கலைஞர் கடிதமும் விலைவாசி உயர்வும்

முரசொலியில் முதல்வரின் நேற்றைய சேதி பயங்கரமா சிரிப்பை தான் வரவைத்தது! வெங்காயம் விலையும், தக்காளி விலையும் கடுமையாக குறைந்துவிட்டதாம், மக்கள் சந்தோஷ கடலில் தத்தளிக்கிறார்களாம் :))))) அது கொடநாடு எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லைன்னு சொல்லியிருக்காரு! (அங்க அந்த அம்மா என்ன தான் செய்யறாங்களோ! ஒன்னியும் பிரியில! எதிர்கட்சி தலைவருக்கு ரெஸ்டு தவிர வேற வேலையே இருக்காதோ! அது வேற விசயம்!)

மற்ற எல்லா காய்கறிகளில் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது! அது நம் முதல்வருக்கு தெரியவில்லை!! என்ன சொல்லவரார் குறைந்த விலையில் கிடைக்கும் வெங்காயம் + தக்காளியை மட்டும் வைத்து ஜாலியா இருங்க! மற்ற காய்கறிகள் எங்களை மாதிரி காசு இருக்கிறவங்க சாப்பிடுவது என்பதை தெரிந்து கொள்ளுங்க என்றா??

Comments

அமெரிக்காவில் வாழ்க்கை ரொம்ப சோகமாக இருக்கிறது. முரசொலி (எதுக்கு வம்பு, நமது எம்.ஜி.ஆரையும் சேர்த்து சொல்றேன்!!!) மட்டும் இணையத்தில் இருந்தால், இந்த நாள் மட்டுமல்ல, எல்லா நாளும் இனிய நாள்னு நினைக்கிறேன்!!!
Athisha said…
இத ஜெயாடிவில வேற மாதிரில சொன்னய்ங்க

தக்காளி,வெங்காயம் விலை கொறஞ்சதால அத பல ஏக்கருக்கு விவசாயம் பண்ணவங்க வாயிலயும் வயித்துலயும் அடிச்சிகிட்டு கதறுதாங்கனு ,
We The People said…
//இத ஜெயாடிவில வேற மாதிரில சொன்னய்ங்க//

அது விவசாயகளின் பிரச்சனை ;) நான் சொன்னது மக்கள் பிரச்சனை!! ஜெயா டி.வியில் சொன்னதும் சரியே ... கிலோ ஒரு ரூபாய் அளவுக்கு தரை ரேட்டில் கேட்டதால் சும்மா வெட்டி போட்டார்களாம் விவசாயிகள் வயித்தெரிச்சலில் :((

ஜெயா டி.விக்கு பிரச்சனை வேற ஆங்கிளில் சொல்லித்தானே ஆகனும், அவங்க என்ன தக்காளி, வெங்காயம் விலை குறைந்ததால் மக்கள் சந்தோஷம்னா சொல்ல முடியும் :))

என்ன அதிஷா ஒரு மேட்டரை அவர் அவர்களுக்கு ஏற்றார் போல தான சொல்லமுடியும் ;)
Athisha said…
உளியின் ஓசை பட டிக்கெட் கூட விலை குறைஞ்சிருச்சாம்

நாளைக்கு கலைஞர் அதுனாலயும் மக்கள் மகிழ்ச்சினு அறிக்கை விட்டாலும் விடுவாரு

எப்படியோ மக்கள் மகிழ்ச்சியா இருந்தா சரி
//வெங்காயம் விலையும், தக்காளி விலையும் கடுமையாக குறைந்துவிட்டதாம்//

ஐயையோ...விவசாயிகள் பாவம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதை பொருட்படுத்தாமல் கலைஞர் வேறுபொருள்படுத்துகிறார்.
:)
//கிலோ ஒரு ரூபாய் அளவுக்கு தரை ரேட்டில் கேட்டதால் சும்மா வெட்டி போட்டார்களாம் விவசாயிகள் வயித்தெரிச்சலில் :((//

Did anyone thought about preserving them in storages; using them in food-processing industry; or simply export?

In all these three scenarios, the vegetable price would be more or less stable and farmers would have made some decent profit.

Poor farmers either grow less spiking the demand; price hitting the roof; affecting consumers or they produce more; price goes for a toss; they literally destroy their produce.

Benefits of supply chain management; this is what corporates try to bring to benefit the farmers and consumers ; vehmently opposed by scrupulous politicians.
Aaha, Murasoli Ellam padikkireengala ?
Ithu Aapatthu. . .
kindly go and read my answer for your question in the following URL

https://www.blogger.com/comment.g?blogID=6518471277599907675&postID=3482127883890188913
We The People said…
//Aaha, Murasoli Ellam padikkireengala ?
Ithu Aapatthu. . .//

ரெண்டு பக்கமும் பார்த்தா தானே எது சரி, எது தவறு என்ற முடிவுக்கு நம்ம வரமுடியும்! நாங்க கலைஞர் டி.வியும் பார்ப்போம், ஜெயா டி.வியும் பார்ப்போம், சன் டிவியும் பார்ப்போம், ராஜ் டி.வியும் பார்ப்பொம்.

தினதந்தியும் படிப்போம், முரசொலியும் படிப்போம், தினமலரும் படிப்போம், நமது எம்.ஜி.ஆர் மட்டும் படிப்பது இல்லை (எப்பா அதுக்கெல்லாம் தனியா தெம்பு வேணும், அந்த அம்மா அறீஈஈஈஈஈக்கை மட்டும் தான் இருக்கு, அப்புறம் கோடிக்கணக்கான இளைஞர் வந்து அ.தி.மு.க இணைந்தார்கள் என்று ஒரு 10 போட்டோவை போட்டிருப்பாங்க!) அதை படிக்கலைன்னாலும் கவலை இல்லை ஏன்னா ஜெயா செய்தியிலும் அதே கருமம் தானே இருக்கு .. ஹா ஹா ஹா...