பா.க.ச வில் சேர்வது எப்படி?

புதிய வலை கலைஞர்கள் இந்த பா.க.ச என்ன வென்று தெரியாமல் தவிப்பதால். அதை பற்றி சொல்லி, உறுப்பினர் ஆவது எப்படி என்ற விளக்கமும் தர தான் இந்த பதிவு.

முதலில் அறிமுகம்:

பா.க.ச - பாலபாய் என்று அன்போடு அழைக்க்ப்படும் பாலாபாரதியை சின்னதும் பெருசுமாக கலாய்க்க ஆரம்பித்து அது ஒரு பெரிய இயக்கமா மாறி இப்ப அது பாலபாரதியை கலாப்போர் சங்கமாக உருவெடுத்துல்லது. இதில் பல உறுப்பினர்கள் இருந்தாலும் பொன்ஸ், நான், அருள், ப்ரியன், என எல்லா சென்னபட்டிண வாசிகளின் பங்கு தான் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம். இன்று இது கோவை, திருநல்வேலி, பங்களூரூ, அமெரிக்கா, ஜப்பான் என உலகெங்கும் பல கிளைகள் உருவாகிவருகிறது.


2007ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கிடைத்த புது போட்டோ, மேலே உள்ளது, இப்ப எங்க தல
புது அவதாரம் எடுத்து இருக்காரு!! அது தான் யாகவா பாரதி முனிவர் அவதாரம்.

உலகிலேயே இவ்வளவு சுலபமாக ஒரு உறுப்பினர்களை சேர்க்கும் சங்கம் பா.க.ச மட்டுமே. அது தான் இந்த வளர்ச்சிக்கு ஒரு சிறந்த காரணம்.

உறுப்பினர் ஆவது எப்படி? மேலே உள்ள தல பாலாபாய் படத்தை இரண்டு நிமிடம் பார்த்தாலே உங்களுக்கும் இந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை வரும். சிம்பிள் தான் ஏதாவது ஒரு பதிவுக்கு போய் பாலாபாய் சின்னதா கலாக்க ஆரம்பித்தாலே நீங்கள் உறுப்பினர் ஆகிவிட்டதாக உங்களுக்கு சர்டிப்பிகேட் பா.க.ச பின்னூட்டமாக அதே பதிவில் வழங்குகிறது. சில நேரம் எங்கள் தல பாலாபாயே வந்து இந்த சர்டிப்பிகேடை தருவதும் உண்டும். பாலாபாயின் ஆசியுடன் சங்கத்தில் சேர அவருடைய நூறுக்கு மேற்ப்பட்ட சிற்ந்த பதிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கலாய்த்தால் போதுமானது.

இங்கு கூடியிருக்கும் எல்லா வலை வாசிகளைக்கு இந்த Membership Driveக்கு அன்போடு அழைக்கிறது. உங்கள் சந்தேகங்கள் உடனடியாக எங்கள் உறுப்பினர்கள் தீர்த்துவைப்பார்கள் ;)

- பா.க.ச,
தலைமை கழகம், சென்னை.

125 comments:

said...

May I come in???

said...

வாங்க தல உங்களுக்கு இல்லாததா... எங்க தலைக்கு ரொம்ப தாராள மனசு. எல்லோரையும் அட்ஜஸ்ட் செய்துக்குவார்.

said...

ரொம்ப ரொம்ப உபயோகமான விஷயம்.

said...

நான் தூங்குற நேரத்துல யாருப்பா வம்பு இழுக்கிறது.. ஜெய் இது நாயமா?

said...

தல நீ ஜாலியா தூங்கு தல, சங்க பணிகளை நான் பார்த்துக்கறேன். நான் இப்ப ரொம்ப ஃப்ரீ தான். க்லெயன்ட் வர இன்னு ஒரு மணி நேரம் இருக்கு..

said...

//மேலே உள்ள தல பாலாபாய் படத்தை இரண்டு நிமிடம் பார்த்தாலே உங்களுக்கும் இந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை வரும்.//

LOL...

//பாலாபாயின் ஆசியுடன் சங்கத்தில் சேர அவருடைய நூறுக்கு மேற்ப்பட்ட சிற்ந்த பதிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கலாய்த்தால் போதுமானது//

"சிறந்த பதிவுகளில்"?????????????????????????????????????????

Anonymous said...

தூத்துக்குடிக் கிளையை விட்டுட்டீங்களே தல, வரவணை வந்து வருத்தப் படப் போறாரு..

Anonymous said...

பாலாவை கலாய்த்தால் பா க ச மெம்பர் ஆகிவிடலாம் என்றால், நாங்கள் அனானிகள்/முகமிலி/பெயரிலிகள் எல்லாம் மெம்பர்கள் தாம்....ஏனெனில் எங்கள் தலைசிறந்த பணி கலாய்த்தல் மட்டுமே.....

said...

அனைவரும் வரிசையில் நின்று அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும்.

said...

சீனு, சேந்துக்கறேனேன்னு கேக்கும்போதே உறுப்பினர் ஆக தகுதி உடைய ஒரு பின்னூட்டத்தோட வந்திருக்கீங்க...

ஆரம்பிங்க...

said...

ஓ இதுதான் பா.க.ச சங்கம் என்பதா..

சரி, இந்த நொடியில் இருந்து சேர்ந்துவிட்டேன்.

இனி, என்கடன் பாலாவை கலாய்ப்பதே...
:))

said...

//பொன்ஸ் said...
தூத்துக்குடிக் கிளையை விட்டுட்டீங்களே தல, வரவணை வந்து வருத்தப் படப் போறாரு..//

மறந்துவிட்டேன். வரவணை கோவிச்சுக்காதிங்க.

//சீனு, சேந்துக்கறேனேன்னு கேக்கும்போதே உறுப்பினர் ஆக தகுதி உடைய ஒரு பின்னூட்டத்தோட வந்திருக்கீங்க..//

ரவி நன்றி. நம்ம சீனு Chartered Member தலைவா. சென்னைவாசிங்க தான் இந்த சங்கத்தையே ஸ்டார்ட் பண்ணது.. நிங்க சேரலயா??

பூங்குழலி இன்னும் வேலைய ஸ்டார்ட் பண்ணலையா??

said...

அனானி,

//ஏனெனில் எங்கள் தலைசிறந்த பணி கலாய்த்தல் மட்டுமே..... //

யாரை கலாய்க்கிறது என்பதை பேஸ் பண்ணித்தான் மெபர்ஷிப் தரப்படும் :))) பாலாபாயை மட்டும் கலாய்க்கிறதா இருந்தா சொல்லுங்க நாமே தலகிட்ட ரெக்கமன்ட் செய்து மெம்பர்ஷிப் வாங்கி தருகிறேன் ;)

said...

பாலபாரதியின் பதிவில் முதல்முதலாகப் போய் உருப்படியான ஒரு பின்னூட்டம் இட்டதும் அவர் ஒழுங்காக நன்றி சொன்னதுடன் நிறுத்திக்கொள்ளாமல் "யக்கோவ்" என்றும் சொன்ன ஒரே காரணத்துக்காகவாவது நான் பா.க.ச.வில் உறுப்பினர் ஆகவேண்டும் :-D

said...

//பாலபாரதியின் பதிவில் முதல்முதலாகப் போய் உருப்படியான ஒரு பின்னூட்டம் இட்டதும் //

என்ன சொல்லறீங்க சேதுக்கரசி கேட்கவே ரொம்ப ஓவரா இருக்கே... அவர் பதிவே உருப்படியாக இருக்காதுன்னு அவரே சொல்லுவாரு... அதுக்கு எதுக்கு நீங்க உருப்படியா பின்னூட்டம் போட்டிங்க?? ஓ! பதிவு தான் உருப்படியா இல்லை ஒரு பின்னூட்டமாவது உருப்படியா இருக்கட்டுமேன்னு போட்டீங்களா?? வாங்க வாங்க ஜோதில ஐக்கியம் ஆயிடுங்க!! உங்களை ஆரவாரத்துடன் வரவேற்கிறோம் :)

said...

பா.பா.ச அதாவது "பாலபாரதிப் பாராட்டுவோர் சங்கம் "என்று சங்கத்தின் பெயரை மாற்றினால் நானும் அதில் உறுப்பினராவதற்குத் தயாராக இருக்கிறேன்

படத்தை மீண்டும் பாருங்கள் - அவரைக் கலாய்ப்பதற்கு மனம் வருமா?

இரண்டு மணி நேரமாக பஸ்ஸிற்குக் காத்துகொண்டிருப்பவர் போன்ற தோற்றத்தோடு நிற்கின்றார்!

அவரைக் கலாய்ப்பதற்கு உங்களுக்கு எப்படி மனசு வருகிறது மக்களே?

இதைத் துவங்கி வைத்தது யார் - நாமக்கல்காரர்தானே?

ராமேஸ்வரத்தில் பிறந்த நம் மதிப்பிற்குரிய கலாம் அவர்களைப் போல அவரும் எங்கேயோ இருக்க வேண்டிய மனிதர்

பாவம், சென்னையில் சிக்கியதோடு அல்லாமல், பதிவில் உங்களோடும் வந்து சிக்கிப் பரிதவிக்கின்றார்!

வாத்தியார்

said...

//பா.பா.ச அதாவது "பாலபாரதிப் பாராட்டுவோர் சங்கம் "என்று சங்கத்தின் பெயரை மாற்றினால் //

இதை பத்தி சொல்ல சொன்னது பாலாபாய் தானே... ரொம்ப ஓவருங்க!!!

//இரண்டு மணி நேரமாக பஸ்ஸிற்குக் காத்துகொண்டிருப்பவர் போன்ற தோற்றத்தோடு நிற்கின்றார்!//

அவர் எது எது என்ன என்ன ரியாக்ஷன் கொடுப்பாருன்னு எங்களுக்கு தானே தெரியும் :))))

//ராமேஸ்வரத்தில் பிறந்த நம் மதிப்பிற்குரிய கலாம் அவர்களைப் போல அவரும் எங்கேயோ இருக்க வேண்டிய மனிதர்//

யப்பா தாங்கமுடியலை சாமியோ!!! எது இவரு கலாம் மாதிரி பெரிய ஆளா வரவேண்டியாராம்??!! அடங்கொக்கமக்கா? பா.க.ச மக்களே இதை எல்லாம் கேட்டுக்கிட்டுதானே இருக்கீங்க... வந்து ரவுண்டு கட்டுங்க சாமி இல்லைன்னா பாலா பாய் இன்னும் ஆளுகளை இந்த மாதிரி அனுப்புவார் போல... :))))

ஐயோ! ஐயோ!! இவரு எப்பவுமே இப்படி தான.... :))))

said...

//இதைத் துவங்கி வைத்தது யார் - நாமக்கல்காரர்தானே?//

இல்லைங்க நம்ம அருள் தான் இந்த சங்கத்தை முதலில் தொடங்கினாருன்னு பெருமையா சொல்லிக்கறோம் ;)

said...

பாலபாரதி யாரையும் அனுப்பவேண்டியதில்லை!

தர்மத்தின் பக்கம் எப்போதுமே யாராவது நின்று கொண்டிருப்பார்கள் அல்லது உரிய நேரத்தில் தர்மத்தைக் காக்க வந்து விடுவார்கள்!

பாலபாரதி என்ற அற்புதமான மனிதரைக் காக்க வேண்டியது தர்மத்தின் கடமை!

அப்படி வந்தவந்தான் நான்!

said...

SP.VR.SUBBIAH சார்

//பாலபாரதி யாரையும் அனுப்பவேண்டியதில்லை!

தர்மத்தின் பக்கம் எப்போதுமே யாராவது நின்று கொண்டிருப்பார்கள் அல்லது உரிய நேரத்தில் தர்மத்தைக் காக்க வந்து விடுவார்கள்!

பாலபாரதி என்ற அற்புதமான மனிதரைக் காக்க வேண்டியது தர்மத்தின் கடமை!

அப்படி வந்தவந்தான் நான்!//

இப்படியெல்லாம் கூட பாலாபாய்யை கலாக்கலாமா? என்னப்பா இது தர்மம்,அறுபுதம் அது இதுன்னு ... தல வந்து இவரை என்னன்னு கேளுங்க....

said...

பாலாபாய் தூங்கிக் கொண்டிருபதாகப் பின்னூட்டமிடிருக்கிறார்.

உங்கள் சங்கத்தின் நடப்பு உறுப்பினர்கள் எல்லாம் - சனி ஞாயிறு விடுமுறையல்லவா?
அதனால் திங்கட்கிழமை காலை 8.00 மணிக்குமேல்தான் வருவார்கள்.

நான் சொல்வதெல்லாம் சரியா இல்லையா என்ற பஞ்சாயத்தை அப்போது வைத்துக்கொள்ளலாம்!

அதுவரை நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.
அல்லது GOOGLE வீடியோவில் ஏதாவ்து ப்டம் பார்க்கலாம்

அன்புடன்
வாத்தியார்

said...

//பாலாபாய் தூங்கிக் கொண்டிருபதாகப் பின்னூட்டமிடிருக்கிறார்.//

இதுல இருந்தே புரியலையா அவர் யாருன்னு ;) தூங்கிக்கொண்டிருப்பவர் எப்படி பின்னூட்டம் இடமுடியும் :))))

//உங்கள் சங்கத்தின் நடப்பு உறுப்பினர்கள் எல்லாம் - சனி ஞாயிறு விடுமுறையல்லவா?
அதனால் திங்கட்கிழமை காலை 8.00 மணிக்குமேல்தான் வருவார்கள்.//

எங்க சங்க உறுப்பினர்களுக்கு ஆபீஸ்தான் லீவு, சங்கத்துக்கு லீவே கிடையாது!! ஹீ! ஹீ!! எங்கள் வேலை பாலாபாயின் புகழ் பரப்புவது மட்டுமே :))))

//அதுவரை நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.
அல்லது GOOGLE வீடியோவில் ஏதாவ்து ப்டம் பார்க்கலாம்
//

அது எப்படிங்க நான் கூகுல் வீடியோகளை பார்த்துக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிஞ்சுச்சு... ஐயோ உங்ககிட்டேயும் கொஞ்சம் சாக்கிரதையாதான் இருக்கனும் போல... :)

said...

//அது எப்படிங்க நான் கூகுல் வீடியோகளை பார்த்துக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிஞ்சுச்சு... ஐயோ உங்ககிட்டேயும் கொஞ்சம் சாக்கிரதையாதான் இருக்கனும் போல... :)//

நான் மானசீகமாக ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறேன்

பதிவர்களின் சராசரி வயது 33

பதிவர்களில் 70% பேர்கள் கணினித்துறையில்தான் வேலைபார்க்கிறார்கள்

அலுவலக்த்தில் டீம் லீடரோ அல்லது மேளாளரே இல்லதபோது சமீபகாலமாக நமது பதிவுக் கண்மணிகள் செய்யும் வேலை Google வீடியோ பார்ப்பது அல்லது Google வீடியோவில் எதையாவது கிளிப்பிங்கை ஏற்றுவது.

இல்லையென்றால் Google Videovin தமிழ்ப் பகுதி இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்குமா?

யோசித்துப் பதில் சொல்லுங்கள்!

SP.VR.சுப்பையா

said...

கூகுளிலும் கொடிகட்டிப் பறக்கும் பா.க.ச

said...

சேதுக்கரசி,

//கூகுளிலும் கொடிகட்டிப் பறக்கும் பா.க.ச //

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை போல.. இப்படிப்பட்ட தொண்டர்களால் தான் இன்று பா.க.ச இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கு... வாழ்க பா.க.ச :)))))

said...

சேதுக்கரசி அவர்களே! விவரங்களுக்கு

பா.க.ச வின் வலைப்பூவைப் பாருங்கள்!

said...

யாரு பா இந்த ஆல் இன் அழகு ராஜா, பா.க.சவுக்கு ஒரு தனி ப்ளாகையே துவங்கியிருக்கறது?? புது மெம்பரா? இல்லை எதாவது சதியா?? முதல்ல பா.க.ச வின் அனுமதி வாங்கிட்டு வலைப்பூ தொடங்குங்க அப்பூ...

Anonymous said...

செதுக்கரசி! சுடி தவறாகக் கொடுக்கப் பட்டுவிட்டது. இதோ

பா.க.ச தொண்டனின் வலைப்பூ!

Anonymous said...

//முதல்ல பா.க.ச வின் அனுமதி வாங்கிட்டு வலைப்பூ தொடங்குங்க அப்பூ//

இது பா.க.ச விற்கான வலைப்பூ அல்ல! ஒரு தொண்டனின் வலைப்பூ அர்ப்பணம்! அவ்வளவே!

இதெற்கு அனுமதியெல்லாம் தேவையில்லை!

said...

//யாரு பா இந்த ஆல் இன் அழகு ராஜா//

அண்ணா! நான் தானுங்கண்ணா!

said...

எல்லோரும் பாகசவுக்கு தனித்தனியா பதிவு போட்டு கலக்குறீங்க.

அங்க தலைவர் பாகசவை வளர்க்குறதுக்கு சென்னைநகரையே 27D ல சுற்றுப் பயணம் செய்தப்போ அவருக்கு வரவேற்பு கொடுக்க வராததை கண்டிக்கிறேன்.

Anonymous said...

பா.க.ச. தொண்டனின் வலைப்பூ பாத்தேங்க. அதுல இப்படி எழுதியிருக்காரு.

//3. பா.க.ச வில் யாரெல்லாம் சேரலாம்?
வலைப்பதிவர்கள், வாசிப்பவர்கள் அனைவரும் சேரலாம். அனானியாகவோ, அதர் ஆப்ஷனில் பின்னூட்டமிடுபவர்களும் இந்த சர்வதேச அமைப்பில் சேர்ந்து பணியாற்றலாம். இதில் நாடு, மொழி என்ற பேதமெல்லாம் இல்லை.//

ஆனா, ஒரு பின்னூட்டம் போடலாம்னா, அங்க அனானிகளுக்கு அனுமதி இல்லையாமே? :(((((

Anonymous said...

அமீரகக் கிளையின் பொறுப்பு முழுவதையும் என்னிடம் ஒப்படைக்கும்படி தாழ்மையோடு விண்ணப்பிக்கிறேன்.

**மாநாடு கொண்டானி*ன் கரங்களை உயர்த்துவதில் அமீரகக் கிளை அயராது பாடுபடும்

சாத்தான்குளத்தான்

said...

சிந்தாநதி,
//அங்க தலைவர் பாகசவை வளர்க்குறதுக்கு சென்னைநகரையே 27D ல சுற்றுப் பயணம் செய்தப்போ அவருக்கு வரவேற்பு கொடுக்க வராததை கண்டிக்கிறேன்.//

எங்க கொளுகை அது, எங்க சென்னப்பட்டிணப்பதிவில் நாங்க பின்னூட்டமிட மாட்டோம். :))))

பா.க.ச பதிவுக்கு மட்டும் விலக்கு உள்ளது ;)

அனானி,

//ஆனா, ஒரு பின்னூட்டம் போடலாம்னா, அங்க அனானிகளுக்கு அனுமதி இல்லையாமே? :((((( //
அப்படியா விசயம் ரெக்கமெண்ட் செய்யறேன், கவலைப்படவேண்டாம். எங்க சங்கத்துல தனி கிளையே இருக்கே (அனானி கிளை), ஆமாம் நீங்க எந்த ஊர் அனானி??

said...

ஆசிப் மீரான்,
//அமீரகக் கிளையின் பொறுப்பு முழுவதையும் என்னிடம் ஒப்படைக்கும்படி தாழ்மையோடு விண்ணப்பிக்கிறேன்.

**மாநாடு கொண்டானி*ன் கரங்களை உயர்த்துவதில் அமீரகக் கிளை அயராது பாடுபடும்//

ஏற்கவே அமீரகத்துல இருந்த பா.க.ச தலைவர் வேலை ஒழுங்க செய்ய இருக்கார்ன்னு யோசிச்க்கிட்டு இருந்தோம்... நல்ல வேளை நீங்க வந்தீங்க... எடுத்துக்குங்க பதவியை, நம்ம சங்க கொளுகையை சிறப்ப எடுத்துக்கூறி அசத்துங்க... நீங்களே ஒரு மாநாடு கொண்டான் ஆச்சே!!! எங்க தல மாநாடு கொண்டான்களுக்கே தலையா மாறியதை நினைத்து ரெம்ப பெருமையா இருக்கு ;)

Anonymous said...

//ஆமாம் நீங்க எந்த ஊர் அனானி??//

நாம வெளியூருங்க சாமியோவ்.

said...

அடுத்த வலைப்பதிவு மீட்டிங்ல இது தான் முக்கிய மேட்டராக பேசப்படுமாமே ?

said...

//செந்தழல் ரவி said...
அடுத்த வலைப்பதிவு மீட்டிங்ல இது தான் முக்கிய மேட்டராக பேசப்படுமாமே ? //

உம்ம குசும்புக்கு ஒரு அளவே இல்லையா ரவி. பா.க.ச மீட்டிங் போட்டா இதை பத்தி பேசலாமே?? நல்ல ஐடியாவா இருக்கே... ஒரு மீட்டிங் போடுவோமா?

பாலாபாய் தான் தலமை தாங்கனும் யாரும் எதிர்ப்பு சொல்லமாட்டீங்களே?? ;)

:)))))

said...

ஒரு அற்புதமான மனிதரைப் பலர் கூடி இப்படிக் கலாய்ப்பதற்கு, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி அதிக பட்சம் என்ன தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும் என்பதை நன்றாகச் சட்டம் தெரிந்த வலைப் பதிவாளர் யாராவது எனக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

SP.VR.சுப்பையா

said...

SP.VR.SUBBIAH வாத்தியார் சார்,

இப்படி சொல்லிச்சொலி அவரை ஏன் உசுப்பேத்தறீங்க?? நாங்களாவது டிரெக்டா கலாய்க்கிறோம், அனாலும் நீங்க ரொம்ப ஓவர், அவரை ஒரு அற்புதமான மனிதர்ன்னு ரொம்ப ஓவரா கலாய்க்கிறீங்க ஆமாம்...

:))))))))

said...

//அமீரகக் கிளையின் பொறுப்பு முழுவதையும் என்னிடம் ஒப்படைக்கும்படி தாழ்மையோடு விண்ணப்பிக்கிறேன்.
//
இதை தற்போதைய அமீரகக் கிளை பொறுப்பாளர் முத்துகுமரன் பார்த்தாச்சா? :))

//ஏற்கவே அமீரகத்துல இருந்த பா.க.ச தலைவர் வேலை ஒழுங்க செய்ய இருக்கார்ன்னு யோசிச்க்கிட்டு இருந்தோம்...//
ஆகா, இதுவேறயா?!!

said...

முத்து ரொம்ப பிஸி போல அதனால தான் நம்ம அமீரக மாநாடு கொண்டான் கேட்டார்ன்னு பதிவியை அள்ளிக்கொடுத்துட்டேன் :)))))

சும்மா தானே இருக்கு பதிவிங்க...

said...

பா.க.சவின் இலங்கைக்கான கிளையின் தலைவராக என்னை நானே தோந்தெடுத்துக்கொள்கிறேன். தேர்ந்தெடுத்துக்கொண்டபின் நேரடியாக நேற்று பாலாபாயிடம் சென்று ஆசிபெற்றுத் திரும்பியிருக்கிறேன்.அச் சந்திப்பில் பெருமெடுப்பில் நடைபெறுகிற சங்க வளாகத்தின் இலங்கை கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்த பாலாபாய் அடுத்த ஆண்டில் தான் பெருமெடுப்பில் செயற்பட எண்ணியுள்ளதாக தெரிவித்தார். அவர் என்னிடம் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.அடுத்த ஆண்டில் முற்பகுதியில் அவை குறித்த அறிவிப்புக்கள் உத்தியோக ப+ர்வமாக தன்னால் வெளியிடப்படும் என்றும் தலை தெரிவித்தார். நிச்சயமாக அந்த அறிவிப்புக்கள் வலையுலகை மட்டுமல்ல பல்வேறு தரப்புக்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்க வல்லவை என்பதுதான் இப்போதைக்கு செய்தி

அகிலன்
தலைவர்
பா.க.ச இலங்கைக் கிளை

said...

//எங்க கொளுகை அது, எங்க சென்னப்பட்டிணப்பதிவில் நாங்க பின்னூட்டமிட மாட்டோம். :))))//

அடப்பாவிகளா அது தெரியாம ஆட்டோ வந்து, ஆம்புலன்சில் ஏறின பிறகும் ஒரே யோசனையா இருந்துதா?

பின்னால படை இருக்குற தைரியத்துல தானேய்யா குரலு வுட்டேன். இப்பிடி கவுத்திட்டீங்களேப்பா?

Anonymous said...

////ஆனா, ஒரு பின்னூட்டம் போடலாம்னா, அங்க அனானிகளுக்கு அனுமதி இல்லையாமே//

அனுமதி அளிக்கப்பட்டு விட்டது.

:)))

பா.க.ச அனானி அன்பர்களுக்கு இல்லாத அனுமதியா?
அப்படி இல்லாத வலைப்பூவும் ஒரு வலைப்பூவா?

said...

பா.க.ச தொண்டன்,

நம்ம தல திருநல்வேலி போயிருக்கு வந்ததும் உங்க திறமையை சொல்லி நல்ல போஸ்ட் வாங்கித்தறேன் ;)

அனானி போதுமா உங்களையும் கமெண்ட் போட விட்டுவிட்டாராம்.. சந்தோஷமா ???

Anonymous said...

//நம்ம தல திருநல்வேலி போயிருக்கு வந்ததும் உங்க திறமையை சொல்லி நல்ல போஸ்ட் வாங்கித்தறேன்//

என்கிட்டயும் சொல்லிட்டுத்தான போனாரு!

Anonymous said...

பா.க.ச அனானிகள் கிளைக்கு வீ.த.பீப்பிள் அவர்களின் பேரில் பின்னூட்ட அனுமதி அளிக்கப்பட்டதன் அதிகார பூர்வ அறிவிப்பு

said...

பதவிகளை எதிர்பார்த்து பணிகளைச் செய்பவன் அல்ல.

பதவி வரும் போகும். கொண்ட கொள்கை மாறாது. மறையாது.

யப்பா சோடா கொடுங்கபா:-)

said...

Jay Sir,

May I come in..too!!!

said...

//பதவிகளை எதிர்பார்த்து பணிகளைச் செய்பவன் அல்ல.

பதவி வரும் போகும். கொண்ட கொள்கை மாறாது. மறையாது.

யப்பா சோடா கொடுங்கபா:-)//

வாங்க முத்து, ஜோடா குடிச்சாச்சா?? ரொம்ப கோவிச்சுக்காதிங்க ... உடு தல நீங்களும் அமீரக பொறுப்புக்களை பார்த்துக்கோங்க... நம்ம சங்கம் காங்கிரஸ் மாதிரி (அதுலயும் பல பொது செயலாளர்கள் இருக்காங்கயில்ல), எல்லாரும் அசத்துங்க :))))

பாலாபாய்க்கு ஒரே விளம்பர கொண்டாட்டம் தான் :)))))))

Anonymous said...


தற்காலிக நிர்வாக மாற்றம் - அறிவிப்பு

said...

//Sivabalan said...
Jay Sir,

May I come in..too!!! //

வாங்க சிவா சார் என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க.. உங்களையா வேண்டாம்முன்னு சொல்லப்போறோம்.. எப்படியோ சங்கத்துக்கு அமெரிக்க உறுப்பினர்கள் நிறைய வராங்க..

பட்டுன்னு தலய கலாய்க்க ஆரம்பிங்க...

:))))))

said...

ஜெயகுமார் நீங்களுமா
பாவங்க பாலபாரதி

அந்தப் பால்வடியும் பச்சைப்புள்ள முகத்தைப் பார்த்து இப்படி கலாய்க்க எப்படிங்க மனசு வருது உங்களுக்கு.
ரெண்டு நிமிஷத்தில நடேசன் பூங்காவையே கலகலப்பாக்கினவரைப் போய் ஆளாளுக்கு கலாய்க்கறீங்களே

அதிலும் அகிலம் முழுவதும் ஆட்களை
வேற சேர்க்கிறீங்க.

தல எப்படி தாக்குப் பிடிக்கிறாரு பாருங்க

///SP.VR.SUBBIAH said...
பாலபாரதி யாரையும் அனுப்பவேண்டியதில்லை!

தர்மத்தின் பக்கம் எப்போதுமே யாராவது நின்று கொண்டிருப்பார்கள் அல்லது உரிய நேரத்தில் தர்மத்தைக் காக்க வந்து விடுவார்கள்!

பாலபாரதி என்ற அற்புதமான மனிதரைக் காக்க வேண்டியது தர்மத்தின் கடமை!

அப்படி வந்தவந்தான் நான்!///

சுப்பையா வாத்தியார் ரொம்ப சின்சியரான, நேர்மையானவர் என்பதை
அந்த நல்லுள்ளத்தின் பண்பை இதில் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.

நன்றி வாத்தியாரே
நானும் வழிமொழிகிறேன்.

பாலபாரதி என்ற அற்புதமான மனிதரை
நாமதானுங்க காக்கணும்.

ஜெய்
இதுக்காக (பாலபாரதி பெயரைப் போட்ட கமெண்ட்டிற்காக) எந்த சங்கத்திலும் என்னைச் சேர்த்திடாதீங்க
சரியா:-)

said...

மதுமிதா மேடம்,

இதெல்லாம் ஓவருங்க. என் பேர் ஜெயசங்கர், ஜெயகுமார் இல்ல...

//தல எப்படி தாக்குப் பிடிக்கிறாரு பாருங்க//

அவரு எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குவாருன்னு தெரிஞ்சு தானே நாங்க கலாய்க்கிறோம்!!! ;))))))

Anonymous said...

//ஜெய்
இதுக்காக (பாலபாரதி பெயரைப் போட்ட கமெண்ட்டிற்காக) எந்த சங்கத்திலும் என்னைச் சேர்த்திடாதீங்க
சரியா:-)
//

அவர் என்ன சேர்க்குறது?

நான் சேர்க்கறேன்.

பா.அ.ச வின் முதல் உறுப்பினர் திரு.சுப்பைய்யா வாத்தியார் அவர்கள்!

Anonymous said...

ஆமாம்...அந்த ஆளு போடற பதிவுக்கு எவனும் பின்னூட்டம் போடாதீங்க...எங்கே அந்த ஆளை கலாய்க்கிறாங்களோ அங்கே சரமாரியா பின்னூட்டம் குத்துங்க. உங்களை புரிஞ்சுக்கவே முடியலையே பா.க.சவினரே !!!!

said...

/// We The People said...
மதுமிதா மேடம்,

இதெல்லாம் ஓவருங்க. என் பேர் ஜெயசங்கர், ஜெயகுமார் இல்ல...///

மன்னிக்கணும் ஜெய்

நீங்க ஜெய்சங்கர்தான் தெரியும்
அகில இந்திய ஜேம்ஸ்பாண்ட் இல்லியா நீங்க:-)

கணினி டைப்பிங் மிஸ்டேக்
இதைக் கணக்கில் வெச்சுக்க மாட்டீங்கதானே ஜெய்:-)

said...

அனானி,

அந்த ஆளு, இந்த ஆளு என்று ஏக வசனத்தில் எழுதுபவை வெளியிடப்படாது :( சாரி, எங்க தலயை ஜாலியா கலாய்க்கலாம், அது ஜாலிக்காக, அதை சீரியஸ்ஸா எடுத்து திட்ட வந்த தப்பு... ஜாலியா சிரிக்க வைப்பது தான் எங்கள் நோக்கம் யாரை நோக அடிப்படு எங்கள் நோக்கம் அல்ல...

நா.ஜெயசங்கர்
பா.க.ச தலமை களகம்

said...

மேலே போட்ட கமெண்ட் சீரியஸ்ஸானது அதனால் நோ ஸ்மைலி.

said...

ஜெய், அந்த மாதிரி பின்னூட்டங்களையும் பிரசுரிங்க..

யாரோ ஒரு அனானிக்கு பாலா மீது நிஜமாவே கடுப்பு இருக்கு என்பது சமீபகாலமா பல்வேறு இடத்துல வெளிப்பட்டுகிட்டு தான் இருக்கு. இங்க இல்லைன்னா வேற இடத்துல போய்ச் சொல்லப் போறாரு அவ்வளவு தானே.

சொல்லிட்டுப் போகட்டும்.. அப்படியாவது மனம் குளிரட்டும்..

said...

பொன்ஸ்,

நீங்க சொல்லறது கரெக்ட். பிரசுரிச்சுட்டேன்.

அனானி சந்தோஷமா?? இதுல எனங்க ஒரு அல்ப சந்தோஷம்!!!

நன்றி!

said...

ஜெய், இவ்வளவு தானா?!

இது ஏதோ பாகச அனானி தான்.. நான் வேற யாரோன்னு நினைச்சிட்டேன் :))))

said...

பொன்ஸ் இது பா.க.ச அனானியா? அப்புறம் ஒரு மரியாதை இல்லாம எழுதுறாரு!!

said...

டெல்லியை பட்டியலில் சேர்க்காமைக்கு கடும் ஆட்சேபம் செய்கின்றேன்.

டெல்லியிலிருந்து சென்ஷி

said...

//டெல்லியை பட்டியலில் சேர்க்காமைக்கு கடும் ஆட்சேபம் செய்கின்றேன்.//

மன்னிச்சு விடுங்க சென்ஷி இப்ப தான் சங்க உறுப்பினர்கள் பற்றி முழு லிஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கோம். விரைவில் அல்லார் பேரும் லிஸ்ட் போட்டுவிடுவோம்.

நன்றி

ஜெய்

said...

//நா.ஜெயசங்கர்
பா.க.ச தலமை களகம்//

பா.க.ச தலைமைக் கழகம் -- இது சரி
பா.க.ச தலைமைக் களகம் -- எழுத்துப்பிழை
பா.க.ச தலைமைக் கலகம் -- இதுவும் எழுத்துப்பிழை தான் ஆனா நல்லா இருக்கு :)

said...

சேதுக்கரசி,

//பா.க.ச தலைமைக் கலகம் -- இதுவும் எழுத்துப்பிழை தான் ஆனா நல்லா இருக்கு :) //

ஓவரு! ஓவரு!! ஓவரு!!!!

எங்க அது கூடயா தெரியாம இருப்பாங்க. சும்ம ஒரு கலாய் தான், இவ்வளவு சீரியஸ்சா எடுத்து எங்க சின்ன டீச்சர், பெரிய டீச்சர் மாதிரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் சொல்லித்தற வந்திட்டீங்க. இப்படி ஆரம்பிச்சு தான் எங்க தல இன்னைக்கு பாடாய் படறாரு.. சாக்கிறதை! சாக்கிறதை!!!

ஓன்னு தெரிஞ்சுக்குங்க பா.க.ச வில் ஒரு மேட்டரை சொன்னா, அனுபவிக்கனும் ஆராய்ச்சி பண்ணக்குடாது... ஆமாம் :)))))

said...

சின்ன டீச்சர் - பொன்ஸ்
பெரிய டீச்சர் - துளசி
கரெக்டா?

said...

சேதுக்கரசி,

க.க.க.போ :)))))))))))

எப்புடி மா! எப்படி உன்னால இப்படி கண்டுபுடிக்கமுடியுது??!! ஆச்சர்யமா இருக்கே!!!

said...

நானும் பார்க்கிறேன் - இந்தப் பதிவைப் போட்ட தேதி 22.11.2006
இன்றுடன் அதாவது 8.12.2006 முடிய மொத்தம் 17 நாள் ஆகிவிட்டது.

இன்னும் கலாய்ப்புகளை வாங்கிப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். ஒரு அளவு இல்லையா?

என்ன ஆகிவிடும்?

ஒன்றும் நடக்காது!!!

பதிவுலகத்தின் "வல்லபாய் படேல்"
பாலபாரதி அவர்கள் "எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்தில் வரும் இரண்டாவது M.G.R போல " நான் ஆனையிட்டால் அது நடந்து விட்டால்" என்று பாட்டுபாடியவாறு' சாட்டையோடு புறப்பட்டு வரப் போகிறார் - அப்புறம் பாருங்கள் மக்களே - உங்கள் சங்கத்து ஆசாமிகளெல்லா துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகிறீர்கள்

அவர் தொடர் தூக்கத்தில் இருக்கிறா
ர் - தூங்கி எழுந்ததும் பாருங்கள் நடக்கப் போவதை!

SP.VR.SUBBIAH

said...

வாத்தியார் மற்றும் புது டீச்சர் சேது புண்ணியத்தில், இது பாகசவின் தலை சிறந்த பதிவாகிவிடும் போலிருக்கிறது

//பதிவுலகத்தின் "வல்லபாய் படேல்" //
:)))))))))))))))))))))))

// "எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்தில் வரும் இரண்டாவது M.G.R போல " நான் ஆனையிட்டால் அது நடந்து விட்டால்" என்று பாட்டுபாடியவாறு' சாட்டையோடு புறப்பட்டு வரப் போகிறார் //
ஹய்யோ ஹய்யோ.. சுப்பையா சார், இதை அப்படியே கற்பனை செய்து பார்த்தேன். எனக்கென்னவோ அதிசயப்பிறவி ரஜினி மாதிரி, அதே சாட்டையால் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் திரும்பி வந்தால் போதும் என்று தோன்றுகிறது :))

//அவர் தொடர் தூக்கத்தில் இருக்கிறார் - தூங்கி எழுந்ததும் பாருங்கள் நடக்கப் போவதை!//
தூக்கத்துலயே நடப்பாரான்னு கேட்கணும்... :)))

Anonymous said...

////பதிவுலகத்தின் "வல்லபாய் படேல்"////

பாலாபாய் வடேல் என்ற புதியதொரு பட்டத்தை வழங்கிச் சிறப்பித்த சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!

Anonymous said...

//ஹய்யோ ஹய்யோ.. சுப்பையா சார், இதை அப்படியே கற்பனை செய்து பார்த்தேன். எனக்கென்னவோ அதிசயப்பிறவி ரஜினி மாதிரி, அதே சாட்டையால் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் திரும்பி வந்தால் போதும் என்று தோன்றுகிறது //

:))

ஆமாம்! நான் இதனை வழிமொழிகிறேன்!

said...

//பதிவுலகத்தின் "வல்லபாய் படேல்" //

இதை தாங்கவே முடியலைடா சாமீ.... சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது வாத்தியார் சார்...

நம்ம வாத்தியார் சொல்லறது எல்லாம் சூப்பர் கலாப்புக்கள் தான். அவர் ஒரு சீரியஸ் பா.க.ச மெம்பர் ;)

//அவர் தொடர் தூக்கத்தில் இருக்கிறார் - தூங்கி எழுந்ததும் பாருங்கள் நடக்கப் போவதை!//

அவர் என்ன கும்பகர்ணனா? 22 நவ் முதல் 9 டிசெ வரை தூங்கிட்டே இருக்கறதுக்கு...

Anonymous said...

//நம்ம வாத்தியார் சொல்லறது எல்லாம் சூப்பர் கலாப்புக்கள் தான். அவர் ஒரு சீரியஸ் பா.க.ச மெம்பர் //

சுப்பைய்யா அவர்கள் கலாய்ப்பதே தெரியாமல் பாலபாரதியை கலாய்ப்பதால்
அவரை பாஸ்ஸிவ்(Passive Member) மெம்பர் என்று அறிவிக்கும்படியாய் தலைமையைக் கேட்டுக் கொள்கிறேன்!

said...

தொண்டர், கலாய்க்கிறார்னு தெரியாமயே கலாய்க்கிறது தான் பேஸிவ்.. ஆனால், இவர் கலாய்க்கிறது தான் நமக்கெல்லாம் தெரியுதே! ;)

Anonymous said...

//கலாய்க்கிறார்னு தெரியாமயே கலாய்க்கிறது தான் பேஸிவ்//

இவரது கருத்துக்கள் தான் ஒரு பா.அ.ச என்ற தோற்றத்தை உண்டாக்கினாலும் கலாய்க்கிறார் என்பது சட்டென தெரிவதில்லை அல்லவா?

said...

பொன்ஸ் வாதமே கரீட் என்று தலமை கலகம் தீர்ப்பு எழுதுகிறது :))))

வாத்தியார் சார் ஒரு ACTIVE மெம்பர் என்று தீர்ப்பாயிருக்கு. கவலை பாடாதிங்க தொண்டரே, உங்க வாதம் கொஞ்சம் வீக்கா தான் இருந்தது :)))))

பாலாபாய் பட்டேல் என்ற புதியதொரு பட்டத்தை வழங்கிச் சிறப்பித்த சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு எங்கள் பா.க.ச சார்ப்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்!!!

:))))))))))))))))))))))))))))))

Anonymous said...

நானும் இந்த ஜோதியில ஐக்கியமாயிடுறேன்! ஹி.. ஹி...

எங்கள் தலைக்கு சாதரணமாக ஒரு புகைப்படத்தைப் போட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அவருக்கு 'பின்லேடன்' ஸ்டைலில், ஒரு பேனாவோடு நிற்கும் புகைப்படம் போட வேண்டுமென்று கனம் ஜெய் அவர்களை தாழ்மையோடுக் கேட்டுக் கொள்கிறேன்.

இவன்,
ஜி,
பா.க.ச. தொண்டன்,
பாஸ்டன் பகுதி,
அமெரிக்கா.

said...

வாங்க வாங்க ஜீ! உங்க வரவு நல்வரவு ஆகுக...

முதல் கலாய்ப்பே சூப்பர். பின்லேடன் மாதிரியா, ட்ரை பண்ணிடுவோம்.

பாலாபாய் உன் புகழ் பாஸ்டன் வரை எத்தி விட்டதை நனைக்கும் போது ரெம்ப சந்தோஷமா இருக்கு தல...

இத பாருபா வஞ்சனையில்லாம எல்லாரும் வந்து கலாய்க்கிறாங்க :))))))

Anonymous said...

கலாய்க்க(ப்பட)ப் பிறந்தவர் யாரு?

கோரஸ் : பா.....லா....!

கலாய்க்க(ப்பட)ச் சிறந்தவர் யாரு?

கோரஸ் : பா.....லா....!

ஓட்டுவதற்கும், மாட்டுவதற்கும்...
வாய்த்தவர்தான்....
பாலா வாழ்க!

கலாய்க்கப் பிறந்தவர் யாரு? பா..லா...

said...

பா.க.ச தொண்டரே,

அசத்துறீங்க... என்னமா பாட்டு போடறீங்க.. பண்ணுங்க, பண்ணுங்க..

எல்லா புகழும் தல பாலாபாய்க்குகே!!!

said...

என்ன கண்ணுங்களா, அக்கிரமமா இருக்கு?

பாலபாரதி என்ற அற்புதமான மனிதரைப் பதிவுலக வல்லபாய் பட்டேல் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னதை ஒப்புக் கொள்ளவும் இல்லாமல், மேற்கொண்டு எல்லோரும் சேர்ந்து அதைக்கேலி செய்கிறீர்கள். என்ன நியாயம் கண்மணிகளா?

54 வருடங்களுக்கு முன்னால் நடந்தது எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியம்? வல்லபாய் பட்டேலை ஏன் எல்லோரும் இரும்பு மனிதன் என்றார்கள்?

உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கூகுள் அண்டவர் ஒருத்தர்தான். நீங்கள் கோடிங்கை மறந்து விட்டுமுழிக்கும் போதெல்லாம் அவர்தான் உங்களுக்கு உதவி செய்கிறார்.

வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு சிதறிக் கிடந்த பல சமஸ்தானங்களை ஒன்றாக்கி ஒரு பெரிய நாடாக இந்தியாவை உருவாக்கியவர் வல்லபாய் பட்டேல்

அதேபோல் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த உங்களைப் போன்ற சில பல பதிவர்களையெல்லாம் ஒன்றாகக் கூட்டி சங்கம் வைக்கும் அளவிற்கு உங்களைப் பெரிய ஆளாக்கியவர் எங்கள் பால பாரதி.

நன்றி மறந்து விட்டு இப்படி அவரைக் கலாய்ப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

அவருடைய சாபத்திற்கு ஆளாகாதீர்கள்!.

உங்களுக்கு கோடிங், நெட் ஒர்க்கிங், என்று கணினி பற்றிய எல்லா அறிவாற்றலுமே மறந்து போய்விடும் அபாயம் உண்டு.

பாலபாரதி அவர்களைப் பற்றி நீங்கள் (நீங்கள் என்றால் உங்கள் சங்கத்து சிங்கங்கள்) அறிந்ததெல்லாம் என்ன வென்று தெரியவில்லை!

1. நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றல் என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னாரே - அந்த இளம் தென்றலுக்கு வடிவம் கொடுத்தால் அதுதான் பாலபாரதி.

2. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு! .உலகத்தில் எல்லை இல்லாது ஒன்றே ஒன்றுதான்
எங்கள் பாலபாரதி அவர்களின் மனது அது!

தெரிந்து கொள்ளூங்கள் அதை and also keep it in your mind!

நீங்கள் எல்லோரும் சேர்ந்து இப்படியே கூத்து அடித்துக் கொண்டிருந்தால் (உங்கள் மொழியில் கூத்திற்கு என்ன பெயர்,திம்மியா அல்லது கும்மியா) இயற்கைக்கே அடுக்காது. அப்புறம் அடுத்து ஒரு ஐந்து ஆண்டுகளுக்குத் தமிழ் நாட்டில் மழை இல்லாமல் போய் விடும். தமிழ் நாடு என்று இல்லை உங்கள் சங்கத்து சிங்கங்கள் எந்தெந்த ஊரில் இருக்கிறார்களோ அந்தந்த ஊர்களில் எல்லாம் மழை இல்லாமல் போய்விடும். தண்ணீரே உங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும்)

தூக்கம் என்று சொன்னதைத தவறாகப் புரிந்து கொண்டு - 17 நாட்களுக்கு ஒரு மனிதர் தொடர்ந்து எப்படித் தூங்க முடியும் என்று கேட்டுக் கேலி செய்கிறீர்கள்.

தூக்கம் என்றால் 'வாய் மூடி மெளனமாக இருத்தல் என்று பொருள்" இதைக் Cut & Paste செய்து உங்கள் கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பாருங்கள்.

ஆகவே இந்தப் பதிவின் பின்னூட்ட வசதியை இத்துடன் நிறுத்தி விடுங்கள்

இல்லையென்றால்..........?

அந்த தர்மத்தின் தலைவருக்காக - நான் மீண்டும் வருவேன்!!!!!!!!

SP.VR.SUBBIAH

said...

நீங்கள் ( உங்கள் சங்கத்து சிங்கங்கள் ) நாங்கள்தான் மக்கள் "We the people" என்று சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

ஆனால் எங்கள் பாலபாரதி அவர்கள்
For the people, by the people and of the people!

இந்த இரண்டில் எது Most powerful and authoritative என்று உங்கள் கூகுள் ஆண்டவரையே கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகாவது உங்கள் சங்கத்தின் பெயரை பா.மு.க (பாலபாரதி முன்னேற்றக் கழகம்) என்று மாற்றி இதுவரை செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுங்கள்.

அதுதான் உங்களுக்கு (உங்கள் சங்கத்து சிங்கங்களுக்கு) நல்லது. அதுதான் உண்மையில் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியதுகூட!
-----------------
"உண்மை எப்போதும் கசக்கும்"
பாலபாரதி அவர்களின் பொன்மொழி நம்பர்.1

SP.VR.SUBBIAH

said...

//ஆகவே இந்தப் பதிவின் பின்னூட்ட வசதியை இத்துடன் நிறுத்தி விடுங்கள்//

ஆமாம் ஜெய்.... நிறுத்திடுங்க.. இல்லைன்னா, சுப்பையா சார் பாலாவைக் கலாய்க்கிறதைப் படிச்சி சிரிச்சி சிரிச்சே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திரும் போலிருக்கு :)))))))))))


//உங்கள் சங்கத்து சிங்கங்கள் எந்தெந்த ஊரில் இருக்கிறார்களோ அந்தந்த ஊர்களில் எல்லாம் மழை இல்லாமல் போய்விடும்//
சுப்பையா சார், "நல்லார் ஒருவர் உளறேல்..."ன்னு அவ்வைப் பாட்டி சொல்லி இருக்காங்க.. அதனால எங்க பாலா பேசிக் கொண்டிருக்கும்வரை... எங்களுக்குத் தண்ணீர்ப் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை ;)

வாழ்க பாலாபாய் பட்டேல்... :))

said...

ஷப்ப்ப்ப்ப்பா... நம்ம வாத்தியார் ரவுசு தாங்க முடியலடா சாமி!! எங்களுக்கு பட்டேலை நல்லா தெரியும். அவர் கூட நம்ம தலய கம்பேர் பண்ணதுக்கு நாங்க பாராட்டி வாழ்த்திவிட்டோமே... இன்னும் ஏன் இந்த கலாய்த்தல்... பாவம் பாலாபாய் இதுக்கு மேல கலாய்க்காதீங்க ப்ளீஸ்... :))))))))))))))))))))))))

//1. நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றல் என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னாரே - அந்த இளம் தென்றலுக்கு வடிவம் கொடுத்தால் அதுதான் பாலபாரதி.

2. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு! .உலகத்தில் எல்லை இல்லாது ஒன்றே ஒன்றுதான்
எங்கள் பாலபாரதி அவர்களின் மனது அது!//

இன்னாமா கலாய்க்கிறாருடா நம்ம வாத்தியாரு!! அசத்தல்.. அது எப்படி நதியில் விளையாடி... ஐயோ! ஐயோ!! பாலாபாய் வந்து பார்த்தாருன்னா ரொம்ப நொந்துப்போயிடுவாரு...

Anonymous said...

//தர்மத்தின் தலைவருக்காக //

இந்தப் பட்டம் ஏற்கனவே யாருக்கேனும் கொடுக்கப்பட்டுள்ளாதா?

இல்லையெனில் இரண்டாவது பட்டம் வழங்கி சிறப்பிக்கும் சுப்பைய்யா வாத்தியார் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன்,

"பட்ட வள்ளல்" என்ற பட்டத்தை சுப்பைய்யா வாத்தியார் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

Anonymous said...

//அந்த தர்மத்தின் தலைவருக்காக - நான் மீண்டும் வருவேன்!!!!!!!!
//

ஐயா! நீங்கள் வந்தால்தானே தொடர்ந்து கலாய்க்க இயலும்!

said...

ஐயோ!

சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குதுபா... தாங்க முடியல... தொண்டா இவரை போயில் Passive Memberசொன்னயே பா... இப்ப புரியுதா நம்ம தீர்ப்பு கரெக்ட்ன்னு??

அடிச்சு ஆடுங்க வாத்தியார் சார்... இன்னாமா பட்டம் குடுக்குறாருபா வாத்தியார். ஒவ்வொன்றும் அசத்தல் பட்டங்கள்... பேஷ்! பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு...

தொண்டா நீயும் பட்டம் கொடுக்க கிளம்பிட்டயா.. அந்த பட்டமும் நல்லா பொருந்தும் நம்ம வாத்தியாருக்கு....

:)))))))))))))))))))))))))))))

Anonymous said...

.

வா.க.ச தொண்டன் said...

இது பா.க.ச வா அல்லது
வா.க.ச வா? (வாத்தியாரை கலாய்ப்போர் சங்கம்)

[வா.க.ச வா - வாத்தியாரை கலாய்ப்போர் சங்கம்[

said...

யாருபா அந்த அனானி,

நம்ம பா.க.சவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பார்ப்பது??!!

Anonymous said...

நாந்தான்!

said...

நான் தான்னா? யாருபா அது?? உன் பேர் என்ன? எந்த ஊரு?? ஓவரா செஞ்ச வாத்தியார்கிட்ட சொல்லிடுவேன்!!!!

said...

//யாருபா அந்த அனானி,

நம்ம பா.க.சவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பார்ப்பது??!! //
ஜெய், அது நம்ம பாலா தானாம்.

நல்லார் ஒருவர் உளறேலுக்கு எதிர்வினையா இனிமேல் 'பேசுவதில்லைன்னு' முடிவெடுத்திருக்காராம் ;-)

said...

//ஜெய், அது நம்ம பாலா தானாம்.

நல்லார் ஒருவர் உளறேலுக்கு எதிர்வினையா இனிமேல் 'பேசுவதில்லைன்னு' முடிவெடுத்திருக்காராம் ;-)//

இதுவேறயா?? என்வோ போங்க ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல...

:)))))))))))))))))))))

said...

.,,,,,:))))

senshe

Anonymous said...

நான் பாலா அல்ல!

வாத்தியார் சொல்வதுபோல் சொல்ல வேண்டுமென்றால்

நான் மகான் அல்ல!

(பாலா ===> மகான்)

Anonymous said...

நான்தான் நூறு!

அடிச்சிபிட்டேன் பாரு!

வாங்கிக் கொடுங்க காரு! இல்லை

குறைந்த பட்சம் பீரு!

said...

கடைசியில் பட்டம் கொடுத்து என்னையும் உங்கள் சங்கத்திற்கு இழுக்கப் பார்க்கின்றீர்கள்.

அது நடக்காது!

அப்புறம், உங்களுக்கு "நல்லாசிரியர் விருது" வாங்கித் தருகிறோம் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று ஆசை காட்டுவீர்கள்.

யாருக்கு வேண்டும் பட்டமும், விருதுகளும்?

கோடிங் எழுதுபவர்கள் வேண்டுமென்றால் பட்டங்களுக்கு மயங்கலாம்!

பால பாரதியாரும் மயங்கமாட்டர். அவர் எழுதிய பல நல்ல நூல்களைக் கற்றுத் தெளிந்த நானும் மயங்க மாட்டேன்

எனக்கு அந்தத் தர்மத் தலைவரின், நண்பன் என்ற பட்டமும்,
அவருடைய அன்பிற்குப் பாத்திரமானவன் என்ற விருதும், போதும்!!!!!!

எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. என்னுடைய நூறாவது பதிவை நாளை பதிவதாக உள்ளேன்.

அந்த வேலை முடிந்தவுடன் வருகிறேன்.

வருவது மட்டுமல்ல - உங்கள் சங்கத்து சிங்கங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பேசிக் கொள்கிறேன்.

தூசி தட்டி அனைவரையும் தயார் செய்து வையுங்கள்.

SP.VR.சுப்பையா.

said...

தலயோட புது படம் போட்டிருக்கேன் பார்த்தீங்களா???

said...

இரண்டாவது படத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்!

ஏதோ தில்லாலங்கடி வேலை செய்து போடப்பட்டுள்ளது!

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை!
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை!

SP.VR.சுப்பையா

said...

//இரண்டாவது படத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்!

ஏதோ தில்லாலங்கடி வேலை செய்து போடப்பட்டுள்ளது!//

வாத்தியார் சார் அவர்கிட்ட இருந்து தான் இந்த புது படத்தை சுட்டேன். அதை நான் ஒன்னும் தில்லாலங்கடி வேலை செய்யவில்லை. அவர் கூட அவர் "விடாதுசுட்டவை" பதிவுல போட்டிருக்காரு பாருங்க :)))))))))))))))))))))))))

said...

நூறு அடித்த அனானிக்கு வாழ்த்துக்கள். பா.க.ச புகழ் பரப்ப அயராது உழைக்கும் சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்;)

Anonymous said...

என்ன நடக்குது இங்கே?

said...

அனானி,

இங்க பா.க.ச சிங்களில் கும்மி ஆட்டம் நடக்குது :)

சும்ம ஜாலியா தான்!!! வாங்க கும்மி அடிக்கலாம்...

said...

அப்ப அது புகைபடம் எடுதவனின் தில்லாலஙகடி வேலையாக இருக்கும்.

கிராஃபிக்ஸில் ஏதோ சேட்டை பண்ணியிருக்கிர்றார் அந்த ஆசாமி.

அவர் ஒரு வேளை உங்கள்சங்கத்து சிங்கங்களில் ஒருவராகக்கூட இருக்கலாம்.நன்றாக விசாரித்து பாருங்கள்!

இரண்டாவது படம் போடவேண்டு மென்றால், அவருடைய படம் ஆயிரம் கிடைக்குமே
இதுபோல லங்கடிப் படத்தைத்தான் போடவேண்டுமா?

இது அப்பட்டமான சூழ்ச்சி!

உடனே அந்தப் படத்தை நீக்கிவிட்டு பளிச் சென்று அவர் ரோஜா பட அரவிந்தசாமியைப் போல தோற்றமளிக்கும் படியாக ஒரு நல்ல படத்தை போடவும்.

இல்லையென்றால்.....?

அடுத்த வாரம் நடக்க இருக்கும் பாலபாரதி அவர்களின் கொள்கை விளக்கப் பாடல் நிகழ்ச்சிக்கு உங்கள் சங்கத்தினர் எவருக்கும் அனுமதிச் சீட்டுக் கிடையாது!

The lyric and the song is under composing!

SP.VR. சுப்பையா

பொன்ஸ் said...

//பளிச் சென்று அவர் ரோஜா பட அரவிந்தசாமியைப் போல தோற்றமளிக்கும் படியாக ஒரு நல்ல படத்தை போடவும்.//

பாலாவை வச்சி, ரோஜா பட வில்லன் மாதிரி வேணா ஒரு படம் எடுத்துத் தரோம். அரவிந்த்சாமி மாதிரி எல்லாம் சான்ஸே இல்லை... :))))

said...

//பளிச் சென்று அவர் ரோஜா பட அரவிந்தசாமியைப் போல தோற்றமளிக்கும் படியாக ஒரு நல்ல படத்தை போடவும்.//

ஆனாலும் வாத்தியார் ரொம்ப குறும்பு? வாத்தியார் சார் குறும்பு போட்டிக்கு உங்க போஸ்டிங் ரெடி போல ;)

//பாலாவை வச்சி, ரோஜா பட வில்லன் மாதிரி வேணா ஒரு படம் எடுத்துத் தரோம். அரவிந்த்சாமி மாதிரி எல்லாம் சான்ஸே இல்லை... :)))) //

அதே! அதே! இது சூப்பர் பொன்ஸ்..

said...

பின்னூட்டம் 100-ஐத் தாண்டிடுச்சு... விட்ருவோமா? பாவம்ல?

said...

ரோஜா பட வில்லன் மாதிரிப் படம் எடுத்துத் தருகிறோம் என்கிறீர்கள்

ரோஜா படத்தில் வரும் வில்லன் யார்?

அவன் ஒரு தீவிரவாதி!

எப்படி ஒரு தீவிரவாதியின் வடிவில் - காந்தீயவாதியான பாலபாரதி அவரகளைப் படம் எடுக்க முடியும்?

நீங்கள் உங்கள் சிநதனைக்குத் தாளிட்டு விட்டீர்கள்!!!!!!

தாள் என்றால் என்னவென்று தெரிய்மா - தெரியாவிட்டால் எங்கள் பாலபாரதி அவர்கள் எழுதிய "பாம்பன் தமிழ் அகராதி" யை எடுத்துப் பாருங்கள்

தாள் = பூட்டு என்று பொருளும் எழுதப்பட்டிருக்கும் - படிப்பவர்களுக்குப் புரியும் படியாக பக்கத்திலேயே ஒரு நவ்தால் எட்டு லீவர் பூட்டின் படமும் போடப்பட்டிருக்கும்!

SP.VR..சுப்பையா

said...

//காந்தீயவாதியான பாலபாரதி//

//எங்கள் பாலபாரதி அவர்கள் எழுதிய "பாம்பன் தமிழ் அகராதி" //
ஓ.. வாத்தியார் இதுவரை பேசியது வேற ஏதோ பாலபாரதி போலிருக்குப்பா.. :)))

இல்லைன்னா இது ஏதாச்சும் உள்குத்தா?!! :)))

[காந்தீயவாதி பாலபாரதி என்பதைப் படித்துவிட்டு நான் சிரித்ததற்கு அலுவலகமே பயந்துவிட்டது :))) ]

said...

நம்ம வாத்தியார் இப்படி சீரியஸா காலாய்க்கிறாரு. நான் நினைச்சுகூட பாக்கல.

போங்க சார் இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம் சார்.

அடுத்த பா.க.ச கூட்டத்தில் பா.அ.ச வையும் சேர்த்து காலாய்க்கு வேண்டும் என்ற கூட்டு வரைவை முன்மொழிகிறேன். இதற்கு ஆதரவு தெரிவிப்போர் இங்கு ஆதரவாக பின்னூட்டமிடவும்.

said...

// நம்ம வாத்தியார் இப்படி சீரியஸா காலாய்க்கிறாரு. நான் நினைச்சுகூட பாக்கல.
போங்க சார் இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம் சார்.//

வாத்தியார் என்றால் வகுப்போடு மட்டும்தான் என்ற உங்கள் குறுகிய சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள். வாத்தியார் என்ன இத்யம் இல்லாதவரா?

ஒரு தர்மத்தின் மறுவடிவைப் பார்த்து நீங்களெல்லாம் கும்மியடிப்பதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கமுடியும்?

சினிமாவை அதிகமாகப் பார்த்ததால் கோயம்புத்தூர்க்காராகள் எதைப் பேசினாலும், நீங்கள் அதை லொள்ளு என்று மொத்தமாக முத்திரை குத்தி விடுகிறீர்கள்!

வாத்தியாரின் வாக்கு வேத வாக்கு
பால பாரதியின் வாக்கு தேவ வாக்கு!

மறந்து விடாதீர்கள்!

மீண்டும் வருவேன்!!!!!!!!!!!!!!!!!!!

SP.VR.சுப்பையா.

said...

// ஓ.. வாத்தியார் இதுவரை பேசியது வேற ஏதோ பாலபாரதி போலிருக்குப்பா.. :))) //


அம்மணி, பதிவில் இருந்த படத்தைப் பார்த்து விட்டு, உங்கள் சங்கத்து சிங்கங்கள் கலாய்ப்பது - யாரை - ஏன் - என்று தெரிந்து கொண்டு - அதற்குப் பிறகுதானே - அடியேன் இந்தப் பின்னூட்டப் போரில் இறங்கினேன்.

அப்படியிருக்க நீங்கள் இது ஏதோ வேறு பால பாரதி என்று விசயத்தை திசை திருப்ப முயல்வது வருந்தத்தக்கது!!!!


உங்கள் சங்கத்தின் பெயரை நீங்கள் எல்லோரும் சேர்ந்து -"பாலபாரதியார் நற்பணி மன்றம்" என்று மாற்றும் வரை - வீயட்நாம் ய்த்தம் போல இந்தப் பின்னூட்டப் போர் தொடரும்.

வாழ்க சிம்மக்குரலோன் பால பாரதியார்!
வளர்க அவர் புகழ் தரணியெங்கும்!

SP.VR. சுப்பையா

said...

// ஓ.. வாத்தியார் இதுவரை பேசியது வேற ஏதோ பாலபாரதி போலிருக்குப்பா.. :))) //


அம்மணி, பதிவில் இருந்த படத்தைப் பார்த்து விட்டு, உங்கள் சங்கத்து சிங்கங்கள் கலாய்ப்பது - யாரை - ஏன் - என்று தெரிந்து கொண்டு - அதற்குப் பிறகுதானே - அடியேன் இந்தப் பின்னூட்டப் போரில் இறங்கினேன்.

அப்படியிருக்க நீங்கள் இது ஏதோ வேறு பால பாரதி என்று விசயத்தை திசை திருப்ப முயல்வது வருந்தத்தக்கது!!!!


உங்கள் சங்கத்தின் பெயரை நீங்கள் எல்லோரும் சேர்ந்து -"பாலபாரதியார் நற்பணி மன்றம்" என்று மாற்றும் வரை - வீயட்நாம் ய்த்தம் போல இந்தப் பின்னூட்டப் போர் தொடரும்.

வாழ்க சிம்மக்குரலோன் பால பாரதியார்!
வளர்க அவர் புகழ் தரணியெங்கும்!

SP.VR. சுப்பையா

said...

//வாழ்க சிம்மக்குரலோன் பால பாரதியார்!
வளர்க அவர் புகழ் தரணியெங்கும்!//

எப்ப்ப்ப்ப்ப்ப்பா தாங்க முடியலடா சாமீ....

கரகாட்டக்காரன் படத்துல செந்தில் ரெண்டு பேரை ஏற்பாடு பண்ணுவாரு செந்தில சிவாஜின்னும், கோவை சரளாவை பத்மினின்னு சொல்லற்துக்கு அது போல ஏதாவது விளம்பரமா இது??

இன்ங்க இது பட்டேல், பாலபாரதி அவர்கள் எழுதிய "பாம்பன் தமிழ் அகராதி" என்ன இந்த புக்குக்கு விளம்பரமா இது... என்ன கொடுமைடா சாமீ...

வாத்தியார் தான் "சூப்பர் கலாய்ப்பர்" என்று தோனுது...

said...

தலயோட புது படம் இணைச்சு இருக்கோமில்ல, அதனால தான் இந்த கமெண்ட்...

வாங்க பாலபாரதி பாதுகாப்போர் சங்க உறுப்பினர்களே உங்க தல பண்ணற வேலைய பாருங்கோ!!

said...

தலய பத்தின அருமை பெருமைகள கொஞ்சம் எடுத்து சொல்லுங்க!!
நானும் சேர்ந்துக்கலாமான்னு யோசிக்கறேன்!!

said...

தலய பத்தின அருமை பெருமைகள கொஞ்சம் எடுத்து சொல்லுங்க!!
நானும் சேர்ந்துக்கலாமான்னு யோசிக்கறேன்!!

said...

//தலய பத்தின அருமை பெருமைகள கொஞ்சம் எடுத்து சொல்லுங்க!!//

எங்க தலைக்கு அந்த மாதிரி ஒரு கருமமும் இல்லை, ஜாலியோ ஜிம்கான தான் நம்ம தலயோட தாரக மந்திரம். வாங்க, கலாய்ங்க, மெம்பர் ஆகுங்க!

கம் இன்,
கலாய் கின்,
ஜமாய் கின்,
என்ஜாய் இன்!!!
பா.க.ச!!!

said...

என்ன பாலா, இப்படியா சொ.செ.சூ வெச்சுக்குவீங்க?

இப்படிக்கு
பா.க.ச & பா.அ.ச உறுப்பினர்

said...

யோவ்.. நீர் அடங்கவே மாட்டீரா?
:(((

said...

//யெஸ்.பாலபாரதி said...
யோவ்.. நீர் அடங்கவே மாட்டீரா?//

முடியாது தல... ஊரெல்லாம் ப்ரான்ச் வெச்சு உங்களை கலாய்க்கிறாங்களே அவங்களை நிறுத்தச்சொல்லுங்க, நான் நிறுத்தறேன்!

உங்களை காப்பாத்தோறோம்னு சொல்லி உங்களை கண்டமேனிக்கு கலாய்க்கிறாரே நம்ம சுப்பையா வாத்தியார் அவரை நிறுத்தச்சொல்லுங்க, நான் நிறுத்தறேன்!!!

:)))) சும்ம ஒரு பில்டப் தான்...