே ஹீரோயின் எனக்கு தெரியும் அவருக்கு நிறைய இருக்குன்னு, ஆனா நான் கண்டுக்கமாட்டேன் ஏன்னா? எனக்கும் நிறைய பாய் ப்ரெண்ஸ்!!!! இது எப்படி இருக்கு??!!
கல்யாணம் ஆன முதல் ராத்திரி எங்க முதல் கிஸ் குடுத்தீங்க? அப்ப உங்களுக்கு என்ன தோணுச்சு?
இது போன்ற ஒரு வரைமுறை இல்லாமல் கேள்விக்கனைகளும் அலுக்காமல் பதில் சொல்லும் ஜோடிகளும், இது தேவையா?? இது போன்ற செயல்களை முன்வைத்து கேள்விகளும், அதற்கான பதிகளை வாங்கி என்ன பண்ணப்போறாங்க? இந்த மமதியும் அதை பார்க்கும் டி.வி ரசிகர்களும்.
இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இளைஞர்களும் இளம் ஜோடிகள் மட்டுமே பார்க்கிறார்கள் என்பதை வைத்து பார்க்கும் போது சில சந்தேகங்கள் தான் வருகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகள் வேண்டுமென்றே ஒரு மேற்கத்திய கலாசாரங்களை இந்தியாவினுல் அனுப்பி வைக்கும் முயற்சியாகவே தெரிகிறது. நம் இளைஞர்களுக்கு டேட்டிங், ஸ்வப்பிங் தொடர்ந்து இன்னும் சில கலாச்சார சீரழிவுகளை இந்த விஜய் டி.வி மூலமும் இறக்குமதி செய்யப்படுவதாக தான் எனக்கு தோன்றுகிறது.
இதை பார்ப்பவர்களுக்கு இப்படி தோண்றும்:
ஒழியட்டும் நம் கலாச்சாரம் என்ற நோக்கோடு தான் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது.
இது போன்ற நிகழ்ச்சிகளை விடுத்து சமீபத்தில் வந்த மக்கள் தொலைக்காட்சி போல சிறந்த, கருத்து மிக்க சினிமா படங்கள், மக்கள் சிந்தனையை தூண்டும் கலை/கவிதை பொக்கிஷங்களின் விமர்சனம் மற்றும் அறிமுகம் , வேலை வாய்ப்புக்கு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு ஊரில் உள்ள மக்கள் பிரச்சனையை எடுத்து, அதை மையமாக கொண்ட நிகழ்ச்சிகள்(*தேவைகள் சேவைகள்), சான்றோர் வீதி, அறிவுக்கு விருந்து - மாணவர் வினாடி வினா, சமுதாயத்தில் பெண் தொழில் செய்ய அறிவுரை என நல்ல நிகழ்ச்சிகளை செய்தால் தானும் வளர்ந்து சமுதாயமும் வளரும் என்ற எண்ணமின்றி அழிவு பாதைக்கு கூட்டிச்செல்கிறது விஜய் டி.வியின் சில்லுன்னு ஒரு காதல் ஜோடியை மக்கள் தன் எதிர்ப்பை தெரிவித்து, இது போன்ற நிகழ்ச்சிளை தயாரிப்பவர்களுக்கு நம் எதிர்ப்பை தெரியப்படுத்தவேண்டியது நம் கடமை.
-----------------------------------------------------------------------
சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! - வீடியோ
யாரோ ரெண்டு பேர் சில்லுன்னு ஜோடியாமாம்.. ஹூம்!! என்ன கொடுமைடா சாமி. அந்த ஜோடில பொண்ணுக்கு வயசு 26 அப்புறம் பையனுக்கு வயசு 40. அது ஒரு மேட்டரே கிடையாது. சரி அவர்கள் காதல் விவகாரம் எப்படி ஸ்டார்ட் ஆச்சுன்னு ஒரு விளக்கம் கொடுத்தாரு பாருங்க நம்ம ஹீரோ! அந்த பொண்ணு இவரோட சித்தப்பா விட்டுல தங்கி (Paying Guest) இருந்ததாம், இவர் அவங்க சித்தப்பா ஊருக்கு போறதை சாக்கா வச்சு, அவரை ரெயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு இந்த புள்ளய சனி கிழமை டான்ஸ் பார்ட்டிக்கு போலாமான்னு கேட்டாராம், அவங்களும் சரின்னு போயிட்டு வந்தாங்களாம். அது கூட விடுங்க.
என்ன கொடுமைடா இது??:
அந்த நிகழ்ச்சியை நடத்துற மமதி சாரி கேட்க்கும் சில கேள்விகள்..
நீங்க குடிப்பீங்களான்னு ஹீரோ கிட்டயும், ஹிரோயின் கிட்டயும் உடனே ரெண்டும் ஆமாம்ன்னு சூப்பரா தலையை ஆட்டுதுங்க.
நீங்க சிகரெட் அடிப்பீங்களான்னு ரெண்டுகிட்டயும் கேட்டா ரெண்டும் ஆமாம்ன்னு சொல்லுதுங்க... ஹீரோயின் பாத்ரூம்ல தான் தம் கேட்பாங்களாம்!!!
அப்புறம் ஒரு சூப்பர் கேள்வி, அவருக்கு கேர்ள் ப்ரெண்ஸ்(கண்டிப்பா அவர்கள் பெண் தோழிகளை சொல்லவில்லை என்று அவர்கள் சிரிப்பு சொல்லிவிட்டது) இருக்காங்களா? உங்களுக்கு தெரியுமா? உடனே ஹீரோயின் எனக்கு தெரியும் அவருக்கு நிறைய இருக்குன்னு, ஆனா நான் கண்டுக்கமாட்டேன் ஏன்னா? எனக்கும் நிறைய பாய் ப்ரெண்ஸ்!!!! இது எப்படி இருக்கு??!!
கல்யாணம் ஆன முதல் ராத்திரி எங்க முதல் கிஸ் குடுத்தீங்க? அப்ப உங்களுக்கு என்ன தோணுச்சு?
இது போன்ற ஒரு வரைமுறை இல்லாமல் கேள்விக்கனைகளும் அலுக்காமல் பதில் சொல்லும் ஜோடிகளும், இது தேவையா?? இது போன்ற செயல்களை முன்வைத்து கேள்விகளும், அதற்கான பதிகளை வாங்கி என்ன பண்ணப்போறாங்க? இந்த மமதியும் அதை பார்க்கும் டி.வி ரசிகர்களும்.
இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இளைஞர்களும் இளம் ஜோடிகள் மட்டுமே பார்க்கிறார்கள் என்பதை வைத்து பார்க்கும் போது சில சந்தேகங்கள் தான் வருகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகள் வேண்டுமென்றே ஒரு மேற்கத்திய கலாசாரங்களை இந்தியாவினுல் அனுப்பி வைக்கும் முயற்சியாகவே தெரிகிறது. நம் இளைஞர்களுக்கு டேட்டிங், ஸ்வப்பிங் தொடர்ந்து இன்னும் சில கலாச்சார சீரழிவுகளை இந்த விஜய் டி.வி மூலமும் இறக்குமதி செய்யப்படுவதாக தான் எனக்கு தோன்றுகிறது.
இதை பார்ப்பவர்களுக்கு இப்படி தோண்றும்:
- பார்ட்டிக்கு போய் கும்மியடிப்பது ஒரு நல்ல விசயம்
- பெண்களும் ஆண்களும் சிகரெட், சாராயம் (Liquor) எல்லா நல்ல பழக்கமும் வைத்துக்கொள்ளலாம்.
- Pub சென்று கும்மாளம் அடிப்பது ஒரு ஸ்டைல்.
- Saturday Night பார்ட்டிக்கு சொல்வது ஒரு சிறந்த செயல்.
- எத்தனை கேர்ள் ப்ரெண்ஸ்(தோழிகள் அல்ல) வைத்துக் கொள்கிறார்களோ, அத்துனை இமேஜ் பில்டப் ஆகும்.
ஒழியட்டும் நம் கலாச்சாரம் என்ற நோக்கோடு தான் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது.
இது போன்ற நிகழ்ச்சிகளை விடுத்து சமீபத்தில் வந்த மக்கள் தொலைக்காட்சி போல சிறந்த, கருத்து மிக்க சினிமா படங்கள், மக்கள் சிந்தனையை தூண்டும் கலை/கவிதை பொக்கிஷங்களின் விமர்சனம் மற்றும் அறிமுகம் , வேலை வாய்ப்புக்கு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு ஊரில் உள்ள மக்கள் பிரச்சனையை எடுத்து, அதை மையமாக கொண்ட நிகழ்ச்சிகள்(*தேவைகள் சேவைகள்), சான்றோர் வீதி, அறிவுக்கு விருந்து - மாணவர் வினாடி வினா, சமுதாயத்தில் பெண் தொழில் செய்ய அறிவுரை என நல்ல நிகழ்ச்சிகளை செய்தால் தானும் வளர்ந்து சமுதாயமும் வளரும் என்ற எண்ணமின்றி அழிவு பாதைக்கு கூட்டிச்செல்கிறது விஜய் டி.வியின் சில்லுன்னு ஒரு காதல் ஜோடியை மக்கள் தன் எதிர்ப்பை தெரிவித்து, இது போன்ற நிகழ்ச்சிளை தயாரிப்பவர்களுக்கு நம் எதிர்ப்பை தெரியப்படுத்தவேண்டியது நம் கடமை.
-----------------------------------------------------------------------
சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! - வீடியோ
Comments
//
ரிப்பீட்டே!
தம் அடிப்பதும், சாராயம் குடிப்பதும் அவரவர் தனி விருப்பு வெறுப்பு.
ஆனால், அதை சிறுவர்கள் பார்க்கும்படி, 'இதெல்லாம் தப்பில்ல' என்ற தோரணையில் காட்டுவது பொறுப்பில்லாத செயல்.
இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து, இந்த csmail@startv.com என்ற ஈமெயிலுக்கு எழுதி போடுங்க.
நான் அனுப்பியது:
The program 'Chillunu oru kadhal' which is being telecasted in Star-Vijay is a big mockery of Indian traditions and values.
We strongly object to its contents and request your management to stop telecasting such shows.
Thanks for your understanding!
VijayTV Customer,
Chennai, TamilNadu, India
I think, posts like these are the need of the hour.
ஏகாதிபத்தியத்தின் மற்றொரு கோர முகம் இது.
இது போன்ற நிகழ்ச்சிகளின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று சற்றே கற்பனை செய்து பாருங்களேன். சமூக அக்கறை கொண்ட உங்கள் போன்றோரின் நெஞ்சு பதறும், ஆனால் பெரும்பாலான நம் மக்களின் மனம் கிளுகிளுப்படையும். அந்த அளவிற்கு மக்களின் மனங்களை சீரழித்திருக்கிறது ஏகாதிபத்தியம்.
//
கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.
நல்ல பதிவு, தேவையான பதிவு.
கிருஷ்ணா
விஜய் டிவியை ஸ்டார் டிவி வாங்கி ரொம்ப நாளாச்சு தெரியுமா?
ஆமாங்க, நாம ஏன் நமக்கு பிடிக்காதத விட்டு விலகி இருக்க கூடாது.....கடைவீதில பல பொருட்கள் இருக்கத்தான் செய்யும், நாம் நமக்கு வேண்டியதை மட்டும் தானே வாங்குகிறோம்.....இதில் மட்டுமென்ன கூப்பாடு....
Krishna இப்பொழுது விஜய் டி.வி விஜய் மல்லையாவின் கையில் இல்லை! ஸ்டார் நெட்வர்க் அதை வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
BadNewsIndia வாழ்த்தியமைக்கு நன்றி.
ஆமாங்க, நாம ஏன் நமக்கு பிடிக்காதத விட்டு விலகி இருக்க கூடாது.....கடைவீதில பல பொருட்கள் இருக்கத்தான் செய்யும், நாம் நமக்கு வேண்டியதை மட்டும் தானே வாங்குகிறோம்.....இதில் மட்டுமென்ன கூப்பாடு....
*********************************************/
நமக்கு பிடிச்சது பிடிக்காததுங்கறது இங்க முக்கியமில்ல, இது தேவையா இல்லையா. . .? என்பது தான் முக்கியம்
கடைவீதில பல பொருட்கள் இருக்கத்தான் செய்யும்சொல்றீங்களே, கஞ்சா கூடத்தான் விக்கிறாங்க ஒளிச்சி மறச்சி விக்கிறாங்க, அப்ப அதெல்லாம் சரின்னு சொல்லுவீங்களா.
இந்த நிகழ்சிகளும் அது போல தான்.
சாராயம் குழந்தைகளுக்கான மிட்டாய் வகைகளுடன் வைத்துவிட்டு குழந்தைகளை சாராயம் அது, அது ஒரு போதை பொருள், அதை பார்க்காதே, பார்க்காதே என்று சொல்ல முடியுமா அனானி??!!! அதை எங்கு வைக்க வேண்டுமே அங்கு வைத்தால் நல்லது.
//அடுத்த வார்த்தை பார்பனீயம்....யாராவது சாட்சியுடன் வாங்கையா, * டிவி பார்பனரால் நடத்துவது என்பதற்க்கு....//
அனானி சார், கவலை வேண்டாம் நான் அத்தகைய பினூட்டங்கள் அனுமதிக்கேன். :)
நாம் சாதாரண மளிகை கடைக்கும் போகிறோம் சாராயக்கடைக்கும் போகிறோம், ஆனால் சாராயக்கடைக்கு நாம் குழந்தைகளை கூட்டிச்செல்வதில்லை, ஆனால் மளிகை கடைக்கு கூட்டிச்செல்கிறோம்...
நம்ம டீவி பொட்டிகள் எல்லாத்திலையும் ஒரு சைல்ட் லாக் சிஸ்டம் இருக்கில்ல, அத உபயோகம் செய்ய வேண்டியது தான்...இப்போ ,
அட நீங்க ஒண்ணு, அதெல்லாம் நீங்க அனுமதித்தாலும் எனக்கு எந்த கவலையும் இல்ல.....ஏதோ கழிசடை என்னமோ பேசுதுன்னு அனானியா போயிகிட்டே இருப்பேன்....
இந்த மாதிரி தொடர்களை ஏனய்யா அரசிடம் சொல்லி தடை செய்ய சொல்லக்கூடாது?...
ஏன் அரசுக்கு வேண்டப்பட்ட தொலைக்காட்சிக்காரர்களது சானலில் மட்டும் என்ன நடக்கிறது....நேற்று செல்வியில் காண்பிக்கிறான் மருமகள்-மாமனார் பற்றிய அசிங்கமான நினைத்தும் பார்க்க முடியாத விஷயங்களை...அதனை யார் கண்டிப்பது...இது போலவே ஜெயாவிலும்.....எங்க போய் முட்டிக்கறது.....
எனக்கு தொன்றுவதெல்லாம் நாம் தான் ஒதிங்கிச் செல்லவேண்டும் என்பதே...
ஒருத்தன் சஞ்சா விக்கறதை பார்த்தா நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது, நான் அதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன், என் எதிர்ப்பை வெளிப்படுத்துவேன். அதை தான் இந்த நிகழ்ச்சிக்கு செய்கிறேன். அவ்வளவே.
//எனக்கு தொன்றுவதெல்லாம் நாம் தான் ஒதிங்கிச் செல்லவேண்டும் என்பதே... //
அறிந்து நாம் ஒதிங்கி போகலாம், அது தவறு என்று தெரிந்து நாம் அதை செய்யாமல் இருக்கலாம், ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கு அனைவரும் இது நல்ல விசயம், தப்பு இல்லை என்று தோண்றும் வண்ணம் காண்பிக்கப்படுகிறது, இதனால் நம் கலாசாரம் சீரழியும் என்பதே என் ஆதங்கம். இது போன்ற நிகழ்ச்சிகள் சில வரைமுறைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதே என் கோரிக்கை.
:)
மிகச்சரியா சொன்னீங்க!
மனித வளம் மிகுந்த இந்தியாவில் மேற்கத்தியவனுக்கு தேவையான தொழில் திறைமை வாய்ந்த இளைஞர்கள் இந்தியவில் கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கிறார்கள். இவர்களை இப்போதிருந்தே வசப்படுத்தி தங்கள் பொறுக்கி கலாச்சாரத்தை நம் நாட்டிலேயே, நம் மக்களை, தொழில்நுட்ப வசதிகளை, திறமைகளை உபயோகப்படுத்தி அவர்களுக்கு ஏற்ற வருங்கால அடிமைகளாக மாற்றுவதுதான் அடிப்படை சதித்திட்டம். முன்பெல்லாம் அராஜக, அதிரடி ஆக்கிரமிப்பு செய்து ஆசியா அப்ரிக்கா கண்டங்களின் கலாச்சாரங்களை கெடுத்து, மனிதர்களையும் மண் வளங்களையும் திருடினான். இப்போது அதை சுலபான செலவில்லாத வழிகளை கையாண்டு அதே கலாச்சார அழிவுகளை செய்து மனித மண் வளங்களை திருடிவருகிறான்.இதில் இப்போது வெட்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், பசுத்தோல் போர்த்திய புலியென நம் இன மக்களே( :-( ) இதற்கு தோது போகிறார்கள் என்பதுதான் வேதனை. இதுவும் ஒரு சதித்திட்டமே. உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் அனைவரும் கூலிக்கு மாரடிப்பவர்கள். வெறும் நடிகர்களே.
இவர்கள் கூறுவது அனைத்தும் பொய், பித்தலாட்டம். உன்மையில் பார்த்தோமேயானால் அவர்கள் இந்திய பிர்ஜையாக இருக்கமாட்டார்கள். அமெரிக்காவிலிருந்தோ, ஐரோப்பாவிலிருந்தோ வரவழைக்கப்பட்ட தமிழ் பேசும் ஒட்டர், கூலிப்படைகளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இது போன்ற தவறான முறைகளுக்கு வழிகாட்டி, அழகான இளம் பெண்களுக்கு ஆசை காட்டி, அயல்நாடுகளுக்கு அழைத்து சென்று குடி, மது, போதை, பணம், ஆடம்பரம், பகட்டு போன்றவைகளுக்கு அடிமையாக்கி இரவு களியாட்ட அமைப்பு, காம வெறி இச்சை திரைப்படங்கள் போன்றவற்றில் ஈடுபடுத்தி இவர்களை அழித்து இவர்கள் முதுகில் அவர்கள் பணம் கொழித்து கடைசியில் எதற்கும் உபயோகமில்லாத சமுதாய மலங்களாக வீதியில் தூக்கி எறியப்பட்டு எதாவது பைத்தியக்கார மருத்துவமனையில் அல்லது சிறைகளில் வாடி சாவார்கள்.
இது தான் சதித்திட்டம்.
இன்னும் நிறைய இருக்கிறது எழுத.
நேரமில்லை. தனியாக ஒரு பதிவு எழுத இருக்கிறேன்.
அன்புடன் மாசிலா.
சரிங்க பீப்பிள், நம்ம சன் டீவி, ஜெயா டீவி பத்தி ஒண்ணும் சொல்லலையே நீங்க....
இது நமது கலாசாரத்திற்க்கு கேடு, நான் மெயில் அனுப்பியிருக்கிறேன் அப்படிங்கறீங்க சரி.
மருமகள்-மாமனார் உறவினை தவறாக சித்தரிக்கும் செல்விக்கும் கண்டனம் உண்டா?...அதற்கு உங்கள் ரியாக்ஷன் என்ன?.....அறிவாலயம் முன் போராடப்போகிறீர்களா?, இல்லை தயாநிதி, கருணாநிதி, உதயநிதி, ஜெயா, ராதிகா, சரத்குமார், சசிகலா & குரூப் இப்படித்தான் என்று விட்டுவிட்டீர்களா?.
//பாத்தீங்களா, மாசிலா எங்கெல்லாம் போறாருன்னு....அப்பா என்ன கற்பனை....ஆகா, ஆகா...//
இதற்கே மிரண்டுபோய்விட்டீர்களே! இன்னும் மீதத்தை சொல்லிகூட முடிக்கவில்லை.
இது போன்ற கலாச்சார அழிவு முறைகளை 'புதுமை,' 'நாகரீகம்' என்ற பெயரில் புகுத்தி மக்களை முக்கியமாக இளைஞர்களை மேலும்
மேலும் சின்னத்திரைக்கு அடிமையாக்கி, அதன்மூலம் நிறைய புதிய விளம்பரங்களை அறிவித்து சமுதாயத்தை ஒரு வெறும் நுகர்வோர் கூட்டமாக மாற்றுவதுதான் மற்றுமோர் சதி. பார்வையாளர் அளவுகோல் ( Audio-meter) மூலம் எத்தனைபேர் நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள் என்பதை கணக்கிடமுடியும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக மக்கள் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்களோ அவ்வளவுக்கும் விளம்பரத்தின் விலை கூடும். மேலும் இது பார்ப்பவர்களின் வாங்கும் திறன், வயது, குடும்ப சூழ்நிலை இதையெல்லாம் பொறுத்தும் ஏறும், இறங்கும். நிகழ்ச்சிகளின் தரத்தை, வெளிவரும் நேரத்தை, பார்ப்பவர்களின் இடத்தை வைத்து இதையெல்லாம் யூகிக்க முடியும். பிறகு என்ன? நாச வேலைகள் ஆரம்பமாகட்டும்!
மாசிலா சொல்வதில் தவறொன்றும் உள்ளதாக எனக்கு தோண்றவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் மாசிலா சொல்வது போல இருக்கக்கூடும் என்பது என் சந்தேகமும் கூட.
//சரிங்க பீப்பிள், நம்ம சன் டீவி, ஜெயா டீவி பத்தி ஒண்ணும் சொல்லலையே நீங்க....//
தப்பு யார் செய்தாலும் தப்பு அனானி. அதில் சன் டி.விக்கு ஒரு கொள்கை, ஜெயா டி.விக்கு ஒரு கொள்கை கிடையாது நன்பா. நான் இந்த டி.விகளின் நிகழ்ச்சிகளை பார்ப்பது குறைவு அதனால் அதில் வருவது தெரியவில்லை. நான் பார்த்தவிசயங்களை மட்டுமே விமர்சிப்பேன், என் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் கொடி பிடிப்பது அல்ல !!! என்னால் முடிந்த அளவுக்கு என் எதிர்ப்பை தெரிவிப்பது. போராட்டம் செய்து அரசியல், கமிஷன், காம்பரமைஸ் செய்வது அரசியல் வாதிகளின் மலிவான வேலை எனக்கு வேண்டாம். :)
You are a hypocrate............. //
நன்றி அனானி. நான் hypocrate தான் உங்களை பொருத்தவரை and I dont mind to be, bcoz i say facts which you dont like, i am an hypocrate to you.
"I cannot speak anything but the truth. I cannot turn back on my duty, just to please some one."
தொலைக்காட்சி மட்டுமல்ல, சினிமா, பத்திரிகை என்று எல்லா ஊடகங்களும் இந்தத் திருப்பணியைத் தீவிரமாகச் செய்துவருகின்றன. சமூகப் பொறுப்பின்மைக்கு உச்சகட்ட உதாரணங்கள் நம் ஊடகங்கள்.
இவற்றைப் புறக்கணித்துவிட்டு ஒதுங்கவேண்டும் என்பது தீர்வானால் காட்டுக்குள்தான் போய் வாழ முடியும்!
கடுமையான எதிர்ப்புகள் எழாதவரை இது போன்றச் சீரழிவுகள் தொடரும். யாரையாவது பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு கையெழுத்து இயக்கமும் போராட்டமும் நடத்தும் நம் அரசியல் கட்சித் (தறு)தலைகள் இதற்கு நடத்தினால் என்ன?
விஜய் டிவிக்கு எனது கண்டனங்கள்.
இதை பார்ப்பவர்களுக்கு இப்படி தோண்றும்:
பார்ட்டிக்கு போய் கும்மியடிப்பது ஒரு நல்ல விசயம்
பெண்களும் ஆண்களும் சிகரெட், சாராயம் (Liquor) எல்லா நல்ல பழக்கமும் வைத்துக்கொள்ளலாம்.
Pub சென்று கும்மாளம் அடிப்பது ஒரு ஸ்டைல்.
Saturday Night பார்ட்டிக்கு சொல்வது ஒரு சிறந்த செயல்.
எத்தனை கேர்ள் ப்ரெண்ஸ்(தோழிகள் அல்ல) வைத்துக் கொள்கிறார்களோ, அத்துனை இமேஜ் பில்டப் ஆகும்.
இவை எல்லாம் அழிந்து வரும் நம் இந்திய கலாசாரத்தை முற்றிலும் அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே எண்ணத் தோண்றுகிறது.
//
யாருங்க இந்தியக் கலாச்சாரம் சீரழியும் என்று பயமுருத்திக்கிட்டு இருக்கிறது ?
எது இந்தியக் கலாச்சாரம் என்று வரைமுறை கொடுக்கவேண்டும் அதன் பின் அது எப்படி சீரழிகிறது என்பது சொல்லப் படவேண்டும். நீங்கள் சொல்லிய விஷயமெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தில் இல்லையா ?
தண்ணி அடிப்பது என்ன நமக்கு வெள்ளைக்காரந்த்தான் சொல்லிக் கொடுத்தானா ? அதுக்கு முன்னாடி நமக்குத் தெரியாதா ?
கும்மாளம் அடிப்பது (குஜராத்தி நவராத்திரி மேளா, தாண்டியா) என்ன நமக்கு வெள்ளைக்காரன் வந்து சொல்லிக் கொடுத்தானா ?
பெண்கள் தண்ணி அடிக்கக் கூடாது என்று சட்டம் போட நாம் யார் ?
தண்ணி அடிப்பவன் ஒழுக்கங்கெட்டவன் என்று முத்திரை குத்த நாம் யார் ?
சான்சு கிடைத்தால் சந்தில் சிந்துபாடும் பார்ட்டிகள் கர்ள் ப்ரெண்ட் இல்லாமல் அவதிப் படுவதனால் "கலாச்சாரக் கொலை" என்றெல்லாம் பிதற்றுவதாகத்தான் நான் நினைக்கிறேன். அந்த லிஸ்டில் வீ த பீப்பிள் ஜெய்சங்கரும் சேரணுமா ?
தனிநபர் ஒழுக்கம் என்பது ரெட்டை வாழ்க்கை வாழ்வதனால் வருவது அல்ல.
நான் தண்ணி அடிப்பேன் தம் அடிப்பேன் ஆனால் என் வீட்டுப் பெண்கள் அப்படி இருக்கக் கூடாது என்பது Male chauvanism.
நீங்கள் போட்ட இந்தப் பதிவிற்கும் கலாச்சாரக் காவலாளிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் பஜ்ரங்தள் பார்ட்டிகள் லக்னோவில் பார்கில் காதல் ஜோடிகளை அடித்து விரட்டுவதில் காட்டுவது போன்ற எண்ணத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
அறிந்து நாம் ஒதிங்கி போகலாம், அது தவறு என்று தெரிந்து நாம் அதை செய்யாமல் இருக்கலாம், ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கு அனைவரும் இது நல்ல விசயம், தப்பு இல்லை என்று தோண்றும் வண்ணம் காண்பிக்கப்படுகிறது, இதனால் நம் கலாசாரம் சீரழியும் என்பதே என் ஆதங்கம். இது போன்ற நிகழ்ச்சிகள் சில வரைமுறைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதே என் கோரிக்கை.
********************************/
இன்னொரு மொற சொல்லுங்க . . . . ?
(ரிப்பீட்டே! க்கு தமிழ் மொழிபெயர்பு)
//தண்ணி அடிப்பது என்ன நமக்கு வெள்ளைக்காரந்த்தான் சொல்லிக் கொடுத்தானா ? அதுக்கு முன்னாடி நமக்குத் தெரியாதா ?//
அதை நம்ம வெள்ளைக்காரன் சொல்லித்தந்தான்னு சொல்லவில்லையே, ரோட்டில நிந்து தண்ணி அடிப்பது நல்லதுன்னு சொல்லி நாலு பேரை கெடுக்காதேன்னு தான் சொல்லறேன். குடிக்கறது உடம்புக்கு நல்லது இல்லை என்பது உண்மை தானே, அதை ஒரு சதாரண விசயமா விளம்பரம் செய்யாதேன்னு தான் சொல்லவறேன் வஜ்ரா. நம் இளசுங்க ஈஸியா அந்த வழிய எடுத்துக்கிட்டு போயிடும் அதனால தான் சொல்லறேன். வெள்ளைக்காரன் ரெண்டு பெக் போட்டுட்டு அடங்கிறுவான், நம்ம ஆளுக மட்டை ஆகறவரை தண்ணிய போட்டு குடும்பத்தை அழிப்பான். அதனால அதில் அடிமையாக இருக்க இந்த மாதிரி Cheap Publicity குடுக்க வேண்டாம் என்று தான் சொன்னேன். இதில் என்ன தப்பு.
//கும்மாளம் அடிப்பது (குஜராத்தி நவராத்திரி மேளா, தாண்டியா) என்ன நமக்கு வெள்ளைக்காரன் வந்து சொல்லிக் கொடுத்தானா ?//
என்னங்க நவராத்திரியும், தாண்டியாவும் ஒவ்வொறு சனிகிழமையும் உங்க பாக்கெட்டை காலி செய்யாது வஜ்ரா. அது வெறு 9 நாள் கொண்டாடம், நீங்க டாண்டியா போயிருக்கீங்களா? அங்க நம்ம சனிக்கிழமை பார்ட்டியில் நடக்கற மாதிரி ஒரு சின்ன விசயம் கூட நடக்காது, சனிகிழமை பார்ட்டியில் நீங்க போனது இல்லை போல... போய் பார்த்திட்டு வந்து சொல்லுங்க வஜ்ரா. அது ஒரு பெரிய கொடுமை!!! அங்க தான் டேட்டிங், ஸ்வாப்பிங் கலாச்சாரம் துவங்குது என்று நான் நிச்சயமாய் நினைக்கிறேன்.
//பெண்கள் தண்ணி அடிக்கக் கூடாது என்று சட்டம் போட நாம் யார் ?//
ஐயா பெண்கள் தண்ணி அடிக்கக்கூடாதுன்னு நான் எங்க சொன்னேன். அடிச்சா அதை வீட்டோட வெச்சுக்க. வெளிய வந்து பல லட்சம் பேர் பார்க்கு இடத்தில் ஜாலியா பீத்திக்காத... அதை பார்த்து இன்னும் நாலு பொண்ணுங்க கெட்டுப்போகவா??
//தண்ணி அடிப்பவன் ஒழுக்கங்கெட்டவன் என்று முத்திரை குத்த நாம் யார் ?//
நம்ம ஊருல நடக்கற பாதி க்ரைம் குடிச்சு நிலை தடுமாறி செய்யறது தான். குடிச்சதும் ஒழுக்கம் இல்லாம போகுது இல்ல.அது தான் நம்ம பாயண்ட்.
//சான்சு கிடைத்தால் சந்தில் சிந்துபாடும் பார்ட்டிகள் கர்ள் ப்ரெண்ட் இல்லாமல் அவதிப் படுவதனால் "கலாச்சாரக் கொலை" என்றெல்லாம் பிதற்றுவதாகத்தான் நான் நினைக்கிறேன். அந்த லிஸ்டில் வீ த பீப்பிள் ஜெய்சங்கரும் சேரணுமா ?//
ஐயா என்ன வம்பு இழுத்துவிடறீங்க என் பொண்டாட்டி பார்த்தா உண்மைன்னு நினைச்சுக்க போறாங்க... ஏங்க வம்பு இழுக்குக்கிறீங்க :(
என் மனசுக்கு பட்டது எழுதினேன். இதில் எனக்கு கிடைக்கல உனக்கு கிடைச்சது எல்லாம் ஒன்னும் இல்லை. சரி வஜ்ரா உங்களுக்கு கிடைத்தனால் என்ன பயன் அடைந்தீர்கள்?? எனக்கு கிடைக்காதால் என்ன நஷ்டம் ஆச்சு?? ஒன்னும் இல்லாத மேட்டரை ஒரு பிசினஸா மாத்தி சனிகிழமை பார்ட்ட்டி என்ற பெயரில் கலெக்ஷன் பார்க்கும் மக்களை என்ன சொல்ல? அதை சப்போர்ட் செய்யும் உங்களை என்ன சொல்ல??
//நான் தண்ணி அடிப்பேன் தம் அடிப்பேன் ஆனால் என் வீட்டுப் பெண்கள் அப்படி இருக்கக் கூடாது என்பது Male chauvanism.//
என்னங்க பெண் வேலைக்கு போகக்கூடாது, சம்பாதிக்ககூடாது, வீட்டு விட்டு வெளிய வரக்கூடாது, யாரையும் பார்த்துப் பேசக்கூடாதுன்னா சொல்லிட்டேன், என்னை பார்த்து Male chauvanistன்னு சொல்ல அளவுக்கு?? தண்ணி அடிப்பது உடம்புக்கு நல்லதல்ல, உங்களை சார்ந்து வளரும் பிள்ளைக்களுக்கு நல்லதல்ல, அதனால் குடும்பத்துக்கு நல்லதில்லை, சமுதாயத்துக்கு நல்லதல்லன்னு சொன்னா என்னமோ என்னை ஒரு Male chauvanistன்னு சொல்லறீங்க :((((
//நீங்கள் போட்ட இந்தப் பதிவிற்கும் கலாச்சாரக் காவலாளிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் பஜ்ரங்தள் பார்ட்டிகள் லக்னோவில் பார்கில் காதல் ஜோடிகளை அடித்து விரட்டுவதில் காட்டுவது போன்ற எண்ணத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.//
நான் யாரையும் விரட்டி அடிக்கல தல,என் மனசுக்கு பட்டதை சொல்லறேன், கரெட்டுன எடுத்துக்குங்க, இல்லைன்னு தோணுச்சுன்னா விட்டு விடுங்க... என்னை போய் பஜ் ரங்தள் பார்டிகள் கூட சேர்த்து பேசறீங்களே :(((( நான் சொல்வது சரி என்போர் ஏற்கலாம், நிகழ்ச்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்கலாம் !! இல்லை என்போர் என் பதிவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கலாம்!!!
நன்றி வஜ்ரா.
? ஒன்னும் இல்லாத மேட்டரை ஒரு பிசினஸா மாத்தி சனிகிழமை பார்ட்ட்டி என்ற பெயரில் கலெக்ஷன் பார்க்கும் மக்களை என்ன சொல்ல? அதை சப்போர்ட் செய்யும் உங்களை என்ன சொல்ல??
//
சார் நான் எதையும் சப்போர்ட் செய்யவில்லை.
my point is dont oppose something because you did not have the chance to get it. And stop preaching.
விஜய் டீவில காட்டுறான்னு நானும் செய்யுறேன்னு எவனாவது சொன்னா ?
அவன் சொல்றான்னு நீ செய்யுறியே உனக்கு புத்தி எங்கே போச்சு ன்னு கேக்கணும் ? அதை விட்டுப்போட்டு அவன் செய்யுறது தப்பு, மது வீட்டுக்கு நாட்டுக்கும் கேடு, என்று லெக்சர் அடிப்பது ஈசி.
இளைஞர் சமூதாயம் சீரழியுதுன்னா ?
அடக்கி அடக்கி வைத்து ஒரு நாள் அது வெடித்து விடுகின்றது. அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று சொல்லி வளர்த்து நாம் மூளையை மழுங்கடித்துவிட்டு, கோழையாக்கிவிட்டு புதிதாய் சுதந்திரம் கிடைத்தால் அது misuse ஆகத்தான் செய்யும்.
சுதந்திர எண்ணத்துடன் வளர்க்கவேண்டும். அதை 100க்கு 99 இந்தியர்கள் செய்வதில்லை.
..
நீங்க இந்த கீத்து கொட்டகை "பார்"க்கு போயிருக்கீங்களா ? சனிக்கிழமையெல்லாம் இல்ல. எல்லா கிழைமையிலயும் சில கிழ போல்டுகள் வந்து தூக்குவாளியில் சரக்கை ஊத்தி ஒரே மடக்கில் 250 மி.லி அடித்துவிட்டுப் போகும். இதில் பல கிழவிகளும் அடக்கம்.
தண்ணி அடிப்பது உடம்புக்கு நல்லதில்லை தான். அதைத் தானாகத்தான் உணரவேண்டுமே தவிர அடுத்தவன் சொல்லித் தந்து வரக்கூடாது.
இப்படி அடுத்தவனைப் பார்த்து வரும் எண்ணமாகவே ஒருவன் வளர்ந்தால் அவன் வாழ்க்கையில் பொறாமையைத் தவிற எதுவுமே அவனது சொந்த எண்ணமாக இருக்காது. அதற்காகத்தான் உங்கள் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
நீங்கள் சொன்ன நிகழ்ச்சியை நானும் இரண்டொரு முறை பார்த்தேன் என்ற முறையில் ஒரு பின்னூட்டம்...
எனக்குத் என்ன தோன்றுகிறது என்றால் நீங்கள் தனி மனித ஒழுக்கத்தையும், கலாச்சாரத்தையும் குழப்பிக் கொள்கிறீர்கள்.
உங்கள் அளவுகள் படி நமது கலாச்சாரத்தில் -
1) காதல் என்றால் ஒரு மாற்று குறைவு. அதுவும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் ஒரு எள்ளல்தான் (அது ஒரு மேட்டரே இல்லாவிட்டாலும்)
2) ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனம் ஆடக் கூடாது.
3) நான் alcochol சாப்பிடுவேன் என்று பொதுவில் வந்து ஒத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் பெண் அப்படிச் சொன்னால் அது எரிச்சல்தான். பின்னே... பெண்தானே நமது கலாச்சாரத்தின் அச்சானி. அவர்கள் (மட்டும்) புனிதமாக இருந்தால் போதுமே.
மேலும் நிறைய கேள்விகள்... வஜ்ராவின் கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதிலையும் படித்தேன்.
இறுதியில் என்ன தோன்றுகிறது என்றால்... நீங்கள் உங்களுடைய அளவுகோள்களை (மட்டும்) வைத்துக் கொண்டு உலகத்தை அளக்க முயற்ச்சிகின்றீர்கள்.
உலகம் மிகப் பெரியது. கலாச்சாரம் பற்பல வடிவங்கள் கொண்டது. அவரவர்க்கு அவரவர் ஒழுக்கம்.
என்னைப் பொறுத்த வரையில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபொழுது தோன்றியது என்னவென்றால் -
நீங்கள் பார்த்த இருவருமே தங்கள் நிலை உணர்ந்து சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். அந்த முடிவை தைரியமாக செயல் படுத்தியவர்கள்.
தங்கள் காதலிலும், அதை இப்படி பேட்டியாக சொல்வதிலும் (நீங்கள் எள்ளலுடன் சொல்லியிருக்கும் வயது வித்தியாசம் இருந்தும்) மிகவும் தன்னம்பிக்கையுடன் செயல் பட்டிருக்கின்றார்கள்.
கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நேர்மையுடனே, ஆர்ப்பாட்டமில்லாமல் பதில் அளித்திருந்தார்கள்.
அவர்கள் யாரையும் குற்றமும் சொல்லவில்லை எதையும் நியாயப்படுத்தவுமில்லை
இந்த மாதிரியான coffeetable talk show-க்கள் ஒரு பரந்துப்பட்ட அனுபவத்தை நேயர்களுக்கு ஏற்படுத்துகிறது. அது ஆரோக்கியமாந்தா இல்லையா என்பது பார்க்கும் பார்வையில்தான் இருக்கின்றது.
மேலும் இரவு நடனம், pub கொண்டாட்டம், ஆணும் பெண்ணும் பேசிப் பழகுதல் இதெல்லாம் மேலை நாட்டு கலாச்சாரம் என்று மட்டும் எண்ண வேண்டாம். இது பற்ப்பல வடிவுகளில் நமது நாட்டில் தொன்றுதொட்டு இருந்துக் கொண்டுதான் இருக்கின்றது.
உ-ம் சங்க காலத்தில் இந்திர விழாக்கள் இரவினில் நடனங்கள் நட்ந்திருக்கின்றன. நாடகங்கள், கூத்துக்கள், கரகாட்டங்கள் பெரும்பாலும் இரவில்தான் நடைபெறும். கள் அருந்தியிருக்கின்றார்கள். பனையேறுவது தொழிலாகவே சமீப காலம் வரை தொழிலாகவே இருந்திருக்கின்றது. பற்ப் பல நூற்றாண்டுகளாக புகைத்தல் பழக்கம் இருந்திருக்கின்றது. களத்து மேடு, கம்மாய்க் கரை, வாய்க்கா, வரப்பு என்று பல இடங்களில் ஆணும் பெண்ணும் பேசிப் பழகியிருந்திருக்கிறார்கள். ஏன்... களவு மணம் எனபது ஒரு கற்பொழுக்கமாகவே இருந்து வந்திருக்கின்றது.
நமது பாட்டன் / முப்பாட்டன்க்ளும் தங்கள் வாழ்க்கையை கொண்ட்டாட்டமாகத்தான் வாழ்ந்திருக்கின்றார்கள். நாம் இப்பொழுது கொஞ்சம் sophisticated-ஆக மாறியிருக்கொம். வருங்கால சந்த்த்தியினருக்கு இது பழைய பஞ்சாங்கமாகத்தான் தெரியும்.
பின்னூட்டம் வெளியிட்டதற்கு மிக்க நன்றி!!!
//my point is dont oppose something because you did not have the chance to get it. And stop preaching.//
இதை நீங்க தமிழில் சொன்னாலும், ஆங்கிலத்தில் சொன்னாலும் என் பதில் ஒன்று தான்...இதில் எனக்கு கிடைக்கல உனக்கு கிடைச்சது எல்லாம் ஒன்னும் இல்லை. சரி வஜ்ரா உங்களுக்கு கிடைத்தனால் என்ன பயன் அடைந்தீர்கள்?? எனக்கு கிடைக்காதால் என்ன நஷ்டம் ஆச்சு?? கிடைத்ததால் ஒன்று லாபம் இல்லை, கிடைக்கவில்லை என்றால் நஷ்டமும் இல்லை. கிடைத்தவர்களுக்கு தான் பாக்கெட் காலியாகும். எனக்கு பண மிச்சம் என்று நினைக்கிறேன் ;) இதில் நான் ஒன்னும் போதிக்கவில்லை. என் கருத்தை சொன்னேன். அவ்வளவே!!!
//தண்ணி அடிப்பது உடம்புக்கு நல்லதில்லை தான். அதைத் தானாகத்தான் உணரவேண்டுமே தவிர அடுத்தவன் சொல்லித் தந்து வரக்கூடாது.//
கரெக்ட் தான் நீங்க சொல்லறது. ஆனா ஒரு மேடை போட்டு நான் தினம் ஜாலியா தண்ணியடிப்பேன்னு தம்பட்டம் அடிக்க தேவை இருக்கா?? அதை பார்த்து அது ஒன்னும் தப்பில்லை நாமும் செய்யலாம் என்று தான் இளைஞர்கள் நினைக்கக்கூடும் என்பது என் கருத்து.
//அதற்காகத்தான் உங்கள் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். //
உங்கள் எதிர்ப்பும் இங்கு பதியப்படுகிறது. இந்த பின்னூட்டங்களை பார்த்து எது சரி, எது தவறு என்று படிப்பவர்கள் நிச்சயக்கட்டும் :)
நன்றி வஜ்ரா.
//எனக்குத் என்ன தோன்றுகிறது என்றால் நீங்கள் தனி மனித ஒழுக்கத்தையும், கலாச்சாரத்தையும் குழப்பிக் கொள்கிறீர்கள்.//
நீங்கள் சொல்லும் விசயம் இருக்கலாம், என் பார்வையில் தனி மனித ஒழுக்கமும் கலாச்சாரமும் கலந்திருக்கலாம். :)
வெங்கட் சார், அந்த ஜோடியின் வயசு வித்தியாசம் ஒரு தவறல்ல என்று நான் சொல்லியிருந்தேன், அது எப்படி உங்களுக்கு எள்ளலாக தெரிகிறது. அவர் ஏற்கவே ஒரு திருமணம் செய்தவர் எல்லாம் ரைட், நான் அதற்க்கு நான் ஒன்று சொல்லவில்லையே. இது பப்லிக்கா மேடை போட்டு சொல்ல வேண்டுமா? அது தேவையா? வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதை வெளியே சொல்லி ஒரு பெரிய விசயம் இல்லை என்று சொல்லும் போது அது பார்ப்பவர்களுக்கு நியாயமாக தெரியலாம், சரி நாம் செய்தாலும் தப்பு ஒன்று இல்லை என்று பார்ப்பவர்களை தூண்டாலாம் என்று சொன்னேன்.
//நீங்கள் பார்த்த இருவருமே தங்கள் நிலை உணர்ந்து சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். அந்த முடிவை தைரியமாக செயல் படுத்தியவர்கள். //
செயல் படுத்தட்டும் சார், அதற்கு நான் எதிர் அல்ல!!!! பல சமுதாய தட்டுக்கள் அடங்கிய பார்வையாளர்கள் கொண்ட ஒரு ஊடகம் வாயிலாக அதை சொல்லும் போது சமுதாயம் அந்த வழி பின்பற்றும் என்பதும், அதை மனதில் கொண்டு சொல்லும் போது பெரும்பாலான சமூகம் பின்பற்றக்கூடும் என்பதால் நான் என் எதிர்ப்பை தெரிவித்தேன்.
//கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நேர்மையுடனே, ஆர்ப்பாட்டமில்லாமல் பதில் அளித்திருந்தார்கள்.
அவர்கள் யாரையும் குற்றமும் சொல்லவில்லை எதையும் நியாயப்படுத்தவுமில்லை
//
அவர்கள் நியாயப்படுத்தினார்கள், குற்றம் கூறினார்கள் என் சொல்லவில்லையே. ஊடத்தின் வாயிலாக சொல்வது ஒரு தவறான சிக்னலை மக்களுக்கு எடுத்துச்செல்லும் என்று தான் சொல்கிறேன்.
உங்கள் கருத்துக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி ஸ்ரீதர் வெங்கட்.
பதிலுக்கு மிக்க நன்றி. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். உங்களின் சமூக அக்கறை மிகவும் பாராட்டப் பட வேண்டிய விஷயம். தொடருங்கள் உங்கள் பணியை.
//அந்த ஜோடியின் வயசு வித்தியாசம் ஒரு தவறல்ல என்று நான் சொல்லியிருந்தேன், அது எப்படி உங்களுக்கு எள்ளலாக தெரிகிறது. //
//ஹூம்!! என்ன கொடுமைடா சாமி. அந்த ஜோடில பொண்ணுக்கு வயசு 26 அப்புறம் பையனுக்கு வயசு 40. அது ஒரு மேட்டரே கிடையாது.//
உங்களின் இந்த வரிகளைப் படித்த பொழுது ஒரு எள்ளல் தொனி இருப்பதாக தோன்றியது. அப்படி இல்லையென்றால் மன்னிக்கவும்.
//இது பப்லிக்கா மேடை போட்டு சொல்ல வேண்டுமா? அது தேவையா? வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதை வெளியே சொல்லி ஒரு பெரிய விசயம் இல்லை என்று சொல்லும் போது அது பார்ப்பவர்களுக்கு நியாயமாக தெரியலாம்//
அவர்கள் பப்ளிக்காக மேடை போட்டு சொன்ன மாதிரி தெரியவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையாகவே பேட்டியளித்திருந்தார்கள். பார்ப்பவர்களை கவர வேண்டும் என்று எந்த sensationalization-ம் செய்யவில்லை என்றுதான் எனக்குத் தொன்றுகிறது. அதனால் அது தாக்கு பிடிப்பதும் கடினம்தான். :-)))
//யாரோ ரெண்டு பேர் சில்லுன்னு ஜோடியாமாம்.. ஹூம்!! என்ன கொடுமைடா சாமி. //
இந்த ஹூம் அந்த நிகழ்ச்சிக்கு தானே அன்றி அந்த ஜோடியின் வயசு வித்தியாசத்துக்கு அல்ல.
//உங்களின் சமூக அக்கறை மிகவும் பாராட்டப் பட வேண்டிய விஷயம். தொடருங்கள் உங்கள் பணியை.//
மிக்க நன்றி. என்னால் இயன்றதை செய்கிறேன் என் சமுதாயத்துக்கு. :)
//அவர்கள் பப்ளிக்காக மேடை போட்டு சொன்ன மாதிரி தெரியவில்லை. //
இல்லைங்க ஒரு ஊடத்தில் சொல்வது ப்ப்ளிக்கா எல்ல தர மக்களை சென்றடையும் சார். அந்த வகையில் தான் அதை சொன்னேன்.
பின்னூட்டங்களுக்கு நன்றி.
அன்புடன்,
நா.ஜெயசங்கர்
தமிழில் பெயர்கள் எல்லாம் குழம்பித் தெரிகிறதே. பிளாக்கர் செட்டிங்கில் utf-8 சரியாக தேர்வாகியிருக்கிறதா என்று பாருங்கள்.
அது பீட்டாவுக்கு மாறியதன் பிரச்சனை :(((
அட என்னங்க வஜ்ரா நீங்க, இந்தியகலாச்சாரம்னு இதத்தனா சொலறாங்க. ஒரு சின்ன வட்டம் போட்டு அதுதான் உலகம்னு வாழற கூட்டம் அதிகம் நம் நாட்டில்..பெரும்பாலன இந்தியர்கள் HYPOCRITES.
இந்த கலாச்சார சீரழிவின் ஒரு தாக்கம் தான் இன்று 11 வயது சிறுவன், நான்கு 17 வயது சிறுவர்களால் கொல்லப்பட்டது, இங்கே படிக்கவும் அவர்களுக்கு புதுவருடக்கொண்டாத்துக்கும் ஒரு உயிர் அநியாயமாய் மாய்ந்து போனது(யார் கூட கொண்டாட ஆசைப்பட்டார்கள் 5 லட்சம் வச்சு,என்று விரைவில் தெரியவரும்), இது போன்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கும், இது போன்ற கலாச்சார சீர்கேடுகளால். நான் சங்கு ஊதுவதை ஊதிவிட்டேன், கேட்டால் ஓ.கே, இல்லையென்றால் I dont mind.
:(((((
//my point is dont oppose something because you did not have the chance to get it. And stop preaching.//
நீங்க தமாஷ்க்காக இப்படிச் சொல்லிருக்கீங்களா இல்லாட்டி நெஜமாவே சொல்லிருக்கீங்களான்னு தெரிலை.
இரு பாலார் மனமொத்து சேர்ந்து வாழுவதோ பார்ட்டனர்களை மாற்றிக்கொண்டிருப்பதோ அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். அதை விமர்சிக்கவோ குற்றம்சாட்டவோ யாருக்கும் அதிகாரமில்லை - அது அவர்களுக்குள் மட்டும் இருக்கும் வரை.
ஊடகங்கள் என்பது கோடிக்கணக்கானோரைச் சென்றடையும் மாபெரும் சக்தி. சினிமாக்காரர்களை ஆதர்ஷ புருஷர்களாகக் கொண்டிருக்கும் சமூகம் நம்முடையது. ஊடகங்களில் சொல்லப்படும் கருத்துகள் புனைவுகளாக இருந்தாலும் அவற்றை நிஜம் என்று நம்பிப் பற்றித்தொடர ஒவ்வொருத்தரும் துடிக்கும் சமூகம் இது. இப்படி ஒரு மிகப்பெரிய Vulnerability இருக்கும் சமுதாயத்தில் இயங்கும் ஊடகங்களுக்குப் பொறுப்புணர்ச்சி இருக்கவேண்டுமா இல்லையா?
அப்படிப் பார்த்தால் சிகரெட் பிடிப்பதும் மது அருந்துவதும் மாதுவைத் தேடிப் போவதும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்தான். அவற்றை நியாயப்படுத்துவதுபோல் ஊடகங்களில் காட்டினால் ஒத்துக்கொள்வீர்களா? பார்க்காமல் இரு என்று சொல்வது வேறு. பிறகு ஏன் கோவில், பள்ளியருகில் மதுக்கடைகள் வைக்கக்கூடாது என்ற எதிர்ப்பு? நாளை தெருவில் யாராவது நிர்வாணமாக நடனமாடினால் அவரது தனிப்பட்ட சுதந்திரம் என்று விட்டுவிடலாமா?
//விஜய் டீவில காட்டுறான்னு நானும் செய்யுறேன்னு எவனாவது சொன்னா ? //
குடும்பம் சார்ந்த சமூகம் நம்முடையது. திருமணத்திலோ குடும்பத்திலோ அல்லது எந்தவித சமூக நம்பிக்கைகளுக்கோ இடங்கொடாது இருப்பது அவரவர் இஷ்டம். ஆனால் பெருவாரியானவர்களைச் சென்றடையும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் சிந்தனைகளை மாற்றும் வலிமை படைத்தது. இதனால் நிகழும் விளைவுகளை யாரும் வெளியில் வந்து தம்பட்டமடித்துச் சொல்வதில்லை. இது மெல்லக் கொல்லும் விஷம்.
//அவன் சொல்றான்னு நீ செய்யுறியே உனக்கு புத்தி எங்கே போச்சு ன்னு கேக்கணும் ? அதை விட்டுப்போட்டு அவன் செய்யுறது தப்பு, மது வீட்டுக்கு நாட்டுக்கும் கேடு, என்று லெக்சர் அடிப்பது ஈசி.//
ஆக நாம் யாருக்கும் அறிவுரை கூறத் தேவையில்லை. அவரவர் உணர்ந்து தெளிந்து திருந்தட்டும் என்று சொல்கிறீர்கள். வருமுன் காப்போம் என்பதெல்லாம் பம்மாத்து. யாரும் எக்கேடோ கெட்டும் போகட்டும் என்று விட்டுவிடலாம். அவன் பத்து வயதில் சாராயம் கு்டித்தாலென்ன. அந்தப் பெண் பதின்வயதிலேயே பத்துபேருடன் படுத்திருந்தாலென்ன - அவரவர் பிரச்சினை என்று விட்டுவிடலாம். அப்படி யாராவது செய்து அதை ஊடகங்களில் பெருமையாக ஒளிபரப்பினால் அதையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாம். அப்படியா?
//சுதந்திர எண்ணத்துடன் வளர்க்கவேண்டும். அதை 100க்கு 99 இந்தியர்கள் செய்வதில்லை.//
கலாசாரம் என்பது என்ன அளவுகோல் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றீ(றா)ர்கள். எனக்கு அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. கலாசாரம் என்று தனியான வஸ்து ஒன்று கிடையாது. நான் வளர்க்கப்பட்ட விதம், சொல்லிக்கொடுக்கப்பட்ட நன்னெறிகள், வாழ்வியல் நம்பிக்கைகள், சமூகக் கட்டமைப்புகள் இவையனைத்தும் அடங்கிய ஒன்று கலாசாரம். இது ஒவ்வோரு சமூகத்திற்கும், நாட்டுக்கும் வேறுபடலாம். ஒரு சமூகத்தில் அனுமதிக்கப்பட்டது இன்னொரு சமூகத்தில் குற்றமாகக் கருதப்படலாம். நான் நம் சமூகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நெறிகள் என்றவகையில் இதை அணுகுகிறேன். அமெரிக்காவில் இது ஒரு விஷயமே இல்லை என்ற மாயையும் நிறைய பேரிடம் காண்கிறேன் - நானும் அந்த மாயையைக் கொண்டிருந்தேன் - இங்கிருக்கும் குடும்பஸ்தர்களாக தலைமுறை தலைமுறையாக வாழும் அமெரிக்கர்களைச் சந்திக்கும்வரை.
நீங்கள் சொல்லும் சுதந்திர எண்ணம் என்பது என்ன என்பதை விளக்குவீர்களா? 99 சதவீதத்திலிருக்கும் எங்களுக்கு 1 சதவீதத்திலிருக்கும் நீங்கள் விளக்கினால் நலமாக இருக்கும். பின்னூட்டம் இல்லாவிட்டாலும் தனிப்பதிவாகப் போடுங்கள். ஒரு பெற்றோர் என்ற வகையில் எனக்கு உதவியாக இருக்கும். நிஜமாகவே தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கிறேன். நம்மை வளர்த்தவிதத்தில் பெற்றோர் செய்த தவறுகளை நாம் பெற்றொர் என்ற முறையில் செய்யாமலிருக்க வேண்டும் என்ற வகையில் கேட்கிறேன்.
//நீங்க இந்த கீத்து கொட்டகை "பார்"க்கு போயிருக்கீங்களா ? சனிக்கிழமையெல்லாம் இல்ல. எல்லா கிழைமையிலயும் சில கிழ போல்டுகள் வந்து தூக்குவாளியில் சரக்கை ஊத்தி ஒரே மடக்கில் 250 மி.லி அடித்துவிட்டுப் போகும். இதில் பல கிழவிகளும் அடக்கம்.//
மிகவும் சரி. இதையும் ரெகார்ட் டான்ஸ், அரைகுறை ஆடையுடன் அல்லது ஆடையில்லாது நான்கு சுவர்களுக்குள் நடத்தப்படும் டான்ஸ் போன்றவையெல்லாம் தொலைக்காட்சியில் கோடிக்கணக்கானோருக்குச் சென்றடையும் வண்ணம் காட்டலாமா?
//தண்ணி அடிப்பது உடம்புக்கு நல்லதில்லை தான். அதைத் தானாகத்தான் உணரவேண்டுமே தவிர அடுத்தவன் சொல்லித் தந்து வரக்கூடாது. //
தண்ணியடித்து உடல்நிலை கெட்டு வயிறைப் புண்ணாக்கிக்கொண்டு இதை உணர்வதை விட, அடித்தால் வரும் தீமைகளைச் சொல்லி ஒருவனைத் தடுக்க நினைப்பது தவறா? நெருப்பைத் தொட்டால் சுடும் என்று ஒரு அறியாத மழலையிடம் சொல்வது சரியா - அல்லது கையைப் பொசுக்கிக்கொண்டு அதுவே தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுவது சரியா? இந்தவயதிலும் நமக்குத் தெரியாத சில விஷயங்கள் இருக்கலாம். காலம் அவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கலாம். அதுவரை காத்திருக்கலாம்தான். ஆனால் அவற்றை இன்றே அறிந்தவர்கள் அனுபவப் பட்டவர்கள் சொன்னால் "போய்யா வேலையப் பாத்துக்கிட்டு - எல்லாம் நான் அனுபவப்பட்டுக் கத்துகிடுதேன்" என்று சொல்லிவிடலாமா?
//இப்படி அடுத்தவனைப் பார்த்து வரும் எண்ணமாகவே ஒருவன் வளர்ந்தால் அவன் வாழ்க்கையில் பொறாமையைத் தவிற எதுவுமே அவனது சொந்த எண்ணமாக இருக்காது.//
இதே ரீதியில் யோசித்தால் தனியனாக காட்டுக்குள் வாழவேண்டியதுதான். ஏனெனில் நம் சமுதாயத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து வளர்ந்து சாகும்வரை சுற்றியிருப்பவர்களிடமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறது. அதுவாக எதையும் கற்றுக்கொள்வதில்லை. சுயமாகக் கற்றுக்கொள்வது என்பதே ஒரு பெரிய பொய். ஏகலைவனும் 'பார்த்து'தான் கற்றுக் கொண்டான். கற்பனை செய்து கற்றுக் கொள்ளவில்லை.
இதே போல ஊடகங்களில் தமிழைக் குதறியெடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதையும் கண்டிக்காது எவனும் எப்படிப் பேசினால் நமக்கென்ன என்று இருந்துவிடலாமா?
ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம் என்பதால் ஊடகங்களுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் இப்போதைய ஊடகங்கள் பொறுப்பற்ற தன்மையின் உச்சத்தி்ல் நடந்துகொண்டிருக்கின்றன. விஜய்யின் இந்த நிகழ்ச்சி என்று மட்டுமில்லை. எல்லா தொலைக்காட்சிகளிலும் வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கின்றன. எல்லாமே வியாபாரம். பிளாட்பாரத்தில் விற்கப்படும் மஞ்சள் பத்திரிகைக்கும் இவற்றுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
நன்றி.
தொடரட்டும்....
சுகாதார தொழிலாளி கழிவுத்தொட்டிக்குள் இறங்கி வேலை செய்கிறார். அவரது மானுடத்தையே இற்றுப்போக வைக்கும் அந்த மன-உடல் வேதனை தெரியாமல் இருக்க குடிக்கிறார். பிறகு குடி ஒரு போதை பிரச்சனையாகி அவரது ஊதியம் முழுக்க குடிக்கே செல்கிறது. அவரது மனைவி ஒரு நாளில் 15 வீடுகளுக்கு சென்று பாத்திரம் தேய்த்து தன் மகனை படிக்க வைக்கிறார். அந்த மகனும் நன்றாக படித்து இன்று ஒரு மருத்துவ கல்லூரியில் படிக்கிறார். அந்த அம்மாவின் தன்னை அழிக்கும் உதவியும் சில நல்ல இந்து உள்ளங்களின் சேவையுமாக இந்த குடும்பத்தை இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து அவலங்களிலிருந்தும் நீக்கிடும். அந்த இளைஞன் சுகாதார தொழிலாளிகளுக்கு ஏற்படும் குடிபோதையை நீக்கவும் இந்த தொழிலின் அவலநிலையை வெளிப்படுத்தி அதனை மானுடர் செய்யும் அவலத்திலிருந்து வெளிக்கொணரவும் உறுதி பூண்டுள்ளான். பெண் சமத்துவம் என்று இந்த டிவி நிகழ்ச்சியை பார்த்து அந்த அம்மாவும் குடிக்க ஆரம்பித்திருந்தால்? அந்த ஐயாவிடமும் பேசியிருக்கிறேன். அவர் குடித்துவிட்டு மனைவியை அடித்ததும் உண்டு. ஆனால் தனது பலவீனத்தை உணர்ந்து கண்ணீர் விடுபவர் அவர். "ஒரு தடவை செப்டிக் டாங்குக்கு உள்ளே இறங்கி பாருங்க சார் நீங்க குடிச்சாகணும் வேற வழியில்லை" என்கிறார். வஜ்ரா இஸ்ரேலை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் உருவாக்க காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை அந்த நாடு அனுமதித்திருக்குமா? அல்லது எந்த நாடாவது அனுமதித்திருக்குமா? ஆர்ச்சி காமிக்ஸ் படித்திருப்பீர்கள். அந்த நாட்டு பண்பாட்டின் படி இளவட்டங்கள் அடிக்கும் அத்தனை லூட்டிகளும் வரும். ஆனால் எந்த பாத்திரமாவது சிகரெட் பிடிப்பதையோ அல்லது தண்ணி அடிப்பதாகவோ பார்த்திருக்கிறீர்களா? காமிக்ஸ் கோட் ஆஃப் அமெரிக்கா அங்கீகாரம் பெற சில அடிப்படை மதிப்பீடுகளை காமிக்ஸ்கள் பெற வேண்டும். இல்லாவிட்டால் (for mature readers) என போட்டு விடுவார்கள். ஏன் இந்த கரிசனை? "ஆர்ச்சி ஒரு டீன் ஏஜ் ஆதர்சம் அவன் தம் அடித்தால் பல சிறுவர்கள் அப்படி செய்வார்கள் இதனால் ஏற்படக்கூடிய மெடிக்கல் காஸ்ட் ...:" என்று ஒரு கணக்கை வைத்திருப்பார்கள். அவர்களே அப்படி என்றால் வளரும் நாடான நாம் எப்படி இருக்கவேண்டும். நான் ஒன்றும் மேற்கின் கலாச்சாரத்தை அப்படியே தாலிபான் தனமாக வெறுத்தொதுக்குங்கள் என கூறவில்லை. பெண்கள் சமத்துவம் கட்டாயம் வேண்டும்தான். எத்தனை எத்தனையோ விசயங்களில். இதில் அல்ல. ஸ்டீபன் ஹாக்கிங்கும் ரிச்சர்ட் டாவ்கின்ஸும் கார்ல்சாகனும் ரேச்சல் கார்ஸனும் ஐஸக் அஸிமாவ்வும் மேற்கத்திய பண்பாட்டின் உன்னதங்கள் அவர்களை நம் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கலாம். மேற்கத்திய கழிவுகளைதான் இங்கு இறக்குமதி செய்ய வேணுமா? ஏன் நமக்கு ஒரு டிஸ்கவரி சானல் இல்லை? ஏன் நமக்கு ஒரு நேஷனல் ஜியாகிராபிக் போல சானல் இல்லை? நர்மதை கரையில் புது டைனோசர் இனம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை நேசனல் ஜியாகிராபிக் அல்லவா ஸ்பான்ஸர் செய்து செய்தியாக்குகிறது. ஏன் இந்த அவல நிலை. மேற்கை காப்பி அடிக்க வேண்டும். அவர்களிடமிருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் இந்த ஸ்தாபன இயக்க முறையை. கழிவுகளை அல்ல.
நன்றி
நா.ஜெயசங்கர்
அரவிந்தன், சுந்தர் சொல்லும் விஷயங்கள் யோசித்து பதில் அளிக்க வருகிறேன்.
ஆனால் சிநேகிதன் என்ற பெயரில் எழுதுபவர் சொல்வது Very very disparaging remark on western culture.
அதற்கு பதிலெல்லாம் சொல்லி அதை Glorify செய்ய நான் விரும்பவில்லை. சிநேகிதனுக்கு எத்தனை வெள்ளைக்காரர்களைத் தெரியுமோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் பார்த்த வெள்ளைக்காரர்களில் நிறைய பேர் நம்மைப் போலத்தான் குடும்பம் குழந்தைகள் என்று கவுரவமாக வாழ்பவர்கள்.
இந்தியா என்றால் பாம்பாட்டிகளும் மந்திரவாதிகளும், பெண்ணை உயிருடன் கொழுத்துபவர்களும் வாழும் ஊர், விதவைகளை அடிமையாக்கும் ஊர், castes, cows and curries கிடைக்கும் ஊர் என்ற பிம்பம் எப்படி பல வெள்ளையர்கள் வைத்திருக்கிறார்களோ அதே தான் இந்தியாவில் கிடைக்கும் cheap ஆங்கிலப்படங்கள் டீவித் தொடர்கள் பார்த்து நமக்கு நாமே வளர்த்துக் கொள்ளும் பிம்பத்தினை சினேகிதன் சொல்லியிருக்கிறார்.
வெறும் பின்னூட்டம் எழுதிவிட்டு போவதற்கு மனம் உடன்படவில்லை.
தமிழ்நாட்டில் ஒரு இயக்கம் நடத்தி முதல்வருக்கு அறியப்படுத்தினால் நல்லதாக இருக்குமா?
:)
All i wanted to say is, Indian culture is not alien to the culture of courtship between man and women.
இந்து கலாச்சாரத்தில் தான் நவராத்திரி நடனங்கள், தாண்டியா, இந்திர விழா போன்றவை இருக்கின்றன.
We have our ways of having fun and cherishing life. we do not have to ape the west in these. But, it is illogical to claim that boy meeting a girl is not indian culture at all.
இந்து கலாச்சாரத்தில் இல்லாததை ஒன்றும் அவர்கள் செய்துவிடவில்லை. ஆனால் அதை உணராமல் இந்துக் கலாச்சாரம் என்றால் சுதந்திர சிந்தனையில்லாத தனி நபர் சுதந்திரம் இல்லாத ஏதோ அடிமைச் சிந்தனை என்ற எண்ணத்தில் மேலை நாட்டுக் கலாச்சாரத்தினை காப்பி அடிக்கிறார்கள் பலர். இதுவே இந்தியர்கள் பலர் hypocrites களாக இருப்பதற்கு முக்கிய காரணம்.
They do not know their roots.
பொது இடத்தில் sex பற்றிப் பேசினால் "ஐயோ" அபத்தம், குய்யோ, முறையோ என்று கத்துவது போன்ற போலித்தனம் முக்கியமானது.
வெள்ளைக்காரனா நமக்கு sex பற்றி அறிவு கொடுத்தான் ? அவன் sex என்றால் என்ன என்று கண்டுபிடிப்பற்கு முன்னரே காமசூத்திரம் கண்ட கலாச்சாரம் நம் கலாச்சாரம்.
தண்ணி அடிப்பது ஒரு social event வெள்ளைக்காரர்களைப் பொருத்தவரை. நமக்கு அப்படி இல்லை. But, has it always been like this ?
My answer will be NO.
for mature readers) என போட்டு விடுவார்கள்.
//
அப்ப விஜய் டீவி ஷோ வும் "புத்தியுள்ள தம்பதியினருக்கு மட்டும்" தான் என்று டிஸ்க்ளைமர் போட்டு ஒளிபரப்பலாமா ?
What is mature ?
தன் நிலையை உணர்ந்து தாமாக சுயமாக எடுக்கும் முடிவுக்குத் தானே பொருப்பேற்கவேண்டும் என்ற அடிப்படை உண்மையினை உணருதலே maturity, என்னைப் பொருத்தவரை.
சில 12 வயது சுட்டிகளுக்கு தானாக அது இருக்கலாம். சில 80 வயது கிழ போல்டுகளுக்கு இன்னும் வராமலும் இருக்கலாம்.
அதற்காக சமூகம் 18 வயது என்ற நிர்ணயம் தனி மனிதனின் மீது விதிக்கிறது. அதற்கு மேலுள்ளவர்கள் தான் கண்டு உணரவேண்டும்.
ஒரு தனி மனிதன் இப்படிப்பட்ட டீவி ஷோக்களைப்பார்த்து தன் வாழ்க்கையை வாழ்ந்தால் ஒரு சமூகமோ அதை ஒளிபரப்பிய ஊடகமோ, அல்லது அதில் வரும் கதாப்பாத்திரமோ எப்படி பொருப்பாக முடியும் ?
I will make my self clear once more that i am not defending vijay tv show here.
அதற்கு பதிலெல்லாம் சொல்லி அதை Glorify செய்ய நான் விரும்பவில்லை. சிநேகிதனுக்கு எத்தனை வெள்ளைக்காரர்களைத் தெரியுமோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் பார்த்த வெள்ளைக்காரர்களில் நிறைய பேர் நம்மைப் போலத்தான் குடும்பம் குழந்தைகள் என்று கவுரவமாக வாழ்பவர்கள்.
//
சிநேகிதன் சொல்வது,
நான் லண்டனில் கடந்த நான்கு வருடங்களாக வசித்து வருகிறேன்.
வெள்ளைக்காரர்களைப்பற்றியும் அவர்களின் வாழ்க்கைமுறை நாகரீகம் பற்றியும் வஜ்ராவை விட எனக்கு நன்கு தெரியும்.
வெள்ளைக்காரர்களிடம் உள்ள நல்ல விசயங்களான, நேரம் தவறாமை, நேர்மை, விசுவாசம் போன்ற விசயங்களை நான் மதிக்கிறேன். அவற்றை நம் மக்கள் பின்பற்றினால் அதை வரவேற்கும் முதல் ஆள் நானாகத்தானிருப்பேன். ஆனால் அவர்களின் மற்ற விசயங்களான நம் கலாச்சாரத்திற்கு ஓவ்வாத விசயங்களை என்னால் ஏற்க முடியாது.
உதாரணமாக நான் பல அலுவலக கிறிஸ்துமஸ் பார்டிகளுக்கு சென்றிருக்கிறேன். அலுவலகத்தில் ஒரு வாரத்திற்கு முன் வேலைக்கி சேர்ந்த பெண்(திருமணமானவள்) அங்கு பல மாதங்களாக வேலைசெய்யும் ஒருவனுடன் நாம் இங்கு ஆபாச நடனம் என்று கூறுவமே அதை விட மோசமாக நடனம் ஆடுகிறாள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களின் அறிமுகமே அன்றுதான். இது போல பல விசயங்கள் இங்கு உண்டு ஆனால் இவர்கள் (ஆண், பெண்) அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் நம் கலாச்சாரம் அப்படியில்லை. தன் காதலி இன்னொருவனுடன் பொது விருந்துகளில் ஆட எந்த ஆண் மகனும் அனுமதிக்கமாட்டான். தனக்கு வரும் மனைவி வேரு ஒருவனை மனதால் கூட நினைக்காதவளாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பான்.
கனவன், மனைவிக்குள் நடக்கும் அந்தரங்க விசயங்களை அரசாங்க ரகசியங்கள் போல பாதுகாக்கப்பட வேண்டிய விசயங்களாகத்தான் நம் சமூகம் நினைக்கிறது. அது தான் இந்த சமூகத்திற்கும் நல்லது. ஏனென்றால் நம் சமுகமே ஒருவரை ஒருவர் சார்ந்ததுதான். ஒருவரின் விசயங்கள் வெளியில் தெரியும் பட்சத்தில் அது சமூகத்தை கண்டிப்பாக பாதிக்கும். காபரே டான்ஸ் எப்படி இருக்கும் என்பதே பல இளைஞர்களுக்கு தெரியாத பட்சத்தில், அதை எல்லோருக்கு போட்டு இது நல்ல விசயம் இதைபார்ப்பதால் செக்ஸ் அறிவு உங்களுக்கு வளரும் என்று கூறுவது அறிவுள்ள செயலா?
வெளி நாடுகளில் சில பத்திரிக்கைகள் பல பிரபலங்களில் இல்லற வாழ்க்கையை அவர்களுக்கு தெரியாமல் அவர்களை துரத்தி படம் பிடித்து காட்டுகிறேதே அது தான் சிறந்த கலாச்சாரமா?
அப்படி எழுதும் பத்திரிக்கைகளை ஆர்வமுடன் வாங்கிப்படிக்கும் பழக்கம்தான் சிறந்த கலாச்சாரமா?
அல்லது ஒரு பிரபலத்துடன் மிக நெருக்கமாக அல்லது மனைவி ஸ்தானத்தில் இருந்து பின்பு டைவர்ஸ் ஆன பிறகு அவர்களின் அந்தரங்க விசயங்களை விளம்பரப்படுத்தி சீப்பான விளம்பரமும், பணமும் செய்யப்பார்க்கும் கலாச்சாரம்தான் சிறந்த கலாச்சாரமா?
அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊடகங்கள் ஒலி,ஒளிபரப்பும் செய்திகளின் உள்ளடக்கத்தைப் பொருத்து G-யிலிருந்து R-வரை ஒவ்வொரு வயதினருக்குமான Ratings-ஐ கொடுத்துவிடுவதால் எதைப் பார்க்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்வது சுலபம். பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் வயதிற்குத் தகுந்தமாதிரியான நிகழ்ச்சிகளை மட்டுமே அவர்களைப் பார்க்க அனுமதிக்கிறார்கள். Child Lock போன்ற தொழில்நுட்ப வசதிகளின் மூலம் நாமே எந்தெந்த சானல்களை அவர்கள் பார்க்கலாம் என்று எளிதாக முடிவெடுத்துச் செயல்படுத்த முடிகிறது.
என் குழந்தைகள் 9, 5 வயதுகளில் இருக்கிறார்கள். ஆதலால் G தவிர மற்ற எந்த ரேட்டிங்குகளில் நிகழ்ச்சி இருந்தாலும் அதற்கு ஒரு கடவுச்சொல்லைப் போட்டு வைத்திருப்பதால் நாங்கள் கவனிக்காத சமயங்களிலும் அவர்களால் தவறுதலாகக் கூட அவர்கள் வயதுக்கொவ்வாத நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியாது. இப்படி நெறிப்படுத்துவதை அவர்களைச் "சுதந்திரமற்று வளர்க்கிறோம்" என்று சொல்ல மாட்டோம். சரியா?
ஆனால் நம் ஊடகங்களி்ன் தற்போதைய நிலை என்ன?
சினிமாவுக்காவது U, A, U/A என்று தணிக்கைச் சான்றிதழ்களை வழங்குவதால் எம்மாதிரிப் படங்களுக்குப் பிள்ளைகளை திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று முடிவு செய்ய ஏலுகிறது.
ஆனால் தொலைக்காட்சிகள்?? எந்தவிதமான தணிக்கைக்கும் உட்படாமல் அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில் எம்மாதிரியான காட்சிகள் வரப்போகின்றன என்று ஒரு எழவும் தெரியாமல் திடீரென்று தோன்றும் வயதுவந்தவர்களுக்கான காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து சானலை மாற்றுவதற்குள் damage is already done. வயது வந்தவர்களுக்கு என்று நான் குறிப்பிடுவது பெண்களை ஆபாசமாகக் காட்டும் காட்சிகளைப் பற்றிச் சொல்லவில்லை. சில உதாரணங்கள்.
1. செய்திகளில்:
கடற்கரை மணலில் தொண்டர்கள் ஓட குண்டர்கள் அவர்களை அரிவாளால் துரத்திவெட்டும் காட்சியை அப்படியே ஒளிபரப்பினார்கள்
போலீஸ் ஒருவரின் மண்டையை லத்தியால் அடித்து உடைத்ததையும் அவர் சட்டை முழுதும் ரத்தம் வழிய கீழே உட்கார்ந்திருந்தார்.
விபத்துகளில் கோரமாகச் சிதைந்த உடல்கள், வாகனங்கள்.
2. மெகாசீரியல்களில்
வீட்டுக்குள் இருப்பவர்கள் ஒருவரையொருவர் ஏகவசனத்தில் மரியாதையில்லாமல் திட்டுவதும், அறைந்து கொள்வதும், பெண்ணடிமைத்தனமான காட்சிகளும்
3. சினிமா ட்ரைலர் ஒன்றில் தனுஷ் பேருந்தில் நாயகியைப் பார்த்து 'ஒன்ன கற்பழிச்சுருவேண்டி' என்கிறார்.
மிட்நைட் மசாலா நிகழ்ச்சிகள்
நேரங்காலமே இல்லாமல் ஒளிபரப்பாகும் ஆணுறை, பெண்களுக்கான நாப்கின் விளம்பரங்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ.
இப்படி வரைமுறையே இல்லாமல் வரவேற்பறையில் வந்து சேரும் கழிசடையை எப்படி இனங்கண்டு ஒதுக்குவது?
உடனடியாக தணிக்கை விதிகளைக் கடுமையாக்கி ரேட்டிங் முறையைக் கொண்டுவந்து தொலைக்காட்சியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரேட்டிங்கோடு ஒளிபரப்பினால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
அது நடைமுறைக்கு வரும்வரை மிகுந்த பொறுப்புணர்வுடன் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பும் கடமை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு நேற்று சி.என்.என்னின் ஆண்டர்ஸன் கூப்பர் கூட சதாமின் தூக்குபற்றிய செய்தியைச் சொல்லிவிட்டு "நாங்கள் இதுதொடர்பான புகைப்படங்கள், ஒளிப்பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். அவை எங்களுக்குக் கிடைத்ததும் அப்படியே ஒளிபரப்பாமல் எங்களது உயர்மட்டக்குழு அவற்றைப் பார்த்து, பரிசீலித்து, எதை ஒளிபரப்ப வேண்டும் என்பதை முடிவுசெய்து, பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே தேவையான எச்சரிக்கை செய்தியைக் காட்டிவிட்டு பின்புதான் ஒளிபரப்புவோம் - எங்களுடைய எச்சரிக்கையளவைப் பொருத்து அவற்றைப் பார்ப்பதா வேண்டாமா என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்" என்று திரும்பத்திரும்பச் சொன்னார். இதைத் தான் நான் ஊடகங்களுக்கு வேண்டிய பொறுப்புணர்வு. அது சுத்தமாக நம் ஊடகங்களுக்கு இல்லை. ஏனென்றால் வியாபாரம் ஒன்றே அவர்களுக்குப் பிரதானம் என்று சொல்கிறேன்.
இவ்வளவே நான் சொல்ல வந்தது.
நன்றி.
//
மற்றவர்கள் எழுதிய புத்தகங்களை படிக்காமல், சமுகத்தைப் பார்க்காமல், டிவி, செய்தித்தாள் மற்றும் மற்ற ஊடகங்களைப் பற்றி அறியாமல் வஜ்ராவுக்கு எப்படி இவ்வளவு அறிவும் சுயமாக சிந்திக்கும் திறனும் வந்தது என்று எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
வஜ்ரா இதை தெளிவு படுத்துவாரா?
-- சிநேகிதன்
//ஒரு அளவுக்கு மேல் சமூகம் என்ற அமைப்பு தனி மனிதன் சுதந்திரத்தில் தலையிடுவது நல்லதல்ல //
தனி மனித சுதந்திரத்தை பற்றி நாங்கள் யாரும் ஒன்று சொல்லவில்லையே!!! ஊடங்கள் நம் இளைய தலைமுறைக்கு தவறான வழியை காண்பிக்கிறது!!! அந்த வழிநடத்தல் நம் வரும் தலைமுறையை அழித்துவிடும்!! இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் போது ஊடங்கள் தங்கள் சமுதாய கடமையையும் மறக்காமல், தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் தணிக்கை படுத்தப்படவேண்டும் என்றே சொல்கிறோம். இதில் எங்கே தனி மனித சுதந்திரம் வருகிறது வஜ்ரா???
ஆனால் அதே இந்தியக் காதலன் இன்னொருவனுடைய காதலியுடன் பொது விருந்துகளில் ஆட விரும்புவான். அந்த இன்னொருவனோ அல்லது தன் காதலியோ அதை பொருட்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பார்ப்பான்.
என்னடாவென்று தட்டிக் கேட்டால் அதுதான் பெண்மையின் பெருமை என்று காதில் பூ வைப்பான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தனி மனித ஒழுக்கம் என்ற தலைப்பின் கீழ் லேபிள் செய்யப் பட்ட இடுகை இது.
மேலும் அவரவர் விருப்பத்தை தனி மனித சுதந்திரம் என்று தான் சொல்ல முடியும்.
இளைய தலைமுறை என்றால் என்ன வயதுடையவர்கள் ?
அவர்கள் என்ன ஒண்ணும் தெரியாத பாப்பாக்களா ? சொந்த புத்தியில்லையா ? அந்த டீவில காட்டுறதப் பாத்துட்டு அப்படியே செய்ய !
சிநேகிதன் கேட்கிறார், என் அறிவு எப்படி வளர்ந்தது என்று.! நன்றி முதலில் எனக்கு வளர்ந்த அறிவு இருப்பதாக ஒத்துக் கொண்டதற்கு. (i am taking it as a compliment!!)
அடுத்தவனைப் பார்த்து தன்னை மாற்றிக் கொள்வது தான் அறிவா ?
பூனை புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொள்வது தான் அது.!!
அடுத்தவனைப்பார்த்து அவனிடம் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொள்ளும் மனோபாவம் தான் என்னைப் பொருத்தவரை அறிவு.
நான் இங்கே வெள்ளையனைப்பார்த்து நாம் கெட்டுப் போகிறோம் என்று சொல்லும் மனப்பாங்கைத்தான் கேள்வி கேட்கிறேன்.
எது நல்லது, எது கெட்டது ? எது இந்திய கலாச்சாரம்?
According to me there is no culture called indian culture, english culture, american culture. There are basically two cultures. The Good culture and bad culture.
Idolizing suicide bombers as Heros is a bad culture. Women having the right to choose is a good culture.
...
ஒரு பெண் ஒரு ஆணுடன் நடனமாடுவது இந்திய கலாச்சாரம் இல்லை என்று நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொருப்பல்ல.
..
சுந்தர் சொல்வது சரி.
இத்தகைய நிகழ்ச்சிகள் தணிக்கைவிதிகளுக்கு உட்படுத்தவேண்டும்.
ஆனால் தணிக்கை என்ற பெயரில் கத்திரி போடுவது கேவலமான விஷயம்.
கருத்துச் சுதந்திரம் என்பது பாதிக்கப் படக் கூடாது.
வயதுக்கேற்ற Rating கொடுப்பதினால் இளம் மனதுகளை இது பாதிக்காமல் இருக்கும். அதே சமயம் அவர்களது target audience ஒன்றும் 10 வயது குழந்தைகள் அல்ல. 25 முதல் 35 வயதுடயவர்கள். அவர்கள் ஒன்றும் இதெல்லாம் பார்த்து சஞ்சலம் அடைந்து தவறான காரியத்தில் ஈடுபடமாட்டார்கள். அவர்களுக்கு அந்த மனமுதிர்ச்சி இருக்கும்.
ம்...மக்கள் தொலைக்காட்சி உண்மையிலேயே கலக்குறாங்க...
ம்...மக்கள் தொலைக்காட்சி உண்மையிலேயே கலக்குறாங்க...
Television Rating System பற்றி. இது மிகச் சமீபமாகத் தான் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறது. 1997-ல் நிறுவப்பட்டு, 2000-த்திற்கு பிறகு தயாரிக்கப்பட்ட tv-ககளுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட முறை. மேலதிக விவரங்களுக்கு Television Rating System.
இதை இந்தியாவில் நடைமுறைப் படுத்துவது வரவேற்கத் தக்க முயற்சி. மிகவும் தேவையானதும் கூட.
இந்தப் பதிவு மற்றும் பின்னூட்டங்களில் எனது பார்வையில் சில முரண்கள். தயவுசெய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம் -
- அவரவர் பார்வையில் பார்க்கும் தனி மனித ஒழுக்கத்தை இதுதான் கலாச்சாரம் என்று பறைசாற்ற விரும்புவது. தான் வளர்ந்த / வளர விரும்பும் சூழலை மட்டுமே கலாச்சாரம் என்று நம்புவது.
- பழக்கத்தையும், பழக்கத்திற்கு அடிமையாவதையும் குழப்பிக் கொள்வது.
- எந்த தீய பழக்கமும் ஆண்கள் வயம் மட்டுமே இருக்க வேண்டும். அது வரையில் கலாச்சாரத்திற்கு எந்த தீங்கும் இல்லை. யாராவது பெண்கள் அதைப் பற்றி பேசத் தொடங்கினாலோ கலாச்சாரம் சீர்கெட்டு விடும். (இதைப் போல ஒரு உதாரணம் - திரைப்பட நடிகர் வடிவேலு 'உயிர்' என்ற திரைப்படத்தை பற்றி ஒரு விழாவில் முன்வைத்த விமர்சனம். அதே போன்றே ஒரு கதை 'வாலி' என்ற திரைப்படத்தில் வந்து பெரும் வெற்றி நடை போட்ட பொழுது யாரும் எதுவும் பேசவில்லை. அங்கு தவறு செய்வது ஒரு ஆண். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. இங்கு தவறு செய்வது ஒரு பெண். எல்லா ஆண்களும் ஆஜர்)
எனது பார்வையில் கலாச்சாரம் என்பது மிகவும் இறுக்கமான, புழுக்கமான, பழங்கால பொருட்களை பாதுகாத்து வைக்கும் கிடங்கு (archeological godown) அல்ல. அது எல்லாவித கொண்டாட்டங்களையும் உள்ளடக்கிக் கொண்ட ஒரு நீரோடை (stream). அதில் மூலிகையும் உண்டு, சிலசமயம் கழிவுகளும் கலந்து விடுவது உண்டு. ஆனால் அது ஓடிக் கொண்டேயிருக்கும் நீரோடை. நாம் கரையில் நின்று பாதுகாப்பாக குளிக்கலாம். இல்லை உள்ளே குதித்து நீந்தி களியாட்டம் போடலாம். அவரவர் பார்வை மற்றும் வசதியை பொறுத்தது.
தனி மனித ஒழுக்கம் வேறு, தனி மனித சுதந்திரம் வேறு. ரெண்டையும் போட்டு குழப்பிக்கறீங்க போல!!!
தனி மனித சுதந்திரம் என்பது ஒருவன் உடுதுணி இல்லாமல் சாலையில் செல்லாத வரையே!!! அவன் சாலைக்கு வந்து விட்டால் அது ஒழுக்கத்தின் பிரச்சனையாகிறது!! அவன் வீட்டுக்குள் இருக்கும் வரை அவன் சுதந்திரம். அவன் சுதந்திரம் நம்மையும் பாதிக்கும் போது அது தட்டிக்கேட்கப்படவேண்டியதே!!! என்னங்க நான் சொல்லறது கரெக்டா??
//அடுத்தவனைப் பார்த்து தன்னை மாற்றிக் கொள்வது தான் அறிவா ?
பூனை புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொள்வது தான் அது.!!
அடுத்தவனைப்பார்த்து அவனிடம் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொள்ளும் மனோபாவம் தான் என்னைப் பொருத்தவரை அறிவு. //
நம் இந்திய மக்கள் இன்னும் நீங்க சொல்லும் அளவுக்கு வரவில்லை வஜ்ரா!!!
இன்றும் நம் சமுதாயம் ஒரு சிறுப்பிள்ளையே!! கடையில் எதைப்பார்த்தாலும் அது நல்லது, டி.வில் சொல்லிவிட்டால் அது கரெக்ட், தலைவர்கள் சொல்லிவிட்டால் அது சரி என்னும் மனோபாவமே மேலோங்கி நிற்க்கும் சமுதாயமாக இருக்கும் போது இது போன்ற நிகழ்ச்சிகள் தவறான ஒரு விசயத்தை மக்களுக்குள் ஏற்படுத்திவிடும் என்று சொல்கிறேன்.
//இத்தகை தொலைகாட்சி நிகழ்ச்சிகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் 18,20 வயதினர்தான். இந்த வயதில் சிந்தித்து செயல்படுவதை விட எதையும் அடையத்துடிக்கும் மனசுதான் அனைவருக்கும் இருக்கும். வாழ்க்கை தொடங்கவேண்டிய வயதில் வீணாகிப்போகின்றனர்.//
சிநேகிதன் சொல்வதை தான் நானும் சொல்கிறேன்.