நாளை வலைப்பதிவர் சந்திப்பு - மறந்திடாதீங்க மக்களே!

நன்பர்களே!

நாளை மதியம் 3:30 மணிக்கு வலைப்பதிவர் "சந்திப்பு". மறக்காம வந்திடுங்க!

வலைப்பதிவின் அடுத்த கட்டத்தை தொட இந்த சந்திப்பு ஒரு அஸ்திவாரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்க! சாதி, மத, இன பாகுபாடுகளை தாண்டி மனிதராக ஒன்றினைவோம்! சமூகத்துக்கு நம்மால் இயன்ற நன்மைகளை செய்ய துவங்குவோம்!

இடம்: நடேசன் பார்க், தி.நகர்.

நேரம்: சரியாக மதியம் 3.30 முதல் மாலை: 7.30 வரை.

நாள்: ஏப்ரல்.22'2007, ஞாயிற்றுக்கிழமை.

வருகையை உறுதி செய்ய நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாம். என் கைபேசி 0-99400 45507 எண்ணுக்கும் அழைக்கலாம்.

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

காஞ்சி சேவை மையம் உண்மையில் நடப்பது என்ன?

என் இட ஒதுக்கீடு பதிவில் திரு.ஹரி எழுதிய விளக்கங்களில் உண்மை நிலை என் அறிவுக்கு எட்டிய வரை:

என் கேள்வி:
////பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//

இது எங்கே நடக்குது ஹரி??!! ஆச்சரியமா இருக்கே?? கொஞ்சம் எடுத்து சொல்லுங்க?? ஒன்னும் புரியலை?? யார் செய்யறாங்க? எங்க செய்யறாங்க?? (கலாய்க்க இல்லைங்க சீரியசா கேட்கிறேன்)//
என்ற என் கேள்விக்கு விளக்கம் அளித்த பதிவில் ஹரி கூறிய சில விசயங்கள் சரி இல்லை என்று தோண்றுவதால் இந்த பதிவு. இந்த வாதம் அந்த பதிவில் வைத்துக்கொண்டால் அந்த பதிவின் நோக்கம் திசை மாறும் என்ற எண்ணத்தால் தனி பதிவாக வைக்கிறேன்.

ஆனால் அவர் சொன்ன லிஸ்டில் இருக்கும் பல மையங்களுக்கு நான் நேரடியா போயிருக்கேன், இவை எதுவும் சேவை அடிப்படையில் நடப்பவை அல்ல என்றே தோண்றுகின்றன, எல்லாம் காசுக்கு வேலை செய்கிறது என்று, அந்த ட்ரஸ்ட் நடத்தும் நிறுவங்களுக்கு போய் பார்த்தாலே தெரியும்.

சில உதாரணங்கள்:

1. சின்மயா மிஷன் பள்ளி: இங்கு LKG சேர்க்க சுமார் 15 ஆயிரம் ரூபாய் நன்கொடை தேவை, பள்ளி டேர்ம் பீஸ் சுமார் ரூ.2300 (மூன்று மாதத்துக்கு!) இதில் எங்கே வருது சேவை!! SBOA பள்ளிகளும் இதே அளவு வசூலிக்கிறது, இவை சேவை இல்லை ஹரி, காசு சம்பாதிக்கும் முறை!

2. Child Trust, சென்னை: இங்கும் தொட்டாலே காசு, ரெஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் முதல் சேவை கட்டணம் வரை எதும் ஒரு சாதரண மருத்துவமணையில் சேவைக்கட்டணத்துக்கு குறைவு இல்லை, மேலும் காஞ்சி மடம் இந்த நிறுவணத்தை எடுத்து நடத்துவதற்கு முன் இருந்த நிர்வாகம்(Dr. M.S.Ramakrishnan அவர்களின் கீழ் இருந்த நிர்வாகம்) மிக குறைவான சேவை கட்டணம் அதாவது 20 -30 ரூபாய் வசூலித்து வந்தது! காஞ்சி மடம் இந்த மருத்துவமணையை எடுத்து நடத்த ஆரம்பித்ததும் முதலில் வசதிகளை அதிகப்படுத்தாமல் சேவை கட்டணத்தை ரூ.100 -125 வரை ஆக்கியது! அதனாலேயே அங்கு போவதை நான் நிறுத்தினேன். ரூ.பத்து இருந்த ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம், ரூ.100 ஆனது, இப்ப என்ன சொல்லறீங்க ஹரி!! இதுவா சேவை??

3. சங்கரா மிஷன் மருத்துவமணை: இதுவும் ஒரு சேவை மையம் கிடையாது, ஒரு சாதாரண மருத்துவமனையில் வாங்கும் அத்துனை சேவை கட்டணம் குறைவில்லாமல் வாங்கப்படுது! இதுவா சேவை! தொட்டால் காசு என்ற நிலையே உள்ளது! என் நெருங்கிய உறவினர் அங்கு மருத்துவராக வேலை செய்தார், அவர் இருக்காறே ஏதோ பார்த்து பில் போடுவாங்கன்னு ஒரு ஹெல்த் செக் கப்க்கு போயி, பில் பார்த்து நொந்து போனவன் நான்!!

இந்த சங்கரா ட்ரஸ்ட் நடத்தும் எந்த நிறுவணம் சேவை நோக்கத்தோடு வேலை செய்யுதுன்னு சொல்லுங்க!! பணக் கொள்ளை மட்டுமே முக்கிய நோக்கமாகிவிட்டதுன்னு எனக்கு தோணுது! முன்பு காஞ்சி மடத்துக்கு நெருக்கமான என் நண்பர் ஒருவர் சொல்லுவார், பெரியவர் இருக்குவரை இது போன்ற கொள்ளை இல்லை, ஜெயேந்திரர் வந்த பிறகு தான் கல்லூரி, பள்ளின்னு பணம் கொள்ளை அடிக்கு வழிமுறைகள் உள்ளே வந்ததாக!!! அந்த காசு யாருக்கு போகுது! என்ன ஆகுது என்பதை பற்றி இங்கு கருத்து சொல்ல வரவில்லை! அவை சேவை மையங்கள் அல்ல என்பது மட்டுமே என் கருத்து!!

இந்த கருத்துக்கள் நான் பார்த்த சில மையங்களை வைத்து தான், இதில் லாப நோக்கம் இல்லா நிறுவனம் இல்லை என்றே எனக்கு தோண்றுகிறது. இதில் மாற்றுக்கருத்து இருக்குமானால் வாதங்களை வைக்கலாம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இட ஒதுக்கீடும் செந்தழல் ரவியின் பதிவும்....

செந்தழல் ரவியின் பதிவை பார்த்த பிறகு அதன் தொடர்ச்சியா, இதே விசயம் குறித்து பல முறை குழலியுடன் வாதிட்டபோதும் அவர் ரவியின் பதிவில் சொன்ன அதே மாதிரியான வாதங்களை தான் சொன்னார். இங்கு என் பங்கிற்கு என் எண்ணங்களை முன்வைக்கிறேன்.

என்னை பொருத்த வரை கல்வி+ பொருளாதார நிலை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த விசயம் தான். இட ஒதுக்கீட்டு என்ற பிரச்சனை வந்த உடன் நம்ம மக்கள் எப்பவும் பிராமணர்களை சாடுவது தப்புன்னு தோனுது! கிரீமி லேயர் ஒதுக்கப்பட்டால், அந்த மிச்ச இடங்களில் உள்ளே வரப்போரவங்க ஐயர் இல்லை சாமி! நம் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள மக்கள் தான், அதாவது டி-கிரேடு அரசு பணியாளரை விட கீழ் மட்டத்தில் உள்ளவன், அவனும் தாழ்த்தப்பட்டவன் தான். நம்மால் நம்ம ஆட்கள் மேலே வருவதே பிடிக்கவில்லை என்பது கசப்பான உண்மை! அதற்கு வாதங்கள் பல வைத்து எல்லாவராலும் முடியும். குழலி சொல்லற மாதிரி ஒரு தலைமுறை தான் முன்னுக்கு வந்திருக்கு என்றால், இன்னும் அந்த பகுதி பக்கம் கூட வர முடியாம, கூலி வேலை செய்து, இட ஒதுக்கீட்டின் டேஸ்ட் கூட பார்க்காதா எத்தனை பெரிய சமுதாயம் காத்திருக்கு!!!?? குடிசை பகுதியிலிருந்து ஒரே ஒரு மாணவன் மருத்துவம் அல்லது பொறியில படிப்பு சேர்த்தால், அது இன்றும் ஒரு பெரிய செய்தியா, உலக அதிசயமாக, எல்லா பத்திரிக்கையிலும் வரும் நிலை தான் உண்மை! அவர்களுக்கு ஏன் நாம் வழி விடக்கூடாது!? இந்த நிலை மாற நிச்சயம் இட ஒதுக்கீட்டு கொள்கையில் ஒரு Fine Tuning தேவை! அதை தான் நம்ம உச்சநீதி மன்றம் சொல்லுது என்று நினைக்கிறேன். கிரீமி லேயரால் லாபம் பிராமனர்களுக்கு அல்ல என்ற உண்மை ஏன் மறைக்கப்படுது!

குழலி சொல்லும் 4 தலைமுறை வளர்ச்சி:

1. கூலி வேலை, Wine ஷாபில் சரக்கு வாக்கிதருவது போன்ற வேலை (தலைமுறை ஒன்று)
2. டி கிரேடு அரசு பணியாளர் (தலைமுறை இரன்று)
3. IAS, IPS போன்ற வேலை (தலைமுறை மூன்று)
4. IIT, IIM போன்றவைகளில் படித்து வெளிநாட்டு வேலை (தலைமுறை நான்கு)

ஒவ்வொரு தலைமுறையையும் இந்த நான்கு ஏணி ஏற்றிவிட தான் இட ஒத்துக்கீடுன்னு சொல்லும் குழலி போன்றவர்கள், ஒரு கணக்கை விட்டு விட்டார்கள் போல, ஒரு குரூப்பை முன்னேற்ற 33 X 4 = 132 வருடம் தேவை படுகிறது , அப்ப இன்னும் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும் அடிமட்டத்தில் வாழ்ந்து வரும் கூலித்தொழிலாளி?? இப்படி போனால் அடிமட்டத்தில் உள்ளவனை எப்ப இந்த இட ஒதுக்கீடு பயன் கொடுக்கும்! இப்படி போனால் இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் குடிசைப்பகுதி மக்கள் படித்து மேலே வருவது கடினம் தான் :( , அன்று வரை நம் அரசியவாதிகள், அவனை ஓட்டு வங்கியாக வைத்து கொள்ளையடிப்பது நடந்துக்கிட்டே தான் இருக்கும். அதனால தான் நான், இட ஒதுக்கீடுக்கொள்கையில் ஒரு Fine Tuning தேவை என்று சொல்கிறேன்.

தான் முன்னுக்கு வந்தாலும், கீழே உள்ளவனை மேலே வரவிடாமல் தன்னை சுற்றியே இந்த இட ஒதுக்கீட்டு லாபத்தை வைத்துக்கொள்வதும் ஒரு வகை பிரமணீயம் தான்.