திருமங்கலம் முடிவும் மாறும் கூட்டணிகளும்

நாளைய திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் என்ன நடக்கலாம் என்ற சிறு அலசலே இந்த பதிவு. திருமங்கலம் தொகுதி வர இருக்கு பாராளமன்ற தேர்தலுக்கு ஒரு வெள்ளோட்டமாக கருதப்படுகிறது! இங்கு விழும் ஓட்டுக்களை வைத்து மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் என்ற ஒரு மாயாயை உருவாக்க முடியும், அதனால் ஜெயிக்கும் கட்சிக்கு கண்டிப்பாக சில சதவீத ஆதரவு பெருகும் என்பது ஒரு கருத்து! அதனால் எப்படியும் ஜெயிப்பது என்று இரண்டு கழகங்களும் கச்சை கட்டி இறங்கி இருக்கிறது!

எனக்கு தெரிந்தவர்களிடமிருந்து தகவல் படி இறக்கப்பட்ட காசுக்கு கண்டிப்பா தி.மு.க தான் ஜெயிக்கும், அது நிச்சயம்! ஒரு ஆளுக்கு 5 - 6 ஆயிரம் வரை காசு கொடுத்திருக்கிறார்கள் ஓட்டுக்காக என்ற நிலையில் கண்டிப்பா அதிகம் கொடுத்தவருக்கே ஓட்டு என்ற லாஜிக்ல் பார்த்தால் நிச்சயம் அது தி.மு.கவுக்கு தான் அதிக ஓட்டு கிடைக்க வழி உள்ளது! இத்துணை கோடி செலவு செய்து எதற்காக இந்த ஓட்டு பிச்சை என்றது எனக்கு தோன்று சில விசயங்கள். பாவம் அ.தி.மு.க குறைவான காசு + தி.மு.க ஆட்சிக்கு எதிர்ப்பு ஓட்டுக்களை மட்டும் வைத்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்றே தோன்றுகிறது! 25% வெளியூரில் வேலை செய்யும் மக்கள் கொண்ட ஒரு தொகுதியான திருமங்கலம் 89% ஓட்டுகள் விழும் அளவுக்கு காசுக்காக வந்து ஒரு பெரிய ஜனநாயக புரட்சியை செய்ய வைத்திருக்கிறது தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்று நினைக்கும் போது! ஜனநாயத்தின் மேல் எனக்குள்ள நம்பிக்கை குழி தோண்டி புதைந்தது போன்று தோன்றுகிறது! அது வேறு விசயம்.


தி.மு.க ஜெயித்தால் இவை எல்லாம் கண்டிப்பாக நடக்கும்:

1. தி.மு.க தன் பாராளமன்ற கூட்டணியை மெதுவாக பா.ஜ.கவிடம் சாயப்பார்க்கிறது என்று தோன்றுகிறது! ஏன்னா டாக்டர் ராமதாஸை நக்கல் அடிக்கு அதே தி.மு.கவும் அதே ஜெயிக்கும் கட்சிக்கு தாவுதல் என்ற கோட்ப்பாட்டை தான் இதுவரையும் செய்துள்ளது. உதாரனத்துக்கு இதற்கு முன்பு தி.மு.க - பா.ஜ.கவுடன் கூட்டணி இருந்தது! ஐந்து வருடங்கள் சரியாக முடியும் போது, திரும்ப பா.ஜ.க வருவது கடினம் என்று தெரிந்ததும், பெரிய காரணம் ஒன்றும் சொல்லாமல் நைசாக காங்கிரஸ் பக்கம் தாவியது அனைவருக்கும் தெரிந்ததே! இப்பொழுது எனக்கு தெரிந்து காங்கிரஸ் போனமுறைக்கு வந்த அளவுக்கு கூட வர வாய்ப்பு இல்லை, அதனால் இந்த முறை கண்டிப்பா பா.ஜ.கவிடம் ஆட்சி அகப்படலாம். அதனால் மு.க தன் பங்குக்கு காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.

2. இப்படி சாயும் போது மக்கள் மீண்டும் தாவிட்டார் என்று நினைக்க கூடாது என்ற நோக்கில் மீண்டும் ஈழம் மக்களில் பிரச்சனையை கவனிக்காதா மத்திய காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு உதவுவது ஏதோ நேற்று தான் தெரிந்தது போல அறிக்கை வெளியிடப்படும். காங்கிரஸ் தி.மு.கவால் கண்டிக்கப்படும். சில அறிக்கை போருக்கு பின் வழக்கம் போல மு.க தான் காங்கிரஸுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவார்.

3. கடந்த 2 வருடங்களாக ஈழத்த்தை ஒரு பெரிய பிரச்சனையாக பார்க்காத தி.மு.கவும், மு.கவும் தீடீர் பாசம் பொங்கி படங்கள் காட்டப்படும். மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் உண்ணாவிரதம், மனித சங்கிலி என பல போராட்டங்கள் நடக்கும்.

4. பா.ஜ.க சில நாட்களுக்கு முன் தன் பங்கிற்கு காய்களை நகர்த்த துவங்கிவிட்டது! இல கணேசன் ஏதோ அவருக்கு ஈழத்தமிழர் கஷ்டப்படுவது நேற்று தான் தெரிந்தது போல அறிக்கையும், பா.ஜ.க தன் கட்சியில் கூட்டம் போட்டு ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று ஒரு முடிவு போட்டுள்ளது!

5. பா.ஜ.க அந்த நிலையை விடாது பிடித்துக்கொண்டு, தி.மு.க போராட்டங்களுக்கு ஆதரவு தரும், பின்னர் பாராளமன்ற தேர்தலுக்கு கூட்டணி பேசப்படும்.

6. ராமதாஸும் மெதுவாக ஈழம் ஆதரவு காரணமாக நாங்களும் தி.மு.க மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஈழ மக்களை காப்பாற்ற போகிறோம் என்று சூழுரைக்கப் போகிறார்.

7. ம.தி.மு.கவுக்கு நூல்விடப்படும், வை.கோவும் அந்த கூட்டணிக்கு தாவுவதற்கு நல்ல வாய்ப்புக்கள் இருக்கிறது! ஈழம் மேட்டர் ஒன்றே போதுமானது!

8. தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் + சன் டிவி என்று ஒரு பலம்வாய்ந்த கூட்டணியை காட்டப் போகிறார்கள். அந்த் பலத்தை வைத்து தி.மு.க தன் மாநில ஆட்சியையும் காங்கிரஸ் ஆதரவு இல்லாம தக்கவைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

9. அடிபட்ட காங்கிரஸ் அ.தி.மு.க மற்றும் விசயகாந்தின் தே.மு.தி.கவை கூட்டணிக்கு முயற்சிக்கும், சில தகவல்கள் படி காங்கிரஸ் ஏற்கனவே தே.மு.தி.கவுக்கு வலை விரித்து இருப்பாதாக சேதி! விஜயகாந்த் எந்த பக்கமும் சாயாமல் இருப்பார அல்லது மெதுவாக பாராளமன்றம் என்பது ஒரு தேசிய நீரோட்ட்டம் அதற்கு ஒரு தேசிய கட்சி தேவை என்ற வகையில் காங்கிரஸுக்கு தலையாட்டுவாரோ தெரியவில்லை! ஆனால் அதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். அப்படி ஒரு நிலை வந்தால் காங்கிரஸ் - தே.மு.தி.க மற்று சில துக்கடா கட்சிகளும் இணைந்து ஒரு பலமான மூன்றாம் அணியாக காட்ட முயற்சிக்கலாம்.

10. அ.தி.மு.க வேறு வழியில்லாம் கம்யூனிஸ்டுகள் மற்றும் வாண்டையார் போன்ற ஒரு சில ஆயிரம் ஓட்டுகள் உள்ள கட்சிகளை வைத்துக் கொண்டு, தி.மு.க மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்களை நம்பி ஒரு அணியாக முயற்சி நடக்கலாம். ஒரு வேளை திருமங்கலம் வெற்றி பெற்றால் அந்த வெற்றியும் மக்கள் ஆதரவு சீன் போட ஒரு நல்ல மேட்டராக இருக்கும் ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு!

வரும் நாட்களில் இவைகள் அனைத்து நடக்க வாய்ப்புக்கள் அதிம் என்றே தோண்றுகிறது!

பி.கு: மறக்காமல் வலது பக்கம் உள்ள வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் :)

Comments

G.Ragavan said…
நீங்க சொன்ன மாதிரி நடக்கத்தான் வாய்ப்பு நிறைய. ஜனநாயகம் பிணநாயகமாகி இப்பப் பணநாயகந்தானே இருக்குது. இதுல எல்லாருமே திருடங்கதான். ஒரு சிலர்தான் அவங்கவங்க அபிமானத் தலைவர்/தலைவி நல்லவங்கன்னு நெனைக்கிறாங்க. ஆனா எல்லாரும் பணத்துக்குப் பறக்குறவங்கதான்.
//தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் + சன் டிவி என்று ஒரு பலம்வாய்ந்த கூட்டணியை காட்டப் போகிறார்கள்//
நடக்குமென்றே தெரிகிறது...
நல்ல அலசல்
We The People said…
//ங்க சொன்ன மாதிரி நடக்கத்தான் வாய்ப்பு நிறைய. ஜனநாயகம் பிணநாயகமாகி இப்பப் பணநாயகந்தானே இருக்குது. //

100% உண்மை :((

நன்றி ராகவன்
ஜனநாயகம் பற்றிய உங்கள் ஆதங்கம் சரி. இரண்டு கழகங்களும் இடைத்தேர்த்தல் என்றால் பணம் கொடு ஓட்டு போடுகிறேன் என்ற மனநிலைக்கு மக்களை தள்ளி விட்டது.. இது கழகங்களுக்கு வெற்றியாக இருக்கலாம், ஆனால் ஜனநாயகத்திற்கு பெரு தோல்வி.

ஆனால் உங்களின் கூட்டணி பற்றிய கணிப்பு தவறானது என்று எனக்கு படுகிறது. தி மு க, காங்கிரஸ் கூட்டனி தான் பாரளுமன்ற தேர்தலில் இருக்கும்.. தேர்தல் முடிவுகள் பொறுத்து மாற்றங்கள் வரலாம். தேர்தலும் முன் வர வாய்ப்பில்லை..
Anonymous said…
ஒரு வாக்காளருக்கு 5 (அ) 6 ஆயிரம் என்றால் அது நூறு கோடியைத் தொடுகிறது. அப்படியென்றால் அதிமுக கொடுத்தது ( எப்படியும் அவர்களும் திமுகவுக்கு இனையாக வைட்டமின் ‘ப'வை இறக்கியிருக்கனும் ) தேமுதிக கொடுத்தது என்று பார்த்தால் சில நூறு கோடிகள் தேறனும்..

இதெல்லாம் சாத்தியம் என்று நிசமாவே நம்புகிறீர்களா?

இதே அதிமுக ஜெயித்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்?
We The People said…
ஐயா,

அனானி நான் ஒன்னும் சும்மா சொல்லவில்லை அங்கே தேர்தலுக்காக அமர்த்தப்பட்ட பத்திரிக்கை நண்பர் அங்கே நடந்ததை பார்த்து சொன்னதை தான் நான் சொல்கிறேன்.

நான் அ.தி.மு.க காசு தரவில்லை என்று சொல்லவே இல்லையே! அதுவும் இல்லாமல் நான் இந்த பதிவை எழுதியது நேற்று!! பதிவு தமிழ்மணத்தில் நேற்றே சேர்த்திருக்கிறேன், அதனால் நான் தேர்தல் முடிவை வைத்து சொல்லவில்லை என்று தெரிந்து கொள்ளவும்.

காசு கொடுத்து ஓட்டு வாங்கினால் அது அ.தி.மு.கவாக இருந்தாலும் அது ஜனநாய படுகொலையே!! நான் அதை தான் வலியுரித்தியுள்ளே! கழகங்கள் என்று நான் சொன்னது எல்லா கட்சியையும் சேர்த்தே!!
We The People said…
//இதெல்லாம் சாத்தியம் என்று நிசமாவே நம்புகிறீர்களா?//

இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று நீங்க நினைக்கிறீங்களா??!!

அதெப்படி எல்லாரும் தி.மு.கவை திட்டினவன் கண்டிப்பா அ.தி.மு.கவாக தான் இருக்கனும்ன்னு நினைக்கறீங்க...
Anonymous said…
//இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று நீங்க நினைக்கிறீங்களா??!!

அதெப்படி எல்லாரும் தி.மு.கவை திட்டினவன் கண்டிப்பா அ.தி.மு.கவாக தான் இருக்கனும்ன்னு நினைக்கறீங்க...//

ஜெய்.. நான் கழகமும் இல்லை கழகங்கள் காசு கொடுத்திருக்க மாட்டார்கள் என்றும் சொல்லவில்லை. நிச்சயம் காசு கொடுத்திருப்பார்கள் - இங்கே மட்டுமல்ல இந்திய ஜனநாயகம் மற்றெல்லா இடங்களிலும் பணநாயகமாகி எத்தனையோ பத்தாண்டுகள் ஆகிவிட்டது.. இந்தியாவில் ஒரே ஒரு தேர்தலைக் கூட நேர்மையான தேர்தல் என்று சுட்டிக் காட்டிவிட முடியாது - நான் சொல்வது நேரு காலத்திலிருந்து தான் - ஏன் வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து என்றும் கூட வைத்துக் கொள்ளலாம்..

பொதுவாய் தமிழகத்தில் ஃபேஷன் என்னவென்றால் எல்லாத்துக்கும் காரணம் கழகங்கள் என்று பொத்தாம் பொதுவாக பேசுவது தான்.. ஏதோ திராவிடக்கழகங்களால் தமிழகமே நாறிப்போய் விட்டதாகவும், திராவிட அரசியல் இல்லாத உ.பி, ம.பி, பீகார், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், அஸ்ஸாம், மே.வ, ராஜஸ்தான், கருநாடகம், ஆந்திரம் - இங்கெல்லாம் பொற்றாகால ஆட்சி நடப்பது போலவும் பேசுவது எரிச்சலூட்டுகிறது.. சொல்லப்போனால் அரசியல் அங்கைவிட இங்கு டீசெண்டாகவே இருக்கிறது.. பொதுவாய் ஆங்கில மீடியாக்களின் சகுனித்தனமும் இதில் அடங்கியிருக்கிறது என்பது என் கருத்து..

போகட்டும்...

நான் என்ன சொல்ல நினைத்தேன் என்றால்... நீங்கள் குறிப்பிடும் தொகை கொஞ்சம் ஓவராய் இருக்கிறது என்பதே.. May be, ஒரு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் (Max 2 Max) கொடுத்திருக்கலாம்.. அதற்கு மேல் ஒரு இடைத்தேர்தலில் இன்வெஸ்ட் செய்ய அவர்கள் என்ன லூசுகளா?
We The People said…
//நான் என்ன சொல்ல நினைத்தேன் என்றால்... நீங்கள் குறிப்பிடும் தொகை கொஞ்சம் ஓவராய் இருக்கிறது என்பதே.. May be, ஒரு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் (Max 2 Max) கொடுத்திருக்கலாம்.. அதற்கு மேல் ஒரு இடைத்தேர்தலில் இன்வெஸ்ட் செய்ய அவர்கள் என்ன லூசுகளா?//

அவனுக லூசில்ல நாம தான் லூசுங்க! நம்ப தகுந்த செய்தி அனானி நண்பரே தி.மு.க மினிமம் 5 ஆயிரம் கொடுத்துள்ளது! அது நிச்சயம் உண்மை! காசு கொடுத்து ஜெயித்துவிட்டு இப்ப பாருங்க மக்கள் எங்க பக்கம் என்று டயலாக் வேற விடறாங்களே! இது ஒரு பாராளமன்ற தேர்தல் வெள்ளோட்டம் அதனால் தான் இவர்கள் இப்படி காசு அள்ளி கொட்டினாங்க... சாதரண பொதுமக்கள் இந்த வெற்றியால் என்ன நினைப்பார்கள் தி.மு.கவுக்குதான் தமிழக மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற ஒரு மாயயை உருவாக அருமையான வாய்ப்பு இது அதவே காரணம்...

நீங்க திராவிட கட்சி, திராவிடம் இல்லாத கட்சி என்று பார்க்கிறீர்கள், நான் அரசியல் கட்சிகள் என்ற நிலையிலேயே பார்க்கிறேன்! என் மாநில தமிழகம் அதனால் நான் இங்கே நடப்பதை தான் பேச முடியும்! இந்தியாவில் எல்லா இடங்களிலும் நடக்கலாம் அதை எல்லாம் விட எனக்கு தமிழகம் தான் வீடு இங்குள்ள குறையை தான் முதலில் சுட்டிக்காட்ட முடியும்!
Anonymous said…
//காசு கொடுத்து ஜெயித்துவிட்டு இப்ப பாருங்க மக்கள் எங்க பக்கம் என்று டயலாக் வேற விடறாங்களே! //

சரி ஜெய்.. நீங்க சொல்றது சரி தான்.. நிலமை எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் இருக்கிறது.. இது இப்போது தான் இப்படியாகி விட்டதா என்றால் - இல்லை, வெள்ளைக்காரன் கண்துடைப்பு தேர்தல் என்று ஆரம்பித்த அன்றிலிருந்தே இந்திய ஜனநாயகத் தேர்தல்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.. அட, இங்கே தான் இப்படியிருக்கிறதா என்றால் - ஜனநாயகத்தின் தொட்டில், தேர்தல் அரசியலின் முன்னோடி மாதிரி என்று கொண்டாடப்படும் அமெரிக்காவிலும் இப்படித்தான் இருக்கிறது.

நாம் புலம்புவதை நிறுத்திக் கொள்வோம். நீங்கள் ஏதாவது மாற்று வைத்திருக்கிறீர்களா? உண்மையான மக்களாட்சி என்பது எப்படி இருக்க வேண்டும்? மக்கள் அதிகாரம் என்பது எப்படி இருக்க வேண்டும்?

எதுனா ஐடியா இருந்தா சொல்லுங்களேன்?
Anonymous said…
எல்ல அரசியல் வாதிகளும்
தான் ...
தான் குடும்பம் .....
தொழில்....
வளர்ச்சி.....
இப்படி வாழ .....
தமிழர்கள் ... முட்டாள்களாய் ...
அவர்கள் பின்னாடி ஓடி கொண்டிருக்கிறார்கள் ............
இன்னும் எத்தனை காலம் .....
இப்படி ..........
போங்கும்....................
( ஜெய் உங்களை போல ஒரு யோசிக்கும் உண்மை தமிழன் .............)
//பா.ஜ.க சில நாட்களுக்கு முன் தன் பங்கிற்கு காய்களை நகர்த்த துவங்கிவிட்டது! இல கணேசன் ஏதோ அவருக்கு ஈழத்தமிழர் கஷ்டப்படுவது நேற்று தான் தெரிந்தது போல அறிக்கையும், பா.ஜ.க தன் கட்சியில் கூட்டம் போட்டு ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று ஒரு முடிவு போட்டுள்ளது!//

இந்த அறிக்கைக்கு பின்னாடி இவ்ளோ கூத்து நடக்க இருக்கா.................???

அருமையான அலசல். இந்தப்பதிவில உள்ளது போல எது வேண்டுமானாலும் நடக்கலாம்......... எல்லாமே சன ( பண) நாயகத்துக்காகத்தான்