Posts

Showing posts with the label இந்தியா

வீடியோ - உயிர் போவதை பார்த்ததுண்டா!!!

நீங்க யாராவது வீடியோவில் ஒருவர் இறப்பதை பார்த்ததுண்டா? இங்கே பாருங்க இந்த இந்த வீடியோவில்! நொடிப்பொழுதில் அனைவரின் கண்முன்னே ... ஒரு மன்நிலை சரியில்லாதவன் புகைவண்டியின் மேலேறி அதன் மேல் உள்ள மின்கம்பியை பிடித்த கொடுமை :( ஒரு நண்பர் எனக்கு அனுப்பியது ...

இந்திய குடிமகனானுமா?

நீங்க எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை, தீவிரவாதியா இருந்தாலும் பரவாயில்லை!!!! உங்களுக்கு எங்க மண்ணின் மைந்தர்களும், அரசு இயந்திரங்களும் இந்திய குடியுரிமை வாங்கி தராங்கோ!!! அதுவும் வெறும் ரூ. 32,500/- இருந்தா போதும்!!!! குடியுரிமைன்னா சும்மா இல்லைங்க! 1. ரேஷன் கார்டு 2. பிறப்பு சான்றிதழ் 3. PAN Card 4. Pass Port Rs 7,500/- 5. படிப்பு சான்றிதழ் 6. Voter ID Card - Rs 1,800/- என்று எல்லா மேட்டரும் உண்டு... அடுத்த மாசம் முதல் வேணும்னா ரேஷன் கூட வாங்கிக்கலாம்!!! ஆள் வரவேண்டிய தேவையில்லை! சும்மா யார்கிட்டயாவது 32,500 ரூபாயை கொடுத்து அனுப்பினா போதும்! எல்லா மேட்டரும் ரெடி செய்து தர ஆள் இருக்கு! பாஸ்போர்ட்க்கு Verification கூட இல்லாம ஈஸியா வாங்கித்தராங்க! ஜாலி பண்ணுங்க! IBN Live முயற்சியால் வெளிவரும் இந்த கொடுமையை பாருங்க! லஞ்சம் எப்படி எல்லாம் கொழுத்து போயிருக்குன்னு பாருங்க! அட இதெல்லமாம் மாமூலான விசயம்ன்னு நம்ம முதல்வர் மாதிரி ஸ்டேட்மென்ட் தந்திடாதீங்க ப்ளீஸ் :) இது அரசுகளுக்கு தெரியுமா? அரசுகள் ஏன் இது போன்ற வழியை அடிக்க வழிவகை செய்யவில்லை!! அரசுகளின் அலட்சிய போக்கு நாளை தீவிரவா...

சுதந்திரம் யாருக்காக?

கடந்த 15ஆம் தேதி நாம் நம்முடைய சுதந்திரத்தின் 60 வருடங்கள் கடந்ததை கொண்டாடினோம்! அறுபது ஆண்டுகளில் நாம் எவ்வளவு சுதந்திரம் அடைந்திருக்கிறோம் என்று எனக்கு புரியவில்லை! ஆங்கிலேயர் ஆட்சிக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றே ஒன்று அன்று ஊழல் குறைவு, இன்று இவர்களால் பெருக்கெடுத்து ஓடுது ஊழல்!! இவருடைய ஆட்சியிலும் சர்வாதிகாரம் இருந்தது, இருக்கிறது!!! இன்று இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்தா, என்ன கொடுமை சார் இதுன்னு தான் சொல்லத்தோனுது! பீஹாரின் அரசு இயந்திரங்கள் எங்கள் கண்காணிப்பில் தான் இருக்கிறது! விரைவில் அவை எங்கள் கட்டுப்பாடுக்குள் வரும் என்று சில தினங்களுக்கு முன் Maoist Commander அறிவிக்கிறார்! அதுவும் ஒரு Times Now போன்ற ஒரு தொலைக்காட்சியில்!!! மாவோஸ்டுகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்துங்க!!! மனிப்பூரில் 3 ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வீட்டிலேயே 12 தீவிரவாதிகளை பதுங்க வைத்து பிரிவினைவாதத்தை வளர்க்கவும், பாவப்பட்ட மக்களை கொல்லவும், அரசு இயந்திரங்களை அழிக்கவும் உதவி செய்யறாங்க! அப்ப தீவிரவாதிகளுக்கும், ஆளும...

திருத்தமுடியாதுடா உங்களை!!!

ஜெயலலிதா மது அருந்தியதாக இரட்டை அர்த்தத்தில் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டது, கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று காலை முதல் பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிமுக எம்எல்ஏ கைது! ஆடுங்கடா ஆடுங்க... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை. அரசியல்வாதிகள் கையில் பணமும், அதிகாரமும் இருக்கு என்றால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொளுத்திப்போட்டு என்ஜாய் பண்ணலாம்! அன்று அவர்கள் தினகரன் கருத்துக்கணிப்பு போட்டப்போ, அழகிரி & கோ கலாநிதி மாறனையோ! தயாநிதி மாறனையோ அடிக்கவில்லை, கொல்லவில்லை! இன்று இவர்கள் சொன்னவரை ஒன்னும் செய்யவில்லை! எந்த நாயாவது சொன்னவனையோ அல்லது செய்தவனையோ கொல்லறீங்களாடா? பாவம் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களையும், காவல் காக்கும் காவலர்களும் தான் கிடச்சாங்களாடா? திரும்ப அடிக்கமாட்டாங்க என்ற தைரியம்! மக்களை விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை காலம் வேண்டிவரும் ?? இந்த பாவமலைகள் இந்தியாவை விட்டொழிக்க!!

குலக்கல்வி - என்ன கொடுமை சார் இது!!!

இது என்ன கொடுமைன்னு புரியல... குழந்தைக்கு நாக பாம்பிடம் ட்ரெயினிங் கொடுக்கறாங்களாம்??!!! ஒரு சின்னக் குழந்தையை இப்படி செய்து தான் குலத்தொழில் கற்றுக்கொடுக்க வேண்டுமா?? சிறுபிள்ளையை பாம்புடன் விளையாட விட்டு வீடியோ பிடிக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள்!!! என்ன தான் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருந்தாலும்!!?? இந்த அறியாமை இருளில் இருக்கும் மக்களுக்கு என்று தான் விடிவு காலமோ!!!

வீரத்திருமகன் உதித்த தினம்!!

Image
"உங்கள் ரத்ததை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரம் வாங்கித்தருகிறேன்" என்று சொல்லி, இந்திய சுதந்திர போராட்டதை உயிர்பித்தவனின் பிறந்தநாள் இன்று!! தன்னலமற்ற ஒரு சில தேசத் தலைவர்களில் முன்னவரான நேதாஜியின் பிறந்தநாள் இன்று. பூரண சுயராஜ்ஜியம் பிரகடணம் செய்து வெள்ளையருக்கு சுந்தந்திர போராட்டத்தின் வன்மையை காட்டியவரின் பிறந்த நாள் இன்று! தன் சுயநலத்தைவிட தேசமே பெரியது என்று தன் ஐ.ஏ.எஸ்க்கு இணையான ICS பதவியை துட்சமென தூக்கி எறிந்து இந்திய சுதந்திரக்கு தன் உதிரத்தை சிந்தியவரின் பிற்ந்தநாள் இன்று!!! இந்தியாவின் முதல் சுதந்திர ராணுவப்படையான இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதில் ஒரு லட்சம் இந்தியரை படையில் இணைத்து சுதந்திர வெறியை இந்தியருக்கு செலுத்திவரின் பிறந்த நாள் இன்று! தனித்து ஒரு தலைவனாய் நின்று ஜப்பானின் துணையுடன் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் மனிப்பூர், நாகாலாந்து பிரிட்டீஷாரிடமிருந்து கைப்பற்றி அந்தமானை தலைநகரமாக கொண்டு, சுதந்திர இந்தியாவை(ஆஸாத் ஹிந்த்) பிரகடணம் டிசம்பர் 30, 1943ஆம் ஆண்டு இந்திய தேசத்தின் சுதந்திர கொடியை ஏற்றியவரின் பிறந்தநாள் இன்று!!! முதல் சுதந...

இந்தியா அடுத்த மைல்கல்லை தாண்டியது!

Image
இந்தியவின் ISRO அடுத்த ஒரு சாதனையை செய்து, மேலும் ஒரு மைல் கல்லை இன்று தாண்டியது! இந்திய வானியல் அறிவியல் ஆராய்ச்சி கழகதின் PSLV-C7 பத்தாவது பயனம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து டிஸ்கவரி போன்ற பல முறை உபயோகிக்கப்படும் ஒரு விண்கலம் நம் இந்தியாவிடமும் இருக்கிறது என்ற பெருமையை நமக்கு வாங்கி தந்துள்ளது ISRO. இந்த முறை மற்றும் ஒரு சிறப்பு அம்சம், நான்கு செயற்கை கோள்களை இது எடுத்து சென்று விண்ணில் தத்தம் பாதையில் பொருத்திவரும் என்பதே சிறப்பு. அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகளுக்கு அடுத்த நிலையை இஸ்ரோ பிடித்துள்ளது! இது தாங்கி சென்ற நான்கு செயற்கை கோள்கள்: CARTOSAT-2 - இந்தியாவின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சிக்கும், GIS வசதிக்காவும் தயாரிக்கப்பட்டுள்ளது. SRE-1 - Metallurgical சோதனை மற்றும் Biomimetic சோதனைகளுக்காகவும். இந்தோனேஷியாவின் LAPAN-TUBSAT அர்ஜென்டினாவின் PEHUENSAT-1 என்ற நான்கு செயற்கைகோள்களை தாங்கி சென்று, அனைத்து செயற்கை கோள்களையும் அதனுடைய பாதையில் வெற்றிகரமாக சேர்த்து சாதனை கண்டுள்ளது. இந்த வெற்றி நம் இந்தியாவை ஆசிய நாடுகளின் விண்வெளி ஆ...