பா.க.ச போட்டி முடிவுகள்!

டி.வி புகழ் பாலாபாரதியை கலாய்க்க ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் போட்டி ஒன்று போன மாதம் பா.க.ச தலிம கலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது! அதன் முடிவுகளை அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது, ஏன்ன பல பேர் பல விதமா தலய கலாய்த்தார்கள்! எதை தேர்ந்தெடுப்பது என்று கொஞ்சம் சிரமப்பட்டுவிட்டோம் என்றே சொல்லவேண்டும்!

பலரும் ரூம் போட்டு யோசித்து அருமையாக எழுதியிருந்தார்கள்! குறிப்பாக ப்ரேம்குமார், குசும்பன், அருட்பெருங்கோ, ஹாய் கோபி, வெங்கட்ராமன், ராமசந்திரன் உஷா என அனைவரும் பின்னிப்பெடலெடுத்திருந்தார்கள்! அட நம்ம நடுவர் ஆசிப் கூட விடாம நானும் கலாப்பேன்னு தூள் கிளப்பியிருந்தாரு! இது போதானுன்னு நம்ம தல பாலா பாய் கூட ஒரு பதிவு போட்டிருந்தாரு!

இந்த பா.க.ச முதலாம் ஆண்டுவிழா போட்டி பரிசு அருட்பெருங்கோவுக்கு அளிக்க நடுவர்கள் முடிவு எடுத்ததை இங்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு தல ரத்தால் கையெழுத்திட்ட ஒரு புகைப்படமும், ஒரு புத்தகமும் பரிசாக அளிக்கப்படுகிறது! விழா குழுவினர் விரைவில் அவரை தொடர் கொள்வார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

பி.கு: தல ரத்தத்தால் கையெழுத்து போட பயந்து மறைந்து வாழ்வதாக கேள்விப்பட்டோம்! அவரை விரைவில் பிடித்து கையெழுத்து வாங்கி புத்தகமும், பூச்சாண்டி காட்ட அவர் படமும் விரைவில் அருட்பெருங்கோவுக்கு அளிக்கப்படும்.

படம் உதவி: லக்கிலுக்

8 comments:

said...

அருட்பெருங்கோவிற்கு வாழ்த்துக்கள்!

பரிசுனு சொல்லி வாழ்நாள் முழுதும் பயமுறுத்தும் படத்தையா அனுப்பறீங்க?

said...

நாத்தமிழ் தலைவனின் அமீரக தொண்டா உன் நாத்த-தமிழ் அருமை,ஆனால் அதை உன் வீட்டிலும், உன் தலைவன் வீட்டிலும் வைத்துக்கொள்! இங்கே அதற்கு இடமில்லை!

said...

தல கலுக்குங்க...
ரொம்ப நல்லயிருக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
வீரமணி

said...

ஆஹா எங்க ஊர்க்கு கிடைக்காம போயிடுச்சே, குசும்பா அடுத்த தடவை நமக்கு தான் விடு! ஆனால் அருட் பெருங்கோவும் சூப்பர் தாங்க, தல ய கலாய்க்கிறதுன்னா பீறிட்டு வருது வார்த்தைகள்:-))

said...

ஆறுதல் பரிசாக மாம்ஸ் " ரத்தத்தால் " எழுதிய 600 பக்க நாவலை எனக்கு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்

said...

நம்ம பதிவையும் சிறப்பான பதிவா தேர்ந்தெடுத்ததுக்கு நன்றிங்க.

அருட்பெருங்கோவிற்கு வாழ்த்துக்கள்!

said...

ஆறுதல் பரிசாய், ரத்த கையெழுத்துப் போட்ட தல படம் வருதுன்னு வதந்தியைக் கிளப்பிவிட்டது யாருங்க ?

அ.கோ வாழ்த்துக்கள்

said...

ஏ சாமிகளா…நான் போட்ட கமெண்டெல்லாம் ரொம்ப மொக்கையாதான ( தலயோட பதிவ விடவான்னு யாருப்பா கலாய்க்கிறது?) இருந்துச்சு…
அதுக்கு பரிசு கொடுக்கிறீங்கன்னா தல மாதிரியே நீங்களூம் ரொம்ப நல்லவங்களோ? :-)

ஆனா தல படத்த இங்குட்டு அனுப்புறோம்னு எல்லாம் பீதியக் கெளப்பாதீங்க… ஏற்கனவே வெடிகுண்டு, விபத்து னு ஹைதராபாத்தே வெலவெலத்துப் போய் இருக்கு… இதுல தல படத்த அனுப்பி இன்னொரு கலவரத்த உண்டு பண்ணாதீங்க…

படத்த அங்கேயே வச்சிருங்க ரெண்டு வாரத்துல சென்னை வந்து நானே தல கையால வாங்கிக்கிறேன் :-)