ஓணம் ஒரு தேசிய பண்டிகை ஆக்கலாம்...

ஓணம்மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதி, மத, இன பேதமின்றி இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சியாக கேரளாவில் கொண்டாட படுகிறது. கேரளாவில் பிறந்த ஒவ்வெறு மலையாளிக்கும் கடந்த பத்து நாட்களாக அத்தபூ கோலமுடன் தூள் கிளப்பறாங்க.

ஓணம் ஒரு பார்வை: இது ஒரு அறுவடை பண்டிகை என்ற போதும் பொதுவாக இது தங்களை வருடத்துக்கு ஓணம்ஒரு முறை காணவரும் புராண இதிகாச ராக்ஷ்ச ராஜாவான மஹாபலியை வரவேற்க்கவே இந்த பத்து நாள் விசேஷம். ஊரெங்கும் பூக்கள் கோலமாக பரவிகிடக்கும், புலி வேசம் போட்டு நடனம், வெள்ளம்களி (boat Race), யானை ஊர்வலம் என ஒரு வசந்தகாலத்து எபெக்ட் கொடுக்கும் பண்டிகை இது. ஓண பண்டிகையில் எனக்கு பிடித்த விசயம் முஸ்லிம், கிருத்துவர்கள், ஹிந்து என எந்த மத பாகுபாடு இல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதே!!! என்னை ஆச்சர்ய படுத்தும் பண்டிகையும் இது.

மஹாபலிஏன் ஓணம்?

ராக்ஷ்ச ராஜாவான மஹாபலி ஊழல், திருட்டு, பசி, பட்டினிசாவு என எந்த ஒரு கஷ்டங்களும் இல்லாமல் கேரளாவை ஆண்டுவந்த ராஜா, அவரை சோதனை செய்ய வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்னு மூன்று அடி மண் கேட்க, கொடை வள்ளலான மஹாபலி சரியென்று சொல்ல, விஷ்வரூபம் எடுத்த வாமனன் ஒரு அடிக்கு உலகத்தையும், இரண்டாம் அடிக்கு வானத்தை எடுத்துக்கொள்ள மூன்றாம் அடிக்கு தன் தலையை தந்து தான் தன் மக்களுக்காக தன் உயிரையும் கொடுக்க தயாரான மஹாபலிக்கு விஷ்ணு ஒரு வரம் தயாராகிறார், அதற்கு ராஜா வருடத்துக்கு ஒரு முறை தன் மக்களுடம் 10 நாட்கள் வாழவேண்டும் என்று கேட்க, வரம் பெற்ற ராஜா வருடத்துக்கு ஒரு முறை அறுவடை முடிந்த மக்கள் சந்தோஷமாக உள்ள காலத்தில் 10 நாட்கள் கேரளாவுக்கு வந்து செல்வதாக புராணம். அந்த பத்து நாட்களை கேரளமக்கள் ராஜாவை வரவேற்று கொண்டாடுவதே இந்த பூக்கோலமும் ஓணமும்.

தேசிய பண்டிகை ஆக்கலாம்??!!

ஓணம்இன்று இந்தியர்கள் Divide and Rule Policyயால் பல இன, மத, சாதி அடிப்படையில் பிரிந்து இன்றும் (சுதந்திரத்துக்கு பிறகும்) அந்த தாக்கத்திலிருந்து வெளிவராமல், வெள்ளையன் வெளியேறினாலும் அவன் வழிபின்பற்றி வந்தவர்களால் இன்றும் பிரிந்துவாழ்கிறோம். இது போன்ற ஒரு பண்டிகையை தேசிய பண்டிகையாக்கினால் இன, மத, சாதி பிரிவினைகள் வரும்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது.

அனைத்து கேரள மக்களுக்கும், என் நன்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துக்கள். திருவோண ஆஷம்ஸகள்!!!

Comments

ஓண ஆஷம்ஸகள்!!!
//ராக்ஷ்ச ராஜாவான மஹாபலி ஊழல், திருட்டு, பசி, பட்டினிசாவு என எந்த ஒரு கஷ்டங்களும் இல்லாமல் கேரளாவை ஆண்டுவந்த ராஜா
//
இத்தனை சிறப்பு மிக்க நல்ல ஆட்சி அளித்த ராஜாவை ஏன் விஷ்ணு வாமன அவதாரம் கொண்டு அழிக்க வேண்டும்? நல்லாட்சி அளிக்கும் ராசாவே ஆனாலும் அவன் ராட்சச வம்சத்திலிருந்து வந்தவனெனில் விஷ்ணு அவதாரம் எடுத்து அழிப்பார்... ஏனெனில்

ராட்சச வம்சம் = ______

fill up the blanks
சொல்ல மறந்துட்டேனே தமிழர்களுக்கும் பொங்கல் என்றொரு பண்டிகை உண்டு, அது எல்லோருக்கும் பொதுவானது
பல விஷயங்களில் எனக்கு மலையாளிகளின் மீது பொறாமை உண்டு. அழகான பெண்கள், (குறிப்பாக நீண்ட கூந்தல்) வளமான நிலம், இதமான மொழி..அதோடு சேர்த்து ஓணம்.

என்ன தான் இந்துப் பண்டிகையாக இருந்தாலும் அது மலையாளிகளின் ஒற்றுமையைக் குறிக்கும் பண்டிகையாகத் தான் விளங்குகிறது.
அனைத்து கேரள மக்களுக்கும், என் நன்பர்களுக்கும்(ஜெய், உங்களுக்கும்!) என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துக்கள். திருவோண ஆஷம்ஸகள்!!!
ஓண ஆஷம்ஸகள்!!!

கேரளத்தில் ஒரு இஸ்லாம் இன்ஸ்டிட்யூட் ஒணம் உத்ஸவத்திற்கு தடை விதிச்சிட்டது அறியாமோ?
ஜெயசங்கர்,

உண்மைக்குமே இதை தேசியப் பண்டிகை ஆக்கினால் என்ன?

இங்கேயும் நம்ம கேரளா சொஸைட்டியில் ரெண்டு குடும்பம் தவிர மீதி எல்லாரும்
கிறிஸ்த்தியானிகள்தான். ஆனாலும் எவ்வளவு உற்சாகமா நெற்றியில் சந்தனக்குறி
தொட்டு கொண்டாடுறாங்க பாருங்க.

படங்கள் அருமையா இருக்குது. அதிலும் அந்த 'கடுவாக் களி' கொள்ளாம்!

எல்லோருக்கும் மங்களம் நேரட்டே ஈ ஓணசமயத்து!
We The People said…
வாங்க குழலி, நீங்க இந்த மாதிரி எழுதுவீங்க என்று எதிர்ப்பாத்து தான் இதை எழுதினேன். அப்பறம் குழலி மஹாபலி ஒரு அசுர ராஜா மட்டும் அல்ல அவனுக்கு உலகை அடக்கியாளவேண்டும் என்று பல முயற்சிகள் செய்ததாகவும், அதனால் அவனை தடுக்கவே இப்படி செய்யபட்டதாகவும் ஒரு சாரார் சொல்கிறார்கள். எது எப்படியோ என் நாட்டு மக்கள் ஒன்றாக ஒத்துமையோடு கொண்டாட ஒரு பண்டிகை உள்ளதை நினைத்து சந்தோஷமே! நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான பண்டிகை Enjoy பண்ணுங்க தல.. பொங்கல் நம்ம கொண்டாடற மாதிரி மற்ற மதத்தினர் கொண்டாடுவதில்லை என்பது என் கருத்து!
We The People said…
Muse:

//கேரளத்தில் ஒரு இஸ்லாம் இன்ஸ்டிட்யூட் ஒணம் உத்ஸவத்திற்கு தடை விதிச்சிட்டது அறியாமோ? //

நல்லதை மட்டும் எடுத்துக்குவோமே! இஸ்லாமிய மக்கள் இந்த பண்டிகையை நிச்சயமா கொண்டாடுறாங்க, அதற்காக காத்திருக்காங்க எனக்கு தெரிஞ்சே பல பேர்... சோ! கவலைய விடுங்க அந்த separatistகளை (நம் இந்திய மக்களை பிரிக்கறதை சொன்னேன்!)... அவர்கள் முயற்சிக்கு நாம் செவிகொடுத்தால் தான் தவறு. கண்டுக்காமா விட்டுறனும். நம் கம்மூனிஸ முதல்வர் கூட சூப்பரா கொண்டாடினாரு ஓணத்தை ...
We The People said…
மாசிலா நீங்க என்ன சொல்லவரீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொன்ன எல்லாருக்கும் புரியும். அமைதி என்றால் என்னவென்று நாம் முதலில் முடிவு செய்யவேண்டும். அதை யாரிடமும் பெறமுடியாது! உங்களுக்கு அமைதியென்பது மற்றொருவர்க்கு அமைதியின்மையாகூட இருக்கலாம்! So define the goal first and proceed towards it. Its should be everybody's acceptable point. That is Social Life.

குழலி :
சொல்ல மறந்துட்டேனே தமிழர்களுக்கும் பொங்கல் என்றொரு பண்டிகை உண்டு, அது எல்லோருக்கும் பொதுவானது.

இதற்கு நான் எற்கனவே என் கருத்தை சொல்லிவிட்டேன்.

தல! பொங்கல் நம்ம கொண்டாடற மாதிரி மற்ற மதத்தினர் (அறவே!) கொண்டாடுவதில்லை என்பது என் கருத்து!
We The People said…
நன்றி மணியன், Kuppusamy Chellamuthu, அருள் குமார், Muse வாழ்த்துக்களுக்கு நன்றி. குப்ஸ் இன்னு ஜொல்லுவிடறதை விடவில்லையா?
//அழகான பெண்கள், (குறிப்பாக நீண்ட கூந்தல்) //

//என்ன தான் இந்துப் பண்டிகையாக இருந்தாலும் அது மலையாளிகளின் ஒற்றுமையைக் குறிக்கும் பண்டிகையாகத் தான் விளங்குகிறது.//

நானும் இந்த கோணத்தில் தான் பார்த்தேன், சிலர் லென்ஸ் வெச்சு தவறுகளை கண்டுபிடிச்சு, பிரச்சனை கெலப்பறதுக்குன்னு இருக்காங்களே! அவங்க எப்போ நிறுத்தபோறாங்கனே தெரியலையே குப்ஸ்.
We The People said…
மாசிலா தூங்கறவங்களை எழுப்பலாம், தூங்கற மாதிரி நடிப்பவனை எழுப்பவே முடியாது!!

ஒத்துமை: சாதி, மதம், இனம் என எந்த பாகுபாடு இல்லாமல், ஒருவருடைய சுக,துக்கங்களை எல்லாவரும் பகிர்ந்துக்கொண்டு வாழ்வதே நான் ஆசைபடும் ஒற்றுமை. ஆனா உங்களை மாதிரி ஆட்கள் இந்த மாதிரி பேசிக்கொண்டிருக்கும் வரை அதுக்கு வழியில்லைன்னு இப்போ எனக்கு தோணுது! :(

//உங்க வாழ்க்கை முறைதான் ஒஸ்தி// இப்படி நான் சொன்னேனா? எப்படிங்க நீங்களா இந்த முடிவுக்கு வரலாம்??!!

என்னங்க எதோ போர், கீர்ன்னு ஏதோ எழுதரீங்க எதுக்கு பொர்? என்ன சாதிக்க போரீங்க?? அதை சொன்னா மேட்டர் சரியானதா இருந்தால் நானும் வாள் எடுக்க தயார் (அட உங்க கூட வரதாங்க!!)
We The People said…
துளசி கோபால் thanx for the greetings.

//உண்மைக்குமே இதை தேசியப் பண்டிகை ஆக்கினால் என்ன? //

அதுக்குள்ள இந்த பதிவு ஒரு பிரச்சனையா உருவாகுது :(

//படங்கள் அருமையா இருக்குது. அதிலும் அந்த 'கடுவாக் களி' கொள்ளாம்!//

எல்லாம் நம்ம onamfestival.org உபயம். :)))))
ஜோ/Joe said…
//பொங்கல் நம்ம கொண்டாடற மாதிரி மற்ற மதத்தினர் கொண்டாடுவதில்லை என்பது என் கருத்து!//

சும்மா அள்ளி விடாதீங்க சார்! தமிழ் கத்தோலிக்கர்கள் பொங்கலை இந்துக்களுக்கு இணையாக கொண்டாடுகிறார்கள் என்று பல முறை சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டது.இப்படி ஒரு கருத்தை கொண்டிருப்பது படித்த இந்துக்கள் கூட பிற மதத்தினர் பற்றி கொண்டிருக்கும் அறியாமையைத்தான் காட்டுகிறது.
We The People said…
ஜோ,

நான் சொல்லவந்ததை எல்லாரும் தப்பாவே எடுத்துக்கறாங்க. நான் என்ன சொல்லவந்தேன் என்றால் கேரளாவில் ஓணம் கொண்டாடறமாதிரி அனைவரும்(ஹிந்து, முஸ்லீம், கிருத்துவர்கள்) ஒன்று சேர்ந்து கொண்டாடுவது போல் நம்ம ஊருல பொங்கல் கொண்டாடுவது இல்லை என்பதே! It doesnt mean தமிழ் கத்தோலிக்கர்கள் பொங்கலை கொண்டாடுவதுயில்லை என்று!

எல்லாவரும் எல்லாருடைய விசேஷங்களை ஒன்றாக கொண்டாட வேண்டும் என்பதே!

FYI: ஓணம் ஒரு ஹிந்து பண்டிகை அல்ல!!! அது ஒரு கேரள பண்டிகை! கேரள மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடும் பண்டிகை. &

//இப்படி ஒரு கருத்தை கொண்டிருப்பது படித்த இந்துக்கள் கூட பிற மதத்தினர் பற்றி கொண்டிருக்கும் அறியாமையைத்தான் காட்டுகிறது.//

நான் ஹிந்து என்று பெருமை பேசும் கோஷ்டியும் அல்ல. நான் இந்தியன் என்று பெருமைகொள்ள ஆசைபடும் ஒரு சராசரி இந்தியன்.
ஜோ/Joe said…
//ஓணம் ஒரு ஹிந்து பண்டிகை அல்ல!!! அது ஒரு கேரள பண்டிகை!//
அது போலவே பொங்கல் ஒரு இந்து பண்டிகை அல்ல .தமிழர் பண்டிகை .அதனால் தான் கத்தோலிக்க தமிழரும் அதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் .கத்தோலிக்கர்கள் இந்துக்களைப் போலவே தாலியணிந்து பொட்டு வைத்துக்கொள்வதால் உங்களைப் போன்றோர் அவர்களை தனியாக அடையாளம் காண்பதில்லை .உங்களுக்கு தெரிந்த கிறிஸ்தவர்களெல்லாம் அல்லேலூயா சொல்லி பிட் நோட்டீஸ் கொடுப்பவர்கள் ,தன்னைத் தானே பிஷப் என்று நியமித்துக் கொண்டவர்கள்.
ஜோ/Joe said…
//நான் ஹிந்து என்று பெருமை பேசும் கோஷ்டியும் அல்ல. நான் இந்தியன் என்று பெருமைகொள்ள ஆசைபடும் ஒரு சராசரி இந்தியன்.//
அப்படியா?

// பொங்கல் நம்ம கொண்டாடற மாதிரி மற்ற மதத்தினர் கொண்டாடுவதில்லை என்பது என் கருத்து!//

அப்போ இந்த 'நம்ம' -ங்குறது இந்துவா? இந்தியனா?
We The People said…
இங்க நம்ம என்று சொன்னது தமிழ் இந்துக்களைத்தான் சொன்னேன்.(நான் ஹிந்துவென்று பெருமை பேசமாட்டேன் என்றுதான் சொன்னேன், நான் இந்து என்றே சொல்லமாட்டேன் என்று சொல்லவில்லை) அதில் ஏதேனும் தவறுல்லதா? நான் விதண்டாவாதம் பேச இந்த பதிவு போடவில்லை.

//உங்களுக்கு தெரிந்த கிறிஸ்தவர்களெல்லாம் அல்லேலூயா சொல்லி பிட் நோட்டீஸ் கொடுப்பவர்கள் ,தன்னைத் தானே பிஷப் என்று நியமித்துக் கொண்டவர்கள்.//

இருக்ககூடும்.
ஜோ/Joe said…
//இங்க நம்ம என்று சொன்னது தமிழ் இந்துக்களைத்தான் சொன்னேன்.//

இது தான் அடிப்படை .நீங்களே 'நம்ம' என்று சொல்லி பிய்த்துக்கொண்டு போகிறீர்கள் .பின்னர் எப்படி ஐயா ஒட்டும் .பொதுவிலே நீங்கள் குறிப்பிடும் போது 'நம்ம' என்பதை நீங்கள் 'தமிழர்' என்பதற்கல்லவா உபயோகித்திருக்க வேண்டும் ?
We The People said…
நான் ஹிந்து என்றால் எப்படி சார் "பிய்த்துக்கொண்டு போகிறீர்கள்" என்று சொல்லலாம். நீங்க கூடதான் "தமிழ் கத்தோலிக்கர்கள்" என்று சொல்லறீங்க அதுக்காக நீங்களும் பிய்த்துக்கொண்டு போகறீங்க என்று அர்த்தமா?
ஜோ/Joe said…
we the people,
உங்களுக்கு சொன்னாலும் புரியாதுண்ணு நினைக்குறேன் .ஆள விடுங்கய்யா!
We The People said…
ஜோ,

//உங்களுக்கு சொன்னாலும் புரியாதுண்ணு நினைக்குறேன் .ஆள விடுங்கய்யா! //

எனக்கும் இது தான் தொணுது! நம்மகுள்ள என்ன ஒத்துமை. இதைத்தான் வேற்றுமையில் ஒற்றூமைன்னு சொல்லுவாங்களோ!!!