ஒரு பாசிடிவ் அப்ரோச்!

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு பதிவு! எழுத பல விசயங்கள் சிந்தையில் வந்தது ஆனால் ஏனோ அதை எழுத முடியவில்லை, சில பாதியில் கைவிடப்பட்டது (நீங்க தப்பிச்சிட்டீங்க!!!) :) இன்னும் சில எழுத்தில் உள்ளது... உங்களை சும்ம விடுவனா?!

நன்பர்கள் வெகுவாரியா என் பிளாக் பத்தி சொன்ன ஒரு குறை, பாசிடிவ் அப்ரோச்(Positive Approach) இல்லை என்பது! சரி என்றே எனக்கும் தோன்றியது! அதனால் இந்த பதிவு சில நல்ல விசயங்களை பற்றி எழுத நினைத்தேன். இங்கு குறை பல இருந்தாலும் சில நல்ல விசயங்கள் நடக்க தான் செய்கிறது! சில நல்ல விசயங்கள் கேட்க தான் செய்கிறது! அதில் ஒன்று சில நட்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் பழைய படங்களையும் மற்றும் சிறு குறிப்புக்களையும்! இதை நான் உங்களுடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

தும்பா ராக்கெட் ஏவுதளம் உருவான கதை:

மேற்கத்திய நாடுகள் நிலவுக்கு பயணிக்க துடங்கிய 1960களில், இந்தியா தன் விண்வெளி ஆராய்ச்சியில் பாதம் பதிக்க எடுத்த கன்னி முயற்சிகள் மற்றும் அதற்க்காக நம் விண்ஞானிகள் பட்ட பாடுகள்! அப்பொழுது எடுக்கப்பட்ட சில படங்கள் பார்க்க பிரம்மிப்பாய் இருந்தது!

முதல் பாடம்:

தும்பா ராக்கெட் ஏவுதளம் அதிகார பூர்வமாய் தன் விண்வெளி ஆராய்ச்சியை அதிகார பூர்வமாய் நவம்பர் 21, 1963 துவங்கியது.

Thumba Equatorial Rocket Launching Station (TERLS) துவக்க முக்கிய பங்களித்தவர் என்று சொல்ல வேண்டுமானால் டாக்டர். விக்ரம் சாராபாய் தான் சொல்ல வேண்டும். அவருக்கு உதவியாய் உருதுனையாய் இருந்தவர்தான் இன்றைய ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம். அவர்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆற்றிய பங்கு கீழே உள்ள படங்களில் பார்க்க முடியும். அருகில் உள்ள படம் டாக்டர். விக்ரம் சாராபாய் அவர்களின் படம்.

இந்திய தன் விண்வெளி ஆராய்ச்சி பாதையை துவக்க அமெரிக்கவிலிருந்து Nike Apache sounding rocket வாங்கிவரப்பட்டு 6 மாத முயற்சியில் ஏவுதளமும், Payload தயாரிக்கப்பட்டது. இந்த முயற்சியின் பலனே இன்றைய Vikram Sarabhai Space Centre மற்றும் ISRO.


அருகில் உள்ள படம் மேல் நாட்வர்க்கு அன்று சிரிப்பை வரவழைத்திருக்கலாம் ஏனெனில் இவ்வாறு தான் TERLSக்கு ராக்கெட்டின் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டது. அன்று விண்ஞானிகள் சைக்கிளில் அதை எடுத்து செல்வதை பார்க்கும் போதே அவர்களின் உழைப்பும், அவர்களின் அரும்பாடுகளும் இன்று அவர்களையும், இந்தியாவை சிகரத்தை அடையச் செய்துள்ளதை பாராட்டியாக வேண்டும்.அன்று Dr.விக்ரம் சொன்னது

" We are convinced that if we are to play a meaningful role nationally, and in the community of nations, we must be second to none in the application of advanced technologies to the real problems of man and society."
வளர்ந்த நாட்டவர் போல் நிலாவை தொடுவதும், விண்னுக்கு மனிதனை அனுப்புவதும் என் குறிக்கோள் அல்ல, என் மக்களுக்கும், சமுதாயத்துக்கு உதவியாக உள்ள தொழில்நுட்ப வளர்ச்சில் எங்கள் பங்கு முதாலாவதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.

இன்றும் அவர்களின் சீரீய சிந்தனையும், பங்கும் அதன் பலன்களும் நம்மால் உண்ரமுகிறது.

வலதுபுறம் வான்தொடும் ராக்கெட்டுகளை நம் வின்ஞானிகள் சைக்கிளில் எடுத்து செல்லும் மற்றொரு புகைப்படம்.

கீழே உள்ள புகைப்படத்தில் நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர் Payload ரெடி செய்து கொண்டுயிருக்கிறார்! யார் தெரியுமா! நம்முடைய இன்றைய முதல் குடிமகனும், அன்றைய இந்திய வின்வெளி ஆராய்ச்சியின் சிற்பிகளில் ஒருவருமான டாக்டர். APJ. அப்துல் கலாம்.


தகவலுக்காக: இடது புறம் டாக்டர். APJ. அப்துல் கலாம், இடது புறம் திரு. ஆராமுதன். ( ஏங்க நாம எப்பவாவது இப்படி வேலை செய்ய முயற்சி செய்திருப்போமா!!!)


இடதுபுறம் இந்தியாவின் முதல் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்ப விண்ஞானிகள் Launch Padடில் ராக்கெட்டை பொருத்திக் கொண்டிருக்கும் காட்சி.


Nike Apache rocket விண்வெளியை நோக்கி பயனிக்க தயாராக உள்ள காட்சியை வலதுபுறம் உள்ள படத்தில் பார்க்கலாம்.

இத்தனை வேலைகளையும் செவ்வனே செய்ய அவர்களுக்கு A/C அறை இல்லை, ஆய்வு கூடம் இல்லை, TERLSக்கு சொந்த இடமும் இல்லை. Hilight விசயம் என்ன தெரியுமா? அத்துனை வேலைகளும் செய்தது தும்பாவில் உள்ள ஒரு கத்தோலிக்க churchசிலும் அதனை சார்ந்த கட்டிங்களும் தான்! அது தான் அவர்களின் ஆய்வுகூடம், அது தான் அவர்களின் பட்டறை, தங்கும் இடம், அலுவலகமாகவும் இருந்தது என்பது வரலாறு.


இடதுபுறம் Nike Apache rocket விண்வெளியை நோக்கி பயனித்த போது எடுத்த படம்.

இவ்வளவு கஷ்டப்பட்டு இட்ட அஸ்திவாரத்தால் தான் நாம் இன்று தொலைத்தொடர்பு வளர்ச்சியை கண்டுள்ளோம் என்றால் மிகையாகது.

இன்று தும்பாவில் 3 Launch Padகள் உள்ளது. இன்றும் வாரம் ஒரு ராக்கெட் வானிலை ஆராய்ச்சிக்காக தும்பாவிலிருந்து விண்ணுக்கு செல்கிறது. இன்றும் அந்த கத்தோலிக்க church TERLS வளாகதின் மத்தியில் உள்ளது.


அருகில் உள்ளது இன்றைய தும்பா ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள Launch Pad.


அன்றைய டாக்டர். அப்துல் கலாமின் மேலும் ஒரு புகைப்படம்.


இவர்கள் பட்ட இன்னல்கள் ஒரு நாள் தான் குடியரசு தலைவன் ஆகுவோம் அல்லது ISROவின் தலைவராக ஆவோம் என்று எண்ணி அல்ல. கலப்படம் அற்ற நாட்டு சேவை! இதை பாராட்டவோம், தலைவணங்குவோம்.

அன்றைய விக்ரம் சாராபாயை , கலாமை , ஆராமுதுவை போல நாமும் நம் பங்கு இன்னது என்று முடிவு செய்து அதை அடைவதற்கு வழிவகைகள் செய்து, சிறப்பாக நம் சமூக கடமையை செய்ய ஒவ்வொரு இளைஞனும் முடிவெடுத்தால் நாளைய உலகம் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்கும் என்பது நிதர்சனமான உண்மை.

29 comments:

said...

நல்ல பதிவு.

said...

உங்கள் வருகைக்கு நன்றி நன்மனம்.

said...

//நம் சமூக கடமையை செய்ய ஒவ்வெரு இளைஞனும் முடிவெடுத்தால் நாளைய உலகம் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்கும் //
நல்ல கருத்து.
கண்டிப்பாக இது நடக்கும், நடந்தே தீரும்.

said...

நல்ல பதிவு. நன்றி.

said...

நல்ல பதிவு & நல்ல படங்கள் ஜெய சங்கர்.

சைக்கிளில் கொண்டு போனதை வெகுவா ரசிச்சேன்.

'கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொரு வெற்றியும்' இல்லையா?

அதான் அருமையும் கூட.

said...

நன்றி நாகை சிவா மற்றும் வெற்றி. இந்த பதிவின் குறிக்கோள் நம் சமூக கடமையை ஒவ்வொறு இந்தியனும் சிந்திக்க வேண்டும் அதை அடைய வேண்டும் என்பதே! என் பங்கை நான் தேர்ந்தெடுத்து, வழி வகுத்து, அதை அடைய முயற்சிக்கிறேன்! இது போல் அனைவரும் முயலவேண்டும் என்பது என் அவா!

said...

நன்றி துளசி மேடம், நானும் தான் சைக்கிளில் ராக்கெட் செல்வதை பார்த்து வியந்தேன், இப்படி துவங்கி எங்கு அடைந்துள்ளோம் என்று பிரமித்துப்போனேன். கலாம் அவர்கள் அன்று சிந்திய வேர்வை இன்று நாம் BroadBand, DSL, Video Conferencing என்று வளர்ந்துவிட்டோம். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தில் 20 வருடம் பின் தங்கியிருந்த நாம் Upto date ஆனதற்கு இந்த உழைப்பும் ஒரு காரணமே!

//*'கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொரு வெற்றியும்' இல்லையா?

அதான் அருமையும் கூட.*//

கஷ்டப்பட்டு பெற்று வெற்றிக்கு எப்போதும் ஒரு சுவை இருக்கும். அதன் மூலம் கிட்டும் மகிழ்ச்சி ஒரு அளவு கிடையாது.

said...

இப்படியும் உங்களிடமிருந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம் ஜெய்.

நம்ம பங்குக்கு ஒரு + போட்டாச்சு. தொடர்ந்து கலக்குங்க :)

Anonymous said...

Wonderful article Jay . I sent it to all my friends as a must to read article . Innum Kalakunka ..

-Siva

said...

நன்றி அருள், கண்டிப்பாக என் பதிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்த பின்னரே, இந்த We The People Blog துவங்கப்பட்டது. உங்கள் எதிர்ப்பார்ப்பை அழிக்க மாட்டேன் என்று உறுதியில் உள்ளேன்!! + போட்டதுக்கு நன்றி.

said...

நன்றி Siva மீண்டும் வருக! நண்பர்களுக்கும் இந்த பிளக் சுட்டியை அறிமுக படுத்தவும்.

Anonymous said...

அற்புதமான பதிவு! உழைப்பே உயர்வு என்ற தத்துவத்தை அழகாக எடுத்து காட்டியுள்ளீர்கள்.

said...

மக்களின் கரகோஷத்தில் நானும் கலந்து கொள்கிறேன். இத்தகைய பதிவுகள் நாட்டிற்கு தேவை. அரிய படங்களை வெளியிட்டதற்கு நன்றி.

said...

நன்றி மணியன், மற்றும் அனானி. கரகோஷமிட்டு என்னை சந்தோஷிக்க செய்தமைக்கு நன்றி.

said...

Good Photos. Good work.

Amudhan

said...

Thank you for this post

said...

உங்கள் வருகைக்கு நன்றி --L-L-D-a-s-u---.

Anonymous said...

Good work. We expect similar post from you.

said...

Jayea Sankar Sir
I salute your work on this.It is really inspiring after reading a blog like this.Useful blog.
I heared stories like this in personal life of people in starting manufacturing facilities and have met people of taht caliber but this one make me to feel different because her every body has worked for a government.

This blog rocks !!

said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

said...

நன்றி CT & சிறில் அலெக்ஸ். CT நீங்கள் சொல்லுவதும் சரி தான். இதில் இவர்கள் உழைத்து, உழைத்துக்கொண்டிருப்பது மக்களுக்காக. மக்கள் முன்னேற்றத்துக்காக. வந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.

said...

சிறந்த படங்கள்,
மிகச் சிறந்த பாடங்கள்.

நன்றி.

said...

மிக அருமையான ஒரு பதிவு.

1981ல் அண்ணா பலகலை கழகத்தில் ISRO ஸ்ரீஹரிகோட்டவிலிருந்து வந்தவர்கள் அளித்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அவர்கள் காட்டிய ஒரு படம் அனைவரையும் அதர வைத்தது. ஒரு பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மாட்டு வண்டி மூலமாக ராக்கெட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை படம் காட்டியது. முற்றிலும் மிசாரம் மற்றும் சார்ஜிகளைக் கடத்தாத ஒரு வாகனம் தேவைப்பட்டபோது உடனடியாகக் கிடத்தது என்று விளக்கமளித்தார்கள். இந்தப் படம் என்னிடம் இல்லை. யாராவது இருந்தால் போடுங்களேன்

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.

said...

நன்றி ஓகை,

நம்ம இந்தியாவின் விண்வெளி சரித்திரம் எனக்கு கிடைத்த படங்களை வைத்து தான் எழுதினேன். அந்த படங்கள் கிடைக்குமா என்று பார்க்கிறேன். இருந்தால் நிச்சயம் உங்களுக்கு எடுத்து அணுப்புகிறேன்.

அன்புடன்,

ஜெய்

said...

மிக நல்ல பதிவு. உண்மையான +வ் அப்ரோச்

said...

'wings of fire' ல் கலாம் அவர்கள், முதல் ராக்கெட் விட்ட அனுபவட்தையும், கஷ்டங்களையும் மிக அழகா சொல்லி இருப்பார்.

wethepeople, இதைப் போலவே positive-air படரச் செயுங்கள்.
வலைஞர்கள், ஒருதருக்கொருத்தர் அடிச்சுகிட்டு நேரம் வீணாக்கரத குறைப்போம்..

நல்ல முடிவு! good for us.

said...

நல்ல பதிவு நாம் The மக்கள் அவர்களே!

said...

நாமக்கல் சிபி,

//நாம் The மக்கள் அவர்களே! //

நீங்களுமா உள்குத்து வைக்கறீங்க!! ஐயோ!! ஐயோ!!!

நன்றி,

நாம் The மக்கள்

சந்தோஷமா??!!

said...

அருமையான பதிவு.படங்களைப் பார்க்கும்போது கடந்த தூரங்கள் தெரிகிறது.அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டு இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு நாம் ஏன் இவ்வளவு பயப்படுகிறோம்?யாராவது விசய ஞானம் உள்ளவங்க சொல்லுங்கய்யா.