திருமங்கலம் லேட்டஸ்ட் முடிவுகள்! தி.மு.க 41,341 முன்னிலை!!

திருமங்கலம் லேட்டஸ்ட் முடிவுகள்!

நேற்று நாம் சொன்னதில் ஒன்று அனேகமாக நடந்துவிட்டது!

தி.மு.க - 78,106
அ.தி.மு.க - 36,765
வித்தியாசம் - 41,341

அடுத்த விசயங்கள் விரைவில் தொடரும்... மேலும் விவரங்களுக்கு என் நேற்றைய பதிவை பார்க்கவும்.

மறக்காமல் வலது பக்கம் உள்ள வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் :)

திருமங்கலம் முடிவும் மாறும் கூட்டணிகளும்

நாளைய திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் என்ன நடக்கலாம் என்ற சிறு அலசலே இந்த பதிவு. திருமங்கலம் தொகுதி வர இருக்கு பாராளமன்ற தேர்தலுக்கு ஒரு வெள்ளோட்டமாக கருதப்படுகிறது! இங்கு விழும் ஓட்டுக்களை வைத்து மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் என்ற ஒரு மாயாயை உருவாக்க முடியும், அதனால் ஜெயிக்கும் கட்சிக்கு கண்டிப்பாக சில சதவீத ஆதரவு பெருகும் என்பது ஒரு கருத்து! அதனால் எப்படியும் ஜெயிப்பது என்று இரண்டு கழகங்களும் கச்சை கட்டி இறங்கி இருக்கிறது!

எனக்கு தெரிந்தவர்களிடமிருந்து தகவல் படி இறக்கப்பட்ட காசுக்கு கண்டிப்பா தி.மு.க தான் ஜெயிக்கும், அது நிச்சயம்! ஒரு ஆளுக்கு 5 - 6 ஆயிரம் வரை காசு கொடுத்திருக்கிறார்கள் ஓட்டுக்காக என்ற நிலையில் கண்டிப்பா அதிகம் கொடுத்தவருக்கே ஓட்டு என்ற லாஜிக்ல் பார்த்தால் நிச்சயம் அது தி.மு.கவுக்கு தான் அதிக ஓட்டு கிடைக்க வழி உள்ளது! இத்துணை கோடி செலவு செய்து எதற்காக இந்த ஓட்டு பிச்சை என்றது எனக்கு தோன்று சில விசயங்கள். பாவம் அ.தி.மு.க குறைவான காசு + தி.மு.க ஆட்சிக்கு எதிர்ப்பு ஓட்டுக்களை மட்டும் வைத்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்றே தோன்றுகிறது! 25% வெளியூரில் வேலை செய்யும் மக்கள் கொண்ட ஒரு தொகுதியான திருமங்கலம் 89% ஓட்டுகள் விழும் அளவுக்கு காசுக்காக வந்து ஒரு பெரிய ஜனநாயக புரட்சியை செய்ய வைத்திருக்கிறது தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்று நினைக்கும் போது! ஜனநாயத்தின் மேல் எனக்குள்ள நம்பிக்கை குழி தோண்டி புதைந்தது போன்று தோன்றுகிறது! அது வேறு விசயம்.


தி.மு.க ஜெயித்தால் இவை எல்லாம் கண்டிப்பாக நடக்கும்:

1. தி.மு.க தன் பாராளமன்ற கூட்டணியை மெதுவாக பா.ஜ.கவிடம் சாயப்பார்க்கிறது என்று தோன்றுகிறது! ஏன்னா டாக்டர் ராமதாஸை நக்கல் அடிக்கு அதே தி.மு.கவும் அதே ஜெயிக்கும் கட்சிக்கு தாவுதல் என்ற கோட்ப்பாட்டை தான் இதுவரையும் செய்துள்ளது. உதாரனத்துக்கு இதற்கு முன்பு தி.மு.க - பா.ஜ.கவுடன் கூட்டணி இருந்தது! ஐந்து வருடங்கள் சரியாக முடியும் போது, திரும்ப பா.ஜ.க வருவது கடினம் என்று தெரிந்ததும், பெரிய காரணம் ஒன்றும் சொல்லாமல் நைசாக காங்கிரஸ் பக்கம் தாவியது அனைவருக்கும் தெரிந்ததே! இப்பொழுது எனக்கு தெரிந்து காங்கிரஸ் போனமுறைக்கு வந்த அளவுக்கு கூட வர வாய்ப்பு இல்லை, அதனால் இந்த முறை கண்டிப்பா பா.ஜ.கவிடம் ஆட்சி அகப்படலாம். அதனால் மு.க தன் பங்குக்கு காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.

2. இப்படி சாயும் போது மக்கள் மீண்டும் தாவிட்டார் என்று நினைக்க கூடாது என்ற நோக்கில் மீண்டும் ஈழம் மக்களில் பிரச்சனையை கவனிக்காதா மத்திய காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு உதவுவது ஏதோ நேற்று தான் தெரிந்தது போல அறிக்கை வெளியிடப்படும். காங்கிரஸ் தி.மு.கவால் கண்டிக்கப்படும். சில அறிக்கை போருக்கு பின் வழக்கம் போல மு.க தான் காங்கிரஸுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவார்.

3. கடந்த 2 வருடங்களாக ஈழத்த்தை ஒரு பெரிய பிரச்சனையாக பார்க்காத தி.மு.கவும், மு.கவும் தீடீர் பாசம் பொங்கி படங்கள் காட்டப்படும். மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் உண்ணாவிரதம், மனித சங்கிலி என பல போராட்டங்கள் நடக்கும்.

4. பா.ஜ.க சில நாட்களுக்கு முன் தன் பங்கிற்கு காய்களை நகர்த்த துவங்கிவிட்டது! இல கணேசன் ஏதோ அவருக்கு ஈழத்தமிழர் கஷ்டப்படுவது நேற்று தான் தெரிந்தது போல அறிக்கையும், பா.ஜ.க தன் கட்சியில் கூட்டம் போட்டு ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று ஒரு முடிவு போட்டுள்ளது!

5. பா.ஜ.க அந்த நிலையை விடாது பிடித்துக்கொண்டு, தி.மு.க போராட்டங்களுக்கு ஆதரவு தரும், பின்னர் பாராளமன்ற தேர்தலுக்கு கூட்டணி பேசப்படும்.

6. ராமதாஸும் மெதுவாக ஈழம் ஆதரவு காரணமாக நாங்களும் தி.மு.க மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஈழ மக்களை காப்பாற்ற போகிறோம் என்று சூழுரைக்கப் போகிறார்.

7. ம.தி.மு.கவுக்கு நூல்விடப்படும், வை.கோவும் அந்த கூட்டணிக்கு தாவுவதற்கு நல்ல வாய்ப்புக்கள் இருக்கிறது! ஈழம் மேட்டர் ஒன்றே போதுமானது!

8. தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் + சன் டிவி என்று ஒரு பலம்வாய்ந்த கூட்டணியை காட்டப் போகிறார்கள். அந்த் பலத்தை வைத்து தி.மு.க தன் மாநில ஆட்சியையும் காங்கிரஸ் ஆதரவு இல்லாம தக்கவைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

9. அடிபட்ட காங்கிரஸ் அ.தி.மு.க மற்றும் விசயகாந்தின் தே.மு.தி.கவை கூட்டணிக்கு முயற்சிக்கும், சில தகவல்கள் படி காங்கிரஸ் ஏற்கனவே தே.மு.தி.கவுக்கு வலை விரித்து இருப்பாதாக சேதி! விஜயகாந்த் எந்த பக்கமும் சாயாமல் இருப்பார அல்லது மெதுவாக பாராளமன்றம் என்பது ஒரு தேசிய நீரோட்ட்டம் அதற்கு ஒரு தேசிய கட்சி தேவை என்ற வகையில் காங்கிரஸுக்கு தலையாட்டுவாரோ தெரியவில்லை! ஆனால் அதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். அப்படி ஒரு நிலை வந்தால் காங்கிரஸ் - தே.மு.தி.க மற்று சில துக்கடா கட்சிகளும் இணைந்து ஒரு பலமான மூன்றாம் அணியாக காட்ட முயற்சிக்கலாம்.

10. அ.தி.மு.க வேறு வழியில்லாம் கம்யூனிஸ்டுகள் மற்றும் வாண்டையார் போன்ற ஒரு சில ஆயிரம் ஓட்டுகள் உள்ள கட்சிகளை வைத்துக் கொண்டு, தி.மு.க மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்களை நம்பி ஒரு அணியாக முயற்சி நடக்கலாம். ஒரு வேளை திருமங்கலம் வெற்றி பெற்றால் அந்த வெற்றியும் மக்கள் ஆதரவு சீன் போட ஒரு நல்ல மேட்டராக இருக்கும் ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு!

வரும் நாட்களில் இவைகள் அனைத்து நடக்க வாய்ப்புக்கள் அதிம் என்றே தோண்றுகிறது!

பி.கு: மறக்காமல் வலது பக்கம் உள்ள வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் :)