பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்
ஏன் இந்த நிலை? என்ன தான் உண்மை? இந்த பெட்ரோல் விலையின் சூட்சமம் தான் என்ன? சில இனைய வலையில் இருந்து கிடைத்த சில புள்ளி விவரங்களை இங்கு பார்ப்போம்...
நமது அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் எண்ணை கிணறுகள் மூலம் 35 முதல் 40 சதவிகிதம் வரை பெட்ரோலிய வளத்தில் தன்னிறைவு பெறுகிற நாடு நம்முடையது! உங்களால் நம்பமுடிகிறதா? எல்லாம் படித்துப் பார்த்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம்...
1. ஒரு பேரல் இறக்குமதி செய்யபடும் கச்சா எண்ணை விலை $ 64.84 ( ஒரு பேரல் = 160 லிட்டர்.) எனில், இந்திய ரூ 2918/-
2. ஒரு பேரலில் சராசரியாக 80 முதல் 90 லிட்டர் பெட்ரோல் கிடைக்கும். அது மட்டும் அல்லாது, வெறு சில விலை உயர்ந்த உற்பத்தி கழிவுகளும் கிடைக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ 47.49 (83 கிரேடு) , 48.89 (91 கிரேடு) என பல விலையில் விற்கப்படுகிறது.
3. உற்பத்தி கழிவுகள்: மண்ணெண்ணை, டீசல் , பென்சீன், பெட்ரோலியம் wax , Praffin, எல்லா வகையான Lubricants, நீங்கள் உங்கள் இருசக்கர வகனங்குளுக்கு உபயோகிக்கும் 2T, 3T எண்ணை வகைகள், தார் மற்றும் பல. பெட்ரோல் உற்பத்தியில் கிடைக்கிற கழிவுகளும் விலை உயர்தவைகளே! இவை எல்லாவற்றுக்கும் மேல், பெட்ரோல் உற்பத்தியில் கிடைக்கும் மற்றும் ஒரு கழிவு LPG எனபடும் எரிவாயு.
4. பென்சீன் விமானதின் எரிவாயு. இது லிட்டருக்கு சுமார் ரூ 200 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
5. டீசல் எரிவாயு லிட்டருக்கு சுமார் ரூ 35 வரை விற்கப்படுகிறது.
6. மண்ணெண்ணை லிட்டருக்கு சுமார் ரூ 25 முதல் ரூ 35 வரை விற்கப்படுகிறது.
7. Prafin - இது ஒரு கிலோ சுமார் ரூ 250 முதல் 300 வரை விற்கப்படுகிறது.
8. 2T, 3T Oil - இது ஒரு லிட்டர் சுமார் ரூ 120 முதல் 150 வரை விற்கப்படுகிறது.
9. தொழிற்சாலைகளில் உபயோகிக்கபடும் Lubricants - இது ஒரு லிட்டர் சுமார் ரூ 200 முதல் 400 வரை தரவாரியாக விற்கப்படுகிறது.
10. தார் - இந்த கழிவும் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. இன்னும் பல பொருட்கள் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இதில் உண்மையில் வீணாய் போகும் வாயுதான் நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தபடும் LPG. இது பல வகையாக பிரிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் மற்றும் உணவகம் போன்ற வியாபார உபயோகத்துக்கு ஒரு விலையும் ( ஒரு கிலோ ரூ 45 -60 ) , வீடுகளில் சமையலுக்கு ஒரு விலையுமாக (சுமார் ஒரு கிலோ ரூ 20 -25க்கு) விற்க்கபடுகிறது.
சில Encyclopedia வலையிலிருந்து கிட்டிய தகவல் படி கச்சா எண்ணையில் சுமார் 88 சதவீதம் எரிவாயுவாக, மீதம் உள்ள 12 சதவீதம் Lubricating oil, Paraffin wax, Plastic, Tar என பல உபரி பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு கூத்து என்னவென்றால் 160 லிட்டர் கச்சா எண்ணை சுமார் 170 லிட்டர் பெட்ரோலியப் பொருட்களை நமக்கு தருகிறது (நன்றி: American Petroleum Institute)
இப்படி, கச்சா எண்ணை ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பணமாக்கப்படும்போது, எண்ணை நிறுவனங்கள் எப்படி நஷ்டத்தில் இயங்கமுடியும் என்று எனக்கு வரும் அதே சந்தேகம் உங்களுக்கும் வரலாம். சில இணைய தளங்கள் மூலம் கிடைத்த தகவல்படி, எனது அறிவுக்கு எட்டியவரை...- இந்திய அரசாங்கம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணைக்கு 63% (23 per cent + Rs 7.50 per litre) வரி விதிக்கிறது. அதாவது, ஒரு பேரலின் விலை ரூ 2918 எனில், அதற்கு நமது அரசாங்கம் விதிக்கும் இறக்குமதி வரி ரூ 1839. ஆக இறக்குமதிக்குப்பின் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை ரூ 4757! அத்துடன் விடவில்லை.
- எண்ணை நிறுவனம் உற்பத்தி செய்த பெட்ரோல் மற்றும் அதன் கழிவுகளுக்கு, மத்திய அரசு விற்பனை வரி வேறு விதிக்கிறது. அதுவும் சாதரன வரி அல்ல. 25% முதல் 30% வரை! அத்தோடு விட்டதா என்றாலும் இல்லை!
- இந்த பெட்ரோல் மாநிலங்களுக்கு செல்லும் போது, அங்கு மாநில அரசு 20% முதல் 30% வரை விற்பனை வரி விதிக்கும். ஆக 100%-க்கு மேல் இறக்குமதி மற்றும் விற்பனை வரிகள் விதிப்பப்படுகின்றன.
- எண்ணை நிறுவனங்கள் படு ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றன. உதாரணதுக்கு - IOCயில் ஒரு கார் ஓட்டுனர் சுமார் ரூ 20,000 சம்பளமாக பெறுகிறார். நம்ம ஊரு கால் Taxi ஓட்டுனர் ரூ 2,000 சம்பளதுக்கு படாத பாடுபடுகிறான். ஒரு IT நிறுவனதின் செலவுகளை மிஞ்சுகிறது இந்த எண்ணை நிறுவனங்களின் செலவுகள்.
உண்மை இப்படி இருக்க, அரசுகள் நமக்கு மானியம் வழங்குவதாகவும், அதனால் அரசுக்கு பளு கூடுவதாகவும் கூசாமல் கூறுகிறார்கள்!
என் அறிவுக்கு எட்டிய வரை, என் கணக்கும் சரி என்றால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 20 முதல் 22 வரை ஆகலாம். ஏனென்றால், அமெரிக்காவில் மானியங்கள் கிடையாது, அங்கெல்லாம் எண்ணை நிறுவனங்களை அரசு நடத்தவில்லை, தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க மாட்டார்கள். அவர்களால் ரூ 21 க்கு ஒரு லிட்டட் பெட்ரோல் வழங்க முடியும் என்றால், நிச்சயம் நாமும் ஏறத்தாழா அந்த விலைக்கே தயாரிக்க முடியும் என்பது என் கூற்று.
இந்த வலைபதிப்புக்காக நான் பல இணையங்களை வலை வீசி தேடினேன், சில சுறாகள் சிக்கின. அதில் ஒன்று OPEC.ORG (Organization of the Petroleum Exporting Countries) கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.
அந்த வலையத்தை அலசிய போது, சில புள்ளி விவரம் என்னை வியக்க செய்தது! அதில் ஒரு பகுதி Who gets what from imported oil? இறக்குமதி கச்சா எண்ணையால் யாருக்கு லாபம்?
அவர்களுடைய ஆய்வு துறை (Research Division, OPEC, Vienna, Austria, 2001) செய்த ஆய்வில், கடந்த 1996 முதல் 2001 வரை உள்ள புள்ளிவிவரம்:
1. ஏற்றுமதி கச்சா எண்ணையால் OPEC நாடுகள் சுமார் $850 மில்லியன் சம்பதிக்கும் வேலையில் இறக்குமதி செய்யும் நாடுகள் (அரசுகள்) சுமார் $1.3 ட்ரில்லியன் (Trillion) (G7 நாடுகள் மட்டும்) வரியின் மூலம் சம்பாதிக்கிறது, OPEC நாடுகள் தங்கள் எண்ணை வளத்தை விற்று வருவாய் ஈட்டும் நேரத்தில் இறக்குமதி செய்யும் அரசுகள் வரியாக இருமடங்கு சம்பாதித்து விடுகிறது. இதில் இந்திய அரசும் சளைத்தவர்கள் அல்ல! இந்திய அரசும் UKக்கு இணையாக வரி விதிக்கிறது! இது என்ன கூத்து? இது பகல் கொள்ளையா? இதை படித்தபோது எனக்கு ஒரு பழமொழி ஞபகத்துக்கு வருது, சுண்டக்கா கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்பார்களே இது தானா அது? அட சுமை கூலினு கூட சொல்ல முடியாது இந்த வரியை, சுமை கூலி உழைபவனுக்கு கொடுக்கும் காசு. இந்த காமெடிக்கு ஒரு அளவு வேண்டாமா?
2. G7 நாடுகளில் பெட்ரோல் விலை புள்ளி விவரங்கள்:
அமெரிக்கா - ரூ 21
கனடா - ரூ 21.6
ஜப்பான் - ரூ 44.5
இங்லாந்து - ரூ 53.55
என்று நீள்கிறது, இதில் வரியின் பங்கு தான் அதிகம். மேலே உள்ள படத்தில் அதன் Break-up உள்ளது பாருங்கள்! நீல நிறம் தான் கச்சா எண்ணை விலை, மஞ்சள் நிறம் கச்சா எண்ணையை பெட்ரோல் எடுப்பதற்காகும் செலவு, சிவப்பு தான் நம் அரசு நம்மேல் சுமத்தும் வரி!!!! இதில் இந்திய பெட்ரோல் விலை இங்லாந்தின் விலைக்கு நிகராக இருக்கும்.
3. மேலும் OPEC வலையில் ஒரு தகவல்:
" A Taxing Business.... The real burden on the consumer is taxation, and the real profiteers are the governments of the consuming countries. "
கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நுகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.
நானும் என் பங்குக்கு சில பெட்ரோல் விலை புள்ளி விவரங்களை என் வெளிநாட்டு நண்பர்களிடம் கேட்டு பெற்றேன்:
பெட்ரோல் விலை அடைப்பில் அதன் கிரேடுகளும்:
அமெரிக்கா - ரூ 22 (87 கிரேடு)
பர்மா (மியான்மர்) - ரூ 28.5 (83 கிரேடு)
மலேசியா - ரூ 23 (83 கிரேடு)
சிங்கப்பூர் - ரூ 41 (92 கிரேடு)
ஆஸ்ட்ரெலியா - ரூ 25
பாகிஸ்தான் - ரூ 27
ஒரு விலை கூட இந்தியாவில் விற்கப்படும் விலைக்கு பக்கம் கூட வரவில்லை... ஏன் இந்த கூத்து? ஒருவேளை நாம் இன்னும் இங்லாந்தின் வரி கோட்பாடுகளை பின் பற்றுகிறோமோ?
இந்த புள்ளிவிவரங்கள் நம் நாடு பத்திரிக்கைகளுக்கு தெரியவில்லையா? ஏன் அவர்கள் மக்களுக்கு அதை கொண்டு செல்வதில்லை? என்ன தான் நடக்கிறது? இதயை தடுப்பது யார்?
இது ஒரு புறம் இருக்க, திரு. மணிசங்கர் போன்ற மந்திரிகள் சொல்லும் சுடு சொற்கள்,
" பெண்கள் சினிமா போவதையும், சேலை வாங்குவதையும் குறைத்துக்கொண்டால் காஸ், பெட்ரோல் போன்றவை எளிதில் வாங்க முடியும்"
நாம சினிமா போவதும், ஆடைகள் வாங்குவதும் கூட இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளில் கண்ணை பறிக்கிறது போலும்? இவரால் இதை தன் மனைவியிடம் சொல்லுவாரா? இவர்கள் ஏன் நம் பணத்தில் உளாவரும் குளிர் சாதன வசதி படைத்த கார்களில் செல்வதை நிறுத்தலாமே? நம் பணத்தில் விமான பயணத்தை நிறுத்தலாமே? வெட்டி பேச்சு நடத்துவதை நிறுத்தலாமே?
இத்தனைக்கும் மேலாக, அவர்கள் சொல்லும் மானியம் என்னும் வார்த்தையை கேட்க்கும்போது. நம் தலையில் பன்முனை வரி சுமத்தி,அதில் பிச்சையிடுவதுபோல் கதைவிடுவதை நாம் உணரவேண்டும். நமக்காக பேச நாம் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினரும் வரமாட்டார், பாராளமன்ற உறுப்பினரும் வரமாட்டார். ஏனென்றால் அவர்கள் காசு கொடுத்து பெட்ரோல் வாங்கி இருக்க மாட்டார்கள்.
நம்முடைய கேள்விகளுக்கு இந்த அரசியல்வாதிகள் பதில் சொல்ல வேண்டிய காலம் மிக விரைவில் வரும், நம் ஆதங்கம் கரையை ஒரு நாள் கடக்கும்.
இனியும் விலை கூடினால்,மாட்டு வண்டிகள் வீதிக்கு வரகூடும், அது மட்டும் போதாது, மக்களும் வரவேண்டும், நேபாளம் கண்டது, இந்தியாவும் காணட்டும்.
(பி.கு: இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பல வலைப்பதிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டு இந்திய மக்களுக்கு ஒரு வலையில் தாருவதற்கான முயற்சியே. Thanks to OPEC.org, wikipedia.org, home.att.net/~cat6a, adventuresinenergy.com, api-ec.api.org, etc.,)
Comments
//* இந்த எரிபொருள் விலை உயர்வு எங்கெல்லாம் நடுத்தர மக்களை பாதிக்கும்:
1. காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களில் விலையும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில், இந்த சரக்குகளின் போக்குவரத்துக்கு எரிபொருள் இன்றியமைதாத தேவையாகிவிட்டது.
2. நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவைகளான ரெயில், பேருந்து, ஆட்டோ என அனைத்தின் சேவை கட்டணங்களும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது.*//
Pen to piston cost is affected by Petrol pricing. Read this article
http://api-ec.api.org/filelibrary/oilfacts_rgb.pdf to know more :)
வாகனத்தில் உபயோகபடுத்தும் எரிபெருளின் செலவு மிக குறைவே! சிந்திப்போம், அரசுக்கு நம் எதிர்ப்பை தெரிவிப்போம்!!! உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
நன்றி!
-சுந்தர் ராம்ஸ்
விலை குறைத்தால் இவர்கள் எங்கே போய் கொள்ளை அடிக்க முடியும்?????
-----
IT HAS BEEN CALCULATED THAT IF EVERYONE DID NOT PURCHASE A DROP OF PETROL FOR ONE DAY AND ALL AT THE SAME TIME, THE OIL COMPANIES WOULD CHOKE ON THEIR STOCKPILES.
AT THE SAME TIME IT WOULD HIT THE ENTIRE INDUSTRY WITH A NET LOSS OVER 4.6 BILLION DOLLARS WHICH AFFECTS THE BOTTOM LINES OF THE OIL COMPANIES. THEREFORE "THURSDAY SEPTEMBER 22nd " HAS BEEN FORMALLY DECLARED "NO PETROL DAY" AND THE PEOPLE OF THIS NATION SHOULD NOT BUY A SINGLE DROP OF PETROL THAT DAY.
THE ONLY WAY THIS CAN BE DONE IS IF YOU FORWARD THIS E-MAIL TO AS MANY PEOPLE AS YOU CAN AND AS QUICKLY AS YOU CAN TO GET THE WORD OUT. WAITING ON THE GOVERNMENT TO STEP IN AND CONTROL THE PRICES IS NOT GOING TO HAPPEN. WHAT HAPPENED TO THE REDUCTION AND CONTROL IN PRICES THAT THE ARAB NATIONS PROMISED TWO WEEKS AGO?
REMEMBER ONE THING, NOT ONLY IS THE PRICE OF PETROL GOING UP BUT AT THE SAME TIME AIRLINES ARE FORCED TO RAISE THEIR PRICES, TRUCKING COMPANIES ARE FORCED TO RAISE THEIR PRICES WHICH AFFECTS PRICES ON EVERYTHING THAT IS SHIPPED. THINGS LIKE FOOD, CLOTHING, BUILDING SUPPLIES MEDICAL SUPPLIES ETC. WHO PAYS IN THE END? WE DO!
WE CAN MAKE A DIFFERENCE.IF THEY DON'T GET THE MESSAGE AFTER ONE DAY, WE WILL DO IT AGAIN AND AGAIN. SO DO YOUR PART AND SPREAD THE WORD. FORWARD THIS EMAIL TO EVERYONE YOU KNOW. MARK YOUR CALENDARS AND MAKE SEPTEMBER 22nd A DAY THAT THE CITIZENS SAY "ENOUGH IS ENOUGH"
-----
நன்றி!
-சுந்தர் ராம்ஸ்
//நமக்காக பேச நாம் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினரும் வரமாட்டார், பாராளமன்ற உறுப்பினரும் வரமாட்டார். ஏனென்றால் அவர்கள் காசு கொடுத்து பெட்ரோல் வாங்கி இருக்க மாட்டார்கள்.//
:-(
நன்றி...
சும்மா விஜயகாந்த் படத்துலே புள்ளிவிவரம் சொல்றாப்புலே விவரத்தை அள்ளித் தெளிச்சிருக்கீங்க.
இதுக்குப் பின்னாலே இருக்க உங்க உழைப்பு புரியுதுங்க.
நல்லா இருங்க.
ஆமாம். இங்கே எங்கூர்லே பெட்ரோல் விலையைச் சொல்றேங்க.
நம்ம காருக்குப் போடறது unleaded 91
லிட்டருக்கு $1.79 ( இந்தியக் காசுலே 1.79 NZD New Zealand Dollars = 51.8493 INR)
ரொம்ப ஜாஸ்தி. இல்லீங்களா?
இந்த விலைகள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலுக்கு மட்டும்தான்.
ஆனால், இந்தியாவில் 45% தேவைக்கு பயனாவது இந்தியாவில் உள்ளே உற்பத்தியாகும் பெட்ரோல் தான். பாம்பே ஹை மாதிரி இடங்களில் இவை கிடைக்கின்றன.
இவற்றுக்கான அடக்க விலை என்ன தெரியுமா? அதிக பட்சம் 10 டாலர். அதாவது, பேரலுக்கு வெறும் 450 ரூபாய் தான்.
அதாவது, நாம் கொடுக்கும் பெட்ரோல் விலையில் 45% அடக்க விலை கிட்டத்தட்ட தண்ணியை விட குறைந்த செலவு ஆன ஒரு சாமானுக்குதான்.
இதற்கு இவர்கள் மாதாமாதம் கூடி இவர்கள் போடும் வேஷம் ரொம்பவே மோசம்.
வெளிநாட்டுடன் parity வேண்டுமாம் இந்த பெட்ரோல் கம்பெனிகளுக்கு.
நான் கேட்கிறேன். அரசாங்கம் நான் வாங்கும் சம்பளத்தில் வெளிநாட்டுடன் parity வைப்பது தானே. பஞ்சப்படியையே இவர்கள் காலாகாலத்தில் ஏத்த மாட்டேன் என்று சொல்லி ஊழியர்கள் வயிற்றில் அடிப்பார்களாம். ஆனால், பெட்ரோலில் மட்டும் கொள்ளை அடிக்கலாமாம்?
அக்கிரமம்
மிகச்சிறந்த, தரமான ஒரு பதிவு மிக அபூர்வமாக படிக்க நேர்ந்தது. தங்கள் சேவை மேலும் தொடரட்டும்.
நன்றி
சிங்கப்பூர் நிலவரம்.
Unleaded 92 - 51.28ரூபாய்.
Unleaded 98 - 54.41ரூபாய்.
எங்களுக்கு எதுக்கெடுத்தாலும் GST( Goods & Service Tax) என்ற பேரில் 12.5% வரி உண்டு.
எங்கே போய்ச் சொல்ல?
வருமானவரி தனியா தரவேணாம். சம்பளத்துலேயே முதல்லே வரியைப் பிடிச்சுக்கிட்டுதான்
மீதி சம்பளம் கிடைக்கும். அதுலே இருந்து நாம் செலவு செய்யற ஒவ்வொரு டாலருக்கும்
12.5 செண்ட் GST
--Arun S
-Kuppusamy Chellamuthu
Looks like you have put in lot of time in this.I am sure this will bring awareness among every one.
I agree with your numbers on central excise duty.It used to be around 35%.
I appreciate you for an insightful analysis.
BTW In US in some states it is around 33 to 35 RS perliter(Regular grade)( Here it is now 3 USD / Gallon ).
I am looking forward to see your solutions for this problem, because government is getting this money to write off so many things, to give rice at 2RS/Kilo, what not.....(Poor people they don't know, indirectly they are taxed)
POLITICIANS ARE SUCKERS !!!!
with best
CT
வாழ்த்துக்கள். தொடரவும்.
-- Mathuranathan.V
The solution for this will be switching over to an alternate fuel like biogas, electricity, solar energy, etc.,
I agree that Govt. should be forced to cut down the tax. I also want Govt. intervention in oil pricing removed, and a regulator brought in, if needed.
சிறப்பான பதிவு.
This anti people policies of government not just stops with Petrol.
They decided to wipeout customs tax in near future and planing to make the country a Service Tax regime.
And they also plan to increase the Service tax one percent per year(All these are words from P. Chidambaram).
And they are planing for Capital convertibility Act, which gave a bitter experience to South asain countries during 1997 - 2000.
VAT, Patents Rights are Acts to remove poor people and Indian capitalists from the paths of MNCs.
While country is starving for Water they impliment water privatisation.
While our country is declining in social indicators they say we are developing.
There is a proposal for Income Tax exemptions such as HRA, Insurance etc(this you can verify in income tax department website).
How long will one believe this pseudo democratic setup.
How long one will watch the parliament as a playing ground for the politicians(none of the above mentioned anti people policies were discussed in parliement).
Their motive can be simply said by Geroge Bush's words when he came to India.
"India is important to us as it is the market of 30 crore people.."
The result of privatisaton could be to serve this 30 crore(this is evident when katrina hit america, where texas state unable to serve the victims. because all services are privatised there).
what about the remaining 90 crore?
They will suicide as it is happeing in rural area and small scale industries(retail, gold smiths etc).
But we won't let our people die.
Who create each and everything the country today boast off.
//மக்களும் வரவேண்டும், நேபாளம் கண்டது, இந்தியாவும் காணட்டும்.//
India will become Nepal one fine day.....
We like minded people will work togather for it....
You can read some of my articles on social issues from my blog.
Vazthukkal,
Bonapert.
ஆனால் இதை வைத்து ஆதாயம் தேடும் அரசியல் நிலைகளைப் பாருங்கள்:
1) West Bengal & Kerala மற்றும் பிற மாநில தேர்தலுக்காக இது வரை இந்த விலை ஏற்றத்தை ஒத்திப் போட்டார்கள் என்றும் இனியும் தள்ளிப் போட முடியாது என்றும் செய்திகள். இது நியாயமான பொருளாதார நடவடிக்கை என்றால் ஏன் முன்பே செய்ய வில்லை? ஓட்டு போய் விடும் என்றுதானே?
2) கம்யுனிஸ கட்சிகள் போராட்டம் என்று பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, அவர்கள் இதில் முழு மூச்சோடு செயல் பட்டார்களா? கம்யுனிஸ கட்சிகள் இந்த ஏற்றத்தை நிஜமாகவே எதிர்கிறார்கள் என்றால், ஏன் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்ளக் கூடாது?
3) காங்கிரஸ் கட்சிக்கு இந்த விலை ஏற்றத்ததில் உடன்பாடு இல்லையாம். இது குழந்தையையும் கிள்ளி விட்டு விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இல்லையா? இதில் ஆதாயம் தேடுவது யார்? சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டே போகிறது என்றும் அதுவே இந்த எதிர்ப்பு என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
4) செல்வி.ஜெயலலிதா ஆட்சியின் போது, திரு.கருணாநிதி, மாநில அரசு விற்பனை வரியை குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட சுமையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். இப்போது அவர் அதை ஏன் இன்னமும் செய்யவில்லை? தனக்கு ஒரு நீதி, மற்றவருக்கு வேறொன்றோ?
http://balablooms.blogspot.com
Thank you for an informed take on this issue.
The text in your post appears garbled in Firefox. However the text in comments are appearing perfect. Aren't you using Unicode?
FireFox is not recognising words "justify" command in unicode. I am trying to avoid it. Let me find solution by next post :)Its good in IE.
தவறான முடிவு நன்பர்/
ஹே ராம் அன்பே சிவம் தேவர் மகன் அழியாத கோலங்கள் குருதிப்புனல் அமைதிப்படை வாலி????
இது எல்லாம்.........
காந்தி துதி , முடநம்பிக்கை ,சாதி திமிர் , வக்கிரம்,
இந்தியா 2020 - முழுபொய்
நாடு மிண்டும் அடிமை ஆகிறது...
u see my blog
and
visit www.tamilcircle.net
மேலும் எனக்கு பிடித்த படங்கள் பற்றிய தங்களின் விமர்சனங்களுக்கு என் விளக்கம் இதோ.
என் எண்ண பதிவுகள் நிரம்பி உள்ள ஹேராமில் எனக்கு பிடித்தது விசயம் அதில் காந்தியின் உண்மை செயல்பாடுகள், காந்தியை பற்றிய விமர்சனங்கள், Climaxசில் மட்டும் தான் காந்தி நல்லவர் என்று சொல்லி இருப்பார் கமல்(காந்தி நல்லவர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை My Experiments with Truth படித்த பிறகு!)
அன்பே சிவம் - முதலாளித்துவ கொள்கைக்கு எதிர்ப்பு, சமூகத்தை சீர்திருத்த ஒரு தனி மனிதன் எடுக்கும் முயற்சி, என பல நல்ல விசயங்கள் உள்ளது அதைத்தான் ரசித்தேன்.
தேவர் மகன் - ஒரு சமூகத்தில் உள்ள பிரச்சனைகள், அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவன் திருத்த முயல்வது நல்ல விசயம் தானே இதுல எங்க சாதி திமிர் நல்லதுன்னு சொன்னாங்க!
அழியாத கோலங்கள் - இதுவும் ஒரு சமூக, சமுதாய பிரச்சனையை கவித்துவமாய் சொல்லியிருப்பார்கள் அதனால் பிடிக்கும்.
குருதிப்புனல் - திவிரவாத ஒழிப்பு என்ற குறிக்கோளுடன் களம் இறங்கும் இரண்டு காவல்துறை அதிகாரிகளின் கதை. தமிழில் வந்த ஆங்கில படத்துக்கு இணையான படம் என்பது என் கருத்து.
அமைதிப்படை - அரசியலில் சாக்கடைகள் எவ்வாறு உருவாகிறது! அரசியலின் இன்றைய நிலை என இந்த படத்தில் அழகாக காட்சிக்கு காட்சி சொல்லியிருப்பார்கள்!
வாலி - ஹீ! ஹீ!! அது ஏனோ தெரியவில்லை ஒரு வித்தியாசமான படம் என்ற முறையில் அது எனக்கு பிடிக்கும். (ஒரு வேளை திருமணத்துக்கு பின் பார்த்த முதல் படம் என்பதால் இப்படி இருந்திருக்குமோ!!)
//*இந்தியா 2020 - முழுபொய்*//
ஐயா! இந்த புத்தகத்தை முழுமையா படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் பிளீஸ்.
//*நாடு மிண்டும் அடிமை ஆகிறது...*//
இது உண்மை என்ற கருத்து எனக்கும் உண்டு! அதற்காக தான் இந்த பிளாக்!
இங்கு அந்த நிலைப்பாட்டை அரசு எடுக்கும் போது நான் என் பங்குக்கு சாடிக்கொண்டிருக்கிறேன்.
ok
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!!
CPI and CPM நிலையும்
ஒன்று என எடுத்து கொள்ளலாமா ?
//*இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும்
CPI and CPM நிலையும்
ஒன்று என எடுத்து கொள்ளலாமா ?*//
CPI and CPM முழு நேர வியாபாரிகளாகிவிட்டதாக தான் எனக்கு தோண்றுகிறது??!! எந்த முதாலாளித்துவ கொள்கையை எதிர்த்தார்களோ அதை இன்று ஆதரிப்பது போல் பெங்காலில் வேலைகள் நடக்கிறது! அவர்களை மக்களுக்கு நன்மை செய்ய நாம் பாராளமன்றத்துக்கு அனுப்பினால் அவர்கள் காங்கிரஸுடன் கை கோர்த்து 6 முறை பெட்ரோல் விலை ஏற்றிய போது வாயளவில் போராட்டம் செய்து! மக்களுக்கு நண்மையை கருத்தில் கொள்ளாமல் வாய்ப்பேச்சில் வீரர்கள் ஆனதில் எனக்கு வருத்தம். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது இவர்கள் போராட்டம் செய்வதும், உடனே காங்கிரஸ் நவரத்தின நிறுவனங்களான அரசு நிறுவணங்களை விற்றுவிட போகிறோம் என்று சொல்வது! உடனே பெட்ரோல் மேட்டரை கைவிட்டு அந்த அரசு நிறுவணங்களை காப்பற்ற போவது போல் பாவலா காட்டுவது! பின்னர் பெட்ரோல் மேட்டரை பேசுவதையே மறந்துவிடுவதும், பார்க்கும் போது CPI and CPM மற்றும் காங்கிரஸ் இனைந்து நடத்தும் நாடகமாகவே எனக்கு தோண்றுகிறது (ஆதாரம் epaperகளை ஆராய்ந்து பார்த்தால் புரியும்). CPI and CPM உண்மையில் மக்கள் ஆதரவு கொள்கையை கைவிட்டுவிட்டதாக எனக்கு தோண்றுகிறது.
நாடகங்கள் தினம் அரங்கு ஏறுகிறது! சமீபதில் வந்த நாடகம் பெட்ரோல் விலை உயர்வும், அடுத்து CPI and CPM போராட்டம், அடுத்து காங்கிரஸ் அரசின் NLC & NALCO பங்கு விற்பனை அறிவிப்பு, CPI and CPM பங்கு விற்பனை எதிர்த்து போராட்டம், CPI and CPM பெட்ரோல் விலை உயர்வு போராட்டம் கைவிடப்பட்டது, காங்கிரஸ் அரசு NLC & NALCO பங்கு விற்பனை வாபஸ் அறிவிப்பு, CPI and CPM வெற்றி கொண்டாட்டம், இதில் உண்மையில் முழு புசனிக்காயான பெட்ரோல் விலை ஏற்றம் மறைக்க பட்டது.
ஐயோ! ஐயோ! இவர்கள் நம்மை இன்னும் சின்னபுள்ள தனமாகவே நினைச்சுகிட்டு இருக்காங்க போல!! இது புரியாமல் போக மக்கள் என்ன முட்டாள்களா??
It is very nice and powerful collection. Hats off to you and keep it up.
I think, Bio-Diesel will become a very good alternate for Conventional fuels. When we start to use the bio-diesel it will automatically become a money save for the individual as well as for the nation. What do you think..?
ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஏன் மூட முடிவெடுத்தார்கள் ?
அவர்கள் நினைத்தால் பொது நிறுவனங்களைவிட குறைந்த விலைக்கு கொடுக்கலாமே? விளக்கமான பதிவு எழுதினால் புண்ணியம் :-)
அருமையான தகவல்கள்.
வாழ்த்துக்களுடன்,
அசுரன்