Posts

Showing posts with the label இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடும் செந்தழல் ரவியின் பதிவும்....

செந்தழல் ரவியின் பதிவை பார்த்த பிறகு அதன் தொடர்ச்சியா, இதே விசயம் குறித்து பல முறை குழலியுடன் வாதிட்டபோதும் அவர் ரவியின் பதிவில் சொன்ன அதே மாதிரியான வாதங்களை தான் சொன்னார். இங்கு என் பங்கிற்கு என் எண்ணங்களை முன்வைக்கிறேன். என்னை பொருத்த வரை கல்வி+ பொருளாதார நிலை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த விசயம் தான். இட ஒதுக்கீட்டு என்ற பிரச்சனை வந்த உடன் நம்ம மக்கள் எப்பவும் பிராமணர்களை சாடுவது தப்புன்னு தோனுது! கிரீமி லேயர் ஒதுக்கப்பட்டால், அந்த மிச்ச இடங்களில் உள்ளே வரப்போரவங்க ஐயர் இல்லை சாமி! நம் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள மக்கள் தான், அதாவது டி-கிரேடு அரசு பணியாளரை விட கீழ் மட்டத்தில் உள்ளவன், அவனும் தாழ்த்தப்பட்டவன் தான். நம்மால் நம்ம ஆட்கள் மேலே வருவதே பிடிக்கவில்லை என்பது கசப்பான உண்மை! அதற்கு வாதங்கள் பல வைத்து எல்லாவராலும் முடியும். குழலி சொல்லற மாதிரி ஒரு தலைமுறை தான் முன்னுக்கு வந்திருக்கு என்றால், இன்னும் அந்த பகுதி பக்கம் கூட வர முடியாம, கூலி வேலை செய்து, இட ஒதுக்கீட்டின் டேஸ்ட் கூட பார்க்காதா எத்தனை பெரிய சமுதாயம் காத்திருக்கு!!!?? குடிசை பகுதியிலிருந்து ஒரே ஒரு மாணவன் மருத்து...