பா.க.ச போட்டி முடிவுகள்!
டி.வி புகழ் பாலாபாரதியை கலாய்க்க ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் போட்டி ஒன்று போன மாதம் பா.க.ச தலிம கலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது! அதன் முடிவுகளை அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது, ஏன்ன பல பேர் பல விதமா தலய கலாய்த்தார்கள்! எதை தேர்ந்தெடுப்பது என்று கொஞ்சம் சிரமப்பட்டுவிட்டோம் என்றே சொல்லவேண்டும்! பலரும் ரூம் போட்டு யோசித்து அருமையாக எழுதியிருந்தார்கள்! குறிப்பாக ப்ரேம்குமார் , குசும்பன் , அருட்பெருங்கோ , ஹாய் கோபி , வெங்கட்ராமன் , ராமசந்திரன் உஷா என அனைவரும் பின்னிப்பெடலெடுத்திருந்தார்கள்! அட நம்ம நடுவர் ஆசிப் கூட விடாம நானும் கலாப்பேன்னு தூள் கிளப்பியிருந்தாரு! இது போதானுன்னு நம்ம தல பாலா பாய் கூட ஒரு பதிவு போட்டிருந்தாரு! இந்த பா.க.ச முதலாம் ஆண்டுவிழா போட்டி பரிசு அருட்பெருங்கோவுக்கு அளிக்க நடுவர்கள் முடிவு எடுத்ததை இங்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு தல ரத்தால் கையெழுத்திட்ட ஒரு புகைப்படமும், ஒரு புத்தகமும் பரிசாக அளிக்கப்படுகிறது! விழா குழுவினர் விரைவில் அவரை தொடர் கொள்வார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம். பி.கு: தல ரத்தத்தால் கையெழுத்து ப...