காஞ்சி சேவை மையம் உண்மையில் நடப்பது என்ன?

என் இட ஒதுக்கீடு பதிவில் திரு.ஹரி எழுதிய விளக்கங்களில் உண்மை நிலை என் அறிவுக்கு எட்டிய வரை:

என் கேள்வி:
////பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//

இது எங்கே நடக்குது ஹரி??!! ஆச்சரியமா இருக்கே?? கொஞ்சம் எடுத்து சொல்லுங்க?? ஒன்னும் புரியலை?? யார் செய்யறாங்க? எங்க செய்யறாங்க?? (கலாய்க்க இல்லைங்க சீரியசா கேட்கிறேன்)//
என்ற என் கேள்விக்கு விளக்கம் அளித்த பதிவில் ஹரி கூறிய சில விசயங்கள் சரி இல்லை என்று தோண்றுவதால் இந்த பதிவு. இந்த வாதம் அந்த பதிவில் வைத்துக்கொண்டால் அந்த பதிவின் நோக்கம் திசை மாறும் என்ற எண்ணத்தால் தனி பதிவாக வைக்கிறேன்.

ஆனால் அவர் சொன்ன லிஸ்டில் இருக்கும் பல மையங்களுக்கு நான் நேரடியா போயிருக்கேன், இவை எதுவும் சேவை அடிப்படையில் நடப்பவை அல்ல என்றே தோண்றுகின்றன, எல்லாம் காசுக்கு வேலை செய்கிறது என்று, அந்த ட்ரஸ்ட் நடத்தும் நிறுவங்களுக்கு போய் பார்த்தாலே தெரியும்.

சில உதாரணங்கள்:

1. சின்மயா மிஷன் பள்ளி: இங்கு LKG சேர்க்க சுமார் 15 ஆயிரம் ரூபாய் நன்கொடை தேவை, பள்ளி டேர்ம் பீஸ் சுமார் ரூ.2300 (மூன்று மாதத்துக்கு!) இதில் எங்கே வருது சேவை!! SBOA பள்ளிகளும் இதே அளவு வசூலிக்கிறது, இவை சேவை இல்லை ஹரி, காசு சம்பாதிக்கும் முறை!

2. Child Trust, சென்னை: இங்கும் தொட்டாலே காசு, ரெஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் முதல் சேவை கட்டணம் வரை எதும் ஒரு சாதரண மருத்துவமணையில் சேவைக்கட்டணத்துக்கு குறைவு இல்லை, மேலும் காஞ்சி மடம் இந்த நிறுவணத்தை எடுத்து நடத்துவதற்கு முன் இருந்த நிர்வாகம்(Dr. M.S.Ramakrishnan அவர்களின் கீழ் இருந்த நிர்வாகம்) மிக குறைவான சேவை கட்டணம் அதாவது 20 -30 ரூபாய் வசூலித்து வந்தது! காஞ்சி மடம் இந்த மருத்துவமணையை எடுத்து நடத்த ஆரம்பித்ததும் முதலில் வசதிகளை அதிகப்படுத்தாமல் சேவை கட்டணத்தை ரூ.100 -125 வரை ஆக்கியது! அதனாலேயே அங்கு போவதை நான் நிறுத்தினேன். ரூ.பத்து இருந்த ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம், ரூ.100 ஆனது, இப்ப என்ன சொல்லறீங்க ஹரி!! இதுவா சேவை??

3. சங்கரா மிஷன் மருத்துவமணை: இதுவும் ஒரு சேவை மையம் கிடையாது, ஒரு சாதாரண மருத்துவமனையில் வாங்கும் அத்துனை சேவை கட்டணம் குறைவில்லாமல் வாங்கப்படுது! இதுவா சேவை! தொட்டால் காசு என்ற நிலையே உள்ளது! என் நெருங்கிய உறவினர் அங்கு மருத்துவராக வேலை செய்தார், அவர் இருக்காறே ஏதோ பார்த்து பில் போடுவாங்கன்னு ஒரு ஹெல்த் செக் கப்க்கு போயி, பில் பார்த்து நொந்து போனவன் நான்!!

இந்த சங்கரா ட்ரஸ்ட் நடத்தும் எந்த நிறுவணம் சேவை நோக்கத்தோடு வேலை செய்யுதுன்னு சொல்லுங்க!! பணக் கொள்ளை மட்டுமே முக்கிய நோக்கமாகிவிட்டதுன்னு எனக்கு தோணுது! முன்பு காஞ்சி மடத்துக்கு நெருக்கமான என் நண்பர் ஒருவர் சொல்லுவார், பெரியவர் இருக்குவரை இது போன்ற கொள்ளை இல்லை, ஜெயேந்திரர் வந்த பிறகு தான் கல்லூரி, பள்ளின்னு பணம் கொள்ளை அடிக்கு வழிமுறைகள் உள்ளே வந்ததாக!!! அந்த காசு யாருக்கு போகுது! என்ன ஆகுது என்பதை பற்றி இங்கு கருத்து சொல்ல வரவில்லை! அவை சேவை மையங்கள் அல்ல என்பது மட்டுமே என் கருத்து!!

இந்த கருத்துக்கள் நான் பார்த்த சில மையங்களை வைத்து தான், இதில் லாப நோக்கம் இல்லா நிறுவனம் இல்லை என்றே எனக்கு தோண்றுகிறது. இதில் மாற்றுக்கருத்து இருக்குமானால் வாதங்களை வைக்கலாம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Comments

ஜெய்,

சங்கரா, சின்மயா பள்ளிகளில் முழுக்க முழுக்க இலவச சேவையாக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் ஏழை மாணவர்களுக்குத் தரப்படுகிறது.

தனிப்பட்ட ஏழைமாணவனுக்கு தனிநபர்களிடமிருந்து கல்விக்கான ஸ்பான்ஸர்ஷிப்களும் ஏற்கப்பட்டுத் தரப்படுகின்றன.

மருத்துவச் சேவையும் அம்மாதிரியே ஏழைகளுக்கு சங்கரா இந்து மிஷன் மருத்துவமனைகளில் குறைவான கட்டணத்தில் தரப்படுகின்றன.

எல்லாமே இலவசமாக எல்லோருக்கும் தர அரசுகள் முழுக்க ஆதரித்து நிதி உதவி தரவேண்டும்.

போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகளால் இந்துமத நிறுவனங்கள் அனுமதி பெறவே கடுமையாகச் சிரமப்படவேண்டி இருக்கிறது.

உளுந்தூர்ப்பேட்டை அருகே ராமகிருஷ்ணா-சாரதா ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக்கு அனுமதிக்கு 50 லட்சம் லஞ்சம் கேட்டு இறுதியாக பதவி இறங்கும் முன்பாகப் போனால் போகிறது என்று ஜெ. அரசு ஒப்புதல் அளித்தது. கட்டிடம் கட்ட வெளிநாட்டு இந்துக்களிடம் வைப்புநிதி இரண்டுகோடி ரூபாய் ஐந்தாண்டுகளுக்கு திரட்டப்பட்டு வருகிறது!

சிறுபான்மை கிறித்துவ நிறுவனங்கள், இசுலாமிய நிறுவனங்கள் அவர்கள் மக்கட் தொகை விகிதத்திற்கும் மேலாக உள்நோக்கத்துடன் மதச்சார்பின்மை அரசியல்வாதிகளால் ஊக்குவிக்கப்படுவதில் முதன்மை மாநிலம் தமிழ்நாடுதான்!

கடும் எதிர்மறைச்சூழலில் நிறுவனங்கள் அமைத்துச் தரமான சேவைகள் தரப்படுகின்றன. சங்கரா, சின்மயா பள்ளிகளின் கல்வித் தரம் உயர்வானது.

அரசுகள் மானியம் / உதவிகள் அளித்தால் கட்டணம் இன்னமும் வெகுதியாகக் குறையும்!

தரமான மருத்துவச் சிகிச்சையும் ஆதரவு மானியம் கிடைத்தல் இன்னமும் குறைந்த கட்டணத்தில் பலருக்குக் கிடைக்கும்.

நன்கொடைகளால் பள்ளி, மருத்துவமனைக் கட்டிடங்கள் எழுப்பலாம்...இவற்றின் தினசரி செலவுகள், பணியிலிருப்போர் சம்பளத்துக்கு கட்டணம் வசூலிக்கப்பது மிக அவசியம் ஆகிறது!
நெடுமால் திருமுருகாவோடு சுத்தினால் இப்படித்தான் தத்துபித்து என்று உளறுவீர்கள். பெரியவா தொடங்கிய இந்த சேவை நிறுவனங்களை பற்றி இல்லாதும் பொல்லாததும் சொல்வது சரியல்ல.

ஜாக்கிரதையாக இருக்கவும். மத்தவா சாபம்தான் விடுவா. இவா அப்புவை அனுப்பி வைப்பா.
Osai Chella said…
Jay see his round about way of answering! Never in my experience he gave straight replies to arguements! I know about Sankara eye hospitals. They too charge heavilly and hence many of my friend have choosen Arvind as the best option for eye operation. Unlike Ramakrishna Math these ppl are simply racking in money in the name of service!
ஜெய்,

சங்கர நேத்ராலயா கண் சிகிச்சை மையத்தில் ஆண்டுக்கு சில ஆயிரம் ஏழைகளுக்கு கண் சிகிச்சை, கண்தான சிகிச்சை, காட் ராக்ட் அறுவைசிகிச்சை என நடக்கிறது டாக்டர். பத்ரிநாத் தலைமையில்.

வசதியானவர்களுக்கு நவீன லேசர் கண் அறுவை சிகிச்சை முறையான கட்டணத்தில் செய்யப்படுகிறது.

காஞ்சி சங்கர மடத்தின் முனைப்பில் நடக்கும் சேவைகள் இவை.

தமிழ்நாட்டில் அரசு ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, நன்கொடை என்பவை காஞ்சி சங்கரமட கல்வி, மருத்துவச் சேவை நிறுவனங்களுக்கு எவ்வளவுக்குக் கிடைக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

கிறித்துவ மிஷநரி நிதி, அரேபிய இசுலாமிய நிதி, கருணாநிதி போன்றோரின் இந்துவிரோத அரசு என அனைத்தையும் மீறி இவை நிறுவனங்களாக உருவாகிச் செயல்படுவது எத்தனை கடினமானது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி!
Anonymous said…
காஞ்சி மடத்துக்கு சொந்தமான மருத்துவமனை 247 கோடிகளுக்கு கைமாறுவதாக ஒரு செய்தி இன்றைய செய்தித்தாளில் படித்தேன்...அதை கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா ?
We The People said…
//அரசுகள் மானியம் / உதவிகள் அளித்தால் கட்டணம் இன்னமும் வெகுதியாகக் குறையும்!//

ஹரி சேவைக்காவே இந்த மையங்கள் இருக்குன்னு சொன்னதாலே தான் நான் இந்த பதிவு போட்டேன், எனக்கும் தான் அரசு மானியம் தந்தால் மக்களுக்கு ஒரு பைசா கூட சுருட்டாம சேவை செய்யலாம்ன்னு இருக்கு ஆசை, இங்க வாதம் அதுவல்லவே!! நீங்க கூறியது மக்கள் சேவைக்காக தான் இந்த மையங்கள்ன்னு நான் இல்லை, காசு சம்பாதிக்கன்னு சொல்லறேன், அதுக்கு ஏதாவது விளக்கம் கொடுங்க, Eye washக்கு செய்யும் சில நூறு அறுவை சிகிச்சைகளை எல்லா காசு கொள்ளை அடிக்கும் நிறுவனமும் செய்யுது, Including Apollo Hospitals அதுக்காக அபலோவும் சேவை மையமா?

//உளுந்தூர்ப்பேட்டை அருகே ராமகிருஷ்ணா-சாரதா ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக்கு அனுமதிக்கு 50 லட்சம் லஞ்சம் கேட்டு இறுதியாக பதவி இறங்கும் முன்பாகப் போனால் போகிறது என்று ஜெ. அரசு ஒப்புதல் அளித்தது. கட்டிடம் கட்ட வெளிநாட்டு இந்துக்களிடம் வைப்புநிதி இரண்டுகோடி ரூபாய் ஐந்தாண்டுகளுக்கு திரட்டப்பட்டு வருகிறது!//

50 லட்சம் கேட்டவங்க சும்மாவா ஒப்புதல் அளித்திருப்பாங்க??!! போங்க ஹரி சுத்த ஹம்பக்கா இருக்கு! ஒரு 20-30 லட்சமாவது மடம் கொடுத்து இருக்கும், அப்ப எதுக்கு காசு கொடுத்து ஒப்புதல் வாங்குது! காசு சம்பாதிக்க ஆசையில் தானே! இவை வாதம் அல்ல ஹரி வேற ஏதாவது சாலிட் மேட்டரா சொல்லுங்க!
We The People said…
//
நன்கொடைகளால் பள்ளி, மருத்துவமனைக் கட்டிடங்கள் எழுப்பலாம்...இவற்றின் தினசரி செலவுகள், பணியிலிருப்போர் சம்பளத்துக்கு கட்டணம் வசூலிக்கப்பது மிக அவசியம் ஆகிறது!//

அட இதையே தாங்க மற்ற பள்ளிகளும் செய்யுது, அப்ப அந்த பள்ளிகளும் சேவைக்காக வந்த பள்ளிகளா?? உங்க லாஜிக் ஒதைக்குதே ஹரி!
We The People said…
செல்லா நீங்க சொல்லும் விசயமும் சரியே! கோவையில் சங்கரா கண் மருத்துவமனையை விட அரவிந் கண் மருத்துவமனை சிறந்த சேவை செய்யுது, அதுவும் மிக குறைந்த கட்டணத்தில், அதாவது சங்கரா வாங்கும் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கு கூட வாங்குவது இல்லை.

//Unlike Ramakrishna Math these ppl are simply racking in money in the name of service!//

Yes agreed and these are facts i have seen, bcoz me2 born and brought up in coimbatore :)
Anonymous said…
Ramakrishna Mutt institutions are often given 100% aid from government.But not all institutions get 100% aid.
Sankara Nethralaya is
charging money from those who can
afford.Hospitals run by christian
missions and CSI often charge money from patients.The government is not willing to support hospitals,schools run by Hindu
missions.It pampers the one run
by muslims and christians.
Kanchi Mutt runs many schools,
homes for destitutes including
orphans, and women.It raises
money from public with very
little support from government.
So they have to charge money
so that they can provide free/
subsidised service to poor.
Arvind Eye hospital gets money
from abroad and is doing good service.Shankara Nethrayala is
doing equally good service.
New College,SIET college also
charge fees.In fact many educational institutions
run muslim trusts are beyond
the reach of poor (irrespective
of Hindu/christian/muslim).
So what Hariharan says is true
to a great extent.
Anonymous said…
//அரசுகள் மானியம் / உதவிகள் அளித்தால் கட்டணம் இன்னமும் வெகுதியாகக் குறையும்!//

//எல்லாமே இலவசமாக எல்லோருக்கும் தர அரசுகள் முழுக்க ஆதரித்து நிதி உதவி தரவேண்டும்.//

அரசு பணத்தை வாங்கி மற்றவர்க்கு தருவது சேவையல்ல ஹரிஹரன். தங்கள் சொந்த உழைப்பையும், பணத்தையும் தருவதே சேவை.

அரசிடமிருந்து மானியமென்றால், அதை அரசே நேரடையாக செய்யலாம் அல்லவா? பணம் அரசுடையது, பெயர் செல்வது இவர்களுக்கா?


//போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகளால் இந்துமத நிறுவனங்கள் அனுமதி பெறவே கடுமையாகச் சிரமப்படவேண்டி இருக்கிறது.//

வள்ளலார் ஏற்படுத்தி சென்ற ஏழைகளுக்கான் உணவுத்திட்டம் இன்றும் சிறப்புடன் செயல்படுகிறது. இதுவும் இந்து மதம்தான்.
சேவை செய்ய உண்மை மனம் வேண்டும். "சேவை செய்கிறோம்" என்று பெயர் மட்டும் வேண்டுமென்றால் சீக்கிரம் குட்டு வெளிப்பட்டுவிடும், காஞ்சி மடம் போல.

-my2cents
Anonymous said…
Child Trust, சென்னை: இங்கும் தொட்டாலே காசு, ரெஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் முதல் சேவை கட்டணம் வரை எதும் ஒரு சாதரண மருத்துவமணையில் சேவைக்கட்டணத்துக்கு குறைவு இல்லை, மேலும் காஞ்சி மடம் இந்த நிறுவணத்தை எடுத்து நடத்துவதற்கு முன் இருந்த நிர்வாகம்(Dr. M.S.Ramakrishnan அவர்களின் கீழ் இருந்த நிர்வாகம்

Then it was incurring losses and
could not repay loans and could not
expand the hospital.That is why the
Kanchi Mutt took over the hospital.Mutt had to set right the administration, repay the loans, reduce the losses and plan for expansion.Had Mutt not stepped in
some private builder would have
bought the hospital and converted
it into housing complex after closing and demolishing the hospital. So you cant
blame the mutt for raising the charges.Mutt is not running it as a
for profit hospital.But to expect that Mutt will provide subsidy to
hospital is wrong, as mutt is involved in many other hospitals
also.
We The People said…
//பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//

ஹரி சொன்ன இந்த வாதம் இப்ப என்ன ஆச்சு?? அப்ப நம்ம அதிகம் காசு கொடுத்து, நன்கொடை கொடுத்தால் தான் சேவை என்னும் போது எங்கே வந்தது பிராமணர்களின் சேவை இங்கே!!

மற்ற மத அமைப்புகள் நடத்தும் சேவை மையங்களுக்கு ஏன் கிடைக்கிறது மானியம், ஏன் ஹிந்து அமைப்புக்களுக்கு கிடைக்கவில்லை மானியம் என்பது வேறு விசயம், இந்த பதிவுக்கு தொடர்பு இல்லை. அதை தனியாக அலசலாமே!
We The People said…
//Mutt is not running it as a
for profit hospital.But to expect that Mutt will provide subsidy to
hospital is wrong, as mutt is involved in many other hospitals
also.//

அனானி,

when similar charged hospitals like apollo is running in profit then childs trust too should be running profit. Whats the big deal of social service here with the piling charges on the patients??
//50 லட்சம் கேட்டவங்க சும்மாவா ஒப்புதல் அளித்திருப்பாங்க??!! போங்க ஹரி சுத்த ஹம்பக்கா இருக்கு!//

இல்லீங் ஜெய்,

பதவி இறங்கும் சில நாட்களுக்கு முன்பாக தெய்வத்தை வழிபடும் ஜெயலலிதாவால் தெய்வச்செயலாக இலவசமாக ஒப்புதல் தரப்பட்டது.(தற்போதைய மைனாரிட்டி கருணாநிதி அரசினால் ரத்து செய்ய மனம் விரும்பினாலும் முடியாது)


100% சிறுபான்மையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆசிரியப்பயிற்சிப்பள்ளிகளில் பெரும்பாலும் சிறுபான்மையினரே பயிலும் சூழலல் 2020 ஆண்டில் முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக முற்றிலும் சிறுபான்மை மதத்தினரே வரக்கூடியதாக இருக்கும் இன்றைய புள்ளிவிபரத்தைக் கொண்டு பெரும்பான்மை சமூகத்தினர் பயில ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அமைக்க ராமகிருஷ்ண மடத்தின் தொலைநோக்கத்துடன் இந்துமத அமைப்பு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியை ஆரம்பித்து ஆண்டுக்கு பெரும்பான்மை மதத்தினருக்கு 200 பேருக்குப் பயிற்சி அளிக்கத் தீட்டிய திட்டத்தின் செயல்வடிவம் இது!

மதசார்பின்மை அரசியலால் ஏற்படுத்தப்பட்ட சமூக சீரழிவுக்கு,
இன்று பெரும் எழுச்சியோடு இந்தியர்கள் உலகெங்கும் பொருளீட்டுவதால் நிதிதிரட்டி , ஆபிரஹாமிய மதங்களின் துருப்புச்சீட்டுக்களான கல்வி, மருத்துவம், சேவைகளுக்கு செக் வைக்கும் முயற்சியில் சின்மயா, சங்கரா, ராமகிருஷ்ணா இந்துமத மக்கள் சேவை நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை விரிவாகச் செய்துவருகின்றன!

சிறுபான்மை நிறுவனங்களினால் ஊட்டப்படும் இந்திய, இந்துமத சுய வெறுப்பு, தவறான தகவல்கொண்டு மதமாற்றம் செய்வது என்பது இல்லாமல் போக இந்தியநாட்டில் சின்மயா, சங்கரா, ராமகிருஷ்ணா போன்ற இந்துமத மக்கள் சேவை நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை விரிவாக தற்போது பல தளங்களில் செய்துவருகின்றன!
Anonymous said…
we the people- either you dont understand or dont want to understand the issues.
//ஹரி சொன்ன இந்த வாதம் இப்ப என்ன ஆச்சு?? அப்ப நம்ம அதிகம் காசு கொடுத்து, நன்கொடை கொடுத்தால் தான் சேவை என்னும் போது எங்கே வந்தது பிராமணர்களின் சேவை இங்கே!! //

சங்கர மடத்தின் சேவைகள் பல தளங்களில் காசுபண்ணுவதற்காக என்பதைக் கொள்கையாகக் கொண்டு செய்யப்படவில்லை.

லாபம் பார்த்துக் காசுபண்ணுவது என்பது கொள்கை இல்லை எனும் போது சேவை இல்லாமல் என்ன?

கிறித்துவம் மதச்சார்பின்மை பேசும் அதிகாரத்தில் இருக்கும் அரசுகளை கைக்குள்ளே போட்டுக்கொண்டு மக்கள்சேவை செய்வதாக சொல்வதை நம்பும் நமக்கு இந்து அமைப்புகள் பணம் பண்ணுவதை தனி நபர் லாப நோக்கமாக கொள்ளாமல், சேவை நிறுவனங்களைத் தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் தன் பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து பெரிதாக எந்த ஆதரவும் இல்லாமல் நிறுவிச்செய்யும் செயல் சேவையாகத் தெரிய, புரிய இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்!

சங்கரமடத்திற்கு இந்த மாதிரியான சேவை நிறுவனங்களை தனி நபர் லாப நோக்கில்லாமல் நிறுவ,அமைக்க, செயல்பட பிராமணர்களின் பங்களிப்பு பெருவாரியானது ஜெய்!

சங்கர மடத்தின் ஒவ்வொரு கல்வி, மருத்துவ நிறுவனமும் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமான சேவையை வழங்கித்தான் வருகின்றன.
Anonymous said…
ஜெய்,

உங்க பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவு இது. நீங்க என்ன தான் புள்ளி விபரத்துடன் சொன்னாலும்.. அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இனி உங்களையும் திம்மி என்றோ, போலி என்றோ சொல்லக்கூடும்.

இங்கே தமக்கு சரியெனப் பட்ட எதையும் சொல்லி விட முடியாது. ஏதாவது முத்திரை குத்திவிடுவது நிசம். பாருங்கள்.
Anonymous said…
////50 லட்சம் கேட்டவங்க சும்மாவா ஒப்புதல் அளித்திருப்பாங்க??!! போங்க ஹரி சுத்த ஹம்பக்கா இருக்கு!//

இல்லீங் ஜெய்,

பதவி இறங்கும் சில நாட்களுக்கு முன்பாக தெய்வத்தை வழிபடும் ஜெயலலிதாவால் தெய்வச்செயலாக இலவசமாக ஒப்புதல் தரப்பட்டது.(தற்போதைய மைனாரிட்டி கருணாநிதி அரசினால் ரத்து செய்ய மனம் விரும்பினாலும் முடியாது)
//

:)
ஹரிஹரன் சிரிப்பு அடக்க முடியலைங்க!
காமெடி பண்ண அளவு இல்லையா?
:))))
மங்கை said…
நீங்க சொன்ன காஞ்சி சேவை மையம் லிஸ்ட்ல இன்னும் பாக்கி இருக்கு.. அது எல்லாம் நான் இங்க
வேண்டாம்னு பார்க்குறேன்.
சில நல்ல காரியங்கள் பண்றாங்க,, இல்லைனு சொல்லலை.. ஆனா அதுக்கு மேல....வேண்டாம்..ஒன்னும் பிரயோஜனம் இல்லை சொல்லி... இதுக்கு முன்னாடியே ஒருத்தர் கிட்ட இத பத்தி பேசி..வாதம் பண்ணி.. அது பிடிவாதமா போச்சு.. எந்த அளவுக்கு நல்ல காரியங்கள் பண்றாங்களோ அந்த அளவுக்கு mis approriation of foreign funds... இது எல்லாரும் பண்றது தான்.. ஆனா ஒத்துக்க மாட்டேங்குறாங்களே...
காசு எங்க இருந்து வருதோ அவங்களையே எதிர்த்து குரல் கொடுத்தா எப்படி..
jai: Let us step back a little. 'சேவை' என்பதன் உங்கள் விளக்கம் 'இலவசம்' என்பதாய் உள்ளது. இது தவறு என்கிறேன். பணமில்லாமல் எதுவும் சாத்தியமில்லை. அப்படியானால் அரசு செய்வதை சேவை என்பீர்களா? அரசியல் வியாதிகள் பெரும் சேவையாளர்களா? அரசு என்பது நம் பணத்தை நம் பொது தேவைகளுக்காக செலவு செய்யவேண்டிய ஒர் அமைப்பு. அதனைச் செய்து முடிக்க நாம் அதற்கு சில உரிமைகளை அளித்துள்ளோம். இந்து அமைப்புகளின் மையங்களுக்கு மானியம் மறுப்பு என்பது வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. பெரும்பான்மை இந்துக்கள் வரியாகக் கட்டும் பணம் மட்டும் வேண்டும், ஆனால் அவர்களுக்கு அதனால் எந்த பலனும் கிடைக்கக்கூடாது என்பது முட்டாள்தனம்.
காஞ்சி மடத்தினர் ஏற்படுத்தும் எந்த அமைப்புமே சேவை நோக்கில் தான் ஏற்படுத்தப் படுகிறது. எல்லாமே ஒரு ட்ரஸ்ட் மூலமே நிர்வகிக்கப்படுகிறது. 'ட்ரஸ்ட்' நடத்துவதின் கடுமையான விதி முறைகள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 'NGO'மிஷநரிகளைப் போல இந்து அமைப்புகள் ட்ரஸ்ட் நடத்துவது தமிழ்நாட்டில் சாத்தியமில்லை.
இன்னும் பல இன்னல்களைக் கடந்து மடம் தன்னாலியன்ற அளவிற்கு சேவை செய்து கொண்டிருக்கிறது. தன்னுடைய premium institution-களில் குடுக்க முடிபவர்களிடத்திலிருந்து தரமான 'சேவை'-க்கு ஒரு மிதமான கட்டணம் வசூலித்து தனது நட்டத்தைக் குறைக்கிறது. இதில் என்ன தவறு கண்டீர்கள்?
சங்கர நேத்ராலயாவில் காசு பறிக்கிறார்கள் என்று புலம்பும் தாங்கள் அங்கு செல்ல முதலில் முடிவு செய்தது ஏன்? அதன் தரமா? அல்லது ஏதாவது ஓசியில் கிடைக்கும் என்ற 'தமிழக' நப்பாசையா? ஏழைகளுக்குத் தான் சேவை - உங்களைப் போன்ற வசதியுள்ளவருக்கு என்ன சேவை வேண்டியிருக்கிறது? உங்கள் நோக்கமே தவறு என்கிறேன்.
நீங்கள் பார்த்த சங்கர மடத்தின் 'premier institute'களை மட்டுமே. தமிழ்நாடு முழுதும் இலவசமாக எத்தனை காரியங்கள் சங்கர மடம் நடத்துகிறது என்பது தெரியுமா? இல்லை நீங்கள் பார்த்தது மட்டும் தான் உண்மை என்பீர்களா? அப்படியானால், ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்ததையும் நீங்கள் நேரில் பார்த்ததில்லை - அதை நம்புகிறீர்கள் தானே?

சேவை என்பதன் அர்த்தம் 'இலவசம்' இல்லை. சங்கர மடம் தன்னால் இயன்ற அளவு பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துகிறது. கல்வி, ஆன்மிகம், மருத்துவத் துறைகள் அனைத்துமே சேவை துறைகள் தான். அதற்கு தேவை ஆத்மார்த்தமான அர்பணிப்பு - இலவசம் இல்லை.

அது சங்கர மடத்திடம் உண்டு. இன்னும் வெகு சில கிறுத்துவ அமைப்புகளிடமும் உண்டு. ஆகவே இவற்றைக் கொச்சைப் படுத்த முயல்வது தங்களின் முதிர்ச்சியின்மையை மட்டுமே வெளிக் கொணருகிறது.
நான் படித்த சங்கரவித்யாலயா பள்ளி உங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் We the people.
Anonymous said…
எங்கே என் பின்னூட்டம், ஏன் உண்மையை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்களென்ற பயமா?....

ஜெய், உணர்ச்சிப் பொங்க எழுதுவது மட்டும் போதாது, எதிர் கருத்துக்களை உள்வாங்க வேண்டும், அதற்கு பதிலளிக்க வேண்டும்.
Anonymous said…
எங்கே என் பின்னூட்டம், ஏன் உண்மையை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்களென்ற பயமா?....

ஜெய், உணர்ச்சிப் பொங்க எழுதுவது மட்டும் போதாது, எதிர் கருத்துக்களை உள்வாங்க வேண்டும், அதற்கு பதிலளிக்க வேண்டும்.
Anonymous said…
// லக்கிலுக் said...
நான் படித்த சங்கரவித்யாலயா பள்ளி உங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் We the people.//

சங்கர வித்யாலயாவிற்கு இதை விட ஒரு தலைகுனிவு வேண்டாம். லக்கி போன்ற குடிமகன்களை உருவாக்கி வெளியே நடக்க வழி செய்து தந்த ஒரே காரணத்திற்காகவே இந்த பள்ளி மூடப்பட வேண்டும். வெட்கமாக இல்லை - உங்களுக்கு கல்வி அளித்த ஒரு கோவிலைக் குறை கூற? அந்த அளவிற்கா அகந்தை? அடுத்து உங்கள் மூக்கு பெரியது என்று பெற்ற தாயின் கர்ப்பப் பையை குறை கூறுவீர்கள் போலிருக்கிறது. குறை உங்களுடையது லக்கி - மனது முழுதும் கறுப்பு. அதை சரி செய்யும் வழியைப் பாருங்கள்.
//எந்த அளவுக்கு நல்ல காரியங்கள் பண்றாங்களோ அந்த அளவுக்கு mis approriation of foreign funds...//

கிறித்துவரான தெரசாவுடைய அமைப்புக்கும் ஏராளமாக ஃப்பாரின் பணம் வருதுங்க!

இந்தியரான நமக்கு கிறித்துவ அமைப்புவாயிலாகத் தெரசா செஞ்சா குறைவற்ற சேவை!!

அதையே சங்கரமடம் மாதிரியான நம்ம ஊர் இந்து மதஅமைப்புக்கள் அரசு, மக்களோட பெருவாரியான ஆதரவு இல்லாமலே நிறைய நல்லதைச் செஞ்சா பாராட்ட எவ்வளவுக்கு எளிதாக வருகிறது பாருங்கள் நமக்கு!

மெக்காலே படிப்பு சிஸ்டத்தில் படித்த படிப்பால், பகுத்தறிவும் சேர்ந்து தூண்டி இந்திய, இந்துமத வெறுப்பு உள்ளே இருந்து ஏதாவது குற்றம் என்று எப்படியானும் சொல்வது மதச்சார்பின்மைன்னு பழகிட்டோம் பாருங்க.

இந்து அமைப்பு இந்தமாதிரி முறைகேடு செஞ்சிருந்தா இடதுசாரி ஆங்கில மீடியா அப்படியே கமுக்கமா இருக்கப்போறாங்க.. அட நீங்க வேற!

நம்மூர் ஆட்களே மிஷநரிகளுக்கு செக் வைக்கிற சேவைகள் லார்ஜ் ஸ்கேல்ல செய்வதைப் பாராட்டாவிட்டாலும் இல்லாத குற்றத்தைத் தேடிக்கண்டுபிடிப்பதையாவது தவிர்க்கலாமே!

தமிழ்நாட்டுல பெரும்பான்மையோருக்கு தான் இந்து தானான்னே சந்தேகம் வந்துடுச்சு பகுத்தறிவால்!! :-)) :-))

சிரிப்பான் போட்டாச்சுங்க. கோபம் எல்லம் இல்லைங்க மங்கை:-))
We The People said…
//கிறித்துவம் மதச்சார்பின்மை பேசும் அதிகாரத்தில் இருக்கும் அரசுகளை கைக்குள்ளே போட்டுக்கொண்டு மக்கள்சேவை செய்வதாக சொல்வதை நம்பும் நமக்கு இந்து அமைப்புகள் பணம் பண்ணுவதை தனி நபர் லாப நோக்கமாக கொள்ளாமல், சேவை நிறுவனங்களைத் தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் தன் பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து பெரிதாக எந்த ஆதரவும் இல்லாமல் நிறுவிச்செய்யும் செயல் சேவையாகத் தெரிய, புரிய இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்!//

ஹரி சேவை செய்பவர்கள் யாராக இருந்தாலும் நான் பாராட்டுவேன். உதாரணத்துக்கு ராமாகிருஷண மடம் செய்யும் சேவை என் முந்தய பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேனே! சங்கரா ட்ரஸ்ட் செய்வது சேவை அல்ல என்பது என் வாதம் அவ்வளவே!

ஹரி நீங்க சென்னைக்கு வந்தா எனக்கு போன் செய்யுங்க உங்களை விஜயேந்திரரின் தம்பி வீட்டை கொண்டு போய் காட்டுறேன்!!! எங்க இருந்து வருது அவருக்கு காசு?? ஷாப்பிங் காம்பெக்ஸ், வசதி படைத்த வீடு, அடம்பர கார் எல்லா வசதியும் எங்க இருந்து வருது??!! எல்லாம் கொள்ளையாகவே எனக்கு தெரியுது! நான் படித்திருக்கிறேன் விஜயேந்திரரை மடத்தின் இந்த பதவிக்கு எடுக்கும் போது இருந்த குடும்ப சூழல்!!!

மதம் வைத்து இங்கு வாதம் வேண்டாமே ஹரி, அது திசை திருப்புவதாக உள்ளது! நானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான், நான் ஹிந்து என்று பெருமை படுபவன் தான், ஆனா அந்த பெருமையை எப்போது மத சார்ப்பான சிந்தனைக்கு சேர்த்துக்க மாட்டேன். அது வேறு இது வேறு.

When it comes to common people service, I wont see difference in Hindu/Christian or Islamic service organisation. யார் சேவை செய்தாலும் பாராட்டலாம், யார் தவறு செய்தாலும் நிந்திக்கலாம்! அதனால தயவு செய்து இதில் மதத்தை உள்ளே கொண்டுவரவேண்டாம். வாதம் நாம் துவங்கிய வழியில் செல்லட்டுமே!
Anonymous said…
கிருஷ்ணா,

நல்லா சொன்னீங்க... இந்த ஜெய் சேவை அப்படிங்கிறதை இலவசம்னு அர்த்தப்படுத்திக்கிட்டு பேசுறார்.

இலவசம் வேற..

சேவை வேற..

கன்ஸூமர் ஆக்ட் படி, பணம் வாங்கிக்கொண்டு வேலை வெய்வதைத் தான் சேவை என்கிறது. பஸ்/ரயில் போன்றவைகள் செய்வதும் சேவைகளே!


இந்திய கிராமங்களில் எல்லாம் எந்த மடச்சாமியார்களின் சேவையும் போய்ச் சேர்வதில்லை. மிஸ்நரிகள் தான் பாடு படுகிறார்கள். அவர்கள் செய்வதும் சேவை தான். அதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறது உங்கள் மனம்.

இந்த மடச்சாமிகள் உயர்சாதி இந்துக்களுக்கு மட்டுமே அதிக அளவில் உதவி வருகிறார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஆனால்.. நீங்கள் சொல்லும் மிஸ்நரிகள்(அது என்னங்க மிஸ்நரி.. மிஸ்டர்.நரின்னு சொல்லப்பிடாதா?) சமூகத்தால் எல்லா விதத்திலும் ஒதுக்கப்பட்டிருக்கும் மக்களை நோக்கி தங்கள் சேவைகளை செய்கிறார்கள்.

இது பத்தி ஏதாவது சொல்லுங்க ராசா!
We The People said…
அனானி,

//ஜெய், உணர்ச்சிப் பொங்க எழுதுவது மட்டும் போதாது, எதிர் கருத்துக்களை உள்வாங்க வேண்டும், அதற்கு பதிலளிக்க வேண்டும்.//

எந்த பின்னூட்டத்தை கேட்கறீங்க?? இருந்த எல்லா பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டேனே! ஒன்றை கூட தடை செய்யவில்லை! இங்கு இல்லை என்றால் மீண்டும் ஏதோ உண்மைன்னு சொன்னீங்களே அதை திரும்ப போடுங்க பார்ப்போம்!

அனானி அண்ணா நான் எதிர் கருத்தை பார்ப்பேன், எங்க கருத்தையும் அலசுவேன்! தவறு என் பக்கம் இருந்தா திருந்தவும் தயங்க மாட்டேன்! எனக்கு யார் மேல பயன் இல்லை! என்னை படைத்தவனை தவிர!!!
Anonymous said…
//சங்கர வித்யாலயாவிற்கு இதை விட ஒரு தலைகுனிவு வேண்டாம். லக்கி போன்ற குடிமகன்களை உருவாக்கி வெளியே நடக்க வழி செய்து தந்த ஒரே காரணத்திற்காகவே இந்த பள்ளி மூடப்பட வேண்டும். வெட்கமாக இல்லை - உங்களுக்கு கல்வி அளித்த ஒரு கோவிலைக் குறை கூற? அந்த அளவிற்கா அகந்தை? அடுத்து உங்கள் மூக்கு பெரியது என்று பெற்ற தாயின் கர்ப்பப் பையை குறை கூறுவீர்கள் போலிருக்கிறது. குறை உங்களுடையது லக்கி - மனது முழுதும் கறுப்பு. அதை சரி செய்யும் வழியைப் பாருங்கள்.
//

இங்க பாருங்கப்பா.. என்னமா ஒருத்தர் குதிக்குறார்.

அவர் படிச்ச பள்ளியில இருக்குற குறையை அவர் சொல்லுறார். அனானி நீங்க படிச்ச பள்ளியைப்பற்றி சொல்லலியே!

தப்பு இருந்தா எழுதக்கூடாதா..? அந்த பள்ளியில் தப்பு நடப்பதை உணர்ந்திருக்கிறார் அவர். உண்மை தான் இப்படி உணரும் அளவிற்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை காலி பண்ணனும், பள்ளியையும் இடிக்கனும்.. சுத்த நான்சென்ஸ்ஸா இருக்கு!
மங்கை said…
//சிரிப்பான் போட்டாச்சுங்க. கோபம் எல்லம் இல்லைங்க மங்கை:-))///

ஹரிஹரன்
எனக்கும் கோவம் இல்லைங்க..நான் சங்கர மடத்திற்கு எதிராகவோ, அல்லது கிருஸ்துவ மிஷினரிகளுக்கு ஆதரவாகவோ பேசலை..தொண்டு நிறுவணங்கள்ல நடக்குற கூத்த தான் சொல்றேன்...அதான் சொல்றேன் எல்லாரும் தான் பண்றாங்கன்னு... பண்றவங்களுக்கு எதோ ஒரு background தேவைப்படுது... சில சமயம் அது மதமா இருக்குது... இது போல வெளிநாட்டு பணத்துல விளையாடுறதுல எந்த மதமும் சலைத்தது இல்ல ஹரி... நான் சங்கரமடத்த சேர்ந்த ஒரு நிறுவணத்த சொன்னது எனக்கு தெரிஞ்சு அங்க நடந்த, இது போல ஒரு விஷயம் தான்.. நான் பேசரது பணம் போய் சேர வேண்டிய மக்களுக்கு ஆதரவா..
யாருக்கும் எதிரா இல்லை ஹரிஹரன்
மதம்..சாதி..எல்லாம் கடந்து... தொண்டு நிறுவணத்துல வேலை செய்யற ஒரு சாதாரண பெண்ணா.. அவ்வளவுதான்..:-))

நானும் சிரிப்பான் போட்டுட்டேன்
rv said…
வீதபீப்பிள்,
நீங்கள் சொன்ன நிறுவனங்கள் குறித்து எனக்கு பரிச்சயமில்லை. ஆனால் காஞ்சிமடத்தின் சில தொண்டு காரியங்களில் நானும் பங்காற்றியிருக்கிறேன் என்ற வகையில் அவர்கள் 'இலவசமாய்' பல சேவைகள் செய்கிறார்கள். முடிந்தவர்கள் பணம் கொடுத்து உதவுங்கள் அல்லது மடத்தின் தொண்டுகாரியங்களுக்கு தாங்கள் சம்பளமில்லாமல்/குறைவான சம்பளத்திற்கு வேலை செய்வதை ஊக்குவிக்கிறார்கள்.

அன்னதானம் தொடங்கி (இன்றும் ஸ்ரீமடத்தின் அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் அனுதினமும் அன்னதானம் செய்கிறார்கள். பெரியவரைப் பார்க்கக்கூட வேண்டாம். திட்டிவிட்டுக்கூட போய் சுகமாய் சாப்பிட்டு வரலாம். :)) எனப்பல காரியங்கள் நடைபெறுகின்றன. சில சேவைகள் பிராமணர்களை நோக்கி ஒரு biasஉடன் செயல்படுவது உண்மையே. அதன் காரணமாகத்தான் அச்சேவைகள் குறித்த வெறுப்பும் சந்தேகமும் பலருக்கு.

மற்றபடி மங்கைச் சொல்வதைப்போல மடத்தின் பணத்தை நிறுவனங்கள் வழியே சுருட்டுவது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். இது பெரியவருக்கும் நிச்சயமாகத் தெரியும். ஏன் சொல்கிறேன் என்றால் "எல்லா இடத்திலயும் திருடுறவன் இருப்பான்... நாம நூறு ரூபா கொடுத்தா 75 ரூபாதான் அவன் அடுத்தவாளுக்குக் கொடுப்பான். அவன் சாப்பிடறானேன்னு அவன அனுப்பினோம்னா அடுத்தவன் வந்துசாப்டுவான். இவா திருடறாளேனுட்டு நாம காரியத்த நிறுத்த முடியுமா?" என்று அவர் சொன்னதை 'பலரும் திருடுகிறார்கள் என்று' ஒருவர் கம்ப்ளெயிண்ட் செய்தபோது நானும் கேட்டிருக்கிறேன்.

திருடுவோர்கள் இங்கே பிராமணர்கள் தான் என்று நான் டிஸ்கி போடணுமா? :)))
மங்கை said…
//சிரிப்பான் போட்டாச்சுங்க. கோபம் எல்லம் இல்லைங்க மங்கை:-))//

ஹரி நான் மதத்தை சொல்லவே இல்லை.. தொண்டு நிறூவனத்துல வேலை செய்யற ஒரு சாதாரண பெண்ணாதான் சொல்றேன்... நான் குறிப்பிட்ட நிகழ்ச்சியும் நடந்தது.. அது சங்கர மடம் செய்த்ததா நான் பார்க்கலை. ஒரு தொண்டு நிறுவனம் செய்ததாதான் பார்க்குறேன்..இங்க அது சங்கர மடத்துக்கு சேர்ந்ததா இருக்கு..அவ்வளவு தான்... நான் யாரையும் ஆதரிக்கவும் இல்லை.. எதிர்க்கவும் இல்லை.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவா பேசரேன் ஹரி..
என்ன எல்லாம் புள்ளி விவரம் காமிச்சு, எப்படியெல்லாம் சம்பந்தப்பட்ட மக்கள் கஷ்டப்படறாங்கன்னு எடுத்துச்சொல்லி பணம் வாங்குறோம்..(கவனிக்கவும் 'வாங்குறோம்')ஆனா அது போய்ச் சேரவேண்டியவங்களுக்கு சேர்ரதில்லை..அந்த ஆதங்கம்தான்.. நான் நேத்து ஒரு பதிவு போட்டேன். Sr.Loyola பற்றி..அவங்க மாதிரி இருக்கவுங்களுக்கு உதவி இல்லை..
நான் மதம், சாதி, எல்லாம் கடந்து தான் பேசரேன்..மக்களுக்கு ஆதரவா..
//அவர் படிச்ச பள்ளியில இருக்குற குறையை அவர் சொல்லுறார். அனானி நீங்க படிச்ச பள்ளியைப்பற்றி சொல்லலியே!//
அப்படியா எப்ப படிச்சார்னு சொல்லற அவரோட பதிவையே தேடிப் பார்த்துட்டு பேசுங்க. அதாவது கே.ஜி. வகுப்பில் சுமார் ஐந்து வயதில் படித்த போது அதே வயதுடைய பிராம்மணப் பையன் இவர் மேல் எச்சி துப்பினானாம். ஆகவே அவர் அவர் அவனது மூக்குச் சில்லை உடைத்து விட்டு பள்ளியை விட்டு விலகியுள்ளார். ஒரு கல்வியாண்டு கூட இருக்காது. நீண்ட அனுபவம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
We The People said…
Krishna என் பதிவை முழுவதுமாக படிச்சிட்டு பேசுங்க ப்ளீஸ், இந்த பதிவு ஹரி சொன்ன

"//பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//"

இந்த வாதத்துக்கான பதிவு! பிராமணர்கள் எல்லாம் சேர்ந்து காசு போட்டு மக்கள் சேவை செய்யறதா சொன்னாரு! அதுக்கு தான் இந்த பதிவு!!!

இதுல நான் ப்ரீமியம் சங்கரா ட்ரஸ்டின் ப்ரீமியம் இன்ஸ்டியூட்டில் நிறைய காசு கொடுத்து, மக்கள் சேவைக்கு உதவரது இங்கே வராது!

//பெரும்பான்மை இந்துக்கள் வரியாகக் கட்டும் பணம் மட்டும் வேண்டும், ஆனால் அவர்களுக்கு அதனால் எந்த பலனும் கிடைக்கக்கூடாது என்பது முட்டாள்தனம்.//

இது போன்ற வாதம் தவறாக திசையை நோக்கி அழைத்துச் செல்லும் கிருஷ்ணா, நாம் கட்டும் வரி எவ்வளவு யார் தந்தாலும், சாதி, மத, இன பாகுபாடின்றி அரசு செயல்பட வேண்டும்! அரசு ஹிந்து நடத்தும் சேவை இயக்கங்களுக்கு உதவவில்லை என்றால் வெளியே வாங்க, சுட்டிக்காண்பித்து, தட்டிக்கேட்டு பெறலாம்.. ஆனால் இந்த வாதங்கள் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது என்பதே என் கருத்து!

//'NGO'மிஷநரிகளைப் போல இந்து அமைப்புகள் ட்ரஸ்ட் நடத்துவது தமிழ்நாட்டில் சாத்தியமில்லை.//

அப்ப ராமகிருஷணா மிஷன் எப்படி வேலை செய்யுது??!! ஒரு கருத்தை சொல்லுவதற்கு முன் நல்ல யோசிச்சு சொல்லுங்க! உண்மைகள் இருக்குமானால் சம்பந்தப்பட்ட அந்த ட்ரஸ்ட் அதை பத்திரிக்கை வாயிலாக மக்களை கொண்டு செல்லாமே! ஏன் செய்யமாட்டேன் என்கிறது!!?? கிருஷணா கண்மூடி நம்பாம உண்மையை கண்டுபுடிக்க பாருங்க!!

//சங்கர நேத்ராலயாவில் காசு பறிக்கிறார்கள் என்று புலம்பும் தாங்கள் அங்கு செல்ல முதலில் முடிவு செய்தது ஏன்? அதன் தரமா? அல்லது ஏதாவது ஓசியில் கிடைக்கும் என்ற 'தமிழக' நப்பாசையா? ஏழைகளுக்குத் தான் சேவை - உங்களைப் போன்ற வசதியுள்ளவருக்கு என்ன சேவை வேண்டியிருக்கிறது? உங்கள் நோக்கமே தவறு என்கிறேன்.//

எங்க வீட்டுக்கு அருகில் உள்ளது என்ற மேட்டரால் சென்றேன் அவ்வளவே! நான் ஓ.சியில் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்துப் போனேன்னு எங்கயாவது சொன்னேனா?? சங்கராவின் தரத்தை விட நல்ல வசதிகளுடன் அரவிந்த் கண் மருத்துவமணை மிக குறைந்த சேவை கட்டணத்துடன் செய்யமுடியும் ஒரு காரியத்தை ஏன் யானை விலை கொடுத்து செய்ய வேண்டும்! FYI அரவிந்த் கண் மருத்துவமனையும் ஒரு ஹிந்து ட்ரஸ்ட் தான். :))))
மங்கை said…
Krishna (#24094743) said...
//அல்லது ஏதாவது ஓசியில் கிடைக்கும் என்ற 'தமிழக' நப்பாசையா?///


ஒன்னும் சொல்றதுக்கில்லை..
உண்மையிலேயே இத படிச்சுட்டு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு...
இப்படியும் நம்மள கேவலப்படுத்தனுமா..ஹ்ம்ம்ம்ம்
///////பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?///

உங்களுடைய பதிவில் காஞ்சி மடம் செய்யும் சேவைகளைப் பற்றி கொஞ்சமும் எழுதாமல், அது என்னவோ கழகம் போல் மக்களைக் கொள்ளையடித்து குளிர் காய்வது போல காட்ட வரிந்து கட்டி எழுதப் பட்டது போலிருக்கிறது. உங்கள் வாதம் என்ன? பிராமணர்கள் எதுவுமே செய்வதில்லை என்பதா? இல்லை அவர்கள் செய்தது உங்களுக்கு தெரியாது என்பதா? இல்லை அது உண்மைதான் ஆனால் ஒப்புக்கொள்ள தைரியம் இல்லை என்பதா?

உங்கள் நோக்கத்தில் பழுதிருப்பதாக உணர்கிறேன் ஜெய். நீங்கள் பெரும் நடுநிலைவாதியாக உங்களைக் காட்டிக் கொள்ள முனைகிறீர்கள். ஆனால் இந்தப் பதிவு நடுநிலைமையில் இருந்து சிந்தித்து எழுதப்படவில்லை.

நீங்கள் காசு கொடுத்து வைத்தியம் பார்க்க போனீர்கள் என்றால் தரத்தைப் பற்றி விமர்சனம் செய்யலாம். நான் காசு கொடுத்தேன் - இன்னோரு இடத்தில் இதை விட சகாய விலை- அதனால் முதலில் சென்ற இடத்தில் சேவை எங்கே - என்பது தான் தாங்கள் முன் வைக்கும் கருத்து.

பத்திரிக்கை மூலமாக மக்களிடம் கொண்டு சென்றால், அதுவும் தமிழ் நாட்டில் என்ன நடக்கும் என நினைக்கிறீர்கள்? அதுவும் ஒரு பிராமண இயக்கம் அதைச் செய்தால் என்ன கிடைக்கும்? பிரச்சினைகள் மேலும் சிக்கலாகும் - அவ்வளவே. ராமகிருஷ்ணா மிஷன் இந்திய / சர்வதேச அளவில் வலிமையுடையது. காஞ்சி மடம் பெரும்பாலும் தமிழர் மட்டுமே சம்பந்தப்பட்டது. இரண்டையும் ஒப்பிடுவது எப்படிப் பொருந்தும் என நினைக்கிறீர்கள்?

நான் சொல்வது இது தான். சங்கர மடம் பெரும்பாலும் பிராமணர் கொடுக்கும் பணத்தில் தான் நடக்கிறது. வேறு சாதியினரோ, மதத்தினரோ, அல்லது திராவிட அரசுகளோ அதற்கென எந்த சலுகைகளும், உதவிகளும் செய்வதில்லை. மடம் பெரும்பான்மையான காரியங்கள் இலவசமாயும், சில காரியங்கள் பணம் பண்ணும் விதமாயும் நடத்துகிறது. இப்படிப் பெருக்கப் படும் பணமும் பெரும்பான்மையான இலவச காரியங்கள் செய்யத்தான் ஒதுக்கப் படுகிறது.
இப்படிப் பணம் புரளும் இடங்களில் ஒரு சில தவறுகளும் நடக்கும். அதையும் தாண்டி பெரும்பான்மையான உதவிகள் தகுதியுள்ளோருக்கு மடம் செய்து தான் வருகிறது. நோக்கம் சேவை மட்டுமே. தருமனாக இருந்து இதைப் பார்த்தால், நல்லவை புலப்படும். துரியோதனனா இருந்து இதைப் பார்த்தால் தீயவை புலப்படும். பழுது நம் பார்வையிலேயன்றி, மடம் செய்யும் சேவைகளிலில்லை.

உங்கள் முதல் கேள்விக்கு ஓரளவு விடை உள்ளது - இந்த ஒரே மடத்தின் மூலம். பிராமணர்களின் சேவைகள் பெரும்பாலும் விளம்பரத்திற்காக செய்யப்ப்டுவதில்லை. ஆத்ம திருப்திக்காக செய்வது. ஒரு குழல் விளக்கு வாங்கி அதில் சிகப்புப் மையால் 'உபயம்:...' என்று எழுதும் பழக்கம் பிராமணரிடம் கிடையாது. மற்ற எந்த சமூகத்திரையும் விட பிராமண சமூகத்தினரின் சமூக, சமுதாய முன்னேற்றப் பங்களிப்பு குறைவானதில்லை. ஆகவே சிறுபான்மையினரான அவர்களை கேலியும், கிண்டலும் மட்டுமே செய்ய இயலும் வக்கிர கும்பலுக்கு, தெய்வ நம்பிக்கை உடையவராக கூறிக்கொள்ளும் தாங்கள் களம் அமைக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.
//ஒன்னும் சொல்றதுக்கில்லை..
உண்மையிலேயே இத படிச்சுட்டு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு...
இப்படியும் நம்மள கேவலப்படுத்தனுமா..ஹ்ம்ம்ம்ம்
//
கேவலப் படுத்தியது நானில்லை மங்கை அவர்களே. அரிசிக்கும், நிலத்துக்கும் ஓட்டு போட்டு நமக்கு நாமே இந்திய அளவில் பெற்ற பெயரிது. கண்டிக்கப்பட வேண்டியவர்கள் நம்மை இந்த நிலைமையிலேயே வைத்திருக்க முயலும் அரசியல் வியாதிகள். மனதிற்கு கஷ்டமாயிருந்தாலும், உண்மை அது தான்.
We The People said…
//உங்களுடைய பதிவில் காஞ்சி மடம் செய்யும் சேவைகளைப் பற்றி கொஞ்சமும் எழுதாமல், அது என்னவோ கழகம் போல் மக்களைக் கொள்ளையடித்து குளிர் காய்வது போல காட்ட வரிந்து கட்டி எழுதப் பட்டது போலிருக்கிறது. உங்கள் வாதம் என்ன? //

நீங்க அவர்கள் பிராமண இயக்கம் என்ற விதத்தில் பார்ப்பதால் உங்களுக்கு அப்படி புரியுது! இப்படி போனா ஜெயலலிதாவை பற்றி எழுதினாலும் அது உங்களுக்கு பிராமண எதிர்ப்பாதான் தெரியும், தப்பு எங்க பார்த்தாலும் சொல்லுவது என் இயல்பு. நல்லதை பார்த்தாலும் சொல்லுவோம்!

//பிராமணர்கள் எதுவுமே செய்வதில்லை என்பதா? இல்லை அவர்கள் செய்தது உங்களுக்கு தெரியாது என்பதா? இல்லை அது உண்மைதான் ஆனால் ஒப்புக்கொள்ள தைரியம் இல்லை என்பதா?//

இப்படி நான் சொல்லவில்லையே! நான் பார்த்த நாலு இடங்களை பற்றித்தானே சொன்னேன், மற்றவை எனக்கு தெரியாது, அதனால சொல்லவில்லை! என் பதிவிலும் சொல்லியிருக்கேனே!!!

//நீங்கள் காசு கொடுத்து வைத்தியம் பார்க்க போனீர்கள் என்றால் தரத்தைப் பற்றி விமர்சனம் செய்யலாம். நான் காசு கொடுத்தேன் - இன்னோரு இடத்தில் இதை விட சகாய விலை- அதனால் முதலில் சென்ற இடத்தில் சேவை எங்கே - என்பது தான் தாங்கள் முன் வைக்கும் கருத்து.//

ஆமாம், சொல்லத்தான் செய்வேன்! ஏன்னா இதை விட நல்ல தரம் இன்னொரு இடத்தில் இருந்தால் கண்டிப்பா சொல்லித்தானே ஆகவேண்டும்!!

//காஞ்சி மடம் பெரும்பாலும் தமிழர் மட்டுமே சம்பந்தப்பட்டது. இரண்டையும் ஒப்பிடுவது எப்படிப் பொருந்தும் என நினைக்கிறீர்கள்? //

பெரும்பாலும் தமிழர் மட்டுமே சம்பந்தப்பட்டது என்று சொல்லும் இயக்கம் வட இந்தியாவில் எத்தனை மருத்துவமனைகளை ந்டத்துகிறது!!! அது எப்படி முடியும். இன்றும் ஜெயேந்திரர் நினைத்தால் பிரதமரையும், மறைந்திருக்கும் பிரதமரின் சக்தியையும் பார்க்கமுடியும், அவர் பிரச்சனையை சொல்ல முடியும்! இல்லை என்று உங்களா சொல்லமுடியுமா?? இன்று டெல்லியில் உள்ள முக்கிய கட்சி தலைவர்கள் அவர் காலில் விழுந்தவர்ளே அதிகம் என்று நினைக்கிறேன்! அப்படி இருக்கு பட்சத்தில் பிரச்சனையை சுலபமாக சரி செய்யமுடியுமே! அவ்வளவு ஏன் இன்று பதிவில் உள்ள கருணாநிதியும் மறைமுக டீல் போட்டு கேஸ்களிருந்து தப்பித்தவர் தானே இந்த ஜெயேந்திரர்??

//தருமனாக இருந்து இதைப் பார்த்தால், நல்லவை புலப்படும். துரியோதனனா இருந்து இதைப் பார்த்தால் தீயவை புலப்படும். பழுது நம் பார்வையிலேயன்றி, மடம் செய்யும் சேவைகளிலில்லை.//

கேட்டதை பார்த்த கண்டுக்க கூடாது, கண்டுபிடித்து சொன்னா துரியோதனன் ஆக்கப்படுவான்னு சொல்லறீங்க! அப்படி என்றால் நான் துரியோதனாகவே இருக்கேன், I Dont Mind!!!

நான் அரசியவாதிகளில் குறையை கண்டு கொதித்து எழுதும் போது ஓடி வந்து ஆதரவு கொடுத்த கிருஷ்ணன் இன்று சங்காராசாரியாரை சொல்லும் போது ஏன் நான் துரியோதனன் ஆனேன்??!!

//ஆகவே சிறுபான்மையினரான அவர்களை கேலியும், கிண்டலும் மட்டுமே செய்ய இயலும் வக்கிர கும்பலுக்கு, தெய்வ நம்பிக்கை உடையவராக கூறிக்கொள்ளும் தாங்கள் களம் அமைக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.//

முதலில் என் பதிவில் என்ன கேலியும் கிண்டலும் இருந்ததுன்னு சொல்லுங்க?? நான் ஒரு போதும் பிராமணரை கிண்டல் செய்ததும் இல்லை, அவர்களை நக்கல் அடித்ததும் இல்லை, என் பார்வையில் எல்லா சாதியினரும் சரி நிகர் சமம்! எங்கயாவது கிண்டல் இருந்தால் சொல்லுங்க பார்ப்போம்!

உங்களை நான் என்று என்னை நடுநிலையாளனாய் பாருங்க என்று சொல்லவில்லை! நான் என் மனதில் சரி என்று பட்டதை எழுதுவேன், தவறும் உங்க கண்ணோட்டத்தில் உள்ளது!

உங்கள் கருத்துக்கு நன்றி
//இப்படிப் பணம் புரளும் இடங்களில் ஒரு சில தவறுகளும் நடக்கும். அதையும் தாண்டி பெரும்பான்மையான உதவிகள் தகுதியுள்ளோருக்கு மடம் செய்து தான் வருகிறது. நோக்கம் சேவை மட்டுமே. //

தகுதியுள்ளோருக்கா?. அப்படின்னா .... ok ok. பேஷா புரியுது.
//நான் அரசியவாதிகளில் குறையை கண்டு கொதித்து எழுதும் போது ஓடி வந்து ஆதரவு கொடுத்த கிருஷ்ணன் இன்று சங்காராசாரியாரை சொல்லும் போது ஏன் நான் துரியோதனன் ஆனேன்??!!//


சண்டாளன் கருணாநிதியின் குடும்ப அரசியலை குற்றம் என்றீர் - அது சரியான செயல். எல்லோரும் ஒரு பெரிய சபாஷ் போடுவா. ஆனால் பால பெரியவா குடும்பத்தினை பற்றி எழுதினால் அவார்களுக்கு கோபம் வரத்தானே செய்யும். ok. ok. cool ya. cool .... (23ஆம் புலிகேசி ஸ்டைலில் படிக்கவும்) :-)
SurveySan said…
WeThePeople,

நல்லது செய்பவர்கள், வெளியில் சொல்லாமல் தம்பட்டம் அடிக்காமல் செய்வார்கள்.

நீங்க சொல்ற 'ட்ரஸ்ட், மிஷன்ல' சிலதுகள், ஒரு கையில் பணம் வாங்கி, மற்றொரு கையால் உதவி செய்யும் ரகம்.

உ.ம், சங்கரா கண் மருத்துவமனை. அவர்கள், இருப்பவர்களிட, தேவையானதை வசூல் செய்து, இல்லாதவர்க்கு, இலவச முகாம் மூலம் உதவி செய்துவருகிறார்கள்.
(atleast thats what I believe they are doing. No one knows the real scenario, until you really go into the field and see whats happening)

Art-of-Living (ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தாடிக்காரர்) கூட ஒரு யோகா சொல்லித் தர $500 வசூலிக்கிறார்கள். ஆனால், அந்த பணமெல்லாம் நல்ல விஷயங்களுக்காக செலவு செய்யப் படுகிறது என்று advertise செய்துதான் வாங்கறாங்க.

யாரயாவது நம்பித்தான ஆக வேண்டி இருக்கு :)

M.S.Swaminathan தெரிஞ்சிருக்குமே? silentஆ ஆற்பாட்டம் இல்லாம பல பல விஷயங்கள் செஞ்சிருக்காரு, இன்னும் செய்யறாராம்.


பின்னூட்டம் ஏன் போட வந்தேன்னா, நீங்க சொல்ற லிஸ்ட்ல, எல்லாரும் fraudஆ இல்லாம, சிலர் உண்மையாவே நல்லது செய்றவங்களா இருந்துட்டா என்ன பண்றது?
உங்க பதிவ படிக்கறவங்க, அவர்கள் கொடுத்து வரும் நன்கொடைகளை நிறுத்திட்டா, இதுவரை பலன் அடைந்தவர்களை பாதிக்குமே.

இன்னும் தீவிரமா விசாரிச்சு, உண்மை நிலை end-to-end எழுதினா ந்ல்லாயிருக்கும். ஒரு கை வாங்குது, இன்னொரு கை குடுக்குதான்னும் பாக்கணும் :)
We The People said…
SurveySan நானும் எல்லா அமைப்புக்களும் அப்படின்னு சொல்லவில்லையே! என் பதிவில் தெளிவாக தான் சொல்லியிருக்கேன்! நான் பார்த்த சங்கரா மிஷன் மருத்துவமனை, சின்மயா பள்ளிகள், CHILDS Trust பற்றி மட்டுமே கூறினேன்.

மற்றவை பற்றி எனக்கு தெரியாது அதனால் அதை பற்றி கருத்து சொல்லவில்லை! இருந்தாலும் நீங்க சொன்னா மாதிரி பிறகு நேரம் கிடைக்கும் போது உண்மையில் யார் ஏழைகளுக்கு சேவை செய்கிறார்கள் என்று தெளிவாக ஆராய்ந்து எழுதுவோம்.

சங்கரா கண்மருத்துவமனை நீங்க சொல்லறா மாதிரி பெரிய லெவலில் இலவச முகாம் மூலம் உதவி நடத்துவதில்லை, சில கண் துடைப்பு அருவை சிகிச்சைகளை மட்டும் செய்கிறது என்பதே உண்மை.
Anonymous said…
//நீங்கள் காசு கொடுத்து வைத்தியம் பார்க்க போனீர்கள் என்றால் தரத்தைப் பற்றி விமர்சனம் செய்யலாம். நான் காசு கொடுத்தேன் - இன்னோரு இடத்தில் இதை விட சகாய விலை- அதனால் முதலில் சென்ற இடத்தில் சேவை எங்கே - என்பது தான் தாங்கள் முன் வைக்கும் கருத்து//

அதான் ஜெய் சொல்லியிருக்காரே, ஏதோ தெரிந்த மருத்துவர், மற்றும் இவர் எதிர்பார்க்கும் சேவை (அதாவது இலவசம்) இரண்டும் கிடைக்கவில்லை என. இதிலிருந்து தெரியவில்லையா இவர் என்ன எண்ணத்தில் இந்த பதிவினை இட்டிருக்கிறார் என்று.

கடந்த சில நாட்களாக பதிவில் அதிக காரமில்லாது இருப்பதால், இவரது நடுநிலை வியாதி சற்று குறைவாக இருந்த்திருக்கிறது, தற்போது மீண்டும் லைம்-லைட்க்கு வருவதற்காக இந்த பதிவு.....
We The People said…
ஐயா அனானி,

//கடந்த சில நாட்களாக பதிவில் அதிக காரமில்லாது இருப்பதால், இவரது நடுநிலை வியாதி சற்று குறைவாக இருந்த்திருக்கிறது, தற்போது மீண்டும் லைம்-லைட்க்கு வருவதற்காக இந்த பதிவு.....//

எனக்கு விளம்பரம் தேவையும் இல்லை, லைம் லைட் எனக்கு எதுக்கு சாமி!!

உங்க கேஷ்டிக்கு சாதகமா சொன்னா ஓடி வந்து கும்மி அடிப்பீங்க! எதிர்த்த நம்மள இப்படி சொல்லி மட்டம் தட்டுவீங்க! இதுக்கெல்லாம் வருத்தப்படும் ஆள் நான் இல்லை சாமி!

என்ஜாய்!!!
Thamizhan said…
இந்த ஒரு பதிவிலேயே நன்றாகத் தெரிவது ஒரு செய்தி.
பெரியார் பேசும்போது சொல்வார்.காஷ்மீரத்துப் பாப்பானுக்குத் தேள்கொட்டினால் கன்னியாகுமரி பாப்பானுக்கு நெரி கட்டும் என்று. என்க்கு அது புரியவில்லை.
காஞ்சி சுப்புணி கைதானதும்தான் அதன் உண்மை புரிந்தது.உலகெங்கும் நெரி கட்டியது.
நீங்கள் பார்த்த அனுபவத்தைச் சொல்கிறீர்கள்.அதிலும் அங்கு வரும் வருமானம் பார்ப்பனரல்லாத பண்க்காரர்களிடமிருந்துதான் அதிகம் என்று சொல்கிறார்கள்.இந்தியாவின் சுவிஸ் வங்கி என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும்.
SurveySan said…
//சங்கரா கண்மருத்துவமனை நீங்க சொல்லறா மாதிரி பெரிய லெவலில் இலவச முகாம் மூலம் உதவி நடத்துவதில்லை, சில கண் துடைப்பு அருவை சிகிச்சைகளை மட்டும் செய்கிறது என்பதே உண்மை.//

அப்படியா? யாராவது தீர விசாரிச்சு, மேல் விவரங்கள் தந்தா நல்லா இருக்கும்.
எனக்குத் தெரிந்த பல பேர், சங்கரா மருத்துவமனைக்கு நன்கொடை கொடுப்பவர்கள்.
குறிப்பா, $30 ஒரு ஏழைக்கு கண் பார்வை கொடுக்கிறோம் என்று ஒரு விளம்பரம் வரும் அமெரிக்க தொலைக்காட்சியில். அதைப் பார்த்து கொடுக்கத் தொடங்கியவர்கள் பலப்பலர்.

போலிகள் இனம் கண்டு கொள்ளப்பட்டு ஒதுக்க வேண்டியவர்கள் தான்.
தெரிஞ்சா விசாரிச்சு சொல்லுங்க ஜெய்.

நன்றி :)
//ஹரி நீங்க சென்னைக்கு வந்தா எனக்கு போன் செய்யுங்க உங்களை விஜயேந்திரரின் தம்பி வீட்டை கொண்டு போய் காட்டுறேன்!!! எங்க இருந்து வருது அவருக்கு காசு?? ஷாப்பிங் காம்பெக்ஸ், வசதி படைத்த வீடு, அடம்பர கார் எல்லா வசதியும் எங்க இருந்து வருது??!! எல்லாம் கொள்ளையாகவே எனக்கு தெரியுது! நான் படித்திருக்கிறேன் விஜயேந்திரரை மடத்தின் இந்த பதவிக்கு எடுக்கும் போது இருந்த குடும்ப சூழல்!!!//

விஜயேந்திரரின் தம்பி ரகுவின் வளத்திற்காக சங்கரமடத்தின் சங்கரா பள்ளிகளும், சங்கரா மருத்துவமனைகள், இதல்ர மக்கள் நலச் சேவைத் திட்டங்கள் ஏற்பதுத்தப்படவில்லை.

நீங்கள் குறிப்பிடும் விஜயேந்திரர் தம்பியின் சொத்துக்கள் குறித்த இந்த விஷயம் நான் அறியவில்லை.

நன்கொடைகளில் ஊழல் என்று எடுத்தால் சில சதவீத நிதி முறையற்று சிலரால் சுயநலத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்! ஆனால் இம்மாதிரியான உள்குத்து மோசடிகளையும் மீறி சமூக நன்மைக்காகப் பல நல்ல விஷயங்கள் நடந்தேறிவருகின்றன.

பெரும்பான்மைக்கும் நன்கொடைகள் நல்ல விஷயங்களான தரமான கல்விக்கும் , தரமான மருத்துவ சேவைக்கும் பயன்படுத்தப் பட்டிருப்பதில் மகிழ்ச்சியே!

//மதம் வைத்து இங்கு வாதம் வேண்டாமே ஹரி, அது திசை திருப்புவதாக உள்ளது! நானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான், நான் ஹிந்து என்று பெருமை படுபவன் தான், ஆனா அந்த பெருமையை எப்போது மத சார்ப்பான சிந்தனைக்கு சேர்த்துக்க மாட்டேன். அது வேறு இது வேறு. //

சங்கரமடம், சின்மயா மிஷன் சார்ந்த
விஷயத்தினைப் பேசுகையில் இந்துமத சார்பான சிந்தனையாகத் தோன்றுகிறது தங்களுக்கு எனக் கருதுகிறேன்!
We The People said…
ட்ரைஸ்டின் முக்கிய பொறுப்பில் உள்ள மடாதிபதியின் தம்பி இவ்வளவு வளர்ச்சி பெறும் போது எந்த ஒரு சாமானியனுக்கு வரும் சந்தேகமே எனக்கும் வருது!

//சங்கரமடம், சின்மயா மிஷன் சார்ந்த
விஷயத்தினைப் பேசுகையில் இந்துமத சார்பான சிந்தனையாகத் தோன்றுகிறது தங்களுக்கு எனக் கருதுகிறேன்!//

அட நீங்க தானே கிருஸ்துவ மிஷினரிகளை பற்றி எழுதி பின்னூட்டமிட்டது!? மறந்துட்டீங்களா? அதனால தான் சொன்னேன் மதம் சார்த்து இந்த பிரச்சனையை கொண்டு போக வேண்டாம் என்று!