இட ஒதுக்கீடும் செந்தழல் ரவியின் பதிவும்....

செந்தழல் ரவியின் பதிவை பார்த்த பிறகு அதன் தொடர்ச்சியா, இதே விசயம் குறித்து பல முறை குழலியுடன் வாதிட்டபோதும் அவர் ரவியின் பதிவில் சொன்ன அதே மாதிரியான வாதங்களை தான் சொன்னார். இங்கு என் பங்கிற்கு என் எண்ணங்களை முன்வைக்கிறேன்.

என்னை பொருத்த வரை கல்வி+ பொருளாதார நிலை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த விசயம் தான். இட ஒதுக்கீட்டு என்ற பிரச்சனை வந்த உடன் நம்ம மக்கள் எப்பவும் பிராமணர்களை சாடுவது தப்புன்னு தோனுது! கிரீமி லேயர் ஒதுக்கப்பட்டால், அந்த மிச்ச இடங்களில் உள்ளே வரப்போரவங்க ஐயர் இல்லை சாமி! நம் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள மக்கள் தான், அதாவது டி-கிரேடு அரசு பணியாளரை விட கீழ் மட்டத்தில் உள்ளவன், அவனும் தாழ்த்தப்பட்டவன் தான். நம்மால் நம்ம ஆட்கள் மேலே வருவதே பிடிக்கவில்லை என்பது கசப்பான உண்மை! அதற்கு வாதங்கள் பல வைத்து எல்லாவராலும் முடியும். குழலி சொல்லற மாதிரி ஒரு தலைமுறை தான் முன்னுக்கு வந்திருக்கு என்றால், இன்னும் அந்த பகுதி பக்கம் கூட வர முடியாம, கூலி வேலை செய்து, இட ஒதுக்கீட்டின் டேஸ்ட் கூட பார்க்காதா எத்தனை பெரிய சமுதாயம் காத்திருக்கு!!!?? குடிசை பகுதியிலிருந்து ஒரே ஒரு மாணவன் மருத்துவம் அல்லது பொறியில படிப்பு சேர்த்தால், அது இன்றும் ஒரு பெரிய செய்தியா, உலக அதிசயமாக, எல்லா பத்திரிக்கையிலும் வரும் நிலை தான் உண்மை! அவர்களுக்கு ஏன் நாம் வழி விடக்கூடாது!? இந்த நிலை மாற நிச்சயம் இட ஒதுக்கீட்டு கொள்கையில் ஒரு Fine Tuning தேவை! அதை தான் நம்ம உச்சநீதி மன்றம் சொல்லுது என்று நினைக்கிறேன். கிரீமி லேயரால் லாபம் பிராமனர்களுக்கு அல்ல என்ற உண்மை ஏன் மறைக்கப்படுது!

குழலி சொல்லும் 4 தலைமுறை வளர்ச்சி:

1. கூலி வேலை, Wine ஷாபில் சரக்கு வாக்கிதருவது போன்ற வேலை (தலைமுறை ஒன்று)
2. டி கிரேடு அரசு பணியாளர் (தலைமுறை இரன்று)
3. IAS, IPS போன்ற வேலை (தலைமுறை மூன்று)
4. IIT, IIM போன்றவைகளில் படித்து வெளிநாட்டு வேலை (தலைமுறை நான்கு)

ஒவ்வொரு தலைமுறையையும் இந்த நான்கு ஏணி ஏற்றிவிட தான் இட ஒத்துக்கீடுன்னு சொல்லும் குழலி போன்றவர்கள், ஒரு கணக்கை விட்டு விட்டார்கள் போல, ஒரு குரூப்பை முன்னேற்ற 33 X 4 = 132 வருடம் தேவை படுகிறது , அப்ப இன்னும் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும் அடிமட்டத்தில் வாழ்ந்து வரும் கூலித்தொழிலாளி?? இப்படி போனால் அடிமட்டத்தில் உள்ளவனை எப்ப இந்த இட ஒதுக்கீடு பயன் கொடுக்கும்! இப்படி போனால் இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் குடிசைப்பகுதி மக்கள் படித்து மேலே வருவது கடினம் தான் :( , அன்று வரை நம் அரசியவாதிகள், அவனை ஓட்டு வங்கியாக வைத்து கொள்ளையடிப்பது நடந்துக்கிட்டே தான் இருக்கும். அதனால தான் நான், இட ஒதுக்கீடுக்கொள்கையில் ஒரு Fine Tuning தேவை என்று சொல்கிறேன்.

தான் முன்னுக்கு வந்தாலும், கீழே உள்ளவனை மேலே வரவிடாமல் தன்னை சுற்றியே இந்த இட ஒதுக்கீட்டு லாபத்தை வைத்துக்கொள்வதும் ஒரு வகை பிரமணீயம் தான்.

Comments

Anonymous said…
இதுபோன்றதொரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...

ஆனால் உங்கள் பதிவில் நீங்கள் சொல்லி இருப்பதில் உள்ள இன்னோரு உண்மை உறைக்க வேண்டுமே எல்லோருக்கும்...

இட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...

ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...

என்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று...

பத்துலட்சம் பணம் உள்ளவன் ஏழையா ? அவனுக்கு கவருமெண்டு கோட்டாவில் IIT / IIM வேண்டுமா ? அவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறானா ? பத்து லட்சத்தை வைத்து கவுரவமான சுய தொழில் ஆரம்பித்து அம்பானி / டாட்டா / பிர்லா ரேஞ்சுக்கு முன்னேறலாமே...அம்பானியும் அசிம் பிரேம்ஜியும் என்ன IIM இலா மேனேஜ்மெண்ட் படித்தார்கள் ?

தன்னை ஒரு கூலித்தொழிலாளி என்று கூறி மெடிக்கல் காலேஜ் சீட்டை மகளுக்கு வாங்கிய மாணிக்கவாசகம் IG ஆப் போலீஸைத்தான் நான் கிருமி லேயர் என்கிறேன்...D பிரிவு ஊழியரை அல்ல...

பார்ப்பான் வீட்டில் அம்மா அக்கா அத்திம்பேர் எல்லாம் படித்திருப்பார்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் குடும்ப சூழல் இருப்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கிறார்கள்...ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகள் படிக்கும் சூழ்நிலை இல்லை...சதா சர்வகாலமும் குடித்துவிட்டு வரும் அப்பா எங்கே படிக்க விடுகிறார் என்று கேட்கிறார்கள் மதிப்புக்குரிய பதிவர்களும் என்னுடைய நன்பர்களும்...

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது FIT for ஸுர்வைவல் வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...

திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?

இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...

வீ த பீப்புள் ஆகிய நீர் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...
Anonymous said…
yes - i agree to - shoud not be policised - but society -
creamy layer - it is a fact
arun
Anonymous said…
எங்கே என்னுடைய பின்னூட்டம்
//அதை தான் நம்ம உச்சநீதி மன்றம் சொல்லுது என்று நினைக்கிறேன். கிரீமி லேயரால் லாபம் பிராமனர்களுக்கு அல்ல என்ற உண்மை ஏன் மறைக்கப்படுது!
//
படிக்காத, கல்வி விழிப்புணர்வு இல்லாத குடும்பத்திலிருந்து ஒரே தலைமுறையில் ஹைஜம்ப் அடித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல இயலாது, படிப்பறிவில்லாத குடும்பத்திலிருந்து கிளார்க்காகவும், 'டி' கிரேட் பணியாளர்களாகவும் வெளிவருவார்கள் (என் தந்தை தலைமுறை இப்படித்தான் பெரும்பாலும் ), அதிலிருந்து அடுத்த தலைமுறை தான் அடுத்த உயர்கல்வி நிலைக்கு கொண்டு சேர்க்க முடியும், உயர்சாதியினர் இடஒதுக்கீட்டிற்கே ஆப்பு வைக்கும் எண்ணத்தில் தான் இதை தடை செய்ய சொல்கின்றனர், ஒயின்ஷாப்பில் ஊற்றிகொடுக்கவும், 'டி'க்ரூப் கிளார்க்காக்வும் தலைமுறையை நிறுத்திவிட்டு அய்யோ பாருங்கள் இடஒதுக்கீடு கொடுத்தும் ஐஐடியில் இத்தனை இடம் காலியாக இருக்கின்றது, கல்லூரி ட்ராபவுட் இத்தனை என்று ஓலமிட்டு இடஒதுக்கீட்டினால் பலன் இல்லை என்று மொத்த இடஒதுக்கீட்டிற்கும் ஆப்படிக்க நினைக்கின்றனர். பொருளாதாரத்தை க்ரீமிலேயருக்கு அளவுகோலாக கொள்ளச்சொல்லும் உயர்சாதி ஏழைப்பங்காளர்கள் முதலில் அவர்கள் சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு வழிவிடட்டும், எப்படியா? சுட்டியில் பாருங்கள் http://kuzhali.blogspot.com/2007/04/blog-post.html
http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.
//தான் முன்னுக்கு வந்தாலும், கீழே உள்ளவனை மேலே வரவிடாமல் தன்னை சுற்றியே இந்த இட ஒதுக்கீட்டு லாபத்தை வைத்துக்கொள்வதும் ஒரு வகை பிரமணீயம் தான்.//

ஜெய்,

பச்சை சுயநலம் என்பது இடதுசாரி முட்டாள்தன வார்த்தை உருவாக்கமான பிராமணீயம் எனும் வார்த்தையை விட மிகச்சரியானது.

இன்னொருவனை மலம்தின்னவைத்தால் திண்ணியத்தில் அதைச்செய்த சாதியீயம் என்று சொல்லப்படாதது ஏன்?

ஜனநாயக விரோதமாக தலித்தை பஞ்சாயத்துத் தேர்தலில் பதவியில் இருக்கவிடாமல் செய்வதை பாப்பாபட்டி, கீரிப்பட்டி கள்ளர்ஈயம் எனச் சொல்லப்படாதது ஏன்?

வடதமிழ்நாட்டில் வயக்காட்ட்டில் வேலைசெய்யும் பெண்களை, சிதம்பரத்தில் காவல்நிலையத்தில் கற்பழித்து வன்புணர்வு கொடுமைகள் செய்யப்படுவது வன்னியஈயம் எனக் குறிப்பிடப்படாதது ஏன்?

பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?

கெட்டதுக்கு சாதிசார் முத்திரை குத்தவேண்டும் எனில் பிராமண சாதியை மட்டும் செலக்டிவாக பிராமணீயம் என முத்திரை குத்துவது என்ன ஈயம்?

:-))) :-)))

சிரிப்பான் போட்டாச்சு! கோபம் இல்லை... சொல்லவேண்டும் என நினைத்ததைச் சொன்னேன்:-))
We The People said…
குழலி,

நீங்க சொல்லும் புள்ளிவிவரத்தில் நீங்க சொல்லும் சுயநிதி கல்லூரி OC கோட்டா வகை என்பது ஓபன் கோட்டா! அது எல்லா முன்னேறிய சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள் வரை அந்த கோட்டாவில் சேரலாம்! இதில நீங்க என்ன சொல்லவறீங்க?? இந்த இடங்கள் மேல் சாதிக்கு மட்டும் சொந்தமானது கிடையாதே குழலி??
We The People said…
குழலி,

அந்த ஓ.சி கோட்டாவில் எத்தனை பேர் FC மற்ற பிரிவினர்(BC MBC SC ST) எத்தனை என்று உங்களுக்கு தெரியுமா? அதை வைத்துத்தானே உங்க வாதம் சரியா இல்லையா என்று சொல்லமுடியும்? யாரு சேர்த்தாங்கன்னு தெரியாம எப்படி FC கிட்ட காசு இருக்கு, மற்றவர்களிடம் இல்லைன்னு சொல்லமுடியும்!?? விவரம் தெரிந்தால் சொல்லுங்க!!
We The People said…
ஹரிஹரன் சார், இங்கு பிரமணீயம் என்பது தான் மட்டும் வளர, தன் கீழே உள்ளவன் அடிமையா இருக்கனும் என்ற மனப்பான்மையை குறிக்கிறது! நான் சாதிக்கு இயம் பூசவில்லை :) (நானும் போட்டுட்டேன் ஸ்மைலி!). அந்த கான்செப்ட்டை கொண்டுவந்தவர்கள் என்ற முறையில் பிரமணீயம் என்று சொல்லுவது தவறு இருப்பதாக தெரியவில்லை! நீங்க சொல்லறமாதிர் கள்ளர்ஈயம், வன்னியஈயம் வருங்காலத்தில் எதிர்ப்பார்க்கலாம், இப்படியே போனா நிச்சயம் வரும்!!!

//பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//

இது எங்கே நடக்குது ஹரி??!! ஆச்சரியமா இருக்கே?? கொஞ்சம் எடுத்து சொல்லுங்க?? ஒன்னும் புரியலை?? யார் செய்யறாங்க? எங்க செய்யறாங்க?? (கலாய்க்க இல்லைங்க சீரியசா கேட்கிறேன்)

நன்றி பின்னூட்டம் இட்ட அனைவருக்கு!
//குழலி,

அந்த ஓ.சி கோட்டாவில் எத்தனை பேர் FC மற்ற பிரிவினர்(BC MBC SC ST) எத்தனை என்று உங்களுக்கு தெரியுமா? அதை வைத்துத்தானே உங்க வாதம் சரியா இல்லையா என்று சொல்லமுடியும்? யாரு சேர்த்தாங்கன்னு தெரியாம எப்படி FC கிட்ட காசு இருக்கு, மற்றவர்களிடம் இல்லைன்னு சொல்லமுடியும்!?? விவரம் தெரிந்தால் சொல்லுங்க!!

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
//
சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?
Anonymous said…
நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?
Anonymous said…
--------------------------------
osai cella post
மொத்த மெரிட் இடங்கள் = 430

பிற்படுத்தப் பட்டோர் = 321
மிகப் பிற்படுத்தப்பட்டோர் = 57
தாழ்த்தப்பட்டோர் = 14
உயர்குலத்தோர் = 38

(38/430) *100 = 8.837209302325581
(321/430)*100 = 74.65116279069768
(57/430) *100 = 13.25581395348837
(14/430) *100 = 3.255813953488372

3.255813953488372+13.25581395348837+74.65116279069768+8.837209302325581 = 100


31% Holds the 8.837209302325581 seats out of 100
30% holds the 74.65116279069768 seats
20% holds the 13.25581395348837 seats
19% holds the 3.255813953488372 seats
---------------------------------
31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

மேலே உள்ளதில் தெரிகிறதா 74% இடங்களை BC பிடித்துள்ளனர். இங்கு உயர் சாதியினரின் அளவு 8.8.% மட்டுமே.

மீதி MBC அட்டகாசம் (மரம்வெட்டி தன் சாதிக்கா ஏற்படுத்தியது).

முதலில் வன்னிய,தேவரின சாதிகளை MBCலிருந்து FCக்கு மாற்றினாலே தமிழ்நாடு முன்னேறும். தமிழ்நாட்டில் பெரும்பாண்மையாக உள்ள இவர்கள் MBCல் அதிக இடங்களை ஆக்கிரமிக்கிறார்கள். அதனால் உண்மையான மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
We The People said…
//தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?//

இதுக்கும் நான் போட்ட பதிவுக்கு என்ன கனெக்ஷன்னு சொல்லுங்க அனானி??!! ஏன் எல்லாதுக்கு 4% உள்ள ஆளுகளை பார்த்து பயப்படறீங்க??! உங்க வழியில் வருபவனை தட்டிவிட்டு முன்னேறனும் அவ்வளவே, எதுக்கு அவங்க வீட்டு தின்னைக்கு போறீங்க?? எவன் ஒருவன் நீங்க சொல்லறமாதிரி செய்யறானோ அவனை மதியாதே! அவன் வீட்டு திண்ணைக்கு போகாதே! அவன் வீட்டு திண்ணையில் நமக்கு என்ன இருக்கு?? மனுஷன் வீட்டு மட்டும் போங்க அனானி, மிருகங்கள் வீட்டுக்கு எதுக்கு போகறீங்க?? அங்க போனா எதாவது லாபம் இருக்கா?? அப்புறம் பொண்ணு கொடுக்கற கதை, ஒரு பிராமணன் மட்டும் அல்ல எல்லா சாதியிலும் இப்படித்தான் நினைக்கிறாங்க!! சரியா? எவனாவது மாற்றி நினைக்கிறானா?? அப்புறம் ஏன் அவர்களை மட்டும் சொல்லனும்?? வாங்க ஏதாவது உபயோகமா சிந்திப்போம், சமூகத்துக்கு உதவியா எதையாவதை செய்வோம்! அதை விட்டு விட்டு ஐயர் வீட்டு பொண்ணை கட்டிக்கனும், ஐயர் வீட்டு திண்ணையில் படுத்துக்கனும்ன்னு கால் பைசாவுக்கு உபயோகமில்லா வேலையா செய்து ஏன் வாழ்க்கையை வீன்னாக்குறீங்க அனானி! உங்களை சார்ந்த சமூகத்தை எப்படி முன்னுக்கு கொண்டுவருவதுன்னு யோசிச்சு, திட்டம் போட்டு முன்னேற்றுவோம்!

நன்றி,

ஜெயசங்கர் நா
//பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//

இது எங்கே நடக்குது ஹரி??!! ஆச்சரியமா இருக்கே?? கொஞ்சம் எடுத்து சொல்லுங்க?? ஒன்னும் புரியலை?? யார் செய்யறாங்க? எங்க செய்யறாங்க?? (கலாய்க்க இல்லைங்க சீரியசா கேட்கிறேன்)


ஜெய்,

இதற்கு எனது பதிலான
விரிவான பதிவு இங்கே

சங்கராமுழு லிஸ்ட் இங்கே

சின்மயா பள்ளிகள் லிஸ்ட் இங்கே
// முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது FIT for ஸுர்வைவல் வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"... //

அப்ப எதுக்கு ஜனநாயக இந்தியான்னு எதுக்கு பேர் வச்சிருக்கிங்க...

// திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ? ///

விதிவிலக்கு எப்போதும் விதியாகாது ரவி... உதாரணங்கள் எல்லா விசயத்திலும் பொருந்தும்..

நான் சொல்வது எல்லாவகையிலும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அதில் தேர்ந்தவர் வாழட்டும், தேராதவர் தேர்ந்தெடுக்கட்டும்..

27% இடஒதுக்கீடு என்றால் அதில் ஒருவராக வருவதும் போட்டிதானே.. அதில் ஒருவராக வேண்டுமென்றால் அதற்கு திறமை தானே வேண்டியிருக்கிறது...


அல்லது திறமையால் மட்டும் தான் பதவி என்றால். திறமையோடும், ஒதுக்கீடு இன்றி பதவிக்கு வந்த எத்தனை பேர் லஞ்சம் வாங்காமல், கடமையில் ஒழுங்காய் இருக்கிறார்கள்...?

// ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..//

ஏன் ரிசர்வேசன் இன்றி படிக்கும் வேறு யாரும் பாரின் போய் சாக்லெட்/அல்வா வாங்கிட்டு வருவதே இல்லையா..?


இப்போதைக்கு இவ்வளவு முடிஞ்சா தொடர்ந்து சொல்கிறேன்..
Anonymous said…
கூக்குரல் 1 :
முன்பு கல்வியில் இருந்து ஒதுக்கப்பட்டோம். ஆகவே, எங்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு தேவை

உண்மை 1 :
முன்பு வேதம் ப்யிலுவதில் இருந்தோ, பூசை செய்வதில் இருந்தோ சில சாதியினர் ஒத்துக்கப் பட்டிருக்கலாம். இந்த இழையில் ஒதுக்கபட்டனர் என்றே வைத்துக்கொள்ளுவோம்.

அதே சாதியினர் வேதம் பயில இன்று இட ஒதுக்கீடு கோரவில்லை.

டாக்டர் படிக்க ... அல்லது இஞ்சினியரிங் படிக்க இட ஒதுக்கிட்டு கோருகின்றனர்.

மேலும்
மேலும் இங்கே