அரசுக்கு இது அழகா??

ஐயா சாமிகளா, உங்களுக்கு ஓட்டு போட்டு எல்லா எம்.பி பதவியும் உங்களுக்கு தானே வாங்கி கொடுத்திருக்கு இல்லையா?.... இன்னும் ஏன்யா எங்களை போட்டு ரவுண்ட் கட்டறீங்க!!

ராமர் பாலம் இடிக்கனுமா போயி திருமதி.சோனியா கிட்டயோ! திருவாளர்.மன்மோகன்சிங்கிடமோ ஆட்சியை காலி பண்ணிடுவோம்ன்னு சொல்லி அல்லது என்னத்தையாவது செய்யவேண்டியதுதானே! ஏன்யா பந்துன்னு சொல்லி எங்க தாலியை அறுக்கறீங்க... உங்களுக்கு ஓட்டுப்போட்ட பாவத்துக்கு, எங்களுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்!!!

ஒரு நாள் வேலை நிறுத்தம், கோடிக்கணக்கா சேர்த்துவைத்த உங்களுக்கு ஒன்னும் ஆவப்போறது இல்லை... ஆனா.. ஒவ்வொரு தின கூலிக்காரனிலிருந்து நடுத்தர வர்கம் வரை உள்ள அனைவருக்கும் சாப்பாட்டுல மண் விழும்! நீங்க சொல்லும் சேது சமுத்திரம் அவனுக்கு ஒரு மண்ணும் கிடையாது! அது வந்தாலும், வராவிட்டாலும் அவனுக்கு ஒரு பைசா லாபம் கிடையாது!

தினக்கூலி முதல் சாதாரண குடிமகன் வரை அனைவருக்கு எத்தனை சிரமம் உங்களால் பண்ண முடியோ அவ்வளவு செய்யும் முடிவோட தான் ஆட்சிக்கு வந்தீங்களா??... யாருக்காக, என்ன நிரூபிக்க பாக்கறீங்க... ஒரு ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் உங்களால் ஒன்னும் பண்ணமுடியாதுன்னா.. மக்கள் பந்தில் கலந்து கொண்டால் என்ன நடக்கபோவுது???

கடந்த ஏப்ரல் மாதத்தில் உங்க அரசு ஒரு பந்து நடத்தியது உயர் கல்வி படிப்பில் 27% இட ஒதுக்கீட்டுக்காக... அது நடந்ததா?? மக்கள் கஷ்டப்பட்டதை தவிர வேற என்ன பலன் கிடைத்தது?? ஒரு பயலையாவது சேர்த்த முடிந்ததா அந்த ஒதுக்கீட்டில் உங்களால்....

தயவு செய்து எங்களை டார்ச்சர் செய்யாம எதையாவது செய்திட்டு போங்க ப்ளீஸ்!

பி.கு:

இந்த பதிவு பந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, சேது சமுத்திர கால்வாய் தடை செய்ய அல்ல...

Comments

SP.VR. SUBBIAH said…
///ஒரு ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் உங்களால் ஒன்னும் பண்ணமுடியாதுன்னா.. மக்கள் பந்தில் கலந்து கொண்டால் என்ன நடக்கபோவுது???///

அதானே1 நச்சென்று நெத்தியடியாய் கேட்டிருக்கிறீர்கள் ந்ண்பரே!
ஐயா,
உங்கள் கொள்கைபடி பார்த்தால் படுகொலை நடந்து ஒருவர் இறந்தால் கொலையாளிக்கு எதிராக நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கிக் கொடுத்தால் இறந்தவன் எழுந்து வரப்போகிறானா ? என்ற தொனி இருக்கிறது.

27 % இட ஒதுக்கீடு விசயத்தில் போராடிய நமக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் தெருவில் வந்து போராடிய டெல்லி மேல் சாதியினருக்கு வெற்றிதானே. நியாயத்துக்காக நடத்தப்படும் போராட்டங்கள் வெற்றியா தோல்வியா என்பதைவிட அந்த எதிர்ப்பை பதிய வைத்தல் என்பதில் வெற்றிதானே.
//ராமர் பாலம் இடிக்கனுமா போயி திருமதி.சோனியா கிட்டயோ! திருவாளர்.மன்மோகன்சிங்கிடமோ ஆட்சியை காலி பண்ணிடுவோம்ன்னு சொல்லி அல்லது என்னத்தையாவது செய்யவேண்டியதுதானே!//

உங்கள் பார்வையே தவறானது
உங்களின் கோபம் சேது திட்டம் எப்படியாவது நிறைவேறி விடுமே என்பதில் தான்
கொஞ்சம் பொறுப்போடு பேசுங்கள்
We The People said…
//உங்கள் பார்வையே தவறானது
உங்களின் கோபம் சேது திட்டம் எப்படியாவது நிறைவேறி விடுமே என்பதில் தான்
கொஞ்சம் பொறுப்போடு பேசுங்கள்//

சரிங்க ஐயா அப்படியே வைத்துக்கொள்ளுங்க... நான் என் ஆதங்கத்தை தான் சொன்னேன்.. இன்று அரசின் ஒரு அங்கமாக இருக்கும் ஒரு பெரிய கட்சிக்கு செய்யமுடியாததை பந்தால் செய்ய முடியாது என்பது என் எண்ணம்.

அரசே பொறுப்போடு நடக்காத போது நான் மட்டும் என்ன செய்யமுடியும்.. :))))
We The People said…
ஸ்ரீசரண்,

சேது சமுத்திரம் திட்டம் வந்தால் எனக்கு என்ன நஷ்டம் என்று நினைக்கறீங்க?? ஒன்னும் பிரியலையே! திட்டம் வரவில்லை என்றால் எனக்கு ஒரு பைசா லாபமும் கிடையாது! வந்துவிட்டால் எனக்கு நஷ்டமும் கிடையாது!!! நான் ஒரு சாதரண குடிமகன் எனக்கு இதனால் ஒரு பயனும் அடையேன்.
We The People said…
கோவி.கண்ணன் சார்,

போராட்டம் எதிர்ப்பை தெரிவிப்பது என்றால்... இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு விசயத்துக்கு டெய்லி போராட்டம் தான் செய்யனும்.. கோடிக்கணக்காய் சுரண்டும் ஆட்சியாளர்கள், டெய்லி லட்சக்கணக்கில் கல்லா கட்டும் அரசு ஊழியர்கள்,நான் பிச்சைக்காரன் என்று சர்டிபிகேட் வாங்க கூட லஞ்சம் கேட்கும் ஊழியர்கள், ஒரு மழைக்கூட தாங்காத ரோடு போடும் காண்ட்ராக்டர்களை எதிர்த்து, என இந்தியாவில் நடக்கும் எல்லா நியாமான காரணங்களுக்கும் போராட்டம் என்றால் எங்க போய் முடியறது??
//
திட்டம் வரவில்லை என்றால் எனக்கு ஒரு பைசா லாபமும் கிடையாது //

ஜெய்சங்கர் சார்,

கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டீர்கள். எல்லா திட்டமும் நம் வரிப்பணத்தில் தான் நடக்கிறது. அந்த திட்டம் வெற்றி தோல்வி எல்லா குடிமகனையும் பாதிக்கும். நாம் ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்டித்தான் வாங்குகிறோம்.

உங்களுக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனோ கொஞ்சம் டென்சனில் பேசிவிட்டீர்கள் போல..!
We The People said…
வாங்க சிவபாலன் சார்,

//கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டீர்கள். எல்லா திட்டமும் நம் வரிப்பணத்தில் தான் நடக்கிறது. அந்த திட்டம் வெற்றி தோல்வி எல்லா குடிமகனையும் பாதிக்கும். நாம் ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்டித்தான் வாங்குகிறோம்.//

இல்லைங்க நம்ம ஸ்ரீசரண் என்னவோ எனக்கு சேது திட்டம் நிறுத்திட்டா சந்தோஷம் என்கிறமாதிரி தொனியில் எழுதியிருந்தாரு... அதுக்கு தான் அந்த பதில்... சேது திட்டம் வெற்றி பெற்றால் எனக்கு ஒரு நஷடம் இல்லை என்று தான் கூறியிருந்தேன்! சரியா படியுங்க :)

அதே சமயம் வெற்றி பெற்றால் நான் கட்டும் வரி குறைய போவதும் இல்லை, அதனால் எனக்கு தனிப்ப்பட்ட முறையில் லாபம் இல்லை என்று தான் எடுத்துரைத்தேன் :)

என் பதிவின் நேக்கம் ஆக்கப்பூர்வமா என்ன செய்தால் சேது திட்டம் நிறைவேற்றமுடியும் என்று திட்டம் போடவேண்டிய அரசு பந்த் என்று என்னை வேலை செய்யவிடாமல், என் சோற்றில் மண் கொட்டுவதில் தான்... ஒரு நாள் பந்த் என்றால் எனக்கு நிச்சயமாக பெரிய நஷடம், Days lost cannot be regained anymore...

கருத்துக்கு நன்றி
We The People said…
subbaih சார்,

///ஒரு ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் உங்களால் ஒன்னும் பண்ணமுடியாதுன்னா.. மக்கள் பந்தில் கலந்து கொண்டால் என்ன நடக்கபோவுது???///

நான் சொல்லவந்த விசயம் உங்களுக்கு மட்டும் தான் புரிந்தது போல்.. :(

என்ன செய்ய நான் ஒன்னும் சிறந்த எழுத்தாளன் இல்லையே :)

நன்றி சார்
We The People said…
K.R.அதியமான்,

அந்த கால்வாய் நல்லதா கெட்டதா, சரியா தவறா என்பது இல்லை என் பதிவின் நோக்கம். அதை எல்லாம் பார்த்துக்கொள்ள அரசு உள்ளது!

இங்கே என் எதிர்ப்பு அந்த அரசே நடத்த நினைக்கும் பந்த்க்கு மட்டுமே :)

நன்றி
நீங்கள் சங்கர் படத்தை ரசித்து பார்ப்பவரோ
We The People said…
ஆமாங்க!

சங்கர் படங்கள் என்னை ரொம்ப பாதித்ததுண்டு :)

முக்கியமா முதல்வன்... என் இந்த பதிவை பார்த்திருக்கீங்களா...

ஒரு இந்திய கனவு
Thamizhan said…
சேது சமுத்திர திட்டத்தைக் கவிழ்க்க ஒரு கூட்டம் சதி செய்து வந்து கொண்டே இருக்கிறது என்பது புரிந்துள்ளீர்களா?அவர்களுடைய கடைசி பாணம் தான் இல்லாத பாலம்.

அனைத்துக் கேள்விகட்கும் ஆராய்ச்சி செய்து பதில் மீண்டும்,மீண்டும் தரப் பட்டுள்ளது.

பந்த் தான் இன்று எதிர்ப்போர் புரிந்து கொள்ளும் ஒரே மொழியாக இருக்கிறது.அரசும்,ஆட்சியும் நடக்கும் விதத்தைப் பாராளுமன்றம் நடப்பதை (நடக்காமல் அடிக்கும் கூத்தை)ப் பார்த்தாலே தெரியுமே!

அனைத்துக் கட்சி கூடி அலட்சியமாகச் செய்த முடிவு அல்ல.பொறுப்போடு எடுத்து அரசியலை அல்ங்கோலப் படுத்துவோர் புரிந்து கொள்ள விலை கொடுக்கப் பட்டுள்ளது.
எங்கள மாதிரி சென்னையில பேச்சிலரா ரூம் எடுத்து தங்கி இருப்பவங்க கதி அவ்வளவுதான். . . .

எதிர்ப்பைக் காட்ட எத்தனையோ வழி இருக்க இந்த மாதிரி பந்த் சுத்த அயோக்கியத்தனம்.
//By Swaminathan S. Anklesaria Aiyar//

:-)
We The People said…
ஐயா மடிப்பாக்கம்,

//ப***பய முண்டமே,

அதிமுக ஆட்சிக்காலத்தில் பந்த் நடந்தபோது பாப்பானுக்கு கொ*** சொறிஞ்சியா? ஏன் எதிர்த்துக் கேட்கலை? வந்துட்டான் பெருசா!

போடா போயி உடம்பை முதலில் சரி பன்னுடா முண்டம், பிறகு பாப்பானுக்கு கொ*** தாங்கலாம். இப்படியே போனா சீக்கிரம் வெள்ளரிக்காய் மாதிரி வெடிச்சு செத்துருவே.
//

உங்க கமெண்ட் நல்லா இருந்தது! சில வார்த்தைகளை கட் செய்திருந்தால் பப்ளிஷ் செய்திருப்பேன். சாரி எடிட் செய்ய வேண்டியதாயிற்று :)

நான் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பதிவுகள் எழுத துவங்கவில்லை, அதனால் எதிர்க்கவில்லை! இனி வந்தா செய்யறேன் போதுமா... அப்புறம் என் உடம்பை நான் பார்த்துக்குவேன், நீங்க ரொம்ப கவலைப்படவேண்டாம் ;)
//ஆமாங்க!

சங்கர் படங்கள் என்னை ரொம்ப பாதித்ததுண்டு

முக்கியமா முதல்வன்... என் இந்த பதிவை பார்த்திருக்கீங்களா...//

சங்கர் படங்களுக்கும் நிதர்சனத்திற்கும் பல லட்சம் ஒளி ஆண்டுகள் இடைவெளி உண்டு.
சிவாஜி பார்த்த பின்னுமா சங்கரை ரசிக்கிறீர்கள்
Anonymous said…
தமிழன் பயங்கரமா ஜோக் அடிக்கிறார். இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த எந்த பந்தினால் அரசுகள் பயந்து கோரிக்கைகளை நிறைவேற்றின ? எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்காக நடத்திய பந்த்களே பிசுபிசுக்கும் போது, ஆளுங்கட்சி நடத்தும் பந்த்தினால் என்ன ஆகப் போகிறது. சரி அப்படியே பந்த் போராட்ட முறை என்று வைத்துக்கொள்வோம். யாருக்கு எதிரான போராட்டம் இது ? சேது சமுத்திர திட்டத்தை வேகமாக நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பவர் யார் ? மத்திய அரசுதானே ? அதில் பந்த் நடத்தும் தி.மு.க போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றதல்லவா ? அதுவும் அந்த அமைச்சகம் தி.மு.கவின் கையில் அல்லவா இருக்கிறது. தனக்குத்தானே போராட்டம் நடத்துவது எதற்கோ. சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இது போன்ற போரட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டம் வேண்டும்
We The People said…
//சங்கர் படங்களுக்கும் நிதர்சனத்திற்கும் பல லட்சம் ஒளி ஆண்டுகள் இடைவெளி உண்டு.
சிவாஜி பார்த்த பின்னுமா சங்கரை ரசிக்கிறீர்கள//

அந்த கருமத்தை சில நாட்களுக்கு முன் தான் பார்த்தேன். அந்த ஒரு படத்தை வைத்து எல்லா படத்தை இடை போட முடியாதே!

அவர் படங்கள் பெரும்பாலும் நாட்டில் நடக்கும் தவறுகளை எடுத்து சொல்லும், குறிப்பா இந்தியன் - லஞ்சம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்று காட்டியிருக்கும், முதல்வன் - எப்படி ஒரு முதல்வன் ஆட்சி செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கும், அந்நியன் - ஒரு இந்திய குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கும்.. இவைகளால் அவர் படங்கள் பிடிக்கும், இருந்தாலும் பாய்ஸ், சிவாஜி போன்ற கடி படங்களும் வருவதுண்டு, சிவாஜி கூட கருப்புபணம் எப்படி நாட்டை சூரையாடுகிறதுன்னு என சில நல்ல விசயங்களை சொல்லியிருக்கும்... இதில் என்ன தவறு உள்ளது என்று புரியவில்லை! இதிலென்ன ஒளியாண்டு வித்தியாசம் கண்டீர்கள் என்று புரியவில்லை!! ஒருவேளை இந்தியா அவர் படங்களில் வருவது போல வர இன்னும் பல ஒளியாண்டுகள் ஆகும்ன்னு சொல்லறீங்களா??

உங்களுக்காக ஒரு வரி:

முயற்சியும் முனைப்பும் இருந்தால் தான் இலக்கை அடைய முடியும்; ஆனால் இவை இரண்டும் இலக்கு என்ற கனவு காணாமல் நடக்காது! எனக்கு சங்கர் படங்களில் வரும் விசயங்கள் இலக்காக தெரியுது! அதை தான் என் கனவாக காண்கிறேன்!

கருத்துக்கு நன்றி!
We The People said…
//சரி அப்படியே பந்த் போராட்ட முறை என்று வைத்துக்கொள்வோம். யாருக்கு எதிரான போராட்டம் இது ? சேது சமுத்திர திட்டத்தை வேகமாக நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பவர் யார் ? மத்திய அரசுதானே ? அதில் பந்த் நடத்தும் தி.மு.க போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றதல்லவா ? அதுவும் அந்த அமைச்சகம் தி.மு.கவின் கையில் அல்லவா இருக்கிறது. தனக்குத்தானே போராட்டம் நடத்துவது எதற்கோ. சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இது போன்ற போரட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டம் வேண்டும்//

ரிப்பீட்டு!!!
Anonymous said…
ஆளும் கட்சியே பந்த் பண்ணுவதென்பது (இதில் திமுக, அதிமுக பேதம் ஏனுமில்லை) அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பது நிருபிக்கப்பட வேண்டும்.

எந்த கட்சியானாலும் செரி, ஆட்சியில் இருக்கும் கட்சி/தலைவர் பந்த் அறிவித்தால் ஆட்சி பறிபோகுமென்பது நிதர்சனமானால்தான் இவர்கள் ஒழுங்குக்கு வருவார்கள்.
Naresh Kumar said…
தனது கட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும் வேண்டிய பதவியையும், இலாகாவையும் வாங்கி தரும் அளவிற்கு திறமையும், செல்வாக்கும் கொண்டவருக்கு, ஒரு திட்டத்திற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட பந்த் நடத்திதான் செய்ய முடியும் என்றால் எதற்கு கூட்டணியில் இருக்க வேண்டும்
Anonymous said…
ஸ்ரீசரண், you should have read the atical fully hehehehehehhe.... உங்கள் பார்வையே தவறானது,கொஞ்சம் பொறுப்போடு பேசுங்கள்