அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!

எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வைக்க ஒரு chance கேட்கிறாரோ? அடப்பாவிகளா? அந்த complete support எதுக்கு? இப்படி பப்ளிக்கா பிரஸ் மீட்டிங் போட்டு கேக்கற அளவுக்கு இந்தியாவில சுதந்திரம் இருக்குடா சாமி.
இந்த கேடு கெட்ட திவிரவாதிகளை காப்பாற்ற வரும் மனித உரிமை காப்பாளர் என்ற பெயரில் வரும் ___ களை என்ன சொல்லறது. இந்த அஃப்சல் நாட்டின் தலை நகரில் அதுவும் நம்ம பாராளமன்றத்தில் தாக்குதல் நடத்தி பலரை கொல்ல சதி செய்தவன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளவனை ஆதரிக்கும் இந்த ம.உ.கா!!! இந்த அப்சலின் உயிரை எவ்வளவு முக்கியமோ அது போல தானே இவன் கொன்ற நம் பாதுகாப்பு படை நன்பர்களின் உயிரும். அப்பொழுது எங்க போனாங்க இந்த மனித உரிமை காப்பாளர்கள்.
இந்தியாவின் இறையாண்மையை தொட்டு விளையாடினால் தூக்கு தான் கெதி என்று நாம் உரக்க சொல்லவேண்டிய நேரத்தில் தீவிரவாதிக்கு ஆதரித்து அவர்களுக்கு முஷரப் கொடுத்த சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற பட்டத்தை எடுத்துக்கொண்டு இங்கு சப்(ப)போர்ட்டுக்கு வரும் குழலி போன்றவர்கள், தங்கள் வீட்டில் தீவரவாதிகளில் செயல்கள் எட்டும் வரை ஆதரிப்பார்கள். தன் வீட்டில் ஒருவரை இந்த தீவிரவாதி கொண்டிருந்தால் என்ன செய்திருப்பார்? அப்பொழுதும் குழலி, இந்த அப்சலை ஒரு சுதந்திர போராட்ட வீரர் (தியாகி) என்று சொல்வாரா?
ஒன்னு மற்றும் உண்மை இவனை போன்ற தீவிரவாதிகளை பிடித்தால் நம்ம விஜயகுமார் (கமிஷ்னர் தல!!) ஸ்டைலில் பொட்டுத்தள்ளிவிட்டா இந்த மாதிரி போராட்டமும் இருக்காது! அவனை கைது செய்து கோர்ட்டு, அவன் பாதுகாப்பு, அவன் சாப்பாடு என்று அவனுக்கு ஆகும் எல்லா செலவும் மிச்சம்.
Comments
புகழுக்காக நான் எதையும் செய்வதில்லை. எனக்கு புகழும் தேவையில்லை. குழலி மற்றும் அவர் போன்ற திவிரவாத ஆதவாளர்களின் பதிவுகளை பார்த்து, எனக்கு வந்த கடுப்புக்கு போட்ட பதிவு அவ்வளவே!
எனக்கு வந்த கடுப்புக்கு போட்ட பதிவு அவ்வளவே!
//
I perefectly understand.
எனக்கும் ஏக கடுப்பு.பார்த்துக் கொள்ளுங்கள் இவர்கள் தான் இந்தியா ஈன்றெடுத்துள்ள அறிவாளிகள், படித்தவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள், நாலும் தெரிந்தவர்கள்.
Intelectual dishonesty at its best.
//
ஜெய் இப்படி என் மீது கேள்வி வைக்கப்படும் என்று அறிந்தே இருந்தேன்,இது ஒரு சப்பை கேள்வி. என் பதிவிலியே கடைசியாக பதில் சொல்லலாம் என இருந்தேன் இருந்தாலும் இங்கே இதற்கு மட்டும் சொல்கிறேன்.
ஒருவன் வீட்டில் இந்திய இராணுவம் புகுந்து தீவிரவாதிகளை தேடுகிறேன் என்று அவன் மனைவியையும் தங்கையையும் ஏன் 60 வயது தாயையும் கற்பழித்து, கொன்று தூக்கி எறிந்துவிட்டு வந்தால் அவனுக்கு இந்திய தேசபக்தி பீறிட்டெழுமா? இங்கு நீங்கள் என்று குறிப்பிடாததற்கு படிக்கும் போது இடறல் வரக்கூடாது என்பதற்காகவே.
http://www.dinamalar.com/2006oct08/court_ind1.asp
இந்த செய்தியை படியுங்கள்... ம.உ.கா...க்களின் இரட்டை நிலைபாடு தெளிவாகும்....அருந்ததி ராய் போன்றோர் யாசின் மாலிக்குடன் கை குலுக்கி அப்ஸலுக்காக குரல் கொடுப்பார்கள்...அதில்தானே பிரபலமாக முடியும்...
//ஒருவன் வீட்டில் இந்திய இராணுவம் புகுந்து தீவிரவாதிகளை தேடுகிறேன் என்று அவன் மனைவியையும் தங்கையையும் ஏன் 60 வயது தாயையும் கற்பழித்து, கொன்று தூக்கி எறிந்துவிட்டு வந்தால் அவனுக்கு இந்திய தேசபக்தி பீறிட்டெழுமா?//
இது அப்சலுக்கு நடந்ததா? இது போன்ற எத்தனை கற்பழிப்பு நடத்தது? உண்மையில் நடந்தது என்ன? இந்திய அரசா கற்பழிக்க சொல்கிறது? என்ன வாதங்க இது?? சுத்த பேத்தல்!!! எனக்கு தெரிந்த மட்டில் கஷ்மீரில் மக்களுக்கு இது போன்ற இந்திய எதிர்ப்பு அல்லது தனி நாடாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அப்படி இருந்திருக்குமாயின் 2002 மாநில தேர்தலில் ஓட்டு போடவேண்டாம் என்று JKLF சொல்லியும், மிரட்டியும் 48% ஆண்களும், 38% பெண்களும் ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள்!!! இன்னு சொல்ல போனால் அங்கு JKLF, LeT, போன்ற பயங்கரவாத இயக்கங்களின் மிரட்டலுக்கு பயந்து இன்னும் பலர் ஓட்டு போடாமல் விட்டிருப்பார்களே அன்றி JKLF, LeT, போன்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு தரவில்லை என்பது என் வாதம். எங்கோ ஒரு இந்திய ராணுவன் ஒரு வீட்டி புகுந்து கற்பழித்தால் உடனே இந்திய நாட்டையே எதிர்ப்பார்களா? என்ன லாஜிக் இது. அப்படி பார்த்தால் இங்கு நம்ம தமிழ் நாட்டில் ஒரு இந்திய ராணுவ வீரன் ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சித்தால் தனி தமிழ் நாடு கோரிக்கை வைத்து இது போன்ற கொலைகளை நிகழ்த்துவீர்களா? ஒரு தனி மனிதன் தன் காமபசியால் செய்த காரியத்துக்கு இந்திய அரசை பழிச்சொல்வது சரியா என்று யோசியுங்கள்!
இப்படிப் பொதுப்படையா பேச முடியாது இந்திய ராணுவத்தினரைப்பற்றி.
இதப் படிங்க
http://www.jammu-kashmir.com/archives/archives2005/kashmir20050131c.html
அன்புடன்,
ஹரிஹரன்
//
இந்த கோபம் ஆகாது, நண்பரே !!!
இருந்தாலும், சூழலுக்குத் தேவையான ஒரு பதிவு, நன்றி.
எ.அ.பாலா
உலகத்தில் கற்பழிக்காத ராணுவமே கிடையாது. அப்படி பார்த்தால் எவனுக்கும் தேசபக்தி இருக்க முடியாது. 100% பரிசுத்தமான ராணுவவீரர்கள் கொண்ட நாட்டின் மீதுதான் தேசபக்தி இருக்கும் என்றால் அது கவைக்குதவாத வாதம்.
பாமக லஞ்சமே வாங்காத உத்தமர்களா? அப்புறம் ஏன் அவர்கள் மீது உங்களுக்கு இத்தனை பற்று? அதே காரணம் தான் எங்களுக்கும் இந்தியா என்ற அமைப்பு மீதிருக்கும் பற்று. ராணுவம், அரசியல்வாதிகள் இவர்கள் எல்லாரையும் விட இந்தியா உயர்ந்தது என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இவர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் இந்தியா எப்படி பொறுப்பாக முடியும்?பாமக லஞ்சம் வாங்குவதால் வன்னியரை பிடிக்கவில்லை என்றால் தப்பு தானே?
குழலி அந்த சுட்டியை பாருங்க. அதில் கற்பழிப்பு கேஸில் மாட்டியது ஒரு ஸ்லாமியர் 'Major Rehman Hussain' அப்ப என்ன சொல்லுவீங்க?? இந்திய அரசு இந்த முஸ்லீம் மேஜரை ஏவிவிட்டு கற்பழிக்க செய்ததா??
இப்ப புரியுதா?? நீங்கள் சொல்வது ஒரு விதண்டாவாதத்துக்கு என்று??!!
என் பதிவில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
வார்த்தைகள் விடுபட்டுப் போனது குழப்பத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என நினைக்கிறேன்!
அன்புட
ஹரிஹரன்
எனக்கு புரிந்தது ஹரி. அந்த சுட்டியில் அதுவும் இருக்கிறது!! நான் குழலி வைத்த வாதத்துக்கும் இந்திய ராணுவம் என்பது நாட்டின் பாதுகாப்பு படை அதில் சில புல்லுரிவிகள்(இங்கு ஹிந்து அல்லது முஸ்லீம் என்பது கணக்கல்ல) செய்யும் தவறுகளுக்கு ஒட்டு மொத்த இந்தியவின் செயல் என்று புரிந்து கொள்வது தவறு என்று சுட்டிக்காட்டத்தான் அந்த Major Rehman Hussain விசயத்தை எடுத்து உரைத்தேன். மத பேதமிண்றி இந்திய அரசால் தண்டிக்கப்படுகிறார்கள்!!
உறக்கவா, உரக்கவா?
சத்தமாக சொல்லுங்கள் தல.
இவர்களுக்கு காஷ்மீரில் ஷியா என்றால் யார் சன்னி என்றால் யார், ஸ்கர்து எங்கு இருக்கிறது, ஏன் மக்கள் சாகிறார்கள் என்று எதுவும் தெரிவதில்லை
தற்பொழுது இரானுவ தளபதியாக இருக்கும் ஜே.ஜே.சிங் மட்டும் இரண்டு அனாதை குழந்தைகளை தத்துதெடுத்து வளர்த்து கொண்டு இருக்கும் விவரம் யாருக்கு தெரியும்?
http://maruthanayagam.blogspot.com/2006/10/blog-post.html
நம்ம நாடு நாசமா போக பல பேரு சூணியம் வைக்கறாங்க போல... அதில் இறைஅடியானும் ஒருவரோ???
அது பாக்கிஸ்தான் பற்று.
தமிழ் பாகிஸ்தான்ல வளந்தாச் சரிதான்!
அன்புடன்,
ஹரிஹரன்
இறை "உதை" யான் இது சரி என்று தோன்றவில்லை. சில இப்படி யோசிக்கிறார்கள் என்றால் நாம் சமூகத்தின் குற்றமாக சொல்ல முடியாது. இதில் சிலர் மட்டுமே பாகிஸ்தான், LeT, JKLF போன்ற பிரிவினைவாத இயக்கங்களின் இணையதளங்களில் உள்ள பிரச்சாரங்களால் இப்படி மூளை செய்யப்பட்டவர்களே!!!
இந்த தூக்கு தண்டனை கூடாது கூட்டத்திடம் இரண்டு கேள்விகள் கேட்கப் படவேண்டும்.
1. தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு தேசம், சமூகம் மீது நம்பிக்கை இல்லை. இருப்பதை அழித்து புதிய உலகு செய்வோம் என்று கோஷம் போடும் கேசுகள். நாம், இருக்கும் சமூகத்தில் முன்னேரப் பாடுபடுபவர்கள். ஒரு Open society ல் குறைகளை பயன் படுத்தி இவர்கள் ஆள் சேர்க்கிறார்கள் (மதம்/மனம் மாற்றம்). இருக்கும், சமூகக் கட்டமைப்பு சில சரி/தவறு களைச் சட்டமாக அல்லது accepted norms ஆக வைக்கிறது. இதில் திருப்தி இல்லை என்றால் பேசி, சமரசங்கள் செய்து கொண்டு, அல்லது ஒத்துளையாமை (காந்தி வழி) செய்து சமூகத்தில் (இருக்கும் சமூகத்தில்) முன்னேற்றம் கண்டு கொள்ளவேண்டும் என்பதே ஒரு முன்னேறிய கொள்கை. ஆயுதம் ஏந்திப் போராடுவது அல்ல. இதை ஒத்துக் கொள்வீர்களா? ஆம், என்றால் ஆயுதம் ஏந்திப் போராடும் கூட்டத்திற்கு ஏன் ஆதரவு? இல்லை, என்றால், முன்னேறிய சமூகத்தில் தூக்கு தண்டனை கூடாது என்று ஏன் வாதாடவேண்டும்? அவர்கள் இன்னும் முன்னேறவே இல்லையே!! Self contradictory!!
2. இதை நான் சிறில் அலெக்ஸ் பதிவில் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அதையே வேறு மாதிரி நீங்களும் கேட்டுள்ளீர்கள். இவர்கள் எல்லாம், ஒரு தனஞ்சை சாடர்ஜீக்கோ, ஒரு தாரா சிங் கிற்கோ இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தது கிடையாது. இப்ப மட்டும் ஏன் செய்கிறார்கள்? அப்ப மட்டும் இந்தியா ஒரு "முன்னேறிய சமுதாயம்" (sic) இல்லையா?
//ஒரு தனஞ்சை சாடர்ஜீக்கோ, ஒரு தாரா சிங் கிற்கோ இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தது கிடையாது.//
அப்ப மதம் சார்ந்து தான் மனித உரிமையும் இருக்கும் போல... எனக்கு தெரிந்து ஓட்டு அரசியலே இந்த நிலைக்கு காரணம்.
http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_09.html
முதல் தபா மிஸ் பண்ணிட்டாராம். அடுத்த தபா சரியாக செய்வதாக வாக்கு கொடுப்பார்.
--எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வைக்க ஒரு chance கேட்கிறாரோ? ---
முதல் தபா மிஸ் பண்ணிட்டாராம். அடுத்த தபா சரியாக செய்வதாக வாக்கு கொடுப்பார்.
//
ஐயா மார்களே,
சம்பந்தப் பட்ட ஆசாமியே மன்னிப்பு கோரவில்லை. தன் தவறுக்கு வருந்தவில்லை. இருந்தும் நம் அறிவாத்மாக்கள் இவனை உயிருடன் விட துடிக்கின்றனர் என்பதை மறக்கக்கூடாது.
ஜம்மு காஷ்மீர் காரர்கள் அன்றைக்கே இந்தியாவுடனோ (அ) பாகிஸ்தானுடனோ சேர மாட்டோம் தனியாக இருக்கப் போறோம் என்று தானே சொன்னார்கள். இந்தியா சும்மா அவங்களை நிம்மதியா இருக்க விடாம இழுத்து வைச்சிருந்தா இப்படி தானே நடக்கும்.
______
CAPital
http://1paarvai.wordpress.com/
கீழே உள்ள சுட்டியை படியுங்கள்:
http://www.jammu-kashmir.com/basicfacts/basics.html
சின்ன திருத்தம். முஜாஹிதீன் அல்ல மொஹாஜீர்கள். (Mohajir) .
இவர்கள் கொஞ்சம் பனக்காரர்கள் கூட. 1947இல் இந்தியாவில் வசித்த பனக்கார இஸ்லாமியர்கள் அங்கே போயிவிட்டார்கள்.
முஷார்ப் கூட ஒரு மொஹாஜீர் தான். :))
இந்தியாவுக்கு மட்டும் நல்லதல்ல.. ஜம்மு காஸ்மீர் மக்களுக்கும் தான். பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கஷ்மீரில் உள்ள மக்கள் இன்று மொஹாஜீர்கள். (Mohajir)(அகதிகள்) அழைக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு தன்னாட்சியும் கிடையாது. பாகிஸ்தானின் ஆதவும் கிடையாது. அங்கு மக்கள் சித்தரவதை தான் அனுபவிக்கிறார்கள்.
http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post_18.html
எங்கெயோ கேட்ட குரல்
//அப்சலுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கறதுக்கு முன்ன இங்க அப்சல பத்தின We the Peopleன் குழந்தைத்தனமான தேசிய வெறி நிலைப்பாடு கிழிக்கப்பட்டுள்ளதை படித்து விடுங்கள்.//
நல்லா கிழிந்திருக்கு! ஒன்று மட்டும் நிச்சயம்! உமக்கு படிக்கத்தெரியவில்லை! அல்லது படித்தாலும் புரிந்து கொள்ளும் நிலையை நீர் தாண்டிவிட்டீர்கள், இனி உங்களை யாராலும் திருந்த்தமுடியாது :))))