நீயா? நானா? - டாக்டர் அன்புமணி

நேற்று இரவு 9 மணிக்கு விஜய் டி.வியில் நீயா ? நானா? என்ற ஒரு டாக் ஷோவில், மருத்துவ மாணவர்கள் ஒரு வருட கட்டாய கிராமபுற சேவையை எதிர்த்து பலமாக குரல் எழுப்பினர், ஆனால் அந்த பலம் டாக்டர் அன்புமணி அவர்கள் வந்த பிறகு காற்றில் பறந்தது! நிகழ்ச்சியை பார்த்த பிறகு டாக்டர் அன்புமணியை பாராட்டவே தோண்றியது. அந்த நிகழ்ச்சியை பார்த்தில் எனக்கு கிடைத்த தகவல்கள்!

 • அரசு கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருடம் வெறும் 4000 முதல் 6000 வரையே செலவு செய்கிறார்கள்!
 • அதே மருத்துவ படிப்புக்கு தனியார் கல்லூரிகள் 4 முதல் 6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது!
 • அரசு பெரும் செலவு செய்து (சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு மாணவருக்கும் செலவு!) அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரே ஒரு வருடமாவது சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது!
 • நிரந்தர வேலையை கொடுத்தால் கிராமப்புர சேவை செய்வதாக கூறிய இவர்களின் வாதம் ஒரு சப்பை கட்டாகவே எனக்கு தோண்றியது!
 • இவர்களை எதிர்த்து சில புள்ளிவிவரங்களுடன் வந்த சில டாக்டர்கள், தாங்கள் ஏன் கிராமப்புறங்களில் வேலை செய்யவில்லை/ முன்வரவில்லை என்று சொல்ல முடியாமல் எஸ்கேப் ஆனர்.
 • டாக்டர் அன்புமணி தான் விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் டாக்டராக 2 வருடம் வேலை செய்ததாக சொல்லி அனைவருடைய கைத்தட்டையும் வாங்கினார். (உண்மை என்று நம்புவோம்)
 • டாக்டர் அன்புமணி மேலும் சில முக்கிய புள்ளிவிவரங்களை சொன்னார், 73% இந்தியா கிராமங்களில் தான் உள்ளது! அதில் 25% மட்டுமே சிறிதளவேனும் சுகாதார வசதி படைத்துள்ளது!!
 • ஸாட்வேரில் இந்தியா அமேரிக்காக்கு இணையாக நம்பர் ஒன்னாக பேசப்படுவதாகவும் ஆனால் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவையை மிகவும் பின் தங்கியா நாடுகளான எத்தியோப்பியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இணையா பேசப்படுவதாக வருத்தப்பட்டார்!
 • வடகிழக்கு மாநிலங்களிலும், சட்டிஸ்கர், பிஹார் போன்ற மாநிலங்களில் மருத்துவர் வேலைக்கு யாரும் சேர மறுக்கிறார்கள்! என்று அள்ளி வீசினார் புள்ளிவிவரங்களை!
 • ஒவ்வொறு மாணவனுக்கு 10 லட்சம் ரூபாய் செலவு செய்யும் அரசு குறைந்தபட்சமாக ஒரு வருட சேவையை எதிர்ப்பார்ப்பது தவறா என்று வினா எழுப்ப மாணவர் தரப்பு வாயடைத்துப்போனது!
 • மேலும் இந்த ஒரு வருட கிராமப்புற வேலை திட்டத்தை தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு வரவில்லை எனறு ஒரு குறிப்பும் கூறினார்.
 • குடும்ப சூழல், கஷ்டங்கள், மருத்துவ உபகரங்கள் , மற்ற வசதியற்ற கிராமபுறங்கள் இது போன்ற பல விசயங்களை சொல்லி எஸ்கேப் ஆக பார்த்தவர்களை இடுக்கு பிடி போட்டு பிடித்தார் அமைச்சர் அன்புமணி! உங்களுக்கு நிரந்தர வேலைதான் பிரச்சனை என்றால் வாங்க பீஹார், மிசோரம், ஒரிஸா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கு, உங்களுக்கு நிச்சயம் வேலை நானே வாங்கித்தருகிறேன் என்றாரே பார்க்கலாம்! அது அசத்தல்!
 • நீயா நானா? நிகழ்ச்சி நடத்துனரான கோபிநாத் இது தான் நேரம் என்று அனைத்து மாணவர்களை பார்த்து கேட்டார், இப்ப நிரந்திரம் வேலை ரெடி, யாரெல்லாம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமப்புற வேலைக்கு போக ரெடி என்று?! பலரும் வேண்டா வெறுப்பாக விண்ணப்பம் எழுதி கொடுத்ததை பார்க்கமுடிந்தது!!!
 • விண்ணப்பம் எழுத எழுதுகோல் இல்லை என்று சொன்ன ஒரு மாணவனுக்கு அமைச்சர் அன்புமணி அவருடைய எழுதுகோள் எடுத்துக்கொடுத்து எழுத சொன்னார் :)
 • கடைசியா விண்ணப்பங்களை கோபி வாங்க சென்றபோது அன்புமணி, நீங்க சிறமப்படாதீங்க நானே வாங்கிக்கொள்கிறேன் என்று அவரே மாணவர்களிடம் வாங்கிக் கொண்டார் :)
 • ஒரு வேலையையும் செய்யாம வெட்டியா மேடை போட்டு நான் தமிழத்துக்கு அதை செய்தேன், இதை செய்தேன் ஒன்றுக்கு பேராதா வெட்டி விசயத்தை பீத்தி, வெற்று அரசியல் பேசும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இதையாவது செய்ய துடிக்கும் ஒரு அமைச்சரை பார்த்ததில் சந்தோஷமே!!
எது எப்படியோ! இந்த நீயா? நானா நிகழ்ச்சி பல விசயங்களில் தவறு என்று எண்ணிய விசயங்களை மாற்றியமைத்திருக்கு, Including one against Dr. Anbumani Ramadoss.

பி.கு:

விஜய் டி.விக்கு என்ன கடுப்போ தெரியல, டாக்டர் அன்புமணியின் பெயரை போடும் போது டாக்டரை முன்னாடி போடாம வெறுமனே அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் :))) எதோ என்னால் முடிந்தது :)

இந்த நிகழ்ச்சி ஒவ்வொறு ஞாயிறும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பராங்க.