இந்த கொலைக்கு யார் காரணம்?

இன்றய இந்தியா இவருக்கு கொடுத்த பரிசு - பசி (தற்)கொலை. இன்று இந்த செய்தி IBNல பார்த்து, நொந்து போனேன்.

பாட்னா தொடர் வண்டி நிலையத்தில் ஒரு ரெயில் வண்டியில் இவர் பசியின் கொடுமை தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் எழுதிய இங்கு(பாட்னா ரெயில் நிலையத்தில்) தற்கொலை கடிதத்தில் கடந்த பதிமூன்று நாட்களாக உண்ண உணவின்றி அலைந்து, தண்ணீர் மட்டும் பருகி வாழ்ததாகவும், தன்னை யாரும் பார்க்கவில்லை, யார் என்றும், எங்கிறுந்து வந்தாய் என்று கேட்க ஆள் இல்லை! யாரும் உணவு கேட்டும் தரவில்லை என்று எழுதி இருக்கிறார்.

இவர் யார்? எங்கிருந்து வந்தார்? எனற தகவல் இல்லை. இதை பார்த்த போது, இதை தடுக்க வழியே இல்லையா? இந்தியாவை வல்லரசாக முயற்சிப்பதாக சொல்லும் இந்த அரசியல்வாதிகள், இந்த பசி தற்கொலைகளை ஒழிக்காமல் அங்கு அடைய முடியாது என்று தெரியவில்லையா?? பதிமூன்று நாட்களாய் தனி ஒரு மனிதன் உண்ண உணவின்றி தற்கொலை செய்யும் போது பல்லாயிரம் கோடி வெளிநாட்டு டாலர்கள் சேமித்து வைத்து என்ன செய்ய போகிறார்கள்?? டாலர் சேர்த்து வைத்து, மக்களையும், விவசாயிகளை தற்கொலைக்கு வழிநடத்தி செல்வது தான் வல்லரசின் வேலையா?

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

- திருக்குறள்


"The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth. "

இந்த கொலைக்கு யார் காரணம்?!! இந்த பட்டினி சாவுகளுக்கு ஒரு விடிவு காலம் என்று வரும்??

நன்றி: IBN Live

ஒரு இந்தியனின் தீபாவளி வாழ்த்துக்கள்


அனைத்து தமிழ்மணம், தேன்கூடு வாசகர்கள்/பதிவர்கள் மற்றும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!! இந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் வளத்தை பெருக்கட்டும்.
நன்றி!
நா. ஜெயசங்கர்
We The People

லக்கிலுக்கும் - நீதிமன்ற அவமதிப்பும்

நம்ம பகுத்தறிவு ஜீவி லக்கிலுக் இவ்வளவு சூப்பரா திரைகதை அமைப்பார்ன்னு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சுவனப்பிரியன் என்னும் ம.உ.கண்மணி கொடுத்த ஒரு ஒன் லைன்னை (One Line) கதையை செம அசத்தலா திரைகதை அமைத்து. பாக்கியராஜ், மணிரத்னம் ஆகியவரை விட ஒரு சிறந்த திரைகதையாளனா அசத்தியிருக்காரு. ராம் கோபால் வர்மா ரேஞ்சுக்கு ஒரு சிறந்த திவிரவாத சினிமா எடுக்கலாம்.

அவர் சொல்லாராரு அப்சலை தூக்குல போடுன்னு சொன்னா தேசபக்தி ஜல்லியாம். தூக்குல போடாதன்னு சொன்னா பகுத்தறிவாமா!!!

இது! இவருக்கு தேசபக்தி ஜல்லியா தெரியுது!!

லக்கிலுகின் கண்டுபிடிப்புகள்:

பாராளமன்றம் தாக்க இந்தியாவே சதி செய்தது! அதற்கு அப்சலை அவருக்கே தெரியாம உபயோகிச்சிடாங்களாம். இந்தியா நீதிமன்றங்கள்(Sessions Courts, High Court, Supreme Court வரை) பொய்வழக்குன்னு தெரிஞ்சும் அப்சலுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்காம்! அப்சல் ஒரு பாவம் இந்திய குடிமகனாம்!

கதையின் கரு: அப்சல் குரு நல்லவனா இருந்தா எப்படி இருக்கும் என்று எண்ணியதன் விழைவு.

கதைக்கு Referrence: அப்சலின் மனைவி எழுதியதாக சொல்லப்படும் கடிதம் என்று சுவனப்ரியன் எழுதிய பதிவு (லக்கிலுக் Googleல தேடினேன்னு சும்மா அள்ளிவிடுறாரு!!) விடுங்க விடுங்க இப்பவெல்லாம் விளம்பரத்துக்கு தானே மதிப்பு, உண்மைக்கு அல்லவே!!!

லக்கி லுக்கின் கதையும் - சில அலசல் & கேள்விகள்:

//டெல்லியில் மருத்துவம் படித்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு JKLF (ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி) இயக்கத்தில் இணைந்தார். தீவிரவாதப் பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு சென்றவர் அங்கே 2 மாதம் தங்கியிருந்திருக்கிறார்//

பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெறுவது என்பது அரசியல் ஆர்வமா??

//திருந்திய பின்பே அப்சலுக்கு சத்திய சோதனை நேர்ந்தது. காஷ்மீரில் மனம் திருந்திய தீவிரவாதிகளுக்கு அரசு வேலை கிடைக்காது. //

சரனடைந்த தீவிரவாதிகளுக்கு சுமார் ரூ 1.5 லட்சம் Fixed Deposit + ரூ இரண்டாயிரம் பிரதி மாதம் வழங்கப்படுகிறது. ஆதாரம் ட்ரிபூன் இந்தியா. அரசு வேலை மட்டும் தான் வேண்டுமா??!!

//அந்த மிருகத்தின் பணவெறியைத் தணிக்க முடியவில்லை. தன் மனைவியின் நகையை விற்று பணத்தைக் கொடுத்திருக்கிறார். அப்ஸல் புதியதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தைக் கூட அந்த மிருகம் இரக்கமில்லாமல் பிடுங்கியிருக்கிறது.//

அத்துணையும் அந்த பாதுகாப்பு படை DSP வாங்கிவிட்டால் எப்படி டெல்லி வந்து பொழப்பை நடத்தினார், எப்படி லாப்டாப்(Laptop), கார் வாங்கினார் !!! தாங்க முடியாத பிரச்சனை வரும்போது ஏன் கோர்ட்டுக்கோ அல்லது போலீஸிடமோ ஏன் போய் புகார் செய்யவில்லை!!

//இடம் மாறப்போவதை அறிந்த திராவிந்தர் சிங் அவரை அழைத்து தனக்கு வேண்டிய ஒருவரையும் டெல்லிக்கு உடன் அழைத்துச் செல்லவேண்டும் என மிரட்டியிருக்கிறார். திராவிந்தர் சிங்குக்குக்கு வேண்டிய ஒருவர் தான் முகம்மது. நாடாளுமன்றத் தாக்குதலின் மூளை.//

அப்ப இந்திய அரசே பாராளமன்றத்தை தாக்குவதற்காக முகமதை அனுப்பினார்கள்ன்னு சொல்லறீங்களா?? இல்ல J&K அரசு அனுப்பினாங்கன்னு சொல்லறீங்க?? இல்ல அந்த பாதுகாப்பு படை DSPக்கு தீவிரவாத தொடர்பா??

//இந்த நேரத்தில் அப்ஸலும், காஷ்மீர் அதிரடிப்படை டி.எஸ்.பி. திராவிந்தர் சிங்கும் பலமுறை மொபைல் போனில் பேசியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//

ஏன் இந்த போனில் பேசிய ஆதரத்தை எடுத்துக்காட்டமுடியுமே. ஏன் அவருடைய வக்கீல் எந்த கோர்டிலும் எடுத்துச்சொல்லவில்லை!!!?? அதிரடியா எழுதினால பாதுகாப்பு படை அதிரடிபடையா மாறாது லக்கிலுக்.

//மனம் விரும்பி அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக எந்த சாட்சியமும் இல்லை. அவர் அழைத்து வந்த முகமது நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபடப்போகிறார் என்று அப்ஸலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.//

எதுக்காக தன் பெயரில் பாராளமன்ற தாக்குதலுக்கு உபயோகப்படுத்திய காரை(DL-03 CJ-1527, purchased by Afzal from Lovely Motors in Karol Bagh, Delhi) வாங்கினார், தெரிய வாய்ப்பே இல்லாமலா கரெக்டா தாக்குதல் துவங்கும் போதும், முடிந்தவுடனும் அப்சல் தன்னுடைய மொபைல்(9811489429) முகமதுக்கு(9810693456) போன் செய்தார் ?? தாக்குதலுக்கு முன் அப்சல் முகமதுக்கு ஏன் பல முறை போன் செய்தார், போதாகுறைக்கு சரியாக ஒரு நிமிடத்துக்கு முன் தாக்குதலில் ஈடுப்பட்ட ஒரு தீவிரவாதி அப்சலுக்கு போன் செய்திருக்கிறார், அதே போல் அப்சலும் அந்த தீவிரவாதியை தன் செல்போனிலிருந்து அழைத்திருக்கிறார்!!! சும்மா டைம் பாஸ்க்கு கால் பண்ணியிருப்பரோ??!! நீதி மன்றத்தில் அவர் இதற்கெல்லாம் பதில் (உண்மையை) சொல்லமுடியாததால் தான் அவருக்கு தூக்கு.

//அந்த மொபைல் போனின் சிம்கார்டே (மொபைல் எண் 9811489429) டிசம்பர் 4ல் தான் வாங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பில்லும் அப்ஸலின் வசம் இருக்கிறது//

அந்த பில் ஏன் கோர்டில் காண்பிக்கவில்லை!!!?? போன் கால் செய்தற்கான ஆதாரம் சம்மந்தப்பட்ட தனியார் செல் நிறுவனம் தந்தது!!! அவர்களும் பொய் சொல்லறாங்களா? உங்க கதைப்படி அப்சலும் அவர் மனைவியும் மட்டும் தான் உண்மையை சொல்லறவங்க!!! காமெடிக்கு ஒரு அளவுக்கு இருக்கட்டும் லக்கிலுக்.

//அந்த பூச்சுற்றலையும் சந்தோஷமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.//

லக்கி, நீதி மன்றம் ஒன்னும் நீங்க சொல்லறாமாதிரி கோமாளிகள் அல்ல! எல்லா ஆதாரங்களும் அலசி ஆராய்ந்து தான் இந்த முடிவை எடுத்தது. நான் சொல்லறது தவறு என்று நினைத்தான் RTI மூலம் ஆதாரம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்! மூளை சலவை செய்த தீவிரவாதிமாதிரி பேசாதீங்க லக்கி.

//நீதிமன்றத்தில் அப்ஸலின் சார்பாக வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதுமாதிரி நேரத்தில் நீதிமன்றமே குற்றவாளிக்கு ஒரு வக்கீலை நியமிப்பது வழக்கம். அந்த நடைமுறை அப்ஸலின் வழக்கில் மட்டும் மீறப்பட்டது ஏனோ?//

தவறான வாதம் எல்லா கோர்ட்டிலும் அவருக்கு வாதாட வக்கீல் இருந்தார்கள். அப்சல் தரப்பு சொல்லும் வாதம் ராம் ஜெத் மலானி மாதிரி நல்ல கிரிமினல் ... சாரி கிரிமினல் லாயர் கிடைக்கவில்லை என்பது. கீழ் மட்ட கோர்டில் 8 வக்கீல்களை இவர் வாதாட அழைத்தார் ஆனால் யாரும் வாதாடவரவில்லை (சாட்சிகள் எல்லாம் இவருக்கு எதிரா பலமா இருக்கு என்பதால்!!) ... ஆனாலும் ஒரு வக்கீல் நிச்சயமாய் வாதாடினார் என்பது உண்மை!! பின்னர் உயர் நீதி மன்றத்தில் Colin Gonsalves அப்சலுக்குகாக வாதாடினார், Colin Gonsalves நன்றாக வாதாடியதாக் பாராட்டி ராம் ஜெத் மலானி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதி மன்றத்தில் காமினி ஜெய்ஸ்வால் என்ற வக்கீல் வாதாடினார்கள். இந்தனை பேர் முயற்சி செய்தும் நீதி மன்றம் அவரை துக்கிலிட வேண்டும் என்று சொல்கிறது என்றால் அதில் உள்ள உண்மையை பாருங்க சார்?!! சும்ம கோமாளித்தனமா பதிவு போடாதீங்க.

இன்னும் காமெடி என்ன வென்றால் உச்ச நீதி மன்றத்தில் வாதாடிய காமினி ஜெய்ஸ்வால் வாதாடி தோற்றப்பின் சொன்னது இது

“We are not against the verdict, we just find the sentence too harsh,”

அப்படின்ன என்ன அவர் செய்தது தவறுதான், ஆனால் தூக்கில் போடாதீங்க!!!

//தன்னுடைய மொபைல் எண்ணுக்கு காஷ்மீர் மாநில போலிஸ் அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்திலும், போலிஸ் விசாரணையிலும் அப்ஸல் கூறியிருக்கிறார். அதுகுறித்து போலிசார் எந்த விசாரணையும் நடத்தாது ஏன்? விரும்பத்தகாத உண்மைகள் ஏதாகினும் வெளிவந்துவிடப் போகிறது என்பதாலா?//

ஆதாரம் இருப்பின் நிரூப்பிக்கப்பட்டுருக்குமே! சும்ம கட்டுக்கதை மச்சி!!! இங்கு கோர்ட் சர்வாதிகளால் நடத்தப்படுவது இல்லை. 5 நீதிபதிகள் அலசி எடுத்து, ஆராய்ந்து குற்றம் நிரூப்பிக்கப்படுகிறது!! ஆதாரங்கள் நிரூப்பிக்க அனனவருக்கு அவகாசம் கொடுக்கப்படுகிறது.

//அப்சலுக்கு மரணதண்டனை வழங்கிய நீதிமன்றம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று தீர்ப்பு எழுதியிருக்கிறது.//

இது 100% தவறான கருத்து.

“Circumstances established beyond reasonable doubt that Afzal was a party to the conspiracy and had played an active part in the various acts done in furtherance of the conspiracy”

இந்தியாவின் Constitutional Infrastructure , அதன் முக்கியத்துவம் கருத்தில் கொண்டே மரண தண்டனை வழங்கப்பட்டது.

//ஒருவேளை நான் மரணமடையவேண்டும் என்று இறைவன் விரும்பினால், இறைவனின் தீர்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்" என்கிறார் அப்ஸல்.//

தியாகி அப்சல் இப்ப மட்டும் இறைவனின் தீர்ப்பை வேண்டாம் என்கிறாரோ?

//அப்ஸல் இஸ்லாமியர் என்பதால் அவரை தூக்கில் போடவேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. தீவிரவாதத்தை அடக்க இதுதான் சிறந்தவழி என்பது அவர்கள் எண்ணம். தாங்கள் "தேசபக்தி கொண்டவர்கள்" என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்வதை மட்டும் செய்யாத சில தேசியவியாதிகளும் இவர்களோடு சேர்ந்து ஜால்ரா அடித்து வருகின்றனர்.//

தீவிரவாதிகளுக்கு ஜல்லி அடிப்பது மட்டும் நல்லதா!!!! ஹிந்துத்வாவாதி எதற்காக கொடிப்புடிக்கிறார்கள் என்றும் தெரியும். J&K முதலமைச்சர் ஓட்டுக்காக தீர்ப்பை எதிர்க்கிறார் என்றும் தெரியும். அது அவர்கள் விருப்பம்.

ஆனால் ஒரு இந்தியன் என்ற முறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் ஏனெனில் இது போன்ற செயல்களால் நாட்டின் இறையாண்மையில் கைவைத்தால் உயிர் மிஞ்சாது என்று தெரிந்து கொண்டால் தீவிரவாத்தின் தீவிரம் அடங்கும். இது உங்களுக்கு ஜால்ரா என்றால் அதை உங்கள் தேசியப்பற்றை அழகாக எடுத்துச் சொல்கிறது.

பொட்டி பழசு:

அப்சலின் மகன்//இடையில் அப்ஸலின் மரணதண்டனைத் தீர்ப்பால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அவரது ஏழு வயது மகனும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான் என்பது ஒரு சோகமான பெட்டிச் செய்தி.//

இது அடுத்த ஜனாதிபதியின் கருனையை பெற ஏவப்பட்ட அஸ்திரமாகத்தான் எனக்கு தெறிகிறது. ஒரு சராசரி ஏழு வயது சிறுவனுக்கு தற்கொலை என்றால் என்ன வென்று தெரிவதே பெரியவிசயம், அப்பறம் தானே தற்கொலை முயற்சி.

பி.கு: இந்தியாவின் நீதிமன்றத்தை கேலிகூத்தாக்க இது போன்ற தீவிரவாத ஆதரவாளர்கள் சூப்பர் ஜல்லி அடிக்கலாம், ஆனால் இந்த அறிவுஜீவிகளுக்கு நான் கேட்கும் ஒரே கேள்வி, அப்சலுக்கு ஆயுள் தண்டனை தந்தால், மீண்டும் ஒரு இந்திய விமான IC814 கடத்தல் + 100 பயனிகள் தலைக்கு பதில் அப்சலின் விடுதலை என கோரிக்கை வாராது என்று உங்களால் அடித்து சொல்லமுடியுமா??

அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!

ஓணம்இதை நான் சொல்லவில்லை JKLF என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்ணனியின் தலைவர் சொல்லியிருக்காரு: "Afzal must be given another chance. I sure that he will get complete support from all quarters and will be pardoned."

எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வைக்க ஒரு chance கேட்கிறாரோ? அடப்பாவிகளா? அந்த complete support எதுக்கு? இப்படி பப்ளிக்கா பிரஸ் மீட்டிங் போட்டு கேக்கற அளவுக்கு இந்தியாவில சுதந்திரம் இருக்குடா சாமி.

இந்த கேடு கெட்ட திவிரவாதிகளை காப்பாற்ற வரும் மனித உரிமை காப்பாளர் என்ற பெயரில் வரும் ___ களை என்ன சொல்லறது. இந்த அஃப்சல் நாட்டின் தலை நகரில் அதுவும் நம்ம பாராளமன்றத்தில் தாக்குதல் நடத்தி பலரை கொல்ல சதி செய்தவன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளவனை ஆதரிக்கும் இந்த ம.உ.கா!!! இந்த அப்சலின் உயிரை எவ்வளவு முக்கியமோ அது போல தானே இவன் கொன்ற நம் பாதுகாப்பு படை நன்பர்களின் உயிரும். அப்பொழுது எங்க போனாங்க இந்த மனித உரிமை காப்பாளர்கள்.

இந்தியாவின் இறையாண்மையை தொட்டு விளையாடினால் தூக்கு தான் கெதி என்று நாம் உரக்க சொல்லவேண்டிய நேரத்தில் தீவிரவாதிக்கு ஆதரித்து அவர்களுக்கு முஷரப் கொடுத்த சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற பட்டத்தை எடுத்துக்கொண்டு இங்கு சப்(ப)போர்ட்டுக்கு வரும் குழலி போன்றவர்கள், தங்கள் வீட்டில் தீவரவாதிகளில் செயல்கள் எட்டும் வரை ஆதரிப்பார்கள். தன் வீட்டில் ஒருவரை இந்த தீவிரவாதி கொண்டிருந்தால் என்ன செய்திருப்பார்? அப்பொழுதும் குழலி, இந்த அப்சலை ஒரு சுதந்திர போராட்ட வீரர் (தியாகி) என்று சொல்வாரா?

ஒன்னு மற்றும் உண்மை இவனை போன்ற தீவிரவாதிகளை பிடித்தால் நம்ம விஜயகுமார் (கமிஷ்னர் தல!!) ஸ்டைலில் பொட்டுத்தள்ளிவிட்டா இந்த மாதிரி போராட்டமும் இருக்காது! அவனை கைது செய்து கோர்ட்டு, அவன் பாதுகாப்பு, அவன் சாப்பாடு என்று அவனுக்கு ஆகும் எல்லா செலவும் மிச்சம்.