நீயா? நானா? - டாக்டர் அன்புமணி

நேற்று இரவு 9 மணிக்கு விஜய் டி.வியில் நீயா ? நானா? என்ற ஒரு டாக் ஷோவில், மருத்துவ மாணவர்கள் ஒரு வருட கட்டாய கிராமபுற சேவையை எதிர்த்து பலமாக குரல் எழுப்பினர், ஆனால் அந்த பலம் டாக்டர் அன்புமணி அவர்கள் வந்த பிறகு காற்றில் பறந்தது! நிகழ்ச்சியை பார்த்த பிறகு டாக்டர் அன்புமணியை பாராட்டவே தோண்றியது. அந்த நிகழ்ச்சியை பார்த்தில் எனக்கு கிடைத்த தகவல்கள்!

 • அரசு கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருடம் வெறும் 4000 முதல் 6000 வரையே செலவு செய்கிறார்கள்!
 • அதே மருத்துவ படிப்புக்கு தனியார் கல்லூரிகள் 4 முதல் 6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது!
 • அரசு பெரும் செலவு செய்து (சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு மாணவருக்கும் செலவு!) அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரே ஒரு வருடமாவது சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது!
 • நிரந்தர வேலையை கொடுத்தால் கிராமப்புர சேவை செய்வதாக கூறிய இவர்களின் வாதம் ஒரு சப்பை கட்டாகவே எனக்கு தோண்றியது!
 • இவர்களை எதிர்த்து சில புள்ளிவிவரங்களுடன் வந்த சில டாக்டர்கள், தாங்கள் ஏன் கிராமப்புறங்களில் வேலை செய்யவில்லை/ முன்வரவில்லை என்று சொல்ல முடியாமல் எஸ்கேப் ஆனர்.
 • டாக்டர் அன்புமணி தான் விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் டாக்டராக 2 வருடம் வேலை செய்ததாக சொல்லி அனைவருடைய கைத்தட்டையும் வாங்கினார். (உண்மை என்று நம்புவோம்)
 • டாக்டர் அன்புமணி மேலும் சில முக்கிய புள்ளிவிவரங்களை சொன்னார், 73% இந்தியா கிராமங்களில் தான் உள்ளது! அதில் 25% மட்டுமே சிறிதளவேனும் சுகாதார வசதி படைத்துள்ளது!!
 • ஸாட்வேரில் இந்தியா அமேரிக்காக்கு இணையாக நம்பர் ஒன்னாக பேசப்படுவதாகவும் ஆனால் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவையை மிகவும் பின் தங்கியா நாடுகளான எத்தியோப்பியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இணையா பேசப்படுவதாக வருத்தப்பட்டார்!
 • வடகிழக்கு மாநிலங்களிலும், சட்டிஸ்கர், பிஹார் போன்ற மாநிலங்களில் மருத்துவர் வேலைக்கு யாரும் சேர மறுக்கிறார்கள்! என்று அள்ளி வீசினார் புள்ளிவிவரங்களை!
 • ஒவ்வொறு மாணவனுக்கு 10 லட்சம் ரூபாய் செலவு செய்யும் அரசு குறைந்தபட்சமாக ஒரு வருட சேவையை எதிர்ப்பார்ப்பது தவறா என்று வினா எழுப்ப மாணவர் தரப்பு வாயடைத்துப்போனது!
 • மேலும் இந்த ஒரு வருட கிராமப்புற வேலை திட்டத்தை தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு வரவில்லை எனறு ஒரு குறிப்பும் கூறினார்.
 • குடும்ப சூழல், கஷ்டங்கள், மருத்துவ உபகரங்கள் , மற்ற வசதியற்ற கிராமபுறங்கள் இது போன்ற பல விசயங்களை சொல்லி எஸ்கேப் ஆக பார்த்தவர்களை இடுக்கு பிடி போட்டு பிடித்தார் அமைச்சர் அன்புமணி! உங்களுக்கு நிரந்தர வேலைதான் பிரச்சனை என்றால் வாங்க பீஹார், மிசோரம், ஒரிஸா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கு, உங்களுக்கு நிச்சயம் வேலை நானே வாங்கித்தருகிறேன் என்றாரே பார்க்கலாம்! அது அசத்தல்!
 • நீயா நானா? நிகழ்ச்சி நடத்துனரான கோபிநாத் இது தான் நேரம் என்று அனைத்து மாணவர்களை பார்த்து கேட்டார், இப்ப நிரந்திரம் வேலை ரெடி, யாரெல்லாம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமப்புற வேலைக்கு போக ரெடி என்று?! பலரும் வேண்டா வெறுப்பாக விண்ணப்பம் எழுதி கொடுத்ததை பார்க்கமுடிந்தது!!!
 • விண்ணப்பம் எழுத எழுதுகோல் இல்லை என்று சொன்ன ஒரு மாணவனுக்கு அமைச்சர் அன்புமணி அவருடைய எழுதுகோள் எடுத்துக்கொடுத்து எழுத சொன்னார் :)
 • கடைசியா விண்ணப்பங்களை கோபி வாங்க சென்றபோது அன்புமணி, நீங்க சிறமப்படாதீங்க நானே வாங்கிக்கொள்கிறேன் என்று அவரே மாணவர்களிடம் வாங்கிக் கொண்டார் :)
 • ஒரு வேலையையும் செய்யாம வெட்டியா மேடை போட்டு நான் தமிழத்துக்கு அதை செய்தேன், இதை செய்தேன் ஒன்றுக்கு பேராதா வெட்டி விசயத்தை பீத்தி, வெற்று அரசியல் பேசும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இதையாவது செய்ய துடிக்கும் ஒரு அமைச்சரை பார்த்ததில் சந்தோஷமே!!
எது எப்படியோ! இந்த நீயா? நானா நிகழ்ச்சி பல விசயங்களில் தவறு என்று எண்ணிய விசயங்களை மாற்றியமைத்திருக்கு, Including one against Dr. Anbumani Ramadoss.

பி.கு:

விஜய் டி.விக்கு என்ன கடுப்போ தெரியல, டாக்டர் அன்புமணியின் பெயரை போடும் போது டாக்டரை முன்னாடி போடாம வெறுமனே அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் :))) எதோ என்னால் முடிந்தது :)

இந்த நிகழ்ச்சி ஒவ்வொறு ஞாயிறும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பராங்க.

உலக I.T துறையில் சென்னை முதலிடம்!

சென்னைவாசிகளுக்கு இதோ ஒரு குஷியான செய்தி! சமீத்தில் Tholons and Global Service Magazine என்னும் ஒரு மூதலீட்டு ஆலோசனை கழகம் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் (Top 10 emerging destinations worldwide for outsourcing of IT and business processes) முன்ணனிக்கு வரும் நகரங்கள் பற்றி உலகளாவிய கருத்தாய்வு செய்தது. இதில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை இங்கே பதிவு செய்கிறேன்.

இன்னொரு மகிழ்ச்சியா செய்தி முதல் பத்து இடங்களில் ஐந்து இடங்களை இந்தியாவில் உள்ளன என்பதே!

தகவல் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்ணனிக்கு வரும் இந்திய நகங்களின் பட்டியல்:

முதலிடம் : சென்னை
இரண்டாவது இடம்: ஹைத்தராபாத்
மூண்றாவது இடம்: பூனே
ஐந்தாவது இடம்: கொல்கொத்தா
ஒன்பதாவது இடம்: சண்டிகர்

தகவல் தொழில்நுட்ப இந்த வளர்ச்சிக்கு தமிழக அரசுவின் ஊக்குவிப்பு முக்கிய காரணமாகும் என்றே நினைக்கிறேன். இதை தக்கவைக்க சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை, போக்குவரத்துக்கு வசதி, போக்குவரத்து நெரிசல் குறைக்க முயற்சிகள் எடுத்தால் இதை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

சீனா வின் தலைநகரமான பீஜிங் பத்தாவது இடத்தையும், சீனாவின் மற்ற நகரங்களா ஷாங்கய் எட்டாவது இடத்தையும், ஷென்சென் பதிமூண்றாவது இடத்தையும் பிடித்துள்ளது! முதல் 50 இடங்களில் 19 நகரங்கள் ஆசியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிட தக்கது!

The study also listed Bangalore, New Delhi NCR, Manila NCR, Mumbai and Dublin as the top 5 cities that have established themselves as prime outsourcing cities by servicing the global corporate world for over a decade.

பி.கு:

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் சென்னை - சிலிக்கான் சம்வெளி என்ற தலைப்பில் வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பற்றி எழுதியிருந்தேன்! இன்று இந்த அங்கீகாரம் அன்று சொன்னதை எடுத்துக்காட்டுகிறது!!!

செய்திக்கு நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

தீவிரவாதிக்கு இன்று பிறந்தநாள்!

இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதியாக காங்கிரஸால் சித்தரிக்கப்பட்ட பகத்தின் பிறந்தநாள் இன்று!

இந்திய அரசு இன்று பகத்சிங்கின் தேச பக்தியை மறைக்க நினைக்கிறது! அவன் வரலாறை அழிக்க நினைக்கிறதோ என்று கூட தோண்றுகிறது!

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் கொண்டாட தெரிந்தவர்களுக்கு எப்படி பகத்சிங்கின் பிறந்தநாள் மறந்து போகிறது என்று தெரியவில்லை!! ஒரு சிறு குறிப்பு கூட அரசு தரப்பிலிருந்து வெளிவரவில்லை!!

இந்தியா சுத்ந்திரம் பெற முக்கிய காரணங்களாக இருந்தவர்களில் பகத்சிங்கும் ஒருவர். அரசு மறந்தாலும் நாம் அவர் பிறந்தநாளில் அவரை நன்றியுடன் நினைப்போமாக....


அவர் சிறையில் துக்கு தண்டனைக்கு காத்திருந்த வேலையில் எழுதிய பல குறிப்புக்களில் ஒன்று!!

Aim of Live

"The aim of life is no more to control mind, but to develop it harmoniously, not to achieve salvation here after, but to make the best use of it here below, and not to realise truth, beauty and good only in contemplation, but also in-the actual experience of daily life; social progress depends not upon the ennoblement of the few but on the enrichment democracy or universal brotherhod can be achieved only when there is an equality of opportunity of opportunity in the social, political and individual life."
(Page 124 of Jail notebook)

அரசுக்கு இது அழகா??

ஐயா சாமிகளா, உங்களுக்கு ஓட்டு போட்டு எல்லா எம்.பி பதவியும் உங்களுக்கு தானே வாங்கி கொடுத்திருக்கு இல்லையா?.... இன்னும் ஏன்யா எங்களை போட்டு ரவுண்ட் கட்டறீங்க!!

ராமர் பாலம் இடிக்கனுமா போயி திருமதி.சோனியா கிட்டயோ! திருவாளர்.மன்மோகன்சிங்கிடமோ ஆட்சியை காலி பண்ணிடுவோம்ன்னு சொல்லி அல்லது என்னத்தையாவது செய்யவேண்டியதுதானே! ஏன்யா பந்துன்னு சொல்லி எங்க தாலியை அறுக்கறீங்க... உங்களுக்கு ஓட்டுப்போட்ட பாவத்துக்கு, எங்களுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்!!!

ஒரு நாள் வேலை நிறுத்தம், கோடிக்கணக்கா சேர்த்துவைத்த உங்களுக்கு ஒன்னும் ஆவப்போறது இல்லை... ஆனா.. ஒவ்வொரு தின கூலிக்காரனிலிருந்து நடுத்தர வர்கம் வரை உள்ள அனைவருக்கும் சாப்பாட்டுல மண் விழும்! நீங்க சொல்லும் சேது சமுத்திரம் அவனுக்கு ஒரு மண்ணும் கிடையாது! அது வந்தாலும், வராவிட்டாலும் அவனுக்கு ஒரு பைசா லாபம் கிடையாது!

தினக்கூலி முதல் சாதாரண குடிமகன் வரை அனைவருக்கு எத்தனை சிரமம் உங்களால் பண்ண முடியோ அவ்வளவு செய்யும் முடிவோட தான் ஆட்சிக்கு வந்தீங்களா??... யாருக்காக, என்ன நிரூபிக்க பாக்கறீங்க... ஒரு ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் உங்களால் ஒன்னும் பண்ணமுடியாதுன்னா.. மக்கள் பந்தில் கலந்து கொண்டால் என்ன நடக்கபோவுது???

கடந்த ஏப்ரல் மாதத்தில் உங்க அரசு ஒரு பந்து நடத்தியது உயர் கல்வி படிப்பில் 27% இட ஒதுக்கீட்டுக்காக... அது நடந்ததா?? மக்கள் கஷ்டப்பட்டதை தவிர வேற என்ன பலன் கிடைத்தது?? ஒரு பயலையாவது சேர்த்த முடிந்ததா அந்த ஒதுக்கீட்டில் உங்களால்....

தயவு செய்து எங்களை டார்ச்சர் செய்யாம எதையாவது செய்திட்டு போங்க ப்ளீஸ்!

பி.கு:

இந்த பதிவு பந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, சேது சமுத்திர கால்வாய் தடை செய்ய அல்ல...

பா.க.ச போட்டி முடிவுகள்!

டி.வி புகழ் பாலாபாரதியை கலாய்க்க ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் போட்டி ஒன்று போன மாதம் பா.க.ச தலிம கலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது! அதன் முடிவுகளை அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது, ஏன்ன பல பேர் பல விதமா தலய கலாய்த்தார்கள்! எதை தேர்ந்தெடுப்பது என்று கொஞ்சம் சிரமப்பட்டுவிட்டோம் என்றே சொல்லவேண்டும்!

பலரும் ரூம் போட்டு யோசித்து அருமையாக எழுதியிருந்தார்கள்! குறிப்பாக ப்ரேம்குமார், குசும்பன், அருட்பெருங்கோ, ஹாய் கோபி, வெங்கட்ராமன், ராமசந்திரன் உஷா என அனைவரும் பின்னிப்பெடலெடுத்திருந்தார்கள்! அட நம்ம நடுவர் ஆசிப் கூட விடாம நானும் கலாப்பேன்னு தூள் கிளப்பியிருந்தாரு! இது போதானுன்னு நம்ம தல பாலா பாய் கூட ஒரு பதிவு போட்டிருந்தாரு!

இந்த பா.க.ச முதலாம் ஆண்டுவிழா போட்டி பரிசு அருட்பெருங்கோவுக்கு அளிக்க நடுவர்கள் முடிவு எடுத்ததை இங்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு தல ரத்தால் கையெழுத்திட்ட ஒரு புகைப்படமும், ஒரு புத்தகமும் பரிசாக அளிக்கப்படுகிறது! விழா குழுவினர் விரைவில் அவரை தொடர் கொள்வார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

பி.கு: தல ரத்தத்தால் கையெழுத்து போட பயந்து மறைந்து வாழ்வதாக கேள்விப்பட்டோம்! அவரை விரைவில் பிடித்து கையெழுத்து வாங்கி புத்தகமும், பூச்சாண்டி காட்ட அவர் படமும் விரைவில் அருட்பெருங்கோவுக்கு அளிக்கப்படும்.

படம் உதவி: லக்கிலுக்

நோ கமெண்ட்ஸ்!!!

டிஸ்கி:

இங்கே தமிழ்மணத்தில் நடக்கும் விசயத்துக்கும், இந்த விடியோவுக்கும் சம்பந்தம் இருக்கு!! அவங்க அவங்களுக்கு புரியரமாதிரி இந்த விடியோவின் நீதியை புரிஞ்சுங்கோங்கோ!!!! சிங்கங்கள் யாரு! முதலைங்க யாரு! காட்டெருமை யாரு! எருதுவின் கன்று யாருன்னு... நீங்களே ஊகித்துக்கொள்ளுங்க :)

சோ,(சத்தியமா துக்ளக் சோ இல்லைங்கோ!)நோ கமெண்ட்ஸ்!!!

இந்திய குடிமகனானுமா?

நீங்க எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை, தீவிரவாதியா இருந்தாலும் பரவாயில்லை!!!! உங்களுக்கு எங்க மண்ணின் மைந்தர்களும், அரசு இயந்திரங்களும் இந்திய குடியுரிமை வாங்கி தராங்கோ!!! அதுவும் வெறும் ரூ. 32,500/- இருந்தா போதும்!!!!

குடியுரிமைன்னா சும்மா இல்லைங்க!

1. ரேஷன் கார்டு
2. பிறப்பு சான்றிதழ்
3. PAN Card
4. Pass Port Rs 7,500/-
5. படிப்பு சான்றிதழ்
6. Voter ID Card - Rs 1,800/-

என்று எல்லா மேட்டரும் உண்டு...

அடுத்த மாசம் முதல் வேணும்னா ரேஷன் கூட வாங்கிக்கலாம்!!!

ஆள் வரவேண்டிய தேவையில்லை! சும்மா யார்கிட்டயாவது 32,500 ரூபாயை கொடுத்து அனுப்பினா போதும்! எல்லா மேட்டரும் ரெடி செய்து தர ஆள் இருக்கு! பாஸ்போர்ட்க்கு Verification கூட இல்லாம ஈஸியா வாங்கித்தராங்க! ஜாலி பண்ணுங்க!

IBN Live முயற்சியால் வெளிவரும் இந்த கொடுமையை பாருங்க!லஞ்சம் எப்படி எல்லாம் கொழுத்து போயிருக்குன்னு பாருங்க! அட இதெல்லமாம் மாமூலான விசயம்ன்னு நம்ம முதல்வர் மாதிரி ஸ்டேட்மென்ட் தந்திடாதீங்க ப்ளீஸ் :)

இது அரசுகளுக்கு தெரியுமா? அரசுகள் ஏன் இது போன்ற வழியை அடிக்க வழிவகை செய்யவில்லை!! அரசுகளின் அலட்சிய போக்கு நாளை தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவும், சதி திட்டங்கள் தீட்டவும், நம் உயிர்களுக்கு உலைவைக்கக்கூடும்!!!

லஞ்சம் கொடுப்பதையும், லஞ்சம் கேட்பவரையும் தடுக்கவும் முயற்சி செய்ய துவங்குவோம்!

நன்றி: IBN Live

சுதந்திரம் யாருக்காக?

கடந்த 15ஆம் தேதி நாம் நம்முடைய சுதந்திரத்தின் 60 வருடங்கள் கடந்ததை கொண்டாடினோம்! அறுபது ஆண்டுகளில் நாம் எவ்வளவு சுதந்திரம் அடைந்திருக்கிறோம் என்று எனக்கு புரியவில்லை! ஆங்கிலேயர் ஆட்சிக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றே ஒன்று அன்று ஊழல் குறைவு, இன்று இவர்களால் பெருக்கெடுத்து ஓடுது ஊழல்!! இவருடைய ஆட்சியிலும் சர்வாதிகாரம் இருந்தது, இருக்கிறது!!!

இன்று இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்தா, என்ன கொடுமை சார் இதுன்னு தான் சொல்லத்தோனுது!

பீஹாரின் அரசு இயந்திரங்கள் எங்கள் கண்காணிப்பில் தான் இருக்கிறது! விரைவில் அவை எங்கள் கட்டுப்பாடுக்குள் வரும் என்று சில தினங்களுக்கு முன் Maoist Commander அறிவிக்கிறார்! அதுவும் ஒரு Times Now போன்ற ஒரு தொலைக்காட்சியில்!!! மாவோஸ்டுகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்துங்க!!!

மனிப்பூரில் 3 ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வீட்டிலேயே 12 தீவிரவாதிகளை பதுங்க வைத்து பிரிவினைவாதத்தை வளர்க்கவும், பாவப்பட்ட மக்களை கொல்லவும், அரசு இயந்திரங்களை அழிக்கவும் உதவி செய்யறாங்க! அப்ப தீவிரவாதிகளுக்கும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கிடைக்குதுன்னு பாருங்க!

ஆட்சியிலிருப்பவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் தன்னை எதிர்ப்பவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று சில மாதங்களுக்கும் நம்ம முதல்வரின் குடும்பத்தார் செய்து காட்டினார்கள்! அவர்களை CBIயையாலும் ஒன்னும் செய்யமுடியாதுன்னு இன்றைய நிகழ்வுகள் காட்டுது! அப்ப ஆளும் கட்சியினர்களுக்கும், ஆட்சியாளர்களின் குடும்பத்தாருக்கும் இருக்கும் சுதந்திரம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள முடிகிறது!

சுதந்திர இந்தியாவில் முறைப்படி விசாவுடன் வந்த தஸ்லீமா நஸ் ரீனை கொல்பவருக்கு 'அளவற்ற' (Unlimited) வெகுமானம் வழங்கப்படும் என்று கேஷுவலா Public Meetingல அறிவிக்கும் ஒரு கொல்கொத்தா இமாமுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்குன்னு பாருங்க!!!

அதே தஸ்லீமாவை ஒரு ஆந்திரா சட்டமன்ற உறுப்பினர், தன் பொறுப்பான பதவியை மறந்து Religious Fundamentalistஆக மாறி ஒரு பொது மேடையில் தஸ்லீமாவை தாக்கும் ஆளவுக்கு சுந்ததிரம் கொடுக்கப்படிருக்கு!

இவர்களை எல்லாம் கைது செய்ய தயங்கும் சுதந்திர மாநில/ மத்திய அரசுகள்!!!!

இதுபோன்றவர்களுக்கெல்லாம் கிடைக்கு அந்த சுதந்திரம் தடுக்கப்படவேண்டும்!!!

உண்ண உணவுக்காக தினமும் 150 கீலோ மீட்டர் பயணம் செய்து சம்பாதிக்கும் 30 ரூபாயை கூட Railway TTE க்கு கட்டிங் கொடுக்காமல் வீட்டுக்கு எடுத்துச் செல்ல கூட ஏழை மக்களுக்கு சுதந்திரம் சுத்தமா இல்ல!

இது போன்ற ஏழ்மையையும், ஏழைகளின் துயரையும் எப்படி ஒழிப்பதுன்னு பாராளமன்றதில் விவாதிக்க அழைத்தால் 545 பிரதிநிதிகளில் வெறும் 12 மக்கள் பிரதிநிதிகள் வந்ததால் அந்த பாராள மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படுது! அவ்வளவு மக்கள் பாசம் நம்ம பிரதிநிதிகளுக்கு!!!

இந்த சுந்திரம் எங்க போகுது! யாருக்காக சுதந்திரம் கிடைத்தது! ஒன்னும் புரியல! யாராவது தெரிந்தா சொல்லுங்க ப்ளீஸ்!!!

வலைப்பதிவர் பட்டறை - வீடியோ காட்சிகள்!!!


தமிழ் வலைப்பதிவர் பட்டறை வீடியோ காட்சிகள். பொன்ஸ்க்கு நல்ல கவரேஜ் கிடைச்சிருக்கு!!!
நன்றி:IBNLive.com

பா.க.ச உலகுக்கு அறிவித்த வினை :)

இன்றைய் இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் பக்கத்திலேயே "டாப்"ல நம்ம பா.க.சவின் பெயரை வெளியிட செய்த தம்பி வினையூக்கியை வாழ்த்தியும் நன்றி தெரிவிக்கவும் இந்த பதிவு!!! பா.க.சன்னு மட்டும் சொல்லாம அதன் விரிவாக்கமான பாலபாரதியை கலாய்ப்போர் சங்கம் என்று தெளிவா அச்சிட்டு வந்திருக்கு!!!

இன்னமா வேல செய்யறாங்க நம்ம சங்கத்து சிங்கங்கள்!!! நெனச்சாலே புல்லரிக்குதுபா!!

இந்த செய்தி வெளியானதும் நம்ம பா.க.சவின் தல ஓடிவந்து வினையூக்கியை பாராட்டி சென்றார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!

உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்ன்னு களக கண்மனிகளுக்கு சொல்லிக்கிறோம்பா!!!

நன்றி

நா ஜெயசங்கர்,
பா.க.ச
தலிம களகம்,
சென்னை!!!!

களத்தில் பிரச்சனை வருவதை தவிர்க்க பின்னாடி சேர்த்தது :D ::

இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு சொன்னதில் முக்கிய பங்கு நம்ம களக கண்மனிகள் பொன்ஸ்க்கும் நம்ம சிவஞானம்ஜியுக்கும் பெரும் பங்குள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கிறது சங்கம், அதனால் பொன்ஸையும், சிவஜீயையும் சிறப்ப ஒரு பாராட்டு விழா வைத்து கொண்டாடும் முயற்சியை பொதுகுழுவும், செயற்குழுவும் சேர்ந்து முடிவு செய்யும்.

வலைப்பதிவர் பட்டறை என் பார்வையில்...

நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் என்னை கவர்ந்த விசயங்களை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்...

வினையூக்கியும் மற்றும் ஜெயாவும் பட்டறைக்கு ஏற்பாடுகள் நடந்த முதல் நாள் மாலையும் சரி பட்டறை தினத்தன்றும் சரி அயராத உழைப்பை தங்கள் பங்கிற்கு கொடுத்தார்கள், துடிப்புடன் காலை முதல் மாலை வரை ஆர்வமாக கற்றுக்கொள்ள வந்த பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த விசயம் என்னை அசர வைத்தது!!! என்ன எனர்ஜி அவருக்குக்கு! ஒரு நிமிடம் கூட சலிக்காம ஆர்வமா எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கு என் முதல் சபாஷ்!

அடுத்தது விக்கி, மா.சி & பொன்ஸ்: இது தான் முதல் பட்டறை, அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு குறையும் வந்துவிடக்கூடாது என்று இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறப்பான பலனை தந்தது என்பது 100% உண்மை. பல பட்டறைகள் நடந்த்திய அனுபவம் வாய்ந்தவர்கள் நடத்தியது போல சிறப்பாக கலை கட்டியது பட்டறை. இவர்கள் முயற்சியும் உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்!

பாலாபாய் பம்பரமா சுழன்று கொண்டேயிருந்தார், CD வாங்கிவருவது முதல் உணவு ஏற்பாடுகள்வரை அணைத்தும் அவர் தன் கையில் எடுத்துக்கொண்டு தூள் கிளப்பிக்கிட்டு இருந்தார்!

தமிழி தனக்கு ஒதுக்கப்பட்ட கூகுல் கணக்கு துவங்குவது முதல் பதிவு இடுவது வரை விசயங்களை, ஒரு கல்லூரி ஆசிரியராகவே மாறி சொல்லிக்கொடுத்தார்! சுமார் 100 மேற்ப்பட்ட பார்வையாளர்களை அசத்தலா கையாண்டு தூள் கிளப்பினார்! இதில பேசாதீங்க, இங்க கவனிங்க என்று ஒரு பேராசியர் டைப் அதட்டல் வேறு!

லக்கிலுக் தன் பங்கிற்கு பட்டறைக்கு வேண்டிய கம்பூட்டர் நெட்வொர்க்கிங், மென்பொருள் நிறுவுதல், பிரிண்டர் எடுத்து வந்து கணினியுடன் இணைப்பது, என பல வேலைகளை பாய்ந்து பாய்ந்து பார்த்துக் கொண்டிருந்ததை பாராட்டியே ஆகவேண்டும்!

உண்மைதமிழன் மீடியாகளை அழைத்துவந்தது, பட்டறை ஏற்பாடுகளில் தன் பங்கிற்கு அசத்தினார்!

பெனாத்தல் சுரேஷ் ஃப்லாஷ் சொல்லித்தந்தவிதம் ஒரு சபாஷை பார்வையாளர்களிடம் வாங்கித்தந்தது!

நந்தாவும், ஜே.கேவும் நாங்க இளைஞர்கள் என்று சொல்லிக்கிட்டு டீ/காபி மெஷினை அருள் அலுவலத்திலிருந்து எடுத்து/திரும்ப கொண்டுபோய் வைப்பது என எல்லா வேலையை தங்களே முன்னின்று செய்தார்கள்... அவர்களுக்கு ஒரு சபாஷ்!

கிருபாஷங்கர் வலைப்பூக்கள் வழி சம்பாதிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்க வந்தவர், கொஞ்சம் கூட ஹோம் வொர்க் செய்திருக்கவேண்டும் என்று எனக்கு தோண்றியது! நிறைய தடுமாற்றம் இருந்தது! நல்ல வேளை மா.சி மேக்கப் செய்தார்!

இணையத்தில் பதிவு செய்யாது நேரடியா வருபவர்களை பதிவு செய்து கொண்டிருந்த நான், ஒரு காபி சாப்பிட காபி மெஷின் பக்கம் போய், டீ கடைக்காரனாக மாறி சுமார் 300 - 400 டீ காபி போட்டு தரும் வேலை என்னை வந்து ஒட்டிக்கொண்டது! கடைசியா பொன்ஸ், அருள் என பலர் வந்து நாயர் ஒரு டீ கொடு என்று கேட்கும் அளவுக்கு மேட்டர் ஆயிடுச்சு!!! இதுல நமக்கே தெரியாம நம்ம கையில இட்லிவடை டீ வேற வாங்கி குடிச்சாரு போல... என்ன கொடுமை சார் இது!

மொத்தத்தில் இணையத்தில் நம்ம மக்கள் ஒன்று கூடி செய்த ஒரு சிறப்பான ஒரு விசயம் இந்த பதிவர் பட்டறை. இந்த பட்டறையால் நிச்சயம் நம்ம பாலாபாய் சொல்லற மாதிரி குறைந்தபட்சம் 100 பேர் புதியதாக வலைப்பூ துவங்குவார்கள் என்பது உண்மை!

எட்டு(ம்) இடத்தில் ஜெய்

வாங்க எட்டு போட்டு விளையாடலாம்ன்னு முதல்ல சர்வேசன் போட்டாரு ஒரு கமெண்ட், ஓ.கே ரெடி பண்ணுவோம்ன்னு நினைத்துக்கொண்டுயிருக்கையில் நம்ம வெங்கட்ராமன் வேற கெளபிட்டாரு... இப்படியே விட்டா பல எட்டு போட வேண்டியிருக்கும் பயமாயிட்டதால முதலில் நம்ம பதிவை போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம்ன்னு எறங்கிட்டோமில்ல...

என்னைப்பற்றி ஏற்கனவே பல தடவை மொக்கை போட்டதால ... உங்களுக்கு தெரியாத சில (எட்டு) விசயத்தை சொல்லாம்ன்னு நினைக்கிறேன்...

இந்த எட்டு என்னை ரொம்பவே பாடா படுத்தியும் இருக்கு, உதவியும் இருக்கு பல விசயங்களில், அதில் சில எட்டுக்களை மட்டும் எடுத்து போடுவோம்ன்னு ஒரு முயற்சி... ஓவரா இருந்த அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... ஹீ! ஹீ!!

1. நான் ஏழாவது பாஸ் பண்ணதும், எங்க வீட்டை கோவை-பீளமேடு பகுதியிலிருந்து கோவை-ராமநாதபுரம் பகுதிக்கு மாற்றிப்போனோம்! அதனால இங்க இருந்து முன்பு படித்த GRG Matriculation பள்ளிக்கு செல்வது சுலபம் அல்ல என்ற காரணத்தால் என்னை CSI Union Higher Secondary தள்ளிவிட்டுட்டாங்க, முதலில் ரொம்ப நொந்து நூலா போனேன்! புது நண்பர்கள், புது ஏரியா, புது மக்கள்... நம்ம சென்னை 600028 மாதிரி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து பழைய நண்பர்கள் பார்ப்பதுவரை. அந்த கால கட்டத்தில் வீட்டில் போன் என்ற மேட்டரே பெரிய விசயம், எங்க வீட்டில் போன் இல்லை. அப்படியே அந்த நண்பர்களின் தொடர்ப்புகள் எல்லாம் காற்றோட போச்சு! இன்று தேடிப்பிடித்து தொடர்பில் உள்ளவர்கள் ஒரு சிலர் மட்டுமே! இப்படி முதலில் என்னை புரட்டிய 8 என்னுடைய 8வது வகுப்பு.

2. பள்ளிப்படிப்பின் போது ரொம்ப நல்லபுள்ளயா இருந்த நான், என் பொறியியல் படிப்பை (7 + 1) 8 ஆண்டுகளில் படித்து பாஸ் ஆனால் போதும் என்ற லெவலில் கல்லூரியில் ஆட்டம் போட்டேன் பாருங்க, எங்க அப்பா ஆடிப்போயிட்டாரு! முதல் வருடமே, வாரம் ஒரு பிரச்சனைக்காக எங்க கல்லூரிக்கு வரும் நிலைமைக்கு எங்க அப்பாவை கொண்டுவந்துவிட்டேன் (அதுவும் கோவையிலிருந்து சென்னைக்கு வாரம் ஒரு முறை ஓவர் தானே!!!). அப்புறம் எனக்கே எங்க அப்பாவை பார்த்தா பாவமா இருக்குன்னு ரெண்டாவது வருஷம் முதல் லோக்கலா ஒரு கார்டியனை நானா ரெடி பண்ணிக்கிட்டேன். இப்படி பண்ணதோட விணை ப்ளஸ் கல்லூரியில் நடத்திய ஒரு ஸ்ரைக் காரணமாக என்னுடைய 8வது செமிஸ்டர் முழுவதும் என்னை கல்லூரிக்குள் வரக்கூடாது, நேரா எச்சாம் (லக்கி ஸ்டைல்) வந்து எழுதிட்டு பொழச்சு போன்னு தண்டனை கொடுத்தாங்க. அப்படி 8வது செமிஸ்டரும் என்னை ரொம்ப நோகடித்த விசயம் தான். பின்ன என்னங்க ப்ராஜக்ட் முதல் எலக்ட்டீவ்ஸ் வரை எல்லா விசயங்களும் சொந்தமா நாமலே படிச்சு, கைடு கூட இல்லாம, நம்ம கூட கல்லூரிக்கு வராதேன்னு சொன்ன ரெண்டு சொத்தை பார்ட்டிங்களை வைத்து ப்ராஜெக்ட்டும் செய்து பாஸ்சானது ஒரு சாதணைதானே ;)

3. கல்லூரியில் முதல் வருடமே பைக் கனவு வீட்டில ஒரு எமாஹா கேட்டேன், அதை ஓட்டும் அளவுக்கு உனக்கு கெப்பாசிட்டி இல்லைன்னு எங்க அப்பா எனக்கு வாங்கி தந்தாரு பாருங்க ஒரு பைக், நொந்து நூலா போனேன்! என்னைக்கேட்காமலே போய் ஒரு டி.வி.எஸ் சாம்ப் என்னும் மோப்பட் வாங்கிட்டு வந்து இதை ஓட்டு, அப்ப தான் நான் கோவையில் பயம் இல்லாம இருக்க முடியும்ன்னு என் எமாஹா கனவை சுக்கு நூறு ஆக்கிட்டு போயிட்டாரு எங்க அப்பா... இதை ஏன் சொல்லவறேன்னா !! அந்த வண்டி எண் கூட்டுத்தொகை எட்டு!!!! முதல் வருடம் முழுவது செலவு வைத்துக்கொண்டே இருந்தது, நம்ம பைக் (கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!) மெக்கானிக் அடிக்கடி சொல்லுவாரு எட்டா நம்பர் வண்டி இப்படித்தான் செலவு வைக்கும்ன்னு!

4. கல்லூரி படிப்பு முடித்த கையோட சொந்த ஊரான கோவையை நோக்கி பயனமானேன். படித்தது மெக்கானிக்கல், இரண்டாம் ஆண்டு முதல் கம்பூட்டர் மேல் ஒரு பாசம் பொங்க, நானும் படித்தேன் 3 ஆண்டுகள் ஸாப்ட்வேர் கோர்ஸ் என்.ஐ.ஐ.டியில். 1995ல் கோவையில் எங்க போய் ஸாப்வேர் வேலை கிடைக்கும், சரி விடு அது எனக்கில்லைன்னு மெக்கானிக்கல் சம்பந்தமாக ஒரு வேலையை பிடித்தேன். முதல்மாதம் சம்பளம் வெறும் ரூ1850/- அதை கையில் வாங்கி அப்படியே அம்மா கிட்ட கொடுத்து ஒரு ஆசீர்வாத வாங்கிவிட்டு, அப்படியே ஒரு பிட்டு விட்டேன், இதே வேலைக்கு பதிலா சென்னையில் சாப்ட்வேர் வேலை செய்தால் எனக்கு நிறைய சம்பளம் கிடைத்திருக்கும், இங்க வந்து என் வாழ்க்கை வீணா போகுதுன்னு! நீ எங்க கூடயே இருன்னு அவங்க வேற மாதிரி பிட்டு போட்டு அடக்கிட்டாங்க. அடுத்த மாதம் சம்பளம் வாங்கி அம்மா கிட்ட கொடுத்து சென்னைக்கு போகலாம்ன்னு நினைக்கிறேன்னு, வேற ஒரு லைன்னில் சொல்ல சரி ஒழிந்து போன்னு போக சொல்லிட்டாங்க. பெரிய ஸீன் போட்டு ரெயில் டிக்கெட் போக வெறும் ரூ 800/- கையில் எடுத்துக்கிட்டு கனவுகள் ஆயிரத்தை எடுத்துக்கிட்டு வந்தேன் சென்னைக்கு... இன்றும் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த எட்டு நூறு ரூபாய்கள். அடிக்கடி ரூபாய் எட்டு நூறுடன் வந்து இந்த நிலையை அடைந்ததில் நினைத்து சந்தோஷப்பட்டுக்குவேன்.

5. 1998ல் சொந்த கம்பெனி துவக்கமும் அளவுக்கு அடிப்படை பக்குவம் கிடைத்ததா இல்லையான்னு இன்றும் புரியவில்லை. ஏதோ ஒரு வேகத்தில் சொந்தமா ஒரு மென்பொறி நிறுவனம் துக்கியாக வேண்டிய கட்டாயம் குமுதம் வார இதழ் ரஞ்சன் சார் மூலம் எனக்கு கிடைத்தது! அவர்களுடைய இணைய தளம் துவக்க, நான் வேலை செய்த கம்பெனிக்கு ஆர்டர் எடுத்தோம், அந்த கம்பெனிக்கு ஒரு நல்ல காலம், இழுத்து மூட வேண்டிய கட்டாயம், நம்ம சொன்ன டெக்னிகல் விசங்களால் கவரப்பட்ட ரஞ்சன், ஜெய் உங்களை நம்பித்தான் இந்த ஆர்டரை கொடுத்தோம், நீங்களே ஏதாவது செய்து குமுதம்.நெட் வெளிவர செய்யனும்ன்னு அன்பு கட்டளையிட்டார்கள். என் கல்லூரி நண்பர்கள் சிவஞானம் & சிவ அமுதன் துணையுடன் கம்பெனி ரெடி ;) இதுல என்ன எட்டுன்னு கேட்கறீங்களா, முடிவு எடுத்த எட்டாவது நாளில் 120 ச.அடியில் ஒரு ஆப்பீஸ் ரெடி, அடுத்த எட்டவது நாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி நான் மற்றும் ஒரே ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், இருவரும் சேர்ந்து இரவு பகலாக வேலை செய்து குமுதம்.நெட் வெப்சைட் அமெரிக்க வெப் சர்வரில் மிதக்க செய்தோம். அன்று இது ஒரு இமாலய சாதனையாய் நினைத்துக் கொண்டேன்.

6. 1999ல் முதல் வெளி நாட்டு ஆடர் கிடைத்தது, பெரிய ஆடர் இல்லை சின்னதா தான் $2879 கூட்டுத்தொகை எட்டு. நான் நிஜமாவே நமக்கு ராசி நம்பர் எட்டு என்று நினைக்கவைத்த நேரம் அது! படிப்படியா நிறைய வெளிநாட்டு ஆடர்கள்! எல்லா ஆடர்களிலும் விலையை சொல்லும் போது கூட்டுத்தொகை எட்டு இருக்கவேண்டும் என்று முடிவு, அப்படி செய்யும் எல்லா ஆடர்களும் கையில் பிரச்சனையில்லாமல் கிடைத்தது! ஆச்சர்யமாக இருந்தது!!! அது ஒரு பொற்காலம் தான்!

7. இரண்டாயிரம் ஆண்டு நமக்கு சனி பகவான் எட்டாம் இடத்துக்கு வந்தாரு போல, குமுதம் வெப்சைட் பல பிச்சனைகளால் கோர்ட் கேஸ் என்று என்னை நோகடிக்க செய்தது, கம்பெனிக்கு வந்து கொண்டிருந்த வெளிநாட்டு ஆடர்கள் Software Recession காரணமாக முற்றிலுமாக நின்றது :( , இதயம் நல்லெண்ணை, இந்தியா டூரிஸம் போன்ற உள்நாடு ஆடர்கள் மட்டும் கை கொடுத்த காலம் அது! அந்த இக்கட்டான நேரத்தில், உள்ளது போதாது என்று என்னுடைய கம்பெனி கூட்டணி ஆட்டம் கண்டது 2001ல்! சேமிப்புகள் முழுவது கம்பெனியில் முதலீடு ஆன நேரம் அது! என் கம்பெனியில் நானாக சேர்த்த 3 இயக்குனர்கள் கூட்டணி போட்டு, என்னை வெளியேற்றி, என் நிறுவனத்தை முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு சென்றனர், இதில் கொடுமை என்ன வென்றால் அவர்களுக்கு தலைமை தாங்கிய ஒரு இயக்குனர் என் உற்ற நண்பன் என்பதே! உருவாக்கிய கோட்டையை விட்டு வெளியேறி, என் பங்குக்கான தொகையில் பாதி கூட கிடைக்காமல், வெறும் 2 லட்சங்களுடன் உயரத்திலிருந்து தரையில் விழுந்து, புதிதாய் ஒரு நிறுவனம் துவக்கி என்னை கரையேற்ற மீண்டும் என் நண்பர்கள் சிவஞானம், சிவ அமுதன் வந்தார்கள் உறுதுணையாக, வாழ்க்கையில் என் ஒவ்வொறு வீழ்ச்சியின் போதும் துணை நின்றவர்கள் இவர்களே! ஆக என்னை உயர்த்திய எட்டு 2000 ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை ரவுண்டு கட்டி பரேடு எடுத்தார். இப்படி எட்டில் சனி என்னை வதைக்க துவக்கிய காலம் அது!

2004 முதல் மீண்டும் நம்ம எட்டு எனக்கு வேலை செய்ய துவங்கினார், முதல் வெளிநாட்டு ஆடர் அதே கூட்டுத்தொகை எட்டு! அன்று துவங்கி இன்றுவரை பல படிகள் ஏறி இன்று ஓரளவுக்கு சின்னதா ஒரு சாப்வேர் கம்பெனியும், என்னை நம்பி சில சப்வேர் இன்ஜினியர்களும், சீராக தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு தரும் வாடிக்கையாளர்களையும் உருவாக்கிவைத்துள்ளது சாதனையா இல்லையான்னு தெரியாது, என்னை பொருத்தவரை நான் எனக்கென ஒரு நிலையை தயார் செய்துவிட்டேன்! நேர்த்தியா பயணித்தும் வருகிறேன்! இப்படி என்னை வாட்டிய, வளர்த்த, வளர்த்துக்கொண்டிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கும் ராசி எண் எட்டு!!!அட நியூமராலஜி படி என் ராசி எண் ஐந்தாம்??!!! என்ன லிங் என்று புரியவில்லை!!!

8. இந்த மேட்டர் என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை, ஆனா இதுக்கும் எட்டுக்கும் சம்பந்தம் இல்லை, அதனால தான் எட்டவது பாய்ண்டா போட்டுவிடுவோம்ன்னு முடிவு செய்தேன். நான் கல்லூரியில் படிக்கும் போது என் அக்கா கணவர் என்னை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று ஒரு கேள்வி கேட்டார், நான் பெருமையா இன்ஜினீரிங் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன்! படித்து முடித்து என்ன செய்ய போகிறாய் என்று கேட்டார், நான் சாப்ட்வேர் Parallelல படித்து வருகிறேன்! கல்லூரி படிப்பு முடித்து சில வருடங்கள் சாப்ட்வேர் வேலை செய்து, அனுபவம் கிடைத்தவுடன் வெளிநாடு செல்வேன் என்று சொன்னேன்! அவர் Amul(Gujarat Cooperative Milk Marketing Federation) என்ற இந்தியாவின் மிக சிறந்த Cooperativeவில் ஒரு உயர் அதிகாரியா இருக்கரு... அவர் என் பதிலை எதிர்ப்பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன், உடனே என்னிடம் உங்களை போன்ற படித்தவுடன், வெளிநாடு செல்ல தயார் செய்யும் இளைஞர்களால் இந்தியாவுக்கு என்ன லாபம்! நீங்க செய்வது Brain Drain, இதனால் இந்தியாவுக்கு சில நன்மைகள் இருக்கலாம், உங்களுக்கு பல நன்மைகள் இருக்கலாம், ஆனா, நீங்கயெல்லாம் இந்தியாவில் இருந்தால் இந்தியா ஒளிர உதவியா இருக்கும் என்று சொன்னார், அது என்னை புரட்டி போட்ட அறிவுரை! என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரியும், இருந்தாலும் , அவர் சொல்லும் வாதம் சரி என்று தோன்றியது, நம்மளவில் இதை செயல்படுத்துவோம்ன்னு அன்று இரவே முடிவெடுத்தேன்! நான் இந்தியாவில் தான் வேலையானாலும், தொழிலானாலும் செய்ய வேண்டும் என்று தீர்கமான முடிவு! இந்தியாவுக்கு ஒரு அணில் அளவுக்குகூட இல்லை என்றாலும் பாலம் கட்ட உதவி என்ற நிலையில்!!! இன்று என்னால் சில லட்சம் டாலர்களாக வெளிநாட்டு பணத்தை இந்தியாவுக்குள் கொண்டுவர முடிந்ததது என்ற சந்தோஷம் இருக்கு!

பி.கு: கல்லூரியில் என வகுப்பில் படித்த 63 பேரில் இன்று இந்தியாவில் இருப்பது வெறும் பத்து பேர் தான்!!!!

சரி ஓவராயிடுச்சு நம்ம மேட்டர்கள்!

இனி எட்டு பேரை கூப்பிடனுமா!!!

கீழே உள்ள சாமிகளா ஓடி வந்து எட்டு போட்டு, லிங் கொடுங்க.... 1. சொந்த கதை மன்னன் - அருள்குமார்

 2. பா.ம.க ராசா - குழலி

 3. எங்க பா.க.ச தல - பாலாபாய்

 4. எங்க சங்கத்து பெண் சிங்கம் - பொன்ஸ்

 5. என்னை கவர்ந்த வலைப்பதிவர் பத்ரி

 6. எல்லா பதிவிலும் என்னை ரவுண்டு கட்டி அடிக்கடி அடிக்கும் அசுரன்

 7. என்னை காந்தியவாதி ஆக்கியே தீருவேன்னு துடிக்கு அன்பு மா சிவகுமார்

 8. வலையுலக க்ரிடிக் Boston Bala

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

முதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்?!

" ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடுமா பெண்குலம்?" என்று பொங்கி ஏழுதியிருக்கும் நம் முதல்வர், என்ன சொல்லவறாருன்னு கொஞ்சம் சொல்லுங்க, என்னவோ ஜனாதிபதி பதிவுக்கு முதல் முறையா பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போல ஒரு மாயை க்ரீயேட் செய்யறாரு! ரொம்ப ஓவர் தான் முதல்வரே!

இதற்கு முந்தய ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் லட்சுமி நின்ற போது முதல்வருக்கு இந்த கவிதை ஏன் வரவில்லை!! அப்ப மட்டும் "ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடட்டும் பெண்குலம் என்று இருந்து விட்டுவிட்டாரா??

கேப்டன் லட்சுமி கட்சி சார்ந்த ஒரு வேட்பாளராக கருதமுடியாது! அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்! பல முறை இந்திய சுதந்திரத்துக்காக சுபாஷ் சந்திர போஸோடு இணைந்து போராடியவர்! சுந்திர போராட்டத்தில் பல வருடங்கள் சிறை சென்றவர். இப்படி பட்ட ஒரு பெண்குலத்தை ஏன் அன்று திரு.கருணாநிதி ஆதரிக்கவில்லை??

இன்று நம் முதல்வர் ஆதரிக்கும் பிரதீபா பாட்டீல் வெறும் ஒரு காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸில் இணைந்தால 1962 காங்கிரஸ் எம்.எல்.ஏவாக அரசியலுக்கு வந்தவர்; பெரிய சாதனைகள் ஒன்று இல்லை சொல்வதற்கு! காங்கிரஸ் கட்சியால் கவர்னர் பதிவி கிடைத்து ராஜஸ்தான் கவர்னர் ஆனார்! இவர் ஒரு முழு நேரே காங்கிரஸ் கட்சி தொண்டராக தான் வாழ்திருக்கிறார்!

இப்ப சொல்லுங்க மக்களே, யாருக்கு தகுதி இருந்தது முதல்வர் எழுதிய கவிதையின் பொருளாய் ஆவதற்கு!!??

ஏன் அன்று அனைத்து தகுதியும் இருந்த கேப்டன் லட்சுமியை ஆதரித்து தன் பெண்குல பாசத்தை நிரூபிக்கவில்லை திரு.கருணாநிதி! இன்று ப்ரதீபா பாட்டீலை ஆதரிக்க என்ன காரணம்? இன்று தான் அவருக்கு பெண் உரிமை பற்றி தெரிந்து கொண்டாரா ?

விவாதகளத்தில் அநாகரீக பின்னூட்டம்!

இந்த தமிழ்மணம் விவாதகளம் பக்கமே போகாமல் இருப்போம் என்றால் மனம் கேட்கமாட்டீங்குது! அட பொது மேடை தானே நம் கருத்தும் சொல்லிவைப்போமே என்று அங்கு நாம், நம்முடைய கருத்தை பின்னூட்டமா போட்டா!! அங்க உடன்பிறப்பு லக்கி செய்யும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லை என்று தோன்றுகிறது! அது தமிழ்மணம் விவாதகளமா? அல்லது லக்கிலுக்கின் அரட்டை அரங்கமா?? லக்கிலுக்குக்கு தேவையான, அவர் தலைவனை போற்றும் பின்னூட்டங்கள் மட்டும் ஜல்லியடிக்கும் களமா??

கடந்த வாரம் ஹெல்மெட்! குறிந்தான ஒரு விவாதம் அங்கு துவக்கப்பட்டது! அதில் திருவாளர் லக்கிலுக் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்?


இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன?
நான் பின்னூட்டத்தில் என் கருத்தான

//இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன?//

தலைவருக்கு நல்ல கட்டிங் கரெட்டா கிடைத்திருக்கும். அவ்வளவு தான் அவர் தலைவர் மேல் ஒரு புகார் சொன்னேன். அந்த பின்னூட்டம் பிரசுரிக்கபடவில்லை என்பதோடு அல்லாமல்....

நா. ஜெயசங்கர் அவர்களின் அநாகரிகமான பின்னூட்டத்தினை தவிர்த்து மீதி பின்னூட்டங்கள் வெளியிடப்படுகின்றன. நான் ஏற்கனவே கூறியபடி இது தமிழ்மணம் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான கருத்துக்களம். தலைவர்களின் மீதான தங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை காட்டும் இடமல்ல இது.

அந்த விவாதமேடையில் இப்படி ஒரு பின்னூட்டமிட்டு லக்கி, என் மீது சேர் அடிக்கும் அநாகரீக வேலையையும் செய்ய துவங்கிவிட்டார்!! எப்பொழுதுமே நாகரீக மட்டும் எழுது லக்கி அவர்களே என் பின்னூட்டத்தில் என்ன அநாகரீகம் கண்டீர்கள் என்று சொல்லுங்க பார்ப்போம்? அதை வெளியிட்டு நான் இட்ட அநாகரீகம் பின்னூட்டம் என்ன என்று நிரூபிக்கட்டுமே!

பொது இடத்தில் எல்லாவருக்கும் மதிப்பு கொடுக்கும் பண்பை கற்றுக்கொள்ளுங்கள் லக்கி அவர்களே! உங்களுக்கு கருணாநிதி தலைவர், எங்களுக்கு முதல்வர், நான் முதல்வராக பார்க்கிறேன், என் விமர்சனங்களை சொல்கிறேன்! உங்களுக்கு உங்க தலைவர் சொல்வதும், செய்வது சரியா இருக்கும், நான் அதே ஜல்லி அடிக்கவேண்டும் என்று பொது இடத்தில் வாந்தி எடுப்பது நல்லதல்ல!

அதே போல இதற்கு முன் மாயக்கண்ணாடி பூதக்கண்ணாடியா? என்ற விவாதத்திலும், நான் என் பின்னூட்டமாக

உருப்படியா ஏதாவது விவாதியுங்க இல்ல விவாதமேடையை முடிவிடுங்க!!!
என்று சொன்னேன், சில நாட்களில் அந்த பின்னூட்டமும், பின்னூட்டங்களிருந்து எடுத்து வீசப்பட்டிருந்தது! இப்படி தன் கருத்துக்கு எதிர் கருத்து யார் சொன்னாலும் வெளியிடாமலும், வெளியிட்டாலும் சில நாட்களில் அதை வெட்டித்தள்ளுவதற்க்கு தானா இந்த விவாதக்களங்களின் பொறுப்பாளர் செய்யக்கூடிய வேலை!!!


ஐயா, தமிழ் தெரிந்த புண்ணியவான்களே சொல்லுங்க மேலே உள்ள என் பின்னூட்டங்களில் என்ன அநாகரீகமா இருந்ததென்று சொல்லிக்கொடுங்க தெரிந்து கொள்கிறேன்!

பி.கு: இது போன்ற கட்சி சார்ந்தவர்களை விவாதக்களங்களின் பொறுப்பாளர்களாக ஆக்கினால் இப்படித்தான் கட்சி சார்ந்து விவாதங்களை நடத்தி விவாதகளத்திற்க்கு எதிர்கருத்துள்ளவர்களை வெளியேற்றி, தான் சொன்னது தான் சரி என்ற மாயை உருவாக்குவார் என்பதை தெள்ளத்தெளிவாக நிரூபித்துவிட்டார் நன்பர் லக்கிலுக் அவர்கள்! இனியாவது தமிழ்மணம் இது போன்ற பொருப்பாளர்களை நியமிக்கும் போது கட்சி சாராத பதிவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், அப்படி செய்தால் தான் இந்த விவாதகளம் தழைக்கும் என்று நிச்சயமான உண்மை!!!

ஜெ. வை ஆதரிக்கும் உடன்பிறப்புக்கள்!!!

என்ன ஆச்சர்யம் லக்கி போன்ற உடன்பிறப்புக்கள் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களாமாம் சாமியோ! இன்று போலீஸ் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜெ.வை கைது செய்ய மாட்டாஙகளாம்! சாரி கைது செய்யசொல்லமாட்டாங்களாம்!!!!

நாங்கள் கொஞ்சமாவது சிந்திக்க கூடியவர்கள். எவனோ ஒரு பைத்தியக்கார ஜெ. அபிமானி செய்த காரியத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோரமாட்டோம்.
- லக்கிலுக் ;)


அப்ப அன்று தர்மபுரி கேஸ்ல ஏன் ஜெ.வை கோத்துவிட்டீங்க?


தினகரனில் 3 கொலைகள் நடக்கவில்லை என்றால் இந்த உடன்பிறப்பு இப்படித்தான் சிந்திப்பாரா??

இந்த அழகிரியால பாவம் உடன்பிறப்புக்கள் ஜெ.வை ஆதரித்து பதிவு போட வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டிருக்காங்க!

உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்!!!)

இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் தன் பலத்தை காட்ட அப்பாவி மக்களை கொலை செய்யறாங்க!

பி.கு: பைத்தியகாரனுகளை எல்லாம் கட்சியில் சேர்த்த தலைவருக்கு ஒரு பங்கு இந்த கொலைகளில் உண்டு! அதுவும் எம்.எல்.ஏ பதவி வரை கொடுத்த தலைவருக்கு நிச்சயம் இந்த கொலைக்கு பங்கு உண்டு என்பது என் வாதம்!

திருத்தமுடியாதுடா உங்களை!!!

ஜெயலலிதா மது அருந்தியதாக இரட்டை அர்த்தத்தில் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டது, கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று காலை முதல் பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிமுக எம்எல்ஏ கைது!
ஆடுங்கடா ஆடுங்க... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை. அரசியல்வாதிகள் கையில் பணமும், அதிகாரமும் இருக்கு என்றால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொளுத்திப்போட்டு என்ஜாய் பண்ணலாம்!

அன்று அவர்கள் தினகரன் கருத்துக்கணிப்பு போட்டப்போ, அழகிரி & கோ கலாநிதி மாறனையோ! தயாநிதி மாறனையோ அடிக்கவில்லை, கொல்லவில்லை! இன்று இவர்கள் சொன்னவரை ஒன்னும் செய்யவில்லை!

எந்த நாயாவது சொன்னவனையோ அல்லது செய்தவனையோ கொல்லறீங்களாடா? பாவம் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களையும், காவல் காக்கும் காவலர்களும் தான் கிடச்சாங்களாடா? திரும்ப அடிக்கமாட்டாங்க என்ற தைரியம்! மக்களை விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை காலம் வேண்டிவரும் ?? இந்த பாவமலைகள் இந்தியாவை விட்டொழிக்க!!

கட்டாய ஹெல்மெட் சட்டம் வாபஸ்?

ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடுப்பேத்தின அரசு, இன்று நைசா கை நழுவுதுங்க!!! 99% பேர் வாங்கி போட்டுக்கிட்டாங்க, நல்ல கலெக்ஷன் ஆயிடுச்சு என்றது, இன்று மாலை அறிக்கை விடுறாங்க, போக்குவரத்து காவல் அதிகாரிங்க ஹெல்மெட் அணிவதை கட்டாய படுத்த மாட்டாங்களாம், சும்மா ... அன்பா அட்வைஸ் பண்ணுவாங்களாம்...

பல தரப்பட்ட மக்கள் கிட்ட இருந்து வந்த கோரிக்கை ஏற்று நைசா எஸ்கேப் ஆகுதாம் அரசு???

அடப்பாவிகளா இதை ரெண்டு நாள் முன்னாடி சொன்னா என்ன உங்களுக்கு !!! நல்லா இருங்கடா !

பி.கு:

ஹெல்மெட் போட்டா உங்க உயிருக்கு தான் நல்லதுன்னு அரசுக்கு பின்னாடி ஜல்லியடிக்க சென்ற உடன்பிறப்புக்களே, உங்களுக்கெல்லா என் பதில் என் உயிரை இவ்வளவு நாள் அரசு காப்பாத்தல, இனிமேலும் இந்த மாதிரி அரசு காப்பாத்தாதுன்னு தெரியும், அதனால க்லோஸ் த டோர்!!!

பி.கு:

அரசே இந்த கட்டாய ஹெல்மெட் மாதிரி, எங்க கையில் உள்ள காசை கரெக்ட் பண்ண வேற ஏதாவது நல்ல ஐடியா இருக்கா??

குலக்கல்வி - என்ன கொடுமை சார் இது!!!

இது என்ன கொடுமைன்னு புரியல... குழந்தைக்கு நாக பாம்பிடம் ட்ரெயினிங் கொடுக்கறாங்களாம்??!!! ஒரு சின்னக் குழந்தையை இப்படி செய்து தான் குலத்தொழில் கற்றுக்கொடுக்க வேண்டுமா??சிறுபிள்ளையை பாம்புடன் விளையாட விட்டு வீடியோ பிடிக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள்!!! என்ன தான் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருந்தாலும்!!??

இந்த அறியாமை இருளில் இருக்கும் மக்களுக்கு என்று தான் விடிவு காலமோ!!!

MPக்களே ரொம்ப சந்தோஷம் சாமீ!!!

கடந்த மே 5ஆம் தேதி பாராளமன்றத்தில் வருமை ஒழிப்பு பற்றி ஆலோசனை செய்ய பாராளமன்றம் கூட்டப்பட்டது! அதில் ஜனநாயத்தின் தூண்களான நம் அருமை MPக்கள் அசத்திட்டாங்கன்னா பாருங்களேன்!! கேட்டதும் ஆடிப்போயிட்டேன்!!!!

வருமை ஒழிக்க அலோசனை சொல்லி அசத்திட்டாங்கன்னு, நீங்க பாட்டுக்கு ரொம்ப ஓவரா சிந்திச்சுபுடாதிங்க சார்!!!

545 பேர் கொண்ட பாராளமன்றத்தில் அன்றைய அலோசனைகள் துவங்கும் நேரத்தில் வெறும் ஆறு MPக்கள் மட்டும் ஆஜர், பின்னர் வந்து சேர்ந்தவர்கள் மற்றொரு ஆறு பேர்!!! எப்படி!!!! அசத்தப்போவது யாரு??!!

வந்த அந்த பனிரெண்டு பேர் யாருன்னு கேட்பீங்கன்னு தெரியும்:(வந்த வரிசையில்)

1. டாக்டர். சித்ரா மோகன் (காங், திருப்பதி)
2. பத்ருஹரி மஹதாப் (பீ.ஜே.டி, கட்டக்)
3. பேராசிரியர்.ராசா சிங் ராவத் (பி.ஜெ.பி, அஜ்மீர்)
4. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (காங், கான்பூர்)
5. நவீன் ஜின்டால் (காங், குருஷேத்ரம்)
6. ப்ரான்சிஸ் ஃபாந்தோம் (காங், நியமன உருப்பினர்)
7. சி.எஸ்.சுஜாதா (சி.பி.எம், மாவேலிக்கரா)
8. சி.கே.சந்திரப்பன் (சி.பி.ஐ, திருசூர்)
9. கே.எறான் நாயுடு (தெ.தேசம், ஸ்ரீகாகுலம்)
10. பி.கே. ஹன்டிக் (காங், ஜோர்ஹத்)
11. பா.சிதம்பரம் (காங், சிவகங்கை)
12. ஜெய்ராம் ரமேஷ் (காங்) - இவர் ராஜிய சபா உறுப்பினர் எனபது குறிப்பிட தக்கது. (இவர் ஆள் குறைவா இருக்கு அவை நடக்கன்னு மணி அடித்தப்பின் உள்ளே ஓடிவந்தவர், அதுக்கு முன்னாடி எங்க இருந்தாருன்னு தெரியவில்லை)

இதில் கொடுமை என்னவென்றால் குறைந்தபட்சம் 10 சதவிகித MPக்களாவது (55 பேர்) வரவேண்டும் அவை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற :( வந்தவர்கள் வெறும் 2 சதவீதம் கூட இல்லை!!!!

நம்ம பாராளமன்ற உறுப்பினர்களுக்கு என்னமா மக்கள் மேல அக்கரைன்னு இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்க மக்களே!!!

தமிழ்நாட்டுல தான் டி.வி, 1(2) ஏக்கர் நிலம்ன்னு எல்லாம் கொடுத்து வறுமையை சுத்தமா ஒழித்துவிட்டதால் நம்ம தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி MPக்களும் போகவில்லை, வெளிநாட்டவர் பிரச்சனை நமக்கு எதுக்கு சைலன்டா ஜகா வாங்கிடாங்க போல... அட சிதம்பரம் இருந்தாரே சொல்லவறீங்களா? ஏங்க அவர் தாங்க வருமை ஒழிப்பு பத்தி பேசனும், ஏன்னா, அவர் தான் நம்ம நிதியமைச்சராமே (இந்தியாவுக்கே)! அதனால வேற வழி இல்லாம வந்தாரா இல்லை தெரியாம வந்திட்டாரான்னு யாராவது கேட்டு சொல்லுங்கப்பா!!!

இறுதியில் வருமை ஒழிப்பு ஆலோசனை கூட்டம் ஒழிக்கப்பட்டு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக கேள்வி! அதுவும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை ஏன்னென்றால் பாராளமன்றத்தில் ஏற்கனவே மே 15 வரை அலுவல்கள் திட்டமிடப்பட்டிருப்பதாக பாராளமன்ற நடவடிக்களுக்கான அமைச்சர் ஏற்கனவே கருத்து சொல்லிருந்தாராம் :((((

நம்ம அரசியல்வாதிகள் மற்றும் அசத்தல் MPக்களில் ஏழை மக்கள் மேல் உள்ள பாசத்தை நினைக்கும் போதே எனக்கு புல்லரிக்குதுபா!!! உங்களுக்கு???!!!

பி.கு: இந்தியாவில் 2004-2005 வருட கணக்கு படி, சுமார் 23% மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர் என்று National sample survey organisation (NSSO). அதாவது 23 கோடி மக்களின் ஏழ்மை நிலையை ஒழிக்க ஆசைப்படும் பாராளமன்ற உறுப்பினர்கள் வெறும் 12 பேர்... என்ன கொடுமை சார் இது!!!

நன்றி: Deccan Chronicle, chennai edition

நாளைய தீர்ப்பு - தினகரன் ;)

தினகரன் நாளிதழும் ஏசி நீல்சனும் இணைந்து நடத்தும் கருத்து கணிப்பில் நாளை கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் ? என்று வெளியிடப் படும் என்று நம்ம கோவி கண்ணன் பதிவு போட்டிருக்காரு!

என் ஆருடம் (ஆருடம் எனக்கு தெரியாவிட்டாலும்!) முடிவு இப்படித்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்!

1. ஸ்டாலின் - 46.4 %
2. தயாநிதி மாறன் - 46%
3. ஆற்காடு வீராசாமி - 4%
4. மற்றவர்கள் - 3.6%

இதில் 5% ஏற்றமோ இறக்கமோ இருக்கக்கூடும் ;)

உங்க கருத்தை சொல்லுங்க ப்ளீஸ் ;)

நாளை வலைப்பதிவர் சந்திப்பு - மறந்திடாதீங்க மக்களே!

நன்பர்களே!

நாளை மதியம் 3:30 மணிக்கு வலைப்பதிவர் "சந்திப்பு". மறக்காம வந்திடுங்க!

வலைப்பதிவின் அடுத்த கட்டத்தை தொட இந்த சந்திப்பு ஒரு அஸ்திவாரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்க! சாதி, மத, இன பாகுபாடுகளை தாண்டி மனிதராக ஒன்றினைவோம்! சமூகத்துக்கு நம்மால் இயன்ற நன்மைகளை செய்ய துவங்குவோம்!

இடம்: நடேசன் பார்க், தி.நகர்.

நேரம்: சரியாக மதியம் 3.30 முதல் மாலை: 7.30 வரை.

நாள்: ஏப்ரல்.22'2007, ஞாயிற்றுக்கிழமை.

வருகையை உறுதி செய்ய நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாம். என் கைபேசி 0-99400 45507 எண்ணுக்கும் அழைக்கலாம்.

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

காஞ்சி சேவை மையம் உண்மையில் நடப்பது என்ன?

என் இட ஒதுக்கீடு பதிவில் திரு.ஹரி எழுதிய விளக்கங்களில் உண்மை நிலை என் அறிவுக்கு எட்டிய வரை:

என் கேள்வி:
////பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//

இது எங்கே நடக்குது ஹரி??!! ஆச்சரியமா இருக்கே?? கொஞ்சம் எடுத்து சொல்லுங்க?? ஒன்னும் புரியலை?? யார் செய்யறாங்க? எங்க செய்யறாங்க?? (கலாய்க்க இல்லைங்க சீரியசா கேட்கிறேன்)//
என்ற என் கேள்விக்கு விளக்கம் அளித்த பதிவில் ஹரி கூறிய சில விசயங்கள் சரி இல்லை என்று தோண்றுவதால் இந்த பதிவு. இந்த வாதம் அந்த பதிவில் வைத்துக்கொண்டால் அந்த பதிவின் நோக்கம் திசை மாறும் என்ற எண்ணத்தால் தனி பதிவாக வைக்கிறேன்.

ஆனால் அவர் சொன்ன லிஸ்டில் இருக்கும் பல மையங்களுக்கு நான் நேரடியா போயிருக்கேன், இவை எதுவும் சேவை அடிப்படையில் நடப்பவை அல்ல என்றே தோண்றுகின்றன, எல்லாம் காசுக்கு வேலை செய்கிறது என்று, அந்த ட்ரஸ்ட் நடத்தும் நிறுவங்களுக்கு போய் பார்த்தாலே தெரியும்.

சில உதாரணங்கள்:

1. சின்மயா மிஷன் பள்ளி: இங்கு LKG சேர்க்க சுமார் 15 ஆயிரம் ரூபாய் நன்கொடை தேவை, பள்ளி டேர்ம் பீஸ் சுமார் ரூ.2300 (மூன்று மாதத்துக்கு!) இதில் எங்கே வருது சேவை!! SBOA பள்ளிகளும் இதே அளவு வசூலிக்கிறது, இவை சேவை இல்லை ஹரி, காசு சம்பாதிக்கும் முறை!

2. Child Trust, சென்னை: இங்கும் தொட்டாலே காசு, ரெஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் முதல் சேவை கட்டணம் வரை எதும் ஒரு சாதரண மருத்துவமணையில் சேவைக்கட்டணத்துக்கு குறைவு இல்லை, மேலும் காஞ்சி மடம் இந்த நிறுவணத்தை எடுத்து நடத்துவதற்கு முன் இருந்த நிர்வாகம்(Dr. M.S.Ramakrishnan அவர்களின் கீழ் இருந்த நிர்வாகம்) மிக குறைவான சேவை கட்டணம் அதாவது 20 -30 ரூபாய் வசூலித்து வந்தது! காஞ்சி மடம் இந்த மருத்துவமணையை எடுத்து நடத்த ஆரம்பித்ததும் முதலில் வசதிகளை அதிகப்படுத்தாமல் சேவை கட்டணத்தை ரூ.100 -125 வரை ஆக்கியது! அதனாலேயே அங்கு போவதை நான் நிறுத்தினேன். ரூ.பத்து இருந்த ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம், ரூ.100 ஆனது, இப்ப என்ன சொல்லறீங்க ஹரி!! இதுவா சேவை??

3. சங்கரா மிஷன் மருத்துவமணை: இதுவும் ஒரு சேவை மையம் கிடையாது, ஒரு சாதாரண மருத்துவமனையில் வாங்கும் அத்துனை சேவை கட்டணம் குறைவில்லாமல் வாங்கப்படுது! இதுவா சேவை! தொட்டால் காசு என்ற நிலையே உள்ளது! என் நெருங்கிய உறவினர் அங்கு மருத்துவராக வேலை செய்தார், அவர் இருக்காறே ஏதோ பார்த்து பில் போடுவாங்கன்னு ஒரு ஹெல்த் செக் கப்க்கு போயி, பில் பார்த்து நொந்து போனவன் நான்!!

இந்த சங்கரா ட்ரஸ்ட் நடத்தும் எந்த நிறுவணம் சேவை நோக்கத்தோடு வேலை செய்யுதுன்னு சொல்லுங்க!! பணக் கொள்ளை மட்டுமே முக்கிய நோக்கமாகிவிட்டதுன்னு எனக்கு தோணுது! முன்பு காஞ்சி மடத்துக்கு நெருக்கமான என் நண்பர் ஒருவர் சொல்லுவார், பெரியவர் இருக்குவரை இது போன்ற கொள்ளை இல்லை, ஜெயேந்திரர் வந்த பிறகு தான் கல்லூரி, பள்ளின்னு பணம் கொள்ளை அடிக்கு வழிமுறைகள் உள்ளே வந்ததாக!!! அந்த காசு யாருக்கு போகுது! என்ன ஆகுது என்பதை பற்றி இங்கு கருத்து சொல்ல வரவில்லை! அவை சேவை மையங்கள் அல்ல என்பது மட்டுமே என் கருத்து!!

இந்த கருத்துக்கள் நான் பார்த்த சில மையங்களை வைத்து தான், இதில் லாப நோக்கம் இல்லா நிறுவனம் இல்லை என்றே எனக்கு தோண்றுகிறது. இதில் மாற்றுக்கருத்து இருக்குமானால் வாதங்களை வைக்கலாம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இட ஒதுக்கீடும் செந்தழல் ரவியின் பதிவும்....

செந்தழல் ரவியின் பதிவை பார்த்த பிறகு அதன் தொடர்ச்சியா, இதே விசயம் குறித்து பல முறை குழலியுடன் வாதிட்டபோதும் அவர் ரவியின் பதிவில் சொன்ன அதே மாதிரியான வாதங்களை தான் சொன்னார். இங்கு என் பங்கிற்கு என் எண்ணங்களை முன்வைக்கிறேன்.

என்னை பொருத்த வரை கல்வி+ பொருளாதார நிலை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த விசயம் தான். இட ஒதுக்கீட்டு என்ற பிரச்சனை வந்த உடன் நம்ம மக்கள் எப்பவும் பிராமணர்களை சாடுவது தப்புன்னு தோனுது! கிரீமி லேயர் ஒதுக்கப்பட்டால், அந்த மிச்ச இடங்களில் உள்ளே வரப்போரவங்க ஐயர் இல்லை சாமி! நம் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள மக்கள் தான், அதாவது டி-கிரேடு அரசு பணியாளரை விட கீழ் மட்டத்தில் உள்ளவன், அவனும் தாழ்த்தப்பட்டவன் தான். நம்மால் நம்ம ஆட்கள் மேலே வருவதே பிடிக்கவில்லை என்பது கசப்பான உண்மை! அதற்கு வாதங்கள் பல வைத்து எல்லாவராலும் முடியும். குழலி சொல்லற மாதிரி ஒரு தலைமுறை தான் முன்னுக்கு வந்திருக்கு என்றால், இன்னும் அந்த பகுதி பக்கம் கூட வர முடியாம, கூலி வேலை செய்து, இட ஒதுக்கீட்டின் டேஸ்ட் கூட பார்க்காதா எத்தனை பெரிய சமுதாயம் காத்திருக்கு!!!?? குடிசை பகுதியிலிருந்து ஒரே ஒரு மாணவன் மருத்துவம் அல்லது பொறியில படிப்பு சேர்த்தால், அது இன்றும் ஒரு பெரிய செய்தியா, உலக அதிசயமாக, எல்லா பத்திரிக்கையிலும் வரும் நிலை தான் உண்மை! அவர்களுக்கு ஏன் நாம் வழி விடக்கூடாது!? இந்த நிலை மாற நிச்சயம் இட ஒதுக்கீட்டு கொள்கையில் ஒரு Fine Tuning தேவை! அதை தான் நம்ம உச்சநீதி மன்றம் சொல்லுது என்று நினைக்கிறேன். கிரீமி லேயரால் லாபம் பிராமனர்களுக்கு அல்ல என்ற உண்மை ஏன் மறைக்கப்படுது!

குழலி சொல்லும் 4 தலைமுறை வளர்ச்சி:

1. கூலி வேலை, Wine ஷாபில் சரக்கு வாக்கிதருவது போன்ற வேலை (தலைமுறை ஒன்று)
2. டி கிரேடு அரசு பணியாளர் (தலைமுறை இரன்று)
3. IAS, IPS போன்ற வேலை (தலைமுறை மூன்று)
4. IIT, IIM போன்றவைகளில் படித்து வெளிநாட்டு வேலை (தலைமுறை நான்கு)

ஒவ்வொரு தலைமுறையையும் இந்த நான்கு ஏணி ஏற்றிவிட தான் இட ஒத்துக்கீடுன்னு சொல்லும் குழலி போன்றவர்கள், ஒரு கணக்கை விட்டு விட்டார்கள் போல, ஒரு குரூப்பை முன்னேற்ற 33 X 4 = 132 வருடம் தேவை படுகிறது , அப்ப இன்னும் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும் அடிமட்டத்தில் வாழ்ந்து வரும் கூலித்தொழிலாளி?? இப்படி போனால் அடிமட்டத்தில் உள்ளவனை எப்ப இந்த இட ஒதுக்கீடு பயன் கொடுக்கும்! இப்படி போனால் இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் குடிசைப்பகுதி மக்கள் படித்து மேலே வருவது கடினம் தான் :( , அன்று வரை நம் அரசியவாதிகள், அவனை ஓட்டு வங்கியாக வைத்து கொள்ளையடிப்பது நடந்துக்கிட்டே தான் இருக்கும். அதனால தான் நான், இட ஒதுக்கீடுக்கொள்கையில் ஒரு Fine Tuning தேவை என்று சொல்கிறேன்.

தான் முன்னுக்கு வந்தாலும், கீழே உள்ளவனை மேலே வரவிடாமல் தன்னை சுற்றியே இந்த இட ஒதுக்கீட்டு லாபத்தை வைத்துக்கொள்வதும் ஒரு வகை பிரமணீயம் தான்.

அன்புடன் ஆண்டு விழா 2 - பரிசுப் போட்டி!

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"


எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.


5.
காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.
*
சைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-

எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி

எங்க ப்ரியனுக்காக ஒரு விளம்பரம் ;)

கல்யாண் மறைவிற்கு என் அஞ்சலி!

தமிழ் வலைதிரட்டிகளில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த தேன்கூடுவின் நிறுவனரான திரு.கல்யாண் அவர்களின் மரண செய்தி பெரும் அதிர்ச்சி :(

இவரை நடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்தித்த போது இப்படி சாந்தமானவரா தேன்கூடின் நிறுவனர் என்று ஆச்சர்யபடுத்தினார். தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சிக்கு பல விடயங்கள் முயர்ச்சிப்பதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்ன போது, இந்த சிறுவயதில் இவ்வளவு தமிழ் பற்றா என்று வியக்கவைத்தார்! ஒரு 20 நிமிடம் தான் அவரிடம் நானும், தமிழியும் பேசியிருப்போம்! தேன்கூடு சேவைகள், அதில் உள்ள பிரச்சனைகள் என அனைத்தையும் கூறினார், அத்துனை பிரச்சனைகளுக்கு இடையேயும் அவர் அயராமல் செய்துவரும் தமிழ் சேவை நினைத்து வியந்தோம்! அதற்கு பின் சில மின்னஞ்சல் மூலம் தேன்கூடில் வரும் மேலான்மை சேவைகளை பற்றி செய்திகளை அனுப்பிவைப்பார்.

அவரை அன்று சந்தித்தது தான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை! 29 வயது மரணத்தை தழுவும் வயதா?? வந்தார்! தன் கடமையாக நினைத்து தமிழ் வலையுலக்குக்கு தன்னால் இயன்ற சேவை செய்தார்! இன்று அவர் இல்லை என்றாலும் அவர் சேவைகள் நம்மை நினைவு கூறவைக்கும் என்பது உண்மை!

அவரின் குடும்பத்தாருக்கு நன்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

காலன் இவ்வளவு கொடூரமானவனா!!!

நன்றி நன்பர்களே!

என்னை நட்சத்திரமாக ஒரு வாரம் வலம் வர செய்த தமிழ்மணத்துக்கு என் முதல் நன்றி!

என்னை நட்சத்திரமானதற்கு வாழ்த்திய அனைத்து வலைப்பதிவர்களுக்கும் நன்றி!

இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தமுடியவில்லை என்ற ஆதங்கம் இன்று எனக்கு உண்டு! நேரமின்மை காரணமாக எழுதிய பதிவுகளை கூட சரி செய்து வெளியிட முடியவில்லை! சரி விடுங்க விரைவில் எல்லா பதிவையும் வெளியிடுவோம்! பதிவு வெளியிட நட்சத்திரமாக வேண்டிய அவசியம் இல்லையே!

நன்றி மக்களே! இந்த நன்றியை சொல்லும் வேளையில் என் ஆசை மீண்டும்:

 • சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள் இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்க நம் பாடுபட வேண்டும்!
 • கீழ் சாதி என்று மேல்சாதியும், மேல் சாதி என்றும் கீழ் சாதி ஒருவரை ஒருவர் சொல்வதை நிறுத்தி அனைவரும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்க திட்டமிடுவோம்!
 • என் மதம் சிறந்தது! உன் மதம் தாழ்ந்தது என்று வெட்டியாக மதச்சண்டையிடுவதை நிறுத்து அனைவரும் இணைந்து ஒரு ஒப்பற்ற இந்தியாவை உருவாக்குவோம்!

டிஜிட்டல் அவதாரம் - ஒரு பா.க.ச பதிவு

புது அவதாரம் எடுத்த எங்க தல பாலாபாய்க்கு ஒரு வாழ்த்து சொல்லத்தான் இந்த பா.க.ச பதிவு! சங்கத்துக்கு அப்ப அப்ப வேலை தந்து! ஏதாவது ஐடியா கொடுத்து எங்களை ஊக்கிவிக்கும் தல பாலாபாய்க்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு தொடங்குவோம்!!!

அவதார புருஷனாக வாழ்ந்து வரும் எங்க பாலாபாய் இதுவரை பல அவதாரம் எடுத்துவிட்டார், நம்ம திருமால் பகவான் மேக்ஸிமம் 9 அவதாரம் எடுத்துயிருக்காரு! பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் இந்த கலியுகத்தில் எடுக்கப்போறதா சொல்லறாங்க! ஆனான எங்க தல, கலியுக கிஷ்ணன் பாலாபாய்ஆயிரம் அவதாரம் எடுப்பாரு டெய்லி! எங்க தலையோட லேட்டஸ்ட் அவதாரம் புலியாவதாரம்! அந்த வதாரத்தின் போட்டோ அருகே உள்ளது! இந்த அவதாரம் எதுக்கு என்று கேட்பவர்களுக்கு எங்க தலையின் பதில் "இணைய உலகத்திற்கும், கணினி நாட்டிற்கும்(!) ஏதாவது செய்யனும்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாக ஆசை! " அதை இந்த புது அவதாரத்தில் தான் செய்யனும் என்று ஆசைப்படறாரு!!! இதெல்லாம் உங்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை தரலாம், ஆனா எங்க பா.க.ச மக்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இல்லை, ஏன்னா, இதுக்கு முன்னாடி இவர் பல வித்தைகளை கணினி மற்றும் இணைய உலகத்துக்கு காட்டியிருக்காரு, அதை அறிய நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும்!!!!


'சமீபத்தில்' தல "அம்மா"வை பார்த்து காலில் விழுந்து ஆசி வாங்கியதாகவும், அதனால் தான் அவருடைய புது அவதாரத்தில் "கருப்பு", "வெள்ளை" & "சிகப்பு" கட்சி சாயம் உள்ளதாகவும் எதிர்(ரி) வட்டாரம் (சதுரம்) புரளி கிள்ப்பியுள்ளதாகவும் சொல்லப்படுது!!!

ஜீ போஸ்ட் கௌதம்யின் ஆஸ்தான ப்ளாக் என்ஜினியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது!!!! :)))))))))))))) அதே போல பதிவர் சதுரத்தை இணைத்துக்கு அறிமுகப்படுத்தியதே நம்ம தல தான்!!! இது போதாதா என்ன!!! இனி இந்த புது அவதாரத்தில் இன்னும் பல மேட்டர் செய்து சாதனை படைப்பார் எங்க தல என்பதில் ஐயம் இல்லை!!!!


இதற்கு முன் அவர் எடுத்த யாகவாதாரம் பெருத்த வரவேற்ப்பை பெற்றது அல்லாருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்! நியாபகம் இல்லாதவங்க இங்கே சொடுக்கி பார்க்கவும்!!!

அடுத்து அவர் டாக்ட்ர் அவதாரம் எடுக்க நினைக்கிறான் என்று பா.க.சவில் ஒரு கிசு கிசு இருக்கு அதற்கு காரணம் அவர் எப்பவும் கழுத்தை சுற்றி ஸ்டெத்தாஸ்கோப் மாதிரி ஒரு மொபைல் போன் ஹெட் செட் மாட்டிக்கினு ஜம்முன்னு எப்பவுமே சுத்திக்கிட்டு இருப்பாரு! அனேகமா அதை பேஸ் பண்ணித்தான் மக்கள் அடுத்த அவதாரத்தை கண்டுப்பிடிச்சுயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்!!!

இன்னும் பல அவதாரம் எடுத்து இணையத்தில் சாதனை படைக்க இந்த பா.க.ச படை இருக்கோம் உங்க பின்னாடி (கால வாரத்தான்...). நீங்க தூள் கிளப்புங்க தல!! என்று சொல்லத்தான் இந்த பதிவு!! ஐயோ! ஐயோ!! எங்க தல எப்பயுமே இப்படித்தான்!!!!

எங்க சங்கத்தின் ஆல் டைம் ஹிட் பதிவான "பா.க.சவில் சேர்வது எப்படி?" படித்து தெரிந்து கொண்டீர்களா??

பி.கு:

பா.க.ச இப்ப அன் டார்டிகா, ஐஸ்லாண்டு நாடுகளை தவிர உலத்தின் எல்லா மொக்கு மூலையிலும் கிளைகள் உள்ளது!

அன் டார்டிகா, ஐஸ்லாண்ட் நாடுகளிருந்து கிளை துவக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கலாய்க்க ஆசைப்படுபவர்கள் உடனடியாக பா.க.ச சென்னைப்பட்டின தலைமை கழகத்தை தொடர்பு கொள்ளவும்!!!

மறக்காம இந்த பதிவையும் படியுங்க VA(A)Tட்டும் சேவைவரியும் ஒரு அலசல்!!!

VA(A)Tட்டும் சேவைவரியும்

பலர் பல விதமாக இந்த மதிப்புக்கூட்டு வரியை பற்றி கருத்து கூறிவந்தாலும், உண்மையில் இந்த வரி நமக்கு லாபமா? கஷ்டமா? நஷ்டமா? என்ற கேள்விக்கு யாராலும் பதில் தெளிவாக சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. வியாபாரிகள் சங்கம் இதனால் பொருட்களின் விலை கூடுகிறது என்று கூறிவருகிறார்கள், ஆனாலும் அவர்களால் சரியான புள்ளி விவரங்கள் தரமுடியவில்லை, ஏன்னெனில் விலைவாசியும் உயர காரணங்கள் பல காரணங்கள், அதில் முக்கியமானது ஆன்லைன் ட்ரேடிங், பின்னர் டீசல் விலை, சேவை கட்டணங்கள், வரி என பல. இந்த ஆன்லைன் ட்ரேடிங் எனப்படும் இணையவழி வர்த்தகத்தால் நடக்கும் அராஜகங்கள் பல, இதனால் அரசுக்கு நல்ல வருமானம் என்ற ஒரே காரணத்துக்காக அதை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கு என்பதே கொடுமை!

இன்றைய நிலையில், அனைத்து வித அத்தியாவசிய பொருட்களின் விலையும் 5 - 20 ரூபாய் வரை உயர்ந்து இருப்பது உண்மை! அரிசி, கோதுமை, பருப்பு முதல் காய்கறி வரை எல்லா பொருட்களும் விலையேற்றம், இந்த வரியால் மட்டும் அல்ல! சும்மா நம்ம முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் 50 ரூபாய் இருந்த உழுத்தம்பருப்பு இப்ப 31 ரூபாய் தான் என்று, என்னதான் சப்பை கட்டு கட்டினாலும், மார்கெட்டில் கிடைக்கும் நல்ல உழுத்தம்பருப்பின்(தனியார்) விலை ரூ61/- (நேற்று தான் வாங்கினேன் அதனால தான் தெரிந்தது). இப்படி ஒப்பீட்டு கதைவிடுவதால் ஒரு பயனும் இல்லை, பத்திரிக்கைக்கு ஒரு அறிக்கை என்ற விதத்தில் வேண்டுமானால் நல்லா இருக்கும்!! எது எப்படியானாலும் பாதிப்பு நமக்கு மட்டும் தான்! அதாவது நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனைகள்!

உண்மையில் வாட் வந்ததால், மாநில அரசுக்கு வரியில் வருவாய் பெரும் இழப்பு என்ற நிலை இப்ப, அதனால் இப்ப நம்ம பா.சிதம்பரம் ஒரு சூப்பர் சிறப்பான திட்டம் போட்டு மாநிலத்துக்கு வருமானத்தை தரப்போவதாக சொல்கிறார். எப்படின்னு கேட்கறவங்களுக்கு?

வருகிற ஏப்ரல் முதல், மத்திய அரசு 44 வகையான அத்தியாவசிய சேவைகளை சேவை வரி வட்டத்துக்குள் சேர்க்க உள்ளது. அந்த சேவை வரியை முழுமையாக 100 சதவீகிதமும் மாநில அரசுக்கு கொடுக்கப்போறாங்களாம். மாநில அரசுக்கு சம்பாத்தியம் ஓ.கே! அதை கொடுக்கப்போவது யாரு தெரியுமா?? நம்ம தாங்க!!! எப்படின்னு கேட்பவர்களுக்கு சில உதாரணம் கீழே!

அந்த 44 சேவைகளில் மருத்துவர்களின் கட்டண சேவை வரி, மருத்துவ சோதனை சேவை வரி, வழக்குறைஞர்களுக்கு சேவை வரி, கேளிக்கை கூடங்கள் சேவை வரி, கேளிக்கை விடுதிகளுக்கு சேவை வரி, கேளிக்கை பூங்காக்கள் சேவை வரி, சினிமா நட்சதிரங்களுக்கு சேவை வரி என பன்முனை தாக்குதலுக்கு தயார் ஆகிவருகிறது நிதியமைச்சகம்! இவை வரும் ஏப்ரல் 1, 2007 முதல் அமலுக்கு வருகிறது! இதற்கு பா.சி சொல்லும் சில காரணம் இவர்களின் வருமானம் கணக்கு காட்டப்படாமல் இருக்கிறது! இவர்கள் சேவை கட்டணம் கணக்கு வெளிவருதில்லை என பல கதை சொல்லப்படுகிறது!

இனி உங்க மருத்துவரிடம் சென்றால் உங்க மருத்துவர், தன்னுடைய கட்டணம் + 12.24% சேவை வரியையும் உங்க கிட்ட வாங்க போறாங்க!! அதாவது என் குழந்தை நல டாக்டர் ரூ200க்கு பதில் இனி ரூ 225.00 வாங்க போறாரு!!! அதே போல தான் இனி ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு 12.24% சேவை வரி விதிக்கப்படும்.

சரி மந்திரி சார், இந்த கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் வருமான வரி செலுத்தவில்லை என்று சேவை வரி கொண்டுவரும் உங்களுக்கு , அந்த சேவை வரியை மருத்துவரோ, மருத்துவ சோதனை கூடமோ கட்டப் போவதில்லையென்று உங்களுக்கு தெரியாதா? அதை கட்டப்போவது அந்த மருத்துவரிடமோ/பரிசோதனை நிலையத்துக்கு நோய் என்று போகும் ஏழை எளிவரே என்று தெரியாத உங்களுக்கு??

இனி நம்ம ஓய்வு நாட்களை பொழுது போக்க எம்.ஜி.எம், வீ.ஜி.பி , மாயாஜால் போன்ற இடங்களுக்கு போனால் 12.24% சேவை வரி நீங்க தரவேண்டியிருக்கும். அதாவது எம்.ஜி.எம் டிக்கெட் விலை ரூ 300 என்றால் இனி நம்ம தரவேண்டியது ரூ 337.00 மட்டுமே!!!

ஏற்கனவே சத்தமில்லாமல், கேட்டரிங் எனப்படும் விசேஷங்களுக்கு சமையல் சேவை செய்பவர்களுக்கு, சலவை கட்டணத்துக்கு என 33 வகை சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்ட்டு நம்மிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

இப்படி ஏழை மற்றும் நடுத்தர மக்களை கசக்கி பிழிந்து தான் இந்த அரசை நடத்த முடியுமா? ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மட்டும் கசக்கி பிழிந்து, பணக்காரர்களை பாதுகாக்கும் ஒரு அரசு நமக்கு தேவையா? இதுக்கெல்லாஅம் ஒரு விடுவு காலம் வாராதா??? நம்ம நிதியமைச்சரிடம் ஒன்று செய்ய சொல்லலாம் :

இப்படி பல டைப்புல வரியை கண்டுபிடித்து, அதை எங்க அதை தூக்கிப்போட்டு, எதுக்கு கஷ்டப்படறீங்க, நாங்க பேசாமா, உங்ககிட்ட மொத்த சம்பளத்தையும் கொடுத்திடறோம், நீங்களா பார்த்து ஏதாவது பிச்சை போடுங்க எடுத்துட்டு போய் எங்கயாவது பொழச்சுக்கறோம் என்று!!! ஓ.கே சொல்லுவாரா??


மொத்ததில் VAT வந்ததால் என்ன லாபம்? என்ற கேள்விக்கு பதில் அரசுக்கு லாபம் மக்களுக்கு சாபம் என்று தான் என்னால் சொல்லமுடியும்.

பி.கு:
நம்ம நிதி அமைச்சர் பா.சி இன்னும் பல சூப்பர் ப்ளான் வைத்து இருக்காருங்க! சேவை வரியை 25% ஆக்கி, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையா சேவை வரியை விதிப்பது! அது அடுத்த திட்டம், அனேகமாக அது இந்த நிதியாண்டில் இருக்காது என்பது நமக்கு ஒரு ஆறுதலான விசயம்.

என் நன்பர்கள் சில பேர் 25% சேவை வரி கட்டுபவர்கள்! அவர்கள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கானடா என பல நாடுகளில் வாழ்கிறார்கள், அவர்களுக்கு கிடைக்கும் சில அரசு சலுகைகள் இவை:
 • குழந்தைகள் கல்வி பள்ளி இறுதியாண்டு வரை அரசு ஏற்றுக்கொள்கிறது!
 • குறைவான செலவில் மேல் கல்விக்கு உதவி
 • சீரான சாலைகள், குழிகளில்லா சாலைகள்
 • சுகாதாரமான வாழ்க்கை சூழல்
 • இலவச மருத்துவ வசதி
 • சோஷியல் செக்யூரிடி என்ற பெயரில் வேலையில்லை என்றால் உணவுக்கு காசு!
 • வயது முதிர்ந்த குடிமக்களுக்கு ஓய்வு ஊதியம்
 • இன்னும் பல...
இதில் எவை நம் மக்களுக்கு கிடைக்குதுங்க மிஸ்டர் மினிஸ்டர்!

மீள்பதிவு: பாக்கெட் உணவு பொருட்கள் உஷார்!

சில நாட்களுக்கு முன் பலசரக்கு அங்காடிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருந்தோம், என் மகன் ஒரு பெட்டி Lay's Stax எடுத்துவந்து, அப்பா, இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லு? Zero Added Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கனும் என்று பெரிய ஆள் மாதிரி ஒரு மேட்டரை கேட்டான்!!! போன மாதம், என் மகனுக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸ் அது!!! நான் மறந்துவிட்டேன், என் மகன் ஞாபகம் வைத்து கேட்டான்!!! ஆச்சர்யமாக இருந்தது!!! இந்த தகவல் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் உபயோகமா இருக்கும் என்று தோன்றியதால் இந்த பதிவு.

Hydrogenated Trans Fat & Partially hydrogenated oils:

Trans Fat இயற்கையாகவே பசுவின் பாலில் 2 - 5% சதவீதம் இருக்கும். ஆனால் Hydrogenated Trans Fat என்பது செயற்கையாக செய்யப்படும் Trans Fat. இது பசு, எறுது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும், சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது!!!
இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து!!
இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL)) சத்தை குறைத்து, கெட்ட கொழுப்பு (Low-density lipoprotein (LDL)) சத்தை இருமடங்காக உயர்த்தி நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது!!!

பல எதிர்வினைகளையும் உண்டாக்கும் கொழுப்பு!!! இது இருதய நோய்(coronary heart disease), Cancer, Diabetes மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு. Partially hydrogenated oils என்பது இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை. நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பாக்கெட்டில் கிடைக்கும் உருலைகிழங்கு சிப்ஸ் வகைகள், பீட்ஸா, சாக்லெட் என் துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது!!!

இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த Partially hydrogenated oils/Hydrogenated Trans Fat ?

 • இந்த எண்ணைகள் பல முறை திரும்ப திரும்ப உபயோகித்தாலும், தயாரித்த உணவில் மணம் மாறாது!
 • 18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்த கெட்டுப் போகாமல் வைத்துக்கொள்ள முடியும். சாதாரண எண்ணையில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது!!
 • இந்த எண்ணையில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே!! நீங்களே கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யற ஃப்ரென்ச் ஃப்ரைஸ் மெக் டொனால்ட், மேரி ப்ரெளன், பீஸா கார்னர்களில் கிடைக்கும் அளவுக்கு சுவை இல்லை என்று!!!

பல முன்னேறிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்த Hydrogenated Trans Fat உள்ள உணவுகளை தடை செய்து வருகிறது!! மெக் டோனால்ட், KFC போன்ற பல நிறுவனங்கள் இன்று இதை உபயோகிப்பதால் பல கோடி டாலர்கள் வழக்குகளில் போராடிவருகின்றன!!! சில நிறுவனங்கள் ஏப்ரல் 2007 முதல் இந்த எண்ணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் உத்தரவாதங்களும் தந்திருக்கின்றன, அட இந்தியவில இல்லைங்க, அமெரிக்காவிலே!!! இந்தியாவில் இன்றும் மெக் டோனால்ட், KFC போன்றவை சுதந்திரமாக இந்த எண்ணை உபயோகித்து நம் ஆரோக்கியத்தை அழித்து வருகிறது.

நீங்க செய்யவேண்டியது என்ன?

இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ், ப்ரெச் ஃரைஸ் என எதை வாங்குவாதா இருந்தாலும் அதில் Hydrogenated Trans Fat = Zero (0) , Zero Added Hydrogenated Trans Fat , Zero Hydrogenated Vegitable Oil இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பொருட்களை வாங்குங்கள்!!!

டாப் 10 Hydrogenated Trans Fat உள்ள உணவுகள் இங்கே சொடுக்கவும்.

உபரி தகவல்:

உங்கள் வீட்டில் பூரி மற்றும் Deep Fry செய்யப்பட்ட மிச்சம் ஆகும் எண்ணையை திரும்ப உபயோகித்தாலும் அந்த உணவு பொருட்களில் இது போன்ற Hydrogenated Trans கொழுப்பு நிறைந்துவிடும். அதனால் ஒரு முறை உபயோகித்த எண்ணையை திரும்ப உபயோகிக்காமல் இருப்பது நல்லது!!! வீட்டு உபயோகத்தில் இந்த கொழுப்பை கட்டுப்படுத்த பல நல்ல தகவல்கள் இங்கே சொடுக்கவும்.

கோலாக்கலும், பூச்சிமருந்தும் அரசியல்வாதிகளும்!

இதுவரைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கோக் மற்றும் பெப்சியின் மீது பூச்சி மருந்து படிமம் இருப்பதாக புகார் வந்தது!

முதலில் 2003 ஆகஸ்டில் அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம், இந்தியாவில் தயாராகும் கோக், பெப்சி போன்ற 12 வகை குளிர்பாணங்களில் பூச்சிமருந்து படிமம் உள்ளதாக அறிக்கை வெளியிட்டு ஒரு கலக்கு கலக்குச்சு! பெப்சியின் குளிர்பாணங்கள் அனுமதிக்கப்பட்ட(0.0005 mg/l) பூச்சிமருந்து அளவுகளைவிட 36 மடங்கு அதிகமாக (0.0180 mg/litre) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! கோக் நிறுவன குளிர்பாணங்களில் சுமார் முப்பது மடங்கு அதிகமாக (0.0150 mg/litre) இருந்தது! அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாங்கிய அதே நிறுவனங்களின் குளிர்பாணங்களில் ஒரு மில்லிகிராம் கூட பூச்சிமருந்து படிமம் இல்லை என்ற உபரி தகவலும் அந்த அறிக்கையிலிருந்தது.

உடனே நம்ம அரசியல்வாதிகள் என்னவோ மக்கள் நலம் காப்பவர்கள் போல தினமும் ஒவ்வொறு கட்சியிலிருந்தும் ஒரு ஆள் மினிமம் இந்த நிறுவனங்களை திட்டி அறிக்கை விட்டார்கள்! முக்கியமா நம்ம கம்யூனிஸ்டுகள்! அரசு அதை தடை செய்ய வேண்டும் என்று கூப்பாடுயிட்டார்கள்! அந்த நிறுவனங்கள் முன் தர்னா செய்தார்கள்! அறிக்கை! ஆர்பாட்டம்! என்று தூள் கிளப்பினார்கள். வெறும் முப்பது நாட்களில் அத்தனை சூடும் அடங்கி சைலண்ட் ஆனார்கள் நம்ம அரசியல்வாதிகள். நம்ம அரசும் ஒரு கூட்டு பாராளமன்ற உறுப்பினர் குழு அமைத்து எஸ்கேப் ஆனது! அந்த குழு எதை ஆராய அமைக்கப்பட்டது என்பது தான் வேடிக்கை! அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையத்தின் செயல்பாடுகளை ஆராயத்தான்! கோக் அல்லது பெப்சி நிறுவனத்தின் உற்பத்தி முறையை ஆராய அல்ல!!!! இப்படி அடங்கி போனது ஏன்? அந்த நிறுவனங்கள் தன் தவறை சரி செய்து நற்சான்று வாங்கிவிட்டதா? பூச்சிக்கொல்லியின் அளவு குறைந்ததா? இவர்களின் பாக்கெட் நிறைந்ததா? ஏன்? ஏன்? ஏன்? இந்த கேள்வி கேட்கவும் ஆள் இல்லை! வெகு சிலர் கேட்டார்கள் அதற்கு பதில் தர அரசியல்வாதிகள் காதில் விழவும் இல்லை!!! அதோட 2003 குளிர்பாண பூச்சிக்கொல்லி பிரச்சனை முடிந்தது!

மீண்டும் மூன்று வருடம் பின்னர் ஆகஸ்டு 2006, அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம் நாடு தழுவிய ஆராய்ச்சி செய்து ஒரு ரிப்போர்ட் கொடுத்தது உடனே நம்ம அரசியவாதிகள், அந்த மையத்தையும் அதன் நிறுவாகிகளை பழித்தனர்! அந்த நிறுவனமும், அதன் சோதனைமுறைகளும் தகுதியற்றவை என்று ஒரு தூள் ரிப்போர்ட்! நம்ம சுகாதார துறை மந்திரியோ ஒரு படி மேலே போய் அந்த குளிர்பானங்கள் குடிக்க தகுதியானவை என்று பாராளமன்றத்தில் அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கை கோக் நிறுவனத்தின் செலவில் லன்டனில் ஆராய்ச்சி செய்யப்பட்ட அறிக்கையை ஆதாரமாக வைத்து இந்த நற்சான்று கொடுக்கப்பட்டது! அத்துடன் சில மாநில போட்டிருந்த தடைகளையும் இல்லாமல் செய்தது! இதற்கும் 2003ல் அமைத்த பாராளமன்ற கூட்டுக்குழு இந்த ஆராய்ச்சி மையத்தின் செய்முறையும் அதன் ஆராய்ச்சிகளும் திருப்த்தியளிப்பதாக பாராளமன்றத்தின் அறிக்கை தாக்கல் செய்த பின்னர்! மேலும் மந்திய சுகாதார துறை மந்திரி ஒரு குழு அமைப்பதாகவும், அது கோக் மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்களின் தரம் மற்றும் உற்பதி வரைமுறைகளை ரெடி செய்யும் என்று சொன்னார்! அது எப்ப இந்த விதிமுறைகளை தயார் செய்யும்? எத்தனை நாள் ஆராய்ச்சி செய்யும்? அன்று அவர் சொன்னது அது ஒரு வருடமும் ஆகலாம், இரண்டு வருடமும் ஆகலாம்!!! அத்தோடு அரசின் மக்கள் பணி முடிவடைந்துவிட்டது!!! கொடுமைடா சாமீ!!!

அப்புறம் கம்யூனிஸ்டுகள் சில நாடகள் மக்களை திரட்டி கொஞ்சம் போராடற மாதிர் பாவ்லா காட்டினார்கள் அப்புறம் காணாம போயிட்டாங்க அவர்களும்! இப்போ நம்ம மக்களே மறந்து போயி கோக்கும் பெப்சியும் குடிச்சுக்கிட்டுயிருக்காங்க! (நான் 2006 ஆகஸ்டோட இதுகல குடிக்கறதை விட்டு விட்டேன்! இவனுக காசு பார்க்க நான் தான் கிடைத்தேனா என்று!!!)

எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் இவைதான்:

 • எதற்காக இந்த அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம்? மற்றும் அதன் ஆராய்ச்சிகள்?
 • ஒவ்வொரு முறையும் போராட்டம் சில நாட்கள் இல்லை மேக்ஸிமம் ஒரு மாதத்த்தில் வேற ரூட்டுல போயி காணாமா போகுதே என்ன காரணம்?
 • உள்ள என்ன தான்யா நடக்குது? ஒரு குளிர் பானநிறுவனத்தின் மேல் உள்ள பாசம், மக்கள் ஓட்டுப்போட்டு மேல அனுப்பட்ட உங்களுக்கு ஏன் மக்கள் மேல் பற்று இல்லாம போச்சு?
 • எப்படியும் எனக்கு ஓட்டுப்போடறவன் எனக்கு ஓட்டு போடுவான் என்ற ஆதீத நம்பிக்கையா??
 • ஆனா நிறுவனங்கள் அப்படியல்ல என்ற பயமா? அடுத்த தேர்தலுக்கு செலவுக்கு கை கடிக்க விட்டுவிடுவார்களா??
 • உண்மையில் இந்த குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி இருக்கா? அதுக்கு என்ன வரைமுறை? எப்பதான் இதற்கான கட்டுப்பாடுகளை இந்த அரசு செயல் படுத்தும்!
மருந்து உயிரோடு இருக்கும் போது தேவைப்படுவது! மக்கள் இவைகளை குடித்து காசநோய், புற்றுநோய், மலட்டுத்தன்மை என பல தரப்பட்ட வியாதிகள் பாதித்து அழிவதற்கு முன், இவைகளுக்கு கட்டுப்பாடு போட்டால் உபயோகயிருப்பதாக தோன்றுகிறது! நான் சொல்லும் உபயோகம் நம்ம மக்களுக்குங்கோய்!!!

என் பழைய பதிவான நாடகம்.காம் பதிவை படிச்சீங்க!!

ஸ்டார் தடாலடி போட்டி!

மகா ஜனங்களே!

Gpost கௌதம்ஜீயின் 'அடுத்த தடாலடி எப்போ?' என விசாரித்துப்பார்தால் ரிஸ்ல்ட் ஒன்றும் இல்லை, சரி நம்மளே ஒன்னு வைப்போம் என்று இறங்கிவிட்டேன்!

இதோ நான் தரும் அடுத்த தடாலடிப் போட்டி!


இந்த புகைப்படத்தில் உள்ளது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்!
ஆகவே தோழர்களே..
போட்டிக்கான இறுதி நாள்: 07.02.2007, சனிக்கிழமை
கெடு நேரம்: காலை பத்து மணி (இந்திய நேரப்படி)

நேரம் முடிந்துவிட்டும் உங்களை காக்க வைத்தமைக்கு மன்னியுங்க ப்ளீஸ்!

சரியான பதில் : திருமதி. சோனியா காந்தி

சரியான பதில் சொன்ன அனைவருக்கும் என் இதயத்தில் ஒரு ஏக்கர் இடம்! ஜாலியா குடிவாங்க ;)

என் இன்றைய மற்றொரு பதிவான ஏன் இந்த சாதி வெறி! பதிவை படிச்சீங்க!!

அட ஆமாம் அவங்களை மாதிரியே இருக்காங்கபா!!!

ஏதாவது சொந்தமா இருக்குமோ??!!!

இந்த படத்தில் உள்ளது ரீவ்ஸ் என்று எல்லாரும் சொல்லிட்டாங்க! ஆனா பாருங்க அப்படியே நம்ம திருமதி .சோனியா சின்ன வயசுல இருந்தா மாதிரியே இருக்காங்க! எப்படின்னு ஒரு போட்டி வைக்கலாமா?? ;)

ஏன் இந்த சாதி வெறி!

அருந்ததியினர் இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஐந்து குழந்தைகள் தமிழக அரசு நடத்தும் அங்கன்வாடியில் சேர்க்கமுடியாமல் தவிக்கும் பெற்றோர் பற்றிய செய்தி வந்திருந்தது! இது நடந்தது வேற எங்கயும் இல்லைங்க நம்ம சமூகநலத் துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை அவர்களின் தொகுதியான ஆளங்குலத்துக்கு உட்பட்ட தெற்குப்பட்டி கிராமத்தில் தான் இது நடந்திருக்கிறது.

இந்த் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளை அங்குள்ள அங்கன்வாடியில் (Kindergarten) வகுப்புக்களில் சேர்க்க மறுத்தது வருபவரும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்த்தவர் என்பதை அறியும் போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த அங்கன்வாடி ஊழியர் அந்தோணியம்மாள், பள்ளர் என்னும் ஒரு இனத்தை சேர்ந்தவர், இவர்கள் அருந்ததியினரைவிட ஒரு படி உயர்ந்தவராம்! அதனால் அருந்ததியினரை அங்கன்வாடியில் சேர்த்து, அவர்களுக்கு பனிவிடை செய்யமாட்டேன் என்று கூறியிருக்கிறார் அந்த அங்கன்வாடியின் ஊழியர் அந்தோணியம்.

தெற்க்குப்பட்டியில் மேலும் விசாரித்த மும்பய் மிரர்ரின் செய்தியாளருக்கு கிடைத்தது மேலும் அதிர்ச்சியான தகவலகளே!
"கடந்த இருபது ஆண்டுகளில் அந்த அங்கன்வாடியில் அங்குள்ள 40க்கும் மேற்ப்பட்ட அருந்ததியினர் குடும்பங்களிருந்து ஒரு குழந்தை கூட மதிய உணவு மற்றும் பாடசாலையில் சேர்ப்படவில்லை. இதற்க்கு அந்தோனியம்மாள் மட்டும் காரணம் அல்ல, தெற்க்குபட்டி யாதவர், இஸ்லாமிய மற்றும் பள்ளர் இனத்தை சேர்த்தவர்கள் பெருவாரியாக வசிக்கும் கிராமம், அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஒரு அருந்ததியினர் இன குழந்தை படிப்பதை விரும்பாததும் ஒரு முக்கிய காரணம்" என்று சி.பாப்பா, அருந்ததியினர் பெண்கள் வளர்ச்சி அமைப்பின் தலைவர் வருத்ததுடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் "அங்கு அருந்ததியினர் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது ஒன்று மட்டுமல்ல, தபால்காரர்கள் கூட இந்த 40 குடும்பங்களுக்கு வரும் பணம் மற்றும் தபால்களை கொண்டுவந்து தர மறுக்கு கொடுமையும் பல நேரங்களில் நடக்கும், இந்த குழந்தைகளுக்கு படிக்க வைக்க வேண்டுமானால் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இஸ்லாமியர் நடத்தும் பள்ளில் ஐந்து வயது நிரம்பிய பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பு முதல் சேர்க்கப்படுகிறார்கள், இங்குள்ள சாதி பிரச்சனைகள் அனைத்தையும் அரசு அதிகாரிகள் அறிந்திருந்தும், கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்" என்று வருத்தப்பட்டார்.

அந்த பகுதியின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரியான தேவி குமாரி அனுகிய போது அவர் கூறியது "அந்த அங்கன்வாடியில் ஏற்கனவே 40 குழந்தைகள் உள்ளனர், இடமின்மை மற்று வேலை பளூ காரணமாகத்தான் இந்த குழந்தைகளை அந்தோணியம்மாள் சேர்த்துக்கொள்ளவில்லை!!!".

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி இட்ட அரசாணையில் "இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் எக்காரத்தை காட்டியும் அங்கன்வாடியில் சேர்ப்பதை தவிர்க்கக்கூடாது"என்ற தெளிவான அரசாணை இருந்தும், திட்ட அதிகாரி சொல்லும் காரணங்கள் சிறிது ஏற்புடையதாக இல்லை.

உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்படும் இந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் முக்கிய குறிக்கோள்:

"ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுககு மேம்படுத்தப்பட்ட சத்துணவு, சுகாதாரம் மற்றும் உளவியல்-சமூக நிலைமை உயர்த்துவது"
என்ற கொள்கையுடன் துவங்கப்பட்ட அங்கன்வாடிகளே அக்குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சமூக முறையில் பிரச்சனைகளை தருவது கொடுமையான விசயம். அரசு இதில் கவனம் செலுத்தி இது போன்ற சாதி அடிப்படையிலான சமுதாய பிரச்சனைகளை குறைந்தபட்சம் அரசுக்கு கீழ் உள்ள தளங்களிலாவது களைய முயற்சி எடுக்கவேண்டும் என்ற ஆசையுடன் இந்த் பதிவை இங்கு பதிக்கிறேன்.

இந்த சாதி வெறி நம்ம வலைப்பதிவர்களிடமும் இருக்கு! நம்ம டோண்டு சார் என்னமோ முதலியார் என்று திரு .நடேசனை சொன்னால் தான் அவருக்கு மரியாதை என்ற ரேஞ்சில் எழுதி சாதியை நிலை நிறுத்த பாடுபடுவதை பார்த்தால் ஒரு பயம் தான் வருது! ஒருவருக்கு மரியாதை அவர் சாதியால் வருவதில்லை மக்களே, அவர் செய்த மக்கள் தொண்டுகள், நம் சமுதாய வளர்ச்சிக்கு அவர்கள் செய்த நற்காரியங்களை வைத்தே வருது!

இந்த சாதி பாகுபாடு ஒழிக்க படித்த, நம்மை போன்றவர்கள் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற என்னமே இந்த பதிவுக்கு முக்கிய காரணம்.

என் முந்தய பதிவான குழந்தைகள் தின அதிர்ச்சி! பதிவை படிச்சீங்க!!

செய்திக்கு நன்றி : ஜெயராஜ் சிவன், மும்பை மிரர்