Posts

Showing posts with the label தமிழ்நாடு

நடிகர் விஜய் புது கட்சி :(

Image
நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு வருங்கால முதல்வரும் கிடைச்சுட்டாருடே!!! நடிகர் விஜய் கட்சி துவங்க போகிறாராம் :( வருகிற ஜூன் 22ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் இதற்கான அறிவிப்பு வருமாம்... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல???!!! இருக்கறது ஒரு முதல்வர் சீட்டு அதுக்கு எத்தினி ஆளுங்க கெளம்பிட்டாங்க!!! 1. விஜயகாந்த் 2. சரத்குமார் 3. விஜய் Where to go and tell this story :))))) (டமில்லா மாத்திக்கங்கப்பா!!) நன்றி : தெனாலி.காம் விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும் .

நோ கமெண்ட்ஸ்!

என்ன தான் நடக்குது நம்ம நாட்டில... ஒரு அதிகாரி தன் வேலையை சரியா செய்தால், அவர் உயிருக்கு உத்தரவாதமில்லா நிலை தலை தூக்கிவிட்டதே! ஆற்றில் மண்ல் அள்ளுபவர்களை தடுத்தால் கொலை செய்ய நினைக்கிறார்கள், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்ற நினைத்தால் கொலை செய்ய ஏவுகிறார்கள்! இதுக்கு என்ன தான் முடிவு??? விடியோ தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

ஜெ. வை ஆதரிக்கும் உடன்பிறப்புக்கள்!!!

என்ன ஆச்சர்யம் லக்கி போன்ற உடன்பிறப்புக்கள் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களாமாம் சாமியோ! இன்று போலீஸ் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜெ.வை கைது செய்ய மாட்டாஙகளாம்! சாரி கைது செய்யசொல்லமாட்டாங்களாம்!!!! நாங்கள் கொஞ்சமாவது சிந்திக்க கூடியவர்கள். எவனோ ஒரு பைத்தியக்கார ஜெ. அபிமானி செய்த காரியத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோரமாட்டோம். - லக்கிலுக் ;) அப்ப அன்று தர்மபுரி கேஸ்ல ஏன் ஜெ.வை கோத்துவிட்டீங்க? தினகரனில் 3 கொலைகள் நடக்கவில்லை என்றால் இந்த உடன்பிறப்பு இப்படித்தான் சிந்திப்பாரா?? இந்த அழகிரியால பாவம் உடன்பிறப்புக்கள் ஜெ.வை ஆதரித்து பதிவு போட வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டிருக்காங்க! உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்!!!) இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் தன் பலத்தை காட்ட அப்பாவி மக்களை கொலை செய்யறாங்க! பி.கு: பைத்தியகாரனுகளை எல்லாம் கட்சியில் சேர்த்த தலைவருக்கு ஒரு பங்கு இந்த கொலைகளில் உண்டு! அதுவும் எம்.எல்.ஏ பதவி வரை கொடுத்த தலைவருக்கு நிச்சயம் இந்த கொலைக்கு பங்கு உண்டு என்பது என் வாதம்!

திருத்தமுடியாதுடா உங்களை!!!

ஜெயலலிதா மது அருந்தியதாக இரட்டை அர்த்தத்தில் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டது, கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று காலை முதல் பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிமுக எம்எல்ஏ கைது! ஆடுங்கடா ஆடுங்க... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை. அரசியல்வாதிகள் கையில் பணமும், அதிகாரமும் இருக்கு என்றால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொளுத்திப்போட்டு என்ஜாய் பண்ணலாம்! அன்று அவர்கள் தினகரன் கருத்துக்கணிப்பு போட்டப்போ, அழகிரி & கோ கலாநிதி மாறனையோ! தயாநிதி மாறனையோ அடிக்கவில்லை, கொல்லவில்லை! இன்று இவர்கள் சொன்னவரை ஒன்னும் செய்யவில்லை! எந்த நாயாவது சொன்னவனையோ அல்லது செய்தவனையோ கொல்லறீங்களாடா? பாவம் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களையும், காவல் காக்கும் காவலர்களும் தான் கிடச்சாங்களாடா? திரும்ப அடிக்கமாட்டாங்க என்ற தைரியம்! மக்களை விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை காலம் வேண்டிவரும் ?? இந்த பாவமலைகள் இந்தியாவை விட்டொழிக்க!!