வீரத்திருமகன் உதித்த தினம்!!

"உங்கள் ரத்ததை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரம் வாங்கித்தருகிறேன்" என்று சொல்லி, இந்திய சுதந்திர போராட்டதை உயிர்பித்தவனின் பிறந்தநாள் இன்று!!

தன்னலமற்ற ஒரு சில தேசத் தலைவர்களில் முன்னவரான நேதாஜியின் பிறந்தநாள் இன்று.

பூரண சுயராஜ்ஜியம் பிரகடணம் செய்து வெள்ளையருக்கு சுந்தந்திர போராட்டத்தின் வன்மையை காட்டியவரின் பிறந்த நாள் இன்று!

தன் சுயநலத்தைவிட தேசமே பெரியது என்று தன் ஐ.ஏ.எஸ்க்கு இணையான ICS பதவியை துட்சமென தூக்கி எறிந்து இந்திய சுதந்திரக்கு தன் உதிரத்தை சிந்தியவரின் பிற்ந்தநாள் இன்று!!!


இந்தியாவின் முதல் சுதந்திர ராணுவப்படையான இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதில் ஒரு லட்சம் இந்தியரை படையில் இணைத்து சுதந்திர வெறியை இந்தியருக்கு செலுத்திவரின் பிறந்த நாள் இன்று!

தனித்து ஒரு தலைவனாய் நின்று ஜப்பானின் துணையுடன் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் மனிப்பூர், நாகாலாந்து பிரிட்டீஷாரிடமிருந்து கைப்பற்றி அந்தமானை தலைநகரமாக கொண்டு, சுதந்திர இந்தியாவை(ஆஸாத் ஹிந்த்) பிரகடணம் டிசம்பர் 30, 1943ஆம் ஆண்டு இந்திய தேசத்தின் சுதந்திர கொடியை ஏற்றியவரின் பிறந்தநாள் இன்று!!!



முதல் சுதந்திர இந்தியாவின் தபால் தலையை ஜெர்மனியிலிருந்து 1943ல் வெளிட்டவரின் பிறந்தநாள் இன்று!!!

இன்னும் எண்ணற்ற சாதனைகளையும், சுதந்திரப் போராட்ட மைல்கல்களை தொட்டவர், அவர் செய்த தியாகங்கள், போராட்டங்கள் இன்று இந்த சுதந்திர இந்தியாவின் வரலாறுலிருந்து மறைந்து விட்டது! இனி அது வருங்காலத்தில் இனியும் கருப்படிக்கப்படலாம், இனி வரும் இந்திய மக்கள் அறியாமலே இருக்கக்கூடும்!!! எனக்கு தெரிந்த சில விடயங்களை இங்கு பகிர்கிறேன்.

இன்று நான் அனுபவிக்கும் இந்த சுதந்திர இந்தியா தோன்ற அவர் பங்கே முக்கியமானது என்று நினைக்கும் வெகுசிலரில் நானும் ஒருவன் என்ற பெருமையுடன், அவர் தியாகத்தையும், போராட்டத்தை நினைவுப்டுத்தி, அவர் பிறந்தநாளில் வாழ்த்துக்களுடன் நினைவு கூறும் ஒரு உண்மை இந்தியன்.


பி.கு:

நன்பர் சத்யா ப்ரியன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறை சுருக்கி ஒரு அருமையான பதிவை எழுதியுள்ளார், அனைவரும் மறக்காம அந்த பதிவை இங்கே சொடுக்கி சென்று படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

நா.ஜெயசங்கர்

Comments

Unknown said…
சுபாஷ்க்கு சல்யூட் !!!!!

இந்தியர்களால் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கப் பட்டுக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி இவரது பிறந்த நாள் அன்று சிறப்பு பதிவிட்டதற்கு என் வாழ்த்துக்கள் நண்பரே..
இவன் said…
நல்ல பதிவு!

பகிர்தமைக்கும், நேதாஜியை நினைவு படுத்தியமைக்கும் நன்றி.

-இவன்.
Anonymous said…
நல்ல பதிவு.இவரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.இப்பொழுது இன்னும் கொஞ்சம் அதிகமாக உங்கள் பதிவின் வழி தெரிந்துக் கொண்டேன்.நன்றி
We The People said…
பின்னூட்டங்களுக்கு நன்றி தேவ், இவன் மற்றும் துர்கா.

சுபாஷுக்கு சல்யூட் அடித்த அனைவருக்கும் நன்றி.
chinathambi said…
இந்திய விடுதலை - சில அரிய புகைப்படங்கள்!chinathambi