கல்யாண் மறைவிற்கு என் அஞ்சலி!

தமிழ் வலைதிரட்டிகளில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த தேன்கூடுவின் நிறுவனரான திரு.கல்யாண் அவர்களின் மரண செய்தி பெரும் அதிர்ச்சி :(

இவரை நடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்தித்த போது இப்படி சாந்தமானவரா தேன்கூடின் நிறுவனர் என்று ஆச்சர்யபடுத்தினார். தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சிக்கு பல விடயங்கள் முயர்ச்சிப்பதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்ன போது, இந்த சிறுவயதில் இவ்வளவு தமிழ் பற்றா என்று வியக்கவைத்தார்! ஒரு 20 நிமிடம் தான் அவரிடம் நானும், தமிழியும் பேசியிருப்போம்! தேன்கூடு சேவைகள், அதில் உள்ள பிரச்சனைகள் என அனைத்தையும் கூறினார், அத்துனை பிரச்சனைகளுக்கு இடையேயும் அவர் அயராமல் செய்துவரும் தமிழ் சேவை நினைத்து வியந்தோம்! அதற்கு பின் சில மின்னஞ்சல் மூலம் தேன்கூடில் வரும் மேலான்மை சேவைகளை பற்றி செய்திகளை அனுப்பிவைப்பார்.

அவரை அன்று சந்தித்தது தான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை! 29 வயது மரணத்தை தழுவும் வயதா?? வந்தார்! தன் கடமையாக நினைத்து தமிழ் வலையுலக்குக்கு தன்னால் இயன்ற சேவை செய்தார்! இன்று அவர் இல்லை என்றாலும் அவர் சேவைகள் நம்மை நினைவு கூறவைக்கும் என்பது உண்மை!

அவரின் குடும்பத்தாருக்கு நன்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

காலன் இவ்வளவு கொடூரமானவனா!!!

நன்றி நன்பர்களே!

என்னை நட்சத்திரமாக ஒரு வாரம் வலம் வர செய்த தமிழ்மணத்துக்கு என் முதல் நன்றி!

என்னை நட்சத்திரமானதற்கு வாழ்த்திய அனைத்து வலைப்பதிவர்களுக்கும் நன்றி!

இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தமுடியவில்லை என்ற ஆதங்கம் இன்று எனக்கு உண்டு! நேரமின்மை காரணமாக எழுதிய பதிவுகளை கூட சரி செய்து வெளியிட முடியவில்லை! சரி விடுங்க விரைவில் எல்லா பதிவையும் வெளியிடுவோம்! பதிவு வெளியிட நட்சத்திரமாக வேண்டிய அவசியம் இல்லையே!

நன்றி மக்களே! இந்த நன்றியை சொல்லும் வேளையில் என் ஆசை மீண்டும்:

 • சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள் இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்க நம் பாடுபட வேண்டும்!
 • கீழ் சாதி என்று மேல்சாதியும், மேல் சாதி என்றும் கீழ் சாதி ஒருவரை ஒருவர் சொல்வதை நிறுத்தி அனைவரும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்க திட்டமிடுவோம்!
 • என் மதம் சிறந்தது! உன் மதம் தாழ்ந்தது என்று வெட்டியாக மதச்சண்டையிடுவதை நிறுத்து அனைவரும் இணைந்து ஒரு ஒப்பற்ற இந்தியாவை உருவாக்குவோம்!

டிஜிட்டல் அவதாரம் - ஒரு பா.க.ச பதிவு

புது அவதாரம் எடுத்த எங்க தல பாலாபாய்க்கு ஒரு வாழ்த்து சொல்லத்தான் இந்த பா.க.ச பதிவு! சங்கத்துக்கு அப்ப அப்ப வேலை தந்து! ஏதாவது ஐடியா கொடுத்து எங்களை ஊக்கிவிக்கும் தல பாலாபாய்க்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு தொடங்குவோம்!!!

அவதார புருஷனாக வாழ்ந்து வரும் எங்க பாலாபாய் இதுவரை பல அவதாரம் எடுத்துவிட்டார், நம்ம திருமால் பகவான் மேக்ஸிமம் 9 அவதாரம் எடுத்துயிருக்காரு! பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் இந்த கலியுகத்தில் எடுக்கப்போறதா சொல்லறாங்க! ஆனான எங்க தல, கலியுக கிஷ்ணன் பாலாபாய்ஆயிரம் அவதாரம் எடுப்பாரு டெய்லி! எங்க தலையோட லேட்டஸ்ட் அவதாரம் புலியாவதாரம்! அந்த வதாரத்தின் போட்டோ அருகே உள்ளது! இந்த அவதாரம் எதுக்கு என்று கேட்பவர்களுக்கு எங்க தலையின் பதில் "இணைய உலகத்திற்கும், கணினி நாட்டிற்கும்(!) ஏதாவது செய்யனும்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாக ஆசை! " அதை இந்த புது அவதாரத்தில் தான் செய்யனும் என்று ஆசைப்படறாரு!!! இதெல்லாம் உங்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை தரலாம், ஆனா எங்க பா.க.ச மக்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இல்லை, ஏன்னா, இதுக்கு முன்னாடி இவர் பல வித்தைகளை கணினி மற்றும் இணைய உலகத்துக்கு காட்டியிருக்காரு, அதை அறிய நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும்!!!!


'சமீபத்தில்' தல "அம்மா"வை பார்த்து காலில் விழுந்து ஆசி வாங்கியதாகவும், அதனால் தான் அவருடைய புது அவதாரத்தில் "கருப்பு", "வெள்ளை" & "சிகப்பு" கட்சி சாயம் உள்ளதாகவும் எதிர்(ரி) வட்டாரம் (சதுரம்) புரளி கிள்ப்பியுள்ளதாகவும் சொல்லப்படுது!!!

ஜீ போஸ்ட் கௌதம்யின் ஆஸ்தான ப்ளாக் என்ஜினியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது!!!! :)))))))))))))) அதே போல பதிவர் சதுரத்தை இணைத்துக்கு அறிமுகப்படுத்தியதே நம்ம தல தான்!!! இது போதாதா என்ன!!! இனி இந்த புது அவதாரத்தில் இன்னும் பல மேட்டர் செய்து சாதனை படைப்பார் எங்க தல என்பதில் ஐயம் இல்லை!!!!


இதற்கு முன் அவர் எடுத்த யாகவாதாரம் பெருத்த வரவேற்ப்பை பெற்றது அல்லாருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்! நியாபகம் இல்லாதவங்க இங்கே சொடுக்கி பார்க்கவும்!!!

அடுத்து அவர் டாக்ட்ர் அவதாரம் எடுக்க நினைக்கிறான் என்று பா.க.சவில் ஒரு கிசு கிசு இருக்கு அதற்கு காரணம் அவர் எப்பவும் கழுத்தை சுற்றி ஸ்டெத்தாஸ்கோப் மாதிரி ஒரு மொபைல் போன் ஹெட் செட் மாட்டிக்கினு ஜம்முன்னு எப்பவுமே சுத்திக்கிட்டு இருப்பாரு! அனேகமா அதை பேஸ் பண்ணித்தான் மக்கள் அடுத்த அவதாரத்தை கண்டுப்பிடிச்சுயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்!!!

இன்னும் பல அவதாரம் எடுத்து இணையத்தில் சாதனை படைக்க இந்த பா.க.ச படை இருக்கோம் உங்க பின்னாடி (கால வாரத்தான்...). நீங்க தூள் கிளப்புங்க தல!! என்று சொல்லத்தான் இந்த பதிவு!! ஐயோ! ஐயோ!! எங்க தல எப்பயுமே இப்படித்தான்!!!!

எங்க சங்கத்தின் ஆல் டைம் ஹிட் பதிவான "பா.க.சவில் சேர்வது எப்படி?" படித்து தெரிந்து கொண்டீர்களா??

பி.கு:

பா.க.ச இப்ப அன் டார்டிகா, ஐஸ்லாண்டு நாடுகளை தவிர உலத்தின் எல்லா மொக்கு மூலையிலும் கிளைகள் உள்ளது!

அன் டார்டிகா, ஐஸ்லாண்ட் நாடுகளிருந்து கிளை துவக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கலாய்க்க ஆசைப்படுபவர்கள் உடனடியாக பா.க.ச சென்னைப்பட்டின தலைமை கழகத்தை தொடர்பு கொள்ளவும்!!!

மறக்காம இந்த பதிவையும் படியுங்க VA(A)Tட்டும் சேவைவரியும் ஒரு அலசல்!!!

VA(A)Tட்டும் சேவைவரியும்

பலர் பல விதமாக இந்த மதிப்புக்கூட்டு வரியை பற்றி கருத்து கூறிவந்தாலும், உண்மையில் இந்த வரி நமக்கு லாபமா? கஷ்டமா? நஷ்டமா? என்ற கேள்விக்கு யாராலும் பதில் தெளிவாக சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. வியாபாரிகள் சங்கம் இதனால் பொருட்களின் விலை கூடுகிறது என்று கூறிவருகிறார்கள், ஆனாலும் அவர்களால் சரியான புள்ளி விவரங்கள் தரமுடியவில்லை, ஏன்னெனில் விலைவாசியும் உயர காரணங்கள் பல காரணங்கள், அதில் முக்கியமானது ஆன்லைன் ட்ரேடிங், பின்னர் டீசல் விலை, சேவை கட்டணங்கள், வரி என பல. இந்த ஆன்லைன் ட்ரேடிங் எனப்படும் இணையவழி வர்த்தகத்தால் நடக்கும் அராஜகங்கள் பல, இதனால் அரசுக்கு நல்ல வருமானம் என்ற ஒரே காரணத்துக்காக அதை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கு என்பதே கொடுமை!

இன்றைய நிலையில், அனைத்து வித அத்தியாவசிய பொருட்களின் விலையும் 5 - 20 ரூபாய் வரை உயர்ந்து இருப்பது உண்மை! அரிசி, கோதுமை, பருப்பு முதல் காய்கறி வரை எல்லா பொருட்களும் விலையேற்றம், இந்த வரியால் மட்டும் அல்ல! சும்மா நம்ம முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் 50 ரூபாய் இருந்த உழுத்தம்பருப்பு இப்ப 31 ரூபாய் தான் என்று, என்னதான் சப்பை கட்டு கட்டினாலும், மார்கெட்டில் கிடைக்கும் நல்ல உழுத்தம்பருப்பின்(தனியார்) விலை ரூ61/- (நேற்று தான் வாங்கினேன் அதனால தான் தெரிந்தது). இப்படி ஒப்பீட்டு கதைவிடுவதால் ஒரு பயனும் இல்லை, பத்திரிக்கைக்கு ஒரு அறிக்கை என்ற விதத்தில் வேண்டுமானால் நல்லா இருக்கும்!! எது எப்படியானாலும் பாதிப்பு நமக்கு மட்டும் தான்! அதாவது நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனைகள்!

உண்மையில் வாட் வந்ததால், மாநில அரசுக்கு வரியில் வருவாய் பெரும் இழப்பு என்ற நிலை இப்ப, அதனால் இப்ப நம்ம பா.சிதம்பரம் ஒரு சூப்பர் சிறப்பான திட்டம் போட்டு மாநிலத்துக்கு வருமானத்தை தரப்போவதாக சொல்கிறார். எப்படின்னு கேட்கறவங்களுக்கு?

வருகிற ஏப்ரல் முதல், மத்திய அரசு 44 வகையான அத்தியாவசிய சேவைகளை சேவை வரி வட்டத்துக்குள் சேர்க்க உள்ளது. அந்த சேவை வரியை முழுமையாக 100 சதவீகிதமும் மாநில அரசுக்கு கொடுக்கப்போறாங்களாம். மாநில அரசுக்கு சம்பாத்தியம் ஓ.கே! அதை கொடுக்கப்போவது யாரு தெரியுமா?? நம்ம தாங்க!!! எப்படின்னு கேட்பவர்களுக்கு சில உதாரணம் கீழே!

அந்த 44 சேவைகளில் மருத்துவர்களின் கட்டண சேவை வரி, மருத்துவ சோதனை சேவை வரி, வழக்குறைஞர்களுக்கு சேவை வரி, கேளிக்கை கூடங்கள் சேவை வரி, கேளிக்கை விடுதிகளுக்கு சேவை வரி, கேளிக்கை பூங்காக்கள் சேவை வரி, சினிமா நட்சதிரங்களுக்கு சேவை வரி என பன்முனை தாக்குதலுக்கு தயார் ஆகிவருகிறது நிதியமைச்சகம்! இவை வரும் ஏப்ரல் 1, 2007 முதல் அமலுக்கு வருகிறது! இதற்கு பா.சி சொல்லும் சில காரணம் இவர்களின் வருமானம் கணக்கு காட்டப்படாமல் இருக்கிறது! இவர்கள் சேவை கட்டணம் கணக்கு வெளிவருதில்லை என பல கதை சொல்லப்படுகிறது!

இனி உங்க மருத்துவரிடம் சென்றால் உங்க மருத்துவர், தன்னுடைய கட்டணம் + 12.24% சேவை வரியையும் உங்க கிட்ட வாங்க போறாங்க!! அதாவது என் குழந்தை நல டாக்டர் ரூ200க்கு பதில் இனி ரூ 225.00 வாங்க போறாரு!!! அதே போல தான் இனி ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு 12.24% சேவை வரி விதிக்கப்படும்.

சரி மந்திரி சார், இந்த கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் வருமான வரி செலுத்தவில்லை என்று சேவை வரி கொண்டுவரும் உங்களுக்கு , அந்த சேவை வரியை மருத்துவரோ, மருத்துவ சோதனை கூடமோ கட்டப் போவதில்லையென்று உங்களுக்கு தெரியாதா? அதை கட்டப்போவது அந்த மருத்துவரிடமோ/பரிசோதனை நிலையத்துக்கு நோய் என்று போகும் ஏழை எளிவரே என்று தெரியாத உங்களுக்கு??

இனி நம்ம ஓய்வு நாட்களை பொழுது போக்க எம்.ஜி.எம், வீ.ஜி.பி , மாயாஜால் போன்ற இடங்களுக்கு போனால் 12.24% சேவை வரி நீங்க தரவேண்டியிருக்கும். அதாவது எம்.ஜி.எம் டிக்கெட் விலை ரூ 300 என்றால் இனி நம்ம தரவேண்டியது ரூ 337.00 மட்டுமே!!!

ஏற்கனவே சத்தமில்லாமல், கேட்டரிங் எனப்படும் விசேஷங்களுக்கு சமையல் சேவை செய்பவர்களுக்கு, சலவை கட்டணத்துக்கு என 33 வகை சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்ட்டு நம்மிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

இப்படி ஏழை மற்றும் நடுத்தர மக்களை கசக்கி பிழிந்து தான் இந்த அரசை நடத்த முடியுமா? ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மட்டும் கசக்கி பிழிந்து, பணக்காரர்களை பாதுகாக்கும் ஒரு அரசு நமக்கு தேவையா? இதுக்கெல்லாஅம் ஒரு விடுவு காலம் வாராதா??? நம்ம நிதியமைச்சரிடம் ஒன்று செய்ய சொல்லலாம் :

இப்படி பல டைப்புல வரியை கண்டுபிடித்து, அதை எங்க அதை தூக்கிப்போட்டு, எதுக்கு கஷ்டப்படறீங்க, நாங்க பேசாமா, உங்ககிட்ட மொத்த சம்பளத்தையும் கொடுத்திடறோம், நீங்களா பார்த்து ஏதாவது பிச்சை போடுங்க எடுத்துட்டு போய் எங்கயாவது பொழச்சுக்கறோம் என்று!!! ஓ.கே சொல்லுவாரா??


மொத்ததில் VAT வந்ததால் என்ன லாபம்? என்ற கேள்விக்கு பதில் அரசுக்கு லாபம் மக்களுக்கு சாபம் என்று தான் என்னால் சொல்லமுடியும்.

பி.கு:
நம்ம நிதி அமைச்சர் பா.சி இன்னும் பல சூப்பர் ப்ளான் வைத்து இருக்காருங்க! சேவை வரியை 25% ஆக்கி, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையா சேவை வரியை விதிப்பது! அது அடுத்த திட்டம், அனேகமாக அது இந்த நிதியாண்டில் இருக்காது என்பது நமக்கு ஒரு ஆறுதலான விசயம்.

என் நன்பர்கள் சில பேர் 25% சேவை வரி கட்டுபவர்கள்! அவர்கள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கானடா என பல நாடுகளில் வாழ்கிறார்கள், அவர்களுக்கு கிடைக்கும் சில அரசு சலுகைகள் இவை:
 • குழந்தைகள் கல்வி பள்ளி இறுதியாண்டு வரை அரசு ஏற்றுக்கொள்கிறது!
 • குறைவான செலவில் மேல் கல்விக்கு உதவி
 • சீரான சாலைகள், குழிகளில்லா சாலைகள்
 • சுகாதாரமான வாழ்க்கை சூழல்
 • இலவச மருத்துவ வசதி
 • சோஷியல் செக்யூரிடி என்ற பெயரில் வேலையில்லை என்றால் உணவுக்கு காசு!
 • வயது முதிர்ந்த குடிமக்களுக்கு ஓய்வு ஊதியம்
 • இன்னும் பல...
இதில் எவை நம் மக்களுக்கு கிடைக்குதுங்க மிஸ்டர் மினிஸ்டர்!

மீள்பதிவு: பாக்கெட் உணவு பொருட்கள் உஷார்!

சில நாட்களுக்கு முன் பலசரக்கு அங்காடிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருந்தோம், என் மகன் ஒரு பெட்டி Lay's Stax எடுத்துவந்து, அப்பா, இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லு? Zero Added Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கனும் என்று பெரிய ஆள் மாதிரி ஒரு மேட்டரை கேட்டான்!!! போன மாதம், என் மகனுக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸ் அது!!! நான் மறந்துவிட்டேன், என் மகன் ஞாபகம் வைத்து கேட்டான்!!! ஆச்சர்யமாக இருந்தது!!! இந்த தகவல் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் உபயோகமா இருக்கும் என்று தோன்றியதால் இந்த பதிவு.

Hydrogenated Trans Fat & Partially hydrogenated oils:

Trans Fat இயற்கையாகவே பசுவின் பாலில் 2 - 5% சதவீதம் இருக்கும். ஆனால் Hydrogenated Trans Fat என்பது செயற்கையாக செய்யப்படும் Trans Fat. இது பசு, எறுது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும், சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது!!!
இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து!!
இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL)) சத்தை குறைத்து, கெட்ட கொழுப்பு (Low-density lipoprotein (LDL)) சத்தை இருமடங்காக உயர்த்தி நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது!!!

பல எதிர்வினைகளையும் உண்டாக்கும் கொழுப்பு!!! இது இருதய நோய்(coronary heart disease), Cancer, Diabetes மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு. Partially hydrogenated oils என்பது இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை. நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பாக்கெட்டில் கிடைக்கும் உருலைகிழங்கு சிப்ஸ் வகைகள், பீட்ஸா, சாக்லெட் என் துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது!!!

இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த Partially hydrogenated oils/Hydrogenated Trans Fat ?

 • இந்த எண்ணைகள் பல முறை திரும்ப திரும்ப உபயோகித்தாலும், தயாரித்த உணவில் மணம் மாறாது!
 • 18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்த கெட்டுப் போகாமல் வைத்துக்கொள்ள முடியும். சாதாரண எண்ணையில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது!!
 • இந்த எண்ணையில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே!! நீங்களே கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யற ஃப்ரென்ச் ஃப்ரைஸ் மெக் டொனால்ட், மேரி ப்ரெளன், பீஸா கார்னர்களில் கிடைக்கும் அளவுக்கு சுவை இல்லை என்று!!!

பல முன்னேறிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்த Hydrogenated Trans Fat உள்ள உணவுகளை தடை செய்து வருகிறது!! மெக் டோனால்ட், KFC போன்ற பல நிறுவனங்கள் இன்று இதை உபயோகிப்பதால் பல கோடி டாலர்கள் வழக்குகளில் போராடிவருகின்றன!!! சில நிறுவனங்கள் ஏப்ரல் 2007 முதல் இந்த எண்ணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் உத்தரவாதங்களும் தந்திருக்கின்றன, அட இந்தியவில இல்லைங்க, அமெரிக்காவிலே!!! இந்தியாவில் இன்றும் மெக் டோனால்ட், KFC போன்றவை சுதந்திரமாக இந்த எண்ணை உபயோகித்து நம் ஆரோக்கியத்தை அழித்து வருகிறது.

நீங்க செய்யவேண்டியது என்ன?

இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ், ப்ரெச் ஃரைஸ் என எதை வாங்குவாதா இருந்தாலும் அதில் Hydrogenated Trans Fat = Zero (0) , Zero Added Hydrogenated Trans Fat , Zero Hydrogenated Vegitable Oil இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பொருட்களை வாங்குங்கள்!!!

டாப் 10 Hydrogenated Trans Fat உள்ள உணவுகள் இங்கே சொடுக்கவும்.

உபரி தகவல்:

உங்கள் வீட்டில் பூரி மற்றும் Deep Fry செய்யப்பட்ட மிச்சம் ஆகும் எண்ணையை திரும்ப உபயோகித்தாலும் அந்த உணவு பொருட்களில் இது போன்ற Hydrogenated Trans கொழுப்பு நிறைந்துவிடும். அதனால் ஒரு முறை உபயோகித்த எண்ணையை திரும்ப உபயோகிக்காமல் இருப்பது நல்லது!!! வீட்டு உபயோகத்தில் இந்த கொழுப்பை கட்டுப்படுத்த பல நல்ல தகவல்கள் இங்கே சொடுக்கவும்.

கோலாக்கலும், பூச்சிமருந்தும் அரசியல்வாதிகளும்!

இதுவரைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கோக் மற்றும் பெப்சியின் மீது பூச்சி மருந்து படிமம் இருப்பதாக புகார் வந்தது!

முதலில் 2003 ஆகஸ்டில் அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம், இந்தியாவில் தயாராகும் கோக், பெப்சி போன்ற 12 வகை குளிர்பாணங்களில் பூச்சிமருந்து படிமம் உள்ளதாக அறிக்கை வெளியிட்டு ஒரு கலக்கு கலக்குச்சு! பெப்சியின் குளிர்பாணங்கள் அனுமதிக்கப்பட்ட(0.0005 mg/l) பூச்சிமருந்து அளவுகளைவிட 36 மடங்கு அதிகமாக (0.0180 mg/litre) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! கோக் நிறுவன குளிர்பாணங்களில் சுமார் முப்பது மடங்கு அதிகமாக (0.0150 mg/litre) இருந்தது! அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாங்கிய அதே நிறுவனங்களின் குளிர்பாணங்களில் ஒரு மில்லிகிராம் கூட பூச்சிமருந்து படிமம் இல்லை என்ற உபரி தகவலும் அந்த அறிக்கையிலிருந்தது.

உடனே நம்ம அரசியல்வாதிகள் என்னவோ மக்கள் நலம் காப்பவர்கள் போல தினமும் ஒவ்வொறு கட்சியிலிருந்தும் ஒரு ஆள் மினிமம் இந்த நிறுவனங்களை திட்டி அறிக்கை விட்டார்கள்! முக்கியமா நம்ம கம்யூனிஸ்டுகள்! அரசு அதை தடை செய்ய வேண்டும் என்று கூப்பாடுயிட்டார்கள்! அந்த நிறுவனங்கள் முன் தர்னா செய்தார்கள்! அறிக்கை! ஆர்பாட்டம்! என்று தூள் கிளப்பினார்கள். வெறும் முப்பது நாட்களில் அத்தனை சூடும் அடங்கி சைலண்ட் ஆனார்கள் நம்ம அரசியல்வாதிகள். நம்ம அரசும் ஒரு கூட்டு பாராளமன்ற உறுப்பினர் குழு அமைத்து எஸ்கேப் ஆனது! அந்த குழு எதை ஆராய அமைக்கப்பட்டது என்பது தான் வேடிக்கை! அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையத்தின் செயல்பாடுகளை ஆராயத்தான்! கோக் அல்லது பெப்சி நிறுவனத்தின் உற்பத்தி முறையை ஆராய அல்ல!!!! இப்படி அடங்கி போனது ஏன்? அந்த நிறுவனங்கள் தன் தவறை சரி செய்து நற்சான்று வாங்கிவிட்டதா? பூச்சிக்கொல்லியின் அளவு குறைந்ததா? இவர்களின் பாக்கெட் நிறைந்ததா? ஏன்? ஏன்? ஏன்? இந்த கேள்வி கேட்கவும் ஆள் இல்லை! வெகு சிலர் கேட்டார்கள் அதற்கு பதில் தர அரசியல்வாதிகள் காதில் விழவும் இல்லை!!! அதோட 2003 குளிர்பாண பூச்சிக்கொல்லி பிரச்சனை முடிந்தது!

மீண்டும் மூன்று வருடம் பின்னர் ஆகஸ்டு 2006, அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம் நாடு தழுவிய ஆராய்ச்சி செய்து ஒரு ரிப்போர்ட் கொடுத்தது உடனே நம்ம அரசியவாதிகள், அந்த மையத்தையும் அதன் நிறுவாகிகளை பழித்தனர்! அந்த நிறுவனமும், அதன் சோதனைமுறைகளும் தகுதியற்றவை என்று ஒரு தூள் ரிப்போர்ட்! நம்ம சுகாதார துறை மந்திரியோ ஒரு படி மேலே போய் அந்த குளிர்பானங்கள் குடிக்க தகுதியானவை என்று பாராளமன்றத்தில் அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கை கோக் நிறுவனத்தின் செலவில் லன்டனில் ஆராய்ச்சி செய்யப்பட்ட அறிக்கையை ஆதாரமாக வைத்து இந்த நற்சான்று கொடுக்கப்பட்டது! அத்துடன் சில மாநில போட்டிருந்த தடைகளையும் இல்லாமல் செய்தது! இதற்கும் 2003ல் அமைத்த பாராளமன்ற கூட்டுக்குழு இந்த ஆராய்ச்சி மையத்தின் செய்முறையும் அதன் ஆராய்ச்சிகளும் திருப்த்தியளிப்பதாக பாராளமன்றத்தின் அறிக்கை தாக்கல் செய்த பின்னர்! மேலும் மந்திய சுகாதார துறை மந்திரி ஒரு குழு அமைப்பதாகவும், அது கோக் மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்களின் தரம் மற்றும் உற்பதி வரைமுறைகளை ரெடி செய்யும் என்று சொன்னார்! அது எப்ப இந்த விதிமுறைகளை தயார் செய்யும்? எத்தனை நாள் ஆராய்ச்சி செய்யும்? அன்று அவர் சொன்னது அது ஒரு வருடமும் ஆகலாம், இரண்டு வருடமும் ஆகலாம்!!! அத்தோடு அரசின் மக்கள் பணி முடிவடைந்துவிட்டது!!! கொடுமைடா சாமீ!!!

அப்புறம் கம்யூனிஸ்டுகள் சில நாடகள் மக்களை திரட்டி கொஞ்சம் போராடற மாதிர் பாவ்லா காட்டினார்கள் அப்புறம் காணாம போயிட்டாங்க அவர்களும்! இப்போ நம்ம மக்களே மறந்து போயி கோக்கும் பெப்சியும் குடிச்சுக்கிட்டுயிருக்காங்க! (நான் 2006 ஆகஸ்டோட இதுகல குடிக்கறதை விட்டு விட்டேன்! இவனுக காசு பார்க்க நான் தான் கிடைத்தேனா என்று!!!)

எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் இவைதான்:

 • எதற்காக இந்த அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம்? மற்றும் அதன் ஆராய்ச்சிகள்?
 • ஒவ்வொரு முறையும் போராட்டம் சில நாட்கள் இல்லை மேக்ஸிமம் ஒரு மாதத்த்தில் வேற ரூட்டுல போயி காணாமா போகுதே என்ன காரணம்?
 • உள்ள என்ன தான்யா நடக்குது? ஒரு குளிர் பானநிறுவனத்தின் மேல் உள்ள பாசம், மக்கள் ஓட்டுப்போட்டு மேல அனுப்பட்ட உங்களுக்கு ஏன் மக்கள் மேல் பற்று இல்லாம போச்சு?
 • எப்படியும் எனக்கு ஓட்டுப்போடறவன் எனக்கு ஓட்டு போடுவான் என்ற ஆதீத நம்பிக்கையா??
 • ஆனா நிறுவனங்கள் அப்படியல்ல என்ற பயமா? அடுத்த தேர்தலுக்கு செலவுக்கு கை கடிக்க விட்டுவிடுவார்களா??
 • உண்மையில் இந்த குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி இருக்கா? அதுக்கு என்ன வரைமுறை? எப்பதான் இதற்கான கட்டுப்பாடுகளை இந்த அரசு செயல் படுத்தும்!
மருந்து உயிரோடு இருக்கும் போது தேவைப்படுவது! மக்கள் இவைகளை குடித்து காசநோய், புற்றுநோய், மலட்டுத்தன்மை என பல தரப்பட்ட வியாதிகள் பாதித்து அழிவதற்கு முன், இவைகளுக்கு கட்டுப்பாடு போட்டால் உபயோகயிருப்பதாக தோன்றுகிறது! நான் சொல்லும் உபயோகம் நம்ம மக்களுக்குங்கோய்!!!

என் பழைய பதிவான நாடகம்.காம் பதிவை படிச்சீங்க!!

ஸ்டார் தடாலடி போட்டி!

மகா ஜனங்களே!

Gpost கௌதம்ஜீயின் 'அடுத்த தடாலடி எப்போ?' என விசாரித்துப்பார்தால் ரிஸ்ல்ட் ஒன்றும் இல்லை, சரி நம்மளே ஒன்னு வைப்போம் என்று இறங்கிவிட்டேன்!

இதோ நான் தரும் அடுத்த தடாலடிப் போட்டி!


இந்த புகைப்படத்தில் உள்ளது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்!
ஆகவே தோழர்களே..
போட்டிக்கான இறுதி நாள்: 07.02.2007, சனிக்கிழமை
கெடு நேரம்: காலை பத்து மணி (இந்திய நேரப்படி)

நேரம் முடிந்துவிட்டும் உங்களை காக்க வைத்தமைக்கு மன்னியுங்க ப்ளீஸ்!

சரியான பதில் : திருமதி. சோனியா காந்தி

சரியான பதில் சொன்ன அனைவருக்கும் என் இதயத்தில் ஒரு ஏக்கர் இடம்! ஜாலியா குடிவாங்க ;)

என் இன்றைய மற்றொரு பதிவான ஏன் இந்த சாதி வெறி! பதிவை படிச்சீங்க!!

அட ஆமாம் அவங்களை மாதிரியே இருக்காங்கபா!!!

ஏதாவது சொந்தமா இருக்குமோ??!!!

இந்த படத்தில் உள்ளது ரீவ்ஸ் என்று எல்லாரும் சொல்லிட்டாங்க! ஆனா பாருங்க அப்படியே நம்ம திருமதி .சோனியா சின்ன வயசுல இருந்தா மாதிரியே இருக்காங்க! எப்படின்னு ஒரு போட்டி வைக்கலாமா?? ;)

ஏன் இந்த சாதி வெறி!

அருந்ததியினர் இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஐந்து குழந்தைகள் தமிழக அரசு நடத்தும் அங்கன்வாடியில் சேர்க்கமுடியாமல் தவிக்கும் பெற்றோர் பற்றிய செய்தி வந்திருந்தது! இது நடந்தது வேற எங்கயும் இல்லைங்க நம்ம சமூகநலத் துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை அவர்களின் தொகுதியான ஆளங்குலத்துக்கு உட்பட்ட தெற்குப்பட்டி கிராமத்தில் தான் இது நடந்திருக்கிறது.

இந்த் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளை அங்குள்ள அங்கன்வாடியில் (Kindergarten) வகுப்புக்களில் சேர்க்க மறுத்தது வருபவரும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்த்தவர் என்பதை அறியும் போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த அங்கன்வாடி ஊழியர் அந்தோணியம்மாள், பள்ளர் என்னும் ஒரு இனத்தை சேர்ந்தவர், இவர்கள் அருந்ததியினரைவிட ஒரு படி உயர்ந்தவராம்! அதனால் அருந்ததியினரை அங்கன்வாடியில் சேர்த்து, அவர்களுக்கு பனிவிடை செய்யமாட்டேன் என்று கூறியிருக்கிறார் அந்த அங்கன்வாடியின் ஊழியர் அந்தோணியம்.

தெற்க்குப்பட்டியில் மேலும் விசாரித்த மும்பய் மிரர்ரின் செய்தியாளருக்கு கிடைத்தது மேலும் அதிர்ச்சியான தகவலகளே!
"கடந்த இருபது ஆண்டுகளில் அந்த அங்கன்வாடியில் அங்குள்ள 40க்கும் மேற்ப்பட்ட அருந்ததியினர் குடும்பங்களிருந்து ஒரு குழந்தை கூட மதிய உணவு மற்றும் பாடசாலையில் சேர்ப்படவில்லை. இதற்க்கு அந்தோனியம்மாள் மட்டும் காரணம் அல்ல, தெற்க்குபட்டி யாதவர், இஸ்லாமிய மற்றும் பள்ளர் இனத்தை சேர்த்தவர்கள் பெருவாரியாக வசிக்கும் கிராமம், அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஒரு அருந்ததியினர் இன குழந்தை படிப்பதை விரும்பாததும் ஒரு முக்கிய காரணம்" என்று சி.பாப்பா, அருந்ததியினர் பெண்கள் வளர்ச்சி அமைப்பின் தலைவர் வருத்ததுடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் "அங்கு அருந்ததியினர் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது ஒன்று மட்டுமல்ல, தபால்காரர்கள் கூட இந்த 40 குடும்பங்களுக்கு வரும் பணம் மற்றும் தபால்களை கொண்டுவந்து தர மறுக்கு கொடுமையும் பல நேரங்களில் நடக்கும், இந்த குழந்தைகளுக்கு படிக்க வைக்க வேண்டுமானால் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இஸ்லாமியர் நடத்தும் பள்ளில் ஐந்து வயது நிரம்பிய பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பு முதல் சேர்க்கப்படுகிறார்கள், இங்குள்ள சாதி பிரச்சனைகள் அனைத்தையும் அரசு அதிகாரிகள் அறிந்திருந்தும், கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்" என்று வருத்தப்பட்டார்.

அந்த பகுதியின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரியான தேவி குமாரி அனுகிய போது அவர் கூறியது "அந்த அங்கன்வாடியில் ஏற்கனவே 40 குழந்தைகள் உள்ளனர், இடமின்மை மற்று வேலை பளூ காரணமாகத்தான் இந்த குழந்தைகளை அந்தோணியம்மாள் சேர்த்துக்கொள்ளவில்லை!!!".

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி இட்ட அரசாணையில் "இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் எக்காரத்தை காட்டியும் அங்கன்வாடியில் சேர்ப்பதை தவிர்க்கக்கூடாது"என்ற தெளிவான அரசாணை இருந்தும், திட்ட அதிகாரி சொல்லும் காரணங்கள் சிறிது ஏற்புடையதாக இல்லை.

உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்படும் இந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் முக்கிய குறிக்கோள்:

"ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுககு மேம்படுத்தப்பட்ட சத்துணவு, சுகாதாரம் மற்றும் உளவியல்-சமூக நிலைமை உயர்த்துவது"
என்ற கொள்கையுடன் துவங்கப்பட்ட அங்கன்வாடிகளே அக்குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சமூக முறையில் பிரச்சனைகளை தருவது கொடுமையான விசயம். அரசு இதில் கவனம் செலுத்தி இது போன்ற சாதி அடிப்படையிலான சமுதாய பிரச்சனைகளை குறைந்தபட்சம் அரசுக்கு கீழ் உள்ள தளங்களிலாவது களைய முயற்சி எடுக்கவேண்டும் என்ற ஆசையுடன் இந்த் பதிவை இங்கு பதிக்கிறேன்.

இந்த சாதி வெறி நம்ம வலைப்பதிவர்களிடமும் இருக்கு! நம்ம டோண்டு சார் என்னமோ முதலியார் என்று திரு .நடேசனை சொன்னால் தான் அவருக்கு மரியாதை என்ற ரேஞ்சில் எழுதி சாதியை நிலை நிறுத்த பாடுபடுவதை பார்த்தால் ஒரு பயம் தான் வருது! ஒருவருக்கு மரியாதை அவர் சாதியால் வருவதில்லை மக்களே, அவர் செய்த மக்கள் தொண்டுகள், நம் சமுதாய வளர்ச்சிக்கு அவர்கள் செய்த நற்காரியங்களை வைத்தே வருது!

இந்த சாதி பாகுபாடு ஒழிக்க படித்த, நம்மை போன்றவர்கள் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற என்னமே இந்த பதிவுக்கு முக்கிய காரணம்.

என் முந்தய பதிவான குழந்தைகள் தின அதிர்ச்சி! பதிவை படிச்சீங்க!!

செய்திக்கு நன்றி : ஜெயராஜ் சிவன், மும்பை மிரர்

என்னை தெரியுமா?

என்னையும் நட்சத்திரமாக் தேர்ந்தெடுத்து என்னை ஆச்சர்யப்படுத்திய தமிழ்மணத்துக்கு நன்றி சொல்லி முதலில் என்னை பற்றிய சிறு குறிப்புடன் என் பதிவுகளை துவங்குவோம் என்று நினைத்தேன் :)

பெயர்: ஜெயசங்கர் நா
வயது: 34
படிப்பு: பொறியியல் பட்டம்
தொழில்: மென்பொருள் ஏற்றுமதி

ஏன் வலைப்பதிவு:

நான் பொதுவா அரசியல் சார்ந்து எழுதுவதாக எல்லாரும் சொன்னாலும், நான் மக்கள் பிரச்சனை சார்ந்து எழுதுகிறேன்னு என்பதே உண்மை.

அரசியல் சாக்கடை ஆனதால், மக்கள் படும் அவதிகளை சொல்லும் பதிவே என் பதிவுகள், மக்கள் விழிப்புணர்வு பதிவுகள், ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட எழுத துவங்கினேன். என்னை தேசிய ஜல்லி அடிப்பவன் என்று பலர் சொல்லறாங்க! ஆமாம் என்று பெருமையா சொல்லிக்கிறேன். ஏன்னென்றால் நான் முதலில் இந்தியன், அப்புறம் தான் மற்றவைகள்...இதை ஜல்லி என்று சொல்பவர்கள் சொல்லட்டும், அது அவர்களின் சுதந்திரம் :)

என் தலைவன்:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொருத்தவரை தேசத்தின் தந்தை.

என் ஆதங்கம்:

இந்திய போராட்டத்தின் உண்மை தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டது! நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், சுப்பிரமனிய சிவா, பகத்சிங், ஆஸாத் போன்றவர்களுக்கு பற்றி இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் உண்மைகள் எழுதப்படவில்லை என்பது ஆதங்கம்!!

என் நீண்ட நாள் கனவு:

ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்புக்கு உதவி, வழிக்காட்டுதல், அதரவற்ற ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கு செய்ய வேலை, உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க இடம் என்ற் நோக்த்தோடு ஒரு பொது தொண்டு நிறுவனம் தொடங்கி என்னால் இயன்றளவு உதவி செய்வது.

எனக்கு வலையுலகில் பிடித்தது:

நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட ஒரு அருமையான தளம் என்ற வகையில் ரொம்ப பிடிக்கும். நம் கருத்து மற்றும் பிறர்கருத்தக்களை தெரிந்து கொள்ள, அதை அலசி ஆராய ஒரு ஒரு அரியதொரு தளம், வலையுலக நட்பு, என்று பல..

நான் வலையுலகில் வெறுப்பது:

சாதி, இனம், மதம் என்று சொல்லி வலைப்பதிவர்கள் சண்டையிடுவது.

சமீபத்திய ஆசை:

சாதி, மத, இன, கட்சி என பல காரணம் சொல்லி பிரிந்து கிடக்கும் அனைவரும் இணைந்து மக்களுக்கு நம்மால் ஆன உதவி செய்ய நினைப்பது.

என் வழி:

"I cannot speak anything but the truth. I cannot turn back on my duty, just to please some one. - சர்தார் வல்லப்பாய் பட்டேல் "


என் பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் பதிவை படிச்சீங்க!!