வலைப்பதிவர் சுற்றுலா - 7

ரிலே பதிவின் முந்தய பதிவுகள்:

பாகம் 1: வீரமணி
பாகம் 2: பிரியன்
பாகம் 3: பால பாரதி
பாகம் 4: மா.சிவக்குமார்
பாகம் 5: சிங்.ஜெயக்குமார்
பாகம் 6: அருள் குமார்

வானம் மழைகான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்க கடற்கரை கோவிலை சென்று அடைந்தோம். ஒரு வழியா சுற்றுலாவின் கடைசி கட்டத்தை அடைந்தோம். Parkingயில் பார்க் செய்துவிட்டு பார்த்தால் பாலாபாரதி & மா.சிவகுமார் கோஷ்டியை காணவில்லை. அவர்கள் 10 நிமிடம் தமதமாக வந்தடைந்தனர். ஒருவழியா அனைவரும் வந்து சேர உள்ளே செல்ல தயாராக, அருள் நுழைவு டிக்கெட் எடுக்க முயற்சி செய்ய, அப்ப சிவகுமாரும், நானும் 5 ரதம் பார்க்க எடுத்த நுழைவாயில் சீட்டு இந்த கடற்கரை கோவிலையும் பார்க்க உபயோகபடுத்தலாம் என்ற மேட்டரை அருளுக்கு சொல்ல, அவரும் டிக்கெடை பார்த்துவிட்டு கரெக்ட் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல போகும் வழியில் குப்புசாமி, கவிஞர் பாலபாரதியிடம் சுற்றுலா பற்றி ஒரு விவாதம் நடக்க... சுற்று என்றாலும் உலா என்றாலும் ஒரே அர்த்தம் தானே ஏன் அதை சுற்றுலா என்று சொல்லனும் என்று சர்ச்சை கெலப்பினாரு குப்ஸ். பாலா ஏதோ சப்பை கட்டு கட்டிகிட்டு இருந்தாரு... நாங்க உள்ளே சென்று பார்த்தால் திரும்பவும் பாலா & Co வை காணேம் என்னடான்னு பார்த்தா... பல்லவர்கள் மற்றும் கடற்கரை கோவிலின் வரலாறு பற்றிய நுழைவாயில் உள்ள கல்வெட்டுகளை படிச்சுகிட்டு இருக்கறாங்க... (பண்டைய காலத்தில் வெச்சது மட்டும் தான் கல்வெட்டா?!! இப்ப நம்ம அரசு கல்லில் வரலாறு எழுதி வெச்சிருக்கறதும் கல்வெட்டுதானே!!?? ஹீ! ஹீ!! ) ... உங்களோட வரலாற்று ஆராய்ச்சிக்கு அள்வே இல்லயா என்று ரவுண்டு கட்டிணேம்...

அழகான புல்வெளிக்கிடையே அந்த கடற்கரை கோவில் ரம்மியமாய் காட்சி அளித்தது. அருளுக்கு திடீர் ஐடியா, எல்லவரையும் கோவிலை நோக்கி அமர செய்து பின் நின்று ஒரு சூப்பர் படம் எடுத்தாரு. அருளோட கலை ஆர்வத்துக்கு ஒரு அளவேல்லைங்கோ...

இந்த சுற்றுலாவை பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று முடிவு செய்ய ஐயா தான் அதை ஒரு Relay பதிவா போடுவோம் என்று ஐடியா கொடுத்தேன்.. ஹி! ஹி!! இந்த மாதிரி வெட்டி ஐடியாவுக்கெல்லாம் சூப்பரா என் மூளை செய்யும் பாருங்க. யார் யார் எந்த பகுதியை எழுதுவது என்று அங்கு அமர்ந்தபடியே முடிவு செய்துவிட்டு கோவிலுக்கு உள் சென்று பார்க்காமல் கிளம்பிட்டோம். மழைக்கு முன் சென்னையை அடையவேண்டும் என்ற ஆர்வம் பொங்கி வெளியேறும் போது ஒரு வீசில் சத்தம் என்னடான்னு பார்த்தா கடற்கரை கோவில் பார்வை நேரம் 6 மணி வரைதான் போல அங்கு இருக்கும் காவலர்கள் பிகில் கொடுக்கறாங்க அப்பூ...

ஷப்ப்ப்ப்ப்ப்பா எஸ்கேப் ஆங்குங்க தல என்று.... மழைக்குமும் சென்னை அடைவோம் என்று வண்டியை எடுத்துகிட்டு புறபட.... திரும்பும் போது எங்களுக்கு காத்திருக்கும் பிரச்சனைகள் தெரியாமல்...

அந்த மேட்டரையெல்லாம் நம்ம குப்ஸ் சொல்லுவருங்க... அங்கே பாருங்கோ....

நாளை சோனியா Chairman of NAC??!!

இதனால் சகலருக்கு அறிவிப்பது என்ன வென்றால் நம் ரப்பர் ஸ்டாம்ப், ஸாரி பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து பிச்சை கேட்டு இரட்டை பதவி மசோதாவுக்கு கையெழுத்து வாங்கிட்டு வந்திட்டாருபா!!! நான் என்னமோ நாட்டு பிரச்சனைக்காக ஜனாதிபதியை சந்தித்து இருப்பரோன்னு தப்பா நெனச்சுட்டேன். பாவம் தல கொடச்சல் தாங்க முடியாம கையெழுத்து போட்டுட்டாரு போல...

So, மிக விரைவில் சோனியா தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக பதிவியை ஏற்கபோகிறார் என்று மட்டும் நன்றாக புரியுது.

எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க அது தான் எனக்கு நினைவுக்கு வருது.

"சொந்தம் காரியம் ஜிந்தாபாத்"

MPகளிடம் சுதந்திரதின Quiz

நேற்று இரவு தற்செயலா NDTV காண்டபோது. நம்ம MPகளிடம் சுதந்திரதின Quiz கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார்கள். மொத்தம் ஒரு 5 கேள்விகள் தான்.

1. தேசிய கீதம் (National Anthem) யார் எழுதியது?
2. தேசிய பாடல் (National Song) யார் எழுதியது?
3. நம் தேசிய கொடியில் மேலே உள்ள நிறம் என்ன?
4. தேசிய கொடியின் நடுவில் உள்ள சக்கரம் எங்கிருந்து எடுத்தது?
5. காந்தியின் முழு பெயர் என்ன?

அதில் கொடுமை என்ன வென்றால் ஒரு 10 - 15 MPக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது, ஒரு MP கூட சரியான பதில் சொல்லவில்லை. அந்த லிஸ்டில் நம் மூத்த பாராளமன்ற உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லாவும் அடங்கும்.

1. தேசிய கீதம் (National Anthem) யார் எழுதியது? இந்த கேள்விக்கு கிடைத்த பதில்களில் சில:

பதில்கள்: தெரியாது, எந்த தேசிய கீதத்தை கேக்கறீங்க (என்னமோ சொன்ன பதில் சொல்லிடுவாரு போல), அதெல்லாம் எனக்கு தேவை இல்லை, எனக்கு ஜன் கன மன தெரியும் அவ்ளோதான், ஒருதர் மட்டும் ரொம்ப ட்ரை பண்ணி பாதி பேரு கண்டுபிடிச்சாரு ரபிந்தரூ.... என்று ஒரே இழுப்பு... சூப்பரோ சூப்பர் ....

2. தேசிய பாடல் (National Song) யார் எழுதியது? இந்த கேள்விக்கு கிட்ட தட்ட ஒரே மாதிரி பதில்கள் தான்.

பதில்கள்: தெரியாது, எந்த தேசிய பாடலை கேக்கறீங்க, அதெல்லாம் எனக்கு தேவை இல்லை, பலர் சேர்ந்து எழுதியது, நஜ்மா ஹெப்துல்லா ரொம்ப ட்ரை பண்ணி பெயரோட முதல் சில எழுத்துக்களை கண்டுபிடிச்சாங்க பக்கிம், பக்கிம்ன்னு சோல்லிட்டு .... ஒரே ஓட்டம் டைம் இல்லை என்று... மீட்டிங்க்கு நேரம் ஆச்சு என்று... ஐயோ பாவம். படிக்க டைம் குடுங்கப்பா...


3. நம் தேசிய கொடியில் மேலே உள்ள நிறம் என்ன?

பதில்கள்: பச்சை, தெரியாது, மறந்துவிட்டேன், என்கிட்டயே கேள்வி கேக்கறயா?, இப்படி எல்லாரும் எஸ்கேப் ஆக முயற்சி செஞ்சாங்க. NDTV காரங்க தொரத்தி தொரத்தி ரவுண்ட் கட்டனாங்க.

4. தேசிய கொடியின் நடுவில் உள்ள சக்கரம் எங்கிருந்து எடுத்தது?

பதில்கள்: எல்லா Stateகளில் இருந்து, நீல நிற சக்கரம், தெரியாது, இப்படி சூப்பர் பதில்கள்.

5. காந்தியின் முழு பெயர் என்ன?

இதுக்கு தாங்க நம்ம MPகள் ரொம்ப டென்ஸன் ஆயிட்டாங்க.

பதில்கள்: நாங்க பாப்பு(Bapu) தான் கூப்பிடுவோம், தெரியாது, மாகாத்மா, ஒருதர் பதி கண்டு பிடிச்சாரு கரம்சந்த் காந்தி ஒரளவுக்கு சொன்னாரு ...

ஏங்க உங்களுக்கு யாருக்காவது எல்ல பதிலும் தெரிஞ்சா சொல்லுங்க தல...

இப்படி தான் இருக்க வேண்டும் நம் MPக்கள்.

வாழ்க இந்தியா!! வளர்க இந்தியா!!! அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

ஜெய் ஹிந்த்!!!

உறவுகள் பகைகளே!!! - தேன்கூடு போட்டி

கோவையில் எங்கள் வீட்டு முதல் மாடியில் புதியதாக குடி வந்தார் பாலாஜி, இவர்தான் குடும்ப தலைவர். ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜர். அவர், மனைவி வனஜா மற்றும் பாலாஜியின் பத்து வயது மகள் பூவிதா என சின்ன குடும்பம் தான்.

அன்று ஞாயிறு காலை 8 மணி வழக்கம் போல் என்.டி.டி.வி யில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தேன், முதல் மாடியில் வீட்டிலிருந்து பலர் புதிதாய் வந்திருந்தனர், பெரிய தகராறு நடத்து கொண்டிருந்தது, ஒரே கூச்சலும் குழப்பம். எதோ விவகாரம் என்று மட்டும் தெரிந்தது. அவர்கள் குடிவந்து 6 மாதம் இருக்கும் இதுவரை அவர்களின் சப்தம் கூட வெளியே கேட்டதில்லை, இன்று என்னவாயிற்று என்று எனக்குள் ஒரு ஆவல். மெல்ல அவர்களின் வீட்டிலிருந்து வரும் போச்சுக்களை கேட்க துவங்கினேன். நான் செய்வது தவறு என்று தெரிந்தும் ஏனோ அதை கேட்க தூண்டியது என் உள் மனசு. யாரையோ இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள், அவரை யார் பார்த்துக்கொள்வது என்பது தான் பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஒரு 2 மணி நேர கூச்சலுக்கு பின் சப்தம் அடங்கியது. என்னவானாலும் நமக்கு நியூஸ் வரும் என்று தேத்திக்கிட்டேன்.

மதியம் நண்பன் மணி வீட்டுக்கு புறப்பட்டு வெளியே வந்தேன், எதிரில் வந்த பாலாஜி, "சார் எப்படி சார் இருக்கீங்க! பார்க்கவே முடியல?" என்று என்னிடம் கேட்டார், "என்ன சார் பண்ணறது பிஸினஸ் என்றாலே அப்படித்தான் எதுக்கும் நேரம் கிடைப்பது இல்லை" என்று என் வழக்கமான பதிலை சொல்லிவிட்டு, பாலாஜிக்கு அருகில் இருந்தவரை பார்க்க உடனே, இவர் என் தம்பி சிதம்பரத்தில் இருக்காரு, எங்க அப்பவை இங்க கொண்டுவந்து விட வந்திருக்காரு என்று எனக்கு ஒரு தகவலை மெதுவா எடுத்து கொடுத்தார்! அப்ப இது தான் பிரச்சனைக்கு காரணம் போல என்று நானாக யூகித்துக் கொண்டே மணியின் வீட்டுக்கு பைக் அமர்ந்தபோது தான் ஒரு 80 வயது மதிக்க தக்க வயதானவர், வாழ்வில் பிடிப்பிழந்து இருண்டா முகத்துடன் பால்கனியில் அமர்ந்து இருந்தார். அவர்தான் பாலாஜியின் அப்பா போல என்று நினைத்துக்கொண்டேன். பார்க்க வீடு படத்தில் வரும் சொக்கலிங்கபாகவதர் போல பாவப்பட்ட முகம். அவர் சோகமாக இருப்பது மட்டும் உண்ர முடிந்தது.

அன்று இரவே அவர் தம்பியும், தம்பியின் மனைவியும் ஊருக்கு சென்றுவிட்டார்கள். அந்த நாள் முதல் வீட்டில் தினமும் பாலாஜியும், அவர் மனைவியும் சண்டையிடுவது வழக்கம் ஆனது! அடுத்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என் அம்மாவிடம் அவர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள் பல கதை சொல்லுவது, கதை கேட்பதுமாக சில மாதங்கள் போனது!

ஒரு நாள், காலை சுமார் 6:30 மணிக்கு காலிங் பெல் யாரோ அடித்தார்கள், நான் தான் கதவின் அருகாமையில் உள்ள அறையில் உள்ளதால் யார் காலிங் பெல் அடித்தாலும் கதவை திறப்பது என் வேலையானது, திறந்ததும் பாலாஜி, "என்ன சார் இந்த நேரத்தில ஏதாவது பிரச்சனையான்னு கேட்டேன்", அவர் உடனே "ஒன்னும் இல்ல சார், நாங்க பழனிக்கு சாமி கும்பிட போறோம், அப்பா வீட்டில தனியா தான் இருக்காரு ஏதாவது சத்தம் வந்தா பாத்துக்குங்க, நாங்க இரவுக்குள் வந்துவிடுவோம்" என்று கூறிவிட்டு போனார். என் மனசெல்லாம் பாவம் அந்த பெரியவரையும் அழைத்துப்போனால் குறைந்தாபோவார்கள் என்று வருத்தப்பட்டேன். ஆனா நம்ம வருத்தப்பட்டு என்ன செய்யமுடியும். முதுமையும் ஒரு கொடுமையான விசயமாக எனக்கு தோண்றியது. காலையில் அவர் என்ன சாப்பிடுவார், 6:30க்கே போயிட்டாங்களே, காலை உணவு ஏதாவது செய்துவெய்துவிட்டு பொயிருப்பார்களோன்னு, இல்ல பட்டினி போட்டிருப்பாங்களோ என பல சிந்தனைகள், 10 மணிக்கு இருக்கும் என் அம்மாவிடம் கேட்டேன் ஏம்மா பெரியவர்க்கு ஏதாவது சாப்பிட கொடுக்களாமான்னு, அம்மாவும் சரி என்று காலையில் செய்த இட்லி + சட்டினியை பாத்திரத்தில் போட்டு என்னிடம் கொடுத்தார்கள்.

அதை எடுத்துக் கொண்டு மேலே போய் கதவை தட்டியதும் தான் தாமதம் கதவு திறந்தது. ரொம்ப ஆவலா காத்திருந்தார் போல பெரியவர். நான் என்னை அறிமுகம் செய்துவிட்டு, கொண்டுசென்ற டிப்பனை அவரிடம் கொடுத்து சாப்பிடுங்கள் என்றேன். அவ்வளவுதான், அவர் கண்ணில் நீர் அருவி போல் கொட்ட துடங்கியது. என்னால் சகித்துக்கொள்ள முடியாமல் என்ன சார் இப்படி என்றேன். அவர் உடனே யார் பெத்த புள்ளயோ, நீங்க என்னை பத்தி நினைக்கற அளவுக்கு கூட என் மகன் நினைக்கவில்லையேன்னு... என்று சொல்லும் போது அவரால் அடக்கமுடியாமல் கண்ணீர் கொட்டியது. எனக்கும் கண்கள் கலங்கின... சமாளித்துக் கொண்டு... முதலில் சாப்பிடுங்கள் பிளீஸ் என்றேன். அவர் மெதுவாக இரண்டு இட்டிலியை சப்பிட்டுவிட்டு, போதும் என்றார். மீதம் உள்ளதை வைத்துக்கொள்ளுங்கள் பிறகு பசித்தால் உண்ணலாம் என்றேன். சரி சார் நான் வறேன் என்றதும், ஒரு 10 நிமிஷம் என்னோடு இருக்கமுடியுமா என்று கேட்டர். ஓகே என்று சொல்லும் முன் தான் பர்மாவில் வியாபரியாக இருத்ததையும், நல்ல செல்வ செழிப்பாய் வாழ்ந்து, மனைவி இறந்தபின் பர்மாவிலிருந்து திரும்பிவந்து திருச்சியில் மோசைக் (Mosaic) வியாபரம் செய்து பாலாஜி உள்ளிட்ட மூன்று குழந்தைகளையும் நன்றாக வளர்த்து வாழ்கைக்கு வேண்டிய பணத்தையும் வியாபரத்தையும் பிரித்து கொடுத்து, நல்வழி படுத்திவிட்டு மூன்று மகன்களின் தயவில் 6 மாதத்துக்கு ஒரு மகன் வீடு என்று வாழ்வதாகவும் சொன்னார். "இப்ப இவர்களுக்கு என்னை கவனிக்க இஷ்டமில்லை, பாலாஜி என்னை முதியோர் விடுதியில் சேர்க்கவேண்டும் அல்லது மூத்தவினிடம் போன்னு சொல்லறான், அவனை விட அவன் மனைவிக்கு தான் என்னை அங்கே சேர்ப்பதில் முடிவா இருக்கா" என்று அவர் சொன்னதும் என் மனம் பதைத்தது. வளர்த்து பெரிதாக்கிய தந்தையை இப்படி நடு ரோட்டில் விட தயாராகும் மகன்களும் மருமகள்களும். இப்படி தன் சோகத்தை எல்லாம் பகிர்ந்து கொண்டார். முதல் நாள் சண்டையிட்டது எதற்கு தெரியுமா? இந்த ஆறு மாதம் அன்று இவரை பாலாஜிவிட்டில் கொண்டு வந்தவிட்ட இளைய மகனின் Turn dutyயாம். அவர் மனைவி பார்த்துக் கொள்ளமுடியாது என்று இங்கு அனுப்பிவிட்டாராம். உறவுகள் எப்படி பாரமாக மாறுகிறது என்று என்னிப்பார்கிறேன். அன்று மனைவியை இழந்த இந்த பெரியவர் தன் 3 மகன்களை பாரம் என்று நினைத்திருந்தால்... எண்ணிக்கொண்டு அவரிடம் விடை பெற்றேன்.

அதற்கு பின் அவர் பால்கனியில் தினமும் பார்ப்பேன், புன்(ண்)முறுவல் தருவார்... நானும் நல்ல இருக்கீங்களான்னு எப்பயாவது கேட்ப்பேன். அவ்வளவே! எனக்கு அவர்கள் குடும்பவிவகார கேட்க மணம் இல்லாமல் மேல்வீட்டுக்கு செல்வதை தவிர்த்தேன்.

தந்தைக்கு புத்தாண்டு பரிசு:

இரண்டு மாதத்துக்கு பின், அன்று கிருஸ்துமஸ் நாள், பெரியவர் என் வீட்டுக்கு வந்து "தம்பி, என்னை முதியோர் இல்லத்தில் இன்று கொண்டுபோய் விடுகிறார்கள், மத்த இரண்டு மகன்களும் வந்திருக்காங்க, எல்லாரும் சேர்ந்து முடிவு எடுத்துட்டங்க, எமகண்டம் முடிந்ததும் கிளம்பறேன். போகறதுக்கு முன்னாடி உங்களை பார்த்து பேசனும்னு தோணுச்சு, அதான் வந்தேன், Anyway Happy new year தம்பி, இனி அடுத்த நியூ இயருக்கு நான் இருப்பனோ மாட்டேனோ! " என்று சொல்லும் போது அவர் கண்கள் கலங்கி இருந்தது. அவர் மனதில் உள்ள பதட்டம் எனக்கு புரிந்தது. புது இடம், புது மனிதர்கள், உறவுகள் யாரும் இல்லை என பல சிந்தனைகள் அவர் மனதில் பதைப்பை ஏற்படுத்துகிறது என நினைத்துக்கொண்டேன். அவருக்காக நான் மணம் வருந்த மட்டுமே முடியும். அவருக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும் என்னால். ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் தலையை மட்டும் அசைத்து விடை கொடுத்தேன்.

அன்று புத்தாண்டு ஊரே கலைகட்டியிருந்தது, காலை 10:30 மணியிருக்கும், தபால் ஊழியர் வந்து சைக்கிளை நிறுத்தினார், புதுவருட நிதி கலெக்ஷன் இன்றே துடங்கிவிட்டனரே என்று நினைத்து கொண்டு வாங்க என்றேன். "சார் பாலாஜி இருக்கருங்களா? அவருக்கு ஒரு டெலிகிராம் வந்திருக்கு, அவர் அப்பா இறந்துவிட்டாராம் சார்!!!"அவர்கள் கோவிலுக்கு போயிருந்ததால் நான் வாங்கி வைத்தேன். என் மணம் புத்தாண்டு கொண்டாத்தை மறந்தது. அவர் இங்கிருந்து போகும் போது சொன்னது போல நடந்துவிட்டதே என்று சங்கடப்பட்டேன். 10 நிமிடத்தில் கோயிலுக்கு போன பாலாஜி வந்தார், டெலிகிராமை கொடுத்து, சாரி சார் உங்க அப்பா... என்று சொன்னேன், அவருக்கு சின்னதாய் கண்கலங்குவது தெரிந்தது, டெலிகிராமை வாங்கிக்கொண்டு மேலே போகும் வழியில் பாலாஜியின் மனைவி எழவு சாவதற்கு கிடைச்ச நாளைப்பாரு என்று சொன்னது என் காதில் விழுந்தது.

உறவுகள் பகைகளே...!!! என்று எண்ணிக்கொண்டு என் வேலையை பார்க்கலானேன்.

இந்த சம்பவம் உறவுகள் பற்றிய என் பார்வையை மாற்றியது! Nuclear family என்று பெயர் ஒன்றை சூட்டி, தன் பிள்ளைகளுக்கு தாதாவையும், பாட்டியையும் புகைபடமாக கண்பிக்கும் கலாசார சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது. கூட்டு குடும்பம் என்ற ஒரு விசயமே நம் பிள்ளைகள் காலத்தில் காணாமல் போனால் ஆச்சர்ய படுவதற்கில்லை. இந்த உறவுகள் ஒரு மின் மினி பூச்சிகள் போல் சில நேரம் மின்னும் சில நேரம் இருண்டுவிடும். உறவுகள் நம் வாழ்வில் ஒளியேற்றது, அவர்கள் ஒரு மின் மினி பூச்சியைப்போல் தன் தேவையின் போது தான் தனக்காக ஒளியேற்றுவார்கள்.

பி.கு:
இது எங்க ஊரல நடந்த உண்மை கதை. என்னை ரொம்பவே பாதிச்ச விசயம். இங்கு பெயர்களும், ஊரும், சில சம்பவங்களும் மாற்றப்பட்டுள்ளது.