கழுதை கைது ;)

இது காஞ்சிபுரம் - சூன் 29, 2006 நடந்த காமெடி:

ஒரு கழுதையை கைது செய்தது காஞ்சிபுரம் காவல்துறை. எதுக்குன்னு பார்க்கறீங்களா? பேப்பர்(மனு) தின்னதுக்கு தான்!

29 ஆம் தேதி ஏதோ திராவிட மக்கள் மன்றம் பெயரில கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் (மாவட்ட நிர்வாகிகள் மனு கொடுத்தா, கண்டுக்காம இருக்கறதயும், அட்லீஸ்டு கழுதைக்கு கொடுத்த அதுக்கு ஒரு வேளை உணவாகும் என்ற உயரிய நோக்கதுக்காக)ஒரு நூதன போராட்டம் நடந்தது காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளை கண்டிச்சு!

அங்க தான் இந்த கழுதைக்கு எழரை புடிச்சிருக்கு போல, ஓசில பேப்பர் நிறையா கிடைக்கும் இந்த கழுதையின் முதலாளி இந்த திராவிட மக்கள் மன்றம் கோஷ்டிகளோட அனுப்பியிருக்காரு! இந்த மன்றமும் அறபோர்தான் பண்ணாங்க போல அது தருமவான்களான காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு புடிக்கல போல. உடனே ஒரு புகார் காஞ்சிபுரம் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது! உடனடி நடவடிக்கையில் காவல்துறை இறங்கி தூள் பண்ணீட்டங்க!!!

அங்கு போராட்டம் செய்த மன்றத்தார் + கழுதை + மனுக்கள் + கூடாரம் + கட் அவுட் என்று எல்லத்தையும் அள்ளிக்கிட்டு போக முடிவு எடுத்துட்டு பார்த்த கழுதை மன்றத்தாருடன் வேனில் எற மறுத்தது எவ்வளோ முயற்சி செய்து பார்த்துட்டு வேலைக்கு ஆகாம ஒரு ஆட்டோ அழைக்கப்பட்டது! அது ஒரு சூப்பர் காமெடி ஆனது ஒரு பக்கம் புடிச்சு ஏத்தினாங்க அது அந்த பக்கமா வெளிய ஓடி வந்திருச்சு!!! அப்பறம் ஒரு chasing ஒரு வழியா கழுதையை மறுபடியும் புடிச்சு ஆட்டோவில் ஏற்ற முயற்சி நடந்தது வேலைக்கு ஆகல போல, அடுத்து ஒரு சின்ன யானை (சாரி சின்ன டெம்போ) அழைத்து வந்து கஷ்டப்பட்டு ஏத்தி,கயிரு கட்டி கோர்டுக்கு கொண்டுபோயி நீதிபதியின் முன் கைது செய்யப்பட்ட கழுதை நிறுந்தப்பட்டது. நீதிபதியும் கழுதையை இப்படி வதைக்க கூடாது (மிருக வதை) என்று திராவிட மக்கள் மன்றத்தார்க்கு எச்சரிக்கை கொடுத்தார்!

இதுல மேட்டர் என்னவென்றால் கழுதையை வதைத்தது திராவிட மக்கள் மன்றத்தார் அல்ல! காவல்துறை தான் என்று எனக்கு தோண்றியது!!! திராவிட மக்கள் மன்றத்தார் சூப்பரா dress செய்து, மாலையெல்லாம் போட்டு கூட்டிவந்து அதன் பிரதான உணவான காகிதத்தை (மனு) கொடுத்தார்கள்! காவல்துறை தான் அந்த கழுதையை இழுத்து போட்டு, அடிச்சு, அட்டோல ஏத்தி, டெம்போ ஏத்தி படாத பாடு படுத்தினார்கள்!! எனங்க இந்த சட்டம் இவ்வளோ பெரிய ஓட்டையாயிருக்கு!!

பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்!!!

அது சரி போராட்டம் எதுக்குன்னு கேக்கலயே! தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்க்கு வழுங்குவதாக கூற பட்ட நிலம் பல வருடங்களாக, பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு தந்தும் ஒரு முடிவும் வரவில்லை என்ற காரண்த்துக்காக! ஒரு பக்கம் இட ஒதுக்கீட்டுக்கு சீனு (Scene) போடறது இந்த பக்கம் அல்வா கொடுக்கறது!

சூப்பரப்பு!!!

Comments

அரஸ்டு பண்ணுனத சரி,F.I.R போட்டு, அதுக்கு ஜாமீன் தருமா நம் நீதித்துறை. கொடுத்தாலும் கொடுத்து ஒரு சரித்திரம் படைப்பார்களோ!
We The People said…
F.I.R பத்தி தெரியல தலைவா, ஆனா அப்பவே ரிலீஸ் செய்திருக்கிறார் நீதிபதி. முதலாளியிடம் ஒப்படைக்கப்பட்டதாக கேள்வி!!
//அரஸ்டு பண்ணுனத சரி,F.I.R போட்டு, அதுக்கு ஜாமீன் தருமா நம் நீதித்துறை. கொடுத்தாலும் கொடுத்து ஒரு சரித்திரம் படைப்பார்களோ//

நல்லா கேட்டீங்க நாகையாரே!
We The People said…
கைது செய்ததே ஒரு சரித்திரம் போல தெரியுது! இதற்கு முன்பு இது போன்ற கைது நடந்திருக்கான்னு தெரியல யாரவது தெரிஞ்சா சொல்லுங்க!
பாவம் அந்தக் கழுதை.
அதை இம்சிச்சது காவல் துறைதான்.
உலகப்போர்லே வீரச்செயல் புரிந்ததுக்கு ஒரு கழுதைக்கு 'விக்டோரியா க்ராஸ்'
கிடைச்சிருக்குன்னு முந்தி எங்கியோ படிச்ச நினைவு வருது.
Anonymous said…
இதைத்தான் கழுதைபாடு என்று சொல்வார்களோ?.....
idharkku namma police padhivar enna padhil solla pogirar??

oru police karar valai padhgirar theriyuma??
We The People said…
நன்றி கலாநிதி, அனானி மற்றும் கார்த்திக் பிரபு. யாருங்க அந்த போலீஸ்கார்... கார்த்திக் நீங்களே சொல்லுங்க பிளீஸ்... :)