இது தான்டா உள்குத்து!

வழக்கமாக இவர் கொடுப்பார் உள்குத்து மக்களுக்கு! இவருக்கும் வெள்ளிக்கிழமை ஒரு சூப்பர் உள்குத்து கிடைத்தது.

பாராளமன்றத்தில் வெள்ளிக்கிழமை விலைவாசி உயர்வு பற்றி விவாதம் வந்த போது பா.ஜா.க வும், இடதுசாரிகளும் நிதியமைச்சரின் மெத்தன போக்கே இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று சொல்லி முதலில் பா.ஜா.க பாராளமன்றத்திலிருந்து வெளியேறியது, அடுத்து அதே காரணத்தை சொல்லி இடதுசாரிகளும் வெளியேறியது, இதை தொடர்ந்து விவாதத்தில் பங்கு கொண்ட பகுஜன் சாமாஜ், ராஷ்டிரிய ஜனதாதள் என எல்ல கட்சிகளும் வெளியேறியது.

ஸ்ப்பா தப்பிச்சோமுடா என்று, மீண்டும் ஏன் விலைவாசி உயர்ந்தது என்று Statistical points (cost-push and demand-pull inflation ) அள்ளிவீச தொடங்கினா? யாரோ எதிர்த்து பேசராங்களே என்று அண்ணன் பார்க்கிறார், அட அத்தனை காங்கிரஸ் உறுப்பினர்களும் தலைவரை பிச்சு ஒதரியிருக்காங்க! "நங்க பொது மக்களை நேர்ல சந்திக்கனும்(அடுத்த தேர்தலுக்கு!!) இப்படி விலைவாசி உயர்ந்துக்கிட்டே போனா எங்களைத்தான் மக்கள் கேள்வி கேட்ப்பார்கள், சாதாரண மக்கள் பிரச்னைக்கு உள்ளாகராங்க, நீங்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுத்த முயற்சி எல்லாம் வேஸ்ட் " என்ன சரமாரியா திட்டி தீர்த்து இருக்கிறார்கள் காங்கிரஸ் MPக்கள் ... தல ரொம்பவே வெக்ஸ் ஆயிருக்காரு! மக்களுக்கே தண்ணி காட்டுற தலைக்கே தண்ணிய தேடிவேண்டிய நெலமை! ஐயோ நான் குடிதண்ணிய சொன்னேன்!

இப்படியெல்லாம் நம்ம அமைச்சரை நாமே திட்ட கூடாதுன்னு Parliamentary Affairs மந்திரி B K Handique சொல்ல, செளதான்னு ஒரு காங்கிரஸ் உறுப்பினர் செம கடுப்பாயி "கட்சிக்குள்ளயும் பேச விட மாட்டேன்னு சொல்லரீங்க, பாராளமன்றத்திலும் பேசக்கூடாதுன்னு சொல்லரீங்க, அப்ப நாங்க பேசாம ராஜினாமா செஞ்சிட்டு போறோம்ன்னு" காட்டமா பதில் கொடுத்திருக்காரு! இதுல வேற வெளிநடப்பு வேற செஞ்சிருக்காங்க நம்ம காங்கிரஸ் MPகளும்.

கடைசியா பாராளமன்றத்தில் மொத்தம் 40 பேரு தான் மிச்சம் இருந்திருக்காங்க! அவங்க யாருன்னு கேக்கறீங்களா!! அட வேற யாரு மந்திரீங்க மட்டும் தான்! அவர்கள் தான் வெளியேற முடியாதே!

இந்தியாவில் ஜனநாயகம் ரொம்ப கொளுந்து விட்டு வளரது! இல்லன்ன காங்கிரஸ் அரசை எதிர்த்து காங்கிரஸ் MPகளே பாராளமன்ற வெளிநடப்பு போராட்டம் பண்ணுவாங்களா!

பன்ச் டயலாக்:

RJD MP ஒருவர் விஜய் கிருஷ்ணான்னு பேரு, அவர் ஒரு சூப்பர் டயலாக் சொல்லியிருக்காரு பாராளமன்றத்தில:

"He has completely failed to check the prices. Why don't you remove this minister,"


வாழ்க சனநாயகம்!!

செய்திக்கு நன்றி - www.ibnlive.com

நாடகம்.காம்

நண்பர் Mejoritypeople என்னிடம் பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் இந்த பதிவில் ஒரு கேள்வி எழுப்பினார், அதற்கு நான் தந்த பதில் அதை தனி பதிவாக கொஞ்சம் விரிவாக போட்டால் அனைவருக்கும் அறிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என்று தான் இந்த பதிவு.

Mejoritypeople கேள்வி:
இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும் CPI and CPM நிலையும்ஒன்று என எடுத்து கொள்ளலாமா ?

என் பதில்:

CPI and CPM முழு நேர வியாபாரிகளாகிவிட்டதாக தான் எனக்கு தோண்றுகிறது??!! எந்த முதாலாளித்துவ கொள்கையை எதிர்த்தார்களோ அதை இன்று ஆதரிப்பது போல் பெங்காலில் வேலைகள் நடக்கிறது! அன்னிய முதலீடு வாங்க கூடாது என கூறும் இடதுசாரிகளின் அரசு பெங்காலில் அன்னிய முதலீட்டுக்கு காத்திருக்கிறது!

அவர்களை மக்களுக்கு நன்மை செய்ய நாம் பாராளமன்றத்துக்கு அனுப்பினால் அவர்கள் காங்கிரஸுடன் கை கோர்த்து 6 முறை பெட்ரோல் விலை ஏற்றிய போது வாயளவில் போராட்டம் செய்து! மக்களின் நண்மையை கருத்தில் கொள்ளாமல் வாய்ப்பேச்சில் வீரர்கள் ஆனதில் எனக்கு பெரும் வருத்தம்.

ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது இவர்கள் போராட்டம் செய்வதும், உடனே காங்கிரஸ் நவரத்தின நிறுவனங்களான அரசு நிறுவணங்களை விற்றுவிட போகிறோம் என்று சொல்வது! உடனே பெட்ரோல் மேட்டரை கைவிட்டு அந்த அரசு நிறுவணங்களை காப்பற்ற போவது போல் பாவலா காட்டுவது! பின்னர் பெட்ரோல் மேட்டரை பேசுவதையே மறந்துவிடுவதும், பார்க்கும் போது CPI and CPM மற்றும் காங்கிரஸ் இனைந்து நடத்தும் நாடகமாகவே எனக்கு தோண்றுகிறது (ஆதாரம் epaperகளை ஆராய்ந்து பார்த்தால் புரியும்).

CPI and CPM உண்மையில் மக்கள் ஆதரவு கொள்கையை கைவிட்டுவிட்டதாக எனக்கு தோண்றுகிறது.

நாடக Template:

ஒவ்வொரு முறையும் ஒரே நாடக Template:

Scene 1:

பெட்ரோல் விலை உயர்வும்.

Scene 2:

CPI and CPM போராட்டம்

Scene 3:

காங்கிரஸ் அரசின் நவரத்னா என அழைக்கப்படும் பொது துறை பங்கு விற்பனை அறிவிப்பு.

Scene 4:

CPI and CPM பெட்ரோல் விலையேற்றத்துக்கான போராட்டம் மறந்து(??!!) பங்கு விற்பனை எதிர்த்து போராட்ட அறிவிப்பு.


Scene 5:

காங்கிரஸ் அரசின் பொது துறை பங்கு விற்பனை வாபஸ் அறிவிப்பு. (சில நேரம் BHEL, NALCO, NLC, ETC.,)

Scene 6:

CPI and CPM பங்கு விற்பனை எதிர்த்து போராட்ட வாபஸ் + வெற்றி அறிவிப்பு.

இதே Sceneகள் வைத்து தினம் தினம் நாடகங்கள் அரங்கு ஏறுகிறது!

கடைசியாக நடந்த நாடகம்:

பெட்ரோல் விலை உயர்வும், அடுத்து CPI and CPM போராட்டம், அடுத்து காங்கிரஸ் அரசின் NLC & NALCO பங்கு விற்பனை அறிவிப்பு, CPI and CPM பங்கு விற்பனை எதிர்த்து போராட்டம், CPI and CPM பெட்ரோல் விலை உயர்வு போராட்டம் கைவிடப்பட்டது, காங்கிரஸ் அரசு NLC & NALCO பங்கு விற்பனை வாபஸ் அறிவிப்பு, CPI and CPM வெற்றி கொண்டாட்டம்.

இதில் உண்மையில் முழு புசனிக்காயான பெட்ரோல் விலை ஏற்றம் மறைக்க பட்டது. இதற்கு முன் NLC & NALCO பங்கு விற்பனைக்கு பதில் BHEL!!! 6 முறை அதே scenes பொதுதுறை கம்பெனியின் பெயர் மட்டும் வேறு.

ஐயோ! ஐயோ! இவர்கள் நம்மை இன்னும் சின்னபுள்ள தனமாகவே நினைச்சுகிட்டு இருக்காங்க போல!! இது புரியாமல் போக மக்கள் என்ன முட்டாள்களா??

இதை நேற்று எழுதி முடித்துவிட்டு வீட்டுக்கு போய் TV போட்டா.. ஒரு பாட்டு ... இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே...

ஒரு பாசிடிவ் அப்ரோச்!

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு பதிவு! எழுத பல விசயங்கள் சிந்தையில் வந்தது ஆனால் ஏனோ அதை எழுத முடியவில்லை, சில பாதியில் கைவிடப்பட்டது (நீங்க தப்பிச்சிட்டீங்க!!!) :) இன்னும் சில எழுத்தில் உள்ளது... உங்களை சும்ம விடுவனா?!

நன்பர்கள் வெகுவாரியா என் பிளாக் பத்தி சொன்ன ஒரு குறை, பாசிடிவ் அப்ரோச்(Positive Approach) இல்லை என்பது! சரி என்றே எனக்கும் தோன்றியது! அதனால் இந்த பதிவு சில நல்ல விசயங்களை பற்றி எழுத நினைத்தேன். இங்கு குறை பல இருந்தாலும் சில நல்ல விசயங்கள் நடக்க தான் செய்கிறது! சில நல்ல விசயங்கள் கேட்க தான் செய்கிறது! அதில் ஒன்று சில நட்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் பழைய படங்களையும் மற்றும் சிறு குறிப்புக்களையும்! இதை நான் உங்களுடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

தும்பா ராக்கெட் ஏவுதளம் உருவான கதை:

மேற்கத்திய நாடுகள் நிலவுக்கு பயணிக்க துடங்கிய 1960களில், இந்தியா தன் விண்வெளி ஆராய்ச்சியில் பாதம் பதிக்க எடுத்த கன்னி முயற்சிகள் மற்றும் அதற்க்காக நம் விண்ஞானிகள் பட்ட பாடுகள்! அப்பொழுது எடுக்கப்பட்ட சில படங்கள் பார்க்க பிரம்மிப்பாய் இருந்தது!

முதல் பாடம்:

தும்பா ராக்கெட் ஏவுதளம் அதிகார பூர்வமாய் தன் விண்வெளி ஆராய்ச்சியை அதிகார பூர்வமாய் நவம்பர் 21, 1963 துவங்கியது.

Thumba Equatorial Rocket Launching Station (TERLS) துவக்க முக்கிய பங்களித்தவர் என்று சொல்ல வேண்டுமானால் டாக்டர். விக்ரம் சாராபாய் தான் சொல்ல வேண்டும். அவருக்கு உதவியாய் உருதுனையாய் இருந்தவர்தான் இன்றைய ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம். அவர்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆற்றிய பங்கு கீழே உள்ள படங்களில் பார்க்க முடியும். அருகில் உள்ள படம் டாக்டர். விக்ரம் சாராபாய் அவர்களின் படம்.

இந்திய தன் விண்வெளி ஆராய்ச்சி பாதையை துவக்க அமெரிக்கவிலிருந்து Nike Apache sounding rocket வாங்கிவரப்பட்டு 6 மாத முயற்சியில் ஏவுதளமும், Payload தயாரிக்கப்பட்டது. இந்த முயற்சியின் பலனே இன்றைய Vikram Sarabhai Space Centre மற்றும் ISRO.


அருகில் உள்ள படம் மேல் நாட்வர்க்கு அன்று சிரிப்பை வரவழைத்திருக்கலாம் ஏனெனில் இவ்வாறு தான் TERLSக்கு ராக்கெட்டின் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டது. அன்று விண்ஞானிகள் சைக்கிளில் அதை எடுத்து செல்வதை பார்க்கும் போதே அவர்களின் உழைப்பும், அவர்களின் அரும்பாடுகளும் இன்று அவர்களையும், இந்தியாவை சிகரத்தை அடையச் செய்துள்ளதை பாராட்டியாக வேண்டும்.அன்று Dr.விக்ரம் சொன்னது

" We are convinced that if we are to play a meaningful role nationally, and in the community of nations, we must be second to none in the application of advanced technologies to the real problems of man and society."
வளர்ந்த நாட்டவர் போல் நிலாவை தொடுவதும், விண்னுக்கு மனிதனை அனுப்புவதும் என் குறிக்கோள் அல்ல, என் மக்களுக்கும், சமுதாயத்துக்கு உதவியாக உள்ள தொழில்நுட்ப வளர்ச்சில் எங்கள் பங்கு முதாலாவதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.

இன்றும் அவர்களின் சீரீய சிந்தனையும், பங்கும் அதன் பலன்களும் நம்மால் உண்ரமுகிறது.

வலதுபுறம் வான்தொடும் ராக்கெட்டுகளை நம் வின்ஞானிகள் சைக்கிளில் எடுத்து செல்லும் மற்றொரு புகைப்படம்.

கீழே உள்ள புகைப்படத்தில் நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர் Payload ரெடி செய்து கொண்டுயிருக்கிறார்! யார் தெரியுமா! நம்முடைய இன்றைய முதல் குடிமகனும், அன்றைய இந்திய வின்வெளி ஆராய்ச்சியின் சிற்பிகளில் ஒருவருமான டாக்டர். APJ. அப்துல் கலாம்.


தகவலுக்காக: இடது புறம் டாக்டர். APJ. அப்துல் கலாம், இடது புறம் திரு. ஆராமுதன். ( ஏங்க நாம எப்பவாவது இப்படி வேலை செய்ய முயற்சி செய்திருப்போமா!!!)


இடதுபுறம் இந்தியாவின் முதல் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்ப விண்ஞானிகள் Launch Padடில் ராக்கெட்டை பொருத்திக் கொண்டிருக்கும் காட்சி.


Nike Apache rocket விண்வெளியை நோக்கி பயனிக்க தயாராக உள்ள காட்சியை வலதுபுறம் உள்ள படத்தில் பார்க்கலாம்.

இத்தனை வேலைகளையும் செவ்வனே செய்ய அவர்களுக்கு A/C அறை இல்லை, ஆய்வு கூடம் இல்லை, TERLSக்கு சொந்த இடமும் இல்லை. Hilight விசயம் என்ன தெரியுமா? அத்துனை வேலைகளும் செய்தது தும்பாவில் உள்ள ஒரு கத்தோலிக்க churchசிலும் அதனை சார்ந்த கட்டிங்களும் தான்! அது தான் அவர்களின் ஆய்வுகூடம், அது தான் அவர்களின் பட்டறை, தங்கும் இடம், அலுவலகமாகவும் இருந்தது என்பது வரலாறு.


இடதுபுறம் Nike Apache rocket விண்வெளியை நோக்கி பயனித்த போது எடுத்த படம்.

இவ்வளவு கஷ்டப்பட்டு இட்ட அஸ்திவாரத்தால் தான் நாம் இன்று தொலைத்தொடர்பு வளர்ச்சியை கண்டுள்ளோம் என்றால் மிகையாகது.

இன்று தும்பாவில் 3 Launch Padகள் உள்ளது. இன்றும் வாரம் ஒரு ராக்கெட் வானிலை ஆராய்ச்சிக்காக தும்பாவிலிருந்து விண்ணுக்கு செல்கிறது. இன்றும் அந்த கத்தோலிக்க church TERLS வளாகதின் மத்தியில் உள்ளது.


அருகில் உள்ளது இன்றைய தும்பா ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள Launch Pad.


அன்றைய டாக்டர். அப்துல் கலாமின் மேலும் ஒரு புகைப்படம்.


இவர்கள் பட்ட இன்னல்கள் ஒரு நாள் தான் குடியரசு தலைவன் ஆகுவோம் அல்லது ISROவின் தலைவராக ஆவோம் என்று எண்ணி அல்ல. கலப்படம் அற்ற நாட்டு சேவை! இதை பாராட்டவோம், தலைவணங்குவோம்.

அன்றைய விக்ரம் சாராபாயை , கலாமை , ஆராமுதுவை போல நாமும் நம் பங்கு இன்னது என்று முடிவு செய்து அதை அடைவதற்கு வழிவகைகள் செய்து, சிறப்பாக நம் சமூக கடமையை செய்ய ஒவ்வொரு இளைஞனும் முடிவெடுத்தால் நாளைய உலகம் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்கும் என்பது நிதர்சனமான உண்மை.

கழுதை கைது ;)

இது காஞ்சிபுரம் - சூன் 29, 2006 நடந்த காமெடி:

ஒரு கழுதையை கைது செய்தது காஞ்சிபுரம் காவல்துறை. எதுக்குன்னு பார்க்கறீங்களா? பேப்பர்(மனு) தின்னதுக்கு தான்!

29 ஆம் தேதி ஏதோ திராவிட மக்கள் மன்றம் பெயரில கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் (மாவட்ட நிர்வாகிகள் மனு கொடுத்தா, கண்டுக்காம இருக்கறதயும், அட்லீஸ்டு கழுதைக்கு கொடுத்த அதுக்கு ஒரு வேளை உணவாகும் என்ற உயரிய நோக்கதுக்காக)ஒரு நூதன போராட்டம் நடந்தது காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளை கண்டிச்சு!

அங்க தான் இந்த கழுதைக்கு எழரை புடிச்சிருக்கு போல, ஓசில பேப்பர் நிறையா கிடைக்கும் இந்த கழுதையின் முதலாளி இந்த திராவிட மக்கள் மன்றம் கோஷ்டிகளோட அனுப்பியிருக்காரு! இந்த மன்றமும் அறபோர்தான் பண்ணாங்க போல அது தருமவான்களான காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு புடிக்கல போல. உடனே ஒரு புகார் காஞ்சிபுரம் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது! உடனடி நடவடிக்கையில் காவல்துறை இறங்கி தூள் பண்ணீட்டங்க!!!

அங்கு போராட்டம் செய்த மன்றத்தார் + கழுதை + மனுக்கள் + கூடாரம் + கட் அவுட் என்று எல்லத்தையும் அள்ளிக்கிட்டு போக முடிவு எடுத்துட்டு பார்த்த கழுதை மன்றத்தாருடன் வேனில் எற மறுத்தது எவ்வளோ முயற்சி செய்து பார்த்துட்டு வேலைக்கு ஆகாம ஒரு ஆட்டோ அழைக்கப்பட்டது! அது ஒரு சூப்பர் காமெடி ஆனது ஒரு பக்கம் புடிச்சு ஏத்தினாங்க அது அந்த பக்கமா வெளிய ஓடி வந்திருச்சு!!! அப்பறம் ஒரு chasing ஒரு வழியா கழுதையை மறுபடியும் புடிச்சு ஆட்டோவில் ஏற்ற முயற்சி நடந்தது வேலைக்கு ஆகல போல, அடுத்து ஒரு சின்ன யானை (சாரி சின்ன டெம்போ) அழைத்து வந்து கஷ்டப்பட்டு ஏத்தி,கயிரு கட்டி கோர்டுக்கு கொண்டுபோயி நீதிபதியின் முன் கைது செய்யப்பட்ட கழுதை நிறுந்தப்பட்டது. நீதிபதியும் கழுதையை இப்படி வதைக்க கூடாது (மிருக வதை) என்று திராவிட மக்கள் மன்றத்தார்க்கு எச்சரிக்கை கொடுத்தார்!

இதுல மேட்டர் என்னவென்றால் கழுதையை வதைத்தது திராவிட மக்கள் மன்றத்தார் அல்ல! காவல்துறை தான் என்று எனக்கு தோண்றியது!!! திராவிட மக்கள் மன்றத்தார் சூப்பரா dress செய்து, மாலையெல்லாம் போட்டு கூட்டிவந்து அதன் பிரதான உணவான காகிதத்தை (மனு) கொடுத்தார்கள்! காவல்துறை தான் அந்த கழுதையை இழுத்து போட்டு, அடிச்சு, அட்டோல ஏத்தி, டெம்போ ஏத்தி படாத பாடு படுத்தினார்கள்!! எனங்க இந்த சட்டம் இவ்வளோ பெரிய ஓட்டையாயிருக்கு!!

பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்!!!

அது சரி போராட்டம் எதுக்குன்னு கேக்கலயே! தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்க்கு வழுங்குவதாக கூற பட்ட நிலம் பல வருடங்களாக, பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு தந்தும் ஒரு முடிவும் வரவில்லை என்ற காரண்த்துக்காக! ஒரு பக்கம் இட ஒதுக்கீட்டுக்கு சீனு (Scene) போடறது இந்த பக்கம் அல்வா கொடுக்கறது!

சூப்பரப்பு!!!