Posts

Showing posts with the label தமிழ்மணம்

நோ கமெண்ட்ஸ்!!!

டிஸ்கி: இங்கே தமிழ்மணத்தில் நடக்கும் விசயத்துக்கும், இந்த விடியோவுக்கும் சம்பந்தம் இருக்கு!! அவங்க அவங்களுக்கு புரியரமாதிரி இந்த விடியோவின் நீதியை புரிஞ்சுங்கோங்கோ!!!! சிங்கங்கள் யாரு! முதலைங்க யாரு! காட்டெருமை யாரு! எருதுவின் கன்று யாருன்னு... நீங்களே ஊகித்துக்கொள்ளுங்க :) சோ,(சத்தியமா துக்ளக் சோ இல்லைங்கோ!)நோ கமெண்ட்ஸ்!!!

விவாதகளத்தில் அநாகரீக பின்னூட்டம்!

இந்த தமிழ்மணம் விவாதகளம் பக்கமே போகாமல் இருப்போம் என்றால் மனம் கேட்கமாட்டீங்குது! அட பொது மேடை தானே நம் கருத்தும் சொல்லிவைப்போமே என்று அங்கு நாம், நம்முடைய கருத்தை பின்னூட்டமா போட்டா!! அங்க உடன்பிறப்பு லக்கி செய்யும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லை என்று தோன்றுகிறது! அது தமிழ்மணம் விவாதகளமா? அல்லது லக்கிலுக்கின் அரட்டை அரங்கமா?? லக்கிலுக்குக்கு தேவையான, அவர் தலைவனை போற்றும் பின்னூட்டங்கள் மட்டும் ஜல்லியடிக்கும் களமா?? கடந்த வாரம் ஹெல்மெட்! குறிந்தான ஒரு விவாதம் அங்கு துவக்கப்பட்டது! அதில் திருவாளர் லக்கிலுக் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்? இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன? நான் பின்னூட்டத்தில் என் கருத்தான //இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன?// தலைவருக்கு நல்ல கட்டிங் கரெட்டா கிடைத்திருக்கும். அவ்வளவு தான் அவர் தலைவர் மேல் ஒரு புகார் சொன்னேன். அந்த பின்னூட்டம் பிரசுரிக்கபடவில்லை என்பதோடு அல்லாமல்.... நா. ஜெயசங்கர் அவர்களின் அநாகரிகமான பின்னூட்டத்தினை தவிர்த்து மீதி பின்னூட்டங்கள் வெளியிடப்படுகின்றன. நான் ஏற்கனவே கூறியபடி இது தமிழ்மணம் நி...

என்னை தெரியுமா?

என்னையும் நட்சத்திரமாக் தேர்ந்தெடுத்து என்னை ஆச்சர்யப்படுத்திய தமிழ்மணத்துக்கு நன்றி சொல்லி முதலில் என்னை பற்றிய சிறு குறிப்புடன் என் பதிவுகளை துவங்குவோம் என்று நினைத்தேன் :) பெயர்: ஜெயசங்கர் நா வயது: 34 படிப்பு: பொறியியல் பட்டம் தொழில்: மென்பொருள் ஏற்றுமதி ஏன் வலைப்பதிவு: நான் பொதுவா அரசியல் சார்ந்து எழுதுவதாக எல்லாரும் சொன்னாலும், நான் மக்கள் பிரச்சனை சார்ந்து எழுதுகிறேன்னு என்பதே உண்மை. அரசியல் சாக்கடை ஆனதால், மக்கள் படும் அவதிகளை சொல்லும் பதிவே என் பதிவுகள், மக்கள் விழிப்புணர்வு பதிவுகள், ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட எழுத துவங்கினேன். என்னை தேசிய ஜல்லி அடிப்பவன் என்று பலர் சொல்லறாங்க! ஆமாம் என்று பெருமையா சொல்லிக்கிறேன். ஏன்னென்றால் நான் முதலில் இந்தியன், அப்புறம் தான் மற்றவைகள்...இதை ஜல்லி என்று சொல்பவர்கள் சொல்லட்டும், அது அவர்களின் சுதந்திரம் :) என் தலைவன்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொ...