டிஜிட்டல் அவதாரம் - ஒரு பா.க.ச பதிவு

புது அவதாரம் எடுத்த எங்க தல பாலாபாய்க்கு ஒரு வாழ்த்து சொல்லத்தான் இந்த பா.க.ச பதிவு! சங்கத்துக்கு அப்ப அப்ப வேலை தந்து! ஏதாவது ஐடியா கொடுத்து எங்களை ஊக்கிவிக்கும் தல பாலாபாய்க்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு தொடங்குவோம்!!!

அவதார புருஷனாக வாழ்ந்து வரும் எங்க பாலாபாய் இதுவரை பல அவதாரம் எடுத்துவிட்டார், நம்ம திருமால் பகவான் மேக்ஸிமம் 9 அவதாரம் எடுத்துயிருக்காரு! பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் இந்த கலியுகத்தில் எடுக்கப்போறதா சொல்லறாங்க! ஆனான எங்க தல, கலியுக கிஷ்ணன் பாலாபாய்ஆயிரம் அவதாரம் எடுப்பாரு டெய்லி! எங்க தலையோட லேட்டஸ்ட் அவதாரம் புலியாவதாரம்! அந்த வதாரத்தின் போட்டோ அருகே உள்ளது! இந்த அவதாரம் எதுக்கு என்று கேட்பவர்களுக்கு எங்க தலையின் பதில் "இணைய உலகத்திற்கும், கணினி நாட்டிற்கும்(!) ஏதாவது செய்யனும்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாக ஆசை! " அதை இந்த புது அவதாரத்தில் தான் செய்யனும் என்று ஆசைப்படறாரு!!! இதெல்லாம் உங்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை தரலாம், ஆனா எங்க பா.க.ச மக்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இல்லை, ஏன்னா, இதுக்கு முன்னாடி இவர் பல வித்தைகளை கணினி மற்றும் இணைய உலகத்துக்கு காட்டியிருக்காரு, அதை அறிய நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும்!!!!


'சமீபத்தில்' தல "அம்மா"வை பார்த்து காலில் விழுந்து ஆசி வாங்கியதாகவும், அதனால் தான் அவருடைய புது அவதாரத்தில் "கருப்பு", "வெள்ளை" & "சிகப்பு" கட்சி சாயம் உள்ளதாகவும் எதிர்(ரி) வட்டாரம் (சதுரம்) புரளி கிள்ப்பியுள்ளதாகவும் சொல்லப்படுது!!!

ஜீ போஸ்ட் கௌதம்யின் ஆஸ்தான ப்ளாக் என்ஜினியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது!!!! :)))))))))))))) அதே போல பதிவர் சதுரத்தை இணைத்துக்கு அறிமுகப்படுத்தியதே நம்ம தல தான்!!! இது போதாதா என்ன!!! இனி இந்த புது அவதாரத்தில் இன்னும் பல மேட்டர் செய்து சாதனை படைப்பார் எங்க தல என்பதில் ஐயம் இல்லை!!!!


இதற்கு முன் அவர் எடுத்த யாகவாதாரம் பெருத்த வரவேற்ப்பை பெற்றது அல்லாருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்! நியாபகம் இல்லாதவங்க இங்கே சொடுக்கி பார்க்கவும்!!!

அடுத்து அவர் டாக்ட்ர் அவதாரம் எடுக்க நினைக்கிறான் என்று பா.க.சவில் ஒரு கிசு கிசு இருக்கு அதற்கு காரணம் அவர் எப்பவும் கழுத்தை சுற்றி ஸ்டெத்தாஸ்கோப் மாதிரி ஒரு மொபைல் போன் ஹெட் செட் மாட்டிக்கினு ஜம்முன்னு எப்பவுமே சுத்திக்கிட்டு இருப்பாரு! அனேகமா அதை பேஸ் பண்ணித்தான் மக்கள் அடுத்த அவதாரத்தை கண்டுப்பிடிச்சுயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்!!!

இன்னும் பல அவதாரம் எடுத்து இணையத்தில் சாதனை படைக்க இந்த பா.க.ச படை இருக்கோம் உங்க பின்னாடி (கால வாரத்தான்...). நீங்க தூள் கிளப்புங்க தல!! என்று சொல்லத்தான் இந்த பதிவு!! ஐயோ! ஐயோ!! எங்க தல எப்பயுமே இப்படித்தான்!!!!

எங்க சங்கத்தின் ஆல் டைம் ஹிட் பதிவான "பா.க.சவில் சேர்வது எப்படி?" படித்து தெரிந்து கொண்டீர்களா??

பி.கு:

பா.க.ச இப்ப அன் டார்டிகா, ஐஸ்லாண்டு நாடுகளை தவிர உலத்தின் எல்லா மொக்கு மூலையிலும் கிளைகள் உள்ளது!

அன் டார்டிகா, ஐஸ்லாண்ட் நாடுகளிருந்து கிளை துவக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கலாய்க்க ஆசைப்படுபவர்கள் உடனடியாக பா.க.ச சென்னைப்பட்டின தலைமை கழகத்தை தொடர்பு கொள்ளவும்!!!

மறக்காம இந்த பதிவையும் படியுங்க VA(A)Tட்டும் சேவைவரியும் ஒரு அலசல்!!!

36 comments:

said...

யாகவா அவதாரம் எடுத்தபோது, இந்தியா இந்த நூற்றாண்டில் என்னென்ன சாதிக்கவுள்ளது என்பதைத் தன்னுடைய 'பாம்ப்ன்'சங்கேத மொழியில் அவர் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் ஏன் பதிவில் இடவில்லை?

அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

//சமீபத்தில்' தல "அம்மா"வை பார்த்து காலில் விழுந்து ஆசி வாங்கியதாகவும், அதனால் தான் அவருடைய புது அவதாரத்தில் "கருப்பு", "வெள்ளை" & "சிகப்பு" கட்சி சாயம் உள்ளதாகவும் எதிர்(ரி) வட்டாரம் (சதுரம்) புரளி கிள்ப்பியுள்ளதாகவும் சொல்லப்படுது!!!//

1.அவர் இதுவரை, தன்னைப் பெற்ற தாயாரைத் தவிர வேறு எந்தப் பெண்மணியின் காலி்லும் விழுந்ததில்லை.

2.அவருக்கு ஏது எதிரி?

தவறான தகவல்களைப் பதிவில் இட்டு என்னைப்போன்ற அவருடைய மெய்யன்பர்களைக் குழப்ப வேண்டாம்.

இந்த வரிகளைப் பதிவில் இருந்து நீக்கும்படி கோருகின்றேன்.

நீக்காவிட்டால்.....?

மீண்டும் வ்ருவேன்!

said...

மூன்றாவது படத்தில் என்னவொரு அட்டகாசமான சிரிப்போடு இரூக்கிறார்
பார்த்தீர்களா?

அந்தச் சிரிப்பிற்கு நீங்கள் ஏன் விளக்கம் கொ்டுக்க வில்லை?

மிஸ்ஸியம்மா படத்தில் வந்த ஜெமினி கணேசன் போன்று எத்தனை இளமையாக இருக்கிறார் பார்த்தீர்களா?

இயக்குனர் சங்கர் கண்ணில் இந்தப் படம் மட்டும் பட்டால் போதும்,, சண்டைக்கோழி புகழ் விஷால் மாதிரி
தமிழ் நாட்டின் அடு்த்த ஹீரோ இவர்தான்.

said...

//பா.க.ச இப்ப அன் டார்டிகா, ஐஸ்லாண்டு நாடுகளை தவிர உலத்தின் எல்லா மொக்கு மூலையிலும் கிளைகள் உள்ளது!//

உண்மை - அங்கே கிளைகள் இல்லை!

இது ஒன்றுதான் உங்கள் பதிவில் உள்ள
உண்மையான செய்தி!

said...

//மிஸ்ஸியம்மா படத்தில் வந்த ஜெமினி கணேசன் போன்று எத்தனை இளமையாக இருக்கிறார் பார்த்தீர்களா?//

ஐயோ இதை நான் சொல்லவில்லை! ஜெமினி + அம்மா... இதில எதாவது உள்குத்து இருக்கோ??!!!

said...

எஙகே உங்கள் கூட்டாளி - அந்த 'குட்டி'நாகேஷ் - அதுதான்
ஸ்வாமி அந்த தில்லி இளைஞர்?

ஆளைக் காணோம்?

என்னுடைய பின்னூட்டங்களைப் பார்த்துப் பயந்து ஓடிவிட்டாரா?

said...

//மூன்றாவது படத்தில் என்னவொரு அட்டகாசமான சிரிப்போடு இரூக்கிறார்
பார்த்தீர்களா?//

எது அந்த டாக்டர் அவதாரம் பத்தி சொல்லறீங்க??!!

said...

//எஙகே உங்கள் கூட்டாளி - அந்த 'குட்டி'நாகேஷ் - அதுதான்
ஸ்வாமி அந்த தில்லி இளைஞர்?

ஆளைக் காணோம்?//

வருவாருங்க! கொஞ்சம் பிஸியா ஹோம் வர்க் செய்து கொண்டு இருக்காரு!!

said...

//எது அந்த டாக்டர் அவதாரம் பத்தி சொல்லறீங்க??!!//

ஆமாம்...அதேதான்!

'பாம்ப்ன்'சங்கேத மொழியில் அவர் சொன்ன விஷயங்கள் என்னவாயிற்று?

said...

என்ன மிஸ்டர் ஜெய்!
நீங்களே மாறி மாறி 2 Endம் சேர்த்து 3 ஓவர்கள் பெளலிங் போட்டுவிட்டீர்கள்.
நானும் இதுவரை 3 பெளண்ட்ரி & 2 சிக்ஸர் அடித்துவிட்டேன்.

என்ன ஆச்சு உங்கள் டீமின் மற்ற பெளலர்களுக்கும், ஃபீல்டர்களுக்கும்?

சனி,ஞாயிறு பிரச்சினையா?

அதற்காக கவலைப்படாதீர்கள். திங்கள், செவ்வாய் என்று தொடர்ந்து ஆடினால் போகிறது!

said...

SUPER !!!!!!!!!!!!!!!!!

said...

//'பாம்ப்ன்'சங்கேத மொழியில் அவர் சொன்ன விஷயங்கள் என்னவாயிற்று?//

அதை மொழிப்பெயர்ப்பாளர் திரு. கோயிந்து இன்னைக்கு லீவு அதனால செய்ய முடியல, திங்கள் அன்று போட்டுவிடுவோம்.

said...

ஹி.. ஹி.. வந்துட்டோம்ல...

said...

செந்தழல் ரவியார் எதை சூப்பர் என்கிறார்?

1. ஆடு களத்தையா?
2. நீங்களே தனியாக நின்று பெளலிங் போடுவதையா?
3. வரும் பந்துகளைப் பவுண்டரி லைனுக்கு ஆனுப்பும் என்னுடைய ஆட்டத்தையா?

எல்லாக் creditம கோயிந்தண்ணனுக்குத்தான். ஏனென்றால் என்னுடைய coach அவர்தானே!!

said...

"அடடா" நம்ம வாத்தியாரும் பெரிய பேட்ஸ் மேன் போலயே!!! தனியா நின்னு பல செஞ்சரி போடுவாரு போல!!!

பிச்சு தள்ளறாரு!!!

எங்கப்ப கோயிந்துவைக்காணோம்??

வாத்தியார் சார் அடிச்சு ஆடுங்க!!!

said...

//எல்லாக் creditம கோயிந்தண்ணனுக்குத்தான். ஏனென்றால் என்னுடைய coach அவர்தானே!!//

எந்த ரயிலில் அவரு கோச்? அது என்ன கூட்ஸ் வண்டியா?? இல்ல பேசங்சர் வண்டியா? என்ன கோச் நம்பர்??

said...

பாம்பன் சங்கேத மொழியில் "தலை" (யோகவா முனிவர் கெட் அப்பில்) கணித்துச் சொன்ன அரிய
விஷயங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

(திருவாளர் கோயிந்து அவர்கள் மொழி பெயர்த்து என்னிடம்
கொடுத்துவிட்டுப் போய் விட்டார்)

1. 2020ல் இந்தியா வல்லரசாவது சர்வ நிச்சயம்! (எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது!)

2. அதிலிருந்து பத்து ஆண்டுகளில், அதாவது 2030ல் இந்திய நதிகளெல்லாம்
இணைக்கப்பட்டுவிடும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கங்கை நீரை மட்டுமே விவசாயிகள்
பயன் படுத்துவார்கள். வருடம் மூன்று போகம் நெல் அமோகமாக விளையும்.
(மொத்த நெல்லும் ஏற்றுமதியாகும்) - பாசுமதி ரைஸ் மட்டுமே தமிழர்களின் உணவு
என்றாகிவிடும்!

3. மடிக்கணினியின் விலை ஆயிரம் ரூபாய்க்கு வந்து விடும்! (ஆனால் கத்திரிக்காயின் விலை
ஆன்லைன் டிரேடிங் காரணமாகக் கிலோ இரு நூறு ரூபாய் என்றாகி விடும்)

4. தமிழகம் முழுவதும் புல்லெட் ரயில் வந்து விடும். சென்னையிலிருந்து கோவைக்கு
(தூரம் 495 கிலோமீட்டர்) 2 மணி நேரத்தில் சென்று விடலாம் (ஆனால் சென்னையில்
வளசரவாக்கத்திலிருந்து, அடையாருக்கு வாகனத்தில் செல்ல மூன்று மணி நேரம் ஆகும்.
மக்களெல்லாம் நடந்து செல்ல ஆரம்பித்து விடுவார்கள்)

5. சென்னை வாசிகளுக்கு, கேஸ், பால், இட்லி மாவு, மினரல் வாட்டர் - போன்றவைகள்
எல்லாம் Pipe Line' ல் சப்ளை செய்யப்படும்! ( ஆனால் பேல் பூரி, பானி பூரி, டோக்ளா,
மசால் தோசை போன்றவற்றை, மல்ட்டி நேஷனல் கம்பெனிகள் - கிங் பரஜர், மேரி ப்ரெளன், யோ சைனா,
- போன்ற கம்பெனிகள் உங்கள் வீட்டிற்கே கொண்டுவந்து கொடுக்கும் அளவிற்கு அவர்களுடைய
நெட் ஒர்க் விரிவாகிவிடும்)

6. பெரிய நிறுவனங்கள் எல்லாம், உங்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஆப்சனுக்கு
ஒப்புக் கொண்டு வேலை கொடுத்து விடுவார்கள் (ஆனால் உங்கள் வீட்டில் டி.வி யும்,
கேபிள் கனெக்சனும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துவார்கள்.)

7. தமிழ்ப் பதிவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தையும் தாண்டி விடும். தினம் ஒரு லட்சம்
பதிவுகள் இடப்படும். பதிவுகளுக்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை தினமும்
ஒரு கோடி என்ற அளவிற்கு உயர்ந்து விடும்!

8. ஆரோக்கியா பால், ஏர்டெல், போத்தீஸ், சென்னை சில்க்ஸ் உட்பட பல நிறுவனங்கள்
பதிவுகளுக்கு மட்டுமே விளம்பரங்களைத் தருவார்கள். பதிவர்களின் காட்டில் (வீட்டில்)
பொன்னாகக் கொட்டும்.

9. எல்லா நிருபர்களும், தமிழ் எழுத்தாளர்களும் பதிவர்கள் ஆகிவிடுவார்கள். அதனால்
தமிழில் நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்று எதுவுமே இருக்காது. சர்வமும்
பதிவு மயம்!

10. பதிவர்களுக்கிடையில் சண்டை சச்சரவே இருக்காது. விளம்பரங்களையும் அதனால்
கிடைக்கும் பெரும் தொகைகளையும் மனதில் கொண்டு அனைவரும் மக்களைக் கவரும்
விதத்தில் பதிவுகளைப் போடுவார்கள்.( அதனால் அவர்களுக்குச் சண்டை போடவோ,
அல்லது ஜல்லிப் பதிவு போடவோ நேரம் இருக்காது)

இது கொசுறு: (தலை சொன்னதுதான்)

திருவாளர் ஜெய் சங்கருக்கு (2032 ல்) 60 வயதாகி விடும். அவரது 60 வது மணி
விழாவிற்கு பெரிய விழா எடுக்கப்படுவதுடன். பிரம்மாண்டமான அகில உலகத் தமிழப்
பதிவர்கள் மாநாடு ஒன்றும் நடத்தப்படும். ஜெய்சங்கரே தன் சொந்தச் செலவில்
முன்னின்று இரண்டு நிகழ்ச்சிகளையும் நடத்துவார் (மாநாடு நடக்கவிருக்கும் இடம்:
சேப்பாக்கம் மைதானம், சென்னை)

said...

:))))))
பா.க.ச-saudi arabia br.

said...

//எந்த ரயிலில் அவரு கோச்? அது என்ன கூட்ஸ் வண்டியா?? இல்ல பேசங்சர் வண்டியா? என்ன கோச் நம்பர்??//

கோச் என்பதற்கு பதினைந்து அர்த்தம் உள்ளது.

மேல் விபரத்திற்கு:

கோயிந்து அவர்கள் எழுதிய'தில்லாலங்கடி சொல் அகராதி' என்ற நூலை விலை கொடுத்து வாங்கிப் படிக்கவும்

அந்த் நூல் புத்தகக் கடைகளில் கிடைக்காது. கோயிந்தண்ணன் அவர்களிடம் மட்டுமே கிடைக்கும்

விலை 500 ருபாய்.

பா.க.ச என்றால் ஐயாயிரம் ருபாய்

ஏனென்றால் நீங்கள் ஒரு காப்பியை வாங்கி multiple xerox copy எடுத்து
உங்கள் சங்க உறுப்பினர்களுக்குக் கொடுத்துவிடும் அபாயம் உள்ளதாம்.
கோயிந்தண்ணன் சொன்னார். அதனால் தெரியும்

said...

உங்கள் யானைப் படைத் தலைவி அவர்கள் விடுமுறை முடிந்து வந்து விட்டார்கள். தேவை பட்டால் உதவிக்குக் கூட்டிக்கொள்ளலாம்!

said...

//என்ன ஆச்சு உங்கள் டீமின் மற்ற பெளலர்களுக்கும், ஃபீல்டர்களுக்கும்?
சனி,ஞாயிறு பிரச்சினையா?//

அதே..அதே.. ஆனா வந்துட்டோம்ல

said...

//பதிவர் சதுரத்தை இணைத்துக்கு அறிமுகப்படுத்தியதே நம்ம தல தான்//

இதென்னது???????

said...

சுப்பையா சார் பாகசவா பாஅசவா.. புரியவேயில்லையே :-(

பா.க.ச.
அமெரிக்கா கிளை

said...

ன்..
டேன்...
ட்டேன்...
துட்டேன்...
ந்துட்டேன்...
வந்துட்டேன்.....


:)))


டெல்லியிலிருந்து
"குட்டி நாகேஷ்"
சென்ஷி

said...

//இயக்குனர் சங்கர் கண்ணில் இந்தப் படம் மட்டும் பட்டால் போதும்,, சண்டைக்கோழி புகழ் விஷால் மாதிரி
தமிழ் நாட்டின் அடு்த்த ஹீரோ இவர்தான். //

இந்த விஷயத்த ஷங்கர் முன்னாடி சொல்லிடாதீங்க... உங்களை பழிவாங்க அவரும் பாகசவுல சேந்துடப்போறாரு..

சென்ஷி

said...

////எஙகே உங்கள் கூட்டாளி - அந்த 'குட்டி'நாகேஷ் - அதுதான்
ஸ்வாமி அந்த தில்லி இளைஞர்?

ஆளைக் காணோம்?//

வருவாருங்க! கொஞ்சம் பிஸியா ஹோம் வர்க் செய்து கொண்டு இருக்காரு!!//


ஹி..ஹி....

//பா.க.ச இப்ப அன் டார்டிகா, ஐஸ்லாண்டு நாடுகளை தவிர உலத்தின் எல்லா மொக்கு மூலையிலும் கிளைகள் உள்ளது!//

நீங்க வேற புது கலர்ஃபுல் அவதாரத்தை பாத்துட்டு அங்கிருக்குற பென்குவின்லாம் விழுந்து எழுந்திருச்சி சிரிக்குதாம்..... :))))

மீடியாவோட மொத்த கவனமும் இப்போ அங்கதான். யார்றா இதுக்கு காரணம்னு பாத்துட்டு இப்போ தலயோட கவர்ஸ்டோரி வாங்க வரப்போறாங்க. பாத்து கோயிந்தோட புத்திசாலி - த்தனத்த (!?) பாத்துட்டு அவங்க பாகச கவர்ஸ்டோரி போடப்போறாங்க

சென்ஷி

said...

//1.அவர் இதுவரை, தன்னைப் பெற்ற தாயாரைத் தவிர வேறு எந்தப் பெண்மணியின் காலி்லும் விழுந்ததில்லை.

2.அவருக்கு ஏது எதிரி?//

1. உண்மைதான். ஆனால் தல -பார்க்கும் பெண்களிடம் எல்லாம் தன் தாயை பார்க்கும் குணம் கொண்டதை ஆசான் மறந்து விட்டாரா (அ) மறைத்து விட்டாரா?

2. அதானே...இவர்கிட்டயா நாம சண்ட போடப் போறோம்னு எல்லோரும் சிரிப்பாங்க


:)))))


சென்ஷி

said...

அண்டார்டிகாவில் பா.க.ச. ஆரம்பித்தாகிவிட்டது.,
மேலும் விபரங்களுக்கு..
http://i143.photobucket.com/albums/r135/snow978/penguin_tebe.swf?msg=PAA.KAA.SAA
க்ளிக் செய்யவும்

சென்ஷி

said...

//10. பதிவர்களுக்கிடையில் சண்டை சச்சரவே இருக்காது. விளம்பரங்களையும் அதனால்
கிடைக்கும் பெரும் தொகைகளையும் மனதில் கொண்டு அனைவரும் மக்களைக் கவரும்
விதத்தில் பதிவுகளைப் போடுவார்கள்.( அதனால் அவர்களுக்குச் சண்டை போடவோ,
அல்லது ஜல்லிப் பதிவு போடவோ நேரம் இருக்காது)//

சுற்றும்முற்றும் பார்த்து தல சோகத்துடன் ஆசானிடம் கூறியதாக இரவுக்கோட்டான் ஈ-மெயில் அனுப்பியிருந்தது.

11. அப்பக்கூட பா.க.ச.ன்னு போட்டா அதிக பின்னூட்டம்ங்கறதால எல்லா கம்பெனியும் பாகச அடிப்படை உறுப்பினர்களை தேடுவாங்க. டிவியில இருக்குறமாதிரி ஸ்லாட் போட்டு என்னை கலாய்ப்பாங்க. ம்ஹூம்...அதை நினைச்சாதான் ப்பயம்ம்மா இருக்கு... -என்றாராம்

டெல்லியிலிருந்து
பாகச கிளை செயலாளர்

சென்ஷி

said...

ஹைய்யா...
நானும் சிக்ஸர் அடிச்சுட்டேன் :)))

சென்ஷி

said...

மக்களே ஸ்டார்ட் மிஜிக்!

said...

ஆசான் எங்கே?
வார நட்சத்திரத்துக்கு ஆதரவு கொடுக்க போயிட்டாரா?

சென்ஷி

said...

வாத்தியார் எங்கபா எஸ்கேப் ஆயிட்டாரு??!!

said...

//வாத்தியார் எங்கபா எஸ்கேப் ஆயிட்டாரு??!!//

எதற்கு எஸ்கேப் ஆகணும்?
பேட்டை (Bat) மாற்றி எடுத்துவரப் போயிருந்தேன்!

சரி, ஆட்டத்தை அரம்பிக்கலாமா?

எங்கே அந்த குட்டி நாகேஷ், நாலு தரமாவது அவரைப் பவுண்டரி லைனுக்கு ஓட்விட வேண்டும்!

அப்போதுதான் இன்று இரவு நிம்மதியான் தூக்கம் வரும்!

said...

//எங்கே அந்த குட்டி நாகேஷ், நாலு தரமாவது அவரைப் பவுண்டரி லைனுக்கு ஓட்விட வேண்டும்!//

நான் பவுண்டரி லைன்கிட்ட ரெடியா இருக்கேன். யாருப்பா முதல்ல பந்து வீசப்போறது :)))

டெல்லி
பாகச பவுண்டரி லைனிலிருந்து

குட்டி நாகேஷ்

சென்ஷி

said...

பா.க.ச.வில் சேர்பவர்களுக்கு வாட் வரிவிலக்கு கிடைக்க ஏற்பாடு செய்யும்படி டி.கல்லுபட்டி பா.க.ச. கிளை(பதிவு எண்:79740/07) சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: மூஞ்சியில பெயிண்ட் அடிக்கிறவரைக்கும் தல என்ன செஞ்சுகிட்டிருந்தார் என்பதை தனிப்பதிவாக போட்டு சங்கத்திற்கு பூஸ்ட் கொடுக்கும்படி தெனாவட்டாகக் கேட்டுக்கொள்கிறேன்.

said...

///மூஞ்சியில பெயிண்ட் அடிக்கிறவரைக்கும் தல என்ன செஞ்சுகிட்டிருந்தார் என்பதை///

பார்த்தால் தெரியவில்லை?
கண்களைத் திறந்தவாறே தியானத்தில் ஈடுபட்டிருந்தார்.

சென்னைக்கு வந்திருந்த சீனாக்காரர் ஒருவர் சொல்லிக் கொடுத்த அற்புதக்
கலை அது!

அந்தக் கலையினால்தான் உங்கள் பா.க.ச எவ்வளவு லூட்டி அடித்தாலும் அவரால் தாங்கிக் கொள்ள முடிகிறது!