உஷார்!!! உயிர் கொல்லி உணவுகள்

சில நாட்களுக்கு முன் பலசரக்கு அங்காடிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருந்தோம், என் மகன் ஒரு பெட்டி Lay's Stax எடுத்துவந்து, அப்பா, இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லு? Zero Added Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கனும் என்று பெரிய ஆள் மாதிரி ஒரு மேட்டரை கேட்டான்!!! போன மாதம், என் மகனுக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸ் அது!!! நான் மறந்துவிட்டேன், என் மகன் ஞாபகம் வைத்து கேட்டான்!!! ஆச்சர்யமாக இருந்தது!!! இந்த தகவல் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் உபயோகமா இருக்கும் என்று தோன்றியதால் இந்த பதிவு.

Hydrogenated Trans Fat & Partially hydrogenated oils:

Trans Fat இயற்கையாகவே பசுவின் பாலில் 2 - 5% சதவீதம் இருக்கும். ஆனால் Hydrogenated Trans Fat என்பது செயற்கையாக செய்யப்படும் Trans Fat. இது பசு, எறுது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும், சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது!!!
இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து!!
இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL)) சத்தை குறைத்து, கெட்ட கொழுப்பு (Low-density lipoprotein (LDL)) சத்தை இருமடங்காக உயர்த்தி நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது!!!

பல எதிர்வினைகளையும் உண்டாக்கும் கொழுப்பு!!! இது இருதய நோய்(coronary heart disease), Cancer, Diabetes மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு. Partially hydrogenated oils என்பது இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை. நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பாக்கெட்டில் கிடைக்கும் உருலைகிழங்கு சிப்ஸ் வகைகள், பீட்ஸா, சாக்லெட் என் துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது!!!

இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த Partially hydrogenated oils/Hydrogenated Trans Fat ?
  • இந்த எண்ணைகள் பல முறை திரும்ப திரும்ப உபயோகித்தாலும், தயாரித்த உணவில் மணம் மாறாது!
  • 18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்த கெட்டுப் போகாமல் வைத்துக்கொள்ள முடியும். சாதாரண எண்ணையில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது!!
  • இந்த எண்ணையில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே!! நீங்களே கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யற ஃப்ரென்ச் ஃப்ரைஸ் மெக் டொனால்ட், மேரி ப்ரெளன், பீஸா கார்னர்களில் கிடைக்கும் அளவுக்கு சுவை இல்லை என்று!!!

பல முன்னேறிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்த Hydrogenated Trans Fat உள்ள உணவுகளை தடை செய்து வருகிறது!! மெக் டோனால்ட், KFC போன்ற பல நிறுவனங்கள் இன்று இதை உபயோகிப்பதால் பல கோடி டாலர்கள் வழக்குகளில் போராடிவருகின்றன!!! சில நிறுவனங்கள் ஏப்ரல் 2007 முதல் இந்த எண்ணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் உத்தரவாதங்களும் தந்திருக்கின்றன, அட இந்தியவில இல்லைங்க, அமெரிக்காவிலே!!! இந்தியாவில் இன்றும் மெக் டோனால்ட், KFC போன்றவை சுதந்திரமாக இந்த எண்ணை உபயோகித்து நம் ஆரோக்கியத்தை அழித்து வருகிறது.

நீங்க செய்யவேண்டியது என்ன?

இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ், ப்ரெச் ஃரைஸ் என எதை வாங்குவாதா இருந்தாலும் அதில் Hydrogenated Trans Fat = Zero (0) , Zero Added Hydrogenated Trans Fat , Zero Hydrogenated Vegitable Oil இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பொருட்களை வாங்குங்கள்!!!

டாப் 10 Hydrogenated Trans Fat உள்ள உணவுகள் இங்கே சொடுக்கவும்.

உபரி தகவல்:

உங்கள் வீட்டில் பூரி மற்றும் Deep Fry செய்யப்பட்ட மிச்சம் ஆகும் எண்ணையை திரும்ப உபயோகித்தாலும் அந்த உணவு பொருட்களில் இது போன்ற Hydrogenated Trans கொழுப்பு நிறைந்துவிடும். அதனால் ஒரு முறை உபயோகித்த எண்ணையை திரும்ப உபயோகிக்காமல் இருப்பது நல்லது!!! வீட்டு உபயோகத்தில் இந்த கொழுப்பை கட்டுப்படுத்த பல நல்ல தகவல்கள் இங்கே சொடுக்கவும்.

Comments

முக்கியமான விசயத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இந்த awareness பெருகவேண்டும். அமெரிக்காவில் trans fat இருக்கும் உணவுகள் தடை செய்யப்படவில்லை. மாறாக, லேபிள் guidelines மட்டும் தான் மாறியுள்ளது. அதாவது ஒவ்வொரு உணவுப் பொருளிலும் Nutrition Facts என்றொரு லேபிள் உண்டு. அதில் கொழுப்பு சத்து பட்டியலில், trans fat எத்தனை சதவீதம் என்று குறிப்பிட்டாகவேண்டும் என்ற சட்டம் மட்டுமே தற்போது வந்துள்ளது.

//Hydrogenated Trans Fat = Zero (0) , Zero Added Hydrogenated Trans Fat , Zero Hydrogenated Vegitable Oil இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பொருட்களை வாங்குங்கள்//

அமெரிக்காவில், இப்படிப்பட்ட லேபிளைக் காண்பது அபூர்வம். Ingredients-ஐ முழுக்கப் படித்துப் பார்க்கவேண்டும்! Hydrogenated அல்லது Partially Hydrogenated எண்ணையில் செய்யப்பட்டிருந்தால் அதில் trans fat உண்டென்று பொருள்.

நேற்று தான் இதை விலாவாரியாக இன்னொருவரின் பதிவில் பின்னூட்டமாக எழுதிக்கொண்டிருந்தேன் (சுட்டி கிடைத்தால் தருகிறேன்), இன்று நீங்கள் பதிவே போட்டுவிட்டீர்கள் :-)
அவசியமான, உபயோகமான இடுகைக்கு நன்றி ஜெய்.

நியூயார்க் நகரத்தில் Transfats தடைசெய்யப்பட்டதற்குப் பிறகுதான் பல நிறுவனங்கள் இதைப்பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதன் பாதிப்புத்தான் கனடா போன்ற நாடுகளிலும் KFC போன்றவை transfatsஇனை முற்றாக நீக்குவது பற்றி யோசிப்பதற்குக் காரணம்.

நம்மூரிலும் Transfatsஇன் உபயோகம் முன்பிலிருந்தே இருக்கின்றன அல்லவா? டால்டா..

-மதி
We The People said…
நன்றி சேதுக்கரசி & மதி. சேது, நல்ல தகவலை நீங்களும் தான் தந்திருக்கிறீர்கள்.

//Hydrogenated அல்லது Partially Hydrogenated எண்ணையில் செய்யப்பட்டிருந்தால் அதில் trans fat உண்டென்று பொருள்.//

நன்றி.

மதி டால்டாவின் உபயோகம் இப்பொழுது குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். இருந்தாலும் உபயோகமான தகவலே!!
Anonymous said…
Thank you for the information. Good work.

Amudhan
Roop said…
நல்ல பதிவு. இதை பற்றி விவரங்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
Anonymous said…
பயனுள்ள விசயம் எழுதியிருக்கிறீர்கள்.

-- சிநேகிதன்
Anonymous said…
Good People go to Fast Food.
Bad People go to Heaven
1/1/2006 முதல் அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்ட சட்டப்படி, டிரான்ஸ் கொழுப்பின் அளவு, லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். உதாரண லேபிள்:
http://www.metrokc.gov/health/nutrition/images/nfacts.gif

டிரான்ஸ் கொழுப்பைப் பற்றி தீபாவின் பதிவில் நான் எழுதியவற்றைக் காண:
http://thoduvanamnamullathil.blogspot.com/2006/12/soup.html
http://thoduvanamnamullathil.blogspot.com/2006/12/soup.html
தீபாவின் பதிவில் இன்னொரு உயிர் கொல்லி உணவான Ajinomoto / MSG பற்றியும் எழுதியிருக்கிறேன்.
We The People said…
//இன்னொரு உயிர் கொல்லி உணவான Ajinomoto / MSG பற்றியும் எழுதியிருக்கிறேன். //

சேது இதும் நல்ல பயனுள்ள தகவலே... நம்ம மக்கள் இதை தெரிந்து பயன்படுத்தினால் நன்று!!!
We The People said…
//Good People go to Fast Food.
Bad People go to Heaven //

அனானி அண்ணா, இந்த ஆங்கில புது கவிதைக்கு கொஞ்சம் விளக்கம் கிடைக்குமா?? ஒன்னும் புரியலை??!!!