மரண அரசியல் - செல்வி.ஜெயலலிதா!

கடந்த வாரம் தடுப்பூசி இட்ட நான்கு குழந்தைகள் மரணத்தை தழுவின, அந்த மரணங்கள் தவிர்கப்பட்டிருக்களாமோ இல்லையோ! தெரியவில்லை, அதற்கு என்ன காரணம், மருந்தா? குளிரூட்டு பெட்டியில் பாதுக்காக்காததா? என்ற காரணங்களே வெளிவராத நிலையில், தமிழக அரசு தான் தரகுறைவான மருந்துகளை வாங்கி குழந்தைகளை கொண்றது போன்று ஒரு கேவலமான அரசியல் செய்வது என்ற கொடூர வேலையை செய்யும் செல்வி. ஜெயலலிதா, அதை தினமும் சொல்லிக்கொண்டிருக்கும் ஜெயா டி.வி மற்றும் மக்கள் டி.விக்கு என் கண்டனங்கள்!

இது தொடர்பான சில விசயங்கள்:

1. இந்த மருந்து தமிழக அரசு வாங்கி வினியோபிப்பதல்ல! மந்திய அரசு மொத்தமாக வாங்கி, இந்தியாவில் உள்ள அத்துனை மாநிலங்களுக்கும் வினியோக்கிறது!

2. மத்திய அரசு தான் சோதனை அடிப்படையில் Human Biologicals Institute (HBI) நிறுவனத்தின மிருந்து இந்த மருந்துகளை வாங்கியுள்ளது! வழக்கமாக வாங்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடூடிடமும் (Serum Institute of India) வாங்கியுள்ளது!

3. இதில் HBIயிடம் வாங்கிய மருந்துகள் ஒரு டோஸ்க்கு ரூ 7/- விலை அதாவது ரூபாய் ஒன்று சீரம் இன்ஸ்டிடூடின் தடுப்பு மருந்து(ரூபாய் 8/-) விலையைவிட குறைவானவை!

4. இறந்த நான்கு குழந்தைகளுக்கும் போடப்பட்ட மருந்துகள் HBIயிடம் வாங்கியவை என்பது சரியே!

5. இந்த மருந்துகள் பொடியாக தான் வரும், அதை Sterile Water கொண்டு கலந்தே உபயோக்கிக்க வேண்டும், இறந்ததில் மூன்று குழந்தைகளுக்கு HBIயிடம் வாங்கிய மருந்து Serum Instituteடின் Sterile Water கலந்து உபயோக்கிப்பட்டிருக்கிறது! சில நேரம் இதுவும் காரணமகலாமாம்! ஆனால் நான்காவது குழந்தைக்கு மருந்தும், Sterile Waterரும் இரண்டுமே HBIயின் தயாரிப்பு!!

இதற்கான காரணங்கள் கண்டறியும் வரை காத்திருக்க தான் வேண்டும். நிலை இப்படி இருக்க, செல்வி. ஜெயலலிதாவுக்கு கண்டிப்பாக யார் மேலாவது பழி போட வேண்டும் என்றால் மத்திய சுகாதார அமைச்சர் டாகடர் அன்புமணி மீது பழி போடுங்க்! அதை விட்டுவிட்டு தமிழக அரசு தரம் குறைந்த மருந்துவாங்கியது என்று அரசியல் செய்வது மிகவும் தரம் தாழ்ந்த விசயாமாக தெரியுது!

மக்கள் டி.வியோ எப்படியோ தங்கள் மந்திரி மேல் பழி வராமல் இருந்தால் போதும் என்ற விஷம நோக்கில், மக்களை ஏமாற்றி திசை திருப்பும் வேலை செய்யும் ஜெயலலிதாவின் அறிக்கையை தினமும் செய்திகளில் படித்து தப்பிக்க நினைக்கிறார்கள்!!!

பி.கு: ஜெயலலிதா பொய் பிரச்சாரம் செய்வது தவறு ! ஆனால் அதற்கு பதில் தருகிறேன் என்று "ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 8 குழந்தைகள் இறந்தார்கள்! எங்கள் நான்கு தான் ஆனது!" என்று அறிக்கைவிடுவது ஒரு முதல்வர் அழகல்ல!!

இந்த அறிக்கைக்கு அர்த்தம் இன்னும் நான்கு பேர் கோட்டா இருக்கு எங்களுக்கு என்று அர்த்தமாகிவிடாதா??!!

Comments

ஜெய் ஸார்..

அம்மா இப்போது எதிர்க்கட்சி.. ஆகவே அறிக்கை விட்டுத்தான் ஆக வேண்டும். இல்லாவிடில் 'இது பற்றி அம்மையார் ஏதேனும் கண்டு கொண்டாரா' என்று நாளைக்கு யார் எதிர்க்கட்சியாக மாறினாலும் அக்கட்சித் தலைவர் அறைகூவல் விடுப்பார்.

ஸோ.. இதெல்லாம் கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று.

லெட்ஜரில் எழுதப்படாத ஆக்ட்டிவிட்டீஸ்களில் ஒன்று..

ஆளும் கட்சியில் இருந்து இதற்கு பதில் தந்துவிட்டால் இந்தப் பிரச்சனை முடிந்தது.

அடுத்த சாவிற்காக எதிர்க்கட்சியும், அந்தச் சாவிற்கான பதிலுக்காக ஆளும் கட்சியும் எப்போதுமே தயாராகவே இருக்கின்றன.

இதில் யாருடையதை குற்றம் என்பது..?
We The People said…
சரவணன் சார்,

அறிக்கை விடுவது பற்றியல்ல இந்த பதிவு, பொய்களை அடுக்கிவைத்து ஏன் அறிக்கை விடுகிறார்கள் என்பதே என் கேள்வி! ஒரு ரூபாய் குறைவாக உள்ள தடுப்பூசி வாங்கியது மத்திய அரசுதானே!! அதை தமிழக அரசு வாங்கியதாக பொய்ப்பிரச்சாரம் ஏன் செய்கிறார் என்பதே என் குற்றச்சாட்டு!
ஜெய்!

ஆச்சரியமா இருக்கே? :-))))
We The People said…
இதுல ஆச்சரியத்து என்ன லக்கி இருக்கு பிரியலையே லக்கி ;)
//We The People said...
சரவணன் சார், அறிக்கை விடுவது பற்றியல்ல இந்த பதிவு, பொய்களை அடுக்கிவைத்து ஏன் அறிக்கை விடுகிறார்கள் என்பதே என் கேள்வி! ஒரு ரூபாய் குறைவாக உள்ள தடுப்பூசி வாங்கியது மத்திய அரசுதானே!! அதை தமிழக அரசு வாங்கியதாக பொய்ப ்பிரச்சாரம் ஏன் செய்கிறார் என்பதே என் குற்றச்சாட்டு!//

அதனாலென்ன ஸார்..?

அறிக்கைவிட வேண்டும் என்பது தார்மீக வேலை. அந்த வேலையைச் செய்தாகிவிட்டது. அந்த அறிக்கையில் இருப்பது பொய்யா? உண்மையா? அது பற்றி யாருக்கென்ன..? எப்படியும் படிக்காமலேயே கிழித்துப் போடுவதற்கும் ஆள் இருக்கிறார்கள்.

இப்போது நீங்கள்தான் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதற்கும் ஒரு பதிலறிக்கையை அம்மா தயார் செய்து வைத்திருந்துவிட்டுத்தான் இந்த முதல் அறிக்கையை ரிலீஸ் செய்திருப்பார்.

மத்திய அரசே இவர்களால்தானே ஆடுகிறது.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரே இவர்களுடைய ஆள்தானே.. மத்திய அமைச்சரைக் கண்டித்து ஒரு அறிக்கை விட்டதுண்டா..? அல்லது அவரைக் கண்டித்து பேசியதுண்டா என்றெல்லாம் 'அம்மா' கேட்கப் போகிறார்..

அம்மா இப்படியெல்லாம் கேள்வி கேட்டு தைலாபுரத்திற்கும், கோபாலபுரத்திற்கும் இடையில் இல்லாத சண்டையை இப்போது மூட்டிவிட்டு.. அதில் குளிர் காய்ந்து..

ஸ்ஸ்..

ஜெய்.. திரும்பவும் சக்கரம் சுத்தி மறுபடியும் ஒரு அறிக்கைப் போருக்கு வந்து நிக்கும். அம்புட்டுத்தான்..
We The People said…
சரவணன்,

நீங்க சொல்லறது கரெக்ட், ஆனா அதற்காக மக்களை ஏமாற்றுவது தவறு :(

இதுதான் என் வாதம் :)
Anonymous said…
பித்தம் தலைக்கேறி பிணாத்திக் கொண்டிருக்கும் வெறி பிடித்தத் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கும் அறிஞர் அண்ணாவின் தம்பிகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
வேறு எங்காவது போகலாமென்றால் பணமும்,பதவி ஆசையும் மானம்,மரியாதை எல்லாவற்றையும் விட முக்கியமாகத் தெரிகிறது.

உளருவதே தன் வாழ்விற்கு மர்றவர்கள் மறந்து விடாமல் இருக்க வழி என்று அரசியலைக் கோடம்பாக்கத்தை விட மோசமாக்கி வரும் கோடம்பாக்கம் விரைவில் கீழ்ப்பாக்கத்தில் தஞ்சமடையலாம்.
//We The People said...
சரவணன், நீங்க சொல்லறது கரெக்ட், ஆனா அதற்காக மக்களை ஏமாற்றுவது தவறு. இதுதான் என் வாதம்//

அவங்க தொழிலே மக்களை ஏமாத்தறதுதான ஜெய்.. இதுல என்ன வாதம் தேவையிருக்கு..?
Anonymous said…
குறைந்த ஊதியத்தில், கஷ்டமான சூழலில், தினமும் 2 பேரூந்து மட்டுமே செல்லும் ஊர்களுக்கெல்லாம், பேரூந்தே செல்லாத ஊருக்கு கூட கொழுத்தும் வெயிலில் நடந்து சென்று, சில இடங்களில் (தர்மபுரி மாவட்டம்) வாகனம் செல்லமுடியாததால் கழுதை மேல் மருந்துகளையும் பிற பொருட்களையும் ஏற்றி சென்று தடுப்பூசி பணி செய்யும் மருத்துவர்கள், சமுக சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே (சுமார் 20000 நபர்கள்) தமிழகத்தில் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருடைய வேலைப்பளு, கஷ்டம் பற்றி ஒன்றும் தெரியாமல் குளு குளு ஊரில் உட்கார்ந்து குளு குளு அறையில் இருந்து கொண்டு பொய் அறிக்கைவிடுவதும், காலை மனைவியின் வீட்டில் இருந்து கொண்டு மாலை துனைவியின் வீட்டில் இருந்து கொண்டு அதற்கு மறுப்பு விடுவதும், என் குடும்பத்தினர் பதவி ஏற்றால் செருப்பால் அடியுங்கள் என்று சொல்லி விட்டு மகனை அமைச்சர் ஆக்குவதும், அயோக்கியத்தனம்
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை
SurveySan said…
long time no see?

you gotta do this:
http://surveysan.blogspot.com/2008/06/blog-post_25.html
ஹேமா said…
வணக்கம் ஜெய்.உங்கள் தளம் வந்து கொஞ்சம் பார்க்கிறேன்.ம்ம்ம்...இந்துய அரசியல் பற்றிப் பேசுகிறீர்கள். தெரியாது என்றே சொல்வேன். என்றாலும் இந்த 4 குழந்தைகள்
மரணம் பரிதாபத்துக்குரியது.
"இப்படிக்கு றோஸ்" ல் பார்த்தேன். கலந்துரயாடினார்கள்.அதில் கூடஒரு வைத்தியர் சொன்ன சமாதானம் எனக்குச் சமாதானமாகவில்லை.ஏழை மக்களின் நிலை இதுதான் எங்குமே என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது.