மக்கள் கேட்கிறோம் - இவை என்ன ஆச்சு?

நம்ம அரசு போடற ஒவ்வொரு விசாரணை கமிஷன்களும் எங்க போகுது? என்ன ஆகுது என்று எனக்கு ரொம்ப நாள் சந்தேகம். கடந்த இரண்டு ஆண்டுகள் அரசு ஆனையிட்ட பல கமிஷன்கள் புஸ்வானமானதா? அல்ல கமிஷன் வாங்கிட்டு செட்டில் ஆயிடுச்சான்னு ஒரே சந்தேகம்.

அப்படி காணாமல் போன சில விசாரணை கமிஷன்கள்:

"ஆப்ரேஷன் துரியோதனா" விசாரணை கமிஷன்:

பாராளமன்றத்தில் கேள்விகள் கேட்க சுமார் 11 MPகள் பணம் பெற்றுக்கொள்ள அதை ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனம் அதை வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு காட்டியது. அரசும், பாராளமன்றமும் உடனடியாக என்ன என்னவோ வித்தை காட்டி அதை மழுப்பி, அதற்கு ஒர் விசாரணை கமிஷன் போட்டாங்க. மாட்டிக்கொண்டவர்கள் காங்கிரஸ், பி.ஜே.பி, ஆர்.ஜே.டி என எல்லா கட்சியிலும் சமபங்கு இருந்தமையால் பெரிய எதிர்ப்பு இல்லாமல் விசாரணை கமிஷன் காணாமல் போனது. யாராவது தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்.

"ஆப்ரேஷன் சக்ரவியூக்" விசாரணை கமிஷன்:

Member of Parliament’s Local Area Development Scheme (MPLADS) எனபடும் தொகுதி மேன்பாட்டு நிதியை சுமார் முப்பது சதவீதம் MPக்களுக்கு தந்தால் தங்கள் தொகுதி மேன்பாட்டு நிதியை தாரை வார்க்க ரெடியா உள்ள MPகளை கோடி(யி)ட்டு காட்டியது மற்றொரு தனியார் பத்திரிக்கை. அதிலும் பாரபட்சமின்றி அனைத்து கட்சி MPகளும் அசத்தியிருந்தார்கள். அரசும், பாராளமன்றமும் இதற்கும் ஒரு விசாரணை கமிஷன் போட்டது. அதுவும் எங்க போச்சுன்னு தெரியல!!!??

"ஆப்பு-ரேஷன் அரசு"

இதற்கு அடுத்த படி அரசு எடுத்த நடவடிக்கை தான் மிக பெரிய காமெடியா இருந்தது. MP, MLA, மந்திரிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் யாரும் காமிரா கொண்டுவரகூடாது என்று ஒரு சூப்பர் சட்டம் போட்டது. இது எப்படி இருக்கு??. அப்ப நம்ம அரசாங்கம் என்ன சொல்லுது, மந்திரி, MP, MLA எல்லாம் காசு கண்டிப்பா வாங்குவாங்க அதை யாரும் படம் பிடிக்கக்கூடாது!

இதற்கு சளைத்தவர்கள் அல்ல கட்சிகள்: காங்கிரஸ், பி.ஜே.பி போன்றவை தங்கள் MP, MLAகளுக்கு ஒரு எச்சரிக்கை விட்டார்கள். "யாரும் காசு வாங்க கூடாது"ன்னு இல்லைங்க, " உங்களை பார்க்க வருபவர்களிடம் எச்சரிக்கையா காமிரா இருக்கான்னு பார்த்துவிட்டு உங்களை பார்க்க அனுமதிக்கவும்." இது தான் டக்கர் எச்சரிக்கை. இது இப்படியானால் விசாரணை கமிஷன் முடிவு எப்படி இருக்கும் என்று நன்றாக புலப்படும்.

இன்னும் பல விசாரணை கமிஷன்கள் வந்தன அவையும் காணாமல் போனது. எனக்கும் மறந்தே போச்சு. ஆங்! லேட்டஸ்டா ஒரு விசாரணை கமிஷன், அதை மறக்கமுடியுமா?

வோல்கர் வெடி - நீதிபதி பாதக் கமிட்டி விசாரணை கமிஷன்:

இது பிரபல வோல்கர் கமிட்டி ரிப்போர்டை மையமாக வைத்து நட்வர்சிங்கிற்கு காங்கிரஸ் உள்குத்து வைத்த கதை!! இதில் $1,46,000 அதாவது சுமார் எழுபது லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் நட்வர் சிங்கிற்கு கமினாக கிடைத்த கதை! நட்வர் ஒரே ஒரு அறிக்கை விட்டார் நான் என்றும் சோனியாவுக்கு விஷ்வாசமானவன் என்றும், தான் இன்னும் காங்கிரஸில் உள்ளதாகவும், அந்த அறிக்கைக்கு அப்பறம் அந்த விசாரணை கமிஷன் சத்தமும் இல்லை!!!

இப்படி மக்கள் பணம் அரசியல் வாதிகளால் கொள்ளை அடிப்பது ஒருபுறம் இருக்க, அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று அதற்கு ஒரு கமிஷன் போட்டு அதற்கும் செலவு செய்து, மக்களை ஏமாற்றும் இந்த கேடு கெட்ட அரசியல் என்று மாறும்.

பி.கு: ஏங்க நம்ம சிறுதாவூர் பங்களாவுக்கு உரிமையாளர் யார் என்று கண்டுபிடிக்க நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியன் தலைமையில் சூலை 27, 2006 , ஒரு 10 நாள் விசாரணை கமிஷன் அமைத்தாரே நம்ம முதல்வர்!!! அது என்னங்க ஆச்சு?

எல்லாவரும் ஒன்னு உள்ள ஒன்னு! நம்ம மக்கள் மட்டும் தான் எப்பவும் முட்டாள் ஆக்கப்படறாங்க!!!

ஓணம் ஒரு தேசிய பண்டிகை ஆக்கலாம்...

ஓணம்மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதி, மத, இன பேதமின்றி இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சியாக கேரளாவில் கொண்டாட படுகிறது. கேரளாவில் பிறந்த ஒவ்வெறு மலையாளிக்கும் கடந்த பத்து நாட்களாக அத்தபூ கோலமுடன் தூள் கிளப்பறாங்க.

ஓணம் ஒரு பார்வை: இது ஒரு அறுவடை பண்டிகை என்ற போதும் பொதுவாக இது தங்களை வருடத்துக்கு ஓணம்ஒரு முறை காணவரும் புராண இதிகாச ராக்ஷ்ச ராஜாவான மஹாபலியை வரவேற்க்கவே இந்த பத்து நாள் விசேஷம். ஊரெங்கும் பூக்கள் கோலமாக பரவிகிடக்கும், புலி வேசம் போட்டு நடனம், வெள்ளம்களி (boat Race), யானை ஊர்வலம் என ஒரு வசந்தகாலத்து எபெக்ட் கொடுக்கும் பண்டிகை இது. ஓண பண்டிகையில் எனக்கு பிடித்த விசயம் முஸ்லிம், கிருத்துவர்கள், ஹிந்து என எந்த மத பாகுபாடு இல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதே!!! என்னை ஆச்சர்ய படுத்தும் பண்டிகையும் இது.

மஹாபலிஏன் ஓணம்?

ராக்ஷ்ச ராஜாவான மஹாபலி ஊழல், திருட்டு, பசி, பட்டினிசாவு என எந்த ஒரு கஷ்டங்களும் இல்லாமல் கேரளாவை ஆண்டுவந்த ராஜா, அவரை சோதனை செய்ய வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்னு மூன்று அடி மண் கேட்க, கொடை வள்ளலான மஹாபலி சரியென்று சொல்ல, விஷ்வரூபம் எடுத்த வாமனன் ஒரு அடிக்கு உலகத்தையும், இரண்டாம் அடிக்கு வானத்தை எடுத்துக்கொள்ள மூன்றாம் அடிக்கு தன் தலையை தந்து தான் தன் மக்களுக்காக தன் உயிரையும் கொடுக்க தயாரான மஹாபலிக்கு விஷ்ணு ஒரு வரம் தயாராகிறார், அதற்கு ராஜா வருடத்துக்கு ஒரு முறை தன் மக்களுடம் 10 நாட்கள் வாழவேண்டும் என்று கேட்க, வரம் பெற்ற ராஜா வருடத்துக்கு ஒரு முறை அறுவடை முடிந்த மக்கள் சந்தோஷமாக உள்ள காலத்தில் 10 நாட்கள் கேரளாவுக்கு வந்து செல்வதாக புராணம். அந்த பத்து நாட்களை கேரளமக்கள் ராஜாவை வரவேற்று கொண்டாடுவதே இந்த பூக்கோலமும் ஓணமும்.

தேசிய பண்டிகை ஆக்கலாம்??!!

ஓணம்இன்று இந்தியர்கள் Divide and Rule Policyயால் பல இன, மத, சாதி அடிப்படையில் பிரிந்து இன்றும் (சுதந்திரத்துக்கு பிறகும்) அந்த தாக்கத்திலிருந்து வெளிவராமல், வெள்ளையன் வெளியேறினாலும் அவன் வழிபின்பற்றி வந்தவர்களால் இன்றும் பிரிந்துவாழ்கிறோம். இது போன்ற ஒரு பண்டிகையை தேசிய பண்டிகையாக்கினால் இன, மத, சாதி பிரிவினைகள் வரும்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது.

அனைத்து கேரள மக்களுக்கும், என் நன்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துக்கள். திருவோண ஆஷம்ஸகள்!!!