இந்தியா அடுத்த மைல்கல்லை தாண்டியது!

இந்தியவின் ISRO அடுத்த ஒரு சாதனையை செய்து, மேலும் ஒரு மைல் கல்லை இன்று தாண்டியது! இந்திய வானியல் அறிவியல் ஆராய்ச்சி கழகதின் PSLV-C7 பத்தாவது பயனம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து டிஸ்கவரி போன்ற பல முறை உபயோகிக்கப்படும் ஒரு விண்கலம் நம் இந்தியாவிடமும் இருக்கிறது என்ற பெருமையை நமக்கு வாங்கி தந்துள்ளது ISRO.

இந்த முறை மற்றும் ஒரு சிறப்பு அம்சம், நான்கு செயற்கை கோள்களை இது எடுத்து சென்று விண்ணில் தத்தம் பாதையில் பொருத்திவரும் என்பதே சிறப்பு. அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகளுக்கு அடுத்த நிலையை இஸ்ரோ பிடித்துள்ளது!



இது தாங்கி சென்ற நான்கு செயற்கை கோள்கள்:

  • CARTOSAT-2 - இந்தியாவின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சிக்கும், GIS வசதிக்காவும் தயாரிக்கப்பட்டுள்ளது.


  • SRE-1 - Metallurgical சோதனை மற்றும் Biomimetic சோதனைகளுக்காகவும்.


  • இந்தோனேஷியாவின் LAPAN-TUBSAT


  • அர்ஜென்டினாவின் PEHUENSAT-1


என்ற நான்கு செயற்கைகோள்களை தாங்கி சென்று, அனைத்து செயற்கை கோள்களையும் அதனுடைய பாதையில் வெற்றிகரமாக சேர்த்து சாதனை கண்டுள்ளது.


இந்த வெற்றி நம் இந்தியாவை ஆசிய நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் ஏவுகனை உதவி தளமாக வளர பெரிதும் உதவும் என்றே சொல்லாம்.


ஒரு செயற்கைக்கோளை கொண்டு சென்று விண்ணில் சிதறிய காட்சிகளை பார்த்து தோல்விகளையும் துவண்டு போகாமல் , பல வெற்றி ஒன்றன் பின் ஒன்றாக செய்துவரும் ISRO இப்பொழுது நான்கு செயற்கைக்கோள்களை அசத்தலாக முடித்துக்காட்டிய நம் வின்ஞானிகளை பாராட்டித்தான் ஆகவேண்டும்.


ISROவிற்கு வாழ்த்துக்களுடன், மேலும் பல வெற்றிகளை காண வாழ்த்துக்கள் சொல்வோம் நம் வின்ஞானிகளுக்கு.

Comments

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.
//இந்த வெற்றியை தொடர்ந்து டிஸ்கவரி போன்ற பல முறை உபயோகிக்கப்படும் ஒரு விண்கலம் நம் இந்தியாவிடமும் இருக்கிறது //

இதை இந்தியா இன்னும் எட்டவில்லை. டிஸ்கவரி விண்கலம். ராக்கெட் இல்லை.
சோதனைகளையும் தாண்டி சாதனை படைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், அதன் ஊழியர்கள், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.

இந்தியாவிற்க்கு பெருமை சேர்க்கும் மற்றொரு சாதனை.

வாழ்த்துக்கள்!!!
சீனு said…
மகிழ்ச்சியான செய்தி. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.
We The People said…
பின்னூடங்களுக்கு நன்றி மாஹிர், நன்மனம்,சீனு. நாடோடி சார் நீங்க சொல்லறதும் கரெக்ட் தான் டிஸ்கவரி விண்கலம் தான், PSLV விண்கலம் அல்ல. PSLV ஒரு ராக்கெட்! அதில் SRE-1 செயற்கை கோள் மட்டுமே திரும்ப உபயோகிக்கும் திறமை கொண்டது. தவறை திருத்தியமைக்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்துக்கும் நன்றி நாடோடி சார். :)
Anonymous said…
naan aasath:

idhu ennanga perushu!

namma anumaaru imaiya malayava thuukunaaru ... valalae kadalula paalam pottaaru!

Pushpaga vimanam moolama thevalogathukka poanathu vedhakaala naagarigam nammalathu

ennankireenga
We The People said…
aasath சார்,

ஏன் சார் என்னை வெச்சுத்தான் காமெடி பண்ணனும்னு ஒரு முடிவோட தான் இருக்கீங்களா?? இது என்ன விளையாட்டு சார்??

புஷ்பக் விமான டெக்னிகல் டாக்கிமெண்ட் எழுதி வைக்காம விட்டுட்டுப்போயிட்டாங்க சார் அதனால தான் இந்த புது டெக்னாலஜி!!! :))))
Anonymous said…
From aasath


achchacho ambigalaa ..

ithu naan chollala

newyork-la unga mams-kal chetha naali kathachadhu at Tea-shop
We The People said…
என்ன ஆசாத் சார்,

ஆரம்பிச்சுட்டீங்களா? மாமா? கீமான்னு. அடங்க மாட்டீங்க போல... அது என் மாம்ஸ்கள்?? யாருபா அவங்க?? இப்படி ஒரு வெட்டி வேலையா உங்களுக்கு?? சரி விடுங்க ஏதோ சொல்லிட்டு போங்க, உங்களை நான் என்ன செய்யமுடியும்!!!

எல்லாம் சுதந்திரம் செய்யற வேலை!!!
We The People said…
Sivabalan has left a new comment on your post "இந்தியா அடுத்த மைல்கல்லை தாண்டியது!":

ஜெய்சங்கர் சார் நல்ல விசயம்.. நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்!!

********
சாரி சிவா உங்க comment தவறுதலா Reject ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
சீனு said…
//எல்லாம் சுதந்திரம் செய்யற வேலை!!!//

B-)
jeevagv said…
இஸ்ரோவிற்கும் உங்கள் பதிவிற்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!
ஜய் ஹிந்த்!
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

கடந்தமுறை நடந்த அசம்பாவிதத்தால் சோர்ந்துவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது.

இதன் மூலம் இந்தியன் சாமன்யன் அல்லன் என்பதை உலகுக்கு உணர்த்திய இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துக்கள் பல.. தொடரட்டும் அவர்களுடைய வெற்றி..
Unknown said…
Victory to India.Jai Hind.
We The People said…
வாழ்த்துக்கள் சொன்ன சீனு, செல்வம், ஜீவா நன்றிகள்.

//முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.//

மிக சரி ஜோசப் சார். தோல்விக்கு அஞ்சாமல், சாதனையை நோக்கி வெற்றி நடைப்போட்டதன் விழைவே இந்த உயர்வு!!!
Anonymous said…
from aasath

ok if it is vetti vealai

why are lot of them jumping with the word "JAI HIND"

What is the relation of this with science like "uregaa"
//uregaa//

ஹலோ யுரேகா சயின்ஸ் வேர்ட் இல்ல. அழிஞ்சி போன கிரேக்க சொல்லு. மீனிங்கு "கண்டுபிடிச்சிட்டேன்".

ஓ.கே
We The People said…
aasath சார் அது "Eureka"..

நெஜமாவே உங்களுக்கு அதனோட அர்த்தம் தெரியாதா??

எங்கள வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!!
Anonymous said…
from aasath

sorry for typo error

that is not joke

if not clear read another time at my quest
We The People said…
"Jai Hind" means victory to India. thats why our ISRO guys says Jai Hind. Love towards nation and its success is seen on it...
எழில் said…
Actually reentry vehicle test is the major test for this flight. And to my knowledge Indian PSLV is the first in deploying 4 sats at the same flight!

Jai Hind