40 ஆயிரம் குடும்பத்தை வாழவைக்கும் மத்திய அமைச்சர்!
நேற்று அந்த செய்தியை டி.வியில் பார்த்தபோது இப்படியும் ஒரு அமைச்சர் இருப்பாரான்னு எனக்கு ஆச்சர்யமா போச்சு!!! நல்லா பண்ணுங்க சாமிங்களா! ரெம்ப நல்லா இருப்பீங்க!!! "என் குடும்பம் நடத்தும் நிறுவனங்களின் 40 ஆயிரம் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோலிய அமைச்சரிடம் எறிவாவு தரச்சொல்லி கோரிக்கையை வைத்தேன்" - டி.ஆர்.பாலு. பாராளமன்றத்தில் தைரியமா இந்த விசயத்தை சொல்லறாரு??!! நம் பின்பலத்தில் வாழும் மைனாரிட்டி அரசு நம்மை ஒன்னும் செய்யமுடியாது என்ற தைரியம் தானே?? எப்பதான் நீங்க 100 கோடி மக்களின் நலன்களை நினைப்பீர்கள்??