மக்கள் கேட்கிறோம் - இவை என்ன ஆச்சு?

நம்ம அரசு போடற ஒவ்வொரு விசாரணை கமிஷன்களும் எங்க போகுது? என்ன ஆகுது என்று எனக்கு ரொம்ப நாள் சந்தேகம். கடந்த இரண்டு ஆண்டுகள் அரசு ஆனையிட்ட பல கமிஷன்கள் புஸ்வானமானதா? அல்ல கமிஷன் வாங்கிட்டு செட்டில் ஆயிடுச்சான்னு ஒரே சந்தேகம்.

அப்படி காணாமல் போன சில விசாரணை கமிஷன்கள்:

"ஆப்ரேஷன் துரியோதனா" விசாரணை கமிஷன்:

பாராளமன்றத்தில் கேள்விகள் கேட்க சுமார் 11 MPகள் பணம் பெற்றுக்கொள்ள அதை ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனம் அதை வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு காட்டியது. அரசும், பாராளமன்றமும் உடனடியாக என்ன என்னவோ வித்தை காட்டி அதை மழுப்பி, அதற்கு ஒர் விசாரணை கமிஷன் போட்டாங்க. மாட்டிக்கொண்டவர்கள் காங்கிரஸ், பி.ஜே.பி, ஆர்.ஜே.டி என எல்லா கட்சியிலும் சமபங்கு இருந்தமையால் பெரிய எதிர்ப்பு இல்லாமல் விசாரணை கமிஷன் காணாமல் போனது. யாராவது தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்.

"ஆப்ரேஷன் சக்ரவியூக்" விசாரணை கமிஷன்:

Member of Parliament’s Local Area Development Scheme (MPLADS) எனபடும் தொகுதி மேன்பாட்டு நிதியை சுமார் முப்பது சதவீதம் MPக்களுக்கு தந்தால் தங்கள் தொகுதி மேன்பாட்டு நிதியை தாரை வார்க்க ரெடியா உள்ள MPகளை கோடி(யி)ட்டு காட்டியது மற்றொரு தனியார் பத்திரிக்கை. அதிலும் பாரபட்சமின்றி அனைத்து கட்சி MPகளும் அசத்தியிருந்தார்கள். அரசும், பாராளமன்றமும் இதற்கும் ஒரு விசாரணை கமிஷன் போட்டது. அதுவும் எங்க போச்சுன்னு தெரியல!!!??

"ஆப்பு-ரேஷன் அரசு"

இதற்கு அடுத்த படி அரசு எடுத்த நடவடிக்கை தான் மிக பெரிய காமெடியா இருந்தது. MP, MLA, மந்திரிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் யாரும் காமிரா கொண்டுவரகூடாது என்று ஒரு சூப்பர் சட்டம் போட்டது. இது எப்படி இருக்கு??. அப்ப நம்ம அரசாங்கம் என்ன சொல்லுது, மந்திரி, MP, MLA எல்லாம் காசு கண்டிப்பா வாங்குவாங்க அதை யாரும் படம் பிடிக்கக்கூடாது!

இதற்கு சளைத்தவர்கள் அல்ல கட்சிகள்: காங்கிரஸ், பி.ஜே.பி போன்றவை தங்கள் MP, MLAகளுக்கு ஒரு எச்சரிக்கை விட்டார்கள். "யாரும் காசு வாங்க கூடாது"ன்னு இல்லைங்க, " உங்களை பார்க்க வருபவர்களிடம் எச்சரிக்கையா காமிரா இருக்கான்னு பார்த்துவிட்டு உங்களை பார்க்க அனுமதிக்கவும்." இது தான் டக்கர் எச்சரிக்கை. இது இப்படியானால் விசாரணை கமிஷன் முடிவு எப்படி இருக்கும் என்று நன்றாக புலப்படும்.

இன்னும் பல விசாரணை கமிஷன்கள் வந்தன அவையும் காணாமல் போனது. எனக்கும் மறந்தே போச்சு. ஆங்! லேட்டஸ்டா ஒரு விசாரணை கமிஷன், அதை மறக்கமுடியுமா?

வோல்கர் வெடி - நீதிபதி பாதக் கமிட்டி விசாரணை கமிஷன்:

இது பிரபல வோல்கர் கமிட்டி ரிப்போர்டை மையமாக வைத்து நட்வர்சிங்கிற்கு காங்கிரஸ் உள்குத்து வைத்த கதை!! இதில் $1,46,000 அதாவது சுமார் எழுபது லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் நட்வர் சிங்கிற்கு கமினாக கிடைத்த கதை! நட்வர் ஒரே ஒரு அறிக்கை விட்டார் நான் என்றும் சோனியாவுக்கு விஷ்வாசமானவன் என்றும், தான் இன்னும் காங்கிரஸில் உள்ளதாகவும், அந்த அறிக்கைக்கு அப்பறம் அந்த விசாரணை கமிஷன் சத்தமும் இல்லை!!!

இப்படி மக்கள் பணம் அரசியல் வாதிகளால் கொள்ளை அடிப்பது ஒருபுறம் இருக்க, அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று அதற்கு ஒரு கமிஷன் போட்டு அதற்கும் செலவு செய்து, மக்களை ஏமாற்றும் இந்த கேடு கெட்ட அரசியல் என்று மாறும்.

பி.கு: ஏங்க நம்ம சிறுதாவூர் பங்களாவுக்கு உரிமையாளர் யார் என்று கண்டுபிடிக்க நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியன் தலைமையில் சூலை 27, 2006 , ஒரு 10 நாள் விசாரணை கமிஷன் அமைத்தாரே நம்ம முதல்வர்!!! அது என்னங்க ஆச்சு?

எல்லாவரும் ஒன்னு உள்ள ஒன்னு! நம்ம மக்கள் மட்டும் தான் எப்பவும் முட்டாள் ஆக்கப்படறாங்க!!!

10 comments:

said...

இப்படியெல்லாம் கேக்கப்புடாது... நாங்கள் கெடப்புல போட்டிருக்கோம்... தூசி தட்டி எடுக்கனும்... அரசு ஊழியர்கள் எல்லாருக்கும் தூசி ஒவ்வாமை இருக்கு... அதுனால பாக்கலாம்...

said...

தகவல் அறியும் சட்டத்தை பயன் படுத்தி விளக்கம் கேட்க உரிமை உண்டு :-)) கேட்டுச் சொல்லுங்கள் .

said...

கேள்விகள் கேட்டால் நீங்கள் இந்தியக் குடிமகன் இல்லை.

said...

நன்றி லொடுக்கு பாண்டி, கல்வெட்டு அண்ட் ராதாராகவன். கிடப்பில் போட்ட விசாரணை கமிஷனுக்கு இன்று செலவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. பேசாமா இதை எல்லாம் நிறுத்தலாம் நம்ம அரசு. அட்லீஸ்ட் அந்த செலவாவது மிஞ்சும்.

கல்வெட்டு:
//தகவல் அறியும் சட்டத்தை பயன் படுத்தி விளக்கம் கேட்க உரிமை உண்டு :-)) கேட்டுச் சொல்லுங்கள் .//

தகவல் அறியும் சட்டத்தில் பல் எடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது!!! அது உங்களூக்கு தெரியாதா?? இது போன்ற விசாரணை கமிஷன் முடிவு வெளிவரும் வரை நாம் காத்துக்கிட்டுதான் இருக்கனும். அதுக்குள்ள நீங்க மறந்திடுவீங்க என்று ஐடியா போல!!!??

//கேள்விகள் கேட்டால் நீங்கள் இந்தியக் குடிமகன் இல்லை. //

நம்ம கேள்வியே கேட்காம தான் இப்படி அழிச்சாட்டம் பண்ணறாங்க இந்த அரசும், அரசியல்வாதிகளும். மக்களை கேள்வி கேட்க வைக்கவே இந்த பதிவு.

said...

விசாரணக் கமிசன் என்பது; ஆளும் கட்சிக்கு வேண்டிய நீதிபதி ஒருவருக்கு, ஓய்வில் பின் உல்லாசமாகக் காசு பார்ப்பதற்கு உருவான; உயரிய திட்டம். என்பது நீங்கள்; இவ்வளவு காலமும் உணராதது. வேதனை. இவற்றை உணர்ந்து உண்மையான ,ஆசியனாக வாழக்கடவீர்!!!!.
யோகன் பாரிஸ்

said...

இரண்டாவது தடவையாக வருகிறேன்; நல்ல பதிவு..

கேக்க ஆளில்லாமத்தானே ஆடுறாங்க.. கேட்பவருக்கு என் ஆதரவு எப்பவும் உண்டுங்கோ!!....

said...

என்னத்த மாத்துனாங்கன்னுதான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன் ஜெய்..ஒன்றும் சரியா புரியல...

http://www.righttoinformation.info என்ற தளத்தில் ஒரு power point presentation இருக்கு...

http://www.righttoinformation.info/rti2005_expanded05.ppt#8

மேலே உள்ள சுட்டிக்குப் போய் page Down பண்ணினால்..வருவது..

Provided that the information ,which cannot be denied to the Parliament or a State Legislature shall not be denied to any person

மேலும் இந்த விசயத்தில் அதிக முயற்சி எடுத்து வரும் parivartan http://www.parivartan.com/rti.asp

அமைப்பு அப்படி ஏதாவது நடந்து இருந்தால் சும்மா இருக்காது என்றே நினைக்கிறேன்...

//Right to Information laws have been passed by nine state Governments in the country viz Goa, Tamil Nadu, Karnataka, Delhi, Rajasthan, Madhya Pradesh, Maharashtra, Assam and Jammu & Kashmir.

The Central Government has also passed an Act, which has received President's assent but has not yet been notified. //

பாவிப்பயலுகள் என்ன குளறுபடி பண்ணி வச்சுருக்கானுங்களோ ..தெரிஞ்சா சொல்லுங்க...

said...

கல்வெட்டு,

இதை பாருங்க. அதில் சில மேட்டரை Amendment என்ற பெயரில் சில திருத்தங்களை செய்து அடித்துப்போட்ட பாம்பாக்க செய்துள்ளனர். PM Sugarcoats RTI Amendment

said...

சுட்டிக்கு நன்றி ஜெய்!
சிங்காரிச்சு மூக்கறுக்கிறது இதுதான் :-((((

said...

Johan-Paris சொல்வதே சரி.
//ஆளும் கட்சிக்கு வேண்டிய நீதிபதி ஒருவருக்கு, ஓய்வில் பின் உல்லாசமாகக் காசு பார்ப்பதற்கு உருவான; உயரிய திட்டம்.//

நன்றி ஜோஹன்.

லிவிங் ஸ்மைல் வந்தமைக்கும் அதரவு தெரிவித்தமைக்கும் நன்றி :)

கல்வெட்டு:

//சிங்காரிச்சு மூக்கறுக்கிறது இதுதான் :-(((( //

இது தான் கிடாவெட்டு, எப்பவும் நம்ம அரசியல்வாதிகள் செய்யறது!!!