வலைப்பதிவர் பட்டறை என் பார்வையில்...

நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் என்னை கவர்ந்த விசயங்களை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்...

வினையூக்கியும் மற்றும் ஜெயாவும் பட்டறைக்கு ஏற்பாடுகள் நடந்த முதல் நாள் மாலையும் சரி பட்டறை தினத்தன்றும் சரி அயராத உழைப்பை தங்கள் பங்கிற்கு கொடுத்தார்கள், துடிப்புடன் காலை முதல் மாலை வரை ஆர்வமாக கற்றுக்கொள்ள வந்த பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த விசயம் என்னை அசர வைத்தது!!! என்ன எனர்ஜி அவருக்குக்கு! ஒரு நிமிடம் கூட சலிக்காம ஆர்வமா எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கு என் முதல் சபாஷ்!

அடுத்தது விக்கி, மா.சி & பொன்ஸ்: இது தான் முதல் பட்டறை, அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு குறையும் வந்துவிடக்கூடாது என்று இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறப்பான பலனை தந்தது என்பது 100% உண்மை. பல பட்டறைகள் நடந்த்திய அனுபவம் வாய்ந்தவர்கள் நடத்தியது போல சிறப்பாக கலை கட்டியது பட்டறை. இவர்கள் முயற்சியும் உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்!

பாலாபாய் பம்பரமா சுழன்று கொண்டேயிருந்தார், CD வாங்கிவருவது முதல் உணவு ஏற்பாடுகள்வரை அணைத்தும் அவர் தன் கையில் எடுத்துக்கொண்டு தூள் கிளப்பிக்கிட்டு இருந்தார்!

தமிழி தனக்கு ஒதுக்கப்பட்ட கூகுல் கணக்கு துவங்குவது முதல் பதிவு இடுவது வரை விசயங்களை, ஒரு கல்லூரி ஆசிரியராகவே மாறி சொல்லிக்கொடுத்தார்! சுமார் 100 மேற்ப்பட்ட பார்வையாளர்களை அசத்தலா கையாண்டு தூள் கிளப்பினார்! இதில பேசாதீங்க, இங்க கவனிங்க என்று ஒரு பேராசியர் டைப் அதட்டல் வேறு!

லக்கிலுக் தன் பங்கிற்கு பட்டறைக்கு வேண்டிய கம்பூட்டர் நெட்வொர்க்கிங், மென்பொருள் நிறுவுதல், பிரிண்டர் எடுத்து வந்து கணினியுடன் இணைப்பது, என பல வேலைகளை பாய்ந்து பாய்ந்து பார்த்துக் கொண்டிருந்ததை பாராட்டியே ஆகவேண்டும்!

உண்மைதமிழன் மீடியாகளை அழைத்துவந்தது, பட்டறை ஏற்பாடுகளில் தன் பங்கிற்கு அசத்தினார்!

பெனாத்தல் சுரேஷ் ஃப்லாஷ் சொல்லித்தந்தவிதம் ஒரு சபாஷை பார்வையாளர்களிடம் வாங்கித்தந்தது!

நந்தாவும், ஜே.கேவும் நாங்க இளைஞர்கள் என்று சொல்லிக்கிட்டு டீ/காபி மெஷினை அருள் அலுவலத்திலிருந்து எடுத்து/திரும்ப கொண்டுபோய் வைப்பது என எல்லா வேலையை தங்களே முன்னின்று செய்தார்கள்... அவர்களுக்கு ஒரு சபாஷ்!

கிருபாஷங்கர் வலைப்பூக்கள் வழி சம்பாதிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்க வந்தவர், கொஞ்சம் கூட ஹோம் வொர்க் செய்திருக்கவேண்டும் என்று எனக்கு தோண்றியது! நிறைய தடுமாற்றம் இருந்தது! நல்ல வேளை மா.சி மேக்கப் செய்தார்!

இணையத்தில் பதிவு செய்யாது நேரடியா வருபவர்களை பதிவு செய்து கொண்டிருந்த நான், ஒரு காபி சாப்பிட காபி மெஷின் பக்கம் போய், டீ கடைக்காரனாக மாறி சுமார் 300 - 400 டீ காபி போட்டு தரும் வேலை என்னை வந்து ஒட்டிக்கொண்டது! கடைசியா பொன்ஸ், அருள் என பலர் வந்து நாயர் ஒரு டீ கொடு என்று கேட்கும் அளவுக்கு மேட்டர் ஆயிடுச்சு!!! இதுல நமக்கே தெரியாம நம்ம கையில இட்லிவடை டீ வேற வாங்கி குடிச்சாரு போல... என்ன கொடுமை சார் இது!

மொத்தத்தில் இணையத்தில் நம்ம மக்கள் ஒன்று கூடி செய்த ஒரு சிறப்பான ஒரு விசயம் இந்த பதிவர் பட்டறை. இந்த பட்டறையால் நிச்சயம் நம்ம பாலாபாய் சொல்லற மாதிரி குறைந்தபட்சம் 100 பேர் புதியதாக வலைப்பூ துவங்குவார்கள் என்பது உண்மை!

Comments

நாயர், இன்னிக்கும் சாயா உண்டோ
நாயர், உங்க சூப்பரான படம் ஒண்ணு மாட்டி இருக்கு... என் கேமராவில்.. இங்க பார்த்தீங்களா?
தமிழ் வலைப்பதிவுலகில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் புதிய பதிவர்களாக 100 பேர் என்றால் ஒரு புரட்சியே நடைபெறும் என்று நம்பலாம்... கருத்து புரட்சிதான் சார்... டவுசர கிழிக்க ஆரம்பிக்காதீங்க... அப்புறம் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன். எங்களைப் போல் வராத பதிவர்களுக்கு இவற்றை படிப்பதே திருப்தியளிக்கும். வாழ்த்துக்கள்.
We The People said…
//நாயர், உங்க சூப்பரான படம் ஒண்ணு மாட்டி இருக்கு... என் கேமராவில்.. இங்க பார்த்தீங்களா?//

பார்த்தேனே! நானும் என் மடிக்கணினில காபி பண்ணிட்டேன் ;)

நம்ம ஓடி ஓடி உழைத்ததை வெளிய சொல்லவேண்டாம்ன்னு நினைத்தேன், நீங்க படம் போட்டு காட்டிட்டீங்க :) தேங்ஸ் :D
We The People said…
வாங்க சந்திப்பு,

பட்டறையை பற்றி அண்ணன் மா.சி நாலு போஸ்ட் போட்டிருக்காரு இதோ லிங்க், அவரைவிடவா நாங்க சொல்லப்போறோம்!
அடடா உங்க கையால ஒரு டீ குடிக்காம போயிட்டேனே!!!!
:) :) :)
அடடா உங்க கையால ஒரு டீ குடிக்காம போயிட்டேனே!!!!
:) :) :)
We The People said…
//அடடா உங்க கையால ஒரு டீ குடிக்காம போயிட்டேனே!!!!
:) :) :)//

அதனால என்ன வினையூக்கி நம்ம ஆபீஸ் பக்கம் வாங்க, ரெண்டு டீ கொடுத்திடலாம்!
நாயர் இங்கே ஒரு மலாய் டீ

என்னங்க, கைவசம் இன்னும் ஒரு தொழில் இருக்குன்னு
சந்தோஷப்படுங்க:-))))
We The People said…
//நாயர் இங்கே ஒரு மலாய் டீ

என்னங்க, கைவசம் இன்னும் ஒரு தொழில் இருக்குன்னு
சந்தோஷப்படுங்க:-))))//

துளசி மேடம் வாங்க, உங்களுக்கு ஒரு சூப்பர் மலாய் டீ போட்டு தருகிறேன் ;)
Anonymous said…
அனைவரையும் காண முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

இந்த பட்டறை நிச்சயம் தமிழ் வலைப்பூவின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லே.

நிகழ்ச்சி மிக அருமையாகவும், informative ஆகவும் இருந்தது. குறிப்பாக தமிழில் தட்டச்சுவதைக் குறித்து அறியாத/அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும்.

நிகழ்ச்சியில் குறிப்பிட்டு எடுத்து சொல்ல வேண்டியது, சகோதரர் பினாத்தல் சுரேஷ் அவர்களின் Flash Demo தான். மிக அருமையாக விளக்கினார்.

மற்றபடி இப்பதிவில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், தேனீர் பிரியனான எனக்கு நான்கு முறை நாயர் அய்யா தேனீர் தந்து மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்தது தான்.

அய்யா தேனீர் சூப்பருங்கோவ்.

அன்புடன்
இறை நேசன்.
We The People said…
இறைநேசன்,

//தேனீர் பிரியனான எனக்கு நான்கு முறை நாயர் அய்யா தேனீர் தந்து மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்தது தான்.//

நீங்களுமா!!!
Anonymous said…
>>கிருபாஷங்கர் வலைப்பூக்கள் வழி சம்பாதிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்க வந்தவர், கொஞ்சம் கூட ஹோம் வொர்க் செய்திருக்கவேண்டும் என்று எனக்கு தோண்றியது! நிறைய தடுமாற்றம் இருந்தது! நல்ல வேளை மா.சி மேக்கப் செய்தார்!.

நிறையவா... எல்லாமேதான். :-) மா.சி., விக்கி ரெண்டு பேரும் காப்பாத்தினாங்க.

content, presentation ரெண்டுத்துலேயுமே நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருக்கணும். ஆனா இந்த அளவுக்கு ஒப்பேத்த முடிஞ்சதுக்குக் காரணமே பொன்ஸ் தான். points/உரை முதலிலேயே தயாரிச்சு அனுப்பி வைக்க சொல்லி இருந்தாங்க. ஏதோ அது இருந்ததால கொஞ்சமாவது சமாளிக்க முடிஞ்சது அல்லது சமாளிக்க முடிஞ்சதா நெனச்சுக்க முடிஞ்சது. :-)