MPகளிடம் சுதந்திரதின Quiz

நேற்று இரவு தற்செயலா NDTV காண்டபோது. நம்ம MPகளிடம் சுதந்திரதின Quiz கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார்கள். மொத்தம் ஒரு 5 கேள்விகள் தான்.

1. தேசிய கீதம் (National Anthem) யார் எழுதியது?
2. தேசிய பாடல் (National Song) யார் எழுதியது?
3. நம் தேசிய கொடியில் மேலே உள்ள நிறம் என்ன?
4. தேசிய கொடியின் நடுவில் உள்ள சக்கரம் எங்கிருந்து எடுத்தது?
5. காந்தியின் முழு பெயர் என்ன?

அதில் கொடுமை என்ன வென்றால் ஒரு 10 - 15 MPக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது, ஒரு MP கூட சரியான பதில் சொல்லவில்லை. அந்த லிஸ்டில் நம் மூத்த பாராளமன்ற உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லாவும் அடங்கும்.

1. தேசிய கீதம் (National Anthem) யார் எழுதியது? இந்த கேள்விக்கு கிடைத்த பதில்களில் சில:

பதில்கள்: தெரியாது, எந்த தேசிய கீதத்தை கேக்கறீங்க (என்னமோ சொன்ன பதில் சொல்லிடுவாரு போல), அதெல்லாம் எனக்கு தேவை இல்லை, எனக்கு ஜன் கன மன தெரியும் அவ்ளோதான், ஒருதர் மட்டும் ரொம்ப ட்ரை பண்ணி பாதி பேரு கண்டுபிடிச்சாரு ரபிந்தரூ.... என்று ஒரே இழுப்பு... சூப்பரோ சூப்பர் ....

2. தேசிய பாடல் (National Song) யார் எழுதியது? இந்த கேள்விக்கு கிட்ட தட்ட ஒரே மாதிரி பதில்கள் தான்.

பதில்கள்: தெரியாது, எந்த தேசிய பாடலை கேக்கறீங்க, அதெல்லாம் எனக்கு தேவை இல்லை, பலர் சேர்ந்து எழுதியது, நஜ்மா ஹெப்துல்லா ரொம்ப ட்ரை பண்ணி பெயரோட முதல் சில எழுத்துக்களை கண்டுபிடிச்சாங்க பக்கிம், பக்கிம்ன்னு சோல்லிட்டு .... ஒரே ஓட்டம் டைம் இல்லை என்று... மீட்டிங்க்கு நேரம் ஆச்சு என்று... ஐயோ பாவம். படிக்க டைம் குடுங்கப்பா...


3. நம் தேசிய கொடியில் மேலே உள்ள நிறம் என்ன?

பதில்கள்: பச்சை, தெரியாது, மறந்துவிட்டேன், என்கிட்டயே கேள்வி கேக்கறயா?, இப்படி எல்லாரும் எஸ்கேப் ஆக முயற்சி செஞ்சாங்க. NDTV காரங்க தொரத்தி தொரத்தி ரவுண்ட் கட்டனாங்க.

4. தேசிய கொடியின் நடுவில் உள்ள சக்கரம் எங்கிருந்து எடுத்தது?

பதில்கள்: எல்லா Stateகளில் இருந்து, நீல நிற சக்கரம், தெரியாது, இப்படி சூப்பர் பதில்கள்.

5. காந்தியின் முழு பெயர் என்ன?

இதுக்கு தாங்க நம்ம MPகள் ரொம்ப டென்ஸன் ஆயிட்டாங்க.

பதில்கள்: நாங்க பாப்பு(Bapu) தான் கூப்பிடுவோம், தெரியாது, மாகாத்மா, ஒருதர் பதி கண்டு பிடிச்சாரு கரம்சந்த் காந்தி ஒரளவுக்கு சொன்னாரு ...

ஏங்க உங்களுக்கு யாருக்காவது எல்ல பதிலும் தெரிஞ்சா சொல்லுங்க தல...

இப்படி தான் இருக்க வேண்டும் நம் MPக்கள்.

வாழ்க இந்தியா!! வளர்க இந்தியா!!! அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

ஜெய் ஹிந்த்!!!

Comments

Sivabalan said…
சார்,

// வாழ்க இந்தியா!! வளர்க இந்தியா!!! //

நானும் இதை வழிமொழிகிறேன்...
Boston Bala said…
இவற்றுக்கெல்லாம் விடை தெரிந்து என்ன பயன்? இந்த பதில் தெரிந்தால் வினாடி-வினா நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றால் உபயோகமானதாக இருக்கலாம். அவருடைய தொகுதி குறித்து விசாரித்து இருந்தாலாவது, உண்மையான கணிப்பிற்கு ஏதுவாக இருந்திருக்கும்.
//இவற்றுக்கெல்லாம் விடை தெரிந்து என்ன பயன்?//

பாலா.. என்ன பேசுறீங்க? இது கூட தெரியாதவங எல்லாம் மந்திரியாகி என்ன கிழிக்க போறாங்க? எந்த வேலைக்கும் அது சம்பந்தமா தெரிஞ்சி இருக்கன்னு பாக்கறாங்க.. ஆனா அரசியல்ல..என்னென்னவோ சொல்ல தோணுது...சொல்லி என்ன பன்ன.. இவங்கள அனுப்பின நாம வெட்கி தலை குனிய வேண்டியதுதான்.. அசிங்கமா, கேவலமா இருக்கு இந்த பதிவ படிக்கும்பொதே..
கதிர் said…
ஓட்டு வாங்குவது எப்படி?
இந்த கேள்விக்கு பதி தெரிஞ்சா போதுமே MP ஆக.

தாகூர்,பக்கிம் சந்திர சாட்டர்ஜி,காவி
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.

சரியா?
என்ன போஸ்டன் பால,

இப்படி ஒரு பின்னூட்டத்தை போட்டு விட்டீர்கள். இந்த தகவல்கள் தெரியாதவர்களா, நாட்டுக்கும் தொகுதிக்கும் நல்லது செய்ய போகிறார்கள்?. இவர்கள் தொகுதி பற்றி கேட்டிருந்தாலும் இந்த மாதிரி தான் உளறி இருப்பார்கள்.
Unknown said…
//இவற்றுக்கெல்லாம் விடை தெரிந்து என்ன பயன்? இந்த பதில் தெரிந்தால் வினாடி-வினா நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றால் உபயோகமானதாக இருக்கலாம். //

:-((((

ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதிக்கு அந்த நாட்டின் கொடி,தேசிய கீதம்,முக்கியத் தலைவர்கள் பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.படிப்பறிவு இல்லாவிட்டாலும் கேள்வி அறிவாவது வேண்டும். அதற்கடுத்து தனது தொகுதி பற்றிய அறிவும் அவசியம் வேண்டும்.
மக்களின் பிரதிநிதிகளுக்கு சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.தன் தாய் நாட்டைப்பற்றியே எதுவும் தெரியாத இப்படிப்பட்ட MP-க்களுக்கு தங்கள் சொந்த தொகுதியைப் பற்றி எப்படி தெரியப்போகிறது?
வாழ்க பாரதம்!!! வளர்க பாரதம்!!!
We The People said…
Boston Bala,

//இவற்றுக்கெல்லாம் விடை தெரிந்து என்ன பயன்? //

நீங்களுமா? இதையெல்லாம் தெரியாமல் இந்தியாவில் இவர்களுக்கு என்ன வேலை. எவன் ஒருவனுக்கு நாட்டு பற்று இல்லையோ அவன் இந்தியாவின் பெருமையை கெடுப்பனே ஒழிய வளர்க்க மாட்டான். நான் ஒவ்வொரு முறையும் சர்வதேச போட்டிகள் (ஒலிம்பிக், காமன்வெல்த்..) நடக்கும் போது பார்ப்பேன், வெளிநாட்டு வீரர்களும், ரசிகர்களும் தத்தம் தேசிய கீதம் ஒலிக்கும் போது எப்படி பயபக்தியோடு தன் தேசிய கொடியை நோக்கி வணங்கி நிற்பர். அந்த உண்ர்வு நம் இந்தியருக்கு மட்டும் குறைவு. இந்த நாட்டு பற்று வளர்ந்தால் ஒழிய நாமோ, நம் நாடோ முன்னேற முடியாது என்பது என் கருத்து.

எந்த தேசிய கீதம் என்று கேட்க்கும் ஒருவன் நம் தலைவனாக இருந்தால் எப்படி நாம் உருப்பட போறோம்.
Anu said…
Oh My god
so irritating.
We The People said…
Sivabalan அவர்களுக்கு நன்றி,வணக்கத்துடன் //வளந்துடும் :( // எனக்கும் இந்த சோகம் தான். இடையில் போஸ்டன் பாலா வேற இந்த கேள்விகள் எல்லாம் தேவையற்றவை என்று சொல்லுவது அந்த சோகத்தை இன்னும் அதிகமாக்குது. தேசியத்தை மறந்து வாழும் இந்தியர்களும் அதன் தலைவர்களும். ஐயோ! ஐயோ!!
We The People said…
என் கருத்தை வழிமொழிந்த மனதின் ஓசை, தம்பி, கல்வெட்டு, Indian ஆகியோருக்கு என் நன்றி. இவர்கள் தான் நம் இந்தியாவை நிர்மானிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வெட்கக்கேடா இருக்கு. இதையும் ஆதரவு தெரிவிக்கும் பாலா நினைத்தால் நாம் எங்கே செல்கிறோம் என்று புரியவில்லை.
We The People said…
நன்றி பிரியன் & Anitha Pavankumar.
இதுக்கெல்லாம் நான் பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை!

மன்னித்துக் கொள்ளுங்கள் எனக்கு மீட்டிங் இருக்கு!

என்னிடமே கேள்வி கேட்கிறாயா

(நண்பா நானும் எதிர்காலத்துல பதவிக்கு வந்திடுவேனா...?)


அன்புடன்...
சரவணன்.
We The People said…
உங்கள் நண்பன் வாங்க கண்டிஷனா உங்களுக்கு MP ஸீட் எல்ல கட்சியும் தருவாங்க. உங்களுக்கு அந்த தகுதி இருக்கு போல...வெரி குட். எவ்வளவு தூரம் உங்களுக்கு இந்தியாவை பத்தி தெரியாதோ, அவ்வளவு ரவுண்ட் வருவீங்க. சந்தோஷமா. :)))
Boston Bala said…
மனதின் ஓசை,
-----இது கூட தெரியாதவங எல்லாம் மந்திரியாகி என்ன கிழிக்க போறாங்க? -----

'எந்த வேலைக்கும் அது சம்பந்தமா தெரிஞ்சி இருக்கன்னு பாக்கறாங்க..' என்னும் தங்கள் பின்னூட்டத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். நான் பார்க்கும் சொவ்வறை வேலைக்கு சி# தெரிந்தால் போதுமானது. வேற்று இடங்களில் உபயோகமுள்ள பெர்ல், ஓ.எஸ்.ஜி.ஐ போன்றவை அறிந்திருந்தால் லாபமே. ஆனால், அறியாவிட்டால் நஷ்டம் ஏதுமில்லை.

நிகழ்ச்சியைப் பார்த்தால் கிடைக்கும் தாக்கம் வேறு. பார்க்காமல், மற்றவரின் பதிவைப் பார்த்துவிட்டு, என்ன பின்னூட்டம் இடலாம் என்று யோசிக்கும்போது கிடைக்கும் தாக்கம் வேறு.

இதேபோல், என்.டி.டி.வி நிருபர்களிடம் கேள்வியை தடாலடியாகக் கேட்டால் எத்தனை பேர் பதில் சொல்கிறார்கள் என்று நிகழ்ச்சி செய்யலாம்.


பாலசந்தர் கணேசன்,
----இந்த தகவல்கள் தெரியாதவர்களா, நாட்டுக்கும் தொகுதிக்கும் நல்லது செய்ய போகிறார்கள்?----

தகவல் தெரிந்திருப்பதால் மட்டும் என்ன பயன்? இவர்கள் எத்தனை முறை சபையில் பேசினார்கள். எவ்வளவு கேள்வி கேட்டார்கள், எவ்வாறு விவாதித்தார்கள், தொகுதி நிதியை எப்படி செல்வழிக்கிறார்கள் : இவை மட்டுமே ஒரு எம்.பி.யை மதிப்பிட முக்கியமானது.

எம்.எல்.ஏ. என்பவர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டிற்காக உழைப்பவர். எம்.பி. என்பவர் தேசிய சட்டங்களை இயற்றுவதில் உறுதுணையாக இருப்பவர். க்விஸ் மாஸ்டர் என்பவர் எந்த வினாக்களை கேட்டால், தன்னுடைய நிகழ்ச்சிக்கு விளம்பரதாரரும் வருவாயும் கிடைக்கும் என்பதை அறிந்திருப்பவர்.


கல்வெட்டு,
----ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதிக்கு அந்த நாட்டின் கொடி,தேசிய கீதம்,முக்கியத் தலைவர்கள் பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.படிப்பறிவு இல்லாவிட்டாலும் கேள்வி அறிவாவது வேண்டும்.----

அவசியம்... இதெல்லாம் தேவையே இல்லை என்று வலியுறுத்த நினைக்கவில்லை. நான் கணினி நிபுணன். Binary states, card punching, registers போன்றவை குறித்து எனக்குப் புரிதல் வேண்டும். கல்லூரியில் (அல்லது பள்ளியில்) படித்திருப்பேன். இன்றைய முன்னேற்றத்திற்கு நிரலி எவ்வாறு செயல்படுகிறது என்று அறிந்து அதைத் திற்ம்பட முடித்தல் போதுமானது (இன்றியமையாததும் கூட). இன்னும் அந்தக்கால நினைவுகளில் மூழ்குவது நனவோடை போல் கருத்துப் பத்தி எழுதும்போது மட்டுமே கைகொடுக்கும். அதற்கு கூட கூகிள் இருந்தால் வசதி.


We The People,

தங்கள் இடத்தில் கருத்துப் பரிமாற இடம் கொடுத்ததற்கு __/\__ & நன்றி.

----நீங்களுமா? ---

நேற்றைய 'வணக்கம் தமிழக'த்தில் சுதந்திரத்திற்கானப் பாதையின் முக்கிய மைல்கல்களை பத்து நிமிடம் தொகுத்திருந்தார்கள். விழிநீர் மல்கி, மெய் புளக அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து கரும்பின் களித்து, மொழி தடுமாறி, பித்தன் போல தரிசித்தேன். மஹாத்மாவைத் தவறாக உச்சரித்த மகளை (வழக்கித்தீற்கு மாறாக) மிகக் கடுமையாக கண்டித்தேன். அவள் கொஞ்சம் மிரண்டு போய், அம்மாவிடம் 'இன்று அப்பா ஏன் இப்படி இருக்கு?' என்று வினவும் அளவு உணர்ச்சிவசப்படுபவன்.

நிகழ்ச்சியை வழங்கியவர்களுக்கு கீழ்த்தரமான நகைச்சுவை வேண்டியிருந்திருக்கும். உருப்படியாய், 'வளர்ச்சித் திட்ட செயல்பாடு', 'கருத்தியல் சர்ச்சைகளுக்கு மேடை அமைத்து விவாதங்களின் மூலம் இரு கட்சிக்கும் உள்ள வேறுபாடு' போன்றவை கன்னலை மாற்றவைத்து விளம்பரங்களை இழக்க வைக்கும் என்பதால் ஜனரஞ்சகமாய் செய்து காட்டியுள்ளார்கள் என்றே நம்புகிறேன்.

நன்றி.
We The People said…
போஸ்டன் பாலா,

//இவர்கள் எத்தனை முறை சபையில் பேசினார்கள். எவ்வளவு கேள்வி கேட்டார்கள்,//

அதற்கு எவ்வளவு பணம் பெற்றார்கள்??!!

//எவ்வாறு விவாதித்தார்கள், தொகுதி நிதியை எப்படி செல்வழிக்கிறார்கள் : இவை மட்டுமே ஒரு எம்.பி.யை மதிப்பிட முக்கியமானது.//

அந்த நிதியில் எவ்வளவு அவர்கள் கை பைக்கு போனது போன்ற அருமையான கேள்விகள் சூப்பரா பதில் சொல்வார்கள் என்று சொல்ல வரீங்க பாலா. Am I Right??!!

//நிகழ்ச்சியை வழங்கியவர்களுக்கு கீழ்த்தரமான நகைச்சுவை வேண்டியிருந்திருக்கும்.//

நிச்சயமாய் சொல்கிறேன் கீழ்த்தரமான நகைச்சுவை ஆக்கியவர்கள் நம் நாட்டு MPக்கள்தான்.

//மஹாத்மாவைத் தவறாக உச்சரித்த மகளை (வழக்கித்தீற்கு மாறாக) மிகக் கடுமையாக கண்டித்தேன்.//

இதையும் நீங்கள் தான் சொல்லரீங்க. எந்த தேசிய கீதம் கேட்ட எப்படி ஒத்துக்கறீங்க!! ஒன்னும் புரியலை... என்னமோ போங்க.

எப்படியோ உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாரி பாலா.