ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

அன்பு வலைப்பூ நன்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


இந்த புத்தாண்டில் புது மனிதனாய் பல வெற்றிகளும், வளங்களும் பெற்று பெருமகிழ்ச்சியோடு வரவேற்க என் வாழ்த்துக்கள்!!!
இந்த புத்தாண்டு இனம், மதம், மொழி என எல்லா தடைகளையும் தாண்டி சிறந்த ஒரு புத்தாண்டாய் வரவேற்ப்போம்!!!
மானுடமும், நல்லிணக்கமும் சிறக்கும் சிறந்த ஒரு புத்தாண்டாய் எதிர்ப்பார்த்து....


வாழ்த்துக்களுடன்,


நா ஜெயசங்கர்

சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! - வீடியோ

சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! வீடியோவில் பார்க்க மிக கொடுமையாக உள்ளது:

இன்று காலை இந்திய நேரம் 8:30 மணிக்கு சதாம் தூக்கிலிடப்பட்டார். வழக்கமாக தூக்கிலிடப்படுகிறவர்களுக்கு தான் முகம் மறைக்கப்பட்டிருக்கும். இங்கு அது வேறு வகையில். தூக்கில் போட வருபவர்கள் முகமூடியில் வந்தது, சதாமின் மேல் உள்ள பயத்தை காண்பிக்கிறது.

இங்கே பார்க்கவும்

கைபேசியில் பதிவு செய்த வீடியோ பார்க்க(Un Edited)........

நிச்சயம் ஒரு திறமையான எதிராளியை அமெரிக்கா இழந்துவிட்டது!!!

********************************************
We The Peopleலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

சில்லுன்னு ஒரு கலாசாரக் கொலை!

கடந்த சில நாட்களாலின் சில்லுன்னு ஒரு ஜோடின்னு ஒரு விஜய் டி.வி நிகழ்ச்சியை இரண்டு, மூன்று முறை பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி நம் சமுதாயத்தை, கலாச்சாரதை எப்படி பாதிக்கும் என்று தெரியாமலா ஒளிபரப்புகிறார்கள்? இல்லை தெரிந்தே ஒழியட்டும் நம் கலாச்சாரம்ன்னு ஒளிபரப்புறாங்களான்னு தெரியலை? அதை பார்த்ததுக்கு அப்புறம் இனி இந்த மாதிரி நிகழ்ச்சியை பார்க்கக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன்னா பார்த்துக்கோங்க!!!

யாரோ ரெண்டு பேர் சில்லுன்னு ஜோடியாமாம்.. ஹூம்!! என்ன கொடுமைடா சாமி. அந்த ஜோடில பொண்ணுக்கு வயசு 26 அப்புறம் பையனுக்கு வயசு 40. அது ஒரு மேட்டரே கிடையாது. சரி அவர்கள் காதல் விவகாரம் எப்படி ஸ்டார்ட் ஆச்சுன்னு ஒரு விளக்கம் கொடுத்தாரு பாருங்க நம்ம ஹீரோ! அந்த பொண்ணு இவரோட சித்தப்பா விட்டுல தங்கி (Paying Guest) இருந்ததாம், இவர் அவங்க சித்தப்பா ஊருக்கு போறதை சாக்கா வச்சு, அவரை ரெயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு இந்த புள்ளய சனி கிழமை டான்ஸ் பார்ட்டிக்கு போலாமான்னு கேட்டாராம், அவங்களும் சரின்னு போயிட்டு வந்தாங்களாம். அது கூட விடுங்க.

என்ன கொடுமைடா இது??:

அந்த நிகழ்ச்சியை நடத்துற மமதி சாரி கேட்க்கும் சில கேள்விகள்..

நீங்க குடிப்பீங்களான்னு ஹீரோ கிட்டயும், ஹிரோயின் கிட்டயும் உடனே ரெண்டும் ஆமாம்ன்னு சூப்பரா தலையை ஆட்டுதுங்க.

நீங்க சிகரெட் அடிப்பீங்களான்னு ரெண்டுகிட்டயும் கேட்டா ரெண்டும் ஆமாம்ன்னு சொல்லுதுங்க... ஹீரோயின் பாத்ரூம்ல தான் தம் கேட்பாங்களாம்!!!

அப்புறம் ஒரு சூப்பர் கேள்வி, அவருக்கு கேர்ள் ப்ரெண்ஸ்(கண்டிப்பா அவர்கள் பெண் தோழிகளை சொல்லவில்லை என்று அவர்கள் சிரிப்பு சொல்லிவிட்டது) இருக்காங்களா? உங்களுக்கு தெரியுமா? உடனே ஹீரோயின் எனக்கு தெரியும் அவருக்கு நிறைய இருக்குன்னு, ஆனா நான் கண்டுக்கமாட்டேன் ஏன்னா? எனக்கும் நிறைய பாய் ப்ரெண்ஸ்!!!! இது எப்படி இருக்கு??!!

கல்யாணம் ஆன முதல் ராத்திரி எங்க முதல் கிஸ் குடுத்தீங்க? அப்ப உங்களுக்கு என்ன தோணுச்சு?

இது போன்ற ஒரு வரைமுறை இல்லாமல் கேள்விக்கனைகளும் அலுக்காமல் பதில் சொல்லும் ஜோடிகளும், இது தேவையா?? இது போன்ற செயல்களை முன்வைத்து கேள்விகளும், அதற்கான பதிகளை வாங்கி என்ன பண்ணப்போறாங்க? இந்த மமதியும் அதை பார்க்கும் டி.வி ரசிகர்களும்.

இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இளைஞர்களும் இளம் ஜோடிகள் மட்டுமே பார்க்கிறார்கள் என்பதை வைத்து பார்க்கும் போது சில சந்தேகங்கள் தான் வருகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகள் வேண்டுமென்றே ஒரு மேற்கத்திய கலாசாரங்களை இந்தியாவினுல் அனுப்பி வைக்கும் முயற்சியாகவே தெரிகிறது. நம் இளைஞர்களுக்கு டேட்டிங், ஸ்வப்பிங் தொடர்ந்து இன்னும் சில கலாச்சார சீரழிவுகளை இந்த விஜய் டி.வி மூலமும் இறக்குமதி செய்யப்படுவதாக தான் எனக்கு தோன்றுகிறது.

இதை பார்ப்பவர்களுக்கு இப்படி தோண்றும்:

  • பார்ட்டிக்கு போய் கும்மியடிப்பது ஒரு நல்ல விசயம்
  • பெண்களும் ஆண்களும் சிகரெட், சாராயம் (Liquor) எல்லா நல்ல பழக்கமும் வைத்துக்கொள்ளலாம்.
  • Pub சென்று கும்மாளம் அடிப்பது ஒரு ஸ்டைல்.
  • Saturday Night பார்ட்டிக்கு சொல்வது ஒரு சிறந்த செயல்.
  • எத்தனை கேர்ள் ப்ரெண்ஸ்(தோழிகள் அல்ல) வைத்துக் கொள்கிறார்களோ, அத்துனை இமேஜ் பில்டப் ஆகும்.
இவை எல்லாம் அழிந்து வரும் நம் இந்திய கலாசாரத்தை முற்றிலும் அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே எண்ணத் தோண்றுகிறது.

ஒழியட்டும் நம் கலாச்சாரம் என்ற நோக்கோடு தான் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளை விடுத்து சமீபத்தில் வந்த மக்கள் தொலைக்காட்சி போல சிறந்த, கருத்து மிக்க சினிமா படங்கள், மக்கள் சிந்தனையை தூண்டும் கலை/கவிதை பொக்கிஷங்களின் விமர்சனம் மற்றும் அறிமுகம் , வேலை வாய்ப்புக்கு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு ஊரில் உள்ள மக்கள் பிரச்சனையை எடுத்து, அதை மையமாக கொண்ட நிகழ்ச்சிகள்(*தேவைகள் சேவைகள்), சான்றோர் வீதி, அறிவுக்கு விருந்து - மாணவர் வினாடி வினா, சமுதாயத்தில் பெண் தொழில் செய்ய அறிவுரை என நல்ல நிகழ்ச்சிகளை செய்தால் தானும் வளர்ந்து சமுதாயமும் வளரும் என்ற எண்ணமின்றி அழிவு பாதைக்கு கூட்டிச்செல்கிறது விஜய் டி.வியின் சில்லுன்னு ஒரு காதல் ஜோடியை மக்கள் தன் எதிர்ப்பை தெரிவித்து, இது போன்ற நிகழ்ச்சிளை தயாரிப்பவர்களுக்கு நம் எதிர்ப்பை தெரியப்படுத்தவேண்டியது நம் கடமை.

-----------------------------------------------------------------------

சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! - வீடியோ

இந்தியாவின் சிற்பிக்கு இன்று நினைவு நாள்

இந்தியாவின் இரும்பு மனிதன் என்று இந்திய வரலாறு சொல்லும் சர்தார் வல்லப்பாய் பட்டேலின் நினைவு நாள், இன்று!!!

சுமார் 600 சமஸ்தானங்களா இருந்த இந்தியவை, ஒற்றை ஆளாய் நின்று, ஒன்றுபட்ட இந்தியா ஆகிய பெருமை இவரை மட்டுமே சேரும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பே இவர் துவங்கிய ஒன்றுபட்ட இந்தியா கனவே இன்று நாம் காணும் சுதந்திர இந்தியா!!!

இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆகவேண்டியவரும் இவரே, காந்தியின் வேண்டுகோளுக்கு இனங்கி தனக்கு கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை நேருவுக்கு விட்டுக்கொடுத்தார். இந்தியாவின் முதல் துணை பிரதமராக இவர் பணியாற்றினார். இவர் உள்துறை மற்றும் தகவல் தொலைதொடர்பு துறைகளை கவனித்துவந்தார். இவருடைய் முயற்சியாலேயே டாக்டர் அம்பேத்கார் இந்தியாவின் அரசியல் சாசனம் வடிவமைப்பு குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிட தகுந்தது.

இவர் டிசம்பர் 15, 1950ல் தனது 75வது வயதில் மாரடைப்பால் காலமானார். இன்றைய இந்தியாவின் சிற்பி என்ற முறையிலும், சுதந்திர இந்தியாவை காண இவர் செய்த தியாகத்தையும் இன்று நினைவு கூறுகிறேன். நான் மதிக்கும் சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். நாளைய இந்தியா இவரை மறக்காமல் இருக்குமா??