விஜயகாந்த் - ரெய்டு - நேரடி ரிப்போர்ட்

விஜயகாந்த் வீட்டில் ரெய்டு என்று இட்லிவடை பதிவை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்,
என் அலுவலகம் விஜயகாந்தின் வீட்டுக்கு அருகாமையில் உள்ளது, உடனே நிலைமை என்னவென்று பார்க்க ஒரு சின்ன விசிட், விஜயகாந்தை பெரிய ஆளாக்கிவிட்டுத்தான் அடங்குவேன் என்று ஏன் ஒற்றை காலில் நிற்கிறார்கள் இந்த ஆளும் கட்சிகள்??!!!

இங்கே ஒரு பதட்ட சூழ்நிலையே காணமுடிகிறது, 2 போலீஸ் வண்டிகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுவிட்டது!!! தொண்டர்கள் குவிந்துள்ளனர், அதே அளவுக்கு போலீஸும் குவிந்துள்ளது!! புதியதாய் போலீஸில் இணைந்த ஆசென்ட் கார்கள் ஒரு நான்கு, தே.மு.தி.க முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் கார்கள் என்று ஏரியாவே ரங்கநாதன் வீதி அளவுக்கு ஒரு கூட்டம்!!!

டீ கடையில் காசு கொடுக்காமல் டீ, காபி, தம் அடித்து செல்லும் போலீஸார், சண்டையிடும் டீ கடை ஓனர் (அவரை பார்க்க பாவமா இருக்கு!!!), அண்ணா இந்த காய்ச்சிய பால் தீர்ததும் கடைய முடிவிடுவது தான் நல்லது என்று என்னிடம் சொன்னார், கொடுமைடா சாமி!!

எங்கே போகுது நம் சமுதாயம்!!!

வீரத்திருமகன் உதித்த தினம்!!

"உங்கள் ரத்ததை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரம் வாங்கித்தருகிறேன்" என்று சொல்லி, இந்திய சுதந்திர போராட்டதை உயிர்பித்தவனின் பிறந்தநாள் இன்று!!

தன்னலமற்ற ஒரு சில தேசத் தலைவர்களில் முன்னவரான நேதாஜியின் பிறந்தநாள் இன்று.

பூரண சுயராஜ்ஜியம் பிரகடணம் செய்து வெள்ளையருக்கு சுந்தந்திர போராட்டத்தின் வன்மையை காட்டியவரின் பிறந்த நாள் இன்று!

தன் சுயநலத்தைவிட தேசமே பெரியது என்று தன் ஐ.ஏ.எஸ்க்கு இணையான ICS பதவியை துட்சமென தூக்கி எறிந்து இந்திய சுதந்திரக்கு தன் உதிரத்தை சிந்தியவரின் பிற்ந்தநாள் இன்று!!!


இந்தியாவின் முதல் சுதந்திர ராணுவப்படையான இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதில் ஒரு லட்சம் இந்தியரை படையில் இணைத்து சுதந்திர வெறியை இந்தியருக்கு செலுத்திவரின் பிறந்த நாள் இன்று!

தனித்து ஒரு தலைவனாய் நின்று ஜப்பானின் துணையுடன் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் மனிப்பூர், நாகாலாந்து பிரிட்டீஷாரிடமிருந்து கைப்பற்றி அந்தமானை தலைநகரமாக கொண்டு, சுதந்திர இந்தியாவை(ஆஸாத் ஹிந்த்) பிரகடணம் டிசம்பர் 30, 1943ஆம் ஆண்டு இந்திய தேசத்தின் சுதந்திர கொடியை ஏற்றியவரின் பிறந்தநாள் இன்று!!!முதல் சுதந்திர இந்தியாவின் தபால் தலையை ஜெர்மனியிலிருந்து 1943ல் வெளிட்டவரின் பிறந்தநாள் இன்று!!!

இன்னும் எண்ணற்ற சாதனைகளையும், சுதந்திரப் போராட்ட மைல்கல்களை தொட்டவர், அவர் செய்த தியாகங்கள், போராட்டங்கள் இன்று இந்த சுதந்திர இந்தியாவின் வரலாறுலிருந்து மறைந்து விட்டது! இனி அது வருங்காலத்தில் இனியும் கருப்படிக்கப்படலாம், இனி வரும் இந்திய மக்கள் அறியாமலே இருக்கக்கூடும்!!! எனக்கு தெரிந்த சில விடயங்களை இங்கு பகிர்கிறேன்.

இன்று நான் அனுபவிக்கும் இந்த சுதந்திர இந்தியா தோன்ற அவர் பங்கே முக்கியமானது என்று நினைக்கும் வெகுசிலரில் நானும் ஒருவன் என்ற பெருமையுடன், அவர் தியாகத்தையும், போராட்டத்தை நினைவுப்டுத்தி, அவர் பிறந்தநாளில் வாழ்த்துக்களுடன் நினைவு கூறும் ஒரு உண்மை இந்தியன்.


பி.கு:

நன்பர் சத்யா ப்ரியன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறை சுருக்கி ஒரு அருமையான பதிவை எழுதியுள்ளார், அனைவரும் மறக்காம அந்த பதிவை இங்கே சொடுக்கி சென்று படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

நா.ஜெயசங்கர்

பொங்கட்டும் பொங்கல்....

தமிழர் திருநாளாம் பொங்கல்வாழ்த்துக்களுடன் என் ஆசையையும் சேர்த்துத்தான் சொல்லி வைப்போமே! காசா! பணமா!!சமயம், சாதி, பிரிவினையில்லா சிறந்த ஒரு பொங்கலாய் இந்த பொங்கல் பொங்கட்டும்!


விவசாயம் பெருகி, விவசாயிகள் பெருவாழ்வு வாழ்ந்து, நம்மையும் வாழவைக்க இந்த பொங்கல் நல் பொங்கலாகட்டும்!பொங்கல் பொங்குவது போல் நம் மக்களுக்கு நன்மைகளும் பெருகி, நாடும் வளம் பெற இந்த பொங்கல் வழி செய்யட்டும்!வீரம் வளர்ந்த மண்ணில் உதிரம் கொட்டாமல் வெற்றிகள் கொட்டட்டும் என்ற ஆசையுடன்.நம் வலயுலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!! இங்கே நம்மை சேர்த்து வைத்த தமிழ்மணம், தேன்கூடு தளங்களுக்கு நன்றியும், சிறப்பு பொங்கல் வாழ்த்துக்களும்!!!

இந்தியா அடுத்த மைல்கல்லை தாண்டியது!

இந்தியவின் ISRO அடுத்த ஒரு சாதனையை செய்து, மேலும் ஒரு மைல் கல்லை இன்று தாண்டியது! இந்திய வானியல் அறிவியல் ஆராய்ச்சி கழகதின் PSLV-C7 பத்தாவது பயனம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து டிஸ்கவரி போன்ற பல முறை உபயோகிக்கப்படும் ஒரு விண்கலம் நம் இந்தியாவிடமும் இருக்கிறது என்ற பெருமையை நமக்கு வாங்கி தந்துள்ளது ISRO.

இந்த முறை மற்றும் ஒரு சிறப்பு அம்சம், நான்கு செயற்கை கோள்களை இது எடுத்து சென்று விண்ணில் தத்தம் பாதையில் பொருத்திவரும் என்பதே சிறப்பு. அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகளுக்கு அடுத்த நிலையை இஸ்ரோ பிடித்துள்ளது!இது தாங்கி சென்ற நான்கு செயற்கை கோள்கள்:

  • CARTOSAT-2 - இந்தியாவின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சிக்கும், GIS வசதிக்காவும் தயாரிக்கப்பட்டுள்ளது.


  • SRE-1 - Metallurgical சோதனை மற்றும் Biomimetic சோதனைகளுக்காகவும்.


  • இந்தோனேஷியாவின் LAPAN-TUBSAT


  • அர்ஜென்டினாவின் PEHUENSAT-1


என்ற நான்கு செயற்கைகோள்களை தாங்கி சென்று, அனைத்து செயற்கை கோள்களையும் அதனுடைய பாதையில் வெற்றிகரமாக சேர்த்து சாதனை கண்டுள்ளது.


இந்த வெற்றி நம் இந்தியாவை ஆசிய நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் ஏவுகனை உதவி தளமாக வளர பெரிதும் உதவும் என்றே சொல்லாம்.


ஒரு செயற்கைக்கோளை கொண்டு சென்று விண்ணில் சிதறிய காட்சிகளை பார்த்து தோல்விகளையும் துவண்டு போகாமல் , பல வெற்றி ஒன்றன் பின் ஒன்றாக செய்துவரும் ISRO இப்பொழுது நான்கு செயற்கைக்கோள்களை அசத்தலாக முடித்துக்காட்டிய நம் வின்ஞானிகளை பாராட்டித்தான் ஆகவேண்டும்.


ISROவிற்கு வாழ்த்துக்களுடன், மேலும் பல வெற்றிகளை காண வாழ்த்துக்கள் சொல்வோம் நம் வின்ஞானிகளுக்கு.

கூகுள் சொல்வது உண்மையா?

இது என்ன கூத்துங்க?? ஏதோ வீடியோ தேடிப்போன இடத்தில இந்த வீடியோ கிடைச்சுது!!! ஆடிப்போயிட்டேன்!!! ஒரு வேளை விளையாட்டுக்கு யாரோ சும்மா போட்டிருப்பங்க என்று நினைத்தேன். சரி போன போவது, காசா? பணமா? கூகுள் தேடலில் போட்டுத்தான் பார்ப்போம்ன்னு போட்ட அட என்ன ஆச்சர்யம் இந்த வீடியோவில் உள்ள மாதிரியே வருதுங்க!! நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க!!!

I'm Feeling Lucky 2006 - video powered by Metacafe

உஷார்!!! உயிர் கொல்லி உணவுகள்

சில நாட்களுக்கு முன் பலசரக்கு அங்காடிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருந்தோம், என் மகன் ஒரு பெட்டி Lay's Stax எடுத்துவந்து, அப்பா, இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லு? Zero Added Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கனும் என்று பெரிய ஆள் மாதிரி ஒரு மேட்டரை கேட்டான்!!! போன மாதம், என் மகனுக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸ் அது!!! நான் மறந்துவிட்டேன், என் மகன் ஞாபகம் வைத்து கேட்டான்!!! ஆச்சர்யமாக இருந்தது!!! இந்த தகவல் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் உபயோகமா இருக்கும் என்று தோன்றியதால் இந்த பதிவு.

Hydrogenated Trans Fat & Partially hydrogenated oils:

Trans Fat இயற்கையாகவே பசுவின் பாலில் 2 - 5% சதவீதம் இருக்கும். ஆனால் Hydrogenated Trans Fat என்பது செயற்கையாக செய்யப்படும் Trans Fat. இது பசு, எறுது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும், சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது!!!
இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து!!
இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL)) சத்தை குறைத்து, கெட்ட கொழுப்பு (Low-density lipoprotein (LDL)) சத்தை இருமடங்காக உயர்த்தி நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது!!!

பல எதிர்வினைகளையும் உண்டாக்கும் கொழுப்பு!!! இது இருதய நோய்(coronary heart disease), Cancer, Diabetes மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு. Partially hydrogenated oils என்பது இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை. நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பாக்கெட்டில் கிடைக்கும் உருலைகிழங்கு சிப்ஸ் வகைகள், பீட்ஸா, சாக்லெட் என் துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது!!!

இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த Partially hydrogenated oils/Hydrogenated Trans Fat ?

  • இந்த எண்ணைகள் பல முறை திரும்ப திரும்ப உபயோகித்தாலும், தயாரித்த உணவில் மணம் மாறாது!
  • 18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்த கெட்டுப் போகாமல் வைத்துக்கொள்ள முடியும். சாதாரண எண்ணையில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது!!
  • இந்த எண்ணையில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே!! நீங்களே கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யற ஃப்ரென்ச் ஃப்ரைஸ் மெக் டொனால்ட், மேரி ப்ரெளன், பீஸா கார்னர்களில் கிடைக்கும் அளவுக்கு சுவை இல்லை என்று!!!

பல முன்னேறிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்த Hydrogenated Trans Fat உள்ள உணவுகளை தடை செய்து வருகிறது!! மெக் டோனால்ட், KFC போன்ற பல நிறுவனங்கள் இன்று இதை உபயோகிப்பதால் பல கோடி டாலர்கள் வழக்குகளில் போராடிவருகின்றன!!! சில நிறுவனங்கள் ஏப்ரல் 2007 முதல் இந்த எண்ணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் உத்தரவாதங்களும் தந்திருக்கின்றன, அட இந்தியவில இல்லைங்க, அமெரிக்காவிலே!!! இந்தியாவில் இன்றும் மெக் டோனால்ட், KFC போன்றவை சுதந்திரமாக இந்த எண்ணை உபயோகித்து நம் ஆரோக்கியத்தை அழித்து வருகிறது.

நீங்க செய்யவேண்டியது என்ன?

இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ், ப்ரெச் ஃரைஸ் என எதை வாங்குவாதா இருந்தாலும் அதில் Hydrogenated Trans Fat = Zero (0) , Zero Added Hydrogenated Trans Fat , Zero Hydrogenated Vegitable Oil இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பொருட்களை வாங்குங்கள்!!!

டாப் 10 Hydrogenated Trans Fat உள்ள உணவுகள் இங்கே சொடுக்கவும்.

உபரி தகவல்:

உங்கள் வீட்டில் பூரி மற்றும் Deep Fry செய்யப்பட்ட மிச்சம் ஆகும் எண்ணையை திரும்ப உபயோகித்தாலும் அந்த உணவு பொருட்களில் இது போன்ற Hydrogenated Trans கொழுப்பு நிறைந்துவிடும். அதனால் ஒரு முறை உபயோகித்த எண்ணையை திரும்ப உபயோகிக்காமல் இருப்பது நல்லது!!! வீட்டு உபயோகத்தில் இந்த கொழுப்பை கட்டுப்படுத்த பல நல்ல தகவல்கள் இங்கே சொடுக்கவும்.