விஜயகாந்த் - ரெய்டு - நேரடி ரிப்போர்ட்

விஜயகாந்த் வீட்டில் ரெய்டு என்று இட்லிவடை பதிவை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்,
என் அலுவலகம் விஜயகாந்தின் வீட்டுக்கு அருகாமையில் உள்ளது, உடனே நிலைமை என்னவென்று பார்க்க ஒரு சின்ன விசிட், விஜயகாந்தை பெரிய ஆளாக்கிவிட்டுத்தான் அடங்குவேன் என்று ஏன் ஒற்றை காலில் நிற்கிறார்கள் இந்த ஆளும் கட்சிகள்??!!!

இங்கே ஒரு பதட்ட சூழ்நிலையே காணமுடிகிறது, 2 போலீஸ் வண்டிகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுவிட்டது!!! தொண்டர்கள் குவிந்துள்ளனர், அதே அளவுக்கு போலீஸும் குவிந்துள்ளது!! புதியதாய் போலீஸில் இணைந்த ஆசென்ட் கார்கள் ஒரு நான்கு, தே.மு.தி.க முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் கார்கள் என்று ஏரியாவே ரங்கநாதன் வீதி அளவுக்கு ஒரு கூட்டம்!!!

டீ கடையில் காசு கொடுக்காமல் டீ, காபி, தம் அடித்து செல்லும் போலீஸார், சண்டையிடும் டீ கடை ஓனர் (அவரை பார்க்க பாவமா இருக்கு!!!), அண்ணா இந்த காய்ச்சிய பால் தீர்ததும் கடைய முடிவிடுவது தான் நல்லது என்று என்னிடம் சொன்னார், கொடுமைடா சாமி!!

எங்கே போகுது நம் சமுதாயம்!!!

8 comments:

said...

// விஜயகாந்தை பெரிய ஆளாக்கிவிட்டுத்தான் அடங்குவேன் என்று ஏன் ஒற்றை காலில் நிற்கிறார்கள் இந்த ஆளும் கட்சிகள்??!! //

அது தான் காரணம் ! கரக்கிட்டா புடிச்சிங்க pointa ...

said...

கடையை மூடினாரா இல்லையா ?

said...

//கடையை மூடினாரா இல்லையா ? //

எந்த கடை தலைவா???

said...

டீ கடையை அப்பவே மூடிட்டாங்க ரவி :((

தாகத்துக்கு டீ கூட இல்ல...

Anonymous said...

From aasath

What is the use of this pathivvuu ... like the raid on house of VKanth

said...

//தாகத்துக்கு டீ கூட இல்ல... //

திமுக கூட்டங்களுக்கு சென்றால் தாகத்துக்கு "தண்ணி" நிறையவே கிடைக்கும்.

//What is the use of this pathivvuu ... like the raid on house of VKanth//

இந்த கேள்விய கலைஞரை அள்ளிக்கிட்டு போனப்ப கேட்டிருக்கவேண்டும்.

said...

////From aasath

What is the use of this pathivvuu ... like the raid on house of VKanth////

ஆசாத், இன்பர்மேஷன் ஷேரிங் அப்படீன்னு வச்சிக்கங்க...

நேரடி ரிப்போட்னு வச்சிக்கங்க...

அவர் எதுவெனா எழுதுவார். அதேன் உங்களுக்கு எரிச்சலாகுது ?

said...

சிநேகிதன்,
//திமுக கூட்டங்களுக்கு சென்றால் தாகத்துக்கு "தண்ணி" நிறையவே கிடைக்கும்.//

நாங்க எல்லாம் அந்த "தண்ணி" குடிக்கறதில்லையே சிநேகிதன்!!!

//இந்த கேள்விய கலைஞரை அள்ளிக்கிட்டு போனப்ப கேட்டிருக்கவேண்டும். //

என்னது விஜயகாந்த் தான் கலைஞரை அள்ளிக்கிட்டு போனாறா? சொல்லவே இல்லை??!! ஆச்சர்யமா இருக்கே!!!

செந்தழல் ரவி,

//அவர் எதுவெனா எழுதுவார். அதேன் உங்களுக்கு எரிச்சலாகுது ?//

ஆஸாத் என்னை ரொம்ப நாளா ரவுண்ட் கட்டிக்கிட்டு இருக்காரு, ஏதோ விட்டகுறை தொட்டக்குறை போல அவர் பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டுப்போறாரு நம்ம, நம்ம வேலைய பார்ப்போம்ன்னு விட்டுவிட்டேன்!! :)))