காஞ்சி சேவை மையம் உண்மையில் நடப்பது என்ன?
என் இட ஒதுக்கீடு பதிவில் திரு.ஹரி எழுதிய விளக்கங்களில் உண்மை நிலை என் அறிவுக்கு எட்டிய வரை: என் கேள்வி: ////பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?// இது எங்கே நடக்குது ஹரி??!! ஆச்சரியமா இருக்கே?? கொஞ்சம் எடுத்து சொல்லுங்க?? ஒன்னும் புரியலை?? யார் செய்யறாங்க? எங்க செய்யறாங்க?? (கலாய்க்க இல்லைங்க சீரியசா கேட்கிறேன்)// என்ற என் கேள்விக்கு விளக்கம் அளித்த பதிவில் ஹரி கூறிய சில விசயங்கள் சரி இல்லை என்று தோண்றுவதால் இந்த பதிவு. இந்த வாதம் அந்த பதிவில் வைத்துக்கொண்டால் அந்த பதிவின் நோக்கம் திசை மாறும் என்ற எண்ணத்தால் தனி பதிவாக வைக்கிறேன். ஆனால் அவர் சொன்ன லிஸ்டில் இருக்கும் பல மையங்களுக்கு நான் நேரடியா போயிருக்கேன், இவை எதுவும் சேவை அடிப்படையில் நடப்பவை அல்ல என்றே தோண்றுகின்றன, எல்லாம் காசுக்கு வேலை செய்கிறது என்று, அந்த ட்ரஸ்ட் நடத்தும் நிறுவங்களுக்கு போய் பார்த்தாலே தெரியும். சில உதாரணங்கள்: 1. சின்மயா மிஷன் ...