இந்த கொலைக்கு யார் காரணம்?

இன்றய இந்தியா இவருக்கு கொடுத்த பரிசு - பசி (தற்)கொலை. இன்று இந்த செய்தி IBNல பார்த்து, நொந்து போனேன்.

பாட்னா தொடர் வண்டி நிலையத்தில் ஒரு ரெயில் வண்டியில் இவர் பசியின் கொடுமை தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் எழுதிய இங்கு(பாட்னா ரெயில் நிலையத்தில்) தற்கொலை கடிதத்தில் கடந்த பதிமூன்று நாட்களாக உண்ண உணவின்றி அலைந்து, தண்ணீர் மட்டும் பருகி வாழ்ததாகவும், தன்னை யாரும் பார்க்கவில்லை, யார் என்றும், எங்கிறுந்து வந்தாய் என்று கேட்க ஆள் இல்லை! யாரும் உணவு கேட்டும் தரவில்லை என்று எழுதி இருக்கிறார்.

இவர் யார்? எங்கிருந்து வந்தார்? எனற தகவல் இல்லை. இதை பார்த்த போது, இதை தடுக்க வழியே இல்லையா? இந்தியாவை வல்லரசாக முயற்சிப்பதாக சொல்லும் இந்த அரசியல்வாதிகள், இந்த பசி தற்கொலைகளை ஒழிக்காமல் அங்கு அடைய முடியாது என்று தெரியவில்லையா?? பதிமூன்று நாட்களாய் தனி ஒரு மனிதன் உண்ண உணவின்றி தற்கொலை செய்யும் போது பல்லாயிரம் கோடி வெளிநாட்டு டாலர்கள் சேமித்து வைத்து என்ன செய்ய போகிறார்கள்?? டாலர் சேர்த்து வைத்து, மக்களையும், விவசாயிகளை தற்கொலைக்கு வழிநடத்தி செல்வது தான் வல்லரசின் வேலையா?

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

- திருக்குறள்


"The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth. "

இந்த கொலைக்கு யார் காரணம்?!! இந்த பட்டினி சாவுகளுக்கு ஒரு விடிவு காலம் என்று வரும்??

நன்றி: IBN Live

20 comments:

said...

கொடுமை

:(

Anonymous said...

இதை எல்லாம் ஏன் எழுதுகிறீர்கள்?

ஜெய்ஹிந்த் என்று ஒரு சத்தம் போட்டால் இந்த பிரச்சினை எல்லாம் தானே அடங்கிவிடும்.

said...

விதர்பாவில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். அதையே மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

said...

அனானி நீ யாருன்னு எனக்கு தெரியும். இந்தியாவில் ஜெய்ஹிந்த் சொன்னால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நான் சொன்னேனா? உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?

said...

தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்- பாரதி

புட் கார்ப்பரேஷனில் உணவு மக்குகிறது! 13நாள் பசிக்கொடுமை யப்பா! வீட்டுக்குப் போனால் உணவு உத்தரவாதமாக உண்டு என்ற உண்மையிலும் சிலமணிநேரம் பசிக்கொடுமையே தாளமுடிவதில்லை.

ரயில் நிலையத்துக்கு பதில் கோவில்பக்கம் பெரியவர் ஒதுங்கியிருந்தா ஏதாவது பிரசாதமாவது சாப்பிட்டுப் பிழைத்திருக்கலாம்!

பசியால் உணவின்றி இறப்பது மிக வருத்தமான விஷயம்.

said...

Hariharan,

இன்னைக்கு போட்ட மாலை ஆன காசு இருந்திருந்தால் He would have survived today

Anonymous said...

ஜெய்,

வல்லரசாவேன் என்பதை விட தன்னிறைவு பெற்ற நாடாக ஆசைப்படுதலே நலம்.

அரசியல்வாதிகளை திருத்த வேண்டுமானால் சமூகத்தின் எதிர்பார்ப்பும் மாற வேண்டும்.

உதாரணத்திற்கு மழை பெய்தாலும் சாவு. மழை பெய்யாவிட்டாலும் சாவு.
மழை பெய்யுங்கால் சேர்த்து , பெய்யா பொழுது பயன்படுத்தும் அமைப்பை செய்பவன்தான் தங்கள் பிரதிநிதி என்று சொல்வதில்லை.மதம்,
சாதீ, இனம், மொழி என்று பார்த்து ஓட்டு போட அவன் இரண்டு பொழுதிலும் ஒரு மலர் வளையம் வாங்கி அவனுடைய கடமையை முடித்துக் கொள்கிறான்.

விழிப்புணர்வு பெற வேண்டும். தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ற உரிமைகளை நோக்கி செல்ல வேண்டும்.

மதம், இனம், சாதீ என்று கட்டி அழுதுக் கொண்டிருந்தால் கடைசி கோவணமும் காணாமல் போகலாம்.

தனிமனிதன் பசி அறிந்து போக்க வேண்டுமானால் அதற்கு அரசின்
சமூக நலத் துறை அமைப்பில் மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும்.

வெளி நாட்டு டாலர் சேமிப்பை விற்று தனிமனித சாப்பாடெல்லாம் வாங்க சொல்வது நடைமுறை சாத்தியமல்ல.

தொழில் தொடங்க சுலபமான வழிமுறைகள், வேலைவாய்ப்பு, tax base அதிகம் செய்வது , திறந்த முறை வரிப்பண செலவு என்று படி படியாகதான் முன்னேற வேண்டும். இதையெல்லாம் கேட்க தெரிய வேண்டும்.

அதில்லாமல் ராமருக்கு கோவில், வந்தே மாதரம் பாடுவதா வேண்டாமா,
குண்டு வெடிப்பனுக்கு கொடிபிடிப்பது, வன்முறையாளனை வளர்த்து விடுவது போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்த்து கை தட்டி கொண்டிருந்தால் இது போல் செய்திகள் வரும் போது பார்த்து வருத்தப்பட்டு அப்புறம் சானல் மாற்றி
லூஸ் பெண்ணே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

said...

கொடுந்துயர் இது.
மேற்குலக நாடுகளில் உள்ளது போல், உணவு வங்கி (food bank) போன்ற திட்டங்கள் இந்தியாவில் இல்லையா? இல்லாவிட்டால் உருவாக்குவது நல்லது.

said...

ஐயா, இது மிக வருத்தமான விஷயம். ஆனால் கோபித்துக் கொள்ளாதீர்கள். இந்த சாவுக்கு இதே மனிதர் பொறுப்பாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். இதுவே முதல் சாத்தியக் கூறு. இந்நாட்டில் உயிர்வாழும் அத்தனை உயிர்களும் இதற்கு சாட்சி.

//இந்த பட்டினி சாவுகளுக்கு ஒரு விடிவு காலம் என்று வரும்??//

இந்த நிகழ்வுகள் நிகழாமல் போக:

நல்ல கல்வி. அனைவருக்கும் கல்வி. அதன் மூலம் நல்ல அறிவு. அதன் மூலம் சுயச்சார்பு. அதன் மூலம் நல்ல அரசாங்கம். இவை வேண்டும்.

Anonymous said...

Please Publish this...

I cannot understand is...
1. Request some help by any help organization.
2. He would have tried to get some food from Temple (Diwali time)/Church/Mosque (Ed Mubarak time), People really give food on these days. This is were annathanam started.
3. Atleast he would have begged to survive.

So This person may be died by his own interest (not begging) or his lazy person.

We are all know, the stocked food grains not distributed in time but this is not related to no food death in railway station.

said...

:-(((((((((

said...

//தற்கொலை கடிதத்தில் கடந்த பதிமூன்று நாட்களாக உண்ண உணவின்றி அலைந்து, தண்ணீர் மட்டும் பருகி வாழ்ததாகவும், தன்னை யாரும் பார்க்கவில்லை, யார் என்றும், எங்கிறுந்து வந்தாய் என்று கேட்க ஆள் இல்லை! யாரும் உணவு கேட்டும் தரவில்லை என்று எழுதி இருக்கிறார்.
//
1. தற்கொலை கடிதம் ஒன்றைப் பொறுமையாக எழுதக் கூடியவர்!
2. தன்னை யாரும் பார்க்கவில்லை என்று புலம்ப முடிந்தவர்
3. யார் என்றும் எங்கிருந்து வந்தாய் என்றும் யாராவது கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவ - ருக்குத் தன் வாழ்வின் மீது அக்கரை இல்லாமல் போனது ஏன்?

தன் மீதான நம்பிக்கை இல்லாமல் செய்தது எது? உணவு கேட்டு இரைஞ்சுவதை விட போர்ட்டர் வேலையாவது செய்திருக்கலாமே?

ஒரு அனானி சொல்லி இருப்பது போல், கோயில்கள், சர்ச்சுகள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் கூடப் போய் பார்த்திருக்கலாம்.. தொடர்வண்டி நிலைய அதிகாரியிடமாவது போய் முறையிட்டிருக்கலாம். முயலாமை, தன்னம்பிக்கை இன்மை தான் இவரது இறப்புக்கு முதல் காரணம்.

அடுத்த காரணம், ரயில்வே அதிகாரிகளும் தான்.. தொடர்ந்து பதின்மூன்று நாட்களாக தொடர்வண்டி நிலையத்தில் அலையும் ஒரு அன்னியரை அடையாளம் கண்டு ஏன் என்று கேட்க ஆளில்லை என்றால், பட்டினிச் சாவுகளை விடுங்கள்(அதுவும் முக்கியம் தான், ஆனால் அதற்குத் தேவை முதலில் அந்த மனிதரின் முயற்சி), குண்டு வெடிப்பு போன்ற மக்கள் விரோத நிகழ்வுகளை இவர்கள் எப்படித் தடுக்கப் போகிறார்கள்!

said...

பொன்ஸ்,

//உணவு கேட்டு இரைஞ்சுவதை விட போர்ட்டர் வேலையாவது செய்திருக்கலாமே?//

போர்ட்டர் வேலை நாமாக போய் செய்யமுடியாது மா!! அதற்கும் ஒரு சங்கம், விதிமுறைகள் என பல உள்ளது. பத்து நாள் சாப்பிடாத ஒருத்தன் எப்படி இந்த வேலையை செய்யமுடியும். ஒரு வேளை சாப்பிடவில்லை என்றாலே கண்ணைக்கட்டிக்கிட்டு வருது... 13 நாள் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அவருடைய முயற்சியிண்மையும் ஒரு காரணம், இல்லை என்று சொல்லவில்லை!! இருந்தாலும் நம்ம ஜெயபால் சொல்லுவது போல் உணவு வங்கி இருந்திருக்குமேயாயின் இந்த சாவு தவிர்க்கப்பட்டிருக்கும், ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது அந்த ரெயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படை போலீஸ்சார் என்னவென்று கேட்டிருந்தாலும் அந்த சாவை தவிர்த்திருக்கலாம்.

இதைவிட கொடுமை மஹாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம் விவசாயிகளின் நிலைமை. அவர் முயற்சி எடுத்தும் விவசாயம் செய்தும் பலன் கிடைக்கும் நேரத்தில் ஏதாவது காரணத்தால் பயிர் இழந்து கடன் பட்டு வருமை தாங்க முடியாமல் சாவது. இவர்களை காப்பது ஒரு அரசின் கடமை தானே??!!

Anonymous said...

//அனானி நீ யாருன்னு எனக்கு தெரியும். இந்தியாவில் ஜெய்ஹிந்த் சொன்னால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நான் சொன்னேனா? உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?//

நம்ம அதிஷ்ட பா... தானே?...
ரொம்ப நொந்து போய்ட்டாருபோல?..

said...

தனி மனிதனுக்கு உணவில்லையேல் சகத்தினை அழிப்போம்....பாட்டு மட்டும்தானா?

said...

இது போன்ற இழப்புகளுக்கு நீங்கள், நான் மொத்த சமூகமும் தான் காரணம் ஜெய்.

இதை கஷ்டப்பட்டு மறப்பதற்குள் இது போன்று இன்னொரு நிகழ்வு தொடரும்.

அதை மறக்க, அடுத்து இன்னொரு நிகழ்வு.....

இந்தியாவுக்கு, மக்களுக்கான சாபக்கேடு
இது, இந்த அவலம் தொடரும்....

said...

ஐயா,
இது கொலையுமல்ல,யாரும் காரணமும் இல்லை.இது தற்கொலை. இதற்கு காரணம் தன் முனைப்பு அற்றுப்போன அத் தனி நபர்தான்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

said...

ஐயா முரளி,

//இது கொலையுமல்ல,யாரும் காரணமும் இல்லை.இது தற்கொலை.//

பட்டினி சாவு ஒழிக்கப்படவேண்டும் என்பதே என் கருத்து. தள்ளாத வயதில் அந்த கிழவன் உழைக்கவில்லை என்ற வாதம் ஒத்துக்கொள்ளும் படியாக இல்லை. அரசு இதற்கு ஒரு வழி செய்யவேண்டும் என்பது என் கருத்து.

நன்றி,

ஜெய்

said...

ஜெய்

முரளி சொல்ற அவரா செய்து கொண்ட தற்கொலை நிலைக்கு அந்த முதியவரை தள்ளியது யாருங்க.

நம்ம சமூகம் தானே

said...

//முரளி சொல்ற அவரா செய்து கொண்ட தற்கொலை நிலைக்கு அந்த முதியவரை தள்ளியது யாருங்க.

நம்ம சமூகம் தானே//

எனக்கு அது தாங்க தோணுச்சு! அதனால தான் அதை கொலைன்னு சொன்னேன்.