Posts

Showing posts with the label பொங்கல்

பொங்கட்டும் பொங்கல்....

Image
தமிழர் திருநாளாம் பொங்கல்வாழ்த்துக்களுடன் என் ஆசையையும் சேர்த்துத்தான் சொல்லி வைப்போமே! காசா! பணமா!! சமயம், சாதி, பிரிவினையில்லா சிறந்த ஒரு பொங்கலாய் இந்த பொங்கல் பொங்கட்டும்! விவசாயம் பெருகி, விவசாயிகள் பெருவாழ்வு வாழ்ந்து, நம்மையும் வாழவைக்க இந்த பொங்கல் நல் பொங்கலாகட்டும்! பொங்கல் பொங்குவது போல் நம் மக்களுக்கு நன்மைகளும் பெருகி, நாடும் வளம் பெற இந்த பொங்கல் வழி செய்யட்டும்! வீரம் வளர்ந்த மண்ணில் உதிரம் கொட்டாமல் வெற்றிகள் கொட்டட்டும் என்ற ஆசையுடன். நம் வலயுலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!! இங்கே நம்மை சேர்த்து வைத்த தமிழ்மணம், தேன்கூடு தளங்களுக்கு நன்றியும், சிறப்பு பொங்கல் வாழ்த்துக்களும்!!!