நாடகம்.காம்

நண்பர் Mejoritypeople என்னிடம் பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் இந்த பதிவில் ஒரு கேள்வி எழுப்பினார், அதற்கு நான் தந்த பதில் அதை தனி பதிவாக கொஞ்சம் விரிவாக போட்டால் அனைவருக்கும் அறிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என்று தான் இந்த பதிவு.

Mejoritypeople கேள்வி:
இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும் CPI and CPM நிலையும்ஒன்று என எடுத்து கொள்ளலாமா ?

என் பதில்:

CPI and CPM முழு நேர வியாபாரிகளாகிவிட்டதாக தான் எனக்கு தோண்றுகிறது??!! எந்த முதாலாளித்துவ கொள்கையை எதிர்த்தார்களோ அதை இன்று ஆதரிப்பது போல் பெங்காலில் வேலைகள் நடக்கிறது! அன்னிய முதலீடு வாங்க கூடாது என கூறும் இடதுசாரிகளின் அரசு பெங்காலில் அன்னிய முதலீட்டுக்கு காத்திருக்கிறது!

அவர்களை மக்களுக்கு நன்மை செய்ய நாம் பாராளமன்றத்துக்கு அனுப்பினால் அவர்கள் காங்கிரஸுடன் கை கோர்த்து 6 முறை பெட்ரோல் விலை ஏற்றிய போது வாயளவில் போராட்டம் செய்து! மக்களின் நண்மையை கருத்தில் கொள்ளாமல் வாய்ப்பேச்சில் வீரர்கள் ஆனதில் எனக்கு பெரும் வருத்தம்.

ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது இவர்கள் போராட்டம் செய்வதும், உடனே காங்கிரஸ் நவரத்தின நிறுவனங்களான அரசு நிறுவணங்களை விற்றுவிட போகிறோம் என்று சொல்வது! உடனே பெட்ரோல் மேட்டரை கைவிட்டு அந்த அரசு நிறுவணங்களை காப்பற்ற போவது போல் பாவலா காட்டுவது! பின்னர் பெட்ரோல் மேட்டரை பேசுவதையே மறந்துவிடுவதும், பார்க்கும் போது CPI and CPM மற்றும் காங்கிரஸ் இனைந்து நடத்தும் நாடகமாகவே எனக்கு தோண்றுகிறது (ஆதாரம் epaperகளை ஆராய்ந்து பார்த்தால் புரியும்).

CPI and CPM உண்மையில் மக்கள் ஆதரவு கொள்கையை கைவிட்டுவிட்டதாக எனக்கு தோண்றுகிறது.

நாடக Template:

ஒவ்வொரு முறையும் ஒரே நாடக Template:

Scene 1:

பெட்ரோல் விலை உயர்வும்.

Scene 2:

CPI and CPM போராட்டம்

Scene 3:

காங்கிரஸ் அரசின் நவரத்னா என அழைக்கப்படும் பொது துறை பங்கு விற்பனை அறிவிப்பு.

Scene 4:

CPI and CPM பெட்ரோல் விலையேற்றத்துக்கான போராட்டம் மறந்து(??!!) பங்கு விற்பனை எதிர்த்து போராட்ட அறிவிப்பு.


Scene 5:

காங்கிரஸ் அரசின் பொது துறை பங்கு விற்பனை வாபஸ் அறிவிப்பு. (சில நேரம் BHEL, NALCO, NLC, ETC.,)

Scene 6:

CPI and CPM பங்கு விற்பனை எதிர்த்து போராட்ட வாபஸ் + வெற்றி அறிவிப்பு.

இதே Sceneகள் வைத்து தினம் தினம் நாடகங்கள் அரங்கு ஏறுகிறது!

கடைசியாக நடந்த நாடகம்:

பெட்ரோல் விலை உயர்வும், அடுத்து CPI and CPM போராட்டம், அடுத்து காங்கிரஸ் அரசின் NLC & NALCO பங்கு விற்பனை அறிவிப்பு, CPI and CPM பங்கு விற்பனை எதிர்த்து போராட்டம், CPI and CPM பெட்ரோல் விலை உயர்வு போராட்டம் கைவிடப்பட்டது, காங்கிரஸ் அரசு NLC & NALCO பங்கு விற்பனை வாபஸ் அறிவிப்பு, CPI and CPM வெற்றி கொண்டாட்டம்.

இதில் உண்மையில் முழு புசனிக்காயான பெட்ரோல் விலை ஏற்றம் மறைக்க பட்டது. இதற்கு முன் NLC & NALCO பங்கு விற்பனைக்கு பதில் BHEL!!! 6 முறை அதே scenes பொதுதுறை கம்பெனியின் பெயர் மட்டும் வேறு.

ஐயோ! ஐயோ! இவர்கள் நம்மை இன்னும் சின்னபுள்ள தனமாகவே நினைச்சுகிட்டு இருக்காங்க போல!! இது புரியாமல் போக மக்கள் என்ன முட்டாள்களா??

இதை நேற்று எழுதி முடித்துவிட்டு வீட்டுக்கு போய் TV போட்டா.. ஒரு பாட்டு ... இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே...

Comments

சபாஷ்! சரியாகக் கூறினீர்கள்!
காம்ரேடுகளால் குரைக்கத்தான் முடியும். கடிக்க முடியாது.

அன்புடன்,
இந்தியன்.
This comment has been removed by a blog administrator.
We The People said…
நன்றி இந்தியன் இந்த சபாஷ்க்கு என் நன்றி. என் மற்ற பதிவுகளையும் பார்க்கவும்.
We The People said…
அன்னியன் நாடகம் மக்களுக்கு புரியும் வரை தான் போடமுடியும். மக்களுக்கு புரிந்துவிட்டால் டோட்டல் கல்தா தான்.
Unknown said…
ஆளுங்கட்சியாக இருந்துகொண்டே எதிர்கட்சியாகவும் இருக்க முயல்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.இப்படி நாடகம் ஆடினால் மக்கள் அதை நிரந்தர எதிர்கட்சியாகவே வைத்திருப்பர்.அப்படி நடப்பதுதான் நல்லது என தோன்றுகிறது.ஜப்பானில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எதிர்கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான்:-)))
We The People said…
செல்வன் இவர்களும் ஒரு வழக்கமான அரசியல்வியாதிகள் என்று தோல்லுரித்து காண்பிக்க தான் இந்த பதிவு.
கோபா said…
இவர்கள் போலி காம்ரேடுகள்....!

இத்தகைய திரிபுவாதிகளை மக்கள் நிராகரித்து உண்மையான

பாட்டாளிவர்க்க ஆட்சி (காம்ரேடுகள்) / உலகம் முழுவதும் வரும்....

இயங்கியலின் மாறா விதி மாற்றம் தான் !!!!

////
தங்கள் விளக்கங்கள் / பதிவுக்கு நன்றி !!!!!
We the People,

majarity people அவர்கள் எந்த புரிதலில் உங்களிடம் இந்த கேள்வியை கேட்டார் என்று தெரியவில்லை.
//இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும் CPI and CPM நிலையும்ஒன்று என எடுத்து கொள்ளலாமா ?//

ஆனால் எனக்கு ஒரு கேள்வி வருகிறது. இந்த அரசு பற்றிய கம்யுனிஸ்டுகளின்(CPI,CPM) நிலைப்பாடுகளை மறுதலித்த நீங்கள் அப்படியே தங்களது நிலைப்பாடு என்னவென்று கூறினால் அது எந்த வகையில் அவர்களுடைய நிலைப்பட்டைவிட உயர்ந்தது என்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி,
அசுரன்
We the People,

majarity people அவர்கள் எந்த புரிதலில் உங்களிடம் இந்த கேள்வியை கேட்டார் என்று தெரியவில்லை.
//இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும் CPI and CPM நிலையும்ஒன்று என எடுத்து கொள்ளலாமா ?//

ஆனால் எனக்கு ஒரு கேள்வி வருகிறது. இந்த அரசு பற்றிய கம்யுனிஸ்டுகளின்(CPI,CPM) நிலைப்பாடுகளை மறுதலித்த நீங்கள் அப்படியே தங்களது நிலைப்பாடு என்னவென்று கூறினால் அது எந்த வகையில் அவர்களுடைய நிலைப்பட்டைவிட உயர்ந்தது என்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி,
அசுரன்
We the People,

majarity people அவர்கள் எந்த புரிதலில் உங்களிடம் இந்த கேள்வியை கேட்டார் என்று தெரியவில்லை.
//இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும் CPI and CPM நிலையும்ஒன்று என எடுத்து கொள்ளலாமா ?//

ஆனால் எனக்கு ஒரு கேள்வி வருகிறது. இந்த அரசு பற்றிய கம்யுனிஸ்டுகளின்(CPI,CPM) நிலைப்பாடுகளை மறுதலித்த நீங்கள் அப்படியே தங்களது நிலைப்பாடு என்னவென்று கூறினால் அது எந்த வகையில் அவர்களுடைய நிலைப்பட்டைவிட உயர்ந்தது என்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி,
அசுரன்
We The People said…
என் நிலைப்பாடு என்னவெனில் மீண்டும் UPA அரசு அடுத்த வாரம் பெட்ரோல் விலையை எற்றும், கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம் நடத்துவார்கள், அடுத்து UPA அரசு ஏதாவது ஒரு பொதுத்துறை கம்பெனியின் பங்கை விற்க்கப்போகிறேன் என்று பூச்சாண்டி காட்டும், அதன் பிறகு கம்யூனிஸ்ட்டுகள் பங்கு விற்பனையை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள் (பெட்ரோல் விலை ஏற்ற போராட்த்தை மறந்து(??!!)), UPA அரசு பொதுத்துறை கம்பெனியின் பங்கை விற்பனை வாப்ஸ், கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி என்னால் என்று ஆனந்தம்! அதுக்கு நடுவுல மக்கள் விலைவாசி உயர்வால் கண்ணு வெளிய வந்து, நொந்து நூலாபோயிருப்பார்கள்!

இதனால் நான் சொல்லவருவது அவங்களை நாடகம் போடறதை நிறுத்த சொல்கிறேன்! Thats all your honour!!!
But I asked about your stance on our government(Present Economic system and State).

Because you said in the introduction statement of this article that you are answering Majority people's question that "you and CPM, CPI stance on the Government are same".

you said your stance is different and you mentioned the satnce of CPI, CPM but till now you didn't mention about your stance....

Are you reluctant to mention?

or are you just exposing CPM, CPI for the shake of Advertising yourself(that is satiating once inteluctual appreciation)?

Don't take it personal I just ask this out of curiosity and I always try to clear my doupts in the first hand.....

I have great respect on you as very few people like you write about the problems of India and that also in a real perspective.

Thanks and Regards,
Asuran
We The People said…
அசுரன் எனக்கு government Economic system தெரியாது! நான் ஒரு சாதரண குடிமகன்! எனக்கு தேவை நம்மை ஏமாற்றாத அரசு! நம்மிடம் பொய் சொல்லாத அரசு!! நம்மை நல்வழி நடத்தும் அரசு! இந்த மூன்றும் தவறியதால் வந்த ஆதங்கம் தான் இந்த பதிவு.

ஏமாற்றம்:

நம்மை காக்கும் என்றால் அது பொய்த்துவிட்டது, எங்கு பார்த்தாலும் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, இதை செய்பவர்கள் மேல் அமெரிக்காவுக்கு பயந்து ஒரு தூசு கூட பாடாமல் பார்த்துகொள்கிறது அரசு! நம்மை நட்டாற்றில் விட்டது போல் தோண்றுகிறது.

பொய்:

இல்லாத மாணியத்தை இருக்கு என்று பாட்சா காட்டுவது! வரியை வாரி கொட்டிக்கொண்டு மாணியக்கதை விடுவது! ஜாலியா A/C காரில் பவனிவந்து சூப்பரா கதைவிடுவது! 1,31,000 கோடி ரூபாயை பெட்ரோலால் மட்டும் ஆனா சொல்வது மக்களுக்கு மானியம் கொடுத்து தேஞ்சாமாதிரி.

நல்வழி நடத்தும்:

சுயநலன் காரணமா இரட்டை பதவி மசோதா! சுயநலத்துக்கா ராஜினாமா, சுயநலத்துக்கா மீண்டும் போட்டி இதுக்கெல்லாம் தான் நம்ம பணம் வீண்ணாக்படுது!

இடதுசாரிகள் வெளியிருந்து ஆதரவு என்ற கொள்கையை மறந்து, உண்மையில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் ஆட்சியில் பங்கெடுத்து நிருபிக்கலாமே நாங்கள் மக்கள் பக்கம் என்று! இன்று அவர்கள் கேட்டால் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் தான் UPA அரசு உள்ளது!!! அதை ஏன் செய்ய யோசிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்!

நான் எதிர் பார்க்கும் அரசு:

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

இந்த இரண்டு குறளை குறைந்த அளவு பின்பற்றினால் போது என்பது என் ஆசை.

ஆனா நம்ம அரசியல்வாதிகள் இதை தப்ப நெனச்சுட்டாங்கலோ! இயற்றுதல் - புது வரி போட்டுவது, ஈட்டுதல் - மக்கள் கிட்டயிருந்து சுருட்டிகினு போறது, காத்தல் - அவங்க அவங்க முடிஞ்சாமாதிரி எடுத்துகிட்டு போயி அவங்க வீட்டுல safeவா வைக்கறது, காத்த வகுத்தல் - சுருட்டின பணத்தை தன் மக்கள்(வாரிசுகளுக்கு!) வளர்ச்சிக்கு வழி அமைத்துக்கொடுப்பது.

அப்பறம் அசுரன் சார் உங்க கேள்வி:
//Are you reluctant to mention?//

நான் reluctanta தப்பில்ல, நம்மை காக்க வேண்டியவங்க தான் reluctanta இருக்க கூடாது. என் ஆசையைத்தான் எடுத்து கூறமுடியும்! வேற என்ன பண்ணறது! Economic system நான் படித்துவிட்டு வந்து ஒரு பதிவு போடறேன் என்ன பண்ணவேண்டும். கவலை வேண்டாம் அப்ப கூட நம் அரசியல்வாதிகள் இதே நாடகத்தை போட்டுகிட்டு இருப்பாங்க என்பது என் நம்பிக்கை!!!

//Advertising yourself(that is satiating once inteluctual appreciation)?//

சார் என் தொழில் விளம்பரம் செய்வதல்ல! அப்படி செய்யவேண்டுமானால் அதற்கு இது சிறந்த இடமல்ல!! ஒரு 10 பேர் பார்க்கு என் ப்ளாகில் என்ன விளம்பரம் கிடக்கபோகிறது! நம்ம ஆறுமுகசாமி மாதிரி திருவாசகம் படிக்க கோவிலில் சண்டையிட்டால் நல்ல பத்திரிக்கை விளம்பரமும் கிடைக்கும், தமிழ்மணத்திலும் விளம்பரம் கிடைக்கும்.

//Don't take it personal//

நான் ஒன்னும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கமாட்டேன். நீங்க கேட்பதும் நான் தெளிவு பெற உதவியது! சோ நீங்க கவலை படவேண்டாம்.

//I have great respect on you as very few people like you write about the problems of India and that also in a real perspective.//

இந்த கருத்துக்கு நன்றி. ஏதோ என்னால் முடிந்த முயற்சியே! ராமன் பாலம் கட்டும் போது அனில் உதவிய அளவுக்கு உதவினாலும் எனக்கு சந்தோஷமே!!!

என் மற்ற பதிவுகளை பார்த்தால் என்னை கொஞ்சமாவது புரிச்சுக்க முடியும் என்று நினைக்கிறேன்.